Monday, June 29, 2009

இம்மாத போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. முதுமையை க்ளிக்கிய நண்பர்களின் படங்கள் மொத்தமும் இங்கே பார்க்கலாம்.
முதல் சுற்றில் தேறிய படங்களை இங்கே பார்க்கலாம்.

இனி, போட்டியில் வென்ற முதல் மூன்று முதுமைகளைப் பார்க்கலாம்.

3. முதுமையில் வரும் இயலாமையை உணர்த்திய கருவாயனின் படம் அருமை. கலர் டோனும் படத்தின் சப்ஜெக்ட்டில் ஒரு வெறுமையை காட்ட உதவியிருக்கு. மூன்றாம் இடம் பிடித்த கருவாயனுக்கு வாழ்த்துக்கள்!

முதுமையை தத்ரூபமாய் ப்ரதிபலித்த ப்ரகாஷும் கவனத்தை ஈர்த்தார். அருமையான க்ளிக்கு அது. பாட்டியா, இல்லை பெரியவரான்னு கொஞ்சம் கொழப்பம் வந்துது. ப்ரகாஷின் கலர் டோனில் கொஞ்சம் செயற்கைத் தனம் இருந்தது. ஷார்ப்னஸும் குறைவு. கீழே இட, வலதில் மங்கலா இருக்கு? வேணும்னா பண்ண ப்ளர்ரா இல்லை லென்ஸில் தண்ணியா?

2. Vinoவின் தாத்தா படத்துக்கு ரெண்டாவது இடம். படத்தில் ஷார்ப்னெஸ் கம்மியாகி, வெளிறிப்போயிருந்து, காம்போஸிஷன் கொஞ்சம் தப்பாத் தெரிஞ்சாலும், ஒவ்வொரு முறை படங்களை அலசும்போதும், கண்ணு வந்து இந்த தாத்தா மேல நிலை குத்தி நிக்குது. படத்திற்கு அமைந்த வெளிச்சம், தாத்தாவின் நிலமை, கறுப்பு வெள்ளை, இதில் ஏதோ ஒண்ணு இந்தப் படத்தை வசியம் செய்ய வைக்குது. இந்த மாதிரி படங்களில், இயன்றவரை, 'கையெழுத்து' லைட்டா இருக்கணும். கண்ணுக்கு உறுத்தர மாதிரி வைக்காதீங்க. வாழ்த்துக்கள் Vino.


1. சிறப்பான சப்ஜெக்ட்டை தேர்ந்தெடுத்துவிட்டாலே, முக்கா கிணறு தாண்டிய மாதிரி. அன்பு ஆனந்தின் இந்த படம் அந்த வகை. பாட்டி முகத்தின் ரேகைகள் அருமையா பதிஞ்சிருக்கு.
நெற்றியின் பாதியிலிருந்து, 'சின்' வரைக்கும் இன்னும் டைட்டா கிராப் பண்ணியிருக்கலாமோ? வாழ்த்துக்கள் அன்பு ஆனந்த்! இந்த மாச ஃபர்ஸ்ட்டு நீங்கதான்.


தலைப்புக்கேற்ற படங்களை அனுப்பி, போட்டியை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

நண்பர்கள் அனைவரும், எல்லா படங்களையும் பார்த்து, உங்கள் விருப்பு வெறுப்புக்களை பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!

Friday, June 19, 2009

வணக்கம். முதுமை போட்டி வெற்றிகரமாய் அரங்கேறியது.

வயசான காலத்துல எனக்கு கஷ்டம் குடுக்க வேணாம்னு நெனச்சாங்களோ, இல்ல, அக்கம் பக்கத்துல முதுமை அடைந்த சமாச்சாரம் பெருசா கண்ணுல மாட்டலையோ என்னமோ, அதிகப்படியான படங்கள் இந்த மாசப் போட்டிக்கு வரல :)

வந்த படங்களிலும் சிலதில், 'பன்ச்' கம்மியா இருந்தது இந்த மாதம்.
சப்ஜெக்ட் நல்லா இருந்தா, படம் நல்லா அமையல.
படம் நல்லா அமஞ்சிருந்தா, தலைப்புக்கு ஏத்த தன்மை இல்லை.

இன்னும் சில பேர், தலைப்புக்கேத்த அருமையான படம் எடுத்தும், அதை, பிற்சேர்க்கைல முழுசா சரி செய்யாம அப்படியே அனுப்பின மாதிரி தெரிஞ்சுது. Anandன் முண்டாசு தாத்தா படம் ஒரு உதாரணம்.

இந்த மாதம் முந்திய முதுமைகள்.

வெங்கிராஜா:

Vino:

tjay:

Anbu Anand:

Karuvayan:

Vasi:

Prakash:

truth:


கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
எல்லாரும் எல்லார் படத்துக்கும் அவங்க அவங்க கருத்தை, Picasawebல் இங்க க்ளிக்கி சொல்லிடுங்க, please.

நம்ம கூட்டு கலந்தாய்வில் தான், நாம் கூட்டமாய் இந்தக் கலையில் முன்னேற முடியும்.

நன்றீஸ்!

Monday, June 15, 2009

போன முறை மாதிரியே அதே படம், அதே கலர் சரியாக்கும் முயற்சி ஆனால், இது வேறு ஒரு முறையில்.








படத்தை கிம்பில் திறந்து Colors->Info->Histogram தேர்ந்து எடுங்கள்








Histogram ல் Value, Red, Green, Blue என்று நான்கு பிரிவுகள் இருக்கும்.




முதலில் Red தெரிவு செய்ய்ங்கள். படத்தில் குறித்தப்படி Mean பகுதியில் இருக்கும் அளவை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் படத்தில் இந்த அளவு 51.5




( Median, Mean , Standard Deviation எல்லாம் எட்டாம் வகுப்பில் படித்து இருப்பீர்கள், ஞாபகம் இருக்கா ? கணக்குப் பாடத்தை கவனிக்காம, வேறு எதையாவது கணக்கு பண்ணிக்கிட்டு இருந்தீர்களா ? ).

அடுத்து Green, இதன் அளவு 65.3


அடுத்து Blue, இதன் அளவு 98.9










முன்னணி வண்ணமாக இந்த அளவின் வண்ணத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். நான் முழு எண்ணாக, 52,65,99 தேர்ந்து எடுத்துக் கொண்டேன்.






இனி ஒரு புதிய லேயரை உருவாக்கி அதை இந்த வண்ணத்தால் நிரப்புங்கள்.




சரி, இது வரைக்கும் நாம் செய்தது என்ன ? முதலில், படத்தில் இருக்கும் சராசரியாக வண்ணத்தை Histogram மூலம் கண்டறிந்து அதை நிரப்பி உள்ளோம்.இந்த வண்ணத்தை தான் படத்தில் இருந்து நீக்க/சரி செய்ய வேணும். அதற்கு எளிய வழி, இதற்கு நேர்மாறான வண்ணத்தால் படத்தை நிரப்புவது.
அதற்கு Colors->Invert


அடுத்து Mode -> Color





இனி Opacity குறைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக 20 % - 40% உங்களுக்குத் தேவையான அளவிற்கு மாற்றிக் கொள்ளுங்கள்





படம் சரியாகி இருக்கும்.


Friday, June 5, 2009

கருப்பு/வெள்ளை புள்ளிகள் பற்றி சென்றமுறை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, கிம்பில் வண்ணங்களை சரி செய்வது பற்றி இங்கே. (தலைப்பை பார்த்து இது வேற எதைப் பற்றியோ என்று வந்தவங்களும், படித்து விட்டு போங்க ! )

தவறான White Balance செய்வதாலோ அல்லது வண்ண விளக்களின் மூலம், படங்களில், இயல்பான வண்ணத்திற்கு பதிலாக, மஞ்சள் அல்லது நீல/பச்சை நிறம் நிரம்பிக் காணப்படும். இதை பிகாஸாவில் சரி செய்வது பற்றி ஒரு இடுகை ஏற்கனவே இருக்கு, இது அதை விட சிறந்த முறை.

இந்தப் படத்தில் நீலம் பரவி இருக்கு. இதை சரி செய்ய முயற்சிக்கலாம்.





படத்தை கிம்பில் திறவுங்கள்.




முன்னணி வண்ணமாக 50% சாம்பல் நிறத்தை தெரிவு செய்யுங்கள் ( Red=128, Green=128, Blue=128 )



ஒரு புதிய லேயரை உருவாக்கி அதை இந்த வண்ணத்தால் நிரப்புங்கள்.







அடுத்து Mode => Difference என்று மாற்றி விடுங்கள்.




படம் ஒருமாதிரி ஆகி இருக்கும். கவலை வேண்டாம். இந்தப் படத்தில் எந்த பகுதி/இடம் முழு கருப்பாகி இருக்கு என்று பார்த்துக் கொள்ளுங்கள். படத்தை வேண்டுமானால் பெரிதாகிக் கொள்ளுங்கள்.

என்க்கு இந்தப் பகுதி கருப்பாகி இருப்பது போல தோன்றியது.





இனி இந்த 50% சாம்பல் நிற லேயரை தேவை இல்லை. அதை அழித்து விடலாம்.
இனி ஒரு லேயர் நகலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்து Colors-> Levels



இதை பற்றி போனப் பதிவிலேயே விரிவாகப் பார்த்துள்ளோம்.
படத்தில் குறிப்பிட்டப் படி Pick Grey Color என்றப் பொத்தானை அமுக்குங்கள்.




அதை அமுக்கிவிட்டு எலிக்குட்டியை படத்தின் மேல் நாம் ஏற்கனவே குறித்து வைத்துள்ள , கருப்பு பகுதியின் மேலே கிளிக்குங்கள்.
அவ்வளவுதான் வேலை. படம் சரியாகி இருக்கும்.





இதே முறையில் சரி செய்யப் பட்ட நம்ம சர்வே அண்ணாச்சியின் படம் ஒன்று.





 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff