Friday, January 31, 2014

வணக்கம் நண்பர்களே!

முதல் சுற்றுக்கு முன்னேறிய படங்களில்  ஓளிப்படத்தின் அடிப்படை அம்சங்ளுடன் கவனத்தினைக் கவர்ந்து சிறப்புக்கவனம் பெற்ற, வெற்றி பெற்ற படங்கள்.

#சிறப்புக் கவனம்: சதிஸ்குமார்

மூன்றாம் இடம்வின்சென்

இரண்டாம் இடம்: ஸ்ருதி

முதலாம் இடம்:ஜெயவேலு

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! அடுத்த போட்டியில் சிறப்பாக கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Monday, January 27, 2014

சாவல் குருவி என்றொரு குருவி.  இதைப் பலரும் தவறாக மரங்கொத்தி என்று அழைப்பதும் உண்டு.  ஆனால் இது உண்மையான மரங்கொத்தி போல மரப் பட்டையைக் கொத்தித் தன் இரையைத் தேடுவதும் இல்லை.  மரத்தைக் கொத்தித் துளை செய்து தன் கூட்டினை அமைப்பதும் இல்லை.  தரையில் சருகுகளுக்கிடையில் கிடைக்கும் புழு பூச்சிகளைதான் தேடி உண்ணும்.  ஏற்கெனவே உள்ள மரப் பொந்துகளிலோ அல்லது சுவற்றில் உள்ள இடுக்குகளிலோதான் தன் கூட்டினை அமைக்கும்.

இந்தப் பறவைக்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்ட பெயர் Upapa Epops.  காரணம் இது கத்துவது “ஊப்...ஊப்...ஊப்............ ஊப்...ஊப்...ஊப்...” என்று.
#1
(தரையில் இரை தேடுது ஹூபோ – படம் இணைய தளத்தில் இருந்து)
#2



#3
 (சுவற்றிடுக்கில் கூடு அமைத்த இரண்டு சாவல் குருவிகள்-
படங்கள் #3,#4 நடராஜன் கல்பட்டு)
சாவல் குவியின் தலையில் கொம்பு போல இருப்பது கொம்பல்ல.  சிறகுகளே.  தனக்கோ, தன் குஞ்சுகளுக்கோ பாம்பு, பூனை, மனிதர்கள் இவைகளால் ஆபத்து என்று அதற்குத் தோன்றினால் தன் கொண்டைச் சிறகுகளை விசிறி போல விரித்துக் கொண்டு “சர்...சர்...” என்று கத்தியபடி எதிரியைச் சுற்றி சுற்றிப் பறக்கும், தாக்கிடும் பாவனையில்.

#4

(மரப் பொந்தில் கூடு அமைத்த சாவல் குருவி – 

படம் #4: நடராஜன் கல்பட்டு)
படத்தில் உள்ள குருவியின் கொண்டை விரிந்திருப்பதின் காரணம் நான் அதனைப் படம் பிடித்திட கூட்டருகே நெருங்கியது தான்.

ஒரு உபரித் தகவல்: சாவல் குருவி இஸ்ரேல் நாட்டின் தேசியப் பறவை.


சாவல் குருவியின் இனிய கானத்தை இரசிக்க விருப்பமா?  
இங்கே செல்லுங்கள்:
***






Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:



Sunday, January 26, 2014

வணக்கம் நண்பர்களே!

இம்முறை முதல் சுற்றுக்கு எட்டு படங்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இந்த எட்டு படங்களைத் தவிர்த்து வேறு சில படங்கள் கவனத்தினைக் கவர்ந்திருந்தாலும் சில சின்னக் குறைபாடுகளினால் முன்னேற முடியவில்லை.

முதல் சுற்றுக்கு முன்னேறிய எட்டு வடிவங்கள் (வரிசை ஒழுங்கின்றி):

#சதிஸ்குமார்

#நரேந்திரன்

#பாணு

#ஸ்ருதி

#வின்சென்

#ஜெயவேலு

#சரவணன்

#மகிரன்

Wednesday, January 22, 2014

வணக்கம்..

சென்ற பாகங்களில் புகைப்படக்கலைஞர்கள் அறிந்துகொள்ளவேண்டிய 3 Blend Modeகளைப்பற்றி பார்த்தோம்.பழைய இருபாகங்களை காணாதவர்கள் பாகம் 1 மற்றும் பாகம் 2 ஐ பார்த்துக்கொள்ளவும். நாம் ஏற்கனவே Multiply மற்றும் Screen Blend Mode களைப்பற்றி பார்த்தோம்.இன்று மூன்றாவது Blend Modeடைப்பற்றி பார்க்க இருக்கிறோம். அது Soft light/Overlay Blend Modeகளாகும். ஏன் நான் இவ்விரண்டையும் தனித்தனியாக குறிப்பிடாமல் ஒன்றாகவே குறிப்பிடுகிறேனென்றால் Soft light ன் சற்று அதிக்கப்படியான வெளியீடுதான் Overlay ஆகும்.உங்கள் புகைப்படங்களைப் பொறுத்து சிலஇடங்களில் Soft light ம் சில இடங்களில் Overlay யும் பயன்படும். எனவேதான் நான் இரண்டையும் ஒன்றாகவே குறிப்பிடுகிறேன்.

 சரி, Multiply வெள்ளை நிறத்தோடும்,Screen கருப்பு நிறத்தோடும் தொடர்புடையதாக விளக்கம் அளித்திருந்தேன்,அதேபோல இந்த Soft light ஆனது 50% Gray நிறத்துடன் தொடர்புடையது.கீழேயுள்ள படத்தைப்பாருங்கள் இந்த படத்தின் லேயரை நான் Soft light Blend Mode க்கு மாற்றும் போது என்ன ஆகிறது என பாருங்கள் 50% Gray நிறம் காணாமல் போகும்.ஆம் இது 50% Gray நிறத்தை இந்த Soft light மற்றும் Overlay Blend Modeகள் Transparent செய்கின்றது மேலும் Darkஐ இன்னும் Darkகாகவும் Bright ஐ இன்னும் Bright டாக காட்டும் தன்மையுடையது.
எனவே இதனை நம் புகைப்படங்களோடு ஒப்பிடுகையில் இந்த Soft light/Overlay பயன்படுத்தி படங்களில் எங்கு வெளிச்சம் தேவையோ அங்கு வெளிச்சத்தையும் எங்கு Darkness தேவையோ அங்கே Darkness ஐ கூட்டிக்கொள்ள பயன்படுகிறது. பொதுவாக புகைப்படக்கலைஞர்களுக்கு இந்த Soft light/Overlay ஒரு வரப்பரசாதமாகும்.ஆம், ஒரு முகத்தின் உணர்ச்சிகளை ஒரே மாதிரி flat_ஆக இல்லாமல் கொஞ்சம் இருளும் ஒளியும் கலந்து காட்டுவதற்கு இதனைப் பயன்படுத்துவார்கள்.அதற்குதானே போட்டோஷாப்பிலும்/கிம்ப்பிலும் Burn/Dodge டூல்கள் இருக்கின்றனவே என கேட்பதும் எனக்கு புரிகிறது எனினும் இந்த முறையில் நாம் பிரஷ் டூலைக்கொண்டே செய்வதுடன் Processம் Non-destructive ஆக நடக்கின்றது என்பதும் இதன் சிறப்பு. மேலும் நாம் செய்த Process பிடிக்கவில்லையென்றாலும் தனிப்பட்ட லேயரை மட்டுமே delete செய்துகொள்ளலாம் என்பதும் இதன் சிறப்பு. சரி கீழேயுள்ள படத்தைப்பாருங்கள் இது நான் கருப்புவெள்ளை யில் Highkey க்காக கேமராவிலேயே சற்று Overexposed ஆக எடுத்த படம்.
சரி இதனை எப்படி Soft lightல் சரி செய்யலாம் என பார்க்கலாம்.முதலில் இந்தப்படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்கிறேன்.பின்னர் புதிய லேயர் ஒன்றை உருவாக்குகிறேன்.பின்னர் இந்தலேயரை Soft light Blend Mode உடன் தொடர்புடைய நிறமான 50%Gray வர்ணத்தால் நிரப்புகிறேன்.

என்ன ஆயிற்று பாருங்கள் கீழேயுள்ள படத்தை 50%Gray நிறம் மறைத்துவிட்டது.

இனி,பிரஷ் டூலை தேர்வு செய்யவேண்டும்,அதாவது படத்தின் எந்த பகுதியை Dark செய்ய விரும்புகிறீர்களோ அங்கு கருப்பு நிற பிரஷை தேர்வு செய்ய வேண்டும்.எந்த பகுதியை வெளிச்சம் கூட்ட விரும்புகிறீர்களோ அந்த இடத்திற்கு வெள்ளை நிற பிரஷையும் தேர்ந்தெடுக்கவேண்டும்.இவ்வாறு பிரஷ் செய்யும் முன்னர் பிரஷின் Opacityயை 10 முதல் 30 சதவீதத்திற்க்கு மிகாமல் செட் செய்யவும்(இது உங்களது படத்தின் தன்மையை பொருத்தது). இவ்வாறு Soft light Blend Mode முறையில் சரிசெய்யப்பட்ட படத்தை பாருங்கள்.
 இந்த 3 பாகங்களும் தங்களின் பிற்சேர்க்கைக்கு மிக உதவியாக இருக்கும் என நம்புகிறேன். மீண்டும் மற்றுமொரு கட்டுரையில் உங்களை சந்திக்கிறேன்:)!
***

Thursday, January 16, 2014

வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவு ஒரு அனுபவ பதிவேபிட்டில் பொதுவாகவே அனுபவப்பூர்வமான விஷயங்களை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதுண்டுஅதுபோலவே சமீபத்தில் இங்கு பிரான்ஸ் நாட்டில் ஒரு சில புகைபடக்கலைஞர்கள் தாங்கள் பயன்படுத்திய பழைய Vintage lensகளை தங்களது புதிய DSLR கேமராக்களில் பயன்படுத்துவதை பார்த்தேன்.

ஏன்? எதற்கு? என்கின்ற ஆர்வம் என்னைத்தொற்றிக்கொள்ள அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் கூறியது “ஒரு ஆர்வத்தினாலேயன்றி மற்றபடி புதிய லென்ஸுகளைவிட பழைய லென்ஸுகள் சிறந்தது என்றெல்லாம் கூறமுடியாது.மேலும் இதனைக்கொண்டு மேனுவல் போக்கஸ் மற்றும் மேனுவல் மோடில் தான் படம் பிடிக்க இயலும்,பழைய வகை லென்ஸுகள் என்பதால் அப்பச்சர் மட்டும் நம்மால் லென்ஸிலேயே தேர்வு செய்துகொள்ள இயலும்” எனவும் "மேனுவலாக படம் பிடிக்க விரும்பும் புகைப்பட கலைஞர்களுக்கு இது பொருத்தமாகும்" எனவும் மேலும் "இதனை வைத்து நிதானமாகவே படம் பிடிக்க இயலும். அவசரமாக நடக்கும் நிகழ்வுகளை படம் பிடிக்க இந்த லென்ஸுகளை பயன்படுத்த வேண்டாம்" எனவும் எனக்கு அவர்கள் புரிய வைத்தனர் (உதாரணம் : நடனம்,Street photography,Moving objects etc..).

ஆனால் இந்த Vintage லென்ஸுகளில் அதிக அப்பர்சர்களில் எடுக்கும் படங்களானது நல்ல ஷார்ப்னஸுடனும் மேலும் இவைகள் உருவாக்கித்தரும் Bokehவும் அருமையாக இருக்கும் எனவும் என்னிடம் கூறினார்கள். Portrait,Macro மற்றும் Product photographyக்கு இந்த வகை லென்ஸுகளை பயன்படுத்தலாம் எனவும் கூறினார்கள்.

கடைசியாக அவர்கள் கூறியது "Cost factor" குறைந்தவிலையில் இந்த லென்ஸுகளை தயாரித்து பயன்படுத்த முடியுமெனவும் கூறினார்கள்.


அதாவது இந்த பழைய Vintage M42 வகை பிலிம் ரோல் மாடல் லென்ஸுகள்(1960,70,80,90களில்) e-bayயில் மிக குறைந்த விலையில் வாங்கலாம் என்றும் சில நபர்கள் இலவசமாகவே கொடுத்துவிடுவார்கள் இதற்கு ஒரு Converter ring  மட்டும் வாங்கினால் போதுமெனவும் கூறினார்கள்.


M42 to canon adapter:

M42 to Nikon adapter:
ஒரு பழைய M42 வகை 50mm லென்ஸை சுமார் 20 டாலர்களுக்கு  வாங்கலாம்,அதனுடன் ஒரு converterஅதாவது M42 to DSLR adapter ஒரு 4 டாலர்களிலிருந்து 10 டாலர்களுக்குள்ளாக கிடைப்பதாகவும் ,ஆக 30 டாலர்களில் ஒரு 50mm லென்ஸ் ரெடி …..இந்த 50mm லென்ஸை cropped sensor கேமராவில் 65mm ஆக வெலைசெய்யும் என கூறி முடித்தனர்.
அப்படியென்றால் என்னிடம் இன்றும் இருக்கும் 1980 களில் என்னுடைய மாமா பயன்படுத்திய ஜெர்மானிய தயாரிப்பான Pentacon f2.4 50mm pancake லென்ஸையும் மற்றும் ரஷ்யா தயாரிப்பானHelios 58mm போன்ற லென்ஸுகளை ஏன் நான் என்னுடைய Canon DSLR bodyயில் பயன்படுத்திப்பார்க்ககூடாது என முடிவு செய்தேன்.இதுகுறித்த விளக்கங்களை நட்பு வட்டத்தில் கேட்க என்னுடைய Pentacon lens M42 லென்ஸ் மவுண்ட் கிடையாது எனவே பயன்படுத்த இயலாது என கூறிவிட்டனர்.


அதன்பிறகு நான் இந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்,ஆனால் சமீபத்தில் FLICKR தளம் மூலமாக அறிமுகமான என்னுடைய சொந்த ஊரான பாண்டிச்சேரியை சேர்ந்த நண்பர் திரு.கருணாகரன் அவர்களிடம் பேசிய போது, அவர் இதுபோன்ற நிறைய லென்ஸுகளை அவரது Canon மற்றும் Nikon பாடிக்கு அவராகவே (M42 வகை அல்லாத மாடல்களுக்கும்)லென்ஸ் மவுண்ட் உருவாக்கி வைத்திருப்பதாக கூற இந்தியா வந்தவுடன் அவரை என்னுடைய நண்பன் விக்கியுடன்  சென்று ந்தித்தேன்.
             Vicky and Mr.Karunakaran(Canon EOS 500D+Helios 58mm M42 Vintage lens(f4,1/600,ISO200).

என்னுடைய பழையலென்ஸுகளை பார்த்த அவர் ஒரு வாரம் அவகாசம் கேட்ட அவர் ஒரு வாரத்தில் சரியாக என்னுடைய பழைய லென்ஸ்களான Pentacon 50mm f2.4 Pancake மற்றும் Helios 58mm f2.0 லென்ஸுகளை என்னுடைய Canon bodyக்கு தயார் செய்து கொடுத்துவிட்டார். மேலும் இந்த Pentacon Vintage லென்ஸை வைத்து அவர் எடுத்திருந்த சில Product Photos களையும் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.

F4,1/13,ISO200 settings இல் Tripodன் உதவியுடன் எடுத்த படங்கள்:


ஆக நான் நினைத்தபடி என்னுடைய பழைய லென்ஸுகள் என்னுடைய கேமராவிற்கு  தயாராகி விட்டது. இனி,லென்ஸை பயன்படுத்தி படமெடுத்து பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எழ முதலில் Pentacon 50mm f2.4 இல் முயற்சி செய்தேன். இந்த லென்ஸில் focus distance 0.6m எனவே Portrait களைக் காட்டிலும் மேக்ரோ மற்றும் Product போட்டோக்களுக்கு பயன்படும் என முடிவு செய்தேன்.

சரி வெளியே சென்று படம்பிடிக்க நேரமில்லையென்பதால் என் வீட்டு தோட்டத்தையே தேர்வு செய்தேன்.அவ்வாறாக Pentacon 50mm f 2.4 இல் Spot Meteringல் F2.4,1/3200,ISO200 இல் எடுக்கப்பட்ட macro  சாமந்திப் பூ:
பிறகு தோட்டத்தில் மலர்திருந்த ரோஜா பூவை Kenko Extension Tube 12mm ஐ கொண்டு f2.4,1/500,ISO 200 இல் எடுத்த படம்:
பின்னர் f4 இல் 1/80,ISO 200 இல் எடுக்கப்பட்ட பச்சை மிளகாய் படம்:
அடுத்ததாக என் நண்பன் விக்கியை மாடலாக்கி f4,1/320,ISO 400 Exposure compensation +1/3 மற்றும் White Balance,Daylightல் செட் செய்து எடுத்த படம்:

ஒருவழியாக Pentacon லென்ஸை  சோதித்தப்பின்னர் அடுத்ததாக Helios 58mm என்னுடைய Canonல் சோதிக்க விரும்பினேன் இந்த Helios 58mm லென்ஸானது எனது Cropped Sensorல் 72mm ஆக வேலை செய்வதால் இந்த லென்ஸை நான் பெரும்பாலும் Portraitக்கு பயன்படுத்தலாம் என முடிவு செய்தேன்.

எனவே மீண்டும் என் நண்பன் விக்கியை மாடலாக்கி சில ஷாட்டுகளை எடுத்தேன் f2 இல் இந்த பழைய லென்ஸுகள் உருவாக்கித்தரும் ஷார்ப்னஸ் மற்றும் Bokeh உண்மையில் அருமையாக இருக்கின்றது.

f2 இல் இந்த பழைய லென்ஸுகள் உருவாக்கித்தரும் வண்ணங்கள், ஷார்ப்னஸ் மற்றும் போக்கே உண்மையில் அருமையாக இருக்கின்றது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

சரி அனுபவத்தினை பகிர்ந்தாகிவிட்டது, இதனை வைத்து வாசகர்களுக்கு என்ன நன்மைகள் என்ன சிரமங்கள் இருக்கின்றது என்பதை தெளிவுபடுத்தியாக வேண்டுமல்லவா?

இது குறித்து பிட் குழுவின் சக அட்மின்களான திரு.கருவாயன் சார்மதிப்பிற்குரிய ராமலக்ஷ்மி ஆகியோரிடம் தொலைபேசியினூடாக பேசி ஒருமித்த கருத்துக்களுடன் சில விஷயங்களை உங்களுக்கு தெளிவு படுத்துகிறோம்.

நன்மைகள்:

1.பழைய Vintageலென்சுகள் விலை மலிவாக கிடைக்கின்றது ,உதாரணமாக 85mm ,135mm Macro லென்சுகள்,Wide angle,Fisheye போன்ற புதிய லென்சுகளின் விலை மிக அதிகம்,ஆனால் இந்த M42 வகை பழைய Vintageலென்ஸுகள் விலை மலிவாக கிடைக்கின்றது.

2. Takumar,Rrevuenon, Jupiter போன்ற அந்த காலத்து கனவு லென்ஸுகள் புதிய லென்ஸுகளைக் காட்டிலும் மலிவாக கிடைப்பதால் இதன் மீது பற்று கொண்டவர்கள் வாங்கி பயன்படுத்தலாம்,மேலும் இந்தவகை லென்ஸுகள் உருவாக்கித்தரும் Swirly bokeh பிற லென்ஸுகளில் காண்பது அரிது.

3.புகைபடக்கலையை ஆர்வமுடம் பழக விரும்புவோர்கள் இதனை பயன்படுத்திப்பார்கலாம்.

4.Manual focus பழக நினைப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும்.

சிரமங்கள்:

1.இந்த வகை லென்ஸுகளைக்கொண்டு சுப நிகழ்ச்சிகளையும் Moving objectகளை படம் பிடிப்பது மிகவும் சிரமம்.

2.ஆட்டோ போகஸ் ஆகாததால் மேனுவல் போக்கஸிங் கடினமாக இருக்கும்.

3.Meter Reading வேலை செய்யாததால் உங்களின் அப்பச்சர் மற்றும் ஷட்டர் வேகத்தினை  நீங்களே தான் செட் செய்யவேண்டும்.

4.Nikon  பயனாளர்கள்  infinity focus correction உடன் கூடிய கன்வர்டர்களைத்தான் பயன்படுத்தமுடியும்.

5.நிறைய படங்கள் out of focusஆக வாய்ப்புகள் அதிகம்.

மேற்கண்ட சிரமங்கள் இருப்பினும் Portrait,Macro,Product புகைப்படக்கலையில் ஆர்வம் இருப்பவர்கள் இந்தவகை M42 Vintage Lensகளை மேனுவல் மோடில் கட்டாயம் பயன்படுத்தலாம்.

அன்புடன்,
நித்தி ஆனந்த்

Tuesday, January 7, 2014

வணக்கம்.

பாகம் ஒன்றில்  நாம் புகைப்படக்கலைஞர்களுக்கு பிற்சேர்க்கைக்குத் தேவைப்படும் அவசியமான 3 Blend mode களில் Multiply பற்றி பார்த்தோம். இந்த பாகத்தில் நாம் Screen Blend Mode பற்றி பார்க்க இருக்கிறோம். இந்த Screen Blend Mode ஆனது கறுப்பு நிறத்தோடு தொடர்புடையதாகும். ஆம் இது கறுப்பு நிறத்தை transparent ஆக மாற்றும் தன்மையுடையது.ஆக இந்த Screen Blend mode ஆனது Multiply க்கு அப்படியே நேர்மாறாக பயன்படக்கூடியது. சென்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போலவே கீழேயுள்ள படத்திலிருக்கும் மூன்று கட்டங்களை பாருங்கள்,இப்போது நான் இந்த படத்தின் Blend Mode ஐ Screen க்கு மாற்றுகிறேன்.என்ன ஆயிற்று பாருங்கள்!!! கருப்பு நிறக்கட்டம் காணாமல் போனதை பார்க்கலாம்.
ஆக Screen Blend Mode கருப்பு நிறத்தை transparent செய்வதால் Dark ஆக இருப்பது Bright ஆக மாறவாய்ப்புள்ளது அல்லவா? ஆக புகைப்படங்களோடு இந்த Blend Modeடை ஒப்பிட்டுப்பார்த்தால் Underexposed படங்களை இந்த Screen Blend Modeடைக் கொண்டு சற்று திருத்திக்கொள்ளலாம் என்பதை அறியலாம். கீழேயிருக்கும் படமானது நான் இத்தாலியின் மிலன் நகரம் சென்றிருந்தபோது எடுத்த படம்.இது சற்று Underexposed ஆக காணப்படுகிறது.
இதனை நான் போடோஷாப்பில் திறந்து முன்போலவே படத்தை டூப்ளிகேட் செய்துகொண்டு இந்த படத்தின் Blending Modeடை Screen க்கு மாற்றுகிறேன்.என்ன ஆனது பாருங்கள்!!சற்று வெளிச்சம் கூடி கூடியிருப்பதைப்பாருங்கள்.
ஆனால் உங்களது படத்தில் நீங்கள் விரும்பிய வெளிச்சமானது படத்தில் கிடைக்கவில்லை இன்னும் சற்று இருட்டாகவே காணப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுவோம்.இந்த சூழ்நிலையில் உங்களது Screen Blend Mode க்கு மாற்றப்பட்ட அந்த லேயரை மட்டும் டூப்ளிக்கேட் செய்துகொள்ளுங்கள் இன்னும் பிரகாசமாக மாறும்,ஆனால் இப்போது உங்களது படமானது நீங்கள் எதிர்பார்த்த அளவைவிட பிரகாசமாக கொஞ்சம் Overexposeஆக காணப்பட்டால்,அந்த லேயரின் Opacityயை சற்று குறைத்துக்கொள்ளுங்கள் இது உங்களது Personal Preference. 

[குறிப்பு:படத்தில் தேவையில்லாத அதிக வெளிச்சமான பகுதிகளை லேயர் மாஸ்க் பயன்படுத்தி நீக்கிக்கொள்ளுங்கள்.]
மேலும் Screen Blend Mode குறிப்பாக இரவு புகைப்படங்களில் மிகவும் உதவியாக இருக்கின்றது.அதாவது இரண்டு படங்களின் இரவு காட்சிகளை ஒரே படத்தில் இணைக்க இந்த Screen Blend Mode மிகவும் உதவுகிறது. கிழேயுள்ள இரண்டு படங்களை பாருங்கள் முதல்படம் பாரிஸ் Disneylandல் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட படம்.
இரண்டாவதுபடமானது வேறு இடத்தில் வேறு கேமராகொண்டு எடுக்கப்பட்ட ஒரு வானவேடிக்கை படம். முதல் படத்தின் இருண்ட வானத்தில் இந்த வானவேடிக்கையை நான் இணைக்க விரும்புகிறேன்.
எனவே இந்த இரண்டு படங்களையும் நான் போட்டோஷாப்பில் திறந்துகொண்டு முதல்படத்தை கீழேயும்,இரண்டாவது படத்தை மேலேயும் வைத்து மேல் லேயரின் Blend Modeடை Screenக்கு மாற்றி Free Transformசெய்துகொள்கிறேன்.இரு படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டதை பாருங்கள்.

Screen Blend Mode பற்றி நன்றாக தெரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அடுத்த பாகம் விரைவில்..
***
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff