Friday, August 24, 2007

படம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன??

41 comments:
 
வணக்கம் மக்களே!!

எல்லோரும் எப்படி இருக்கீங்க???

இந்த மாசத்துக்கான போட்டியிலே உற்சாகமா கலந்துக்கிட்டதுனால எல்லோரும் ரொம்ப களைப்பா இருப்பீங்க,அதனால கொஞ்சம் ஓய்வு தரலாமேன்னு கொஞ்ச நாளா எந்த பதிவும் போடல.

ஆனா அடுத்த போட்டிக்கான அறிவிப்பு வரதுக்கு முன்னாடி லேசா சில விஷயங்களை அறிமுகப்படுத்திட்டு போகலாம்னு வந்தேன்.
நல்ல படங்கள் எடுக்கனும்னு நம்ம எல்லோருக்குமே நிறைய ஆசைதாங்க,ஆனா அது பத்தி கொஞ்சம் கத்துக்கலாம்னு பாத்தா நம்ம பசங்க டெக்னிகலா என்னென்னமோ பேசி நம்மல மூட் அவுட் பண்ணீருவாய்ங்க!! எத்தனை இணையதளம் பாத்திருக்கோம்??எத்தனை புகைப்பட
ஆர்வலர்களை சந்திச்சிருப்போம்??? எங்கிட்டு போனாலும் Aperture,shutter,ISO அப்படி இப்படின்னு டஸ்ஸு புஸ்ஸுன்னு பேசி நம்மள வெரட்டி
விட்டுருவாய்ங்க!!!
அப்படி அவிங்க என்னதான் சொல்ல வரானுங்க அப்படின்னு சில அடிப்படையான சொற்களின் அர்த்தங்களை பார்க்கலாமா???
ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிடறேங்க!! புகைப்படத்துறையை பொருத்த வரை எல்லாமே ஒளி சார்ந்தவை. நாம் எடுக்கும் புகைப்படங்கள் உண்மையாகவே பொருட்கள் அல்ல,பொருட்கள் மேலே பிரதிபலிக்கும் ஒளி தான். ஒரு கதவு (Shutter) வழியாக ஒளியை ஒருசில நேரம் லென்ஸ் வழியாக உள்ளே விட்டு அதை ஃபிலிமிலோ அல்லது டிஜிட்டல் சென்சரிலோ பதியச்செய்வது தான் புகைப்படத்துறையின் அடிப்படை.
இப்படி ஒளியை நாம் கேமராவில் பதிக்கும் பொழுது மூன்று விதங்களால் அதன் பதியும் திறன் மாற வாய்ப்பு உண்டு.

முதல் விஷயம் கேமராவின் லென்ஸின் விட்டம்(diameter)். விட்டத்தின் அளவிற்கேற்ப ஒளி உள்ளே வரும் அளவு மாறுபடும். விட்டம் அதிகமானால் ஒளி அதிகம் வரும்,கம்மியானால் ஒளியும் கம்மியாகிவிடும்.
அதே போல் ஒளியை தடுத்துகொண்டிருக்கும் கதவை (shutter) திறந்து மூடும் வேகம இன்னொரு காரணி். ஒரு நொடிக்குள் திறந்து மூடிவிட்டால் குறைந்த அளவு ஒளியே உள்ளே வரும்,அதிகமாக திறந்து வைத்திருந்தால் அதிகமான ஒளி வரும்.இதனால் படம் சரியான வெளிச்சம்,நிறம் எல்லாம் சரியாக விழுவதற்கு கதவை திறந்து மூடும் வேகம் ஒரு முக்கியமான விஷயம்.
மூன்றாவது படச்சுருளின் தரம்.சில படச்சுருள்கள் குறைந்த அளவு ஒளியையே நன்றாக பதிவு செய்து விடும்,அதிகப்படியான ஒளி இருந்தால் படம் வெளிரிப்போய்விடும். இரவு நேரங்களில் படம் எடுக்க இது போன்ற படச்சுருள்கள் மிகவும் உபயோகமாக இருக்கும். சில படச்சுருள்களின் மேல் அதிகப்படியான ஒளி இருந்தால் தான் படம் ஒழுங்காக பதியும்.

சரி!! இப்போதான் எல்லார்கிட்டேயும் டிஜிட்டல் கேமரா வந்துருச்சே!!! அதுல இந்த விஷயமே கிடையாதே அப்படின்னு கேக்கறிங்களா?? இது பத்தி மேல நான் ISO பத்தி சொல்லும்போது சொல்றேன்.
இப்போ கேமராக்கள் குறித்து அடிக்கடி விவாதிக்கப்படும் சொற்கள் சிலவற்றை பார்ப்போமா??
Shutter Speed: நான் முன்னமே சொன்னது போல,கேமராவின் உள்ளே விடப்படும் ஒளியை கட்டுப்படுத்த ,கதவு திறந்து மூடப்படும் நேரத்தை
கூட்டியோ குறைக்கவோ செய்வார்கள்.நொடிப்பொழுதில் நடந்து முடியக்கூடிய விஷயங்களாக இருந்தால் அவற்றை அதிவேக Shutter speed-ஓடு எடுப்பார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் தெறிக்கும் தண்ணிர், மோட்டார் ரேஸ்,பறக்கும் பூச்சி போன்ற காட்சிகளுக்கு கதவு நொடிப்பொழுதில் திறந்து மூடினால் அந்த நொடியில் நடந்த நிகழ்வு தெளிவாக படத்தில் பதியும். இப்படி செய்யும் போது ஒளி உள்ளே
வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் நீங்கள் எடுக்கும் காட்சி வெளிச்சமாக இருக்குமாரு பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு.

அதி வேக shutter speed-ஐ போல சில சமயங்களில் கதவு மிக மெதுவாக திறந்துமூடுமாறு வைப்பதும் ஒரு சுவாரஸ்யமான புகைப்பட உத்தி. பல நொடிப்பொழுதுகள் கதவை திறந்து வைத்தால் அந்த சமயத்தில் உள்வரும் ஒளி அனைத்தும் ஒரு வித்தியாசமான காட்சியை நமக்கு காட்டும்.

இந்த சமயத்தில் சற்றேனும் நகர்வு இருந்தால் கூட படம் ஷேக் ஆகி விடும் என்பதால் slow shutter speed காட்சிகள் பெரும்பாலும் tripod-இன் உதவியுடன் எடுக்கப்படும்.

அது சரி!! ட்ரைபாட் என்றால் என்ன என்று கேக்கறீங்களா??

அதாங்க!! ஸ்டூடியோல எல்லாம் கேமராவை ஏதோ ஒரு குச்சியின் மேலே வெச்சிருப்பாங்களே!! அந்த குச்சியின் பெயர் தான் ட்ரைபாட்.
இப்பொழுதெல்லாம் பெரும்பாலான கேமராக்களில் Shutter mode(TV mode) என்று படம் எடுக்கும் முறை இருக்கும். கேமராவை அதில் மாற்றிக்கொண்டால் எவ்வளவு நேரம் கதவு திறந்திருக்க வேண்டும் என்று நாமே முடிவு செய்துக்கொள்ளலாம். அதற்கேற்ப லென்ஸின் விட்டத்தை கேமராவே கண்டுபிடித்து மாற்றிக்கொள்ளும்.
Aperture: ஒரு கேமராவில் ஒளியை கட்டுப்படுத்த பயன்படும் அடுத்த முக்கியமான விஷயம் லென்ஸின் விட்டம்.
Aperture என்பதற்கு ஆங்கிலத்தில் துளை என்று பொருள் கொள்ளலாம்.லென்ஸிற்கு முன்பு ஒரு வட்டமான,சுருங்கி விரியக்கூடிய திரையின் துணையோடு
ஒரு துளை போன்ற அமைப்பு ஒன்று இருக்கும். இதை பெரியதாக்கி சின்னதாக்கி லென்ஸிற்கு வரும் ஒளியின் அளவை கட்டுப்படுத்தலாம். இந்த விட்டத்தின் அளவிற்கு ஏற்ப படங்கள் வித்தியாசமாக வெளிவரும். பொதுவாக அகலமான விட்டம் இருந்தால் படங்களில் DOF (இதை பற்றி பின்னர் பார்க்கலாம்) நன்றாக வரும்.உங்களுக்கு துளை பெரியதாக வேண்டும் என்றால் அதிகப்படியாக வரும் ஒளியை கட்டுப்படுத்த, கதவு திறந்து மூடும் வேகத்தை அதிகமாக்கி விடலாம். அதேபோல் துளை சிறியதாக இருந்தால் வேகத்தை குறைத்து ஒளி நிறைய நேரம் உள்ளே வருமாறு ஏற்பாடு செய்யலாம்.

உங்கள் கேமராவில் இருக்கும் Aperture Mode-ஐ உபயோகித்தால் உங்களுக்கு வேண்டிய அளவிற்கு துளையின் அளவை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதற்கேற்ற கதவின் வேகத்தை கேமராவே கூட்டி பெருக்கி செட் செய்து கொள்ளும்.

f-Number அல்லது fstop :நிறைய இடங்களில் இந்த வார்த்தையை வெச்சுக்கிட்டு எல்லோரும் செமத்தியா சீன் போட்டுகிட்டு இருப்பாய்ங்க!!! இந்த f-number-னா என்னன்னு பார்க்கலாமா???
சுருக்கமா சொல்லனும்னா இந்த f-number என்பது நம்ம லென்ஸ் துளை விட்டத்தின் அளவுகோள் என்று சொல்லலாம். f-Number அதிகமாக ஆக துளையின் விட்டம் சிறியதாகிக்கொண்டே போகும். அதாவது ஒரே லென்ஸில் f1.2-ஐ விட f5.6-இல் துளை சிறியதாக இருக்கும்.f நெம்பரில் ஒவ்வொரு புள்ளி கூட கூட துளையின் விட்டம் பாதியாக குறைந்துக்கொண்டே போகும். அதாவது f1.0-இல் இருப்பதை விட f2.0-இல் துளையின் விட்டம் பாதியாக இருக்கும். இப்படி விட்டத்தை குறைத்துக்கொண்டே போனால் உள்வரும் ஒளி குறையும் அல்லவா.அதனால் கதவின் வேகம் அதற்கேற்றார்போல் மாற்றப்படும். உதாரணத்திற்கு ஒரு லென்ஸின் f அளவை f1.0-இல் இருந்து f2.0ஆக மாற்றினால் அதன் துளை யின் அளவு பாதியாக குறையும் அல்லவா ,அதனால் கேமராவின் ஷட்டர் திறந்திருக்கும் நேரம் இரண்டு மடங்காக்கினால் தான் முன்பு கிடைத்த அதே அளவு ஒளி கிடைக்கும்.

உங்கள் கேமராவை Manual Mode-இல் பொருத்திக்கொண்டால் துளையின் அளவு,கதவு திறந்து மூடப்படும் வேகம் ஆகியவற்றை நீங்களே தனித்தனியே தீர்மானித்துக்கொள்ளலாம். அதுவே Automatic mode-இல் இருந்தால் ,கேமராவில் உள்ள light meter ஒளியின் அளவை ஊகித்து அதற்கேற்றார்போல் துளையின் விட்டம் மற்றும் ,கதவின் வேகத்தை தானே தீர்மானித்துக்கொள்ளும். நம்மில் பெரும்பாலனவர்கள் இதை நம்பித்தான் படம் எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

f-stop-க்கும் f-number-க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்,கேமராக்களில் பொதுவாக f1.0,f2.0 போன்ற முழுமையான அளவுகள் இருக்காது.கேமராக்களில் f2.8,f5.6 போன்ற அறைகுறை என்களில் f-Number-கள் உருவாக்கப்பட்டிருக்கும். இதைத்தான் f-stop என்கிறார்கள்.
fstop is nothing but a discrete rounding off of f-numbers
கணக்குல ஆர்வம் இருக்கறவங்களுக்கு ஒரு சமன்பாடு இதோ!!

f1 = Focal length of the lens (லென்ஸின் குவிய தூரம்) / Diameter of the lens (லென்ஸின் விட்டம்).

இதன்படி பார்த்தால் எப்பொழுது ஒரு லென்ஸின் குவிய தூரம் (focal length),அதன் விட்டத்தோட சமமா இருக்கோ அப்போ லென்ஸ் f1-இல இருப்பதாக சொல்லுகிறோம். லென்ஸின் விட்டத்தை நாம் குறைக்க குறைக்க f-number-இன் புள்ளி கூட்டிக்கொண்டே போகிறது!!
புரியுதா???
ஹ்ம்ம்ம் !! இருங்க திரும்ப ஒரு முறை படிச்சுட்டு சொல்றேன் என்கிறீர்களா?? ஒரு தடவைக்கு நாலு தடவை படிச்சு பாருங்க!! சந்தேகம் இருந்தா பின்னூட்டத்துல கேளுங்க!!
அதெல்லாம் சரிபா!! இந்த குவிய தூரம்(focal length) என்றால் என்னன்னு கேக்கறீங்களா???
அது ஒரு தனி கதை மக்களே,வேணும்னா அடுத்த பகுதியில சொல்றேன்!!சரியா???
அப்படியே DOF,ISO,White balance இதெல்லாம் என்னன்னும் பாக்கலாம் !! சரியா???
போறதுக்கு முன்னாடி ஒரு கொசுறு செய்தி. இந்த லென்ஸ் பற்றி பேசும்போது 18-55mm என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள் அல்லவா.இந்த குறியீடுகள் எல்லாம் இந்த குவிய தூரத்தின் அளவுகள் தான்!! :-)

அடிப்படையான விஷயங்களுக்கு அறிமுகமா இருக்கனுமேன்னு எந்த தலைப்பையும் பத்தி ரொம்ப விரிவா போகல!!ஏதாச்சும் அலோசிக்கனும்னா பின்னூட்டமிடுங்க!! அப்படியே சொல்லுறது புரியுதா, நல்லா இருகான்னும் சொன்னீங்கன்னா தொடரை செம்மைப்படுத்த வசதியா இருக்கும்!!
வரட்டா?? :-)

படங்கள் :
http://www.wtec.org/loyola/mems/fh6_4.gif
http://www.morguefile.com/lessons/lesson_images/applewat.jpg
http://www.stsite.com/camera/images/slowshut2.jpg
http://en.wikipedia.org/wiki/Image:Aperures.jpg
http://web.uvic.ca/ail/techniques/aperture.gif


41 comments:

 1. poradikkama paadam natathara unga style e thanithaan nanpare!

  ReplyDelete
 2. Nanri Nalla Pathivu. Pavan

  ReplyDelete
 3. நல்லாவே புரியுது,தொடருங்கள்.

  ReplyDelete
 4. கலக்கல் :-)

  ReplyDelete
 5. கலக்கல் CVR. ரொம்ப உபயோகமா இருக்கும்.

  யாராவது, photoshop அடிப்படை வித்தைகள் கத்துக் கொடுத்தா நல்லாருக்கும்.

  ReplyDelete
 6. அருமையான பதிவு!!!

  ///இந்த குவிய தூரம்(focal length) என்றால் என்னன்னு கேக்கறீங்களா???///

  இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல? பத்தாவது அறிவியல் சோதனைக்கூட வகுப்பு தேராம யாராவது இந்த மாதிரி பதிவு படிப்பாங்களா? இருந்தாலும் விக்கிபீடியால போட வசதியா இருக்கும்!!

  ReplyDelete
 7. படித்த பாடங்களை பரிட்சைக்கு முன்பு திரும்பி பார்த்துக் கொண்டு போவது போல் உள்ளது.அதுவும் தமிழில் பாடம் என்பதால் "நான் பாஸாயிட்டேன்" என்று வரப்புகளில் சத்தமிட்டு ஓடத் தோன்றுகிறது.

  ReplyDelete
 8. இப்படியே போனாக்கா..
  தமிழ் வாத்தியாருன்னா..நன்னன் னு சொல்லுற மாதிரி..

  காமிரா வாத்தியாருன்னா சீவீஆர் அப்படின்னு ஆகப் போறீங்க...

  நல்லா புரியுது..முடிவுல.எல்லோரும் சேர்ந்து ஆத்தா பாஸாக்கிட்டார்..சீவீஆர் அப்படின்னு சொல்லுவோம்..பாருங்க....

  KKK- கலக்குங்க காமிரா கவிஞரே...

  ReplyDelete
 9. சூப்பர் போஸ்ட் CVR....

  ReplyDelete
 10. //காமிரா வாத்தியாருன்னா சீவீஆர் அப்படின்னு ஆகப் போறீங்க...//

  ரிப்பீட்டுடுடுடு....

  ReplyDelete
 11. Cvr,
  nalla informational post :)

  ReplyDelete
 12. @அனானி
  நன்றி நண்பரே!! :-)

  @வடுவூர் குமார்
  வாங்க குமார்!! :-)
  பதிவு உபயோகமாக இருந்ததில் மகிழ்ச்சி!! :-)

  @பிரகாஷ்!!
  வாழ்த்துக்களுக்கு நன்றி பிரகாஷ்

  @சர்வேசன்
  தலைவர் நீங்க சொல்லீட்டீங்கல!!
  தொடர்ந்திட்டா போச்சு!!
  நான் Photoshop உபயோகிப்பதில்லை .
  அடிப்படை பிற்தயாரிப்பு நுணுக்கங்கள் பற்றி மக்கள் அறிந்துக்கொள்ள ஆர்வம் காட்டினால் வெவ்வேறு மென்பொருள்களில் அதை செய்வது பற்றி பார்க்கலாம். Photoshop காசு கொடுத்து வாங்க வேண்டும்,ஆனால் Gimp இலவசமாக கிடைக்கும் மென்பொருள் .அதை பற்றி நன் AN& -ஐ வேண்டுமானால் எழுத சொல்லலாம்!! :-)

  @அனானி
  //இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல? பத்தாவது அறிவியல் சோதனைக்கூட வகுப்பு தேராம யாராவது இந்த மாதிரி பதிவு படிப்பாங்களா? ///
  அதென்னமோ சரிதான் தல!! ஆனா பதிவு முழுமையா இருக்கனும்ங்கறதுக்காக அது பத்தியும் சொல்லிடலாம்னு நெனைச்சேன்!! :-)

  @நட்டு
  //அதுவும் தமிழில் பாடம் என்பதால் "நான் பாஸாயிட்டேன்" என்று வரப்புகளில் சத்தமிட்டு ஓடத் தோன்றுகிறது.///
  ஆகா!!!
  நன்றி நன்றி!!
  :-D

  @TBCD
  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணாத்த!! :-)

  ReplyDelete
 13. CVR,

  நல்ல பதிவு! வாரவிடுமுறையில் நேரமிருந்தா இந்த சுட்டியை பார்க்கவும்.

  http://mitworld.mit.edu/video/74/

  இந்த விரிவுரை உங்கள் அறிவை விரிவுபடுத்தும் என நம்புகிறேன்!

  - பாபு

  ReplyDelete
 14. @k4karthik
  வாங்க தல!!
  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :-)

  @ட்ரீம்ஸ்
  உபயோகமா இருந்தா சந்தோஷம் அண்ணாத்த!!


  @பாபு!!
  வாரக்கடைசியில நிச்சயமா பாக்கறேன்.
  சுட்டிக்கு மிக்க நன்றி பாபு! :-)

  ReplyDelete
 15. Fantastic work to start with... I will be reading this complete series. I am learning photography with my canon. Can you clarify me one thing?

  I am just confused with lins size measured in millimeter. Does it measures diameter of lens? How does it affect quality of photograph?

  Nice work..

  Sridhar H

  ReplyDelete
 16. @ஸ்ரீதர்
  வாங்க ஸ்ரீதர்!!
  பதிவின் கடைசியிலே ஒரு கொசுறு செய்தி போட்டிருக்கேனே பாக்கலையா???

  //போறதுக்கு முன்னாடி ஒரு கொசுறு செய்தி. இந்த லென்ஸ் பற்றி பேசும்போது 18-55mm என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள் அல்லவா.இந்த குறியீடுகள் எல்லாம் இந்த குவிய தூரத்தின் அளவுகள் தான்!! :-)//

  அதனால நீங்க பாக்கற அளவுகள் எல்லாம் லென்ஸின் விட்டம் (diameter)அல்ல,அவை லென்ஸின் குவிய தூரம்கள் (Focal length)! :-)

  ReplyDelete
 17. ஜீப்பர்.. அப்படியே ஒரு கேமரா பரிசுன்னு போட்டி வைங்களேன்.. நானும் கலந்துக்கறேன்.

  ReplyDelete
 18. CVR, அருமையான பதிவு. தொடருங்கள் உங்கள் சேவையை!! :-)

  ReplyDelete
 19. CVR,
  அருமையான நடை மற்றும் விளக்கங்கள்.
  சத்தியா

  ReplyDelete
 20. CVR

  Today only i got introduced to this blog by Iyappan. Thanks for your excellent tutorials. Keep going. Good start. It is going to help a number of 'Auto mode' aim and shoot guys like me :))

  Thanks
  Sa.Thirumalai

  ReplyDelete
 21. நல்ல பயனுள்ள பதிவு தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 22. //இந்த லென்ஸ் பற்றி பேசும்போது 18-55mm என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள் அல்லவா.இந்த குறியீடுகள் எல்லாம் இந்த குவிய தூரத்தின் அளவுகள் தான்!!//

  பயங்கரமான நியூபி கேள்வி கேக்கவா?
  காமிரால எத்தனை லென்ஸ் இருக்கு? குவியதூரம் எப்படி மாறும்?

  ReplyDelete
 23. சரி சரி சாரி
  :-0
  அடுத்த பாடம் படிச்சிட்டேன்
  லென்ஸ் சமாசாரம் புரிஞ்சு போச்சு.

  ReplyDelete
 24. இன்றுதான் இந்த வலியகத்தைப்பார்த்தேன்.மிக நல்ல முயற்சி.பாடம் எனக்கேபுரிகிறது! எனவே மற்றவர்களுக்கு இன்னும் நன்றாகப்புரியும்.

  ReplyDelete
 25. Hai I m Arun,
  Today only I bought Canon A480 - Powershot.
  So, just I vissited ur blog to know something about my Camera. Bu u r ghaving so much information about Photography.Ur site is looking like a library abt Photography , great effort .
  Happy New Year 2010 !!!

  ------ Ini thodarndu ungaladhu blog padikka pogiren ...... Nandri !!!!!
  --------

  ReplyDelete
 26. வணக்கம்,
  நான் இதுவரை Canon Powershot A95 உபயோகப் படுத்திகொண்டிருந்தேன்.ஆனால், அதன் Display இப்பொழுது என்னைப் படுத்துவதால், ஒரு புதிய காமிரா வாங்க முடிவு செய்துள்ளேன்.வாங்குவதை 'என் பேச்சைக் கேட்கும்' DSLR ஆக வாங்க ஆசை.அதில் அதிகம் அறிமுகம் இல்லை.கற்றுக்கொள்ள ஒரு நல்ல ஆரம்ப நிலை(பட்ஜெட் கொஞ்சம் கம்மி- 25கே அளவில்)DSLR Camera ஒன்றை பரிந்துரை செய்யுங்களேன்.


  அனு.

  ReplyDelete
 27. @அனு.. நீங்கள் தெரிவித்திருக்கும் பட்ஜெட்டில்
  கீழ்கண்டுள்ள கேமராக்களை வாங்கலாம்..

  CANNON 1000 D
  NIKON D 3000

  இவ்விரண்டும் உங்க பட்ஜெட்டுக்கு ஒத்து வரும்.. இரண்டும் நல்ல கேமரா தான்.. ஆனால் இவ்விரண்டில் CANON 1000 D யே சிறந்தது ஆகும்..

  இந்தியாவில் என்றால் இந்த மாடலையே வாங்கவும்..

  அமெரிக்காவில் என்றால் nikon d5000 இந்த விலைக்கு கிடைக்கின்றது..அது இன்னும் கொஞ்சம் சிறந்தது..

  எனவே இந்தியாவில் வாங்குவதாக இருந்தால் canon 1000 d ...( nikon d3000 வாங்கினாலும் தவறில்லை)

  அமெரிக்காவில் என்றால் nikon d5000

  -கருவாயன்

  ReplyDelete
 28. Sir , basically i am a web designer and interested in Photography. so i bought canon 550D .. i dont know the settings how to take images by manualy. when i read your blog post its helps me lot .. Thank you very much sir.
  my Photography link
  http://www.flickr.com/photos/58466739@N02/sets/
  And pleas let me know how to improve my skills in photography

  ReplyDelete
 29. This sentence does not make sense.


  Aperture என்பதற்கு ஆங்கிலத்தில் துளை என்று பொருள் கொள்ளலாம்

  ReplyDelete
 30. நான் வைத்திருப்பது கேனான் sx40 HS PowerShot Camera. இது கிட்டத்தட்ட ஒரு Entry Level DSLR என்றாலும் முழுக்க முழுக்க DSLR அல்ல. ஆனால் இப்போதைக்கு இதுதான் என்னிடம் உள்ளது. Manual modeஇல் வைத்து f நம்பரை மாற்றிப்பார்க்கலாம் என்றால் என்னுடைய கேமராவில் fnumber என்பது புள்ளி புள்ளியாய் அல்லாமல் விகிதமாக உள்ளது. உதாரணத்திற்கு f/5, f/30 என்பது போன்று. இதில் எப்படி அளவை கண்டுபிடிப்பது? இரவு நேர உபயோகத்திற்கும் இந்த f numbersக்கும் என்ன சம்பந்தம்? இந்த கேமராவை வைத்துதான் மேலும் மேலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் இதை சொன்னால் வசதியாக இருக்கும். நன்றி.

  ReplyDelete
 31. // பொதுவாக அகலமான விட்டம் இருந்தால் படங்களில் DOF (இதை பற்றி பின்னர் பார்க்கலாம்) நன்றாக வரும்//

  decreasing the aperture diameter will increase the DOF right?So please modify the above statement

  ReplyDelete
 32. நன்றி.இன்று தான் (01-07-13) இந்த வலையை கண்டடுதேன். மிக்க நன்றி.அருமை. தொடருங்கள் நாங்களும் உங்களை தொடர்வோம்.

  ReplyDelete
 33. Mikka Nandri.. Elimaiya vivarichurukeenga... :)

  ReplyDelete
 34. doing a gr8 job....keep going....waiting for ur ISO tamil explanation...

  thanks,
  selva

  ReplyDelete
 35. Hello there! This article could not be written any better!
  Reading through this post reminds me of my previous roommate!
  He always kept preaching about this. I most certainly will send this information to him.

  Fairly certain he will have a good read. I appreciate you for sharing!

  It's the best time to make some plans for the long run and it's time to
  be happy. I have read this put up and if I could I wish to recommend you some interesting things or suggestions.
  Perhaps you can write next articles referring to this article.
  I desire to read even more things approximately it! Does your website have a contact page?
  I'm having a tough time locating it but, I'd like
  to shoot you an email. I've got some recommendations for your blog
  you might be interested in hearing. Either way, great
  website and I look forward to seeing it develop over time.
  http://foxnews.net

  ReplyDelete
 36. First, a few definitions: Pollination is the switch of pollen from the
  male flower components to the female flower elements.

  ReplyDelete
 37. Appрrecіɑting the time and energy you puut ino your blog andd ԁеtaіled information you offer.
  It's greeat to сome across a blog everty once inn a while
  that isn't the same ߋufdɑteⅾ rehashed information. Fantastic read!
  I've saved your site annd Ι'm addіng your RSS feeds to my Google account.

  ReplyDelete
 38. Hello, I do believe your blog could possibly be having internet browser
  compatibility issues. When I look at your web site in Safari, it looks
  fine however, if opening in IE, it's got some overlapping
  issues. I simply wanted to provide you with a quick heads up!
  Besides that, excellent site!

  ReplyDelete
 39. This page really has all of the information and facts I
  wanted about this subject and didn't know who to ask.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff