Wednesday, August 29, 2007

படம் செய்ய விரும்பு - பாகம் 2 - DOF என்றால் என்ன??

32 comments:
 
போன பகுதியை படிச்சுட்டு பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.பின்னூட்டமிடாதவறுக்கும் நன்றி!! :-P
போன பகுதியின் கடைசியில் நான் குறிப்பிட்ட சில விஷயங்களை பற்றி இந்த தடவை பாக்கலாம்.

Focal Length : தமிழ்ல இதை குவிய தூரம் அப்படின்னு சொல்லலாம்.
சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல இது பத்தி படிச்சிருப்பீங்களே ,ஞாபகம் இருக்கா???

சுருக்கமா சொல்லனும்னா குவிய தூரம் என்பது லென்ஸிற்கும் கேமராவின் சென்சர்/படச்சுருளின் இடையில் இருக்கும் தூரம். இதைத்தான் லென்ஸ் பற்றி குறிப்பிடும்போது குறிப்பிடுவார்கள். உதாரணமாக 180mm lens என்று சொன்னார்கள் என்றால் கேமராவில் பொருத்திவிட்ட பின் லென்ஸிற்கும் ,ஒளிக்கற்றை வந்து விழும் திரைக்கும் இடையில் உள்ள இடைவெளி 180mm இருக்கும் என்று பொருள். பல லென்ஸ்கள் ஒரே குவிய தூரத்தில் மட்டுமே நாம் உபயோகப்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சில லென்ஸ்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கள் எந்த குவிய தூரத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு 18-55mm என்று ஒரு லென்ஸ் உள்ளது. நீங்கள்் SLR வாங்கினீர்கள் என்றால் இந்த லென்ஸையும் சேர்த்தே பல இடங்களில் விற்பார்கள்.

இந்த லென்ஸின் குவிய தூரத்தை 18mm-இல் இருந்து 55mm வரை எந்த தூரத்திலும் மாற்றிக்கொள்ளலாம். இது போன்ற லென்ஸ்களை zoom lens என்று அழைப்பார்கள்.

இந்த குவிய தூரத்தினால் நாம் எடுக்கும் புகைப்படத்தில் என்னென்ன மாறுதல்கள் வரும் என்று பார்க்கலாமா?? பொதுவாக குவிய தூரம் கம்மியாக இருந்தால் நமக்கு முன் பரந்து விரிந்த காட்சியை காமெராவினுள் அப்படியே பதிக்கலாம். சுற்றி உள்ள விஷயங்கள் எல்லாவற்றையும் திறந்த கோணத்தில் திரைக்குள் சேர்ப்பதால் இதை வைத்து கிட்டேயிருக்கும் பொருளை எடுத்தால் கூட அது தூரத்தில் இருப்பது போல் தெரியும். அதனால் குறைந்த குவிய தூரம் உடைய லென்ஸ்களை wide angle lens என்று அழைப்பார்கள்.

லென்ஸின் குவிய தூரம் அதிகமாக அதிகமாக focus செய்யும் பொருட்கள் எல்லாம் பெரியதாக ஆகிக்கொண்டே போகும். அதனால் சிறிய பொருட்களை எல்லாம் பிடிக்க அதிக குவிய தூரம் உள்ள மேக்ரோ லென்ஸ்களை பயன்படுத்துவார்கள்.அதுவுமில்லாமல் தூரத்தில் இருக்கும் பொருள் அருகில் தெரிய வேண்டுமென்றால் குவிய தூரம் அதிகம் உள்ள லென்ஸ் தேவை. இந்த வகை லென்ஸ்களை telephoto lens என்று சொல்லுவார்கள்.

நாம் பயன்படுத்தும் point and shoot கேமராக்களில் 30-40 இல் இருந்து சுமார் 150mm மில்லிமீட்டர் வரை உள்ள zoom lens பொருத்தப்பட்டிருக்கும். எல்லாம் அந்தந்த கேமராவையும் அதின் zoom range-ஐயும் பொருத்தது. இப்பொழுதெல்லாம் 12x-15x point and shoot கேமராக்கள் எல்லாம் வர ஆரம்பித்து விட்டன. இவற்றின் குவிய அளவு 400-450mm வரை செல்லும். பொதுவாக மக்கள் SLR வாங்கினாலே அதில் நன்றாக zoom செய்ய முடியும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. SLR வாங்கினால் கூட அதிக குவிய தூரம் உள்ள லென்ஸ்கள் இருந்தால் தான் உங்களால் அதிகமாக Zoom in செய்ய முடியும்.

DOF : இது புகைப்பட வல்லுனர்கள் பலராலும் தான் ரொம்ப விஷயம் அறிந்தவர் என்று காட்டிக்கொள்ள பயன்பட்டுத்தப்படும் வார்த்தை!! :-)
ஏதாவது நல்ல படம் என்றால் ஆனா ஊனா உடனே,"படம் செம DOF" என்று பிலிம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்!!

அது சரி!! இந்த உண்மையில் இந்த DOF என்றால் என்ன???
DOF என்பது "Depth of field" என்பதன் சுருக்கம்.தமிழில் இதை காட்சியின் ஆழம் என்று சொல்லலாம்.

நாம் ஒரு படத்தை எடுக்கும் போது கேமராவின் முன்னே பல பொருட்கள் பல தூரங்களில் கொட்டிக்கிடக்கும். ஆனா படத்துல எல்லாமே தெளிவா தெரிவதில்லை, ஒரு குறிப்பிட்ட தூரத்துல இருக்கற சில பொருட்கள் மட்டும் தான் தெளிவா தெரியுது. அப்படி தெளிவா தெரியற பொருள் படத்தின் கருப்பொருளாக (subject) இருந்தால் படத்துக்கு அழகு. இப்படி நமக்கு வேண்டிய காட்சி மட்டும் தெளிவாக தெரிந்து மற்ற விஷயங்கள் எல்லாம் மங்கலாக தெரிந்தால் படத்தின் காட்சி ஆழம் கம்மி என்று சொல்லுவார்கள் (Shallow depth of field). படத்துல எவ்வளவோ விஷயம் இருந்தால் கூட எந்த பகுதி தெளிவா இருக்கோ அங்கே தான் நம் கண்கள் தானாக செல்லும்.

நம் கருப்பொருளின் பின்னால் (background) நம் கவனத்தை சிதறடிக்கும் வண்ணம் பல விஷயங்கள் இருந்தாலும் நான் நம் கருப்பொருளின் மேலே மட்டும் காட்சியின் ஆழம் அமையுமாறு வைத்தால் படம் அழகாக இருக்கும்.

இந்த shallow depth of field எல்லா படங்களுக்கும் நல்லா இருக்கும் என்று சொல்ல முடியாது. இயற்கை காட்சிகள் போன்று பரந்து விரிந்த காட்சிகள் எடுக்கும் போது படத்தில் எல்லா பொருளின் மேலும் தெளிவு சீராக பரவியிருக்க வேண்டும். அந்த மாதிரி சமயத்துல காட்சியின் ஆழம் எல்லா தூரங்களிலும் பரவி இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு வேண்டிய காட்சி தெளிவாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த சிந்தாந்தத்தின் நோக்கமே!!

சரி!!

இந்த காட்சியின் ஆழத்தை எப்படி கட்டுபடுத்துவது???

அதற்கும் சில உத்திகள் புகைப்படக்கலையில் உண்டு. நாம் நமது கருப்பொருளின் பக்கத்தில் எவ்வளவுக்கெவ்வளவு போகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு காட்சியின் ஆழம் கம்மியாகும். அதாவது நமக்கும் பொருளுக்கும் உள்ள தூரத்தை விட பொருளுக்கும் background-இற்கும் உள்ள தூரம் அதிமாக இருக்க வேண்டும்!!
புரியுதா???
அது ஒரு உத்தி!!
அதனால் தான் நாம் ஒரு பூவின் பக்கத்தில் போய நன்றாக zoom செய்து படம் எடுத்தால் அதின் காட்சி ஆழம் கம்மியாக வந்து விடும்.

இரண்டாவது உத்தி நான் போன பகுதியிலே சொன்னது போல லென்ஸின் துளை(aperture) சம்பந்தப்பட்டது. அதாவது துளையின் விட்டம் எவ்வளவுக்கெவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு காட்சியின் ஆழம் கம்மி. லென்ஸின் f-stop கம்மியாக கம்மியாக துளையின் விட்டம் அதிகமாகும் என்று நான் போன பதிவில் சொன்னதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்!! :-)

இப்படியாக காட்சியின் ஆழத்தை கட்டுப்படுத்தி படங்களின் தரத்தை நிர்ணயிக்கலாம்!!!

அடடா!! பேச ஆரம்பிச்சு வல வலன்னு பேசிட்டே போயிட்டேன். இதுக்கு மேலே புது தலைப்பு ஆரம்பிச்சா சுவாரஸ்யம் இருக்காது,அதனால மத்த விஷயங்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

இந்த தலைப்புகள் பத்தி ஏதாவது பேசனும்/ஆலோசிக்கனும்/கேட்கனும்னு தோனிச்சுனா பின்னூட்டம் இடவும். அப்படி இல்லைன்னாலும் போடுங்க (எனக்கும் நீங்க பதிவை படிச்சீங்கன்னு தெரிய வேண்டாம்?? ஹி ஹி)
புகைப்படக்கலை பற்றிய இன்னும் சில விஷயங்களோட உங்களை பிறகு சந்திக்கிறேன்.

அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது,உங்கள் அன்பு சீ.வீ.ஆர்!!
வரட்டா?? :-)


பி.கு: செப்டெம்பெர் மாத போட்டிக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்,உங்கள் எண்ணங்களின் "வண்ணங்களை" எங்கள் முன் படைக்க இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என நம்புகிறேன்!! :-)


படங்கள் :
http://www.sweethaven02.com/Photog01/fig0119.gif
http://www.livingroom.org.au/photolog/images/Nikkor-18-55mm-af-s-dx.jpg
http://www.edbergphoto.com/images/dof-cartoon.gif

32 comments:

  1. //பின்னூட்டமிடாதவறுக்கும் நன்றி!! :-P//

    இந்தப் பதிவிலாவது அப்படிப் பின்னூட்டமிடாத் தவறு செய்யாமல் இருக்கேன். சரியாப்பா!! :))

    ReplyDelete
  2. அடடா!
    நீங்க சொன்ன அப்புறம் தான் எழுத்து பிழையை கவனிக்கறேன் கொத்தனாரே!! :-)

    ஆனாலும் இதுவும் நகைச்சுவையா தான் இருக்கு!
    அப்படியே விட்டுரலாமா?? :-)

    ReplyDelete
  3. தொடர் நல்லா இருக்கு. விளக்கங்களும் அருமை.

    ReplyDelete
  4. அடுத்த போட்டிக்கு படம் ரெடி, இவ்வளவு clue குடுத்தா... பின்ன என்ன பண்றது.

    ReplyDelete
  5. ஒரு தடவை படித்தால் போதாது புரிய,மீண்டும் படிக்க வேண்டும். எனக்கு.
    இருந்தாலும் பயனுள்ள தகவல்கள்.

    ReplyDelete
  6. @சத்தியா
    வாழ்த்துக்களுக்கு நன்றி சத்தியா.

    //அடுத்த போட்டிக்கு படம் ரெடி, இவ்வளவு clue குடுத்தா... பின்ன என்ன பண்றது.///
    அடடா!!!
    கண்டுபிடிச்சிட்டீங்களா??
    இந்த குழுப்பதிவின் மற்ற ஆசிரியர்கள் எனக்கு டின்னு கட்ட போறாய்ங்க!!! :-P

    @வடுவூர் குமார்
    ஆஹா!!
    அடுத்த முறையில் இருந்து இன்னும் நல்லா புரியறா மாதிரி எழுத முயற்சி பண்ணுறேன் தலைவா!! :-)

    இந்த பகுதியை திரும்பவும் எப்பயாவது படிச்சிட்டு புரியுதான்னு பாருங்க!! :-)

    ReplyDelete
  7. //அடடா!!!
    கண்டுபிடிச்சிட்டீங்களா??
    இந்த குழுப்பதிவின் மற்ற ஆசிரியர்கள் எனக்கு டின்னு கட்ட போறாய்ங்க!!! :-P//

    என்னய்யா இதெல்லாம்?
    ஒரு ரெண்டு வாரம் சஸ்பெண்டு ஃப்ரம் pit :)

    ReplyDelete
  8. //
    என்னய்யா இதெல்லாம்?
    ஒரு ரெண்டு வாரம் சஸ்பெண்டு ஃப்ரம் pit :)

    August 28, 2007 8:54 PM
    ///


    survey, ippadi ellaam pannaadheerumvoy

    ReplyDelete
  9. போன பதிவுக்கு பின்னூட்டமிடாதவறை செய்ததற்கு
    மன்னிப்பு கேட்டுக்கொள்கிரேன்..ஆனால் மனசு ஒன்றி பாடம் படிக்கிறமாத்ரிபடிக்க
    நேரம் கிடைக்கவில்லை...என்பதால் தான் பின்னூட்டமிடவில்லை..இதையும்
    அப்படி படிக்கவேண்டும் ...3 முறையாவது வாசித்தால் தான் முழுக்க புரியும் என்று நினைக்கிறேன்...

    மற்றபடி நன்றாக வருகிறது படம் செய்ய விரும்பு தொடர்.

    ReplyDelete
  10. இதுக்கு பிரைவேட் டுயுசன் நடத்த முடியும்மா...........

    ReplyDelete
  11. அண்ணா நல்ல பயன் உள்ள கட்டுரை.
    திரும்பவும் ஸ்கூலில் லென்ஸ் பற்றி படித்தது போல் இருக்கிறது:))))
    நன்றி வாத்தியாரே!!!

    ReplyDelete
  12. @சர்வேசன்!!
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
    PIT-க்கு மண் சுமக்கனும்னா சொல்லிடுங்க செஞ்சிடறேன்!! :-P
    இப்படி என்னை தண்டிச்சிறாதீங்க!! :-((

    @நிழற்படம்
    நன்றி அண்ணாத்த!!
    நீங்களாச்சும் கொஞ்சம் எடுத்து சொல்லுங்க!! :-D


    @முத்துலெட்சுமி

    //போன பதிவுக்கு பின்னூட்டமிடாதவறை செய்ததற்கு
    மன்னிப்பு கேட்டுக்கொள்கிரேன்///

    அடாடா!! அது தெரியாம நடந்த எழுத்துப்பிழை அக்கா!! நகைச்சுவையாக இருக்கிறதே என்று அப்படியே விட்டு விட்டேன்!!
    மன்னிப்பு எல்லாம் சொல்லி ஏன் என் மனசை உடைக்கிறீங்க?? :-)

    //
    நேரம் கிடைக்கவில்லை...என்பதால் தான் பின்னூட்டமிடவில்லை..இதையும்
    அப்படி படிக்கவேண்டும் ...3 முறையாவது வாசித்தால் தான் முழுக்க புரியும் என்று நினைக்கிறேன்...
    //

    எல்லோரும் ரொம்ப யோசிக்காம லைட்டா படிச்சு புரிஞ்சிக்கறா மாதிரி இருக்கனும்னுதான் முயற்சி பண்ணியிருக்கேன் அக்கா!!
    படிச்சிட்டு புரியுதான்னு சொல்லுங்க!

    @TBCD
    // TBCD said...
    இதுக்கு பிரைவேட் டுயுசன் நடத்த முடியும்மா...........
    //

    தனியா ட்யூசன் எதுக்கு தல?? இங்கிட்டு சொல்லுறது ஒன்னும் புரியலையா?? :-)

    ReplyDelete
  13. மூனு பதிவுல போட வேண்டிய விசயத்தை ஒரே பதிவுல போட்டுடீங்க CVR

    அதானால மூனு தடவ படிச்சாதான் புரியுது!!

    - பாபு

    ReplyDelete
  14. //எனக்கும் நீங்க பதிவை படிச்சீங்கன்னு தெரிய வேண்டாம்?? ஹி ஹி)//

    படிச்சாச்சு...ஹி..ஹீ

    ReplyDelete
  15. /பின்னூட்டமிடாதவறுக்கும் நன்றி!!/

    சரீங்க!.

    நல்லா பாடோ சொல்லூற உங்களுக்கும் நன்றீங்க:-)

    ReplyDelete
  16. நல்ல விளக்கமான கட்டுரை. முடிந்தால் ஒரே படத்தை இரண்டு வித்தியாசமான செற்றிங்ஸ் இலை கொடுத்து விளக்கினால் இன்னும் ஆர்வத்தை தூண்டும். தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. தொடரட்டும் தங்கள் பணி! நல்ல பதிவு...
    அப்புறம்.. இந்த mm-க்கும், x-க்கும் என்ன தொடர்பு...அதையும் எழுதுங்கப்பு!

    ReplyDelete
  18. தொடர்ந்து உங்கள் பக்கம் வந்திட்டுதான் இருக்கேன்.இப்பத்தான் கேமிரா வாங்கி தலையை பிச்சிகிட்டு இருக்கேன்.கொஞ்சம் கற்றுக் கொண்டு மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  19. அருமையான பதிவு CVR. நிறைய புது விஷயங்களை எளிதாக சொல்லியிருக்கிறீர்கள். அப்படியே இந்த Metering Mode(அதுவும் focus'உடன் தொடர்பு கொண்டது தானே?) பற்றியும் எடுத்தால் உங்களுக்குப் புண்ணியமாகப் போகும். :-)

    ReplyDelete
  20. அருமையான பதிவு

    ReplyDelete
  21. அருமையான பாடம் சீ.வீ.ஆர்.. வருகை பதிவும் போட்டுவிட்டேன்.. இப்போது படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.. சுவாரஸ்யமாக இருக்கு

    ReplyDelete
  22. கேமரா பற்றி எதுவும் தெரியாமலே அந்தக்கால கிளிக்III கேமரால மாஸ்க் பண்ணி டபுள் ஸாட் எடுத்து...ம்..அது அந்தக்காலம்.
    அதுக்கப்புறமும் கேமரா பற்றி எதுவும் தெரியாமதான் இருந்தேன். உங்க பதிவுகளை படிக்கறவரைக்கும்.
    நன்றி CVR தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  23. தொடர் பயனுள்ளதாக உள்ளது. கற்பவரை மனதில் வைத்து எழுதும் பாங்கு அருமை. போற்றத்தகுந்த கூட்டு முயற்சி. தொடர்க உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. //இப்பொழுதெல்லாம் 12x-15x point and shoot கேமராக்கள் எல்லாம் வர ஆரம்பித்து விட்டன.//

    பாயின்ட் அன் ஷூட் உம், ஆடோ போகசும் ஒண்ணா? இல்லைதானே?

    ReplyDelete
  25. புகைப்படக்கலைக்கு தமிழில் அருமையான வலைப் பதிவு.நன்றி.

    ReplyDelete
  26. I want a canon 18-200 lens in chennai (without bill things are original?)

    ReplyDelete
  27. Anon,
    Are you looking for shops that sell camera?
    PS:- i personally doubt if things are original, when not billed. So proceed with caution.
    Regards
    Deepa Govind

    ReplyDelete
  28. அருமையான பதிவு... Thanks

    ReplyDelete
  29. Really useful page..
    and thelivaana vilakankal.
    ippothuthaan arambithullen, mikavum aarvamaka ullathu padippathatku.

    mikka nantri.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff