Wednesday, March 5, 2014

2014 மார்ச் போட்டி அறிவிப்பு

7 comments:
 
வணக்கம் பிட் மக்கா....நலந்தானா?

“ஏங்க ஆபிஸ் முடிஞ்சி வரும்போது மறக்காம கடைத்தெருக்கு போயி காப்பி தூள் வாங்கிட்டு வந்தாத்தான் இன்னைக்கு சாயங்காலம் உங்களுக்கு காப்பி”னு கன்டீஷன் போடுற இல்லத்தரசிகள், “ஏங்க உங்க ஆபீஸ்ல சாயங்காலம் ஒன் அவர் பர்மிஷன் சொல்லிடுங்க,நானும் எங்க ஆபிஸ்ல சொல்லிடுறேன் கொஞ்சம் சீக்கிரமா கிளம்பிட்டா வீட்டுக்கு போகிற வழியில கடைத்தெருக்கு போயிட்டு காய்கறி வாங்கிக்கிட்டு போயிடலாம்”னு  சொல்லுற மனைவிமார்கள். இந்த டயலாக் எல்லாம் நம்ம வாழ்கையோடு ஒன்றிவிட்டவைகள்...

என்னமோ கடைக்கு போனோமா,பேரம் பேசினோமா,பொருளை வாங்கினோமானு இல்லாம கொஞ்சம் அவர்களை நோக்கிய ஒரு சிறு பயணம்தான்,இந்த மாதம் நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் அசைன்மென்ட்.. சாரி சாரி.. தலைப்பு "சிறு வியாபாரிகள்".

சிறுவியாபாரிகளைப் படம் பிடிக்க அருமையான இடம் கடைத்தெரு தாங்க, காய்கறி வியாபாரியிலிருந்து கறிக்கடை வியாபாரி வரை ஒரே இடத்தில அருமையா படம் பிடிக்கலாம்.

சில மாதிரிப்படங்கள் இங்கே:

நித்தி ஆனந்த்:

‘கோலிசோடா உங்கள் சாய்ஸ்’


‘போட்டோ மட்டும் புடிக்கிற. வந்து போணி பண்ணுப்பா’



‘ஒரு ரூவாக்காக இவ்வளவு பேரம் பேசுறது சரியா தம்பி’



‘ஒரு போன் பண்ணுங்க. வீடு தேடி நானே வர்றேன்’

ராமலக்ஷ்மி:

“ஒடம்பு தளர்ந்தாலும் மனசுல தெம்பிருக்கு..”

“பஞ்சு மிட்டாய்.. அஞ்சு ரூவாய்”

வண்ணக் கனவுகள்:

“ரெண்டு ரூவாய்க்கா...?!”

ஆன்டன் க்ரூஸ்:

வீதி வீதியாய் விறகு வியாபாரம்..


போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித்தேதி: 20 - 3 - 2014

அன்புடன்,

நித்தி ஆனந்த்

7 comments:

  1. அனைத்தும் அருமை... முக்கியமாக :

    ஒடம்பு தளர்ந்தாலும் மனசுல தெம்பிருக்கு... + ரெண்டு ரூவாய்க்கா...

    கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Hi Could you share the weblink of the Picasaweb of photo collection, so that if required we can update the details of the photos.

    Vj

    ReplyDelete
  3. சிறப்பான படங்கள்.... இந்த மாதம் கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    ReplyDelete
  4. Hello Friends nan photography ku new persn plz Visit Flikr Link Then provide ur commnts...http://www.flickr.com/photos/117391494@N07/

    ReplyDelete
  5. i sent my hard working shop keeper

    ReplyDelete
  6. @Vijay A,

    https://picasaweb.google.com/111715139948564514448/201403#

    ஒவ்வொரு மாதமும் அந்தந்த போட்டி ஆல்பத்தின் லிங்க் ஸ்லைட் ஷோ_ ஆக பிட் முகப்பின் வலது மேல்பக்கம் இருக்கும்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff