Wednesday, November 6, 2013

Camera RAW : கருப்பு & வெள்ளை படத்தில் எழும் சிக்கலும் தீர்வும்

1 comment:
 
வணக்கம் பிட் வாசகர்களே,

இன்றைய கட்டுரையில் நாம் Camera RAWவில் கருப்பு & வெள்ளைப் படங்களை உருவாக்குவதில் எழும் சிக்கலையும் அதனை எவ்வாறு தீர்ப்பது என்பதைப் பற்றியும் சற்று விரிவாகப் பார்க்கலாம். பொதுவாகவே இன்றும் பல புகைப்படக்கலைஞர்கள் விரும்புவது கருப்பு & வெள்ளைப் படங்களைதான், காரணம் கருப்பு& வெள்ளைப் படங்களில் ஒருவித உணர்ச்சியைக் கொண்டுவர முடியும். படத்தினைக் கொண்டு ஒரு கருத்தைச் சொல்லவிரும்பும் புகைபடக்கலைஞர்களுக்கு கருப்பு & வெள்ளை படங்கள் என்றைக்கும் வரப்பிரசாதமே.

சரி RAWவில் படம்பிடிக்கும் கலைஞர்கள் தங்கள் படங்களை Basic Editing_கை Camera RAW_விலேயே செய்துகொள்வார்கள். Camera RAW வில் கருப்பு & வெள்ளை Conversion காக பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது Convert to Grayscale  என்ற ஆப்ஷனைத்தான்.


Reds,Oranges,Yellows,Greens,Aquas,Blues,Purples, and Magentas என‌ தனித்தனி கலர்களையும் தனியாக கன்ட்ரோல் செய்துகொண்ட பின்னர் படத்தினை போட்டோஷாப்பிற்கு கொண்டுவந்து Final touch செய்துகொள்வார்கள். இவ்வாறாக Camera RAW வில் Convert to Grayscale  கொண்டு மாற்றப்பட்ட கருப்பு&வெள்ளை படங்களை போட்டோஷப்பில் கொண்டுவரும்போது போட்டோஷாப்பில் இருக்கும் Adjustment & New Adjustment Layerல் இருக்கும் சில ஆப்ஷன்களும் இயங்காது, அதேபோல போட்டோஷாப்பில் இருக்கும் ஒருசில பில்டர்களும் தனியாக நிறுவியிருக்கும் Plugins களும் இயங்காது.


இதற்கு காரணம் உங்களது படமானது Grayscale mode_க்கு மாற்றப்டுவதுதான்.போட்டோஷாப்பில் பெரும்பாலான Adjustmentகளும் பில்டர்களும் மற்றும் Third Party Plugins களும் RGB, மோடில் வேலை செய்யும்படியே வடிவமைக்கப்படுகிறது.

இதனை சரிசெய்ய போட்டோஷாப்பில் Image>Mode சென்று உங்களது படத்தின் Mode RGB க்கு மாற்றுங்கள்.

அவ்வளவுதான் இனி உங்களது போட்டோஷாப்பில் இயங்க மறுத்த‌ அனைத்துபில்டர்களும்Adjustment  & Third Party Pluginsகளும் மீண்டும் இயங்கும்.

நன்றி வணக்கம்
அன்புடன்,
நித்தி ஆனந்த்


1 comment:

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff