Thursday, April 28, 2011

முந்திய 10 சிகப்பை பாத்தாச்சு. இனி, வெற்றி பெற்ற மூன்று எது என்பதைப் பார்ப்போம்.நான் படம் பிடிக்கும்போது, அடிக்கடி தவற விடும் ஒரு விஷயம், படத்தின் ஷார்ப்னெஸ் (sharpness). ஒரு இம்மியளவு ஷட்டர் வேகம் முன்னே பின்னே அமைந்தாலும், படத்தின் துல்லியம் போய், ஒரு blurness அமைந்துவிடும்.
மிக முக்கியமாக, க்ளோஸ்-அப்பில் எடுக்கும் படங்களுக்கு, இந்த துல்லியம் மிக அவசியம். இல்லைன்னா, படத்தின் வசீகரம் குறந்து விடும்.

மனிதர்களை/மிருகங்கள்/ப்றவைகளை க்ளோஸ்-அப்பும் போது, அவர்களின், கண்ணை ஃபோக்கஸ் செய்து, துல்லியமாய் காட்ட வேண்டும். இல்லைன்னா, அந்தப் படம் எடுபடாமல் போக வாய்ப்பிருக்கிறது.
அதே போல், மற்ற விஷயங்களை எடுக்கும்போது, பார்ப்பவரின் கவனம் எங்கு ப்ரதானமாய் விழ வேண்டுமோ, அந்த இடம், ஃபோக்கஸில் துல்லியமாய் அமைய வேண்டும். இல்லைன்னா, படங்கள் சற்றே பிசு பிசுத்துப் போய் விடும்.

சிகப்புக்கு வந்த பலப் படங்களில், இந்த துல்லியமின்மை காணக் கிட்டியது.

துல்லியம், படத்தின் தலைப்பு, எடுத்தவரின் உழைப்பு, இஸ்க்கும் தன்மை, போன்ற வடிகட்டிகளை பயன் படுத்தி, என்னைக் கவர்ந்த மூன்று.

மூன்றாம் இடத்தில்:
kadalanban

துல்லியப் பரச்சனை லேசா இருக்கு. பழத்தின் மேல், 'பளிச்' காணும் (பெருசாக்கிப் பாத்தா). இலையின் மேல் ஃபோக்கஸா? (இல்ல, என் கண்ணு ஃப்யூஸ் போகுதான்னு செக் பண்ணவா?)

இரண்டாம் இடத்தில்:
அமல்

இதிலும் கூட சற்றே துல்லியம் குறைவாத்தான் இருக்கு (கண்டிப்பா ஐ டாக்டரை பாக்கணுமோ?)

முதல் இடத்தில், பளிச்னு நிக்கற படம்
Sathiya

"அப்படியே சாப்பிடலாம்"னு விளம்பரம் கொடுக்கக் கூடிய அளவுக்கு, பளிச்னு க்ளிக்கிய சத்யாவுக்கு வாழ்த்துக்கள்.

சிறப்பு கவனம் பெற்றவை:
sivabaraneedharanன்

ரொம்ப ஒவர் contrast ஆகி, ஒரு செயற்கைத்தனம் வந்துடுச்சு. ஏங்கிளும், கை கொடுக்கலை. கொஞ்சம் கூட பின்னாடி வந்து க்ளிக்கியிருந்திருக்கலாம்.. ?

அனைவருக்கும் நன்றீஸ்.

அடுத்த மாதம் சந்திப்போம். தொடர்ந்து கலக்குங்க.

Tuesday, April 26, 2011

டாப்10 தாமதமாக்கியதற்கு வருந்துகிறோம்.சிகப்பு தலைப்புக்கு 85 படங்கள் அணிவகுத்து வந்துள்ளன. செக்கச் செவேல்னு எல்லாப் படத்தையும் பாக்கவே அழகா இருந்தது. ஆணி அதிகமான காரணத்தால், தனித்தனியா கருத்ஸ் சொல்ல இன்னிக்கு நேரமில்லை. மன்னிக்க. வழக்கமான பாணியில், படங்களை மேயும்போது, எது கவனத்தை தன் பக்கம் அதீகமாய் இஸ்க்கிரதோ, அதுவே கட்டம் கட்டப் படுகிறது. இனி டாப்10 பாப்பமா?

Nithi clicks


Dharma


Shravyan


Gayathri


Senthilkannan


KadalAnban


Sathiya


Sivabaraneedharan


Anton


Amal



Monday, April 4, 2011

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இந்த மாதத்திற்கான போட்டித் தலைப்பு - சிகப்பு ( Red ).

சிகப்பு நிறத்தை பிரதிபலிக்கும் எந்த படமும் போட்டிக்கு அனுப்பலாம். ஓவரா ரத்தம் மட்டும் காட்டி டெரராக்கிடாதீங்க. டாங்க்ஸு.

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே..

படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 20-04-2011

சில சாம்பிள் படங்கள்
Macro - Reverse Lense technique

Noon Red

Get..Set...Go..

The Prancing Horse

Friday, April 1, 2011

மார்ச் 2011 'கதவுகள்' புகைப்படப் போட்டிக்கு வந்த படங்களில், முந்திய பத்தை பாத்திருப்பீங்க

போட்டிக்கு வந்த 47 படங்களையும் இங்கே சொடுக்கி காணலாம். அனைவரும், படங்களைப் பார்த்து தங்கள் கருத்துக்களை மறவாமல் பகிரவும்.

முந்திய பத்தில் வெற்றி பெற்ற மூன்றை இனி காணலாம்.

மூன்றாம் இடத்தில் karthiன் 'ஜெயில் கதவு'. வலப்பக்க கதவு முழுசா இருந்திருந்தா சிமெட்ரி கூடி அழகும் கூடியிருக்கும்


இரண்டாம் இடத்தில் Meenakshisundaraத்தின் 'தியேட்டர் கதவு'. 'பன்ச்' இல்லைன்னாலும், உள்ளதை உள்ளபடி காட்டிய விதத்திற்காக இந்த இடம். இந்த கட்டடத்தை தலைப்புக்கு ஏற்றாற் போல் எடுத்த விதம் அருமை.
Meenakshisundaram


முதல் இடத்துக்கு ரொம்ப சிரமப்படாம சுலபமா நுழைந்த Sruthiன் படத்துக்கு முதல் இடம்.
Sruthi




சிறப்பு கவனம் பெற்ற மற்ற கதவுகள்.
Sidhdhar dreams


Kingsly Xavier



பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றீஸ்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பி.கு: படங்களுக்கான விமர்சனங்கள் மெதுவாய் வரும். ஆணி ஜாஸ்த்தி. பொறுத்தருளவவும். நன்றீஸ் :)
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff