Showing posts with label post production பிற்தயாரிப்பு. Show all posts
Showing posts with label post production பிற்தயாரிப்பு. Show all posts

Friday, July 3, 2020

நிறைய ஃபோட்டோகிராப்பி நண்பர்கள் அடிக்கடி கேட்கும் விசயம், ஈசியா மொபைல்ல போட்டோ எடிட் செய்ய எது நல்ல App? ஃபோட்டோஷாப் எல்லாம் காசுக்கொடுத்து வாங்கமுடியாது. இனிமே அதை கத்துப்பதும் கஷ்டம். எதுனா நல்ல மொபைல் ஆப் சொல்லு என்று கேட்ப்பார்கள்.

SnapSeed- ங்கிற ஆப் போட்டோ எடிட்டிங் செய்ய உள்ள இலவச ஆப்களில் சிறந்தது. இதில் இருக்கும் Double exposure ஆப்சனை வெச்சி அருமையா எடிட்டிங் செய்யலாம். அதுப்போல் எடிட் ஆப்சன்ல போய் ஈசியா மாஸ்க் செஞ்சி தேவையான இடத்தில் மட்டும் நாம எடிட் செய்யலாம்.

அந்த இலவச ஆப் பயன்படுத்தி எப்படி போட்டோவை எடிட் செய்வது என்று இந்த வீடியோவில் ஸ்டெப் பை ஸ்டெப் சொல்லிக்கொடுத்திருக்கேன். பார்த்துவிட்டு உபயோகப்படுத்திப்பாருங்க. மறக்காம சேனலை சப்ஸ்கிரைப் செய்யிங்க.






#How to do Photoediting in Mobile? #Best Free software for photo editing #SnapSeed Best free soft for mobile photo editing? #snapseedPhotoEditing, #mobilePhotography #newSnapseedphotoediting, #newsnapseedphotoediting 2020, #snapseedphotoeditingnewstyle, #SnapseedTutorial, #snapseedTutorialTamil, #snapseedphotoeditingtutorialtamil #PhotographyInTamil #Thei2Studio #Thei2Studioclassroom #LearPhotographyInTamil #TamilPhotography

Monday, August 8, 2011

PIT வாசகர்களுக்கு வணக்கம், பொதுவாக புகைப்படக்கலைஞர்கள் பெரும்பாலோனோர்கள் தங்களது படத்தொகுப்புகளில் சிலப்படங்களை "Selective coloring" காக கொடுக்க நினைப்பார்கள். "Selective Coloring" என்பது முழுபடத்தையும் கருப்பு வெள்ளையாக மாற்றிவிட்டு படத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வண்ணமாக காட்டி பார்ப்பவரின் கவனத்தை ஈர்த்துவிடும் ஓர் நுட்பமாகும். பொதுவாக GIMPலும் போட்டோஷாப்பிலும் இதனை Eraser டூலைக்கொண்டே தான் பெரும்பாலோனோர்கள் செய்வார்கள். இந்த Eraser டூலை கொண்டு "selective coloring" செய்வதை ஏற்கனவே PIT தளத்தில் கட்டுரையாக இங்கே தந்திருக்கிறார்கள். ஆனால் கட்டுரையின் முடிவில் Layer mask கொண்டு அழிப்பது Homework என கட்டுரையை முடித்திருக்கிறார்கள். அந்த Homework ஐ நான் இன்று Class Workகாக உங்களுக்காக தொடருகிறேன்.

நான் இந்த Layer mask பயன்படுத்திதான் போட்டோஷாப் & கிம்பில் "Selective coloring" செய்வேன். Layer mask கின் அடிப்படை தத்துவத்தை நீங்கள் புரிந்துகொண்டால் எளிமையாக Layer mask நுட்பத்தை தேவையான சந்தர்பங்களில் எளிமையாக‌ பயன்படுத்திக்கொள்ளலாம். இது நான் கடைபிடிக்கும் கோட்பாடு. Layer maskகின் அடிப்படை தத்துவம் "black conceals, white reveals" இதனை இன்று முதல் நன்றாக மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.

சரி கட்டுரைக்கு போகலாம். முதலில் உங்களது படத்தை "GIMP"இல் திறந்துகொள்ளவும்.இப்போது உங்களது "Background" லேயரை Duplicate செய்யவேண்டும். இதற்கு லேயர் பேலட்டில் இருக்கும் "Copy bacground layer" ஐகானை கிளிக்செய்யவும் அல்லது பேக்கிரவுண்டு இமேஜ் லேயரை வலது கிளிக் செய்து "Duplicate background layer" என்பதனை தேர்ந்தெடுக்கவும்.


இப்போது Duplicate செய்த லேயரை நாம் கருப்பு வெள்ளையாக மாற்றவேண்டும் இதற்கு Color>Hue&Saturation அழுத்தவும். இப்போது தோன்றும் டயலாக் பாக்ஸில் Saturation இன் மதிப்பை -100 என தரவும். இப்போது உங்களது படம் கருப்பு வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கும்.





குறிப்பு : இந்த Hue & Saturation க்கு பதிலாக நீங்கள் Color>Desaturate ம் பயன்படுத்தலாம். இரண்டிற்க்கும் ரிசல்ட் ஒன்றுதான்.
இனி இந்த கருப்பு வெள்ளை லேயருக்கு Layer mask சேர்ப்போம். இதற்கு கருப்பு வெள்ளை லேயரை வலது கிளிக் செய்து "Add Layer Mask" என்பதனை தேர்ந்தெடுக்கவும்.


இப்போது தோன்றும் டயலாக் பாக்ஸில் வெள்ளை நிறத்தை தேர்வு செய்து ஓகே செய்யவும்.


இப்போது உங்களது கருப்பு வெள்ளை லேயரில் Layer mask சேர்க்கப்பட்டிருக்கும். இனி உங்களது டூல் பாக்ஸில் உங்களது Foreground மற்றும் Background ன் நிறங்கள் முறையே கருப்பு & வெள்ளையாக மாற்றவும். இதற்க்கு உங்களது விசைபலகையில் "D" ஐ அழுத்தவும். (லேயர் மாஸ்கின் தத்துவத்தை மீண்டும் ஞாபகத்திற்கு கொண்டு வாருங்கள்).


இனி பிரஷ் டூலை தேர்வு செய்யவும். பிரஷின் அளவை உங்களது விருப்பத்திற்க்கு வைத்துக்கொள்ளவும்.


இனி படத்தில் எந்த பகுதியை வண்ணமாக காட்டவேண்டுமோ அந்த பகுதிகளை பிரஷ் செய்யவும். இப்போது நீங்கள் பிரஷ் செய்த இடங்கள் எல்லாம் வண்ணமாக மாறியிருக்கும்.பிரஷ் செய்யும் போது கூடுமானவரை படத்தை Zoom செய்துகொள்ளவும் பின் அதற்கேற்றார்போல பிரஷ் அளவை தீர்மானித்துக்கொள்ளவும்.
இங்கே தான் ஒரு விஷயம் கவனிக்கபடவேண்டும். நாம் என்னதான் கவனித்து பிரஷ் செய்தாலும் உங்களது ஆப்ஜக்டையும் தாண்டி வண்ணம் வெளியேசென்று படத்தை கெடுத்துவிடும். இது பெரும்பாலும் எல்லோருக்கும் ஏற்படுவதே பார்க்க கீழேயுள்ள படம்:


சரி இதற்கெல்லாம் வழி செய்யத்தானே நாம் லேயர் மாஸ்க்கை ஏற்படுத்தியிருக்கிறோம். அதாவது "black conceals, white reveals" இல்லையா எனவே உங்களது டூல் பாக்ஸில் இருக்கும் Foreground & Background வண்ணத்தை முறையே வெள்ளை & கருப்பு என உல்டா செய்துகொள்ளவும். இதற்க்கு தட்டச்சு பலகையில் இருக்கும் "X" ஐ அழுத்தவும்.




இப்போது மீண்டும் ஒருமுறை பிரஷ் டூலை தேர்வு செய்து நீங்கள் தவறு செய்த இடத்தில் பிரஷ் செய்யுங்கள். வண்ணம் கருப்பு வெள்ளையாக மாறுவதை காணலாம்.பிரஷ் அளவை உங்கள் தேவைக்கு தகுந்தவாறு செட் செய்து கொண்டு பணிபுரிந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Final image:

ஆக இதுதான் Layer maskன் தத்துவம் இதனை புரிந்துகொண்டால் புகைப்பட எடிடிங்கில் பல இடங்களில் பேருதவியாக இருக்கும். இனி PIT வாசகர்களாகிய நீங்களும் "Selective coloring" இல் அசத்துவீர்கள் என நம்புகிறேன்.

குறிப்பு: நான் என்னுடைய கணினியில் இயங்குதளம் மற்றும் மென்பொருட்களை பிரெஞ்சு மொழியில் பயன்படுத்துவதால் என்னுடைய Screen shot கள் பிரெஞ்சு மொழியில் இருக்கிறது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
***
Lesson By ‘Nithi Clicks’http://www.flickr.com/photos/nithiclicks/

Sunday, July 10, 2011

Content-AwareScale என்பது படத்தை upscaling மற்றும் downscaling செய்ய பயன்படும் ஒரு நுட்பம் ஆகும். அதாவது படத்தின் பார்க்கும் தன்மையை மாற்றாமல் resize செய்வதாகும். அடோபி நிறுவனத்தின் மென்பொருளான Photoshop cs4 ல் இந்த Content-Aware Scale ஐ அறிமுகம் செய்தது. புகைபடக்கலைஞர்களாகட்டும் கிராபிக்ஸ் டிசைனர்களாகட்டும் இவர்களுக்கு இந்த நுட்பம் மிகவும் பயன் தரக்கூடியதாகும்.

சரி இந்த Content-AwareScale ஐ GIMP சூழலில் பணிபுரிவோர் பயன்படுத்தமுடியுமா என பார்த்தால் கண்டிப்பாக முடியும்.."Liquid Rescale" எனப்படும் இந்த plugin ஆனது Photoshop cs5 இல் பணிபுரிவதை காட்டிலும் மிக எளிமையாக்கப்பட்டிருப்பதே இதன் சிறப்பு. காரணம் நான் போட்டோஷாப் சூழலில் பணிபுரிபவன்.இந்த Content-AwareScale ஐ நான் போட்டோஷாப்பில் பயன்படுத்த முதலில் crop டூலை பயன்படுத்தி எனக்கு தேவையான வெற்றிடத்தை நானாக‌ உருவாக்கி, பின்னர் படத்தில் இருக்கும் object ஆனது "distortion" ஆகாமல் இருக்க நான் முதலில் object ஐ தேர்வு செய்து பின்னர் அதை "alpha channel" இல் சேமித்த பின்னரே என்னால் இந்த "Content-AwareScale" ஐ பயன்படுத்த முடியும். இதற்கு போட்டோஷாப்பில் நல்ல அனுபவம் இருக்க வேண்டும் இல்லையென்றால் படத்தில் இருக்கும் ஆப்ஜக்ட் ஆனது "distortion" ஆகிவிடும்.

ஆனால் கிம்பில் இதன் பயன்பாடு வெகு சுலபம். முதலில் இந்த "Liquid Rescale" ஐ பதிவிறக்கம் செய்துகொண்டு உங்களது கணினியில் நிறுவவும்.

பின்னர் "Content-Aware Scale" செய்யவிரும்பும் படத்தை கிம்பில் திறக்கவும். இப்போது "Layer>LiquidRescale" செல்லவும்.

கீழேயுள்ள படத்தை பாருங்கள்…


இது நான் என் நண்பரை கிளிக்கிய படம். இந்த படத்தை நான் "Panoramic" இல் சற்று அகலமான view வில் காட்ட விரும்புகிறேன்."Layer>LiquidRescale" சென்று எனக்கு கிடத்த டயலாக் பாக்ஸில் நான் படத்தின் அளவை சதவீதமாக மாற்றுகிறேன்.



பின்னர் படத்தின் நீள அகலம் முறையே 100 சதவீதமாகவும் 140 சதவீதமாகவும் கொடுக்கிறேன்.


அதாவது எனக்கு படத்தின் உயரம் மாற்றவிரும்பவில்லை மாறாக படத்தின் அகலம் மட்டும் இருக்கின்ற (100%) அளவைவிட இன்னும் கூடுதலாக 40% வேண்டும் என கொடுக்கிறேன்.பின்னர் "ok" செய்கிறேன்.

என்ன ஆயிற்று படம் "resize" ஆகிவிட்டது. ஆனால் படத்தில் இருக்கும் "object" ஆனது (நண்பரின் உருவம்)"distortion" ஆகி இருக்கிறதை பாருங்கள்.


சரி இதை எவ்வாறு தவிர்ப்பது.
"Layer>LiquidRescale" செல்லவும் இப்போது தோன்றும் டயலாக் பாக்ஸின் வலதுபுறம் இருக்கும் "Feature Preservation Mask" இல் இருக்கும் "New" icon அழுத்தவும்.




பின்னர் brush டூலை தேர்ந்தெடுத்து உங்கள் படத்தில் நீங்கள் பாதுகாக்கப்படவேண்டிய பகுதிகளை paint brush ஆல் paint செய்யவும்.


இப்போது "ok" செய்யவும், இப்போது நீங்கள் "resize" செய்யவிரும்பும் நீள அகலத்தின் மதிப்பை குறிப்பிடவும்.



பின்னர் "ok" செய்யவும். அவ்வளவுதான் உங்களது ஆப்ஜக்ட் "distortion" இல்லாமல் resize ஆகியிருப்பதை பாருங்கள்.



மற்றொரு உதாரணம்:





எனக்கு இந்த"Content-aware Scale" இல் பணிபுரிவது போட்டோஷாப்பை காட்டிலும் GIMP இல் மிக எளிமையாக உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

குறிப்பு: இந்த plugin கொண்டு Quick element removal , Complex element removal போன்றவையும் திறம்பட செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Lesson By ‘Nithi Clicks’http://www.flickr.com/photos/nithiclicks/

Tuesday, June 14, 2011

எல்லாருக்கும் வணக்கம்.

நேற்று என்னுடைய பதிவில் ஒரு படம் 'இறுதித் துளி' (Last Drop) என்று பெயரிட்டு போட்டிருந்தேன். 'Save Water' என்பது தான் அதன் கரு. அந்த படத்தை எப்படி எடுத்தீர்கள் என நண்பர் ஆதவன் கேட்டிருந்தார். அவருக்காக மட்டுமில்லாமல் எல்லாருக்கும் பயனாக இருக்கட்டுமே என எண்ணி இங்கு பொது விளக்கம். :)


இதுதான் அந்த படம்:



மிகவும் எளிதான படம் தான். இது எப்படி எடுக்கப்பட்டது என கீழே:

நான் பயன்படுத்தியவை...
* ஒரு வெற்று தண்ணீர் பாட்டில்
* ஒரு நீல நிற A4 அளவு காகிதம்
* நீல நிற பள்ளி பை
* tripod
* Ext flash with hot shoe
* அப்புறம் முக்கியமா கேமரா, மேக்ரோ(50mm) லென்சுடன்.

இதெல்லாம் இந்த படத்துல இருக்குற மாதிரி வச்சுக்கிட்டேன்.


இதுல, நீல நிற காகிதமும், நீல நிற பையும் flash வெளிச்சம் படும்போது அந்த நீல நிறம் (Aqua) கொடுப்பதற்காக. அது மட்டும் போதாது நீல நிறம் பெற. ஒயிட் பேலண்சையும் cool color range-க்கு (fluorescent WB என்னோட கேமராவுல) மாற்றிக்கொண்டேன். முக்கியமா ஃபிளாஷ் வெளிச்சம் பின்னணியில் மட்டும் படுமாறு வைத்துக்கொண்டேன். சிறியளவு வெளிச்சம் பாட்டில் மீது படுமாறு இருந்ததால், என்னுடைய மகளிடம் ஒரு வெள்ளைத் தாளை கொடுத்து பாட்டிலுக்கும் ஃப்ளாஷுக்கும் நடுவில் பிடிக்குமாறு செய்திருந்தேன்.

இடது புறம் உள்ள ஃப்ளாஷுக்கும் கேமராவுக்கும் ஒரு ஆள் அமரும் அளவுக்கும் இடைவெளி இருந்தது. அப்புறம் என்ன.... பாட்டிலின் நுணியில் ஒரு துளி தண்ணீரை இட்டேன். அதன் மீது மட்டும் ஃபோகஸ் படுமாறு இருக்க பெரிய aperture வத்துக்கொண்டேன். ஷட்டரின் வேகம் ஃப்ளாஷுக்கும் கேமரவுக்குமான sync speed 1/200 வைத்துக் கொண்டேன். அவ்ளோதான் கிளிக் கிளிக் கிளிக்.

EXIF: f/5.0;1/200;ISO-100; Ext Flash with Fluorescent White Balance.

கேமராவிலிருந்து எனக்கு கிடைத்த ரிசல்ட் இது...


அப்புறம்... பிற்சேர்க்கையில், நீல நிறத்தில் சிறிய மாற்றம் செய்தேன். அப்புறம் சிறிய சிறிய இடங்களில் cloning செய்தேன். அப்புறம் கொஞ்சம் ஷார்ப் ஆக்கினேன். அவ்வளவுதான் நம்ம படம் ரெடி. :)



ரொம்ப எளிதுதான் இல்லையா?.... நல்ல படங்களுக்கான 'கரு' நம்மைச் சுற்றிலும் விரவிக்கிடக்கின்றன. காண்பதற்கு கொஞ்சம் கலைக்கண் இருந்தால் போதும். :)

Saturday, January 22, 2011

இவ்வகையான சட்டங்கள் உங்களுக்குப் பிடித்து இருக்கிறதா ?








வெறும் ஒரே வண்ணத்தை உபயோகிக்காமல், உங்களது படத்தையே கொஞ்சம் மங்கலாக்கி பயன்படுத்தும் இந்த Blur Frame களை கிம்ப்/போட்டோஷாபில் செய்வது எளிது. அதை பிகாஸாவில் இன்னும் எளிதாய் செய்வது பற்றி இங்கே.


உங்கள் படத்தை முதலில் நகலெடுத்துக் கொள்ள வேண்டும். படத்தை தேர்ந்தெடுத்து File -> Save a Copy அமுக்கினால்,



பிகாஸா நகலெடுத்துக் கொள்ளும்.




பிண்ணனிக்காக இரண்டில் ஏதாவது ஒரு படத்தை மங்கலாக்க Effects -> Soft Focus
தெரிவு செய்ய வேண்டும்.



படத்தில் உளளவாறு Size பொத்தானை முற்றிலும் இடது புறத்துக்கு தள்ளி விடுங்கள். Amount எந்த அளவிற்கு வலது புறம் தள்ளப் படுகிறதோ அந்த அள்விற்கு படம் மங்கலாகும்.



மக்கலான படத்தை கொண்டு Collage பொத்தானை அமுக்கி,




Picture Pile மற்றும் Background Options: Use Image தேர்ந்து எடுங்கள்.



பிண்ணனி சரியாக வந்து இருக்கும். இனி முண்ணனியில் இருக்கும் குட்டிப் படத்தை அழித்து விடலாம்.

Clips பகுதியில் மங்கலாகத படத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.




படத்துக்கு தகுங்ந்தவாறு பக்கவாட்டிலோ( Landscape ) அல்லது நேர்வாட்டிலோ ( Portrait) படத்தை திருத்துக் கொள்ளலாம்.





படத்தின் மீது கிளிக்கி உங்களின் விருப்பத்தற்கு ஏற்ப பெரியதாய்/சிறியதாய் விரும்பிய கோணத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

Picture Borders பகுதியில் வேண்டுமானல் ஒரு உட்புற வெள்ளை சட்டத்தையும் இணைத்துக் கொள்ளலாம்.



அல்லது உட்புற சட்டம் ஏதும் இல்லாமலும் விட்டு விடலாம்.





Create Collage பொத்தானை அமுக்கினால் ...



Collage அடவைக்குள் படம் ரெடி!



அம்புட்டுத்தான் மேட்டர். !




Saturday, December 18, 2010

மழை சுழர்றி அடிக்கும் இந்த நேரத்தில் கரு நீல வானத்துடன் புகைப்படம் எடுப்பது எளிதுதான். ஆனாலும், இந்த கரு நீல வானத்தை கிம்பில் எப்படி கொண்டுவருவது பற்றி இங்கே.




படத்தை கிம்பில் திறந்து லேயரை நகலெடுத்துக் கொள்ளுஙகள்.




லேயர் Multiply Mode க்கு மாற்றுங்கள. படம் மாறி இருக்கும்.



இனி Channel Mixer தெரிவு செய்ய்ங்கள்.




Monochrome தெரிவு செய்து விட்டு, சிகப்பை 200 க்கு மாற்றுங்கள். நீலமும் , பச்சையும் , உங்களின் இரசனைக்கு ஏற்ப குறைக்க வேண்டும். நான் இந்த அள்விற்கு குறைத்துள்ளேன்.



இனி லேயர் மாஸ்க் உபயோகித்து வானம் தவிர்த்த தேவையற்ற பகுதிகளை நீக்கி விடுங்கள். நான் லேயர் மாஸ்க் முழுமையாக முடிக்கவில்லை சோம்பேறித்தனம்தான். :)




Thursday, October 28, 2010

Rarindra Prakarsa பற்றி இதற்கு முன் உங்களுத் தெரியாதெனில் இங்கே அவரின் படங்களை பார்த்து அதிசியத்துக் கொள்ளலாம்.

கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேல் அவரின் பல படங்களை ஒன்றாக வைத்து பார்த்துக் கொண்டு இருந்தப் போது, இந்தப் படங்களில் ஒரு ஒற்றுமை தெரிந்தது.






கண்டுப்பிடித்து விட்டீர்களா ?


Reduce Reuse and Recycle :)
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff