Tuesday, January 1, 2008

காட்சியமைப்பு குறிப்புகள்(Composition tips)

15 comments:
 
அன்பார்ந்த தமிழ் வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்,
நாம படம் பிடிக்கும் போது பொருட்கள்,மக்கள்,இடங்களின் முக்கியமான பகுதிகள் போன்றவை காட்சியின் எந்த மூலையில் பொருத்துகிறோமோ அதை பொருத்தே படம் பார்ப்பதற்கு கச்சிதமாக அமையும்.இப்படி படம் எடுக்கும் போது கட்சியமைப்பை பற்றி சிந்திக்கும் கலையை ஆங்கிலத்தில் Composition என்று சொல்வார்கள்.கால காலமாக நல்ல படங்களை ஆராய்ந்த புகைப்படக்கலை ஆர்வலர்கள் அந்த படங்களின் பொதுவான அம்சங்களை பார்த்து சில வழிமுறைகளை வகுத்துள்ளனர். முப்பகுதி கோட்பாடு(Rule of thirds), வழிநடத்தும் கோடுகள்(leading lines) போன்றவை இது போன்ற வழிமுறைகளில் முதன்மையானவை.அப்படிப்பட்ட சில வேறு காட்சியமைப்பு உத்திகளை தான் இன்றைக்கு பார்க்க போகிறோம்.

புகைப்படக்கலை சார்ந்த எல்லா வழிமுறைகளை போல இதுவும் நாம் சிறந்த படம் தாயாரிப்பதற்கு வெறும் ஆலோசனை என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்!! இவையெல்லாம் சார்ந்து படம் எடுத்தால் தான் படம் நன்றாக வரும் என்றோ,இவை பின்பற்றவில்லையென்றால் படம் நன்றாக வராது என்றோ அர்த்தம் கொள்ள கூடாது.

கருப்பொருள்(Subject) பார்ப்பதற்கு இடம் தாருங்கள் :

ஒரு படத்தில் ஒரு ஆள் இடப்புறம் பார்ப்பது போல உள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள் , அந்த ஆள் பார்க்கும் திசையில் கொஞ்சம் இடம் விட்டு வைத்தால் படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். மனிதர்களுக்கு இயற்கையாகவே யாராவது ஏதாவது பார்த்தால் அவர் என்ன பார்க்கிறார் என்பதை நாமும் பார்க்கவேண்டும் என்று ஆசை தொற்றிக்கொண்டு விடும். திரைப்படங்களில் கூட கதாநாயகன் ஏதாவது எட்டி பார்ப்பது போன்றோ அல்லது ஒளிந்திருந்து பார்ப்பது போன்றோ ஒரு காட்சி இருந்தால்,அடுத்த காட்சியிலேயே அவர் என்ன பார்க்கிறார் என்று காண்பித்து விடுவார்கள். அப்படி காட்டவில்லை என்றால் நமக்கு தலையே வெடித்துவிடும்.பொதுவாக படங்களில் கூட யாராவது எதையாவது பார்ப்பதாக இருந்தால் அவரின் பார்வை போகும் திசையை நமது பார்வையும் தொடரும்.அந்த சமயத்தில் பார்ப்பதற்கு இடம் இல்லாமல் படம் முடிந்துவிட்டால் படத்தில் ஏதோ குறைந்தது போல் தோன்றும்.
மனிதராகவோ அல்லது உயிருள்ள பிராணியாகவோ கூட இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.உயிரற்ற பொருளாக இருந்தாலும் கூட அந்த பொருள் பார்த்துக்கொண்டிருக்கும் திசையில் இடம் விட்டால் படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
இந்த உத்தியை விளக்கும் சில படங்கள் கீழே.
நகர்ந்துக்கொண்டிருக்கும் பொருள் போக இடம் தாருங்கள்:
நகர்ந்துக்கொண்டிருக்கும் ஒரு பொருளை படம் பிடிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்,அந்த சமயத்தில் நீங்கள் படம் பிடிக்கும் பொருள் நகர்ந்து செல்லும் திசையில் இடம் விட்டால் படம் பார்க்க நன்றாக இருக்கும்.படத்தில் ஒரு பொருள் கடந்து வந்த பாதையை இறந்த வெளி (Dead space) என்றும் ,கடந்து போக வேண்டிய பாதையை இயங்கு வெளி (active space) என்றும் குறிப்பிடுவார்கள்.ஒரு பொருள் நகர்ந்துக்கொண்டிருப்பதை பார்த்தால் அது போகப்போகும்் திசையை ஒட்டியே தான் நம் பார்வையும் செல்லும். அதனால் அது நகர்ந்துக்கொண்டிருக்கும் திசையில் சிறிது இடம் விட்டு வைத்தால் படம் பார்க்க நன்றாக இருக்கும்.அதாவது இறந்த வெளியை விட இயங்கு வெளி அதிகமாக இருக்க வேண்டும்.
இதை உணர்த்தும் உதாரணம் ஒன்று உங்கள் பார்வைக்கு.

ஆனால் ஒரு படத்தில் இயங்கு வெளியை விட இறந்த வெளி அதிகமாக இருக்கக்கூடிய நிர்பந்தம் கூட சில சமயங்களில் ஏற்படலாம்.அதாவது ஒரு பொருளின் வேகத்தை காட்ட முற்படும்போதோ அல்லது.ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கடந்த வந்த தூரத்தை குறிப்பிட்டு காட்ட முனையும் போது இறந்த வெளியில் அதிக இடம் இருப்பது போல் காட்சியை அமைக்கலாம்!
அதற்கான உதாரணங்கள் சிலவற்றை கீழே பார்ப்போம்.


பாத்தீங்களா இது மாதிரி சின்ன சின்ன விஷயங்களை கவனத்தில் கொண்டால் நாம் எடுக்கும் புகைப்படங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணலாம்!!
இப்போதைக்க்கு இது போதும்,இதுக்கு மேல ஏதாச்சும் சொன்னா குழம்பி போய்டும்.
பதிவுல ஏதாச்சும் சந்தேகம்/கருத்துக்கள் இருந்தால் பின்னூட்டமிட்டுங்கள்,கலந்தாலோசிப்போம்!!
வரட்டா?? :-)

படங்கள் மற்றும் குறிப்புகள் :
http://digital-photography-school.com/blog/give-your-subject-space-to-look-into/
http://digital-photography-school.com/blog/create-active-space-in-your-photography/
http://digital-photography-school.com/blog/leaving-space-behind-moving-subjects-composition/

15 comments:

 1. அந்த பெரிய அலை... சூப்பராக இருக்கு.

  ReplyDelete
 2. kalakkal post thambi. en iniya puthaaNdu vaazthukkal vaathiyare!

  ReplyDelete
 3. @வடுவூர் குமார்
  ஆமாம் குமார்!!
  இந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயங்களுக்கான சரியான உதாரணங்கள் அவை! :-)

  @செல்லா
  வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி!
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! :-)

  ReplyDelete
 4. சூப்பர் தகவல்கள்.... வளரெ நன்னி... :)

  ReplyDelete
 5. அருமையான பதிவு.

  எளிமையா பெரிய விஷயத்த சொல்லியிருக்கீங்க.

  (அப்படியே, வூட்டுல இருக்கர ஜாமான எப்டீ படம் புடிச்சா நல்லா வரும்னு ஒரு பதிவு போட்டீங்கன்னா, எனக்கு வேல மிச்சம். நான் கொஞ்சம் பி.ஜி இந்த வாரம் ;) )

  ReplyDelete
 6. \\ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கடந்த வந்த தூரத்தை குறிப்பிட்டு காட்ட முனையும் போது இறந்த வெளியில் அதிக இடம் இருப்பது போல் காட்சியை அமைக்கலாம்!
  அதற்கான உதாரணங்கள் சிலவற்றை கீழே பார்ப்போம்.\\

  உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ள படங்கள் மிக அருமை! சரியான தேர்வு!

  இப்பதிவு புகைப்படக்கலையின் நுட்பங்களை மிக எளிமையாகவும்,அதே சமயம் துள்ளியமாகவும் விளக்குகின்றது.

  நன்றி சிவிஆர்!

  ReplyDelete
 7. @இராம்
  உங்களுடன் நடந்த உரையாடலின் போது தான் இந்த பதிவு போட தோன்றியது.
  அதனால் நானும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்! :-)

  @சர்வேசன்
  முயற்சி செய்கிறேன் சர்வே! :-)
  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  @திவ்யா
  ஒரு படத்தை தவிர மற்ற எல்லா படங்களும் நான் கீழே குறிப்பிட்டிருக்கும் இணையதளத்தில் இருந்து எடுத்ததுதான் திவ்யா! :-)
  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :-)

  ReplyDelete
 8. நல்ல விளக்கம் . வாத்தியார் வாத்தியார் தாம்பா.


  சூப்பர்.

  ReplyDelete
 9. அருமையான டிப்ஸ். மிக்க நன்றி சிவிஆர்.

  ReplyDelete
 10. நல்ல பதிவு CVR

  ReplyDelete
 11. SUPER
  I am only starting learn Photography
  This is very good
  Raja

  ReplyDelete
 12. nalla pathivugal. Elementary level photographersku payan tharum. Thangal pani thodara vazhthukkal.

  ReplyDelete
 13. ஆனால் ஒரு படத்தில் இயங்கு வெளியை விட இறந்த வெளி அதிகமாக இருக்கக்கூடிய நிர்பந்தம் கூட சில சமயங்களில் ஏற்படலாம்.அதாவது ஒரு பொருளின் வேகத்தை காட்ட முற்படும்போதோ அல்லது.ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கடந்த வந்த தூரத்தை குறிப்பிட்டு காட்ட முனையும் போது இறந்த வெளியில் அதிக இடம் இருப்பது போல் காட்சியை அமைக்கலாம்!
  அதற்கான உதாரணங்கள் சிலவற்றை கீழே பார்ப்போம்..


  But the horse came inside to out side... so i think my vision go to back (Dead space)

  ReplyDelete
 14. I used to take many pics randomly without any proper ideas and show it to my photography frnd, he only said "pls read this blog and add some knowledge abt photography". yes this is really awsome.

  ReplyDelete
 15. super tips.. and useful tips ...thank u...

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff