Showing posts with label Nithi Anand. Show all posts
Showing posts with label Nithi Anand. Show all posts

Friday, May 23, 2014


வணக்கம்.

இன்றைய கட்டுரையில் நாம் சில பிரபலமானபழைய கருப்பு வெள்ளை நெகட்டிவ் பிலிம் ரோல்கள் உருவாக்கித்தரும் எபக்ட்டுகளை போட்டோஷாப்/கிம்பில் Channel Mixer  கொண்டு உருவாக்குவதை காணலாம்முன்பெல்லாம் பிற்சேர்க்கை என்பது கலர் படங்களாகட்டும், அல்லது கருப்பு வெள்ளைப் படங்களாகட்டும். அவர்களுக்குத் தேவையான எஃபக்டுகளை உருவாக்க அதற்குத் தகுந்தாரற்போல இருக்கும் நெகட்டிவ் ஃபிலிம்ரோல்களை பயன்படுத்தி எடுப்பார்கள், உதாரணத்திற்கு கருப்பு வெள்ளை படங்களுக்கென நிறைய ஃபிலிம்ரோல் நெகட்டிவ்கள் பயன்படுத்தப்பட்டன ex : Agfa Pan,Ilford Delta,Kodak tri-x etc…ஒவ்வொரு ஃபிலிம் ரோலுக்கும் ஒவ்வொரு மாதிரியான வெளியீடு இருக்கும்.

நாம் இப்போது நெகட்டிவ் ரோல் காலங்களிலிருந்து டிஜிட்டல் உலகத்தில் இருக்கின்றோம். எனினும் இன்றும் பெரும்பாலான புகைப்படக்கலைஞர்கள் கருப்புவெள்ளைப் படங்களைக் கைவிடுவதாக இல்லைஅந்த அளவிற்கு இந்தக் கருப்புவெள்ளைப் படங்களில் உணர்சிகளைக் கொண்டு வரமுடியுமென்கின்றனர் அனுபவம் வாய்ந்த புகைப்படக்கலைஞர்கள்.
சரிஇதுபோல பழைய நெகட்டிவ் ஃபிலிம் ரோல்கள் உருவாக்கிக்கொடுத்த கருப்பு வெள்ளைப் படங்களை போட்டோஷாப்பில் உருவாக்க நாம் Channel Mixer என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தலாம் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Channel Mixer Adjustment ஐ கொண்டு போட்டோஷாப்பில் தரமான கருப்பு வெள்ளை மற்றும் கலர் படங்களை தயாரிக்க முடியும்இந்த Adjustment ஆனது RGB மற்றும் CMYK மோடில் வேலைசெய்யும். நான் இதுவரை CMYK மோடை பயன்படுத்தியது கிடையாது எனவே RGB மோடில் வேலை செய்வது குறித்து விளக்குகிறேன்.

Channel Mixer இன் அடிப்படைத்தத்துவதை புரிந்துகொள்ளுங்கள் உங்களுடைய படத்திலிருக்கும் Red,Green,Blueஆகிய மூன்று சேனல்களையும் உங்களின் தேவைக்கேற்றவாறு adjust செய்துகொள்வதேயாகும். இதில் நீங்கள் ஒரு சூத்திரத்தை கையாளவேண்டும் அதாவது 3 சேனல்களின் மதிப்பின் கூட்டுத்தொகையானது 100 ஆக இருக்கவேண்டும் என்பதே அந்த சூத்திரம். (R+G+B=100%), மதிப்புகள் மைனஸாக இருந்தாலும்(-) பிளஸ்ஸாக இருந்தாலும்(+) கூட்டிக்கழித்து பார்க்கும் போது +100% வரவேண்டும் என்பதே முக்கியமாகும். Ex:(40+40+20=100),(-50,+65+85=100),(33+ -17+84=100).

சரி செயல்முறைக்கு செல்லலாம் வாங்க,முதலில் உங்களது படத்தை போட்டோஷாப்பிலோ அல்லது கிம்பிலோ திறந்துகொள்ளுங்கள். பின்னர் New Adjustment Layer சென்று Channel Mixer தேர்வு செய்கிறேன்.


இப்போது தோன்றும் விண்டோவில் Monochrome என்பதை டிக் செய்யவும்.



இனி உங்களது Red,Green,Blue சேனல்களின் மதிப்பை உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு கன்ட்ரோல் செய்துகொள்ளுங்கள் ஆனால் உங்களது R+G+B =100% வருமாறு பார்த்துக்கொள்ளவும். அவ்வாறு 100% மதிப்பை தாண்டும் தருவாயில் ஒரு Warning Symbol வரும். கவனமாக செய்யவும்.


கீழேயுள்ள இந்த அட்டவணையை கொண்டு அதிலுள்ள பிலிம்ரோல்களுக்கான RGB மதிப்புகளைக்கொண்டு 15 வகையான ருப்பு வெள்ளை படங்களை இந்த Channel Mixer மூலமாக உருவாக்கிக்கொள்ளமுடியும்.


பயன்படுத்திப் பாருங்கள். பயனடையுங்கள் !
***


Wednesday, May 7, 2014

வணக்கம் நண்பர்களே, நலமா...

Portrait மற்றும் பேஷன் போட்டோகிராபர்கள் தங்கள் மாடல்களை படம்பிடிக்கும்போது சந்திக்கும் பிரச்சனையைப் பற்றிப் பார்ப்போம். அதாவது மாடல் பார்க்க அழகாக நல்ல நிறத்துடன் காணப்படுவார்கள் ஆனால் ஒருசில மாடல்களின் பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்,Portrait போட்டோகிராப்பியோ அல்லது Fashion போட்டோகிராப்பியோ படம் பிரின்ட் செய்யும் முன்பாக  இந்த மஞ்சள் நிற பற்களை சரிசெய்வது அவசியமாகும். 

கீழேயுள்ள படத்தில் வாயெல்லாம் பல்லாக வைத்துக்கொண்டு சிரிக்கும் சிறுவனின் பற்கள் மஞ்சள் நிறம் தோய்ந்து காணப்படுகிறது.இதனை எப்படி போடோஷாப்பில் டூத் பேஸ்ட் இல்லாமலேயே பிரஷ் பண்ணலாம்னு பார்ப்போம்.


முதலில் போட்டோஷாபில் படத்தை திறக்கவும்.
இப்போது New Adjustment லேயரில் Hue/Saturation ஐ கிளிக் செய்யவும்.


இனி நான் படத்தில் காட்டியதுபோல “yellow” வண்ணத்தை தேர்ந்தெடுக்கவும் பின்னர் Saturation மதிப்பை வலமிருந்து இடமாக நகர்த்தவும் மஞ்சள் நிறம் நீக்கப்படும் வரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வைத்துக்கொள்ளவும்.பின்னர் Lightness ஐ இடமிருந்து வலமாக உங்கள் விருப்பத்திற்கு நகர்த்திக்கொள்ளவும்.



சரி இப்போது ஒரு விஷயம் கவனிக்கப்படவேண்டும்,அதாவது New Adjustments லேயரை  தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் adjust செய்யும் மதிப்பானது உங்களின் படம் முழவதையும் பாதிக்கும்,குழப்பமாக உள்ளதா?

உங்களது Adjustmentsகள் பற்களுக்காக என்றாலும் இதனால் பற்களைத்தவிர‌ தவிர படத்திலிருக்கும் பிற இடங்களும் பாதிக்கப்படும் உதாரணமாக Skin Tone,நமக்கு தேவையான Adjustments பற்களுக்குத்தான் எனினும் படத்தில் பிறபகுதிகள் பாதிக்காமலிருக்க Invert மாஸ்கை பயன்படுத்தப்போகிறோம்.
ஆம் லேயர் பேலட்டில் Hue/Saturation  லேயரில் இருக்கும் லேயர் மாஸ்க் ஆனது வெள்ளை நிறத்தில் இருக்கிறது அல்லவா?


இதனை நாம் Invert செய்ய விசைப்பலகையில் D அல்லது X ஐ அழுத்தவும். இது உங்களது Foreground மற்றும் Background  நிறங்களை முறையே கருப்பு&வெள்ளையாக மாற்றும்.

இப்போது லேயர் மாஸ்கை தேர்வுசெய்து கொண்டு விசைப்பலகையில் CTRL+I ஐ (Image>Adjustments>invert) அழுத்தவும்.


இப்போது உங்களது படம் பழையமாதிரியே reset செய்யப்பட்டிருக்கும் அதாவது மஞ்சள் நிற பற்களுடன். இப்போது Foreground நிறமாக‌ வெள்ளை நிறத்தை தேர்வு செய்து பின்னர் Brush ஐ தேர்வுசெய்து பற்களின் மீது மட்டும் பிரஷ் செய்யவும். இப்போது பற்கள் வெள்ளை நிறமாக மாறும்.


அவ்வளவே…..வெண்மையாக்கப்பட்ட பளபளக்கும் பற்களைப் பாருங்கள்


என்ன மக்கா போட்டோஷாப்பிலே பேஸ்டே இல்லாம பிரஷ் பண்ண கத்துக்கிட்டீங்களா???

அன்புடன்,
நித்தி ஆனந்த்

Friday, April 11, 2014

வணக்கம்.

பிட்டில் ஏற்கனெவே புகைப்படக்கருவியில் Copyright Info சேர்ப்பது எப்படி என ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன். அதனை படித்த வாசக அன்பர்கள்,Point&Shoot கேமராக்களில் எடுக்கப்படும் படங்களுக்கும் நம்முடைய Copyright Infoவை சேர்க்க இயலுமா என என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்எனவே போட்டோஷாப் கொண்டு எவ்வாறு உங்களது Copyright Info வை சேர்ப்பது என பார்க்கலாம்.

இது Point&Shoot, Prosumer,  செல்போன் கேமராக்களில் எடுக்கப்படும் படங்கள் மட்டுமின்றிGraphic Designers போட்டோஷாப்பில் உருவாக்கும் கிராபிக்ஸ் படங்களுக்கும் Copyright Info சேர்த்துக்கொள்ளலாம்.

கீழேயுள்ள படம்,என்னுடைய Canon கருவியிலேயே Embed செய்யப்பட்ட Copyright Info இதனை நான் போட்டோஷாப் Exif Viewerரில் பார்க்கும் பொழுது என்னுடைய படத்தில் என்னுடைய பெயரை என்னுடைய கேமராவே எழுதிவிட்டது.

ஆனால் கீழேயுள்ள இந்த படமானது என்னுடைய Panasonic FZ-38 Prosumer  வகையை சேர்ந்தது.இந்த படத்தை நான் போட்டோஷாப் Exif Viewerரில் பார்கிறேன் இங்கு என்னுடைய பெயரோ Copyright Info வோ தெரியவில்லை.


சரி இப்போது இதனை மேனுவலாக தயாரிக்க இருக்கிறோம்.
முதலில் போட்டோஷாப்பை இயக்குங்கள்.அதில் File>New சென்று ஏதாவது ஒரு அளவில் ஒரு டாக்குமென்டை உருவாக்கவும்.(1000X1000)

இப்போது Window>Actions என்பதை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களது action pallette ஆனது போட்டோஷாப் லேயர் பேனலில் வரும்.இனி Action Windowவில் Create New Action என்பதை கிளிக் செய்யவும்.


இப்போது தேன்றும் விண்டோவில் ஒரு புதிய பெயரை கொடுத்துக்கொள்ளவும்.


இனி போட்டோஷாப்பில்,File>File Info வை அழுத்தவும்.


இப்போது தோன்றும் விண்டோவில் நான் கீழே காட்டியுள்ளபடி Description டேபை தேர்ந்தெடுக்கவும்.

இப்போது Copyright Status என்பது Description டேபில் Unknown என்று இருக்கிறதல்லவா? அதனை கிளிக் செய்து Copyrighted என மாற்றவும்.பின்னர் Copyright Notice என்பதில் உங்களது பெயரை Copyright Symbolலுடன் தட்டச்சு செய்துகொள்ளவும்.Copyright Info URL இல் உங்களது இணையதள முகவரியை கொடுக்கவும்.கடைசியாக Author என்பதில் உங்களது பெயரையும் தட்டச்சு செய்துகொண்டு கடைசியாக OK செய்யவும்.


இப்போது Action டேபில் Stop பட்டனை அழுத்தவும்,இனி,உங்களது Copyright Info வானது Action ஆக சேமிக்கப்பட்டிருக்கும்.


இனிநீங்கள் Copyright செய்ய விரும்பும் படத்தை திறந்துகொள்ளுங்கள்.இப்போது Action பேனலுக்கு சென்று நீங்கள் உருவாக்கிய Copyright Actionனை தேர்வுசெய்துகொண்டு Play பட்டனை அழுத்தவும்.உங்களது Copyright Infoவானது Embed செய்யப்பட்டிருக்கும்.

பின்னர் File>File Info சென்று சோதித்துக்கொள்ளுங்கள்.


பின்னர் File>Save அல்லது Save As என்பதை தேர்ந்தெடுத்து,உங்களது படத்தை சேமித்துக்கொள்ளுங்கள்



இனி Copyright Info சேர்க்க விரும்பும் படங்களை போட்டோஷாப்பில் திறந்துகொண்டு நாம் உருவாக்கிய இந்த Action ஐ Play செய்துகொண்டால் போதும்.


உங்களது படத்தில் Copyright Info சேர்க்கப்பட்டிருக்கும்.
இவ்வாறாக Copyright Info சேர்க்கப்பட்டதும்,உங்களது படத்தில் Copyright Symbol சேர்க்கப்பட்டதைப் பாருங்கள்.


Copyright Info சேர்க்கப்பட்டு பின்னர் என்னுடைய Flickr Streamமில் பதிவேற்றம் செய்யப்பட்ட படத்தை பாருங்கள்,நாம் போட்டோஷாப்பில் Embed செய்த தகவல்கள் பிளிக்கரில் Exif Data வில்தெரிவதைக் காணலாம்.

மீண்டும் சந்திப்போம்:).
***

Tuesday, March 18, 2014

வணக்கம் பிட் மக்கா,நலமா?

சென்ற வாரம் Rotary Club of Pondicherry Beachtown மற்றும் Canon Showroom ஏற்பாடு செய்திருந்த Photo workshopபிற்கு பாண்டிச்சேரி புகைப்படக்குழுவிற்கு அழைப்புவிடுத்திருந்தனர். எனவே புதுவையை சேர்ந்த புகைப்படக்கலைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஸ்டுடியோ லைட்டிங்கில் Portrait படங்கள் எடுக்கப்பட்டதுவீடியோகிராபர்கள் பயன்படுத்தும் டங்க்ஸ்டன் lighting வாயிலாக எடுக்கப்பட்டது. இவ்வாறாக படம் எடுக்கப்பட படத்தில் Color Cast வந்ததுஅதாவது கேமராவில் White Balance ஆனது AWBல் செட்செய்யப்பட்டதால் கேமராவானது சுமார் 3200 கெல்வின்களுக்கு செட்செய்துகொள்ள Skin tone ஆனது சற்று சிகப்புநிற Color Cast காணப்பட்டது. எனவே கேமராவில் இந்த 3200k வை 2600k ஆக மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இங்கே தான் ஒரு விஷயம் கவனிக்கவேண்டும் அதாவது கேனான் 5d,6d,60d போன்ற சற்று விலையுயர்ந்த மாடல்களில் நமது White Balance இன் மதிப்பை சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும்.

ஆனால் Entry Level கேமராக்களில் இது சாத்தியம் கிடையாது அல்லவா? எனவே சில கலைஞர்கள் எங்களது கேமராவில் எவ்வாறு மாற்றுவது என கேட்கும் போது RAWவில் ஷூட் செய்துகொண்டு RAW எடிட்டரில் சென்று நாம் விரும்பும் கெல்வின்களை கொடுத்துக்கொள்ளலாம்அல்லது மாடல்களிடம் ஒரு Gray கார்டை கொடுத்து ஒரு ஷாட் எடுத்துக்கொண்டு பின்னர் RAW எடிட்டரில் White Balance சரிசெய்து கொள்ளலாம் என விளக்கம் தந்தனர்.

ஆனால் Gray கார்டுகள் இல்லாமல் JPG யில் படம்பிடிப்பவர்களின் படங்களில் ஏற்படும் Color Castகளை எவ்வாறு நீக்குவது என கேள்வி எழுந்தபோது போட்டோஷாப் போன்ற டூல்களில் தான் சரி செய்துகொள்ளவேண்டும் எனவும் அவற்றை பற்றி பின்னர் விளக்கம் அளிக்கப்படும் என கூறியிருந்தனர்ஆனால் நேரமின்மை காரணமாக அந்த செயல்முறை விளக்கம் அளிக்கப்படவில்லை.

ஆகையால் நட்பு வட்டத்தில் ஒருசிலர் "பிட்" தளத்தில் இதனை விளக்கி ஒரு பதிவு போட்டால் JPG யில் படம்பிடிப்பவர்களுக்கு பயனாக இருக்குமே என கேட்ட போது,  தாராளமா போடலாமே என கூறி இக்கட்டுரையை உங்களுக்கு அளிக்கிறேன்.


கீழேயுள்ள படம் Tungsten Lighting கொண்டு JPGயில் எடுக்கப்பட்டது. இப்படத்தில் மாடலின் Skin Tone ஆனது சற்று ஆரஞ்சு நிறத்துடன் தெரிகிறது இதனை எவ்வாறு சரி செய்யப்போகிறோம் என்பது தான் இக்கட்டுரை.


அதற்கு முன்பாக ஒரு சில விஷயங்களை தங்களுடன் பகிருகிறேன்,அதாவது போட்டோஷாபில் ஒரே வேலையை பல வழியில் செய்யலாம் எனவே இந்த Color Castஐ  நீக்க Hue\Saturation,Curves,Levelsனு நிறைய இருந்தாலும் போட்டோஷாப்பில் அடிப்படை தெரியாதவர்களும் புரிந்துகொள்ளும் விதமாக ஒரு எளிமையான வழியில் சரிசெய்யப்போகிறோம்.

அதாவது Levels,Curves இல் இருக்கும் Black Point,Gray Point,White Point களைக்கொண்டு இந்த Color Castஐ நீக்க முடியும் என்றாலும்,நீங்கள் தவறான Black,Gray,White Points தேர்வு செய்துவிட்டால் படத்தை கெடுத்துவிடும் அதேபோல் ஒருபடத்தில் இருக்கும் Gray Points களை கண்டுபிடிப்பதிலும் போட்டோஷாப்பில் போதிய அனுபவம் இருக்கவேண்டும் என்பதால் நான் இக்கட்டுரையில் ஒரு எளிமையான வழிமுறையை உங்களுக்கு கற்றுத்தருகிறேன்.

முதலில் படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். பின்னர் லேயர் பேலட்டில் இருக்கும் பேக்கிரவுண்டு லேயரை தேர்வு செய்து மவுஸில் வலது கிளிக் செய்யவும்.இப்போது தோன்றும் மெனுவில் Duplicate Layer என்பதை தேர்வு செய்து உங்களது படத்தை நகலெடுத்துக்கொள்ளவும்.


இப்போது Filter>Blur>Average என்பதை அழுத்தவும்.இது உங்களது படத்தை முழுவதுமாக ஆய்வு செய்து எந்த நிறத்தால் உங்களது படமானது Color Cast இருக்கிறது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தும்.

இப்போது லேயர் பேலட் சென்று Levels Adjustment Layer ஐ தேர்வு செய்யவும்.

பின்னர் Levelsல் இருக்கும் Gray நிற Eyedropper  ஐ எடுத்து இந்த Color Cast லேயரில் ஒரு இடத்தில் கிளிக் செய்யவும்.

இப்போது இந்த Color Cast ஏற்படுத்திய குறிப்பிட்ட நிறமானது கிரே நிறமாக நியூட்ரல் செய்யப்பட்டிருக்கும். இனி டூப்ளிகேட் செய்த லேயரின் கண் அடையாளத்தை நீக்கிவிடுங்கள்.

இப்போது பாருங்கள் Color Cast நீக்கப்பட்டிருக்கும். இனி உங்கள் படத்தினை உங்கள் விருப்பப்படி Process செய்துகொள்ளுங்கள்.

என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff