Sunday, August 2, 2009

சில அறிவிப்புகள்!

18 comments:
 
அன்பு க்ளிக்கர்க்ளே, படிப்பர்களே!

நம் புகைப்படக் குழுவின் நண்பர்கள் சிலர் புகைப்படக் கலையின் நம் குழுவினைத் தாண்டி பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சீவீ ஆரின் சென்னை சார்ந்த படங்களை Alliance Francaise என்னும் நிறுவனம் தொகுப்பாக காட்சிக்கு வைக்க உள்ளது.

அவர் மேலும் மேலும் பல சிகரங்களைத் தொட குழுவின் சார்பாக நம் அனைவருடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

அதே நேரம் பணிச் சுமை காரணமாக சீவீ ஆர் குழுவில் எழுதும் மற்றும் நடுவர் வேலைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார். நன்றி சொல்லி அவரைத் தனிமைப் படுத்தப் போவதில்லை ஏனென்றால் அவர் இந்தக் குழுமத்தில் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து சென்றுவிடவில்லை. நாளை தேவை எனில் அவரின் சேவை இங்கே தொடரும். அவரின் சொந்த, தொழில் சார்ந்த துறைகளில் மற்றும் புகைப்படத் துறையில் மென்மேலும் பல வெற்றிகள் பெறவேண்டும் என்பது நம் எல்லோரின் ஆசை. அனைவரின் சார்பில் வாழ்த்துகள் சீவீ ஆர்.

அடுத்ததாக நம் கருவாயன் (எ) சுரேஷின், நமது "உணர்வுகள்" போட்டியில் வெற்றி பெற்ற ஏழையின் சிரிப்பில் படம் குறிப்பிடத்தக்க படம் என்று Photography society of Madras ஆல், அதே உணர்வுகள் தலைப்பில் குறிப்பிடத் தக்க படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

அடுத்து குழுமத்தை மேலும் தொடர்ந்து அடுத்த கட்டநகர்வுக்கு கொண்டு செல்ல புதியதாக நால்வர் சேர்ந்துள்ளனர்.

நந்து f/o நிலா
கருவாயன் (எ) சுரேஷ் பாபு
இராயல் ராம் மற்றும்
கைப்புள்ள (எ) மோஹன் ராஜ்.

இவர்களுக்கு பலமான கரகோஷத்துடன் ( அவர்கள் முதுகிலே மொத்தினாலும் கூட ) கரகோஷம் பலமாக கேட்க வேண்டும் ;) ) வரவேற்கலாம் வாருங்கள்.

ஏற்கனவே சிறப்பு நடுவராக இருந்த கைப்புள்ள, சில போட்டிகளில் முதல் பரிசு பெற்றதோடு அடுத்தடுத்து பல படங்களின் மூலம் நம்மை அசத்திக் கொண்டிருக்கும் ஈரோடு மாமன்னர்கள் சுரேஷ் & நந்து சிங்கார சிங்கப்பூரில் இருந்துகொண்டு போட்டோகிராபியில் பட்டையைக் கிளப்பிக்க் கொண்டிருக்கும் மருதைப் புயல் இராம் அனைவரும் சேர்ந்து வரும் போட்டிகள், தொழில்நுட்ப பதிவுகள், கேள்விபதில்கள் போன்றவற்றை தொடர்ந்து திறம்பட இவர்கள் நடத்தி செல்வார்கள் என்ற நம்பிக்கையுடன்.....

நானும் 15ம் தேதிக்கு காத்திருக்கேன். முதல் மூன்று இடத்தைப் பிடிக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்துக் கொள்வதற்காக. அதுக்கு முன்னாடி முதல் பத்து கூடிய விரைவில்...

18 comments:

 1. வாழ்த்துக்கள் சிவிஆர்!
  புதிய தலைகளுக்கும் வாழ்த்துக்கள்!
  PIT இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. வாவ், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நன்றிகள் பல அண்ணாச்சி!!

  இந்த குழுமத்தின் மூலமாக நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் சேர்த்துக்கொண்ட நண்பர்களும் கொஞ்ச நஞ்சமல்ல.நான் எங்கு சென்று புகைப்படக்கலை பற்றி பேசினாலும் என்னை அறியாமல் எனது பேச்சு இந்த வலைப்பதிவைப்பற்றி திரும்பிவிடும்.இந்த வலைப்பதிவு என் ரத்தத்தில் ஊறிய ஒன்று.

  புதிதாக சேர்ந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நல்வரவு.இவர்களின் முயற்சியால் பிட் மேலும் பொலிவடையும் என்பதில் ஐயமில்லை!!

  தமது தனித்துவமான ரசனையாலும் அட்டகாசமான படங்களாலும் தொடர்ந்து நம்மளை அசத்தி வருபவர் கருவாயன்.
  PSM-இல் அவரின் படம் தேர்ந்தெடுக்கப்பட்டது அவரின் திறமைக்கு கிடைத்த பொருத்தமான அங்கீகாரம்! அவரின் புகைப்பட பயணம் மென்மேலும் சிறப்படைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 4. ஆஹா..... ரொம்ப மகிழ்ச்சியான செய்தி.

  நம்ம சி வி ஆர், கருவாயன்(ஏம்ப்பா இப்படி ஒரு பெயர்?) என்ற சுரேஷ் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

  புது வாத்தியார்கள் நாலு பேருக்கும் இனிய வரவேற்பு.

  எதையும் நாலு பேர் சொல்லணும் இல்லை?:-)))

  ReplyDelete
 5. வாழ்த்துகள்,
  cvr- ன் படங்களை கண்டிப்பா போய் பார்க்கனும், சுரேஷ் பாபு அவர்களின் படங்கள் தேர்வானதும் சாதரண செய்தி அல்ல சென்னையை மையமாக கொண்டு இயங்கினாலும் இது PSM-ன் அகில இந்திய அளவிலான போட்டி இவர்களும்(PSM) august 18 முதல் பரிசு பெற்ற அனைத்து படங்களையும் லலித் கலா அகாடமியில் காட்சிக்கு வைக்க இருக்கிறார்கள்.

  புது வாத்தியார்களுக்கு சலாம்.

  ReplyDelete
 6. சீவிஆர் அண்ணனுக்கு சிறப்பு வாழ்த்துகள்! நிச்சயம் வரப்பார்க்கிறேன், வார இறுதியில். கருவாயன் அண்ணனுக்கும் வாழ்த்துகள்!
  புது நடுவர்களுக்கு வந்தனம். பதிவுகளின் சராசரி எண்ணிக்கை அதிகரித்தால் இன்னும் நல்லதுதானே!

  ReplyDelete
 7. புதியவர்களுக்கு வாழ்துக்கள்

  @ CVR
  தல வேலை பளு குறஞ்சதையும் மறுபடியும் எழுதுங்க
  உங்க விளக்கம் ரொம்ப எளிமையா இருக்கும் அதனாலா தான்
  நேரம் கெடைக்கும் போது கொஞ்சம் தலையக்காட்டுங்க

  ReplyDelete
 8. CVR மற்றும் சுரேஷுக்கு வாழ்த்துகள்! புதிய கூட்டணிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்!! :-)

  ReplyDelete
 9. சிவீஆர் - கருவாயன் என்ற சுரேஷ் - நல்வாழ்த்துகள் - மேன்மேலும் புகழின் உச்சத்தினை அடைய

  புதியதாக பொறுப்பேற்கும் நந்து உட்பட நாலவருக்கும் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் சிவிஆர் & சுரேஷ்!!!!!!!!

  ReplyDelete
 11. சி.வி.ஆர் மற்றும் கருவாயனுக்கு வாழ்த்துகள். மென்மேலும் சிகரம் தொடவும் வாழ்த்துகள்

  ReplyDelete
 12. சி.வி.ஆர் மற்றும் கருவாயனுக்கு வாழ்த்துகள். மென்மேலும் சிகரம் தொடவும் வாழ்த்துகள்..

  புதியவர்களை அன்புடன் வரவேற்கின்றோம்!

  ReplyDelete
 13. புதிய குழுவுக்கு வாழ்த்துக்கள்.
  வெறும் போட்டிகளாக இல்லாமல் பாடங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 14. CVR & கருவாயனுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!
  குழுவில் இணைந்த நந்து, கருவாயன், ராம் மற்றும் கைப்புள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்!
  இப்படி போட்டிக்கு நல்லா படம் எடுக்குற எல்லாரையும் நடுவராக்கிட்டா எப்படி? ஏற்கனவே நாதஸ் போய்ட்டாரு:-(

  ReplyDelete
 15. கலக்கி போடுங்க.....அருமை....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. Congratulations to CVR and Karuvayan,

  Warm welcome to நந்து f/o நிலா, கருவாயன் (எ) சுரேஷ் பாபு, இராயல் ராம் மற்றும்
  கைப்புள்ள (எ) மோஹன் ராஜ்.

  Expecting more tutorials, experiences and lessons from these great photographers.

  ReplyDelete
 17. அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ... உண்மையில் இந்த வெற்றிக்கு காரணம் பிட் என்று சொல்லிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ..

  சிறு திருத்தம் ,அந்த புகைப்படம் பிட் நடத்திய `உணர்வுகள்` போட்டியில் வெற்றி பெறவில்லை , `கருப்பு & வெள்ளை` போட்டியில் வென்ற போட்டோவாகும் ...

  மேலும், எனது 5 போட்டோக்கள் அங்கீகரிக்கபட்ட(accepted) போட்டோவாக PSM தேர்ந்தெடுத்துள்ளது
  என்பதையும் தெரிவித்துக்கொள்ள மகிழ்ச்சியடைகிறேன்..

  மொத்தம் 6 போட்டோக்கள் பார்வைக்கு லலித் கலா அகாடமி இல் வருகின்ற ஆகஸ்ட் 18-23 வரை PSM நடத்தும் exhibitionல் பார்வைக்கு வைக்க உள்ளார்கள் ..நண்பர்கள் அனைவரும் நேரமிருந்தால் வந்து பார்க்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

  CVRக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

  here is the `honourable mention`winning photo,

  http://www.flickr.com/photos/30041161@N03/3350928450/


  here is the `accepted for displayed` photos,

  http://www.flickr.com/photos/30041161@N03/3595047425/

  http://www.flickr.com/photos/30041161@N03/3521196614/

  http://www.flickr.com/photos/30041161@N03/3465731632/

  http://www.flickr.com/photos/30041161@N03/3443827012/

  http://www.flickr.com/photos/30041161@N03/3397878320/

  -சுரேஷ் பாபு..

  ReplyDelete
 18. சி.வி.ஆர், கருவாயன் இருவருக்கும் வாழ்த்துகள். போட்டோ கண்காட்சி கட்டாயம் போய்ப் பார்க்கிறோம்.

  மேலும் புகழ் பெற இருவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff