வணக்கம்
பிட் வாசகர்களே, « இரண்டு வர்ணங்கள் » போட்டி முடிவிற்கு
செல்வதற்கு முன்னால் இறுதிச்சுற்றிலிருந்து வெளியேறும் படங்களைப் பார்ப்போம்:
கார்த்திக் ராஜா:
நல்ல மேக்ரோ படம்,கருப்பு நிற சப்ஜெக்டும், பச்சை நிற பின்புலமும் படத்திற்கு அழகைகொடுக்கின்றது,எனினும் இந்த படத்தில் பச்சை நிறமே பிரதானமாக தென்படுகிறது,படத்தை இன்னும் கொஞ்சம் கிராப் செய்து சப்ஜெக்ட்டை கொஞ்சம் பெரியதாக கண்முன் கொண்டு வந்திருக்கலாம் எனப்படுகிறது,எனவே இச்சுற்றிலிருந்து வெளியேறுகிறது.
கார்த்திக் ராஜா:
நல்ல மேக்ரோ படம்,கருப்பு நிற சப்ஜெக்டும், பச்சை நிற பின்புலமும் படத்திற்கு அழகைகொடுக்கின்றது,எனினும் இந்த படத்தில் பச்சை நிறமே பிரதானமாக தென்படுகிறது,படத்தை இன்னும் கொஞ்சம் கிராப் செய்து சப்ஜெக்ட்டை கொஞ்சம் பெரியதாக கண்முன் கொண்டு வந்திருக்கலாம் எனப்படுகிறது,எனவே இச்சுற்றிலிருந்து வெளியேறுகிறது.
அருமையான படம்,படத்தை கருப்பு&வெள்ளையில் கொடுத்திருப்பது இன்னும் சிறப்பு,போட்டியின் தலைப்புக்கு பொருத்தமாக இருந்தாலும், குழந்தைக்கு Facial Blur apply செய்து படத்திற்கு ஒரு செயற்கைதன்மையை வரவழைக்கிறது.மழலைகளின் தோல்கள் இயற்கையாகவே மென்மையானவை,எனவே பிற்சேர்கை அதிகம் என்பதாலும்,கை மற்றும் கன்னத்தில் சற்று ஓவர் எக்ஸ்போஸ் ஆகியிருப்பதாலும் அடுத்த சுற்றுக்கும்,சிறப்பு கவனம் செல்லும் வாய்ப்பையும் இழக்கிறது.
ஜெயபாண்டி:
கோழிக்குஞ்சின்
அலகும்,பின்புல நிறமும் ஏறத்தாழ
ஒரே மாதிரி இருப்பது ஒரு
குறையாகப்படுகிறது,மேலும் சப்ஜெக்ட்டைவிட பின்புலம்
அதிக இடத்தை ஆக்கிரமிப்பதால் பார்வை
பின்புலத்தின் மீதே அதிகம் விழுகிறது
vignette கூட சற்று உறுத்தலாக
இருப்பதாக நான் பார்க்கிறேன்.
ராஜேஷ்குமார்:
படத்தில்
மஞ்சள் நிறமே அதிகமாக தெரிகிறது,சப்ஜெக்டையும் பேக்கிரவுண்டையும் தனித்தனியாக காணமுடியாத அளவிற்கு மஞ்சள் டோன் படத்திற்கு
குறையாக உள்ளது மேலும் கோழிக்குஞ்சின்
பின்புறம் Overexpose ஆகி இருப்பதும் படத்திற்கு
குறையாக தெரிகிறது.
வில்லி:
காகத்தை
பிரேமிற்குள் கொண்டு வந்த விதம்
நன்றாக இருக்கின்றது என்னைபொருத்தவரை இது perfect compo, காகத்தின்
இறக்கையில் தெரியும் ஒருவித மயில்நிற கலரை
ஒரு குறையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும், வெள்ளை நிற
பேக்கிரவுண்டில் மஞ்சள் நிறமும் அதிக
அளவில் தெரிவதால் அடுத்த சுற்றிற்கு முன்னேறும்
வாய்ப்பை இழக்கிறது.
வின்சன்:
படத்தில்
சப்ஜெக்டின் நிறம் lightடாகவும் பின்புலம்
Darkகாகவும் இருப்பது படத்திற்கு மைனஸாக அமைந்துவிட்டதாக நான்
பார்க்கிறேன்.இதற்கு காரணம் ஆட்டின்
நிறம் சற்று muted color ராக
இருந்தது தான். மேலும் ஆட்டின்
கழுத்தில் இருக்கும் கயிறும் சற்று உறுத்துகிறது.
சிவா:
அருமையான
படம், கருப்புவெள்ளையில் தந்திருக்கிறார் போட்டியின் தலைப்பிற்கு நன்றாக பொருந்தும் படமாக
இருந்தும் படத்தை Under Exposure ஆக தந்திருப்பது
படத்திற்கு பலவீனமாக ஆகிவிட்டது,மேலும் தண்ணீரில் தெரியும்
பிரதிபலிப்பு மிகவும் Darkகாக ஆகிவிட்டதால்
அடுத்த சுற்றுக்கு செல்லவில்லை.
எஞ்சியிருக்கின்ற
படங்களில் முதல் மூன்று இடங்களை
பிடிக்கபோகும் படங்களை பார்க்கலாம்.
மூன்றாமிடம்
பிடிப்பது வெங்கட்ராமன் :
அழகிய இரண்டு வண்ணங்களை அழகாக
படம்பிடித்திருக்கிறார் கருப்பும் பச்சையுமாக கண்ணுக்கு குளிர்ச்சியாக படம்பிடித்திருக்கிறார்,ஒரே குறை படத்தில்
இலைகள் சற்று Over exposure ஆகியுள்ளதால்
மூன்றாமிடத்தில் நின்று விட்டது.
இரண்டாமிடம்
பிடிப்பது சத்தியா:
இரண்டு
வர்ணங்கள் தலைப்பிற்கு கச்சிதமாக பொருந்துகிறது இந்த மேக்ரோ படம்.
பின்புறம் முழுவதும் ஒரே நிறமாக அமைந்திருப்பது
இன்னொரு சிறப்பு,மேக்ரோ போட்டோகிராபியில்
தவிர்க்கமுடியாதது Shallow Depth of Field என்பதால்
பூ முழுவதும் போகஸ் ஆகாமல் போகவே
இரண்டாமிடத்தை பிடிக்கிறது.
முதலிடம்
பிடிப்பது காண்டீபன்:
அருமையான படம். பார்க்கும் போது இரண்டு வர்ணங்களைத் தாண்டி வேறெதுவும் உறுத்தவில்லை. கம்பமும், புல்லும் ஒரே நிறமாக அமைந்திருப்பது படத்திற்கு அழகு சேர்க்கிறது. ஒளியானது ஒரே அளவாகக் கையாளப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு. அது மட்டுமின்றி, பகல் நேரத்தில் சூரிய ஒளியில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் நிழலின் ஆதிக்கம் அதிகமில்லாமல் இருப்பது போன்ற சிறப்புகள் நிறைந்திருப்பதாலும், புற்களில் ஆங்காங்கே தெரியும் பச்சை நிறம் கண்களை உறுத்தவில்லை என்பதாலும் முதலிடம் தரப்படுகிறது. வாழ்த்துக்கள் காண்டீபன்!.
வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்!
பங்குபெற்ற
அனைவருக்கும் நன்றி!!
அடுத்தமாத போட்டி அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
அன்புடன்
நித்தி ஆனந்த்.
Wonderful explanation and selection! Congrats to everyone!
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...இந்த போட்டி தான் எனது முதல் பங்கேற்பு ஆதலால் என்னுடைய புகைப்படத்தின் நிறை குறைகளை கூறினால் என்னை மேம்படுத்தி கொள்ள முயற்சி செய்வேன்....
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்....
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவெற்றிபெற்ற அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்!
ReplyDelete@kani02 ,
ReplyDeleteஉங்கள் படத்தை எந்தப் பெயரில் அனுப்பியிருந்தீர்கள் எனத் தெரிவியுங்கள். போட்டி ஆல்பத்தில் இல்லையே.
suresh.jpg என்ற பெயரில் அனுப்பியிருந்தேன்...
Deleteவெற்றி பெற்ற படங்கள், அதீதம் மின்னிதழில்: http://www.atheetham.com/?p=6023
ReplyDeleteஇத ேபா தா என த பேக ஆதலா எைடய ைகபட ைற ைறகைள னா எைன ேமப ெகாள ய ெசேவ.. suresh.jpg எற ெபய அேத...
ReplyDeleteThank you PIT Friends
ReplyDeletewhat is the prize amount ?
ReplyDelete@ shan,
ReplyDeleteபோட்டிகள் திறனை வெளிக் கொண்டு வருவதற்காக நடத்தப் படுகின்றன. கலந்து கொள்பவர்கள் அங்கீகாரமே பரிசு என்கிற புரிதலுடனேயே பங்கேற்று வருகிறார்கள்.