Thursday, February 28, 2013

வணக்கம் நண்பர்களே,
பள்ளி நாட்கள் மிகவும் இனிமையான பருவம். விட்டுச்சென்ற பள்ளி நாட்களின் மறக்க முடியா நினைவுகளை தூண்டியது உங்கள் படங்கள். போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று படங்கள் கீழே.

மூன்றாம் இடம் - R.N.சூர்யா


இரண்டாம் இடம் - J.S.செந்தில்குமார்


முதல் இடம் - கண்ணன்

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ! போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !!!

Tuesday, February 26, 2013

வணக்கம் நண்பர்களே,
போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி !

என்னை கவர்ந்த முதல் பத்து படங்கள் கீழே. வரிசைப்படுத்தலுக்கும் படங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை.

சிவா திருப்பூர்


ஷ்ராவ்யன்


நந்தகுமார்


விஜய் வெங்கடேஷ்


சுந்தரமூர்த்தி


R.N.சூர்யா


கண்ணன்


J.S.செந்தில்குமார்


ஜானகிராமன்


இளங்குமரன்


தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள் !

Monday, February 25, 2013







 
ஏன் aperture ஐ மாற்ற வேண்டும்? அது தான் கேமராவே சரியாக பார்த்துக்கொள்கின்றதே,பின் எதற்கு நாம் அதை கவனிக்க வேண்டும்?

அதற்கு முன்,aperture என்றால் என்ன என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்,

APERTURE என்றால் என்ன?

பொதுவாக கேமராக்களை பயன்படுத்துபவர்கள் பொரும்பாலோனோர் குழம்புவது இந்த aperture என்றால் என்ன,இதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றியாக தான் இருக்கும்..

இதை பற்றி சுறுக்கமாக சொல்வது எனபது சற்று கடினம்..ஆனால், சற்று பொறுமையாக புரிந்துகொண்டால் இது ஒன்றும் பெரிய விசயமில்லை..

APERTURE என்பது லென்ஸ் வழியாக கேமராவுக்குள் ஒளி செல்வதற்காக திறக்கப்படும் பாதையின் அளவை குறிப்பதாகும்..அந்த பாதை, இந்த படங்களை பார்த்தால் புரியும்..

 
இது ஒன்றுமில்லை,எப்படி நம் கண்களை விரித்து அகலமாக பார்த்தால் நன்றாகவும்,கண்களை சுறுக்கி பார்த்தாலோ அல்லது சிறிய குழாய் வழியாக பார்த்தால் எப்படி தெரியுமோ அப்படி தான்.. இதை தான் photographyல் aperture என்கிறோம்..

நாம் சற்று மங்கலான வெளிச்சங்களில் எப்படி உஷாராக கண்களை அகலமாக பார்ப்போம் இல்லையா...அதே மாதிரி தான் லென்ஸும், படம் எடுக்கும் போது வெளிச்சம் குறைவாக இருந்தால் லென்ஸில் aperture ஐ அகலமாக்க வேண்டும்..

இந்த பாதை அகலமாக திறந்தால் வெளிச்சம் அதிகமாகவும்,குறைவாக திறந்தால் வெளிச்சம் குறைவாகவும் கேமராவுக்கு கிடைக்கும்

 


மேலே உள்ள படத்தில் முதலில் இருப்பது குறைவான aperture பயன்படுத்தியது.. அதாவது          f 24 ற்கும் மேல் என்று இருக்கலாம்.. இதனால் வெளியிலிருந்து வரும் வெளிச்சம் ,லென்ஸ் வழியாக கேமராவுக்குள் செல்லும் போது வெளிச்சம் குறைவாகின்றது.. இதனால் நமக்கு shutter speed குறைவாக தான் கிடைக்கும்..

அதற்கு கீழே உள்ள லென்ஸ் படத்தில் அதிக aperture பயன்படுத்தப்பட்டுள்ளது.. f1.8 என்று இருக்கலாம்.. இதனால் வெளிச்சம் கேமராவுக்கு அதிகம் செல்வதை நாம் பார்க்கலாம்..



APERTURE அளவுகள்:

aperture அளவுகள் என்பது சில குறிப்பட்ட நம்பர்களால் அளவிடப்பட்டுள்ளது.. இதை லென்ஸ்களிலும், சிறிய கேமராக்களிலும் நாம் பார்க்கலாம்.. இது தொடர்பான பழைய பதிவு இங்கே..


பொதுவாக சராசரி மனிதர்களின் கண்களின் aperture என்பது f 2.0 முதல் f 8 வரையில் திறக்கும் என்று தோராயமாக கணக்கிட்டுள்ளார்கள்

 
aperture அகலமாக( wide aperture ) திறக்க திறக்க குறைவான நம்பர்களால் குறிப்பிடப்படுகின்றன(உ.ம். f 2.8 , f2.0,f1.8)..  

இந்த மாதிரி அகலமாக பயன்படுத்தும் போது வெளிச்சம் நமக்கு அதிகமாக கிடைக்கும், இதனால் நாம் shutter speed ஐ அதிகம் அமைக்கலாம்..shutter speed அதிகம் கிடைத்தால் படத்தை shake, blur இல்லாமல் sharp ஆக படம் எடுக்கலாம்..

இதே அகலத்தை குறைக்கும்( narrow aperture ) போது , இதன் அளவு, அதிக நம்பர்களால் குறிப்பிடப்படுகின்றன( உ.ம். f8 , f11 , f32).. 

இந்த மாதிரி பயன்படுத்தும் போது நமக்கு குறைவாக தான் shutter speed அமையும்.. இதனால் படங்கள் எடுக்கும் மிகுந்த கவனத்துடன் கேமராவை ஆடாமல் எடுக்க வேண்டும்..

இது எப்படி என்றால்,
உதாரணமாக, f 8 என்கிற aperture ஐ பயன்படுத்தும் போது, ஒரு குறிப்பிட்ட வெளிச்சத்தில் நமக்கு shutter speed என்பது 1/20 secs.. கிடைக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். இதனால ,நம்மால் blur ,shake இல்லாமல் படத்தை எடுப்பது சற்று கடினமே..

இப்போது ஒளியின் பாதையை(aperture) f 3.5 என்று  திறந்து அகலமாக்கினால், அதே வெளிச்சத்தில் நமக்கு 1/160 secs என்று shutter speed அதிகரிக்கும்..இந்த shutter speed ல் நம்மால் எளிதாக blur , shake இல்லாமல் அதே வெளிச்சத்தில் படம் எடுக்கமுடியும்..
 
சரி, அதிக அளவு அகலம் என்பது தான் நல்லது , இதனால் தான் வெளிச்சம் அதிகம் வரும் என்றால், பின் எதற்கு குறைவான அகலம் எல்லாம்?
 
என்ன தான் நாம் aperture ஐ அகலமாக திறந்தால் வெளிச்சம் அதிகம் வரும் என்றாலும், குறைவான aperture ( f 8 , f11 , f32) பயன்படுத்தும் போது தான் படத்தில் area of sharpness கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகும்.. இதை தான் depth of field(DOF) என்று சொல்வார்கள்..

அதிக aperture( குறைவான f number)  ஐ பயன்படுத்தும் போது குறைவான DOF ம் , குறைவான (அதிக f number) aperture ஐ மாற்ற மாற்ற அதிக DOF ம் கிடைக்கும்..

இதையும் நாம் கண்களை சுறுக்கமாகவும் , அகலமாகவும் திறந்து ஒரே இடத்தை பார்த்தால் புரியும்..

அதனால் தான் aperture என்பது முக்கியமாக பார்க்கப்படுகின்றது..இதை பற்றி விளக்கங்களுடனும், 
programme mode ல் கேமராவே சரியாக aperture ஐ பார்த்துக்கொள்கின்றதே,பிறகு எதற்கு நாம் அதை கவனிக்க வேண்டும்? என்பதையும் அடுத்த பகுதியில் பார்ப்போம்..

அன்புடன் 
கருவாயன்..

Thursday, February 7, 2013

ஆள் காட்டிக் குருவி என்றொரு குருவி உண்டு. ஆங்கிலத்தில் இதை லேப்விங் (Lapwing) என்று அழைப்பார்கள். நம் நாட்டில் இரண்டு வகையான லேப்விங்களைக் காணலாம். இவை எல்லோ வேட்டில்ட் லேப்விங் (Yellow wattled Lapwing) ரெட் வேட்டில்ட் லேப்விங் (Red wattled Lapwing)என்பவை ஆகும். வேட்டில் என்பது இப்பறவையின் அலகு ஆரம்பிக்கும் இடத்தில் தலையின் இரு பக்கங்களிலும் காணப்படும் தோல் போன்ற ஒரு உறுப்பாகும். இதன் நிறத்தை வைத்துதான் இந்த இரண்டு பெயர்கள். இவ்வுறுப்பு இப்பறவைக்குத் தேவையான ஒரு உறுப்பா அல்லது ஒரு ஆபரணமா என்பது பற்றி யாரும் இது நாள் வரை ஆராய்ச்சி செய்துள்ளதாகத் தகவல் ஏதும் இல்லை.
1

 
(மஞ்சள் மூக்கு ஆள் காட்டிக் குருவி-படம் பிடித்தது நடராஜன் கல்பட்டு)
2.
(சிவப்பு மூக்கு ஆள் காட்டிக் குருவி படம் நடராஜன் கல்பட்டு)

ஆள் காட்டிக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது மரக் கிளிகளிலோ அல்லது மரப் பொந்துகளிலோ கூடு கட்டி அல்ல, தரையில் தான். தரையில் கூடு என்றவுடன் ஏதோ தேன் சிட்டு, தையல்காரக் குருவி,தூக்கணாங்குருவி போல அழகிய கூடு கட்டியிருக்கும் என்று நினைக்காதீர்கள். தரிசல் நிலங்கள், வயல் வெளிகள், ஆறு குளங்களில் நீர் வற்றிய இடங்கள் இவற்றில் சிறிய கற்கள் பலவற்றை ஒரு குழிவான தட்டு போல சேகரித்து அவற்றின் நடுவே மூன்று அல்லது நாலு முட்டைகள் இடும்.*இக்குருவி இடும் புள்ளிகள் கொண்ட முட்டைகளின் நிறம் சற்று ஆச்சரியம் அளிக்கக் கூடியது. சுற்றுப்புர நிலத்தின் நிறத்திற்க்கு ஏற்ப செம்மண் கலரிலோ ஸ்லேட் கலரிலோ இவை இருக்கும். அப்படி இருந்தால் தானே எதிரிகளின் கண்களில் இம்முட்டைகள் சட்டென்று தென்படாது ?

பறவைகளின் முட்டைக்கு ஓடு உண்டாவதோ அந்த ஓட்டிற்கு நிறம் தீர்மானிக்கப் படுவதோ முட்டைகள் ஜனன உருப்பிலிருந்து கிளம்பிக் கீழ் இறங்கி வெளிவரும்போது கடைசியாக நிகழும் ஒரு சம்பவமாம். இந்தப் பறவைகளுக்கு கூடு இருக்கும் நிலத்தின் நிறத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப முட்டையின் நிறத்தை மாற்றும் சக்தி இருக்க வேண்டும்.

ஆள்காட்டிக் குருவி தனது முட்டைகளை எப்படி மிகக் கவனமாக காப்பாற்றிக் கொள்கின்றன என்று பாருங்கள்.

ஓரு பறவை அடைகாத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பறவை சற்றே உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கும். ஆடு மாடுகளோ, மனிதர்களோ தரையில் உள்ள முட்டைகளை நோக்கி நடந்தால், காவல் காக்கும் பறவை, கிரக்...கிரக்... என அபாய ஒலி எழுப்பும். உடனே அடைகாத்துக் கொண்டிருக்கும் பறவை எழுந்திருக்காமல் குனிந்தபடியே சிறு தூரம் நடந்து சென்று பின் இரு பறவைகளுமாக ஆகாயத்தில் கிளம்பி கூட்டை நோக்கி நடப்பவரை / நடப்பதை விமானம் தாக்குவது போலத் (dive bombing) தாக்குதல் செய்யும். அவ்வாறு செய்யும் போது, ஆங்கிலத்திலே “Did you do it? Did you do it?” என்று கேட்பது போன்ற ஒலியினை எழுப்பும். ஆதலால் இப்பறவைகளை Did you do it bird’ என்று சிலர் வேடிக்கையாக அழைப்பார்கள்.

அப்படித் தாக்கிடும் போது தாக்குதலின் வேகமும், சத்தமும் நீங்கள் கூடு இருக்கும் இட்த்தினை நோக்கி நடக்கும் போது குறையும். கூடு இருக்கும் இட்த்தில் இருந்து வேறு திசையில் நடக்கும் போது அதிகரிக்கும். அதனால் நீங்கள் கூடு அந்த திசையில் இருப்பதாக எண்ணித் தேடிக் கொண்டிருப்பீர்கள். உங்களைத் தாக்கிடும் பறவை வெகு தூரம் வட்டமாகப் பறந்து சென்று தரை இறங்கி குனிந்த படியே நடந்து தன் கூட்டிற்கு வந்து விடும். என்ன ஒரு சாமர்த்தியம்!

இப்போது புரிகிறதா இந்தக் குருவியை ஏன் ஆள்கட்டிக் குருவி என்று பலரும் அழைக்கிறார்கள் என்பது?

இவ்வளவு கவனத்துடன் தன் முட்டைகளையும் குஞ்சுகளையும் பாதுகாக்கும் குருவியை நான் சில நாட்கள் தொடர்ந்து படம் பிடித்து வந்தேன். முதலில் கேமராவை மட்டும் கூட்டின் அருகில் வைத்து விட்டு தூரத்தில் இருந்து ரிமோட் ரிலீஸ் மூலம் படம் பிடித்து வந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் சென்று இறுதியில் அதனைத் தடவிக் கொடுத்தேன். பின் அடை காத்துக் கொண்டிருந்த பறவையை கையில் எடுத்து சுமார் இரண்டடி தூரத்தில் விட்டு அது தன் கூட்டினை அடையும் போது படம் எடுத்தேன்.


ஒரு முறை எனது நண்பர் ஒருவரை அப்பறவையைதடவிக் கொடுக்கச் செய்து எடுத்த படம்
இதோ.
(ஆள் காட்டிக் குருவிக்கு உடலெல்லாம் கூசுது!)


அடர்ந்த காடுகளில் புதர்களுக்கு இடையே புலி யார் கண்ணுக்கும் தெரியாமல் மெல்ல மெல்ல நகர்ந்து தன் இரை நோக்கிச் செல்லும்போது அதனைத் தன் அபாயச் சங்கினை ஊதி (Did you do it?....Did you do it? என்றபடி)பிறருக்கு அறிவிப்பது இந்த ஆள்காட்டிக் குருவி தான்.

இயற்கையின் எழிலில் நமக்கு இறைவன் காட்டும் விந்தைகளுக்கு ஒரு எல்லையும் உண்டோ?


***



Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


ஒரே ஒரு போட்டோவுக்கு எட்டு வாரம் - தினகரன் வசந்தத்தில் நேர்காணல்

Friday, February 1, 2013

நண்பர்களுக்கு வணக்கம்!

இம்மாத போட்டிக்கான தலைப்பு: கல்வி / கல்விக்கூடம்

மாதிரிப்படங்கள்:
CVR

கருவாயன்

ராமலக்ஷ்மி

CVR

கருவாயன்

படங்கள் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : பிப்ரவரி 20

போட்டி விதிமுறைகள்: இங்கே

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff