Thursday, July 28, 2011

கூல் என்கிறது ஹாட்! ஹாட் என்கிறது கூல்!

நாம் பார்க்கிற சூரியனும் வெளிச்சம்தான்; வெல்டிங்செய்கிறபோது பார்க்கிறதும் வெளிச்சம்தான். நிலா ஒளியும் வெளிச்சம்தான்.

ஆனா போட்டோ கிராபர்களுக்கு சும்மா வெளிச்சம் ன்னு சொன்னா போதாது. இன்னும் டெக்னிகலா சொல்லனும். எங்கே வெளிச்சத்தை நம்மால கட்டுப்படுத்த முடியாதோ - திறந்த புல்வெளி, இயற்கையான அரங்கு இப்படி - அங்கே எல்லாம் இப்படி டெக்னிகலா ஒளியை ஆராய்ஞ்சாதான் போட்டோ எடுக்கலாமா இல்லை சரியான சூழ்நிலை வரும் வரை காத்திருக்கணுமான்னு முடிவு செய்யலாம்.

இதுக்கு அவங்க பயன் படுத்தற டெக் வார்த்தைகள்:

ப்ரைட்னஸ், கலர், கான்ட்ராஸ்ட்.

அதாவது ஒளி அளவு, வண்ணம், வேறுபாடு.


ளி அளவை பார்க்கலாம்.

குறைந்த பட்சமா ஓரளவாவது வெளிச்சம் இருக்கணும். இல்லையானால் போட்டோ எடுக்க முடியாது. அதிகமா இருந்தா இன்னும் நல்ல படம் எடுக்க முடியலாம். அபெர்சரை இன்னும் சின்னதா வெச்சுக்கலாம்; ஷட்டர் வேகத்தை கூட்டிக்கலாம். முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் காலத்துல ஸ்லோ பில்ம் ன்னு உண்டு. அதை பயன்படுத்த முடியும். பில்மை விடுங்க! நல்ல வெளிச்சம் இருந்தா விடியோகிராபர்கள் சின்ன அபெர்சரை பயன்படுத்தி நகர் படம் எடுக்கலாம். அப்படி எடுக்கும் போது வண்ணங்கள் இன்னும் நல்லா வரும். படமும் கூர்மையா இருக்கும். விடியோ நாய்ஸ் (சிதறல்) குறைவா இருக்கும்.

ஆனா வெளிச்சம் குறைவா இருந்தா ஒண்ணும் செய்ய முடியாது. யாராவது கலைக்கண்ணோட எடுக்கிறேண்னு எடுத்தாத்தான் குறைவான வெளிச்சத்துக்கு பயன் உண்டு.


ந்த வண்ணம் என்கிறது என்னன்னு எல்லாருக்கும் தெரியும். எந்த வண்ண வெளிச்சத்திலேயும் படம் எடுக்கலாம். அது கலை மெருகை கூட்டலாம். பலரும் எடுப்பது '' வெள்ளை'' வெளிச்சத்திலேதான். வெள்ளை வெளிச்சம் என்பதென்ன? முக்கிய வண்ணங்களான சிவப்பு, நீலம், பச்சை மூணும் போதிய அளவு இருந்துட்டா நம் மூளை அதை வெள்ளைன்னு சொல்லிடும். ஆனா எப்பவும் ஏதோ ஒரு வண்ணம் அதிகமாகவே இருக்கும். டிஜிட்டல் காமிராவும் இதே போல அட்ஜஸ்ட் பண்ணும், ஆனா அவ்வளோ சரியா செய்யாது. அதனால சீரியஸா போட்டோ எடுக்கிறவங்க என்னமாதிரி வெள்ளை வெளிச்சம் ன்னு ஆராயணும். இதுக்கு பிசிக்ஸ் வாத்தியார்கள்கிட்டேந்து கடன் வாங்கி வெப்ப அளவாகவே இதை சொல்கிறாங்க- கெல்வின்.

இதென்ன வெப்ப அளவு?

ரு பொருளை வெற்றிடத்தில வெச்சு போதிய அளவு சூடாக்கினா அது ஒளிரும். இந்த ஒளி அளவைதான் வெப்ப அளவைத்தான் பார்க்கிறோம். 10,000 டிகிரி கெல்வின்ல - அதிக வெப்பத்தில நீல வண்ணம் அதிகமா இருக்கும். போட்டோகிராபர்கள் இதை கூல் என்கிறாங்க! 2,000 டிகிரி கெல்வின்ல - குறைந்த வெப்பத்தில சிவப்பு வண்ணம் அதிகமா இருக்கும். இதை வார்ம் என்கிறாங்க!

உண்மையில் இது புரிஞ்சுக்ககூடியதுதான். வெல்டர்களுக்கு தெரியும். அவங்க வெல்ட் பண்னும்போது நீல நிற வெல்டிங் ஜ்வாலை சிவப்பா இருக்கிற இரும்பைவிட சூடானது.

நம்ம சமையலறையில நீல நிற காஸ் ஸ்டவ் மெலே சுக்கா ரொட்டி செய்ய/ அப்பளம் சுட போடுகிற வலை சிவப்பா ஆனாலும் நீல காஸ் அதிக வெப்பம் உடையதுதானே?

# படங்கள்1,2,3: ராமலக்ஷ்மி



தப்புன்னு தோணினாலும், கூட்டிக்கழிச்சு பார்க்க சிவப்பு அதிகம் இருக்கிற படம் வார்ம். நீலம் அதிகம் இருக்கிற படம் கூல்! அப்படித்தான் மனசு பழகி இருக்கு!

5,500 K என்கிறது பகல் வெளிச்சம் - டே லைட். இது தவிர இன்னும் ரெண்டு ஸ்டான்டர்ட் இருக்கு . டங்க்ஸ்டன் 3200 K, 3400 K . இது ரெண்டும் கிட்ட கிட்ட இருக்கறதால் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த அளவெல்லாம் பில்ம் பயன்படுத்தினா கலர் பாலன்ஸ் பண்ண பில்ம் ஆ வாங்க பயன்பட்டது.

இப்ப டிஜிட்டல் படங்களை போஸ்ட் ப்ராசஸிங் ல இதை எல்லாம் கண்ட படிக்கு மாத்தமுடியுது! அதனால இந்த 5.500 க்கு மேல் வெப்பமோ 3,200 க்கு கீழ் வெப்பமோ உள்ள எந்த சூழ்நிலையிலும் படம் எடுக்க முடியுது.


உச்சிவெயிலில் எடுக்கப்பட்ட இப்படங்கள் அத்தனையிலும் கூல் கூல் நீலம் விளையாடுவதைக் காணலாம்.

# படம் 4: ஜேம்ஸ் வஸந்த்

(இன்னும் தெரிந்து கொள்வோம்)

பாகம் I இங்கே.

-திவா
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/

Monday, July 25, 2011

வணக்கம் நண்பர்களே....

நீண்ட இடைவெளிக்கு பிறகு `புகைப்படங்களில் நேர்த்தி` என்கிற புதிய தலைப்பின் வழியாக உங்களை சந்திப்பதில், பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்...

இன்றைக்கு கிட்டதட்ட அனைவரிடத்திலும் ஏதோ ஒரு வடிவில் கேமரா என்பது நம்மிடம் இருப்பது உறுதி..

ஒரு சிலர் , முதன் முதலில் வாங்குகின்றோம் , நல்லதாக வாங்கிவிடலாம் என்று தனக்கு சம்பந்தமில்லாத , தேவையில்லாத விலை அதிகமான கேமராக்களை ஆர்வத்தில் வாங்கிவிடுவார்கள்..ஆனால் அவர்களுக்கு நன்றாக படம் எடுக்க தெரியாது...

சரி நமக்கு அவ்வளவு தான் தெரியும் என்று படம் எடுக்க விருப்பப்படமாட்டார்கள்.. அவ்வளவு தான், கேமரா சும்மா வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும்..

அதே சமயம் விலை குறைவான கேமராக்களை வைத்திருப்பவர்கள், தான் தவறாக எடுத்த படங்களை பார்த்து, இந்த கேமராவில் இவ்வளவு தான் எடுக்க முடியும் என்று தாழ்வு மனப்பான்மையுடன் மேலும் படம் எடுக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள்...

ஆனால் நல்ல படம் என்பது கண்டிப்பாக விலை அதிகமான கேமராவை வாங்குவதில் மட்டும் இல்லை என்பதை கீழே உள்ள படங்களை பார்த்தால் புரியும்..

இந்த படங்கள் 9000 ரூபாய் சிறிய கேமராவில் தான் எடுத்தது...





எனவே நல்ல படம் என்பது கேமராவில் மட்டுமல்ல ,எடுப்பவரின் கையிலும் உள்ளது..

2 லட்ச ரூபாய் கேமராவில் கொஞ்சம் தவறாக எடுக்கும் படத்தை விட 2 ஆயிரம் ரூபாய் கேமராவில் சரியாக எடுக்கப்படும் படம் சிறந்ததாக தான் இருக்கும்.. இதற்கு உதாரணங்கள் கீழே உள்ள படங்கள்.


இந்த படம் -1 40000 ரூபாய் கேமரா மற்றும் 40000 ரூபாய் லென்ஸில் எடுக்கப்பட்டது... இந்த படம் சற்று blur ஆக எடுக்கபட்டுள்ளதை இந்த சிறுவனின் முகத்தில் தெரியும்.. படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்..

(படம்-1)


ஆனால் அதே சிறுவன்,அதே இடத்தில், அதே நேரத்தில் 9000 ரூபாய் சிறிய கேமராவில் சரியாக(என்னால் முடிந்த அளவு) எடுக்கப்பட்டுள்ளதை இந்த படத்தை(படம்-2) பார்த்தால் புரியும்


(படம்-2)



ஒரு சில நேரங்களில் சின்ன sensor கேமராக்கள் தரும் சில சிறப்பம்சங்கள் (அதிக depth of field, macro close focusing etc.) பெரிய கேமராவில் கிடைக்காது என்பதை கீழே உள்ள படங்களை பார்த்தால் புரியும்...


இந்த படம் (படம்-3) 9000 ரூபாய் சிறிய கேமராவில் எடுத்தது.. இந்த தும்பியின் உடல் முழுவதும் டீடெய்ல்ஸ் இருக்கும்... இதன் காரணம் சிறிய கேமராவில் இருக்கும் அதிக depth of field ஆகும்.. இதை பற்றி பின் வரும் தொடர்களில் பார்க்கலாம்..

(படம் - 3 )



இந்த (படம் -4) 40,000 ரூபாய் கேமரா மற்றும் 40,000 ரூபாய் லென்ஸில் எடுக்கப்பட்டது... இவ்வளவு விலை இருந்தாலும் தும்பி பூச்சியின் தலையில் மட்டும் தான் டீடெயில்ஸ் இருக்கின்றது...


(படம் - 4)



அதற்காக பெரிய கேமராக்கள் தேவையில்லை என்று அர்த்தமில்லை.. நாம் நன்றாக எடுத்தால் சிறிய கேமராக்களும் நன்றாக படம் எடுக்கும்...

புதிதாக கேமரா வாங்குபவர்கள் கேமராவில் மலை போல் இருக்கும் settings ஐ பார்த்து பயந்து போய் இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது என்று சிம்பிளாக auto mode ல் போட்டு படமெத்துக்கொண்டு திருப்திப்பட்டுக்கொள்வார்கள்..

ஒரு சிலர் பெரிய zoom கேமரா/ லென்ஸ் வைத்துக்கொண்டு zoom பட்டனைக்கூட சரியாக பயன்படுத்தாமல் wide angleலேயே படமெடுப்பார்கள்.. இதனால் அந்த மாதிரி கேமராக்களை வாங்குதில் அர்த்தமில்லாமல் போய் விடுகின்றது..

இந்த மாதிரி எல்லாம் தவறுதலாக படம் எடுக்கும் போது நாம் புதுமையாக படம் எடுக்கவோ, கற்றுக்கொள்ளவோ வழியில்லை என்று சொல்லலாம்..

இப்படி பல குறைகள் தீர இத்தொடர் உதவும் என்று நம்புகின்றேன்..

ஒரு நல்ல படம் அமைய வேண்டுமென்றால், முக்கியமாக கவனிக்கவேண்டியது என்று மூன்று விதமாக பிரித்துக்கொள்ளலாம்..

1. படம் எடுப்பதற்கு முன்

கேமராவை எப்படி செட்டிங்ஸ் செய்வது , அதாவது exposure , ISO , white balance , aperture , shutter speed zoom எப்படி பயன்படுத்துவது,கேமராவை எப்படி கையாள்வது என்பதை பற்றி பார்க்கலாம்..


2. படம் எடுக்கும் போது

சரியாக ஃபோகஸ் செய்வது எப்படி , back ground எப்படி , focal length பயன்படுத்துவது , blur இல்லாமல் எடுப்பது, கம்போஸிசன் போன்றவற்றை பற்றி பார்க்கலாம்..


3. படம் எடுத்த பின்

இன்றைய டிஜிட்டல் கேமரா உலகில் படம் எடுக்கும் போது எவ்வளவு முக்கியமாக கவனிக்க வேண்டுமோ ,அதே அளவுக்கு post processing(குறைந்தபட்சம்) என்பதும் முக்கியமே..

இதில் முக்கியமான எளிதான cropping , contrast , sharpening ஆகியவற்றின் முக்கியதுவம் பற்றியது..


முதலில், படம் எடுப்பதற்கு முன் கவனிக்கவேண்டியதை அடுத்து பகுதியில் இருந்து பார்ப்போம்...

-கருவாயன்

Sunday, July 24, 2011

அன்பான வணக்கங்கள்,

முதல் சுற்றில் வெற்றி பெற்ற டாப் 10 படங்களைப் பாத்திருப்பீங்க. போட்டியிட்டு முதல் சுற்றில் வெளியேறிய படங்களையும் அதற்காக காரணங்களையும் போட்டி ஆல்பத்திலேயே சுருக்கமாகத் தெரிவித்திருந்தேன். அத்தோடு, ஒரு படம் தெரிவு செய்யப்பட என்னன்னவெல்லாம் கருத்திற்கொள்ளப்படும் என்ற கேள்விக்கான எனது சிறு விளக்கம் உங்களுக்குப் புரிந்திருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஞாபகமூட்ட இதோ மீண்டும் அந்தப்பட்டியல்...
  • படம் தலைப்புக்கு (மிக) பொருத்தமாகவும் விளங்கிக் கொள்ளத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும்
  • பார்ப்பவரை இயல்பாகவே ஈர்க்க வேண்டும்
  • விபரமாகவும் (details) தெளிவாகவும் (clarity) இருத்தல் வேண்டும்
  • அடிப்படை விதிகள் (eg: composition, rule of thirds) கருத்தில் கொள்ளப்பட வேண்டும்
  • பிரதான கருப்பொருளிலிருந்து கவனத்தை திசை திருப்பும் விடயங்கள் இருக்கக்கூடாது
  • சிறப்பாக ஒளியும் நிழலும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்
முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் யார் என்று பார்ப்பதற்கு முன், இறுதி சுற்றில் வெளியேறிய படங்களை பற்றி பார்ப்போம்.(எழுமாற்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன)

# Karthi (நாய்,சாலை​யோர பூக்கள்)
வர்ணங்கள் அடுக்கடுக்காகத் தெரிவது, அழகாக வீழ்ந்து கிடக்கும் பூக்கள், தெளிவு என்பன சிறப்பான விடயங்கள். ஆனால் நாய் முழுமையாக தெரியாமல் இருப்பது (வாலின் மீதி தெரியாமல் இருப்பது) பெரிய பலவீனம்.

# KVR (ஜீ​ன்ஸ், பெல்ட்)
வித்தியாசமாக ஓர் விளம்பரம் போல இருப்பது சிறப்பு. ஆனால் அதிகமான
Post Processing இடம்பிடித்திருப்பது பெரிய குறைபாடு. அதைத்தவிர இயல்பான கவனயீர்ப்பு குறைவாகவுள்ளது.

# பிரேம்நாத்​ (கடிகாரம்​)
மேலேயுள்ள படம் போன்று வித்தியாசமாக ஓர் விளம்பரம் போல இருப்பது சிறப்பு. ஆனால் அதிகமான Post Processing இடம் பிடித்திருப்பது பெரிய குறைபாடு. அதைத்தவிர இயல்பான கவனயீர்ப்பு குறைவாகவுள்ளது.

# James Vasanth (கட்டிடம்)
அழகான கட்டடத்தை அழகாகப் படம் பிடித்துள்ளீர்கள். நிழல் வீழ்ந்துள்ள கருப்பு பகுதிகள் படத்தின் அழகைக் கெடுக்கின்றன. அதைத் தவிர Post Processing படத்தை செயற்கைத் தன்மையாக்கிவிட்டது.

# Sathiya (வீதி)
அழகான படம். பிரதான கருப்பெருளாகிய வீதியைப் பார்க்கும் கண்கள் சிவப்பு வண்டியில் பதிவது தவிர்க்க முடியாதிருப்பது பலவீனம். Leading lines leads to red car. மற்றும் படத்தின் மேலேயுள்ள வானம் வெளிறித் தெரிவதைத் தவிர்த்து Crop செய்திருக்கலாம்.

# Siddhadrea​ms (இளைஞன், செருப்பு & ஜீன்ஸ்)
தெளிவு, DoF, கருப்பொருளை கையாண்டவிதம் என்பன சிறப்பு. படத்தில் ஆங்காங்கே Over Exposure இருப்பது பலவீனம். படத்தின் கீழ் பகுதி, இடப்பக்க மூலையிலுள்ள தரையின் தோற்றப்பாடும் அழகாக அமையவில்லை.

சிறப்புக் கவனம்

# Gowri (young girl)
அழகை அழகாகப் படம் பிடித்துள்ளீர்கள். ஆனால் கண்கள் மறைவாக இருப்பது குறைபாடாகவுள்ளது. மற்றும், பின்னேயுள்ள மரம் பின்னணியைச் சற்று குழப்புகிறது.




மூன்றாம் இடம்!
# Narayanan (வீதி)
'இந்த வீதியிலே வண்டியோட்டிப் போன எப்டியிருக்கும்' என்ற உணர்வை ஏற்படுத்துகிறது இந்தப்படம். வெறுமையான வீதி வளைந்து செல்வது அழகு. வெளிறிய வானம் சற்று Over Exposure ஆகி இந்தப்படத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது.

இரண்டாம் இடம்!!
#நித்தி க்ளிக்ஸ் (பெரியவர்)
அருமையான படம். வயோதிபத்தை அருமையாகக் கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் தலையிலும் தோளிலும் உள்ள Over Exposure படத்தை 2ம் இடத்திற்கு தள்ளிவிட்டது.

முதலிடம்!!!
# Mervinanto​ ( செல்லப் பிராணி )
இந்தப்படத்தில் இருப்பது உண்மையான பூனையா அல்லது படமா என எனக்கு சந்தேகம் வந்தது. அது படமாக இருந்தாலும் எனக்கு ஆட்சேபனையில்லை. படத்தை உயிருள்ள பூனையான காட்டியிருந்தால் அது ஃபோட்டோகிராபரின் திறமையே! செல்லப் பிராணியாகிய கருப்பொருள் குவளையில் மீண்டும் பதிவாகி 'படத்திற்குள் படம் பிடித்தல்' என்ற தலைப்பிற்கு வேறு ஒரு வழியிலும் பொருத்தமாகிறது! வாழ்த்துக்கள் மேர்வின்!

இப்போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி...! வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

அடுத்த மாத போட்டிக்குத் தயாராகுங்கள்...! தொடர்ந்து பங்கு பற்றுங்கள்...!
***


Friday, July 22, 2011

ன்றைய தொழில்நுட்பத்தில் புகைபடக்கலைஞர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருப்பது எந்த format டில் படம்பிடிப்பது என்பதுதான். ஒருபுறம் தொழில்ரீதியாக புகைப்படமெடுப்பவர்கள் சட்டென்று RAW தான்னு ஒரேயடியாக சொல்லிவிடுவார்கள். மறுபுறம் நம்மைப் போன்றவர்கள் பொழுது போக்குக்காகவும் அதே நேரத்தில் புகைபடக்கலையை பற்றி முழுவதும் அறிந்து கொள்ள துடிப்பவர்களுக்கு RAW-வா JPG-கான்னு கேட்கும் போது சிலர் சட்டென்று JPG-தான்னு நெத்திப்பொட்டில் அடித்தமாதிரி சொல்லிவிடுவார்கள். காரணம் RAWவில் படமெடுப்பதால் என்ன நன்மை என்ன தீமை என்று அறியாத அவர்களுக்கு JPG என்பது user friendly மாதிரி தான். சரி அப்படி JPGக்கும் RAW க்கும் என்னங்க வித்தியாசம்ன்னு இந்த பதிவுல ஏதோ என்னுடைய அனுபவத்தில நான் கற்றுக்கொண்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

நான் கேமரா வாங்கிய கையோடு PIT குழுவைச் சேர்ந்த திரு.கருவாயன் சார் அவர்கள் எனக்கு அறிவுறுத்தியது RAW Format தான். RAW வின் பயன்பாடுகளை ஏற்கனவே அறிந்திருந்ததால் நானும் RAW வில் எடுப்பதையே விரும்பினேன்.
என்னுடைய கேமரா (Panasonic FZ-38)வில் ஒரே ஷாட்டை JPG மற்றும் RAW வில் எடுக்கும் வசதி இருக்கின்றது. பெரும்பாலான Prosumer+DSLR கேமராக்களில் இது சாத்தியமே. அவ்வாறு எடுப்பதால் எனக்கு RAW வை நான் Post Processingக்கும் JPG ஐ என்னுடைய thumbnail மற்றும் Reference கோப்பாகவே என்னுடைய கணினியில் வைத்துக்கொள்வேன். சரி கட்டுரைக்கு வருவோம்.

RAW-வில் படமெடுப்பது என்பது நாம் கடைக்கு சென்று Fresh ஆகக் காய்கறி வங்கியதற்கு சமம். அதாவது வாங்கிய காய்கறியை நீங்களே நறுக்கி அதனை குழம்போ பொரியலோ கூட்டோ என உங்களின் விருப்பத்திற்க்கு சமைத்து ருசிக்கலாம். என்னடா இவன் சம்மந்தமே இல்லாமல் பேசுகிறான்னு நீங்க நினைக்கலாம். ஆனால் இதான் உண்மை !

JPG யில படமெடுப்பது என்பது கடையில் Readymade Pizza வாங்கி Microwave Oven னில் சூடு செய்து சாப்பிடுவதற்கு சமம். ஏனென்றால், ஒரு கேமராவில் JPG யில் படமெடுக்கும் போது படத்திற்கு தேவையான Sharpness, Saturation,Contrast போன்ற அவசிய செட்டிங்குகளை உங்களது கேமராவே உங்களுக்காக உருவாக்கிக்கொடுத்துவிடும். இதில் பெரியதாக Post Processing ஒன்றும் செய்யவேண்டியதில்லை. மேலும் எடுத்த படத்தை அப்படியே உங்களது பிரிண்டரிலோ அல்லது ஸ்டுடியோவிலோ கொடுத்து பிரிண்ட் போட்டுக்கொள்ளலாம். இது JPG யில் இருக்கிற ஒரு நல்ல விஷயம்.

ஆனால் JPG என்று வரும் போது புகைப்படகலைஞர்களுக்கு எங்கு இடிக்கிறது என்று பார்த்தால், நீங்கள் உங்களது கேமராவில் மேனுவலாக செட் செய்து படமெடுப்பவராக இருப்பின் நீங்கள் உங்களது செட்டிங்கில் எங்கேயாவது தவறு செய்துவிட்டால் உங்கள் கேமரா JPG format ல உங்கள கைவிட்டும்ங்க.., உங்களால் இந்த தவறை "recover" செய்ய இயலாது. குறிப்பாக Exposure, White Balance போன்றவிஷயங்களை மேனுவலாக செட்செய்யரவங்க இந்த செட்டிங்ஸில் கோட்டை விட்டா உங்க கேமரா JPG formatல உங்கள கைவிட்டுவிடும் என்பதை மறக்காதீர்கள். இது JPG யில இருக்கிற குறைபாடு தானே? மேலும் Post Processing முடித்து JPG யாக கோப்பு எழுதப்படும் போது அங்குCompression னும் நடக்கிறது. ஆக படத்தின் தரமும் compress செய்யப்படுகிறது என்பதும் ஒரு குறையே.

னால் RAW பார்மேட்டில் என்ன நடக்கிறது என்றால் அங்கு Post Processing நடப்பது கிடையாது. உங்களது lens எதை focus செய்கிறதோ அதை அப்படியே உங்களது கேமரா உள்வாங்கிக்கொள்ளும். இங்கு Post Processing என்பது இன்னும் நடக்கவில்லை. ஆகவே படத்தின் தரம் அப்படியே இருக்கிறது. இதனை நல்ல விஷயமாக எடுத்துக்கொண்டாலும் உங்களது மெமரி கார்டில் JPG ஐ காட்டிலும் 10 மடங்கு இடம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் என்பதை ஒரு குறையாக சொல்லலாம். என்னுடைய Panasonic fz-38 ல் JPG யில் எடுக்கும் படங்கள் 4 mb அளவுள்ளதாகவும் RAW வில் எடுக்கப்படும் படங்கள் 14 mb இடத்தையும் பிடிக்கும். எனினும் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மெமரிகார்டுகளின் விலைகள் நியாயமான விலைக்கே கிடைப்பதால் இதனை நாம் பெரிய குறையாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை.

ஆனால் RAW இல் எடுத்த புகைப்படங்களை Post Processing செய்து பின்னர் JPGயில் மாற்றப்பட்டால் மட்டுமே உங்களால் பிரிண்ட் செய்ய இயலும் என்பது ஒரு குறையே, உங்களது கணினியில் நீங்கள் கண்டிப்பாக RAW Editor Tool ஐ கண்டிப்பாக வைத்திருக்கவேண்டிய கட்டாயம் "RAW" ஏற்படுத்துகிறது. பொதுவாக உங்களது கேமரா, RAW Format ல் படமெடுக்கும் தன்மை வாய்ந்திருந்தால் அதற்கான மென்பொருளையும் கேமரா தயாரிப்பாளர்கள் இலவசமாகவே அளித்திருப்பார்கள். உதாரணமாக என்னுடைய Panasonic fz-38 க்கு Silkypix என்ற RAW எடிட்டரை கொடுத்தார்கள். இது தவிர சந்தையில் கிடைக்கும் மென்பொருட்களை பயன்படுத்தலாம் என்றால் அவற்றின் விலைகள் மிக மிக அதிகம் (Adobe Photoshop,Photoshop Elements,Lightroom,I-Photo, Apple Aperture,Nikon Capture) என்பதாலும் சாதாரண பயனாளர்கள் "RAW" வில் படமெடுக்க தயங்குகிறார்கள். இருப்பினும் UFRaw,Raw Therapee போன்ற இலவச எடிட்டர்களும் இருக்கின்றன.

RAW vs JPG ஒரு சிறிய comparison செய்யலாம். கீழே இருக்கும் படம் நான் கிளிக் செய்தது. ஒரே படத்தை RAW+JPG யில் எடுத்தேன். JPGயில் எனக்கு என்னுடைய படத்தை அப்படியே பிரிண்ட் செய்துகொள்ளும் அளவிறக்கு என்னுடைய கேமராவே Post Processing செய்து கொடுத்துவிட்டது. காரணம் நான் மேனுவலாக எந்த செட்டிங்குகளையும் மாற்றவில்லை.


ஆனால் படத்தின் Sharpness ஐ பொருத்தவரை எனக்கு இந்த அளவிற்க்கு Sharpness தேவையில்லை என்பதை நான் முடிவு செய்ய இயலாது காரணம் என்னுடைய கேமரா ஏற்கனவே தானாகவே முடிவு செய்துவிட்டது. இந்த Sharpness ஐ என்னால் எந்த நிலையிலும் குறைக்க இயலாது இது JPGயில் பார்மேட்டில் இருக்கும் குறைபாடு.

RAW முறையில் எடுக்கப்பட்ட படத்தை பாருங்கள்.படமானது JPG படத்தோடு ஒப்பிடும்போது தரம் குறைந்தே காணப்படுகிறது காரணம் இங்கு எந்த Post Processing ம் நடக்கவில்லை எனவே படத்தின் Sharpness, saturation,Details போன்ற அனைத்தும் controls ம் என் கையில் இருக்கின்றது என்பது RAW Formatடின் சிறப்பு.


மேலும் JPG கோப்பானது அளவில் மிகச்சிறியது (8-bits per color,12-bits per
Location) ஆனால் RAW கோப்பானது அளவில் மிகப்பெரியது(8 bits per color 36-its per location).மேலும் கனினியில் இதனை பார்ப்பதற்க்கே (Explorer view) மென்பொருள் தேவை.


(எனினும் Google Picasa போன்ற இலவச மென்பொருளே RAW Formatடை ஆதரிக்கிறது). மேலும் JPG யில் உங்களது கேமராவானது மிக விரைவாக ஷூட் செய்துவிடும் ஆனால் RAW Formatடில் படம் ஷூட் செய்ய நேரம் அதிகமாக பிடிக்கும். இதனால் அடுத்தடுத்து படங்களை விரைவாக பிடிக்க வேண்டுமென்றால் கொஞ்சம் சிரமம் தான். எனவே நம்மைபோன்றவர்கள் User Freindly அல்லாத இந்த RAWவில் ஷூட் செய்ய தயங்குகிறோம்.

டுத்ததாக ஒரு சிறிய செய்முறை விளக்கத்திற்க்கு வருவோம். கீழேயுள்ள படத்தை நான் மேனுவல் மோடில் எடுத்தேன். கேமராவில் White balance மோடை Tungstenனில் வைத்திருந்தேன். ஆனால் இதனை கவனிக்காமல் படத்தையும் ஷூட் செய்துவிட்டேன். என்ன ஆயிற்று படமானது நீல நிறம் தோய்ந்து காணப்படுகிறது.


இங்கு JPG யில் நான் மேனுவலாக செட் செய்த செட்டிங்கை வைத்து என்னுடைய கேமரா எனக்கு படம் எடுத்து கொடுத்து விட்டது. ஆனால் படத்தின் தரம் அந்த அளவிற்கு இல்லை. இதே படத்தை நான் RAW Format-டிலும் எடுத்திருக்கிறேன். இதனை RAW எடிட்டரில் திறக்கும்போது என்னுடைய கேமராவில் இருப்பது போலவே White Balance preset எனக்கு இந்த RAW எடிட்டரிலும் இருக்கிறது..


எனக்கு எந்த preset வேண்டுமோ அதனை நான் தேர்வு செய்ததும் படம் சரியாகிவிட்டது (இங்கு நான் Auto வை தேர்வு செய்தேன்).


RAW எடிட்டரில் சரிசெய்யப்பட்ட படத்தை பாருங்கள் தவறான மேனுவல் செட்டிங் செய்திருந்தும் படத்தை திருத்திக்கொண்டுவிட்டோம்.


ஆனால் JPG படத்தை நான் இதே எடிட்டரில் திறக்கும்போது எனக்கு கிடைக்கும் whiteBalance preset பாருங்கள் எனக்கு As shot, Auto,Custom மட்டுமே கிடைக்கிறது.


அவ்வாறாக Auto வில் correct செய்த என்னுடைய JPG படத்தை பாருங்கள் நான் எதிர் பார்த்த அளவு எனக்கு result கிடைக்கவில்லை. என்னுடைய தவறான மேனுவல் செட்டிங்கால் என்னை JPG Format கைவிட்டது.


இதேபோல தவறான Manual exposure ல் பாதிக்கப்பட்ட RAW படங்களை RAW Editor ரின் துணைக்கொண்டு சரி செய்துவிடலாம். கீழே இருக்கும் படமானது Under Exposure இல் எடுக்கப்பட்ட படம் என்னுடைய மேனுவல் செட்டிங்ஸை வைத்து எனக்கு என்னுடைய கேமரா JPGயில் உருவாக்கி தந்து விட்டது.


RAW வில் எடுக்கப்பட்ட படத்தை பாருங்கள் :




இங்கு இன்னும் Post Processing நடக்கவில்லை RAW எடிட்டரின் உதவியால் Exposure சரிசெய்யப்பட்ட படத்தை பாருங்கள்:


இதனால் நான் RAW Format டில் படமெடுப்பது தான் சிறந்தது என வாதிடவில்லை இரண்டு Formatடிலும் இருக்கும் நிறை குறைகளை ஏதோ எனக்கு தெரிந்ததை உங்களோடு பகிர்ந்துகொண்டேன். எந்த Format-டில் படமெடுப்பது என்பது அவரவரது விருப்பமே!!

Lesson By ‘Nithi Clicks’http://www.flickr.com/photos/nithiclicks/

Tuesday, July 19, 2011

வணக்கம் நண்பர்களே!

ஆட்டத்த ஈஸியா முடிச்சுடலாமென்டிருந்த என்னைய ஆட்டங்காண வைக்கிற முடிவோட படங்கள அனுப்பி வைச்சிருக்கிறீங்க.

உங்கள இன்னும் உசுப்பேத்தவும், உங்களுக்கு விலாவாரியாக விளக்கமளிக்கவும் ராமலக்ஷ்மி தன்பாட்டுக்கு ஒரு பதிவே போட்டுட்டாங்க. வித்தியாசமா ஏதாவது செய்யலாமென்டு 'படத்திற்குள்படம் பிடித்தல்' தலைப்பைப் போட்டு இந்த மாதப் போட்டிய குழப்பிவிட்டேனோ என்று இருந்த எனக்கும்கூட அந்தப்பதிவு ஆறுதல்!

கிரிக்கெட் விளையாடும்போது, கடைசி 5 ஓவர் பந்து வீச்சு அபாரமாக இருக்கும். அந்த மாதிரித்தான் கடைசி நாள் நெருங்க நெருங்க நீங்களும் படங்கள அள்ளி எறிஞ்சிருக்கீங்க. இங்க என் பாடுதான் திண்டாட்டம்.

இதோ முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து படங்கள் (எழுமாற்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன).

# Sathiya (வீதி)

# KVR (ஜீ​ன்ஸ், பெல்ட்)


# Narayanan (வீதி)


# siddhadrea​ms (இளைஞன்​, செருப்பு & ஜீன்ஸ்)

# பிரேம்நாத்​-(கடிகாரம்​)


# நித்தி க்ளிக்ஸ் (பெரியவர்)


# karthi (நாய்,சாலை​யோர பூக்கள்)


# mervinanto​ (செல்லப் பிராணி - பூனை )


# James Vasanth (கட்டிடம்)


# H.Gowri (young girl)


ஒரு படம் தெரிவு செய்யப்பட என்னன்னவெல்லாம் கருத்திற்கொள்ளப்படும்? இந்தக் கேள்விக்கான எனது சிறு விளக்கம்.
  • படம் தலைப்புக்கு (மிக) பொருத்தமாகவும் விளங்கிக் கொள்ளத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும்
  • பார்ப்பவரை இயல்பாகவே ஈர்க்க வேண்டும்
  • விபரமாகவும் (details) தெளிவாகவும் (clarity) இருத்தல் வேண்டும்
  • அடிப்படை விதிகள் (eg: composition, rule of thirds) கருத்தில் கொள்ளப்பட வேண்டும்
  • பிரதான கருப்பொருளிலிருந்து கவனத்தை திசை திருப்பும் விடயங்கள் இருக்கக்கூடாது
  • சிறப்பாக ஒளியும் நிழலும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்
என் படம் தெரிவு செய்யப்படவில்லையே என சோர்ந்து போய்விடாதீர்கள். புகைப்படக்கலையின் நுணுக்கங்களைக் கற்று பயிற்சி செய்யுங்கள். இங்கேயே பல பயனுள்ள பதிவுகள் உள்ளன. பயிலுங்கள்! முயற்சியுங்கள்!

தெரிவு செய்யப்படாத படங்களுக்கான என்னுடைய கருத்துக்கள் மிக விரைவில் போட்டிக்கான ஆல்பத்திலேயே தெரிவிக்கப்படும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இங்கு இல்லை. விமர்சனங்கள் உங்களுக்கு உதவியாக இருக்குமென நம்புகிறேன்.


விரைவில்......! இறுதித் சுற்று முடிவுகள்......!

Monday, July 18, 2011

புகைப்படகலை ஆசான் ‘எண்ணங்கள் இனியவை’ ஜீவ்ஸ்[www.flickr.com/photos/iyappan] அண்மையில் ஒரு மென் புத்தகம் கொடுத்து படிக்கச்சொன்னார். அது பற்றி நேற்று பேசிக்கொண்டு இருக்கும்போது படிக்கும் போது கிடைக்கும் சில தகவல்களை பகிர்ந்து கொள்ளச் சொன்னார். ஆகவே இதோ: கார முந்திரி. அப்பப்ப போக வர கொறிக்கலாம்!

கார முந்திரி - 1

நம்மால் ஊதா முதல் சிவப்பு வரை பல வண்ணங்களை பார்க்க முடிகிறது. ஆனால் புற ஊதா கதிர்களுக்கு அப்பாற்பட்ட கதிர்களையும் அகச்சிவப்பு கதிர்களுக்கு தாழ்ந்த கதிர்களையும் காண முடிவதில்லை.

இது தெரிந்ததுதானே? அதனால் என்ன? புகைப்படத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

என்ன சம்பந்தம் என்றால், நம்மால் பார்க்க முடியவில்லையே தவிர காமிராவால் பார்க்க முடியும். இது படத்தையும் பாதிக்கும். ஆகவே ஒரு இடத்தில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் வீச்சின் நம் பார்வைக்கு அப்பாற்பட்ட கதிர்கள் நாம் எடுக்கும் புகைப்படத்தை பாதிக்கலாம்.

இதை படித்த போது ஆச்சரியமாக இருந்தது. நேற்று இரவு படுக்கச்செல்லும்போதுதான் இது குறித்து பதிவு ஒன்று நானே போட்டிருப்பது நினைவுக்கு வந்தது.

இதை நாம் சோதித்து பார்த்துவிடலாம்.

ஒரு டிவி/டிவிடி ப்லேயர்/ ஏசி ரிமோட் கண்ட்ரோல் எடுத்துக்கொள்ளுங்கள். இவை மின் சாதனங்களுடன் அகச்சிவப்பு கதிரால் தொடர்ப்பு கொள்வது நமக்குத்தெரியும். மின் சாதனம் வேலை செய்யவில்லை என்றால் அது ரிமோட் இன் மின்கலம் உயிர்ப்புடன் இல்லாத காரணமா வேறு ஏதாவதா? இதை தெரிந்துகொள்ள உங்கள் டிஜிட்டல் காமிராவை எடுத்துக்கொள்ளுங்கள். ரிமோட்டை நம் பக்கமாக திருப்பி இயக்குங்கள். அதன் முன் பக்கம் ஒன்றும் தெரியவில்லைதானே? இப்போது டிஜிட்டல் காமிராவால் அதை பார்த்துக்கொண்டு இயக்குங்கள். ரிமோட்டில் மின் சக்தி இருந்து சரியாக அது வேலை செய்தால் அதன் முன் பக்கம் ஒரு வெளிச்சத்தை பார்க்க முடியும்.

இந்த சோதனையின் படங்களை இங்கே பாருங்கள்.

அதாவது நம் கண்ணுக்குத்தெரியாத கதிர்களை காமிராவால் பார்க்க முடியும். அது பதிவும் ஆகும்:

#படம்: ராமலக்ஷ்மி


#படம்: வல்லிசிம்ஹன்


(இன்னும் தெரிந்து கொள்வோம்)

-திவா
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/

Sunday, July 10, 2011

Content-AwareScale என்பது படத்தை upscaling மற்றும் downscaling செய்ய பயன்படும் ஒரு நுட்பம் ஆகும். அதாவது படத்தின் பார்க்கும் தன்மையை மாற்றாமல் resize செய்வதாகும். அடோபி நிறுவனத்தின் மென்பொருளான Photoshop cs4 ல் இந்த Content-Aware Scale ஐ அறிமுகம் செய்தது. புகைபடக்கலைஞர்களாகட்டும் கிராபிக்ஸ் டிசைனர்களாகட்டும் இவர்களுக்கு இந்த நுட்பம் மிகவும் பயன் தரக்கூடியதாகும்.

சரி இந்த Content-AwareScale ஐ GIMP சூழலில் பணிபுரிவோர் பயன்படுத்தமுடியுமா என பார்த்தால் கண்டிப்பாக முடியும்.."Liquid Rescale" எனப்படும் இந்த plugin ஆனது Photoshop cs5 இல் பணிபுரிவதை காட்டிலும் மிக எளிமையாக்கப்பட்டிருப்பதே இதன் சிறப்பு. காரணம் நான் போட்டோஷாப் சூழலில் பணிபுரிபவன்.இந்த Content-AwareScale ஐ நான் போட்டோஷாப்பில் பயன்படுத்த முதலில் crop டூலை பயன்படுத்தி எனக்கு தேவையான வெற்றிடத்தை நானாக‌ உருவாக்கி, பின்னர் படத்தில் இருக்கும் object ஆனது "distortion" ஆகாமல் இருக்க நான் முதலில் object ஐ தேர்வு செய்து பின்னர் அதை "alpha channel" இல் சேமித்த பின்னரே என்னால் இந்த "Content-AwareScale" ஐ பயன்படுத்த முடியும். இதற்கு போட்டோஷாப்பில் நல்ல அனுபவம் இருக்க வேண்டும் இல்லையென்றால் படத்தில் இருக்கும் ஆப்ஜக்ட் ஆனது "distortion" ஆகிவிடும்.

ஆனால் கிம்பில் இதன் பயன்பாடு வெகு சுலபம். முதலில் இந்த "Liquid Rescale" பதிவிறக்கம் செய்துகொண்டு உங்களது கணினியில் நிறுவவும்.

பின்னர் "Content-Aware Scale" செய்யவிரும்பும் படத்தை கிம்பில் திறக்கவும். இப்போது "Layer>LiquidRescale" செல்லவும்.

கீழேயுள்ள படத்தை பாருங்கள்…


இது நான் என் நண்பரை கிளிக்கிய படம். இந்த படத்தை நான் "Panoramic" இல் சற்று அகலமான view வில் காட்ட விரும்புகிறேன்."Layer>LiquidRescale" சென்று எனக்கு கிடத்த டயலாக் பாக்ஸில் நான் படத்தின் அளவை சதவீதமாக மாற்றுகிறேன்.



பின்னர் படத்தின் நீள அகலம் முறையே 100 சதவீதமாகவும் 140 சதவீதமாகவும் கொடுக்கிறேன்.


அதாவது எனக்கு படத்தின் உயரம் மாற்றவிரும்பவில்லை மாறாக படத்தின் அகலம் மட்டும் இருக்கின்ற (100%) அளவைவிட இன்னும் கூடுதலாக 40% வேண்டும் என கொடுக்கிறேன்.பின்னர் "ok" செய்கிறேன்.

என்ன ஆயிற்று படம் "resize" ஆகிவிட்டது. ஆனால் படத்தில் இருக்கும் "object" ஆனது (நண்பரின் உருவம்)"distortion" ஆகி இருக்கிறதை பாருங்கள்.


சரி இதை எவ்வாறு தவிர்ப்பது.
"Layer>LiquidRescale" செல்லவும் இப்போது தோன்றும் டயலாக் பாக்ஸின் வலதுபுறம் இருக்கும் "Feature Preservation Mask" இல் இருக்கும் "New" icon அழுத்தவும்.




பின்னர் brush டூலை தேர்ந்தெடுத்து உங்கள் படத்தில் நீங்கள் பாதுகாக்கப்படவேண்டிய பகுதிகளை paint brush ஆல் paint செய்யவும்.


இப்போது "ok" செய்யவும், இப்போது நீங்கள் "resize" செய்யவிரும்பும் நீள அகலத்தின் மதிப்பை குறிப்பிடவும்.



பின்னர் "ok" செய்யவும். அவ்வளவுதான் உங்களது ஆப்ஜக்ட் "distortion" இல்லாமல் resize ஆகியிருப்பதை பாருங்கள்.



மற்றொரு உதாரணம்:





எனக்கு இந்த"Content-aware Scale" இல் பணிபுரிவது போட்டோஷாப்பை காட்டிலும் GIMP இல் மிக எளிமையாக உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

குறிப்பு: இந்த plugin கொண்டு Quick element removal , Complex element removal போன்றவையும் திறம்பட செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Lesson By ‘Nithi Clicks’http://www.flickr.com/photos/nithiclicks/
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff