Showing posts with label Composition. Show all posts
Showing posts with label Composition. Show all posts

Monday, October 29, 2012


முதல் சுற்றில் வரவேண்டியது... சில தவறுகளில் வெளியேறியவை.

படத்தின் மேல் சுட்டினால் பெரியதாகப் பார்க்கலாம்.

Before After Comments
 - na- 
Left corner was a distraction. Looks like edited with  picasa and  center focus option used. signature in the pic also a distraction.
தேவையான காண்ட்ராஸ்ட் / ஷார்ப்னெஸ் இல்லை.
தேவையான காண்ட்ராஸ்ட் / ஷார்ப்னெஸ் இல்லை. மேலும் இடது பக்கம் பாதி தெரியும் அந்த புதர்/செடி தவிர்த்திருக்கலாம்.
தேவையான காண்ட்ராஸ்ட் / ஷார்ப்னெஸ் இல்லை.வானத்தின் நிறம் சாம்பல் நிறத்தில் இருப்பதும் குறை.
சப்ஜெக்ட் மீது முழு கவனம் செலுத்த முடியாமல் தடுக்கும் காரணிகளைத் தவிர்த்திருக்க வேண்டும்.சொல்ல வருவதை அவை தடுக்கின்றன.
Check the cropped/Processed version to see the diff

படம்1: Krishna
படம்2: Soundararajan
படம்3: Dr. M.K.Muruganandan
படம்4: Antony Satheesh
படம்5: Vanila
படம்6: kvp


மேலும் சில படங்களுக்கு பிகாசா ஆல்பத்திலேயே கமெண்ட் செய்திருக்கிறேன். விரைவில் முதல் மூன்றுடன் சந்திப்போம்.

Thursday, March 1, 2012

வணக்கம் மக்களே,
ரொம்ப நாளாச்சுங்க உங்களை இங்க சந்திச்சு. நேத்து ஒரு நண்பர் கிட்ட பேசிட்டு இருக்கும் போது கருப்பு வெள்ளையில் படம் எடுக்கறது பத்தி சில குறிப்புகள் கேட்டாருங்க. சரி தெரிஞ்சத சொல்லி வச்சேன். அவரு கிட்ட சொன்னத உங்க கிட்டயும் சொல்றேன். சரிங்களா ?

1 - உங்க கிட்ட இருக்கிற கேமரால கருப்பு வெள்ளை மோட் இருந்தாலும், கலர்ல முதல்ல போட்டோ எடுத்துக்கோங்க. பின்னாடி அதை கருப்பு வெள்ளைக்கு மாத்திடுங்க. கேமரால நேரடியா கருப்பு வெள்ளையில எடுக்கலாம் தான். ஆனா அது "Pre-Processed" ஆ இருக்கறதால அதிகம் ப்ராஸஸ் பண்ண முடியாது. கலர்ல எடுத்து மாத்தும் போது தேவையான "Editing" சுதந்திரம் கிடைக்கும்

2 - போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் கலரை கண்ணுல இருந்து மறைச்சுட்டு, இது கருப்பு வெள்ளையில் இருந்தா எப்படி இருக்கும்னு யோசிங்க. ஏன்னா எல்லா வண்ணப் புகைப்படங்களுமே கருப்பு வெள்ளையில் மாத்தும் போது அழகா இருக்கனுங்கற அவசியம் இல்லை

3 - ஐ.எஸ்.ஓ செட்டிங் எவ்வளவு குறைவா வச்சு எடுக்க முடியுமோ அவ்வளவு குறைவா வச்சு எடுங்க. நிறைய டீடெயில்ஸ் கிடைக்கும். "ISO Noise " சேர்த்தா நல்லா இருக்கும்னு நினைச்சீங்கன்னா அதை போஸ்ட் ப்ராசசிங்க செய்யுங்க. ரிசல்ட் அருமையா இருக்கும்.


4 - "RAW" மோட் உங்க கேமரால இருந்தால் அதை உபயோகப் படுத்திக்கோங்க. சப்ஜெக்ட் மீதான டீடெயிலிங்க்கு அது நிறைய உதவும். உதாரணத்துக்கு கீழே இருக்கும் படத்தைப் பார்க்கவும்.

(Photo courtesy : http://www.digital-photography-school.com/wp-content/uploads/2007/02/black-and-white-tips.jpg )

5 - வழக்கமான ஒண்ணு தான். காலை மாலை வேளைகளில் புகைப்படம் எடுப்பது நல்லது. உங்களோட கற்பனைக் குதிரையத் தட்டி விடுங்க. தறிகெட்டு ஓடட்டும்.


சில எடுத்துக் காட்டுப் படங்கள்.


படம் : சுரேஷ் பாபு (எ) கருவாயன்.
படம் : சுரேஷ் பாபு (எ) கருவாயன்.



படம் : இராமலக்ஷ்மி



படம் : இராமலக்ஷ்மி


படம் : இராமலக்ஷ்மி

படம் : இராமலக்ஷ்மி


படம் : இராமலக்ஷ்மி

படம் : MQN


படம் : MQN




இனிமே... மக்களே உங்க சமத்து!.


விதிமுறைகள் இங்கே

கடைசித் தேதி: மார்ச் - 20.

ஜமாய்ங்க!

*****

முக்கிய அறிவிப்பு: [4 மார்ச் 2012]

நண்பர்களே, படங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் ஐடியில் மாற்றம் அறிவித்திருக்கிறோம். விதிமுறைப் பதிவிலும் கீழ்வருமாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது:

படங்களை 111715139948564514448.submit@picasaweb.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பாக அனுப்பவும். Please also CC photos.in.tamil@gmail.com .
  • இதுவரையிலும், அதாவது இன்று 4 மார்ச் 2012 வரை ஏற்கனவே பழைய ஐடிக்கு அனுப்பி விட்டிருந்தவர்களின் படங்கள் ஆல்பத்தில் சேர்க்கப்பட்டுவிடும்.
  • பலர் File size பெரிய அளவில் இருக்குமாறு படங்களை அனுப்புகிறீர்கள். அவை போட்டி ஆல்பத்தில் சேருவதில் சிரமம் ஏற்படுகிறது. 1024x768 எனும் அளவில் படங்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் நல்லது.


***




Monday, January 19, 2009

போட்டியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் முதலில் குழுவின் சார்பாகவும், பார்வையாளர்கள் சார்பாகவும் நன்றிகள் பல. வழக்கம் போல் நல்ல அதீத அழகுடன் கூடிய படங்கள் திக்கு முக்காட வைக்கிறது.

இருந்தும் சில புகைப்படங்கள் நன்றாகவே இருந்தாலும், அதில் சில காரணிகள் நம்மை அந்தப் புகைப்படத்தின் அழகை ரசிக்க விடாமல் செய்யும். முக்கியமானது "நேரம்/தேதி". இது பெரும்பாலும் தவிர்க்கக் கூடியதே. போட்டிக்கு என்று இல்லாமல் உங்களின் தனித்தேவைக்கு என்று பார்த்தாலும் இது தேவையற்றதே. நேரம் மற்றும் தேதி மற்றும் பல முக்கியமான விவரங்கள் புகைப்படத்தின் எக்ஸிஃப் [EXIF Details ] பகுதியில் ஏற்கனவே சேமிக்கப் பட்டிருக்கும். ஆதலால் அது பற்றிய கவலை இல்லாமல் நீங்கள் நேரம் மற்றும் தேதிக்குண்டான தேர்வை தேர்ந்தெடுப்பதை நிறுத்துங்கள்.


அதுபோலவே படத்தின் மேலேயே தலைப்பை எழுதுவது, படத்தின் அழகை வெகுவாக குறைத்து விடுகிறது.



போட்டிக்கு என்று இல்லை. தனிப்பட்டத் தேவைக்கும் புகைப்படம் எடுக்கும் போதும், எடுத்தப் பின்னும் கீழே சொல்பவற்றை முடிந்த வரையில் பின்பற்றினால் நல்ல புகைப்படம் கிடைக்கும்.

1 - புகைப்படத்தின் மீது எதையும் திணிக்காதீர்கள்.
2 - வெகு சாதரணமாய் இருக்கும் புகைப்படத்தையே கோணம் மாற்றி எடுங்கள். உங்களுக்கு திருப்தியாக தோன்றும் வரை எடுத்துக் கொண்டே இருங்கள்.
3 - அடிப்படை விவரங்களை மனதில் கொண்டு அதற்கேற்றமாதிரி செயல்படுங்கள். (அடிப்படை பாடங்களின் பட்டியல் இடுகைக்கும் கீழே இருக்கிறது )
4 - புகைப்படத்தின் தேவையற்ற பகுதிகளை வெட்டிவிட்டு பாருங்கள், அல்லது வேறு கோணத்தில் க்ராப் செய்து பாருங்கள்.
5 - நீங்கள் எடுத்த புகைப்படத்தை வேறொரு மூன்றாம் மனிதரின் புகைப்படம் போல தயவு தாட்சண்யம் இன்றி உங்களுக்கு நீங்களே விமர்சித்துப் பாருங்கள்.

இவையெல்லாம் பல முறை ஏற்கனவே சொன்னது தான். மீண்டும் நினைவுறுத்துகிறோம்.
******
More tips are available in the below slide from hp.com. This slide will open only when you open this post. Not in consolidate list mode.




Thanks HP for the above slide: Link : http://www.hp.com/united-states/consumer/digital_photography/tours/beginners/index.html


உங்களுக்கு சில விவரங்கள் புரியவில்லை, ஏற்கனவே சொன்ன பாடங்களில் திருப்தி இல்லை என்று தோன்றினால், மின்னஞ்சலில் எங்களைத் தொடர்புக் கொள்ளலாம்.

முதல் பத்து இடங்களுக்கான இடத்தைப் பிடிக்கும் படங்களின் விவரம் இரண்டொரு நாளில் வெளிவரும். அதுவரை பொறுத்திருக்கவும்.

Monday, August 25, 2008

பொதுவாகவே கட்டிடங்களைப் புகைப்படமெடுப்பதென்பது இலகுவாகத் தோன்றினாலும், சவால் நிறைந்த ஒன்று தான் அதுவும் புதிய நிழற்படக்காரர்களுக்கு. துறை சார்ந்த நிபுணர்களும் இதை ஒத்துக் கொள்வார்கள். இந்த வகை புகைப் படங்களுக்கு வரவேற்பும் அதிகம் என்பது முக்கியமான ஒன்று. ஆனால் முடியாததென்று எதுவும் இல்லை அல்லவா


Architecture / கட்டமைப்பு நிழற்படங்களுக்கு முக்கியமான இடையூறாக இருப்பது கோடுகள். எந்தப் பெரிய அல்லது சிறிய கட்டிடமாக இருக்கட்டுமே அதில் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் இருக்கும். ( Remember leading line concept ). இந்தக் கோடுகள் கவனத்தைச் சிதறடிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். இது பெரும்பாலும் தவறான கோணத்தில் எடுக்கும் போது புகைப் படத்தின் அழகையே கெடுத்து குட்டிச் சுவராக்கி விடும். ஆனால் அதுவே சற்று யோசித்து சரியான கோணத்தில் எடுத்தால் அற்புதமான அழகைத் தரும். உதாரணத்துக்கு சொல்லனும்னா, கட்டிடத்தின் அருகே நின்று வெகு நேராக எடுக்கும் புகைப்படத்திற்கும் , அதையே பக்க வாட்டிலோ அல்லது சற்று வித்தியாசக் கோணத்திலோ எடுத்தால் வரும் படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரியும்.




பண்ணை வீடுகளையோ அல்லது தனித்திருக்கும் வீடுகளையோ அல்லது பழைய காலத்து கட்டிடங்களை எடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. அந்தக் கட்டிடத்தை சற்று தூரத்தில் இருந்து, கட்டிடத்திற்கு சுற்றி இடம் போதுமான அளவு இடம் விட்டு எடுத்துப் பாருங்கள். அந்தக் கட்டிடத்தை சுற்றி இருக்கும் பொருள்களே, இது போன்ற கட்டிடத்தின் அழகை நிர்ணயிக்கும் காரணிகள்.

Viewpoint - Rajaseat - Madikere - Coorg


உயரமான கட்டிடத்தை எடுக்க வேண்டுமெனில், கட்டிடத்தின் அருகில் நின்று மேலே பார்த்தவாரெடுத்தால், மேல் கட்டிடம் மிக வித்தியாசமாகக் காணும். ( அழகா இல்லையா என்பது எடுத்துப் பார்த்தால் மட்டுமே தெரியும் ;) )

Mysore- Tippu

இந்த வகைப் புகைப்படத்தில், நிழற்படத்தின் அழகை நிர்ணயிக்கும் முக்கிய காரணி - வெளிச்சம். கட்டிடத்தை முழுமையாக எடுக்கும் போது வானத்தின் வெளிச்சத்திற்கும், கட்டிடத்தின் மேலுள்ள வெளிச்சத்துக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். கட்டிடம் சற்று இருட்டாக இருக்கும் சில நேரங்களில். சூரிய வெளிச்சம் கட்டிடத்தின் மேல் விழும் நேரத்தில் எடுத்தால் அழகாக இருக்கும்.

On the way to mysore
உதாரணத்திற்கு சொல்லனும்னா, காலை அல்லது மாலை நேரத்தில், கட்டிடத்தின் பின் சூரியன் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அப்போது கட்டிடத்தின் மீது விழும் வெளிச்சம் வெகு குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் கட்டிடத்தின் அழகு கிடைக்காமல் கருப்பொருள் under-exposed condition ஆக போய்விடும்.

Sunset - at home town

கட்டிடத்தின் உள்ளேயோ அல்லது வெளியேயோ, எடுக்கும் போது நிழல்களையும் சற்று கவனித்து எடுக்கலாம். கட்டிட நிழல்கள் அருமையான புகைப்படத்திற்கு உத்திரவாதம் அளிக்கும். பக்க வாட்டில் இருந்து விழும் வெளிச்சத்தினால் அதிக அளவு நீண்ட நிழல் கிடைக்கும். ஆகவே காலை மற்றும் மாலை வேளைகளில் முயற்சித்துப் பாருங்கள்.





துறை சார்ந்த கட்டிடங்கள் எடுக்கும் போது அங்கு வேலை செய்யும் ஆட்கள் ஃப்ரேமில் இருந்தால், அழகு கூடும் இல்லையா ? சில கிராமத்து வீடுகளை தனியாக எடுப்பதை விட அந்த கிராமத்து மனிதர் அந்த ஃப்ரேமில் இருந்தால், சொல்ல வரும் செய்தி அழுத்தமாக வரும். அது போல இடத்திற்கேற்றவாறு முயற்சிக்கவும்.





அகழ்வாராய்ச்சி நிலையில் இருக்கும் அழிவு நிலைக் கட்டிடங்கள் கட்டமைப்புகள் எல்லாம் பிற்காலத்தில் பலருக்கும் உபயோகமாயிருக்கும். புதர் மண்டிய இடங்களை சற்று தூரத்தில் நின்று எடுக்கும் போது சற்று பேய்வீடு கெட்டப் வரும். எடுத்தப் பின் நீங்கள் பயந்து போகக் கூடாது என்பது முக்கியமான ஒன்று.

Tippu 01

உங்களிடம் நல்ல ஜூம் லென்ஸ் இருக்கிறதா, முடிந்த வரையில் சற்று தூரத்தில் நின்று அப்புறம் கட்டமைப்பை ஃபோகஸ் செய்யுங்கள். மிக அருகில் இருந்து எடுப்பதற்கும், தூரத்தில் இருந்து ஜூம் செய்து எடுப்பதற்கும் அதிக வித்தியாசம் காண்பீர்கள். ( ஏன் என்பது பற்றி நேரமிருந்தால் தனிப் பதிவிட முயற்சிக்கிறேன் )


சில நேரங்களில் கட்டிடங்களை/கட்டமைப்புகளை நேர் கோணத்தில் எடுத்தும் பாருங்கள். கட்டிடங்கள்/கட்டமைப்பு என்பதால், கட்டிடங்களில் உள்ள ஃப்ரேம்களை படத்தில் கொண்டு வர முயற்சியுங்கள்.

படிகள் உள்ளக் கட்டிடங்களை தேர்ந்தெடுத்தீர்களா ? நல்லது. அதில் உள்ளக் கோடுகளை வழி நடத்திச் செல்ல விட்டு அதற்கேற்றார்போல புகைப்படம் எடுங்கள்.

கட்டிடம்/கட்டமைப்பு என்ற உடனே அறைகளும், ஜன்னல்களும், கதவுகளும் நினைவுக்கு வருகிறதா? சரியான ஆள் சார் நீங்க. கோவில் சிலைகளை கணக்கெடுக்க மறந்துட்டீங்களே ? இந்தியாவுல கோவிலுக்காப் பஞ்சம். அழகான சிற்பங்களை வித விதமானக் கோணங்களில் எடுத்துப் பழகுங்கள். சிற்பங்கள் மட்டுமல்ல, அழகு நிறைந்தப் படித்துறைகளையும் கண்ணெடுத்துப் பாருங்கள்.




அதே போல இங்கே எனக்கு கோவில் கிடையாது, நான் பெரிய ஹோட்டலில் தங்கியிருக்கிறேன் என்கிறீர்களா, வசதியாப் போச்சு. செயற்கை நீர்வீழ்ச்சி, செயற்கை நீச்சல் குளம் எல்லாம் உங்களுக்காகத் தான் சார் கட்டி வைத்திருக்கிறார்கள் அதையேன் விடப் போகிறீர்கள்.


குறுகலான சந்துகளின் இருபக்கமும் கட்டப்பட்டிருக்கும் வீடுகளைப் பாருங்கள். கற்பனை ஊற்றெடுக்கும். குறுகலான, பாலங்கள், இடிந்து விழுந்தப் பாலங்கள், வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் தொங்குப் பாலங்கள் என இவை எல்லாம் இந்த வகைப் புகைப்படத்திற்கு உகந்தவையே.




செட்டி நாடு வீடு போன்ற இடங்களில், அங்கு அமைந்திருக்கும் அழகான வேலைப்பாடுகளை மேக்ரோ/க்ளோசப் எடுத்தால் அழகாய் இருக்கும். பழைய வீடுகளில் ஜன்னல், கதவு என எல்லாவற்றிலும் நல்ல வேலைப்பாடுகள் இருக்கும். தவற விடாதீர்கள்.




பகல் நேரத்தில் எடுப்பது போலவே, இரவு வெளிச்சத்தில் ( நிலா? அல்லது ஒளியூட்டப்பட்ட மாளிகைகள் ?) கட்டிடங்களை எடுக்கலாம். ஆனால் இவற்றிற்கு நிறைய பொறுமைத் தேவை. சற்று அவசரப் பட்டாலும் அழகு குறைந்து அலங்கோலமாகும் அபாயம் உண்டு.



பாதி இருட்டும், பாதி வெளிச்சமும் இருக்கும் சில இடங்களில் , உதாரணத்திற்கு நீண்ட ஹால் என்று வைத்துக் கொள்வோம் அப்போது படம் எடுக்கையில் ஏதோ ஒரு மூலை தான் சரியாக வரும். அதற்காக கவலைப் பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது HDR மெத்தேட். இது பற்றி சர்வேசன் ஏற்கனவே விளக்கி இருக்கிறார் இங்கே !



என்ன எல்லாம் படிச்சிட்டீங்களா, வழக்கமா சொல்றது தான். இவை எல்லாம் எங்களின் ஆலோசனை மட்டுமே . உங்கள் கற்பனைத் திறனை தறிகெட்டு ஓட விட்டால் வெகு அழகானப் புகைப் படங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமென்ன ?

உங்களுக்கு இதைப் பற்றி மேலும் தெரிந்தால் பின்னூட்டத்தில் பதிலிடவும்.

Tuesday, March 4, 2008

ஜன்னல் வெளிச்சத்தில் ஜாலங்கள் !

ஒரு நல்ல புகைப்படம் எடுக்க , நாம் நினைப்பது போல விலையுயர்ந்த கேமரா, அலங்கார விளக்குகள், அதி நவீன ஸ்டூடியோ போனறவை தேவையில்லை. வீட்டுக்குள் வரும் ஜன்னல், கதவு வெளிச்சத்தில், கொஞ்ச்ம வெள்ளைக் காகிதங்களை கொண்டு அழகான, தரமான படங்கள் எடுக்க முடியும். காசு செலவில்லாமல், இலவசமாய் வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று இங்கே கொஞ்சம் அலசலாம்


முதலில் தேவையான பொருட்களைப் பார்ப்போம்.

1. நல்ல குழைந்த சூரிய வெளிச்சம் வரக்கூடிய ஜன்னல் அல்லது கதவு. வடக்கோளத்தில் இருப்பவர்களுக்கு வடக்கு நோக்கிய ஜன்னல், தென்கோளத்தில் இருப்பவர்களுக்கு தெற்கு நோக்கிய ஜன்னல். இந்த திசையில் நாள் முழுவதும் சமமான அளவில் வெளிச்சம் நேரடியாக போட்டுத் தாக்காமல் சரியாய் கிடைக்கும்.

2. பிண்ணனியாக வெற்றுச் சுவர். வெளீர் நிறச் சுவர் இருப்பது உத்தமம். இல்லை வீட்டில் இருக்கும் துணிகளைக் கொண்டு திரை அமைத்துக் கொள்ளலாம்.

3. வெளிச்சத்தை பிரதிபலிக்க வெள்ளை அட்டைகள். வீட்டில் இருக்கும் அலுமினியத்தாள், கண்ணாடி எது வேண்டுமானலும். வெளிச்சம் நன்றாக இதில் பட்டு பிரதிபலிக்க வேண்டும். வெள்ளை அட்டை பெரும்பாலும் போதுமானது.


பொதுவாக மூன்று வகையான விதத்தில் முகங்களை படமெடுக்கலாம்.

1. முழு முகம் .
2. பக்கவாட்டுத் தோற்றம்
3. சாய்வுக் கோணம்.
இவற்றுக்கு எந்த முறையில் கேமராவை, பின்னணியை , வெள்ளை அட்டைகளை பொருத்த வேண்டும், என்று பார்க்கலாம் .



முதலில் நமக்கு போஸ் கொடுப்பவரை ( கீழே படங்களில் இருப்பதுப் போல நமீதா, அஸின், பாவனா, இவர்கள் கிடைக்கவில்லை என்றால் வீட்டு அம்மிணி, அவங்களும் கோவித்துக் கொண்டார்கள் எனில் கரடிப் பொம்மை ) கிட்டத்தட்ட 45 கோணத்தில் ஜன்னல் வெளிச்சம் வரும் திசையில் நிறுத்திக் கொள்ளுங்கள். வெளிச்சத்திற்கு ஏற்ற முறையில் கொஞ்சம் அப்படி, இப்படி மாற்றிக் கொள்ளலாம்.




1. முழுத் தோற்றம்.



இது பாஸ்போர்ட் படம். அனைவரிடமும் இந்த முறைப் படம் கண்டிப்பாக இருக்கும். முழு முகத்தையும் , படத்தில் காட்ட வேண்டும்.








2. பக்கவாட்டுத் தோற்றம்.


அரசியல் தலைவர்களில் போஸ்டரில் தோன்றுவதுப் போல முகத்தின் ஒருப் பக்கத்தை மட்டும் படத்தில் காட்ட வேண்டும்.














3. சாய்வுக் கோணம்.



இது இரண்டுக்கும் இடைப் பட்டது. முகத்தின் ஒருப் பகுதி மட்டும் முழுமையாகவும், மீதிப் பகுதியில் , பாதி, பாதிக்கும் குறைவாகவும். பெரும்பாலான முகப் படங்கள் இந்த முறையில்தான் அமைந்து இருக்கும்.






படங்கள் புரிந்ததா ? முயற்சி செய்துப் பாருங்கள். இந்த முறைகள் கூடிய விரைவில் , மாதாந்திரப் போட்டிக்கு(ம்) உதவலாம்.

Tuesday, January 1, 2008

அன்பார்ந்த தமிழ் வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்,
நாம படம் பிடிக்கும் போது பொருட்கள்,மக்கள்,இடங்களின் முக்கியமான பகுதிகள் போன்றவை காட்சியின் எந்த மூலையில் பொருத்துகிறோமோ அதை பொருத்தே படம் பார்ப்பதற்கு கச்சிதமாக அமையும்.இப்படி படம் எடுக்கும் போது கட்சியமைப்பை பற்றி சிந்திக்கும் கலையை ஆங்கிலத்தில் Composition என்று சொல்வார்கள்.கால காலமாக நல்ல படங்களை ஆராய்ந்த புகைப்படக்கலை ஆர்வலர்கள் அந்த படங்களின் பொதுவான அம்சங்களை பார்த்து சில வழிமுறைகளை வகுத்துள்ளனர். முப்பகுதி கோட்பாடு(Rule of thirds), வழிநடத்தும் கோடுகள்(leading lines) போன்றவை இது போன்ற வழிமுறைகளில் முதன்மையானவை.அப்படிப்பட்ட சில வேறு காட்சியமைப்பு உத்திகளை தான் இன்றைக்கு பார்க்க போகிறோம்.

புகைப்படக்கலை சார்ந்த எல்லா வழிமுறைகளை போல இதுவும் நாம் சிறந்த படம் தாயாரிப்பதற்கு வெறும் ஆலோசனை என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்!! இவையெல்லாம் சார்ந்து படம் எடுத்தால் தான் படம் நன்றாக வரும் என்றோ,இவை பின்பற்றவில்லையென்றால் படம் நன்றாக வராது என்றோ அர்த்தம் கொள்ள கூடாது.

கருப்பொருள்(Subject) பார்ப்பதற்கு இடம் தாருங்கள் :

ஒரு படத்தில் ஒரு ஆள் இடப்புறம் பார்ப்பது போல உள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள் , அந்த ஆள் பார்க்கும் திசையில் கொஞ்சம் இடம் விட்டு வைத்தால் படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். மனிதர்களுக்கு இயற்கையாகவே யாராவது ஏதாவது பார்த்தால் அவர் என்ன பார்க்கிறார் என்பதை நாமும் பார்க்கவேண்டும் என்று ஆசை தொற்றிக்கொண்டு விடும். திரைப்படங்களில் கூட கதாநாயகன் ஏதாவது எட்டி பார்ப்பது போன்றோ அல்லது ஒளிந்திருந்து பார்ப்பது போன்றோ ஒரு காட்சி இருந்தால்,அடுத்த காட்சியிலேயே அவர் என்ன பார்க்கிறார் என்று காண்பித்து விடுவார்கள். அப்படி காட்டவில்லை என்றால் நமக்கு தலையே வெடித்துவிடும்.பொதுவாக படங்களில் கூட யாராவது எதையாவது பார்ப்பதாக இருந்தால் அவரின் பார்வை போகும் திசையை நமது பார்வையும் தொடரும்.அந்த சமயத்தில் பார்ப்பதற்கு இடம் இல்லாமல் படம் முடிந்துவிட்டால் படத்தில் ஏதோ குறைந்தது போல் தோன்றும்.
மனிதராகவோ அல்லது உயிருள்ள பிராணியாகவோ கூட இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.உயிரற்ற பொருளாக இருந்தாலும் கூட அந்த பொருள் பார்த்துக்கொண்டிருக்கும் திசையில் இடம் விட்டால் படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
இந்த உத்தியை விளக்கும் சில படங்கள் கீழே.












நகர்ந்துக்கொண்டிருக்கும் பொருள் போக இடம் தாருங்கள்:
நகர்ந்துக்கொண்டிருக்கும் ஒரு பொருளை படம் பிடிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்,அந்த சமயத்தில் நீங்கள் படம் பிடிக்கும் பொருள் நகர்ந்து செல்லும் திசையில் இடம் விட்டால் படம் பார்க்க நன்றாக இருக்கும்.படத்தில் ஒரு பொருள் கடந்து வந்த பாதையை இறந்த வெளி (Dead space) என்றும் ,கடந்து போக வேண்டிய பாதையை இயங்கு வெளி (active space) என்றும் குறிப்பிடுவார்கள்.ஒரு பொருள் நகர்ந்துக்கொண்டிருப்பதை பார்த்தால் அது போகப்போகும்் திசையை ஒட்டியே தான் நம் பார்வையும் செல்லும். அதனால் அது நகர்ந்துக்கொண்டிருக்கும் திசையில் சிறிது இடம் விட்டு வைத்தால் படம் பார்க்க நன்றாக இருக்கும்.அதாவது இறந்த வெளியை விட இயங்கு வெளி அதிகமாக இருக்க வேண்டும்.
இதை உணர்த்தும் உதாரணம் ஒன்று உங்கள் பார்வைக்கு.

ஆனால் ஒரு படத்தில் இயங்கு வெளியை விட இறந்த வெளி அதிகமாக இருக்கக்கூடிய நிர்பந்தம் கூட சில சமயங்களில் ஏற்படலாம்.அதாவது ஒரு பொருளின் வேகத்தை காட்ட முற்படும்போதோ அல்லது.ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கடந்த வந்த தூரத்தை குறிப்பிட்டு காட்ட முனையும் போது இறந்த வெளியில் அதிக இடம் இருப்பது போல் காட்சியை அமைக்கலாம்!
அதற்கான உதாரணங்கள் சிலவற்றை கீழே பார்ப்போம்.










பாத்தீங்களா இது மாதிரி சின்ன சின்ன விஷயங்களை கவனத்தில் கொண்டால் நாம் எடுக்கும் புகைப்படங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணலாம்!!
இப்போதைக்க்கு இது போதும்,இதுக்கு மேல ஏதாச்சும் சொன்னா குழம்பி போய்டும்.
பதிவுல ஏதாச்சும் சந்தேகம்/கருத்துக்கள் இருந்தால் பின்னூட்டமிட்டுங்கள்,கலந்தாலோசிப்போம்!!
வரட்டா?? :-)

படங்கள் மற்றும் குறிப்புகள் :
http://digital-photography-school.com/blog/give-your-subject-space-to-look-into/
http://digital-photography-school.com/blog/create-active-space-in-your-photography/
http://digital-photography-school.com/blog/leaving-space-behind-moving-subjects-composition/

Thursday, July 19, 2007

என் இனிய தமிழ் மக்களே,

போன பகுதியில சொல்லிக்கொடுத்த மேட்டர வெச்சு ஏதாவது படம் எடுத்து பாத்தீங்களா?? இல்லனா எடுத்த படத்துலையே இந்த முப்பகுதி கோட்பாட்டிற்கு ஏற்றால் போல் வெட்டி (Crop) விட்டு ஏதாவது முயற்சி பண்ணீங்களா?? உங்க முயற்சி அனுபவங்கள் எல்லாம் பின்னூட்டத்துல சொல்லுங்க!!

இன்னைக்கு நாம பாக்க போற தலைப்பு "வழிநடத்தும் கோடுகள்". ஆங்கிலத்துல இதை "Leading lines" அப்படின்னு சொல்வாங்க!!

அப்படின்னா??

அதாவது ஒரு படத்துல ஏதாவது கோடு இருந்துச்சுனா,நம்ம கண்ணு அந்த கோட்டை பின்பற்றியே தான் செல்லுமாம்!! அதாவது நம் படத்தில் இருக்கும் கோடு நம் படத்தின் கருப்பொருள் (Subject)-ஐ சென்று சேருகிறார் போல் பார்த்துக்கொண்டால் நம் படம் பார்ப்பதற்கு அழகாக தெரியுமாம். அதே போல் நம் படத்தில் இருக்கும் கோடுகள் நம் படத்தின் கருப்பொருளை நீங்கி செல்வது போலவோ அல்லது படத்தை விட்டு வெளியே செல்வது போலவோ இருந்தால் படம் பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருக்குமாம்.



நல்லா இருக்கு!! இதுக்காக நான் எங்கே இருந்து கோடுகளை தேடி போவது??? நானே படங்களுக்கு ஸ்கேல் வெச்சுகிட்டு கோடு வரையணுமா?? அப்படின்னு எல்லாம் டென்ஷன் ஆகாதீங்க!!!

கோடுகள் என்றால் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டிடங்கள்,ரோடுகள்,வேலிகள், வானம்,கடல்,நிலப்பரப்பு என எதுவாக இருந்தாலும் கோடுகளாகத்தானே தெரிகிறது. அந்த கோடுகளை எல்லாம் நமக்கு சாதகமாக உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டியது தான்!! :-))



ஹ்ம்ம்!! புரியறாப்போல இருக்கு ஆனா புரியலை!! இருக்கு ஆனா இல்லை அப்படின்னு சொல்றீங்களா???

சரி இருங்க!! ஒரு சில படங்கள் கீழே இருக்கு!! அதை பாருங்க!! உங்களுக்கே தெளிவாத்தெரியும்!! :-)









என்ன துரு துரு கண்கள், குறும்பும் அப்பவித்தனமும் நிறைந்த அழகிய முகம். குழந்தைகள் என்றாலே அழகுதான்!! ஆனால் இந்த அழகிய முகத்தை நோக்கி போகும் கோடுகளை கவனித்தீர்களா?? ஜன்னல் கம்பிகள் எப்படி இந்த அழகிய முகத்தை நோக்கி செல்கின்றன பார்த்தீர்களா?? இந்த கோடுகளை பின்பற்றி போய் தான் நம் பார்வை இந்த குழந்தையின் அழகு முகத்தில் போய் முடிகிறது.





நீங்க இங்க பார்த்துக்கொண்டிருப்பது ந்யூயார்க்கின் ப்ரூக்களின பாலம். இந்த படத்தில் பாலத்தின் கோடுகளை எவ்வளவு அழகாக பயன்படுத்தி நம் பார்வையை ந்யூயார்க் நகரினுள் எடுத்து செல்கிறார் பாருங்கள் புகைபடக்காரர். இதைப்போல் நாம் எந்த புகைப்படம் எடுத்தாலும் காட்சியில் இருக்கும் கோடுகளை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு காட்சி யை அமைத்துக்கொள்ளலாம்.

இந்த படம் முப்பகுதி கோட்பாட்டிற்கும் ஒரு அற்புதமான உதாரணமாக விளங்குவதை காணலாம்









படத்தில் அமையும் கோடுகள் நேர்கோடுகளாக இருக்க வேண்டும் என்று கூட கட்டாயம் இல்லை என்பதை காட்டுவதற்காகத்தான் இந்த உதாரணம். அதுமில்லாமல் படத்தில் கருப்பொருள் ஒன்றும் இல்லாவிட்டால் "எங்கே செல்லும் இந்த பாதை" என்பதை போல கோடுகள் எங்கேயாவது உள்நோக்கி சென்றுகொண்டிருந்தால் அதுவும் படத்திற்கு அழகாக இருக்கும். எப்படி இருந்தாலும் கோடுகள் படத்தை விட்டு வெளிநோக்கி செல்லக்கூடாது, அதுதான் முக்கியம்.



மனிதர்களாகிய நாம் வழக்கமா இடது பக்கத்துல இருந்து பார்க்க ஆரம்பிச்சு வலது பக்கமா முடிப்போம். அதே மாதிரி கீழிருந்து ஆரம்பித்து பார்வை மேலே போய் முடியும்!! அதனால உங்க வழிநடத்தும் கோடுகளின் தொடக்கமும் முடிவும் இதை அடிப்படையா வெச்சு தான் இருக்கும்!! :-)
நான் முன்பே சொன்னது போல் இந்த நுணுக்கங்கள் எல்லாமே ஒரு வழிகாட்டுதலுக்கு மட்டும் தானே தவிர இவை எல்லாம் பயன் படுத்தியே ஆக வேண்டும் கட்டயம் இல்லை. இந்த நுணுக்கங்களை சாராத படங்கள் கூட நமக்கு அழகாக தெரியலாம்,அது அவரவர் ரசனையை பொருத்தது.இந்த "வழிநடத்தும் கோடுகள்" கோட்பாட்டை சாராத படங்களை இணையத்தில் தேடி பார்த்தால் ஒன்றும் கிடைக்கவில்லை. எல்லோரும் தான் எடுத்த நல்ல படங்களை தான் வெளியிட விரும்பிவார்களே தவிர,நன்றாக இல்லாத படங்களை வெளியிட மாட்டார்கள். இதனால் நான் எடுத்த படங்களில் ஒன்றை எடுத்து வழிநடத்தும் கோடுகள் சாராத ஒரு படத்திற்கான உதாரணமாக கீழே கொடுத்துள்ளேன்.


இப்போ நீங்க மேலே பாத்துக்கிட்டு இருக்கற படம் ஆன் அர்பர்ல குளிர்காலத்துல எடுத்தது. ஒரு நாள் அலுவலகத்துல இருந்து வெளியே வந்தபோது இப்படி எல்லாமே உறைந்திருப்பதை கண்டு அதிசயித்து சும்மா என் கேமரா போனில் சுட்டது.
படத்தை பார்த்தீர்கள் என்றால் கிளைகள் வடிவில் இருக்கும் கோடுகள் படத்தை விட்டு நம் பார்வை இட்டு செல்வதாக அமைந்திருக்கின்றன. இதனால் உறைந்திருக்கும் பழங்களின் நம் ஒட்டுமொத்த கவனம் செல்லாமல்,படம் அவ்வளவாக சுவாரஸ்யம் இல்லாமல் போய் விடுகிறது.
இதனால் தான் படத்திற்கு வெளியே இட்டு செல்வது போலவோ ,அல்லது கருப்பொருளை விட்டு செல்வது போல் கோடுகள் அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.
என்ன மக்களே?? "வழிநடத்தும் கோடுகள்" மேட்டர் என்னன்னு புரிங்சுதா??

புரிஞ்சதோ புரியலையோ ,பின்னூட்டத்துல சொன்னீங்கன்னா தொடரை வழிநடத்திச்செல்ல உதவியா இருக்கும். அடுத்த முறை அடுத்த புகைப்படக்கலை சம்பந்தமான விஷயத்தோட உங்களை சந்திக்கிறேன்!!



வரட்டா?? ;-)
படங்கள்:

http://www.cnn.com/interactive/travel/0507/gallery.vacation.photos/02.super.leadinglines.jpg http://photoinf.com/General/Gao_Mu/slide0004_image016.jpg

http://www.tipsfromthetopfloor.com/library/lib/exe/fetch.php/image_composition:road_leadingline.jpg
பி.கு : இது முன்பே என் பதிவில் நான் இட்ட ஒரு இடுகையின் மீள்பதிவு
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff