Tuesday, January 7, 2014

Screen Blend Mode - படங்களைப் பிரகாசமாக்க, இரு படங்களை இணைக்க.. (பாகம் 2)

3 comments:
 
வணக்கம்.

பாகம் ஒன்றில்  நாம் புகைப்படக்கலைஞர்களுக்கு பிற்சேர்க்கைக்குத் தேவைப்படும் அவசியமான 3 Blend mode களில் Multiply பற்றி பார்த்தோம். இந்த பாகத்தில் நாம் Screen Blend Mode பற்றி பார்க்க இருக்கிறோம். இந்த Screen Blend Mode ஆனது கறுப்பு நிறத்தோடு தொடர்புடையதாகும். ஆம் இது கறுப்பு நிறத்தை transparent ஆக மாற்றும் தன்மையுடையது.ஆக இந்த Screen Blend mode ஆனது Multiply க்கு அப்படியே நேர்மாறாக பயன்படக்கூடியது. சென்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போலவே கீழேயுள்ள படத்திலிருக்கும் மூன்று கட்டங்களை பாருங்கள்,இப்போது நான் இந்த படத்தின் Blend Mode ஐ Screen க்கு மாற்றுகிறேன்.என்ன ஆயிற்று பாருங்கள்!!! கருப்பு நிறக்கட்டம் காணாமல் போனதை பார்க்கலாம்.
ஆக Screen Blend Mode கருப்பு நிறத்தை transparent செய்வதால் Dark ஆக இருப்பது Bright ஆக மாறவாய்ப்புள்ளது அல்லவா? ஆக புகைப்படங்களோடு இந்த Blend Modeடை ஒப்பிட்டுப்பார்த்தால் Underexposed படங்களை இந்த Screen Blend Modeடைக் கொண்டு சற்று திருத்திக்கொள்ளலாம் என்பதை அறியலாம். கீழேயிருக்கும் படமானது நான் இத்தாலியின் மிலன் நகரம் சென்றிருந்தபோது எடுத்த படம்.இது சற்று Underexposed ஆக காணப்படுகிறது.
இதனை நான் போடோஷாப்பில் திறந்து முன்போலவே படத்தை டூப்ளிகேட் செய்துகொண்டு இந்த படத்தின் Blending Modeடை Screen க்கு மாற்றுகிறேன்.என்ன ஆனது பாருங்கள்!!சற்று வெளிச்சம் கூடி கூடியிருப்பதைப்பாருங்கள்.
ஆனால் உங்களது படத்தில் நீங்கள் விரும்பிய வெளிச்சமானது படத்தில் கிடைக்கவில்லை இன்னும் சற்று இருட்டாகவே காணப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுவோம்.இந்த சூழ்நிலையில் உங்களது Screen Blend Mode க்கு மாற்றப்பட்ட அந்த லேயரை மட்டும் டூப்ளிக்கேட் செய்துகொள்ளுங்கள் இன்னும் பிரகாசமாக மாறும்,ஆனால் இப்போது உங்களது படமானது நீங்கள் எதிர்பார்த்த அளவைவிட பிரகாசமாக கொஞ்சம் Overexposeஆக காணப்பட்டால்,அந்த லேயரின் Opacityயை சற்று குறைத்துக்கொள்ளுங்கள் இது உங்களது Personal Preference. 

[குறிப்பு:படத்தில் தேவையில்லாத அதிக வெளிச்சமான பகுதிகளை லேயர் மாஸ்க் பயன்படுத்தி நீக்கிக்கொள்ளுங்கள்.]
மேலும் Screen Blend Mode குறிப்பாக இரவு புகைப்படங்களில் மிகவும் உதவியாக இருக்கின்றது.அதாவது இரண்டு படங்களின் இரவு காட்சிகளை ஒரே படத்தில் இணைக்க இந்த Screen Blend Mode மிகவும் உதவுகிறது. கிழேயுள்ள இரண்டு படங்களை பாருங்கள் முதல்படம் பாரிஸ் Disneylandல் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட படம்.
இரண்டாவதுபடமானது வேறு இடத்தில் வேறு கேமராகொண்டு எடுக்கப்பட்ட ஒரு வானவேடிக்கை படம். முதல் படத்தின் இருண்ட வானத்தில் இந்த வானவேடிக்கையை நான் இணைக்க விரும்புகிறேன்.
எனவே இந்த இரண்டு படங்களையும் நான் போட்டோஷாப்பில் திறந்துகொண்டு முதல்படத்தை கீழேயும்,இரண்டாவது படத்தை மேலேயும் வைத்து மேல் லேயரின் Blend Modeடை Screenக்கு மாற்றி Free Transformசெய்துகொள்கிறேன்.இரு படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டதை பாருங்கள்.

Screen Blend Mode பற்றி நன்றாக தெரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அடுத்த பாகம் விரைவில்..
***

3 comments:

  1. அருமையான பதிவு....thank u for sharing it up:))

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff