Monday, December 31, 2007

வணக்கம் நண்பர்களே.
2008ல் கால் எடுத்து வைக்கும் உங்கள் அனைவருக்கும் (PIT) "தமிழில் புகைப்படக்கலை"யின் சார்பில், வாழ்த்துக்கள்.
புதிய வருடத்தில் உங்கள் வாழ்வு மேன்மேலும் வளம் பெறட்டும்.

சென்ற மாதப் போட்டியில் 'மலர்கள்' தலைப்பில் வந்து குவிந்த அழகிய படங்களை எல்லாம் பார்த்திருப்பீர்கள். அசத்தி இருந்தார்கள் அசத்தி!
நல்ல படங்கள் எடுக்க விலை உயர்ந்த கேமராவெல்லாம் தேவையே இல்லை. நல்ல கலைப் பார்வையும், கற்பனா வளமும் இருந்தால் போதும் என்று உறுதிப்படுத்தி இருந்தார்கள் நம் சக பதிவர்கள்.
பரிசு பெற்ற எருகம்பூவும், ஜீன்ஸ் பூவும், ஸைட்-அடித்த வெள்ளைப் பூவும் கொள்ளை அழகு!


படத்தை கட்டம் கட்டுவதிலும் (composition), பிற்தயாரிப்பிலும் நல்ல முன்னேற்றம் நம் அனைவர் படங்களிலும் கண் கூடாகத் தெரிகிறது.

ஒருவரைப் பார்த்து ஒருவர் நம் நுட்பத்தை மெருகேற்றி வருகிறோம். போட்டி என்ற போதிலும் கூட நமக்குள் இருக்கும் ஆரோக்ய சூழலே ஒவ்வொரு மாதமும் இந்த பக்கங்களை சுவாரஸ்யமாக்குகின்றன.

வரும் புத்தாண்டில் PIT உபயத்தில், நாம் அனைவரும் புகைப்படம் எடுத்தலின் அடுத்த கட்டத்துக்கு நகரச் செய்யும் இந்த அழகான கூட்டு முயற்சியை தொடருவோம்.

சரியா? இனி, ஜனவரி போட்டிக்கான தலைப்பு, விதிமுறைகள் எல்லாம் பாப்பமா?
அதுக்கு முன்னாடி, சில படங்களப் பாருங்க: (படங்கள் உபயம்: An&, CVR, Flickr, சர்வேசன்)





எப்படி இருக்கு படமெல்லாம்? நல்லாயிருக்கா?
இந்த மாசப் போட்டியின் தலைப்பு ஊகிக்க முடிஞ்சுதா?

மேலப் படிங்க :)

ஜனவரி மாதம் நீங்க புகைப்படம் எடுக்க வேண்டிய தலைப்பு 'அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்' (everyday artifacts).
அதாகப்பட்டது, காலைல எழுந்து ராத்திரி தூங்கர வரைக்கும் தினசரி உபயோகப்படுத்தும் பொருள்களை ஜனவரி மாசப் போட்டிக்காக, தேடித் தேடி க்ளிக்க வேண்டியதுதான்.
உ.ம்: மேலே படத்தில் உள்ள டூத் ப்ரஷ்ஷோ, ஸோப்பு, சீப்பு, கண்ணாடி, கிச்சன் சாமான், பெட்ரூம் சாதனம், இந்த மாதிரி எதை வேணும்னாலும் பிடிக்கலாம்! நோ லிமிட்ஸ்!

சும்மா, அடிச்சு ஆடுங்க!

தலைப்பு - அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் (Everyday artifacts)
நடுவர்கள் - சர்வேசன் மற்றும் வற்றாயிருப்பு சுந்தர்
படங்கள் அனுப்பும் முறை - பதிவிட்டு விட்டு ,பின்னூட்டத்தில் அறிவிக்க வேண்டும்.
(You just have to publish your pictures in your blog and give the link as comment for the post! :-).If you dont have a blog,links to photo publishing sites like flickr are Ok )
உங்கள் பதிவில் படங்களின் slideshow போடுவதை விட நேரிடையாக படத்தை பதிவிட்டால் நாங்கள் எடுத்துக்கொள்ள வசதியாக இருக்கும்.
போட்டிக்கான விதிகள்:அதிகபட்சம் இரண்டு படங்கள் போட்டிக்காக சமர்பிக்கலாம்.எதுவும் சொல்லாத பட்சத்தில் இடுகையில் உள்ள முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
காலம் - ஜனவரி 1 முதல் 15
முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்- 25 ஜனவரி 2008

பின்னூட்டத்தில், படத்தின் URLலையும் கொடுத்தால் எங்களுக்கு வேலை சுலபமாகும்.
உ.ம்:
பதிவு: http://something.blogspot.com/2007/12/post1.html
படம்1: http://somewhere.com/pic1.jpg
படம்2: http://somewhere.com/pic2.jpg


புகைப்படத்துக்கு ஒரு நல்ல தலைப்பையும் வையுங்கள். சுவாரஸ்யம் கூடும். (மதிப்பெண் படத்துக்குத்தான், தலைப்புக்கல்ல). :)

அன்றாடப் பொருட்கள் என்னென்னல்லாம் எடுக்கலாம் என்று பார்க்க Flickr பக்கங்களை புரட்டிப் பாருங்கள்.

நன்றி!

வாழ்க! வளர்க!

மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Friday, December 28, 2007

என்னடா... போட்டி முடிவெல்லாம் அறிவிச்சப்புறம் இந்த பதிவை போடறேனேன்னு பார்க்கரீங்களா... அது வெறே ஒண்ணுமில்லை.. எல்லாரும் க்ரிஸ்டுமஸ் - புத்தாண்டு விடுமுறைக்கு டாடா போவதுக்கு முன்னாடி போட்டி முடிவை அறிவிச்சிடணும்ன்னு பார்த்தோம்.. அவ்வளவுதான்.

இதுவும் ஒரு slide show தான்.

ஒவ்வொரு படத்துக்கும் அந்த படத்திலே இருக்கும் சிறப்பம்சம் மட்டும் சொல்லியிருக்கு.. அந்த படங்களில் என்ன குறைன்னு இப்போதைக்கு சொல்லலை.. புகைப்படக்கலை சார்ப்பா வரும் பாடங்களில் அந்தந்த ப்டங்களுடன் என்ன மாற்றம் செய்திருந்தால் மெருகேற்றியிருக்கலாம்ன்னு சொல்லப்படும். ஆனாலும் பொதுப்படையான காரண்ங்கள் சில

    ஒவ்வொரு படமும் fulls screen ல் பார்த்தப்போது
  1. clarity கம்மியா இருந்தது

  2. crispness இல்லை

  3. distraction... இருந்தது... குறுக்கே கோடு மாதிரி

  4. தனிப்பட்ட முறையிலே மலர் அருமயா இருந்தாலும்... picture composition கூட ஒத்துப்போகலை

  5. முழுமையான மல்ர்களின் படங்களில்.. மேலே / கீழே .. வெட்டுப்பட்ட மாதிரி framing

  6. அரும்போட மலர் இருந்தா நல்லா தான் இருக்கும்.. ஆனால் அரும்பு கொம்பு மாதிரி நீட்டிகிட்டு இருந்தா அது ஒரு distraction

  7. Blogger ன் default size லே பார்க்கும் போது அருமயா இருக்கும் படம்.,.. full screen லே அவ்வளவா எடுபடலை

  8. சில படங்கள் ரொம்ப small size .. அதனால full screen லே பார்க்க போதிய field of vision இல்லை

  9. Sparse distribution of cluster.. ( இதை தமிழில் எப்படி சொல்லன்னு எனக்கு தரியலை)

  10. சில படங்கள் அதன் timely capture க்காக மட்டுமே இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது


எல்லாருக்கும் வரும் புத்தாண்டுக்கு PiT சார்பாக.. எ வெரி ஹேப்பி ந்யூ இயர்... எஞ்சாய்

Friday, December 21, 2007

போட்டியில் பங்கெடுத்த அனைத்து படங்களையும் பார்வையிட


இந்த மாசம் PiT போட்டி சும்மா கம-கம ன்னு இருந்தது.. எவ்வளவு வகையான மலர்கள்?!... நாம தினமும் பார்க்கிர ரோஜா , ஜவந்தி, செம்பருத்தின்னு ஆரம்பிச்சு, சூரியகாந்தி, தென்னம்ப்பூ , எருக்கம்பூ , சிலவகை காட்டுப்பூ ன்னு கதம்பத்திலே மலர்கள் சேர.. அவரவர் இருக்கும் பிரதேசத்திலே மட்டுமே பார்க்க கிடைக்கும் பலவகை exotic மலர்கள் ன்னு எல்லாரும் அசத்திட்டீங்க போங்க.

போட்டிக்கு வந்த 104 படங்களில் 55 படங்கள் அருமை , அதிலும் முக்கிய 26 படங்கள் .. ஒவ்வொண்ணுக்கும் தனிதனியா ரசிச்சு கமண்ட் எழுதலாம் .. இனிக்கி போட்டி முடிவு மட்டும் தான்.. ஸோ .. ரசித்த படங்கள் குறித்து அடுத்த பதிவிலே எழுதறேன்... எல்லா போட்டியாளர்களையும் ஒரு விஷயத்திலே பாராட்டியே ஆகணும்.. ஆர்வம் மட்டும் இல்லை... இத மாத போட்டி ரொம்பவும் pro-active ஆ இருந்தது.

பரண்லே பழைய படங்கள் இருந்தாலும்... நேரம் செலவு பண்ணி படம் எடுத்தது மட்டும் இல்லாமல், பிற்தயாரிப்பும் பண்ணி போட்டிருக்காங்க. இது உண்மையிலேயே ஒரு pro-active approach தான்.. Pro-active approach இருக்கும் Ametures தான் நல்ல professionals ஆ வருவாங்க என்பது என்னோட கணிப்பு

சரி.. இந்த மாத முடிவுகளை பார்ப்போமா ? ? ?..
முதல் பரிசு - நந்து
இரெண்டாவது பரிசு - ஒப்பாரி
மூன்றாவது வது பரிசு -பிரியா
முதல் பரிசு - நந்து
எருக்கம் பூ! நாம் தினமும் பார்க்கும் பூ தான்.. ரோட்டோரமா தான் அதிகமா பார்க்க முடியும். சாதாரணமா வீட்டிலே வைக்க மாட்டாங்க.. ஆனா பிள்ளையார் சதுர்த்திக்கு மட்டும் இரு எருக்கம் மாலைக்கு, யானை விலை சொல்லுவாங்க.. கேட்டா.. பிள்ளையாருக்கு போடரதுக்கு யானை விலை குடுத்தா தப்பில்லேன்னு லாஜிக் :-)

Jokes, apart...மொத்த 104 படத்திலே இதை பார்க்கும் போதே சும்ம கவனத்தை சுண்டி இழுத்த படம் இது... பச்சை பசேல்ன்ன்னு இலை, 2 shades of purple ரொம்ப துல்லியமா இருக்கு , Background அற்புதமா blur பண்ணியிருக்கு , excellent DOF.
Both technically and Aesthetically இந்த படம் தான் முதல் இடம்ன்னு தீர்மானமாயிடுச்சு .இந்த பூவை வேறே எந்த angle லே எடுத்திருந்தாலும் இலை நடுவிலே வந்து மறைக்கிற மாதிரி தான் வரும்ன்னு நினைக்கிறேன்.. Nandu has taken the best possible shot. Great quality in the sharpness of the picture too
இரெண்டாவது பரிசு - ஒப்பாரி

இந்த பூவை பார்த்தா அப்படி ஒண்ணும் ரொம்ப exotic ஆ இல்லை.. Petal -expanse இருக்கும் மலராகவோ தெரியலை.. குட்டியூண்டா தான் இருக்கும்ன்னு என்னோட யூகம் ( இது சரியா இல்லையா ன்னு ஒப்பாரி தான் சொல்லணும்)..

ஆனா இந்த படம் ரெண்டாவது இடத்துக்கு வந்ததுக்கு முக்கிய காரணம் .. அவருடைய imaginative-setup.. அதாவது.. dark background வரணும்ன்னு ஜீன்ஸ் பேண்ட் மேலே வச்சு எடுத்திருக்காரு..
அது மட்டும்மில்லே.. டீச்சர் சொன்னதை அக்ஷரம் பிசகாம பூ மேலே "தண்ணி"யெல்லாம் தெளிச்சு ஒரு "மூட்" க்ரியேட் பண்ணி எடுத்திருக்கார் (..நான் எந்த உள்குத்தும் சொல்லலை... கும்முறவங்க கும்மினா நான் பொறுப்பில்லை).. இந்த படத்தை பார்த்ததும் ஒரு Melonchalic -feel இருக்கு ( Melencholy தமிழில் என்ன சொல்ல ன்னெ எனக்கு தெரியலை)
மூன்றாவது பரிசு - பிரியா

அந்த இதழ் ஒவ்வொண்ணையும் கூர்ந்து பாருங்க... எப்படி பிடிச்சு வச்சு இஸ்த்திரி போட்ட மாதிரி இல்லே..ஒவ்வொரு இதழும் மனசுக்குள்ளே 'சரக்' 'சரக்' ன்னு ஒரு army மாதிரி அணிவகுத்து நடக்குதோன்ன்னு தோணவச்சுது..
இந்த CRISPness in Quality தான் இந்த படத்தை மத்த படங்களை கொஞ்சம் ஓரம்கட்டி 3 வது இடத்துக்கு ஜம்முனு வந்து போஸ் குடுக்குது!
ஜோடி மலர்களை எடுக்கும்போது பொதுவா எல்லாரும் ஒண்ணுக்கொண்ணு பார்ப்பது மாதிரி எடுப்பது தான் பிரபலமான perspective. ஆனா இங்கே பாருங்க.. ஒண்ணு ஹீரொவாட்டம் தெனாவட்டா கேமேராவை பார்த்து சிரிக்குது.. பக்கத்திலே இன்னொண்ணு கிராமத்து ஹீரோயினாட்டம் ஒரக்கண்ணாலே கேமராவையும் ஹீரோவையும் மாத்தி மாத்தி பார்க்கிற மாதிரி இல்லே?!.. பிரியா தெரிஞ்சே செஞ்சாங்களா.. இல்லே.. இந்த மாதிரி அமைஞ்சுதா ன்னு அவங்களா சொன்னா தான் உண்டு.. என்ன சொல்றீங்க பிரியா ? ?

முதல் பரிசு - நந்து
இரெண்டாவது பரிசு - ஒப்பாரி
மூன்றாவது வது பரிசு -பிரியா

போட்டியில் வெற்றி பெற்ற மூவர்க்கும் PiT சார்பாக வாழ்த்துக்கள்... பங்கெடுத்தவர்கள் எல்லாருக்கும்.. Better luck next time.. உங்க கிட்டே என்னென்ன முன்னேற்றங்கள் இருக்குன்னு வரும் பதிவுகளில் சொல்லப்படும்..(நீங்கள் சப்மிட் பண்ணின படங்களை வச்சு தான் சொல்லுவோம்.. so that you can relate better)

போட்டியில் பங்கெடுத்த அனைத்து படங்களையும் பார்வையிட

Wednesday, December 19, 2007

முதலில் இந்தப் போட்டியில் போட்டியிடாமலே ஜெயித்த ஒருவர் இருக்கிறார் என்றால் நடுவர் தீபாதான் அவர்! ( பெங்களூரில பயங்கர குளிருன்னு படிச்சேன்... அதுனாலதான் அவரின் உடல்நிலை கருதி சின்ன ஐஸ் உடன் விட்டுடறேன்!). இவ்வளவு நேர்த்தியாக ஒரு போட்டியை நடத்துவது எப்படி என்று எங்களுக்கு பாடம்எடுத்துவிட்டார் என்றே நினைக்கிறேன்! நன்றி தீபா!

வந்த படங்களை நேற்றுத்தான் ஓடவிட்டு பார்க்கமுடிந்தது. சில படங்கள் புதியவர்களின் படங்கள் என்று சட்டென்று தெரிந்தது... ஆனால் அவர்களின் ஆர்வம் தானே இப்போட்டியின் வெற்றி! மேலும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றுவரும் இம்சை, ஒப்பாரி, சத்யா, வல்லிசிம்ஹன், முத்துலட்சுமி மற்றும் பலரின் படங்களில் தெரியும் முன்னேற்றம் எங்களை மகிழ்ச்சிகொள்ள வைக்கிறது. இதனாலேயே டாப்டென் என்றெல்லாம் முன்னறிவிக்காமல் நேரடியாக முடிவுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் சென்றுவிடலாம் என்று முடிவுசெய்துள்ளோம்! முடிவுடனே டாப் 10 படங்களும் அறிவிக்கப்படும்!

அப்புறம் நம்ம புதுவரவுகள்! கலக்கீட்டீங்க போங்க! அதிலும் சில படங்கள் டாப் ஸ்லாட்டுக்கு போட்டிபோடுதுன்னா பாத்துக்கங்க! அது சரி ஒரு முக்கியமான விசயம்.. முதலில் நாங்க டெக்னிகள் விசயங்களான ஃபோகஸ், அபெர்சர் ல்லாம் சரியாக வந்திருக்குதான்னு பாத்ததுல சில அருமையான கம்போசிசன் இருக்குற படங்கள் கூட சார்ப்னெஸ் இல்லாமஏமாத்திடுச்சு. எனவே அடுத்தமுறை டெக்னிகளா கொஞ்சம் நச் நு கலர் காண்டிராஸ்ட் சார்ப்னெஸ் இருக்குற படங்களா அனுப்புங்க! அப்புறம் கம்போசிசன் டிஸ்ட்ராக்சன் இருக்கிற சில நல்ல படங்கள் கூட குறைந்த மதிப்பீடுகளை பெற்றுள்ளன! இவற்றையெல்லாம் நிச்சயம் நான் போட்டி முடிஞ்சபிறகு விளக்குவேன்... ( இந்த பொறுப்பு தீபா என்கிட்ட விட்டுட்டு தப்பிச்சுட்டாங்க! )



அப்புறம் எனக்கு ஒரு சின்ன வருத்தம்.. என்னால கலந்துக்க முடியலையேன்னு.. இருந்தாலும் நான்எடுத்து வச்சிருந்த ரெண்டு ப்டங்களை உங்கள் பார்வைக்கு வைத்து இப்பதிவை முடித்துக்கொள்கிறேன். கலந்துகொண்ட புகைப்பட ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த நன்றி!

Sunday, December 16, 2007

UPDATE:- COMMENTS HAVE BEEN CLOSED FOR THIS POST ::: 18- Dec-07 , 1.00 pm

நேத்தொட (dec 15) இந்த மாதம் போட்டிக்கான படங்கள் சம்பிட் பண்ணவேண்டிய கெடு முடிஞ்சுபோச்சு. ஸொ.. இன்னியிலிருந்து நோ நியூ எண்ட்றீஸ். இந்த பதிவு முக்கியமா இந்த போட்டியில் படங்களை சப்மிட் பண்ணினவங்களுக்கு மட்டுமே... ஒரு கிரேஸ் பீரியட் மதிரின்னு கூட சொல்லலாம்.
எல்லாரும் அப்பப்போ யாரு என்ன படங்கள் சப்மிட் பண்ணியிருக்காங்கன்னு slide show லே பார்த்துகிட்டு இருப்பீங்க.( விருப்பப்பட்டா slideshow ல் வலதுபக்கமா இருக்கும் "more" ங்கிர லின்க்கை க்ளிக்கி உங்க கமெண்ட்டை டைரெக்ட்டா slidesheow லேயே குடுக்கலாம்)..

போட்டியிலே பங்கெடுப்பவர்களுக்கெல்லாம் ஒரு ரிக்வுஸ்ட்... That that person - That that photo இருக்கா ன்னு ஒரு முறை செக் பண்ணி பின்னூடம் போடுங்க...(ஒரு கண்பர்மேஷன் மாதிரின்னு கூட சொல்லலாம்)

கீழே சொல்லியிருக்கும் காரணங்கள் இருந்தால் கண்டிப்பாக பின்னூடத்தில் தெரிவிக்கணும்.... அப்புறமா .. "நான் சரியா தான் சொன்னேன்..நீங்க தான் தப்பா புரிஞ்சுகிட்டீங்க "...ன்னெல்லாம் சொல்ல கூடாது... இது தான் எல்லாதுக்கும் லாஸ்ட் சான்ஸ்


  1. By default முதல் ரெண்டு படங்கள் தான் சேர்க்கப்பட்டுள்ளன


  2. ஒருவேளை நீங்க என்ன படம் எடுத்துக்கலாம்ன்னு சொல்லியிருப்பீங்க .. but நான் தான் அதை சரியா கவனிக்கலை


  3. பின்னூடத்திலே உங்க பதிவின் லின்க்கை குடுத்தப்புறம் ... உங்க பதிவிலே படங்களை மாற்றி போட்டிருக்கலாம்


  4. 2 க்கும் மேலே படங்கள் பதிவிலே இருந்தால்.. இது ஒரு பைனல் சான்ஸ்.. கரெக்ட்டா எந்தெந்த படங்களை ஆட்டத்துக்கு எடுத்துக்கணும்ன்னு சொல்ல

நாளையோட இந்த பதிவுக்கு பின்னூடம் மூடப்படும்
Comments shall be closed for this post on17-Dec-07 :: 4.00 pm


அதுக்குள்ளே எல்லாரும் அவங்க அவங்க Corrections in selection (மட்டும்) சொல்லிடணும்... ஏன்னா அதுக்கப்புறம் தான் நானும் செல்லாவும் எங்க வேலைய்யை ஆரம்பிக்கணும்
போட்டிக்கான படங்கள்:
  1. குட்டீஸ் கார்னர் (இம்சை)
  2. கோபாலன் ராமசுப்பு
  3. பிரபு ராஜதுரை
  4. வல்லிசிம்ஹன்
  5. சாலை ஜெயராமன் -அ.)|ஆ.)
  6. வீர சுந்தர் -அ.) | ஆ.)
  7. துளசி கோபால்
  8. ஒப்பாரி
  9. அப்பாவி
  10. கோவை சிபி
  11. பிரபாகரன் சம்பந்தம்
  12. குசும்பன்
  13. Analyzt
  14. சத்தியா
  15. ப்ரியா -அ.) | ஆ.)
  16. சூர்யா
  17. பூங்கி (1 & 2்)
  18. வின்செண்ட்( 1 & 2)
  19. பொடியன்
  20. ஜவஹர்
  21. Bhagi
  22. உண்மை
  23. மருதம்-அ.) | ஆ.)
  24. அல்வாசிடி விஜய்
  25. ஹரன்பிரசன்னா
  26. ஸ்ரீலதா
  27. நாதஸ்
  28. அறிவன்-அ.) | ஆ.)
  29. அம்பிகா - அ |
  30. தார்மிகா- அ |
  31. கார்த்திகேயன்
  32. கைப்புள்ள (1&5)
  33. விசேஷ்- அ |
  34. இலவசகொத்தனார்

  35. முத்துலெட்சுமி (1 &5)

  36. ஜே.கே
  37. ரிஷான் ஷெரீஃப்
  38. ஆதி
  39. சுகவாசி
  40. மோகன்தாஸ (3 & 7)
  41. பரமேஸ்வரி
  42. வற்றாயிருப்பு சுந்தர்
  43. நட்டு
  44. லொடுக்கு
  45. கானகம்
  46. தேவ்
  47. டிபிசிடி
  48. சிவா
  49. நந்து
  50. நாகை சிவா
  51. சூரியாள்
  52. பெருசு 6 & 7
  53. அனுசுயா

போட்டியில் ஆற்வம் காட்டிய எல்லாருக்கும் பெஸ்ட் ஆப் லக்... keep your fingers crossed

UPDATE:- COMMENTS HAVE BEEN CLOSED FOR THIS POST ::: 18- Dec-07 , 1.00 pm

Saturday, December 15, 2007

புகைப்படத்தில் தேவையான பகுதியை மட்டும் வண்ணத்திலும் தேவையற்ற பகுதிகளை கருப்பு-வெள்ளையாக மாற்றுவதன் மூலம் வண்ணப் பகுதிக்கு பார்வையாளரின் கவனைத்தை எளிதில் ஈர்க்க முடியும்.

இந்த படத்தில் முக்கிய பகுதி மஞ்சள் நிற சூரியக் காந்தி




பார்வையாளரின் கவனத்தை பூவின் மீது உடனடியாக விழ வைக்க பூவைத் தவிர மற்ற பகுதிகளை கறுப்பு வெள்ளைக்கு மாற்றி இருக்கும் படம் இது.



இதை செய்வது மிக எளிது. இணையத்தில் இலவசமாய் கிடைக்கும் GIMP இல் செய்யும் முறை .


GIMP ல் படத்தை திறவுங்கள். ( File->open )

இதுப் போன்ற மூன்று சாளரங்கள் திறக்கப்படும். Layers திறக்கபடாவாவிட்டால் ( Ctrl+L) மூலம் அந்த பகுதியையும் திறக்கச் செய்யுங்கள்.




layers பகுதியில் Background என்ற பெயரோடு படத்தின் மூலம் இருக்கும். இந்த போன்று மற்றுமொரு லேயரை உருவாக்க , Duplicate Layer என்கிற இந்த பொத்தானை அமுக்கவும்





Background Copy என்ற பெயரில் ஒரு புதிய லேயர் உருவாகும். இந்த புதிய லேயர் தேர்ந்து எடுக்க அந்த பெயரின் மீது க்ளிக்கவும். தேர்ந்து எடுக்கப்பட்ட லேயர் நீல நிறத்துக்கு மாறும்



இப்போது இந்த புதிய லேயரை கருப்பு வெள்ளைக்கு மாற்ற வேண்டும். இதை செய்ய Destaurate தேர்வு செய்யுங்கள். இது ( Layer-> colours -> Desaturate ) என்ற இடத்தில் இருக்கும்.





இப்போது நமக்கு தேவையான வண்ணப் பகுதியை மேலேயுள்ள கருப்பு வெள்ளைப் பகுதியில் இருந்து நீக்க வேண்டும். இதை செய்ய எளிய வழி, Eraser தேர்ந்து எடுக்கவும்.




இனி தேவையான பகுதிகளை அழிக்க வேண்டியதுத்தான் பாக்கி. அழிக்க அழிக்க கீழேயுள்ள படத்தின் முலத்தில் உள்ள வண்ணப்பகுதி வெளிப்பட ஆரம்பிக்கும்.





அவ்வளவுத்தான். ரெடி. இனிப் படம் காட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான்.

Eraser உபயோகித்து படத்தை அழிக்காமல், Layer Mask மூலம் எப்படி செய்வது என்பது வீட்டுப்பாடம் !

(இது ஏற்கனவே விக்கிபசங்களில் எழுதியதின் மறுபதிப்பு. இந்த இடத்தில் இருப்பது பொருத்தமாக இருக்கும் )

Monday, December 10, 2007

இணையத்திலும் சரி பல புத்தகங்களிலும் சரி, சில புகைப்படங்கள் நமது கவனத்தை ரொம்பவே ஈர்க்கும்.
சாதாரணமாய் நாம் எடுக்கும் புகைப்படங்களிலிருந்து இவையின் தரம் ரொம்பவே அதிகமாய் இருப்பது ஒரு காரணம்.

ஒரு கவித்துவமான காட்சி அமைப்பும், ஒவ்வொரு 'பிக்ஸலின்' ஜொலிப்பும் இந்த படங்களின் ப்ரத்யேகதைகள்.

உதாரணத்துக்கு, இணையத்திலிருந்து சில படங்களைப் பாருங்கள். பிறகு விஷயத்துக்கு வருகிறேன்.




என்னங்க படம் வித்யாசமா இருக்குல்ல? ஜிவ்வ்வ்வுனு இழுக்குதுல்ல?

சாதாரணமா ஒரு படத்த எடுக்கும்போது, அந்த காட்சியில் இருக்கும் வெளிச்சத்தின் தன்மை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் இருக்கும். உதாரணத்துக்கு, ஒரு மலையும், அதன் பின்னணியில் இருக்கும் வானத்தையும் சேத்து படம் பிடிக்கணும்னு முயற்சி பண்ணீங்கன்னா, வானம் ரொம்ப பளிச்னு இருக்கும், மலை இருட்டா இருக்கும். இது ரெண்டுத்தையும், அதன் தன்மை பிசகாமல் படத்தில் கொண்டு வருவது ரொம்ப கடினம்.

வானம் எடுக்க exposure கம்மியா வைக்கணும், சற்றே இருண்ட மலையை எடுக்க அதிக exposure வைக்கணும். குத்து மதிப்பா வெச்சு எடுத்தீங்கன்னா, ரெண்டுல ஒண்ணு, கொஞ்சம் அழுத்தம் கம்மியா தான் படத்தில் பதியும்.

என்ன மாதிரி கத்துக் குட்டிகளுக்கு, இது ஒரு பெரிய விஷயம் இல்ல. வந்த வரைக்கும் போதும்னு க்ளிக்கிட்டு வந்துருவோம்.
ஆனா, இதே தொழிலா செய்றவங்களும், அதீக ஆர்வம் உள்ளவங்களும், ஒரு படி மேல போய் முயற்சி பண்ணுவாங்க.
இவங்க, வானத்தை தனியா ஒரு படம் பிடிப்பாங்க, அதுக்கு தேவையான exposure வச்சு. அடுத்து, மலைய தனியா அதுக்கு தேவையான exposure வச்சு படம் புடிப்பாங்க.
அப்பரம் ரெண்டையும் ஒட்டி ஒரு படம் ஆக்குவாங்க. exposure-blending எனப்படும், இந்த யுக்தி அருமையான படங்களைத் தரும்.

இதே வரிசையில், டிஜிட்டல் உலகில் உபயோகப்படுத்தும் இன்னொரு யுக்திக்கு HDR என்று பெயர். High Dynamic Range என்பதன் சுருக்கமே HDR. மேலே நான் கொடுத்துள்ள படங்கள் HDR நுட்பம் உபயோகித்து 'செய்யப்பட்டவை'யே.

HDR நுட்பம், 1997 வருடத்திலிருந்து இருந்தாலும், டிஜிட்டல் ப்ரபலம் அடைந்த பின்னர், இதன் உபயோகம் அதிகரித்துள்ளதாம்.

ஒரு காட்சியை, பல விதமான exposureல் எடுத்துவிட்டு, எல்லா படத்தையும் சேர்த்து கலந்து, 'நச்'னு ஒரு படம் உருவாக்கும் முறையே HDR.

கார் ஓட்டக் கத்துக்கும் போது, காரோட engine எப்படி வேலை செய்துன்னெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல. எத எங்க மெதிச்சு, எப்படி சுத்தினா வண்டி நகுரும்னு தெரிஞ்ஜா போதும். அதே போல், HDRன் technical விளக்கங்கள் எல்லாம் பார்ப்பதைவிட, அது எப்படி practicalஆ உபயோகிப்பது என்பதை தொபுக்கடீர் என்று குதித்துப் பார்ப்போம் (technical விளக்கங்கள் எல்லாம் எனக்கும் ரொம்ப தெரியாது, என்பதை நாசூக்கா சொன்னா புரிஞ்சுக்கங்கப்பா :) )

சரி, இனி HDR உபயோகித்து, 'ஜிவ்வ்வ்வ்வுனு' இழுக்கும் படங்கள் எடுப்பது எப்படீன்னு பாக்கலாம்.

இதுக்கு கைவசம் என்னென்ன தேவை?
1) DSLR camera (மற்ற டிஜிட்டல் கேமராவில் AEB வசதி இருந்தால் அதையும் உபயோகிக்கலாம்).
2) Tripod - முக்காலி
3) PhotoMatix மாதிரி ஒரு மென்பொறுள்

இனி எப்படி படம் எடுப்பதுன்னு பாப்போம்.
எடுக்க நினைக்கும் காட்சிக்கு ஏற்றார் போல் முக்காலியை வைத்து, அதற்கு மேல் கேமராவை வைக்கவும்.
கேமராவில், AEB modeஐ தேர்ந்தெடுத்து, exposure -2, 0, +2 என்று வைத்துக் கொள்ளவும். (Program modeல், menu வுக்கு போனால், AEB தென்படும்).
இப்படி பண்ணா என்னாகும்னா, ஒரு காட்சிய முதல் முறை க்ளிக்கும்போது, அந்த காட்சிக்கு கம்மியான exposure கொடுத்து பிடித்துக் கொள்ளும். அடுத்த முறை க்ளிக்கும் போது, 'சாதாரண' exposureல் பிடித்துக் கொள்ளும். அதற்க்கு அடுத்த முறை, ஜாஸ்தியான exposure வைத்து எடுத்துக் கொள்ளும்.

வெச்சாச்சா? இன்னும் என்ன தாமதம்? இனி, உங்க காட்சிய, மூணு தடவ படம் புடிங்க.
முதல் படம் இருட்டாவும், ரெண்டாவது சுமாராவும், மூணாவது வெளிச்சமாவும் வரும். இந்த மாதிரி.


இதுவரை புரிஞ்சுதா?
கம்மியான exposureல் எடுக்கும்போது, படத்தில் அதீக வெளிச்சமான 'பல்பு' வெளிச்சம், நல்ல படியா படத்தில் பதியும்;
அதே மாதிரி, ஸோஃபாவின் பின் புறம், இருண்டிருப்பதால், அதீக exposure வைத்து எடுக்கும்போது, ஸோஃபாவின் முழு விவரமும் படத்தில் பதியும்.

சரி, இப்ப மூணு படத்த வச்சுக்கிட்டு என்ன பண்றது?
அதுக்குத் தான் PhotoMatix செஞ்சு வச்சிருக்காங்க.

PhotoMatixஐ தொறங்க.
Menuல் 'HDR - Generate' க்ளிக்கி, உங்கள் மூன்று படங்களையும் தெரிவு செய்து, OK கொடுங்கள்.
கொடுத்தாச்சா?
PhotoMatix இந்த மூணு படத்தையும், ஆராஞ்சு, ஒவ்வொரு பிக்ஸலிலும் (pixel) 'சிறந்த' pixelஐ தேர்ந்தெடுத்து, எல்லா விவரங்களும் பளிச்சென தெரியும் விதத்தில், ஒரு படத்தை உருவாக்கித் தரும்.
இப்படி வரும் படத்தை, PhotoMatixல் உள்ள Tone-Mapping என்ற option உபயோகித்து, மேலும் மெருகேற்றி, ஒரு நல்ல படத்தை உருவாக்கலாம்.

மேலே உள்ள மூணு படமும், கலந்து கலக்கி, மசாலா போட்டு, Tone Mapping பண்ணா இப்படி கிடைச்சுது.


ஒரே காட்சியை மூன்று முறை எடுத்துக் கலப்பதால்,இந்த நுட்பம், அசையும் பொருளுக்கு உபயோகித்தல் கடினமானது.

மத்தபடி, ப்ரொஃபஷனலா ஒரு படத்த மாத்தணும்னா, இந்த யுக்தி கை கொடுக்கும்.

நானும் கத்துக் குட்டி, அதனால, என் படத்துல பெரிய 'பன்ச்' இருக்குதான்னு தெரியல.

ஜாம்பவான்களின், மேலும் சில படங்கள் கீழ போட்டு, நிறைவு செய்கிறேன்.
குறை நிறை சொல்லுங்க.
நீங்களும் இந்த நுட்பத்தை முயன்று, படத்தை அரங்கேற்றுங்கள்!
வாழ்க HDR!

மேல் விவரங்களுக்கு, இங்கே செல்லவும்!
கேள்விகள் இருந்தால் கேளுங்க. சரியா புரியலன்னாலும் சொல்லுங்க!





;)

Friday, December 7, 2007

இதோட 18 பேர் போட்டிக்கு படங்கள் குடுத்திருக்காங்க.. சப்மிட் பண்ணின படங்களை இன்னேரம் slide show லே நீங்களே பார்த்திருப்பீங்க.. எல்லாரும் அவங்க-அவங்க படம் சரியா இருக்கான்னு இன்னொரு முறை பார்த்திடுங்க.. ஏன்னா.. போட்டி-அறிவிப்பு பதிவில் இருக்கும் லின்க் லே என்னென்ன படம் இருக்கோ அதை தான் slide show லே சேர்த்திருக்கேன். ஒருவேளை இதிலே உங்க படம் இல்லைன்னா அது :-

1. போட்டிக்கு எந்த படம் சேர்க்கணும் நீங்க தெளிவா சொல்வில்லை
2. லின்க் குடுத்தப்புறம் நீங்க உங்க செலெக்ஷணை (picture)"பதிவிலே" மாத்தியிருக்கலாம், அப்படி மாத்தினப்புறம் அதை எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை

எல்லா ஆல்டறேஷணும் Dec - 14 , 5.00 pm க்குள்ளே முடிச்சு உங்க பைனல் படத்தை எங்களுக்கு தெரியப்படுத்தணும். அதுவரை Slideshow லே இருப்பது தான் final listing.

Post comments on your altered pics / urls here

Wednesday, December 5, 2007

அட.. 15 பேர் போட்டிக்கு பேர் குடுத்துட்டாங்களே... வெற்றி பெற எல்லாருக்கும் பெஸ்ட் ஆப் லக். சரி.. இன்னிக்கி DOF கிடைக்காம திண்டாடுரவங்களுக்கு photoshop (CS2) லே எப்படி DOF மாதிரி ஒரு எபெக்ட் குடுக்கலாம்ன்னு பார்க்கலாமா ...

DOF னா என்ன ?? .. இந்த பதிவை படிங்க..

Flower Photography க்கு DOF ரொம்பவே முக்கியம்.. ( மத்ததுக்கெல்லாம் முக்கியம் இல்லைன்னு சொல்லலை.. I leave that to your perception)... ஏன்னா.. மலர்களை ரசிக்க தெரிஞ்சா மட்டும் போதாது.. அதன் ரசனை என்னன்னு மத்தவங்களுக்கு தெரியப்படுத்தவும் வேணும், அதுக்கு தான் . சரி... சில பேருக்கு DOF தானா கெமேறாலெயே அமையும்.. அப்படி அமையாத்தவங்களுக்கு தான் இந்த பதிவு

நான் photo editing க்கு photoshopCS2 ( CS3 டெமோ & tutorial பார்த்தேன்.. ரொமப் சூப்பரா இருக்கு.. ஆனா என் கிட்டே இல்லையே ... பிரீயா யாராவது குடுத்தா தேவலை.. !!! ) தான் யூஸ் பண்ணறேன்.. ஸோ.. செய்முறை விளக்கமும் அது படி தான் இருக்கும். உங்களுக்கு ஓரளவுக்கு photoshop Tools யூஸ் பண்ண தெரியும்ங்கிர எண்ணத்தோடு ( new Layers, selection tools etc etc) இந்த பதிவை எழுதறேன்.DOF செய்முறை விளக்கம் பார்க்கிரதுக்கு முன்னே.. இங்கே இருக்கும் கடற்கன்னியின் 3 படத்தை பாருங்க....

ORIGINAL ORIGINAL
GAUSSIAN BLUR USING GAUSSIAN BLUR FILTER
LENS BLUR USING LENS BLUR FILTER

  1. நீங்க மாற்ற நினைக்கும் படத்தை ஒரு copy எடுத்துக்குங்க..copy லே தான் மாற்றங்கள் செய்வது உத்தமம்.. copy கெட்டுப்பொச்சுன்னா இன்னொண்ணு எடுத்துக்கலாம்... ஒரிஜினலே எப்போதுமே ஆல்டரேஷன் பண்ணரது நல்லதில்லை

  2. Photoshop லே படத்தை ஓபண் பண்ணுங்க

  3. Layer pallete ல் background layer ஐ Right-click செஞ்சு CREATE DUPLICATE LAYER னு குடுங்க

  4. Layer pallete தெரியலைன்னா... Windows menu - Layers ஐ க்ளிக்குங்க... layer pallete வரும்

  5. "Polygonal Lasso Tool " - ஐ தேற்வு செய்து... உங்க subject ( The body of the mermaid.. here) ஐ select பண்ணவும்

  6. Select - menu ----> Inverse ஐ க்ளிக்கினா... selection டோட்டலா உல்டாவாயிடும்.. அதாவது.. subject ஐ விடுத்து.. மத்ததெல்லாம் செலெக்ட்டாகும்

  7. Filter - Blur - Gaussian ஐ தேற்வு செய்தா... ஒரு குட்டி டப்பா லே அதுக்கான controls வரும்... slider ஐ அப்படி - இப்படின்னு நகத்தும்போதே... படத்திலே மாற்றத்தை கவனிக்கலாம்... உங்க perception க்கு ஏத்தாமாதிரி blurr ஐ குடுத்து DOF லே இருக்கிராமாதிரி எபெக்ட் செய்யலாம்

  8. Blur லே பல ரகம் இருக்கு... படத்தின் texture க்கு ஏத்தா மாதிரி வேண்டிய blur-option ஐ யூஸ் பண்ணலாம்... இப்போ இங்கே இருக்கிர கலர்கன்னி ஒரு ஓவியம்.. அதுக்கு Lens-blur தான் சரியா இருக்கும்ன்னு என்னுடைய அபிப்பிராயம்.. ஸோ அதுக்கான details இதொ
    • Filer - Lens Blur

    • Shape - Octagon

    • Preview - selected

    • More accurate - selected

    • Radius - 15

    • Blade curvature - 13

    • Rotation -0

    • Brightness - 27

    • Threshold -255

    • Noise amount - 5

    • Distribution - Gaussian

    • Monochromatic - selected

  9. இப்படி நீங்க எடுத்திருக்கும் படத்துக்கு எந்த மாதிரி blur குடுத்தா படத்தை மெருகேத்த முடியும்ன்னு நினைக்கறீங்களோ.. அப்படி செய்ய்லாம்.

  10. Filter - Blur லே இருக்கும் எல்லா variety யும் சும்மா டிரை பண்ணி பாருங்க... எது எதுக்கு நல்லா இருக்கும்ன்னு யூஸ் பண்ண பண்ண நீங்களே தெரிஞ்சுக்குவீங்க


DOF வரலைன்னு படத்தை சப்மிட் பண்ணாம இருந்துடாதீங்க... இப்படியும் DOF எபெக்ட் கொடுக்கலாம்... photoshop இல்லாத்தவங்களுக்கு "ஐ ஆம் சாரி"... உங்க கிட்டே இருக்கும் photo-editing software லே எப்படி blur-effect குடுக்கமுடியும்ன்னு சம்பந்தப்ப்ட்ட வலைத்தளத்தில் போய் tutorial ஐ பார்த்து கத்துக்கோங்க... எப்படி செஞ்சீங்கன்னு பதிவும் போடுங்க.. மத்தவங்களுக்கும் உதவியா இருக்கும்.

Post Production ங்கிரது... document ஐ Proof read பண்ணரா மாதிரி... Speling mistakes - grammatical mistakes எல்லாம் நாமே படிச்சு பார்த்து திருத்தி எழுதரதில்லையா... அதுமாதிரி தான்... Post production பண்ண சோமப்ல் படாதீங்க... I promise you will not regret

பி.கு.. கடற்கன்னி சோகமா இருக்கா... இவளை எப்படியாவது சிரிக்க வைக்கணும்ன்னு நானும் என்னமோ டிரை பண்ணிட்டேன்... ( monalisa லே என்னாமோ வித்தை காட்டறாங்களே...அதுமாதிரி.. just a smile)... உங்களில் யாருக்காவது செய்ய முடிஞ்சா எனக்கு சொல்லி தறீங்களா ??... என்ன tool யூஸ் பண்ணரதுன்னே தெரியலை.....

Monday, December 3, 2007

இந்த மாத போட்டி தலைப்பு போட்டு 3 நாள் கூட ஆகலை.. அதுக்குள்ளேயே பதிவெல்லாம் கம-கமன்னு மணக்குது.. நறுமணம் மட்டும் இருந்தா போதுமா.. பூக்காரம்மா. பூ தொடுக்கும்போது பார்த்திருக்கீங்களா ? ?... கையிலே கிடைச்ச அரும்பை அப்படியே தொடுக்கவே மாட்டாங்க... ஒவ்வொரு அரும்பையும் நல்லா (க்ளோசப்லே) பார்த்து பார்த்து தான் தொடுப்பாங்க... தொடுக்கும்போது அவங்க பார்க்கிர கண்ணோட்டம் தான் படம் எடுக்கும் போதும் நமக்கு வேணும்.. ஏன்னா... மலரின் எந்த குணம் உங்களை படம் எடுக்க தூண்டிச்சோ.. அதே குணத்தை படத்தை பார்க்கும் போதும் பார்வையாளர்க்கு நீங்க காண்பிக்கணும். அதுக்காக தான் கேமேறா கம்பனிகாரங்க Macro ன்னு ஒரு செட்டிங் குடுத்திருக்காங்க.

அபர்ச்சர் ...ஷட்டர் ஸ்பீடு.. னெல்லாம் சொல்ல ஆரம்பிச்சாலே எல்லாரும் ஸ்பீடா ஓடிபோயிடுவீங்கன்னு எனக்கு தெரியும்.. ஸோ.. முடிஞ்ச வரையில் ஸிம்பிளா சொல்ல டிரை பண்ணறேன். Macro photography ஐ Close-up photography ன்னு சொல்லலாம். ஏன்னா பேருக்கேத்தாப்போல... கிட்ட இருக்கும் வஸ்து ( ஸப்ஜெக்ட்) ஐ இன்னும் கிட்டத்திலே .. பூதக்கண்ணடி வச்சு போட்டோ பிடிக்கரது. உதாரணத்துக்கு... செம்பருத்தி பூவை (கெமேரா இல்லாம.. சும்மா ) பார்க்கும் போது நாம் சாதாரணா கவனிப்பது .. செடி ( சின்னதா / பெருசா), தோட்டத்துக்கு நடுவிலே இருக்கா.. மூலையிலே இருக்கா, பூவின் நிறம் , இதழ் வடிவம் , petal-span ( பூ பெரிசா / சிருசா). ஆனால், கொஞ்சம் கிட்டே போய் மகரந்தம் , மகரந்த-பை , மகரந்த-பொடி எல்லாம் பார்க்கும் போது... நம்ம கண்களுக்கு (our field of vision)செடி - இலை - எல்லாம் தெரியாது.

கெமேராவிலே இருக்கும் Macro செட்டிங்கஸும் அது மாதிரி தான்.ஒரு ரோஜாப்பூவை முழுசா பார்த்தாலும் நல்லா இருக்கும், அதையே macro போட்டு, இதழ்களின் curves ஐ படம் புடிச்சாலும் நல்லா இருக்கும்..முதல் படம் ஒரு குழந்தையின் கண்ணோட்டத்திலே பார்த்தா மாதியும், ரேண்டாவது படத்தில் நாமே தேனீ மாதிரி பூவுக்குள்ளே போய் பார்த்து வராமாதிரி ஒரு அனுபவம் இருக்கும்... எதுவுமே perspective லே தான் இருக்கு

இனி உங்க கெமேராலே macro எப்படி செட் பண்ணலாம்ன்னு பார்க்கலாமா?
இதுக்கு நீங்க ஸ்பெஷலா இதுவும் செய்ய வேண்டியதில்லை.. (No manual adjustments for aperture / Focal length / shutter settings blah.. blah.. blah... நாம எதையோ நோண்டப்போய், ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆக... உள்ளதும் போச்சுடா நோள்ள கண்ணான்னு.. அப்புறம் எல்லாரும் என்னை தான் திட்டுவீங்க...). கெமேரா கம்பேனிக்கரனே macro ன்னு ஒரு ஸெட்டிங்க் குடுத்திருப்பான்.. அது உங்க கெமேராலே எங்கே இருக்குன்னு camera-manual அல்லது camera-company-website லே போய் பார்த்து சரியா எழுதி வச்சுக்கோங்க. அது படி செஞ்சா போதும்.. Advanced photography techniques கத்துக்கும்போது நீங்களே செட்டிங்ஸை மாத்தலாம்... இங்கே என்ன நடக்குதுன்னா... ஓரத்திலே இருக்கிரதெல்லாம் ஒரு-மாதிரி blurred ஆகவும் , நடுவிலே இருப்பதும் மட்டும் sharp ஆகவும் வரும்... சொல்லணும்னா.. fade-in /fade-out எபெக்ட் கிடைக்கும். மலர்களுக்கும் அது தானே அழகு.

Macro செட் பண்ணினதோட வேலை முடிஞ்சுதா ??
Macro செட் பண்ணினேன், படம் எடுத்தேன் , கம்ப்யூட்டர்லே பார்த்தேன்னு இல்லாம, ... ஒரே விஷயத்தை ( ஸப்ஜெக்ட்டை) பல கோணத்திலே பல முறை படம் எடுங்க ( காசா-பணமா.... டிஜிடல் கெமேரா தானே... பிலிமா வெஸ்ட்டாக போகுது)... கஞ்சத்தனம் பண்ணாம டகா-டகான்னு எடுத்து தள்ளுங்க. ஜூம் பண்ணி - ஜூம் பண்ணாம - கிட்டே போய் - தூர இருந்து - surroundings ஐ சேற்த்து - surroundings இல்லாம - ஸப்ஜெக்ட் பட்டுமே viewfinder ஐ முழுசா அக்கிரமிச்சா மாதிரி - நீங்களா ஒரு ambiance ஐ வச்சு அதிலே சப்ஜெக்ட்டை க்ளிக்கி - ஸ்டூல் மேலே நின்னு - குப்புற படுத்து - எப்பெப்பிடியெல்லாம் ஒரு சப்ஜெக்ட்டை படம் எடுக்க முடியும்ன்னு உங்க logic க்கு தோணுதோ அப்படி எல்லாம் 20-30 க்ளிக்கினீங்கன்னா.. அதிலே ஒரு 5 -10 வது தேறும்.

இதிலே என்ன விஷேஷம்ன்னா... மலர்கள் சலிச்சுக்காம போஸ் குடுக்கும் , என்ன தான் மூஞ்சிகிட்டே கெமேராவை கொண்டு போனாலும் "எக்ஸ்ப்ரெஷண்" மாறாம சிரிக்கும். யோசிச்சு பாருங்க... மனுஷனை நிறுத்தி மேலே சொன்ன வித்தையெல்லாம் காட்டினீங்கன்னா...conscious யாகி expression எல்லாம் ஓடிப்போயிடும்

மலர்கள் மலரும்போது
மலர்களை படம் எடுக்கணும்ன்னா ... கொஞ்சம் இல்லை ரொம்பவே மெனெக்கடணும்.
  1. பூக்களை outer ல் படம் எடுக்க மிக சிறந்த நேரம் 5.45 - 6.30 am ::::6.15 - 6.45 pm
  2. பூவை பறித்து படம் எடுக்கணும்னா... பறித்த 45 min க்குள்ளே எடுக்கணும்
  3. மழை நல்லா கொட்டி தீர்ந்து கொஞ்சூண்டு சூர்ய வெளிச்சம் வருமே... இந்த நேரத்தை மிஸ் பண்ணாம உங்க மெம்மரி கார்ட் full ஆகுர வரை படம் எடுங்க... believe me... these will be among your treasured pictures
  4. நல்ல dark colored பூக்கள்ள்ன்னா... light background ( butter paper - பழைய வேஷ்டி.. கட்டம் போட்ட லுங்கியெல்லாம் யூஸ் பண்ணக்கூடாது ) லே எடுப்பா இருக்கும்
  5. light colored பூக்கள் ( white rose , white hibiscus) ஐ dark background ( Black -paper (these are almost like black chart paper)... dark colored (preferably black , dark brown)... bedsheets without any prints) லே எடுக்கலாம்
  6. Barber shop லே தண்ணி ஸ்பிரே பண்ண வச்சிருப்பாங்களே... அது மாதிரி big-bazaar போய் வாங்கிட்டு வாங்க... ஏன்னா கைய்யாலெ தண்ணி தெளிச்சா... சரியா இருக்காது.. இதழில் நீர்-துளி வேணும்ன்னா ஸ்பிரே தான் பண்ணனும்.... அதுக்கு தான் இது
சொன்ன நம்புவீங்களா... லால்பாக் மலர்கண்காட்சியிலே நான் 150-200 படம் எடுத்தேன்.. அதிலே 50 தான் தேறிச்சு.. அதுக்கு தான் சிரமம் பார்க்காம் என்னென்ன கோணத்திலே எடுக்க முடியுமோ.. அப்படியெல்லாம் எடுங்கன்னு சொல்லறேன்.... இந்த மாதிரி மெனகெட்டா 75% வேலை முடிஞ்சுது.. மிச்சம் இருக்கிர 25% தான் Post-production...

Post Production ன்னா.. அது image manupliation ன்னு நிறைய பேர் நினைச்சுகிட்டு இருக்காங்க.... அதனாலே தான் Post-production பண்ணாம இருக்க முக்கிய காரணம். ரெண்டும் வேறே வேறே. Post production . உள்ளதை இன்ன்னும் மெருகேத்தி காட்டுரது... Image Manuplation ன்னா... இல்லாத்த ஒண்ணை இருக்கிரா மாதிரி காட்டுரது... புரிஞ்சுதா... ஸோ கவலைப்படாம போட்டிக்கான உங்க படங்களை post production பண்ணி submit பண்ணுங்க... ஏர்க்கணவே படங்களை submit பண்ணிட்டீங்கன்னா... Dec15 வரை நேரம் இருக்கு.. post production பண்ணி அதுக்கான லின்க் குடுங்க.. போட்டியில் அதை சேர்த்துக்கொள்வோம்

சில macro படங்கள் உங்கள் பார்வைக்கு. ஒவ்வொரு படத்தையும் க்ளிக்கி பெருசா பாருங்க.. மேக்ரொவின் மாயாஜாலம் புரியும்.



Information and Image Source:-
http://digital-photography-school.com/blog/photographing-flowers/
http://en.wikipedia.org/wiki/Macro_photography
http://www.hankinslawrenceimages.com/newsletter/articles/flowers.htm

Saturday, December 1, 2007

படம்எடுத்ததும் அப்படியே போடாம கொஞ்சம் மெனக்கெட்டீங்கன்னா நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கோம்.




இந்த மாசம் வந்த படங்களில் சிலதை எடுத்து டிரை பண்ணி பார்த்ததுல கொஞ்சம் நல்லா வந்த மாதிரி இருக்கு. நீங்களும் பாருங்க.. அடுத்து வர போட்டிகளில் கொஞ்சம் நேரம் எடுத்து பிற்தயாரிப்பு வேலைகளை செஞ்சீங்கன்னா படம் சூப்பரா வரும்.


உங்க கருத்துகளை சொல்லிட்டுபோங்க மக்கா.

பி.கு:பிற்தயாரிப்பு பற்றீய எங்களின் விளக்க பதிவை இங்கேபார்க்கலாம்.
UPDATE 16 Dec :Comments have been closed for this post. No new entries for the Dec Pit contest shall be entertained. Contestents please take a look here.
இந்த பதிவுக்கான மறுமொழி பொட்டி மூடப்பட்டுள்ளது. No new entries. போட்டியில் ஏர்க்கணவே பெயர் குடுத்தவர்கள் இந்த பதிவை கவனிக்கவும்


போன தடவை "சாலைகள்" அப்படிங்கற பரவலான தலைப்பு கொடுத்ததினால்,நிறைய பங்கேற்பாளர்களை நமது புகைப்பட போட்டி கண்டது.படங்களின் கலைத்திறன் மற்றும் படம் எடுக்கும் உத்திகள் பிற்தயாரிப்பு ஆகிய பல விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது அது மட்டுமின்றி,போட்டியில் நிறைய புதிய முகங்களையும் காண முடிந்தது!! மிகவும் சந்தோஷமான விஷயம்.
இந்த வெற்றியை தொடர்ந்து நிறைய பேர் பங்குக்கொள்ளத்தக்க வகையிலும,உங்கள் தனித்துவத்தை நீங்கள் வெளிக்கொணரும் வகையிலும் ஒரு்ஒரு தலைப்பை உங்கள் முன் வைக்கிறோம்.

தலைப்பு - மலர்கள்
நடுவர்கள் - ஓசை செல்லா மற்றும் தீபா
படங்கள் அனுப்பும் முறை - பதிவிட்டு விட்டு ,பின்னூட்டத்தில் அறிவிக்க வேண்டும்.
(You just have to publish your pictures in your blog and give the link as comment for the post! :-).If you dont have a blog,links to photo publishing sites like flickr are Ok )
போட்டிக்கான விதிகள்:அதிகபட்சம் இரண்டு படங்கள் போட்டிக்காக சமர்பிக்கலாம்.எதுவும் சொல்லாத பட்சத்தில் இடுகையில் உள்ள முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
காலம் - டிசம்பர் 1 முதல் 15
நாட்டாமைகள் தீர்ப்பு சொல்லும் நாள் - 25 டிசம்பர்

தலைப்பை பார்த்தவுடனே ."அட போன தடவை ஊட்டி ,போன போது நிறைய படம் எடுத்தோமே ,அதுல ஏதாச்சும் ஒன்னு நிச்சயமா மாட்டும்" அப்படின்னு தேடி புடிச்சு கைல கிடைத்ததை சமர்ப்பிக்க முயல வேண்டாம். உங்கள் புகைப்பட கலெக்ஷனில் ஏதாவது மலர் போட்டோ இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அதை போட்டிக்கு சமர்ப்பிக்கலாமே என்று முயல வேண்டாம். தலைப்பு பரவலான தலைப்பு என்பதால் நிறைய பேரின் படங்களுக்கு நடுவில் உங்கள் படம் தனித்து நிற்குமாறு ஒரு படத்தை எடுத்து போட்டிக்கு இடுங்கள்! :-)
குனிந்து ,நிமிர்ந்து படுத்துக்கொண்டு என்று உங்கள் கோணத்தை மாற்றிப்பாருங்கள். காலை,மாலை என வெவ்வேறு ஒளி அமைப்புகளை கவனித்து,அந்த சமயங்களில் நிறங்களின் மாற்றங்களை கவனியுங்கள்.எல்லோரும் எடுப்பது போன்ற வழமையான மலர் படம் போல இல்லாமல் சற்றே வித்தியாசமான படமாக உங்கள் படம் இருக்க முயற்சி செய்யுங்கள்!!
வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

ஸ்டார்ட் த ம்யூசிக்!!!!!

பி.கு: தயவு செய்து பிற்தயாரிப்பு செய்து பாருங்கள்.




போட்டிக்கான படங்கள்:

  1. குட்டீஸ் கார்னர் (இம்சை)
  2. கோபாலன் ராமசுப்பு
  3. பிரபு ராஜதுரை
  4. வல்லிசிம்ஹன்
  5. சாலை ஜெயராமன் -அ.) சாலை ஜெயராமன் - ஆ.)
  6. வீர சுந்தர் -அ.) | வீர சுந்தர் - ஆ.)
  7. துளசி கோபால்
  8. ஒப்பாரி
  9. அப்பாவி
  10. கோவை சிபி
  11. பிரபாகரன் சம்பந்தம்
  12. குசும்பன்
  13. Analyzt
  14. சத்தியா
  15. ப்ரியா -அ.) | ப்ரியா - ஆ.)
  16. சூர்யா
  17. பூங்கி (1 மற்றும் 2ஆம் படங்கள்)

  18. வின்செண்ட்( 1 & 2)

  19. பொடியன்

  20. ஜவஹர்

  21. Bhagi

  22. உண்மை

  23. மருதம்-அ.) | மருதம்- ஆ.)

  24. அல்வாசிடி விஜய்

  25. ஹரன்பிரசன்னா

  26. ஸ்ரீலதா

  27. நாதஸ்

  28. அறிவன்-அ.) | அறிவன்- ஆ.)

  29. அம்பிகா - அ | அம்பிகா - ஆ

  30. தார்மிகா- அ | தார்மிகா- ஆ

  31. கார்த்திகேயன்

  32. கைப்புள்ள (1&5)

  33. விசேஷ்- அ | விசேஷ்- ஆ

  34. இலவசகொத்தனார்

  35. ஜே.கே

  36. ரிஷான் ஷெரீஃப்

  37. ஆதி

  38. சுகவாசி

  39. மோகன்தாஸ (3 & 7)

  40. பரமேஸ்வரி

  41. வற்றாயிருப்பு சுந்தர்

  42. நட்டு

  43. லொடுக்கு

  44. கானகம்

  45. தேவ்

  46. டிபிசிடி

  47. சிவா

  48. நந்து

  49. நாகை சிவா

  50. சூரியாள்

  51. பெருசு 6 & 7

  52. அனுசுயா


UPDATE 16 Dec :Comments have been closed for this post. No new entries for the Dec Pit contest shall be entertained. Contestents please take a look here.
இந்த பதிவுக்கான மறுமொழி பொட்டி மூடப்பட்டுள்ளது. No new entries. போட்டியில் ஏர்க்கணவே பெயர் குடுத்தவர்கள் இந்த பதிவை கவனிக்கவும்

Tuesday, November 27, 2007

இந்த பதிவை எந்த கேமரா வாங்கலாம் என்ற எமது முந்தைய பதிவின் தொடர்ச்சியாக கொள்ளலாம்.
கேமரா வாங்க முடிவெடுக்கும் பல பேரிடம் ஏற்படும் குழப்பங்களில் "DSLR வாங்கலாமா அல்லது Point and shoot வாங்கலாமா" என்ற குழப்பம் முதன்மையானது. போன பதிவில் சொன்னது போல இதற்கான முடிவை உங்களுக்கான ஆர்வம்,திறமை,புகைப்படக்கலையை கற்றுக்கொள்ள நீங்கள் எவ்வளவு நேரம்/முயற்சி எடுக்க தயாராக இருக்கிறீர்கள் என்பதை பொருத்து நீங்களே தான் எடுக்க வேண்டும். இதற்கான முடிவை என்னாலேயோ அல்லது உங்கள் நண்பர்களிலாயோ எடுக்க முடியாது. DSLR கேமராக்களின் விலை மற்றும் அதை பராமரிக்க/உபயோகிக்க தேவைபடும் பொறுமை/கூடுதல் முயற்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நான் என்னிடம் ஆலோசனை கேட்பவர்களிடம் High end point and shoot -ஐயே வாங்க சொல்லி விடுவேன்.உங்களிடையே ஏற்கெனவே கேமரா உள்ளதா???அதில் உள்ள பயன்பாடுகள் என்னென்ன?? உங்களுக்கு புகைப்படக்கலை குறித்த அடிப்படை விஷயங்கள் தெரியுமா?? என்பதெல்லாம் தான் நீங்கள் யோசிக்க வேண்டிய விஷயங்கள்.

இருந்தாலும் DSLR-க்கும் point and shoot-க்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்கள் என்ன என்பதை விளக்குவதற்காக எழுதப்பட்ட பதிவு தான் இது.
இது பொதுவாக இருக்கும் SLR மற்றும் point and shoot கேமராக்களை கருத்தில் கொண்டு எழுதப்பட்டது.இப்பொழுதெல்லாம் கன்னா பின்னாவென்று high end point and shoot கேமராக்கள் சந்தையில் வருவதால் சில விஷயங்கள் இந்த கேமராக்களுக்கு பொருந்தாமல் போகலாம்! :-)

முதலில் SLR கேமரா என்றால் என்ன என்பதை தெளிவாக தெரிந்துக்கொண்டு விடலாம் வாருங்கள். SLR என்பது single lens reflex என்பதன் சுருக்கம். இதற்கு முன் ஒரு Digital-ஐ சேர்த்து விட்டால் DSLR. கேமராக்களில் உள்ள னெல்ஸ்களை கழட்டி மாற்றி போட்டுக்கொள்ள முடியும் என்பது தான் SLR கேமரக்களில் உள்ள அடிப்படை சிறப்பு.Point and shoot-இல் அப்படி கிடையாது. ஒரே லென்ஸை தான் கட்டிக்கொண்டு அழ(சிரிக்க) வேண்டும்.அதுவுமில்லாமல் SLR-இல் லென்ஸில் நுழையும் ஒளியை நேரடியாக view finder-இல் பார்த்து படத்தை எடுப்போம். ஆனால் point and shoot கேமராவில் லென்ஸ் வழியாக வரும் ஒளி பிரதிபலிக்கப்பட்டு LCD-இல் தனியாக காண்பிக்கப்படும். அதனால் SLR கேமராக்களில் படம் எடுக்கும் போது தெரியும் காட்சி தான் நம் சென்சரில் விழும் ஒளி . இதுதான் SLR-க்கும் point and shoot-க்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்.இப்பொழுது இந்த கேமராக்களில் உள்ள மற்ற வித்தியாசங்களை பார்க்கலாம்.

படங்களின் தரம்:
படங்களின் தரம் என்று வரும்போது கேமராவின் megapixel (MP) என்பது மிக முக்கிய அளவுகோலாக கருதப்படுகிறது.இப்பொழுதெல்லாம் பல point and shoot கேமராக்களில் அதிக அளவிலான (8-10 MP) MP ரெசல்யூஷன்கள் வர ஆரம்பித்து விட்டன. ரெசல்யூஷன் ஒரே அளவாக இருந்தாலும் சென்ஸரில் உள்ள புள்ளிகளின்(pixels) அளவை (size) பொருத்து படங்கள் பதியப்படும் திறனும் மாறுபடும். Point and shoot கேமராக்களில் உள்ள சென்சர்களில் உள்ள புள்ளிகள் SLR-களில் உள்ளதை விட சிறியதாக இருப்பதால் அவற்றால் அவ்வளவாக ஒளியை பதிய வைக்க முடியாது. அதனால் ஒரு 10MP point and shoot கேமராவில் எடுக்கப்பட்ட படம் ஒரு 8MP SLR கேமராவில் எடுக்கப்பட்ட படத்தை விட தரத்தில் அதிகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.ஆனால் நீங்கள் படத்தை பிரிண்ட் செய்யப்போவதில்லை என்றால் அதிகபட்ச ரெசல்யூஷனால் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் வந்து விடாது.ரெசல்யூஷன் அதிகமாக அதிகமாக கோப்புகளின் அளவும் அதிகமாகிக்கொண்டு போகும் என்பதை மறக்க வேண்டாம்!! :-)

லென்ஸ்கள்:
SLR கேமராவில் உள்ள லென்ஸ்களின் தரம் point and shoot கேமராக்களில் உள்ள லென்ஸ்களை விட தரத்தில் சிறந்ததாக இருக்கும். இதனால் SLR கேமராக்களில் குறைந்த ஒளியிலும் focus செய்யும் திறனும் ,ஒளியை திறட்டும் திறனும் சிறந்து காணப்படும்.இதனால் படங்கள் சிறப்படைய வாய்ப்பு உள்ளது. DSLR லென்ஸ்களில் எடுக்கும் படங்களில் point and shoot கேமராக்களை விட அதிகமான DOF கிடைப்பதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
அதுவுமில்லாமல் SLR-களில் உங்கள் தேவைக்கேற்ப லென்ஸ்களை மாற்றிப்போட்டுக்கொண்டு விதவிதமான ரகமான(landscape,sports,macro) படங்களை எடுக்கலாம். இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் நீங்கள் லென்ஸ்களை மாற்றி மாற்றி போடும் வேளைகளில் கேமராவுக்குள் தூசி புகுந்து சென்சரில் படிந்துக்கொண்டால் நிறைய காசு செலவு செய்து சுத்தம் செய்ய வேண்டும்.

கையாளுமை:
SLR கேமராக்களோடு ஒப்பிடும் போது point and shoot கேமராக்கள் சிறியதாகவும் எடை குறைவாகவும் இருக்கும். அதனால் அவசரமான சமயத்தில் கூட சட்டென பையில் இருந்து வெளியே எடுத்து பட்டென படம் பிடித்து விடலாம்!! ஆனால் SLR-களின் அளவும் பெரியது,எடையும் அதிகம். புகைப்படக்கலை மேல் தீவிரமான ஆர்வம் இல்லாத பட்சத்தில் இரண்டு மூன்று மாதங்களில் அதை வெளியே எடுத்து படம் பிடிப்பதே அலுப்பாகி விடும்.ஆர்வம் மட்டும் இல்லையென்றால் ஆசையாக இருக்கிறதே என்று பணம் கொடுத்து வாங்கி விட்டு பிறகு ஏனடா வாங்கினோம் என்று ஆகிவிடும்.
அதுவும் தவிர point and shoot கேமராக்களில் படம் எடுக்கும் போது காட்சி LCD திரையில் தெரியும் என்பதால் view finder-இல் பார்த்து்பார்த்துபாபாபார்த்து தான் படம் எடுக்க வேண்டுமென்பது இல்லை.இதனால் உங்களால் SLR கேமராக்களில் எடுக்க முடியாத பல கோணங்களில் உங்கள் point and shoot கேமரா மூலம் எடுக்கலாம்.

சத்தம் மற்றும் வேகம்:
நீங்கள் SLR கேமராக்கள் உபயோகிக்கும் போது கவனித்தீர்கள் என்றால் ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் "கிரக்" என்று ஒரு விதமான சத்தம் எழும். SLR கேமராக்களின் உள்ளே நடக்கும் செயல்பாடுகளால் உருவாகும் சத்தம் தான் அது.இந்த சத்தம் point and shoot கேமராக்களில் வராது. சில point and shoot கேமராக்களில் செயற்கையாக ஒரு விதமான சத்தம் சேர்க்கப்பட்டிருக்கும்.சில பேருக்கு இந்த சத்தம் இருப்பது பிடிக்கும்.படம் எடுக்கும் போது ஏதோ ப்ரொபெஷனல் புகைப்படக்காரரை போல "கெத்தாக" இருக்கும் என்று நினைப்பார்கள்.ஆனால் இது அவரவர் விருப்பத்தை பொருத்தது.
டிஜிட்டல் கேமராக்களில் நீங்கள் படம் எடுக்கும் போது,நீங்கள் பொத்தானை அழுத்தி சிறிது நேரம் கழித்து தான் படம் எடுக்கும்.இதற்கு ஆங்கிலத்தில் "shutter lag"என்று கூறுவார்கள்.அதுவும் இல்லாமல் கேமராவை ஆன் செய்த வுடன் கேமரா தயாராகி நாம் உபயோகிக்க சில நேரம் ஆகும். படம் எடுத்த பின் அதை மெமரி அட்டையில் எழுத சிறிது நேரம் பிடிக்கும்.இந்த பிரச்சினைகள் எல்லாம் SLR கேமராக்களில் மிகக் குறைவு. அதுவும் shutter lag அறவே இருக்காது என்றே சொல்லலாம்.

பயன்பாடுகள்:
SLR கேமராக்கள் உருவாக்கப்படும் போதே அதை பயன்படுத்துபவர் புகைப்படக்கலை பற்றிய அடிப்படை அறிவு உடையவர் என்று அனுமானித்துக்கொண்டு உருவாக்குகிறார்கள். இதனால் ஒரு படத்தை பாதிக்கும் வெவ்வேறு அம்சங்களையும் தனியே மாற்றி படத்தை நமது இஷ்டம் போல் இதில் பதிய வைக்க முடியும். என்னதான் இப்பொழுதுள்ள high end point and shoot கேமராக்களில் வித விதமான mode-கள் வந்திருந்தாலும் SLR கேமராக்களில் இருப்பது போன்று இதில் எல்லா அம்சங்களையும் நமது இஷ்டம் போல் மாற்ற முடியாது. ஆனால் இந்த கலையை கற்றுக்கொள்ள அவ்வளவாக ஆர்வமில்லாதவருக்கு SLR கேமராவின் எக்கச்சக்கமான கண்ட்ரோல்கள் சலிப்பை தரலாம்.
அதுவுமில்லாமல் புகைபடக்கலையின் வெவ்வேறு அம்சங்களான ISO,shutter speed போன்றவை SLR கேமராக்களில் கொஞ்சம் அதிகமாகவே ஏற்றி இறக்கிக்கொள்ள முடியும்.ஆனால் ISO,shutter speed இவையெல்லாம் என்னவென்றே தெரியாதவர்கள்/தெரிய விருப்பமில்லாதவர்கள் இதை பற்றி எல்லாம் கவலை படாமல் point and shoot கேமரா வாங்கிக்கொள்ளலாம்.

பதிவு ரொம்ப பெருசாயிட்டே போகுது,அதனால இத்தோட நிறுத்திக்கறேன். POint and shoot கேமராக்களை விட SLR கேமராக்கள் விலையிலும் அதிகம் என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை.அதுவுமில்லாமல் point and shoot போன்று இல்லாமல் SLR கேமராக்களில் லென்ஸ்,பில்ட்ர்,லொட்டு லொசுக்கு என்று கண்ணுக்கு தெரியாத கூடுதல் செலவுகள் பல உண்டு.
இப்படி SLR-க்கும் point and shoot-க்கும் வித்தியாசங்கள் நிறைய உண்டு.அதனால் பொறுமையாக பதிவை படித்து விட்டு உங்களுக்கு எந்த கேமரா வேண்டும் என்று முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
தவிர உங்களுக்கு இந்த தலைப்பை பற்றி வேறு எதுவும் தோண்றினால் பின்னூட்டமிடுங்கள்,கதைக்கலாம்!! :-)
வரட்டா??? :-)

படம் மற்றும் வழிகாட்டுதல்:
http://digital-photography-school.com/blog/should-you-buy-a-dslr-or-point-and-shoot-digital-camera/

Sunday, November 25, 2007

முதலிடம்: ஸ்ரீகாந்த்

இரண்டாமிடம்: உண்மை + சிவசங்கரி

மூன்றாமிடம்: ஜவஹர்






வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். போட்டியைப்பற்றிய ஒரு சிறு அலசல் இன்னும் ஒன்றிரண்டு நாளில்...

Thursday, November 22, 2007

வணக்கங்க.

போட்டியின்னு வந்துபுட்டா சிங்கம்ன்னு சொல்லி ஆளாளுக்கு வழக்கம் போல கலக்கிட்டீங்க. களத்துல குதிச்ச எல்லாருக்கும் நன்றீங்க.

ஒவ்வொரு போட்டியிலயும் படங்களோட தரம் கூடிகிட்டே இருந்தாலும் சில படங்கள்ல இன்னமும் அந்த classic mistakes இருக்குங்க. முதலாவது, போட்டிக்கான தலைப்போட பொருந்தாத படங்கள். போட்டியோட தலைப்பு சாலைகள். ஆனா ஏதோ ஒரு மூலைல ரோடு இருக்குங்கற காரணத்துக்காக ஒரு படம் இந்த தலைப்புல வராது இல்லைங்களா? எங்களோட முதல் சுற்றுலயே சில படங்கள் இந்த காரணத்துனால out. அடுத்து, பிற்தயாரிப்பு. ஐஸ்வர்யா ராய் எவ்வளவு அழகா இருந்தாலும் பவுடர் பூசிட்டுதான கேமரா முன்னாடி வராங்க? பிற்தயாரிப்புங்கறதும் அது போலதாங்க. என்னதான் படம் அழகாயிருந்தாலும், அத Picasa மாதிரியான சாப்ட்வேர் வெச்சி பவுடர் பூசிவிட்டாக்க, சும்மா திருவிழாக்கு வந்த முத்தழகு மாதிரி மின்னும். அடுத்த போட்டிக்கு படங்களை அனுப்பறதுக்கு முன்னாடி இத முயற்சி பண்ணி பாருங்க.

மெயின் மேட்டருக்கு வருவோம். ஒரு சில படங்கள விட்டுட்டு பார்த்தா மீதி எல்லாமே கலக்கல் தான்ங்க. எல்லா படங்களையும் தனித்தனியா/ஒரே சாய்ல்ல இருக்கறத குரூப்பா/மொத்தமா பார்த்து ரவுண்டு கட்டி எடுத்ததுல இந்த பத்து படம் வந்து இருக்கு.




இதுல எது பரிசு வாங்கும்ன்னு உங்கள மாதிரியே எங்களுக்கும் தெரியல. ரெண்டு மூனு நாள்ல முடிவு பண்ணிடுவோம். பரிசு வாங்கப்போறவங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff