வணக்கம் நண்பர்களே. 'விளம்பரம்' போட்டிப் படங்களை பார்த்தபின், பெருமூச்சுடன், பல நாள் பொட்டிய தொடாம இருந்துட்டேன். :)
வெறும், 'படம் பிடித்தல்' என்ற நுட்பம் மட்டும் அல்லாமல், அதையும் தாண்டி, பயங்கரமான creativity (தமிழில்?) நம்மாட்கள் மத்தியில் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
இப்படி கலக்குற ஆளுங்களுக்கு, அடுத்து என்ன தலைப்பை கொடுப்பது என்று வழக்கம் போல் எங்கள் குழுவில் கலந்தாலோசித்தோம்.
இந்த மாசத்துக்கு முன் வைத்த எல்லா போட்டிகளிலும், பெரும்பான்மையானோர், தலைப்பை பார்த்தவுடன், தலைப்புக்கு ஏத்தமாதிரி, தங்கள் கைவசம் உள்ள ஏதாவது ஒரு படத்தை டக்னு அனுப்பி வைப்பாங்க.
மெகா போட்டியிலும், 'விளம்பரம்' போட்டியிலும், மக்கள் பல பேர், இந்த போட்டிகளை சீரியஸா எடுத்துக்க ஆரம்பிச்சிருக்காங்கன்னு தெரியுது.
ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு மாதமும், மெருகேறி மெருகேறி, தங்கள் படங்களை, ஒரு லெவலுக்கு கொண்டு போயிட்டாங்க.
இப்படி கலக்குற உங்களுக்கு, இனி வரும் மாதங்களில், மேலும் பல Creativeஆன தலைப்புகளை வைக்கலாம்னு இருக்கோம்.
இதுக்கு தயாராகிக்கொள்ளவும், போட்டிகளை செம்மை படுத்தவும், இனி வரும் மாதங்களில், PiTன் புகைப்படப் போட்டிகள், இரண்டு மாதத்திரற்கு ஒருமுறை நடத்தப்படும்.
அடுத்த போட்டிக்கான அழைப்பு, நவம்பர் மாத இறுதியில் வெளிவரும்.
போட்டிக்கு இடைப்பட்ட நாட்களில், வழக்கம் போல், பாடங்களும், நுட்பங்களும், செய்திகளும், பகிர்வுகளும், கலந்து கொடுக்கப்படும்.
PiTன் போட்டிகளில் இதுவரை வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவரும், வெற்றிப் படங்களை எப்படி எடுத்தீங்கன்னு, ஒரு behind-the-scenes விளக்கத்தை எழுதி photos.in.tamil at gmail.comக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வரும் விளக்கங்களை, 'இந்தப் படம் எடுப்பது எப்படி?" என்ற தொடர் பதிவுகளாய் தொகுக்கலாம் என்று முடிவு.
இந்த வரிசையில், அமலின், vodka படத்தை பற்றிய விவரங்களை, முதலில் வெளியிடுகிறோம்.
வெற்றியாளர்கள், அனைவரும், இதில் கலந்து கொண்டு சிறப்பித்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.
ஓ.கேவா?
இனி வரும் போட்டிகள், creativeஆ இருக்கும்னு சொல்லியாச்சே, அதுக்கு, Creativeஆன தலைப்புகள் தேவை. உங்க ஆலோசனைகளை அள்ளி வீசுங்க.
கீழே உள்ள ஃபாரத்தில், தலைப்பு விவரங்களை தட்டி எங்களுக்கு அனுப்பி வைங்க!
நன்றி! நன்றி! நன்றி!
(belated)தீபாவளி நல்வாழ்த்துக்கள்! (பட உதவி: ஜீவ்ஸ்)