Tuesday, June 29, 2010

வணக்கம் மக்கா, இந்த முறை போட்டிக்கு வந்த படங்களை பார்க்கும்பொது தலைப்பு என்ன மகிழ்ச்சியா ? அல்லது "வாண்டுகள்-பகுதி 2 " என்றான்னு சந்தேகம் வந்துடுச்சு. நிறைய குழந்தைகள் படம். ஆனா அவர்களின் மகிழ்ச்சி நம்மை எளிதாக வசப்படுத்தி விடுகின்றது. போட்டியில் வென்ற முதல் மூன்று படங்கள் மூன்றாம் இடம் அன்பு CR இரண்டாம் இடம் அமல் முதல் இடம் நாகப்பன் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ! போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !!!

Monday, June 28, 2010


முதுமையால் தளர்ந்து ஓடுங்கி உறங்கிக்கொண்டு இருப்பது " மனிதம் "

எங்க சென்று கொண்டு இருக்கிறோம் ??
வேதனையாய் நான் ....


Thursday, June 24, 2010

வணக்கம் மக்கா, இந்த முறை போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. முதல் சுற்றில் தேர்வு செய்ய படாத படங்களை பற்றிய சின்ன அலசல் கீழே, அமைதிச்சாரல் அழகான படம். இந்த படத்தில் குழந்தையின் கால்கள் விடுபட்டுள்ளது. மற்றும் பின்னணில கொஞ்சம் டிஸ்டர்பன்ஸ் இருக்கு. கோபி இது ஒரு நல்ல குரூப் போர்ட்ரைட் ஷாட். ஆனா தலைப்புக்கு ஏற்ற மகிழ்ச்சி குறைவு. பூபதி நல்ல டோன். முன்னாடி இருக்கும் சிறுமி கொஞ்சம் கவனமா பாக்குற மாதிரி இருக்கு. ஹேமா நெருக்கமா frame செய்யப்பட்ட படமா இருக்கு. இடது பக்கம் கொஞ்சம் இடைவெளி விட்டு இருக்கலாம். ஹேமா குழந்தையின் முகத்திற்கு நேராக படம் எடுத்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும். வள்ளி சிம்ஹன் விதவிதமான வாண்டுகள். ஒரு குழந்தையை தவிர வேற யாரும் சிரிக்க கூட இல்லை கார்த்திகேயன் சிறுவனை மட்டும் frame பண்ணியிருந்தால் அருமையாக இருந்து இருக்கும். கார்த்திகேயன் நல்ல ஒளியமைப்பு. போட்டோவுக்கு போஸ் குடுக்கும் போது சிரிக்கற மாதிரி இருக்கு. நித்தி கிளிக்ஸ் கொஞ்சம் ஹார்ஷ் லைட். சாதாரண காட்சி அமைப்பு. அவரின் கையும் சிறிதளவு விடுபட்டுள்ளது செந்தில் நல்லா இருக்கு. ஆனா தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கு கமல் Forced Smile நந்தகுமார் ஆடும், பசங்களும் நல்லா போஸ் குடுக்குறாங்க. ஆனா காட்சி அமைப்பு சாதாரணமா இருக்கு PMT இப்ராஹிம் பையன் போட்டோவுக்கு சிரிக்கிற மாதிரி இருக்கு. பிரியன் சாதாரணமான காட்சி அமைப்பு. வலது பக்கம் கொஞ்சம் இடம் விட்டு இருக்கலாம். ராஜேஷ் நல்ல முயற்சி. சிலருடைய முகம் சரியாக தெரியலை. Light is bit uneven. ராமலக்ஷ்மி நல்ல product ஷாட். மகிழ்ச்சி கொஞ்சம் குறைவு தனுஷ் பசங்க சந்தோஷமா இருக்காங்க. இதுலயும் காட்சி அமைப்பு சாதாரணமா இருக்கு வெங்கட்ராமன் நல்ல போர்ட்ரைட் ஷாட். அவர் கண்ணாடியில் பிளாஷ் பிரதிபலிப்பு சிறிது டிஸ்டர்ப் பண்ணுது. சுகந்தி அந்த glow effect நீக்கினால் இந்த படம் இன்னும் நல்லா இருக்கறமாதிரி தோணுது. glow effect நீக்கிய படம் கீழே. ஆதவா போட்டோவுக்கான சிரிப்பு மாதிரி இருக்கு. Not Spontaneous வின்சென்- நல்ல portrait ஷாட். ஆ.ஞானசேகரன் இதுவும் நல்ல portrait ஷாட். இதிலும் போட்டோவுக்கு சிரிக்கிற மாதிரி இருக்கு. S.M. அன்பு ஆனந்த் க்யுட்டான குழந்தை. நல்ல காட்சி அமைப்பு. சத்யா பையனோட முகத்தில் க்யுட்டான எக்ஸ்ப்ரெஷன். அருண் சக்ரவர்த்தி கொஞ்சம் ஓவர் எக்ஸ்போஸ். கீழே உள்ள பெண் குழந்தையை முழுவதுமாக காட்சி படுத்தி இருக்கலாம். வினோத் பிரசன்னா அழகான சிரிப்பு. மிக அருகில் எடுப்பட்ட படம் போல இருக்கு. கொஞ்சம் distortion இருக்கு. சாய் கார்த்திக் அருமையான காட்சி அமைப்பு. நல்ல ஒளி. அழகான குழந்தை. மகிழ்ச்சியை விட குழந்தை ஆர்வமா காமிராவ பாக்குற மாதிரி இருக்கு. அன்டன் கருப்பு வெள்ளையில் அழகான படம். Nicely Framed. இதிலும் குழந்தை ஆர்வமா காமிராவ பாக்குற மாதிரி இருக்கு. ராஜா செம க்யுட்டான பாப்பு. என்ன பார்வை. ஆனா மகிழ்ச்சி காணோம். மேலும் பாப்பாவின் கைகள் முழுவதுமாக விடுபடாமல் இருந்து இருக்கலாம். மேலே கூற பட்டுள்ள குறைகளில் சில, முன்னேறிய முதல் பத்து படங்களிலும் உள்ளது. அவற்றின் விமர்சனம் மற்றும் முதல் மூன்று படங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்

Wednesday, June 23, 2010




வாழ்த்துகள் தரநேந்திரா சார். :)

இவரின் மற்ற படங்களைக் கண்டு களிக்க இங்கே கிளிக்கவும்

Tuesday, June 22, 2010

அன்பு CR கெளதம் கார்த்திக் கனி அமல் கோகுல் நாகப்பன் மதன் மீனாட்சிசுந்தரம் மேர்வின் ஆன்டோ இந்த சுற்றுக்கு தேர்வு பெறாத மற்ற படங்களின் நிறை, குறைகளை நாளை விரிவாக பார்ப்போம்.
குழுப்போட்டியில் கலந்துகொள்ள பெயர் கொடுத்தவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்: போட்டிக்கு பெயர் கொடுத்தவர்களில், அதிகப்படியானோர், இன்னும், எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த நிலையில், இனியும் போட்டியை நீட்டி இழுப்பது, இதுவரை கலந்து கொண்டவர்களின் முயற்சியை அங்கீகரிக்காததுபோல் ஆகிவிடும். ஆகவே, அனைவரும், உங்கள் 'படங்கள்/ஆல்பங்களை' முடிந்தவரை பூர்த்தி செய்து, ஒரு பெயர் சூட்டி, இந்தப் பக்கத்தில் விவரங்களை பின்னூட்டவும். http://photography-in-tamil.blogspot.com/2009/12/blog-post_28.html நன்றீஸ்! இதுவரை பங்குகொண்டவர்களின் ஆல்பம் சேம்ப்பிள் சில கீழே: uniquely சிங்கப்பூர் குழு City of Summer, Sydney, Australia குழு LosColoresOrange, Orange County, California குழு Melbourne, Australia குழு மற்றவர்களும், உங்கள் குழுக்களின் விவரங்களை அறியத் தாருங்கள். இதுவரை போட்டியில் உள்ளவர்களும், ஆல்பங்களை மெருகேத்தி finalize செய்யுங்கள். போட்டிக்கான ஆல்பங்கள் வரவேண்டிய கடைசித் தேதி ஜூன் 30,2010.

Tuesday, June 15, 2010

இந்தவார க்ளிக்கில் தேர்வு செய்யப்பட்ட படம். கார்திக். ஆர். யாதவுடையது. வாழ்த்துகள் கார்த்திக்.





முதுமையின் சித்திரம் கருப்பு வெள்ளையில்.

தொலைத்த இளமை நரைத்த முடியில்.

வாழ்வின் அனுபவங்கள் தோலின் சுருக்கங்களில்.

நாமும் ஒரு நாள் இந்நிலையை எய்துவோம் என்பதை மறந்த மதிகெட்ட மனிதரால்..

ஒதுக்கப்பட்ட வேதனை ஓடுகின்றன நெற்றியின் வரிகளிலே.
-
தேர்வுக்கான காரணம்: Sharpness/ clever b&w treatment / conveys emotion clearly, the loneliness.

- தேர்வும் கவிதையும் காரணமும் - ராமலக்ஷ்மி

Tuesday, June 8, 2010

ஃப்ளாஷ் போட்டோகிராஃபி பற்றி அடுத்தப் பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன். அதற்கு முன் ஃப்ளாஷ் போட்டோகிராபி சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் சொல்லவும். முடிந்தவரை அதையும் சேர்த்து தொகுத்து எழுத முயற்சிக்கிறேன். மேலே இருக்கும் படம் கட்டுப்படுத்தப் பட்ட ஃப்ளாஷின் ஒளியைக் கொண்டு எடுத்தது. மாடல் ஜெயஸ்ரீ ஐயப்பன் :) மற்றவை உங்களின் கேள்விகள் கண்ட பின் நன்றி

Sunday, June 6, 2010

இந்தவார புகைப்படத்திற்கு தேர்வான இரண்டு படங்கள் :


1 - ராமலக்ஷ்மி ராஜன்






2 - மெர்வின்.



நன்றி நண்பர்களே

Wednesday, June 2, 2010

வணக்கம் மக்கா, நாம் அனைவரும் நம் மன நிறைவுக்கு தான் படம் எடுக்கின்றோம். அப்படி படம் எடுக்கும் போது ஒரு நல்ல படத்தை எடுத்துவிட்டால், நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதையே இந்த மாத தலைப்பாக வைத்து இருக்கின்றோம். இம்மாத தலைப்பு - மகிழ்ச்சி (உவகை, களிப்பு, ஆனந்தம்) படம் எடுக்கும் வழிமுறைகள் மற்றும் பாடங்கள் பல பிட்டில் உள்ளது. அவற்றை படித்து முயற்சி செய்து பார்க்குமாறு கேட்டுகொள்கிறேன். இம்மாதம் உங்களுடைய படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் -- > "படத்தை பார்க்கும் போது அதில் உள்ள மகிழ்ச்சி நமக்கும் தொற்றி கொள்ள வேண்டும். அம்புட்டுதான் !" சில எடுத்துக்காட்டுப் படங்கள் CVR ஜீவ்ஸ் கருவாயன் போட்டிக்கான விதிமுறைகள்: இங்கே போட்டிக்கான படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 15-June-2010. உங்களின் மகிழ்ச்சியில் கலந்துகொள்ள காத்துக்கொண்டு இருக்கிறேன். -நாதஸ்
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff