Wednesday, February 24, 2010

செவ்வானம் ...

5 comments:
 
இளவரசி டயானவிற்கு பிறகு அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்டது, சூரியன் மறையும் மாலை காட்சிகளாகத்தான் இருக்கும். கேமரா இருக்கும் அனைவரும் ஒரு முறையேனும், இதை முயற்சி செய்து இருப்போம்.
கிம்பில் எளிய முறையில் , இவ்வகை காட்சிகளை மெருகேற்றவது பற்றி இங்கே பார்ப்போம்.



படத்தை கிம்பில் திறந்து, பின்னணி லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.



Layer Mode -> Multiply என்று மாற்றிக் கொள்ளுங்கள்.



படம் ஒரளவிற்கு வண்ணதில் நிறைந்து இருக்கும்.
இனி Layer-> New From Visible கிளிக்கினால் ஒரு புதிய லேயர் நாம் இது வரை செய்து இருக்கும் மாற்றங்களோடு உருவாகும்.



அடுத்து Colors-> Color Balance தெரிவு செய்யுங்கள்.




Select Range to Adjust -> Shadows தெரிவு செய்து

சிவப்பையும், மஞ்சளையும் அதிகரியுங்கள்.



உங்களின் இரசனைக்கு ஏற்ப மாற்றுங்கள். உதாரணதிற்கு நான் இங்கே

Red = 51 . Blue = - 34

என்று மாற்றி இருக்கிறேன். ( நீலமும். மஞ்சளும் நேரெதிர் வண்ணங்கள். நீலத்தை குறைப்பது. மஞ்சளை அதிகரிப்பதற்கு சமம்)

அவ்வளவுதான் வேலை. மொத்தம் இரண்டு நிமிடம் கூட ஆகாது செய்து முடிக்க
( படம் உதவி. இராமலக்ஷ்மி )

5 comments:

  1. நல்லாயிருக்கு.... தகவலுக்கு நன்றி.

    படம் அவங்களுடையதா.... நல்லாயிருக்கு.

    ReplyDelete
  2. மிக அருமையான படம் அதை மிக தெளிவாக விளக்கிய விதமும் அருமை... நன்றி ராமலக்ஷ்மி... நன்றி ஆனந்த்...

    ReplyDelete
  3. மெருகேற்றியபின் படம் மிக அழகு. நன்றி ஆனந்த்.

    ReplyDelete
  4. That's a great tip... Nice change in the look of the photo! Makes it more beautiful!

    Pixellicious Photos

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff