Thursday, May 29, 2008

கம்பி அழித்தல்

7 comments:
 
ஒரு படம் எடுக்கறோம். அதில் தெரியாத்தனமா நமக்குத் தேவையில்லாத சில விஷயங்களும் சேந்து வருது.
அந்த தேவையில்லாப் பொருள், படத்தின் ஓரத்திலோ, மேலோ, கீழோ இருந்தால் Crop செய்து வெட்டி எடுத்து விடலாம்.
ஆனா, சில சமயம், அந்த வேண்டாப் பொருள், படத்தின் மையத்தில் வந்து இம்சை கொடுக்கும்.

முக்கியமாக, தொங்கும் மின்சாரக் கம்பிகளும், மற்ற கேபிள் வயர்களும் பல படங்களின் அழகைக் கெடுத்து விடும்.
உதாரணத்துக்கு இந்தப் படம் (சமீபத்தில், சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் க்ளிக்கியது)


இந்த படத்துல பாத்தீங்கன்னா அந்த கறுப்புக் கம்பி முழுப் பட நீளத்துக்கும் இழுத்துக்கிட்டு இருக்கு. கொஞ்சம் அசிங்கமாவும் இருக்கு. படத்தை பாக்காம, மொதல்ல கம்பிக்குதான் கவனம் திரும்புது.
இந்த படத்தை, கம்பி இல்லாமல் எடுக்கணும்னா, ரெண்டு வழி.
ஒண்ணு, கவர்னர் ஆர்னால்டு ஷ்வார்ஜனேகருக்கு ஒரு பெட்டிஷன் போட்டு அந்த கேபிளை மண்ணுக்கு அடீல கொண்டு போக சொல்லலாம்.
ரெண்டு, நம்ம பிற்-தயாரிப்பு வித்தகர் An& கிட்ட ஐடியா கேட்டு, பிற்தயாரிப்பு செய்யலாம்.

ஆர்னால்டுக்கு இருக்கர பட்ஜெட் ப்ரச்சனையில, நம்மள எங்க கண்டுக்கப் போறார்னு, நான் An& கிட்ட ஐடியா கேட்டேன். கேட்ட அடுத்த நொடீல, இந்தா புடின்னு ஒரு மாயாஜால வித்தையை சொல்லிக் கொடுத்தாரு.

அதாகப்பட்டது அந்த ப்ரச்சனைக்குரிய படத்தை Gimpல் திறந்து கொள்ளுங்கள்.

அப்பாலிக்கா, Clone என்னும் ஐக்கானை க்ளிக்குங்கள். (கீழே படம் வரைந்து பாகம் குறிக்கப்பட்டுள்ளது)Clone க்ளிக்கியாச்சா?

இப்ப என்ன பண்ணனும்னா, அந்த கறுத்த கம்பி இருக்குல்ல, அதுக்கு கொஞ்சம் கீழ உங்க எலிக்குட்டியை நகர்த்தி, CTRL அமுக்கிக் கொண்டே ஒரு க்ளிக்கு க்ளிக்குங்க.

அதாவது, கம்பிக்குக் கீழ் இருக்கும் வானத்தின் நிறத்தை, பதிவு செய்து கொள்ள இந்த ஸ்டெப்பு.

இது வரைக்கும் புரிஞ்சுதா?

இப்போ அந்த கம்பிக்கு மேலே ஒரு க்ளிக்கு க்ளிக்குங்க (CTRL விட்டுடணும்).

இப்ப கவனிச்சீங்கன்னா, நீங்க க்ளிக்கிய இடத்தில் இருக்கும் கம்பி அழிந்து, அந்த இடத்தில் வானத்தின் நீல நிறம் வந்திருக்கும்.

கம்பியின் முழு நீளத்துக்கும் இந்த மாதிரி ரிப்பீட்டு.

இதில் முக்கியமான வேலை, கம்பியின் நிறத்தை அழிக்க, அதற்க்கு கீழே இருக்கும் நிறத்தை துல்லியமா உபயோகிக்கணும்.

அதாவது, வானத்தின் முன்னால் தெரியும் கம்பிக்கு வானத்தின் நீல நிறம் வரணும்.
கட்டடத்தின் முன்னால் இருக்கும் கம்பிக்கு, கட்டடத்தின் கலரை ஒத்தி எடுத்துக் கொண்டு அதை உபயோகிக்கணும்.

வானத்தின் முன்னால் இருக்கும் கம்பியை இந்த டெக்னிக்கின் மூலமாய், அழித்ததில் கிடைத்த படம் கீழே.


கம்பி இல்லாம, படம் பாக்க நல்லாருக்குல்ல?

படத்தை க்ளிக்கி பெருசு பண்ணி பாத்தீங்கன்னா, கட்டடத்தின் மேலே செல்லும் கம்பி கண்ணுக்குத் தெரியும். அதை அழிக்கலாமா?

அதுதான் வீட்டுப் பாடம். ட்ரை பண்ணிப் பாருங்க. :)

படிச்சது ஞாபகம் இருக்கா? திரும்ப ஒரு ரீ-கேப் கீழே
1) நல்ல அழகான கம்பியோ, இல்ல வேற ஏதோ ஒரு குப்பையோ, இருக்கர மாதிரி ஒரு படம் புடிங்க :)
2) Gimpல் படத்தை திறங்க
3) Clone ஐக்கானை க்ளிக்குங்க
4) Ctrl அமுக்கிக் கொண்டே, கம்பி/குப்பையின் வெகு அருகாமையில் இருக்கும் காட்சியை க்ளிக்கி அந்த கலரை தெரிவு செய்யுங்க
5) இப்ப கம்பி/குப்பையின் மேல் க்ளிக்கி, கம்பி/குப்பையை மறைய வைங்க.

சுலபமா இல்ல? முயன்று பாருங்கள்!

டிப்பு தந்த An& க்கு நன்னி!

ஜமாய்ங்க!

பி.கு: ஜூன் மாதப் புகைப்படப் போட்டி அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
தங்களின் கேமரா/லென்ஸை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
கம்பி/குப்பை உள்ள படங்களை எடுக்க அஞ்ச வேண்டாம்.
இருக்கவே இருக்கு கம்பி அழிக்கும் டெக்னிக்கு. :)

7 comments:

 1. சர்வே,
  நன்றாக விளக்கி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 2. மிக்க நன்றி Surveysan.

  வெகு நாட்களாக இப்படியாப்பட்ட ஒரு பிரச்சினைக்குத்தான் தீர்வு தேடிட்டு இருந்தேன்.

  வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
 3. cloning romba care fulla seyya vendiya velai. thavari senjaa kettup poydum.

  nalla explain pannirukkeenga Surv.

  valthugal

  ReplyDelete
 4. //nalla explain pannirukkeenga Surv.//

  thank you pazhani.

  ReplyDelete
 5. Wonderfully post!
  Easily understandable!

  Kudos!! :)

  ReplyDelete
 6. thanks CVR.

  thanks Thatha. Try pannittu sollunga eppadi azhinjudhaa illayaannu :)

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff