“கேள்வி கேக்கிறது ரொம்ப ஈசி, பதில் சொல்பவனுக்கு தானே அதோட கஷ்டம் தெரியும்” ன்னு வடிவேலு சொல்வது சரியாத்தான் இருக்கு. போட்டியிலே கலந்துக்கிறது ரொம்ப-ரொம்ப ஈசி, அதிலேருந்து மூணே மூணு சூப்பர் படத்தை மட்டும் செலெக்ட் பண்ண சொல்லறது ஆகாசத்திலே மின்னர நட்சத்திரங்களிலே மூணை மட்டும் சொல்லுங்கிறா மாதிரி இருந்துச்சு. நானும் நந்துவும் நொந்து நூடுல்ஸாயிட்டோம்.
எல்லாத்தையும் பெப்பெரப்பேன்னு பரத்திப் போட்டு பார்த்ததும் மலைச்சுப்போயிட்டோம். அடங்கொக்கமக்கா . . . ஆழம் தேரியாம காலை விட்டுட்டோமான்னு ஒரு சந்தேகம் லேசா தலைதூக்கிச்சு. . ஹ்ம்ம். என்ன ஆனாலும் புலியை முறத்தாலையே விரட்டியடிச்ச பாரம்பரியம் இல்லையா..(பாட்டீ நீ பண்ணின வேலை.. இப்பொ பாரு என் நிலமைய...) இதுக்கெல்லாம் பயந்துருவோமா என்ன... (பாட்டி உள்ளேயிருந்து எக்கோ).. கோதாவிலே இறங்கியாச்சு. . முடிவை சொல்வதுக்கு முன்னாடி எங்களுடைய சில observations.
சத்தியா : - சூப்பர் டைமிங்க், இன்னும் சூப்பர் செட்டிங்ஸ். தூரத்திலே இருக்கும் படகுகளும், 2 மீனவர்களும். ஒத்தையா நிக்கிற தென்னமரம் எல்லாம் அம்சமா இருக்கும. சில்லவுட்டிலையும் தப்பு சொல்ல முடியாது. ஆனா என்ன படத்தை க்ளிக்கர அவசரத்திலே தென்னைமரம் உச்சியிலே வெட்டுபட்டு இருக்கிறதை கவனிக்கலை போல இருக்கு. ஒருவேளை, இதே நேரத்திலே க்ளிக்கிய மத்த படங்களிலே தென்னைமரம் முழுசாக்கூட வந்திருக்கலாம், ஆனா நீங்க போட்டிக்குன்னு இதை அனுப்பிட்டீங்க. அதாங்க உங்க படம் தேர்வாகலை. இல்லைன்னா நான் உங்க படத்த்க்கு டோட்டல் சரண்டர்.
அனு & நந்தகுமார் :-
அனு, உங்க படத்திலே சூரியன் கண்ணுக்குள்ள டார்ச் அடிக்கிரா மாதிரி இருக்கு. இது ஒருவிதமான glare ஐ குடுக்குது. இது மட்டும் இல்லை, We find that your picture has dispersed subjects. அதாவது, beach umbrella லேயிருந்து குட்டிபாப்பா வரைக்கும் சொல்லறாமாதிரி தனியா தெரியிர சில்லவுட் எதுவுமே இல்லை. ஆனால், opposite side லே ஒரு அற்புதமான கோம்போசிஷண் ஒளிஞ்சிருக்கிரதை கவனிச்சீங்களா?? கொஞ்சூண்டு சூரியன், ஓடிவர பாப்பா, எதையோ சாப்பிடுரதிலே மும்மரமா இருக்கும் மக்கள்ஸ், இவங்களை மட்டும் கட்டம் கட்டியிருந்தா என்னமா இருந்திருக்கும்.
நந்தகுமார், இது அந்த மாட்டுக்கார வேலன் தானே! மாட்டை எல்லாம் ஓட்டிட்டு, இவர் தனியா சைக்கிள்ளே போரார். ரைட்டா?.நீங்க தேர்வு செஞ்ச லொகேஷண் & angle சூப்பர். உங்க சப்ஜக்ட் elevation லே இருக்கிராமாதிரி க்ளிக்கினது நல்லா அமைஞ்சிருக்கு. ஆனால், ரொம்ப தூரத்திலெயிருந்து எடுத்ததாலோ என்னமோ, கும்மிருட்டுக்கு நடுவிலே, சைக்கிள்காரர் பொட்டு மாதிரி தெரியிரார். நீங்க பார்த்த clarity எங்க கண்ணுக்கு புலப்படலை. ஒருவேளை, இவரை நடுநாயகமா வைக்காம, ஓரத்திலே வச்சு, மரம் & விழுதுகளை கட்டம் கட்டியிருந்தா காட்சி முழுமையா மனசிலே நிறஞ்சிருக்கும்ன்னு நினைக்கறேன்.
உங்க ரெண்டு பேர் படமும் சூப்பர், ஆனால் அதிலே மத்தவங்களுக்கு எதை காட்டணும்ன்னு நீங்க தான் முடிவு பண்ணணும். Try to look at the same frame from a different perspective.
இரவுகவி :-
picturesque settings ங்கிறதுக்கு அற்புதமான படம். “ கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்” ங்கிறா மாதிரி, இந்த படத்தை பார்த்ததுமே கவிதை தானா வரும். அவ்வளவு நேர்த்தியான படம். பட்.. கட்டம் கட்டின விதம் தான் கொஞ்சம் நெருடலா இருக்கு. Bunt edges அல்லது patterned framing இது ரெண்டிலே ஏதாவது ஒண்ணு மட்டும் வச்சிருந்தாலே படம் எங்கேயோ போயிருக்கும். ஆனால், ரெண்டுமே இருக்கிறது கவனத்தை ஜோடியிலேயிருந்து திசைதிருப்புரா மாதிரி இருக்கு. சூரியன் கொஞ்சம் அதிகப்படியா ஆரெஞ்ச் பவுடர் பூசிகிட்டாரோ?
நடுவர்களின் சிறப்பு கவனம் பெற்ற படம் :- MQN
Indoor silhouette, rather unique perspective. உண்மைய சொல்லுங்க. வீட்டுக்குள்ளேயே சில்லவுட் எடுக்க முடியும்ன்னு எத்தனை பேர் யோசிச்சிருப்பீங்க?. சூப்பர்ங்க. ஆனால் ஒரு சின்ன நெருடல், உங்க படம் ஒவ்வொரு மானிடர்ல ஒவ்வொரு மாதிரி தெரியுது. என்னோட வீட்டு மானிடர்ல, கொலுசு டிசைன்வர நல்லா தெரியுது.. ஆனா ஆபீஸ் மானிடர்ல, இது ஒரு பெர்பெக்ட் சில்லவுட். நந்துவுக்கு இதே தான் சொல்லரார். (படு அட்டகாசமான படம், கொஞ்சம் டீடெய்ல் தெரியறமாதிரித்தான் இருக்கு.ஒவ்வொரு மானிட்டருக்கும் கொஞ்சம் இது மாறுது. என் ஆஃபீஸ் மானிட்டரில் கொஞ்சம் நல்லாவே டீடெய்ல் தெரியுது. வீட்டில் அவ்வளவா தெரியல)போட்டி ஆரம்பத்துல ப்ராக்டிகலா இப்படி ஒரு ப்ரச்சனை வரும்ன்னு சில்லவுட்டில் லேசான ஒளி வித்தியாசத்தை ஒரு தவறா எடுத்துக்க வேண்டாம்ன்னு நெனச்சிருந்தோம். ஆனா இந்த படம் அந்த லேசான அளவை தாண்டிட்டதா தோணுச்சு.. but all said and done, absolutely brilliant composition & mind blowing perspective.
சில்லவுட் மூன்றாவது நட்சத்திரம்
ஜெயகுமார் :-
Leading lines ங்கிர concept நமக்கெல்லாம் இப்போ ஓரளவுக்கு தெரிஞ்சிருக்கும். இதையே ஜெயக்குமார் மாத்தி யோசிச்சிருப்பாரோன்னு தோணவைக்கிர படம். A tunnel is a line from the outside, a line is a tunnel from the inside. ங்கிரதை துல்லியமா எடுத்துக்காட்டும் படம். இது மட்டும் அல்ல, காட்சி அமைப்பும் .. இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு போகும் மனிதன்கிர எண்ணத்தை வரச்செய்யுது. மாத்தி யோசிச்சிருக்கீங்க, புதுமையான கண்ணோட்டம் . . . வாழ்த்துக்கள் ஜெயகுமார்.
சில்லவுட் ரெண்டாவது நட்சத்திரம்
ஒப்பாரீ : -
படு வித்தியாசமான சப்ஜெக்ட். சில்லவுட்டுக்கு யாரும் சிலந்தியை கற்பனை செய்ய சான்சே இல்லை. அதுவும் சிலந்தி கூடுடன். பேக்ரவுண்டும் நச்சுன்னு இருக்கு. சிலந்தி வலை பின்னும்போது எடுத்தீங்களா.. ஒரே ஒரு காலிலே இருக்கும் ஷேக் கனகச்சித்திதமா வந்திருக்கு. வினோதமான சப்ஜக்ட், . . . வாழ்த்துக்கள் ஒப்பாரீ
சில்லவுட் முதல் நட்சத்திரம்
காவியம் :
மைனசும் மைனசும் சேர்ந்தா பிளஸ்ஸாயிடும்னு கணக்கு ட்டீச்சர் சொல்வது இந்த படத்துக்குத்தான் பொருந்தும்ங்கிறது என் அபிப்பராயம்.. பல போட்டிகளில் தொடுவானம் கோணலா இருந்தாலே ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. அதே மாதிரி abrubt ஆ இருக்கும் leading lines ஐயும் தள்ளிடுவாங்க. ஆனால் இங்கே .Skewed horizon is balanced by the incomplete leading line (fence). இவர் இன்னொண்ணையும் வித்தியாசமா செஞ்சிருக்கார். சாதாரணமா இந்த மாதிரி ( ஆறு - கடலை பார்க்கும் ஜோடி ) படங்களில் நீளமான கம்பி வேலிகளின் முடிவில் சப்ஜெக்ட் இருக்கும். லீடிங் லைன்ஸ் மாதிரி. இங்க உல்டாவா இருக்கு. என்னதான் Rule of third, Skewed horizon, leading lines ன்னு ஆயிரம் வரைமுறைகள் சொன்னாலும், இது எதுவுமே இல்லாமலும் அற்புதமான படத்தை எடுக்க முடியும்ங்கிறதுக்கு காவியத்தின் இந்த படம் அற்புதமான எடுத்துக்காட்டு.. அட்டஹாசமா இருக்கு.. வாழ்த்துக்கள் காவியம்.
ஒண்ணு கவனிச்சீங்களா.. இந்த முறை தேர்வான மூணு பேருமே மாத்தி யோசிச்சிருக்காங்க( எங்கங்க ரூம் போட்டீங்க ). 3D லே Leading lines ஐ குடுத்த ஜெயகுமார், பசக்ன்னு நசுக்கிர சிலந்திப்பூச்சியை டக்குன்னு படம் புடிச்ச ஒப்பாரீ, எல்லா ரூல்ஸையும் மொத்தமா தூக்கிப்போட சொல்லும் காவியம்.. இவங்க படம் எல்லாமே, சொல்லித்தர பாடம் ஒண்ணு தான்.. Theory is different, Practical is different, and Implementation is a totally different ball game altogether.
Wednesday, September 30, 2009
Monday, September 28, 2009
வணக்கம் மக்கா,
நான் ஏற்கனவே சொல்லியபடி மேக்ரோ படங்களை நம்முடைய சாதாரன லென்ஸின் மூலம் கூட எடுக்கலாம். குறிப்பாக நம்முடைய லென்ஸின் "Minimum Focusing Distance" மாற்றி அமைக்க முடிந்தால், பொருட்களின் மிக அருகில் போகஸ் செய்து மேக்ரோ படங்கள் எடுக்க முடியும். சில வழி முறைகளை கீழே.
1.) Diopters(க்ளோஸ் அப் லென்ஸ்)
இந்த முறை மிகவும் எளியது. உங்களுடைய லென்ஸின் பில்டர் அளவிற்கு(52mm, 58mm, 62mm, 68mm, 77mm etc) ஏற்ப ஒரு க்ளோஸ் அப் லென்ஸ் வாங்கி நம் லென்ஸின் முன்னால் பொருத்தி விட வேண்டும் அவ்வளவு தான். இப்படி செய்வதால் நம் லென்ஸின் "Minimum Focusing Distance" அருகில் மாறி அமைந்து விடும். ஆட்டோ போகஸ் கூட வேலை செய்யும். மேலும் மற்ற காமிரா உற்பத்தியாளர்களின் க்ளோஸ் அப் லென்சை கூட பயன் படுத்தலாம். எடுத்துக்காட்டாக நிகான் லென்சில் கானான் க்ளோஸ் அப் லென்சை பொருத்தலாம்.
2). Extension Tubes (எக்ஸ்டன்சன் டுயுப்):
இந்த முறையில் உங்கள் லென்ஸின் இறுதிக்கும், காமிராவில் லென்ஸ் மாட்டும் இடத்திற்கும் இடைவெளியை உண்டாக்க வேண்டும். எக்ஸ்டன்சன் டுயுப்களில் வெறும் ஓட்டை தான் இருக்கும், கண்ணாடி பகுதி எதுவும் இருக்காது. இவற்றின் மூலம் இடைவெளியை ஏற்படுத்தலாம். இடைவெளி அதிகரிக்க, அதிகரிக்க பொருட்களின் அளவு காமிரா சென்சாரில் பெரிதாக இருக்கும். இந்த முறையில் "Minimum Focusing Distance" மாற்றம் இருக்காது. இந்த எக்ஸ்டென்சன் டுயுப்கள் பல அளவில் கிடக்கும் (12mm, 20mm, 36mm etc). இவற்றை ஒன்றாக கூட சேர்த்து மாட்டலாம். எல்லா எக்ஸ்டென்சன் டுயுப்களிலும் ஆட்டோ போகஸ் வேலை செய்யாது. "Kenko" எக்ஸ்டென்சன் டுயுப்களில் ஆட்டோ போகஸ் வேலை செய்யும், மற்ற டுயுப்களை பார்க்கும் பொது விலையும் குறைவு. (எக்ஸ்டென்சன் டுயுப்களின் குறை என்னவென்றால், வெறும் லென்சை பயன் படுத்தும் பொது கிடைக்கும் ஒளி அளவை விட கம்மியாக இருக்கும், இதனால் ஷட்டர் வேகம் கொஞ்சம் குறையும்.)
மற்ற வழி முறைகள் விரைவில்...
Friday, September 25, 2009
A "failed attempt" is always better than "No Attempt" அப்படீன்னு எங்க இங்க்லீஷ் டீச்சர் சொல்லுவாங்க. இது ஏதோ நம்ம மனசை தேத்த மிஸ் சொல்லறாங்கன்னு நாங்க எல்லாரும் பேசிக்குவோம். அதுவும் Essay writing competition லே நம்ம கட்டுரை முதல் ரவுண்டை கூட தாண்டாதப்போ போட்டியை வேடிக்கை பார்க்கரது மட்டுமே செய்யும் கும்பல் இருக்கே.. அவங்க ஒட்டுமொத்தமா நம்மள ரவுண்டுகட்டி " என்னமா கண்ணு... புட்டுகிச்சா? " ன்னு கேக்கும்போது.. போட்டியிலே தேர்வாகலையேங்கிர வருத்தத்தை விட, இப்படி நம்மை அவமான படுத்தறாங்களேன்னு மனசுக்குள்ளே புகையும். போட்டியும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்ன்னு தோணும். அப்போ அந்த பக்கம் வந்த எங்க இங்கலிஷ் மிஸ் கிண்டல் பண்ணின கும்பலை பார்த்து விட்ட டோஸ் தான் இது. (அப்புறம் வந்த Essay Writing competition லே செலெக்டானேனா இல்லையான்னெல்லாம் கேக்கப்படாது.. மிஸ் கிட்டே சொல்லிக்குடுப்பேன்.. ஆமா !)
எட்டாங்கிளாஸிலே மிஸ் சொன்னது, பிட்டிலே சேர்ரதுக்கு முன்னே ஏதோ ஒரு மூலையிலே மங்கிக்கிடந்துது. ஆனா பிட்டிலே மாசாமாசம் போட்டிக்கான படங்களை பார்க்கும்போது ஒரு வாசம்னானும் திருவாசகமா சொன்னாங்கன்னு நினைக்கத்தோணுது. இந்த மாத சில்லவுட் போட்டிக்கு அனுப்பின எல்லா போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். சுத்தமா கலந்துக்காத்தவங்களைவிட நீங்க எவ்வளாவோ மேல் (பீமேல்).
சரி, தேர்வான முதல் 15 படங்களை பார்ப்போமா !!.
மொத்தம் வந்த 58 படங்களில், 15 படங்களை மட்டும் முன்னிறுத்த நாலு காரணம் உண்டு. ஒண்ணு, எல்லா போட்டியிலேயும் சொல்லரா மாதிரி – தலைப்போட சரியா ஒத்துப்போகலை. ரெண்டாவது, கம்பி – குச்சி மாதிரியான distractions. சில பேரோட படங்களிலே light கம்மியா இருக்கும் போது படத்திலே "கறுப்படிக்குமே" , அதுமாதிரியான படங்களை சில்லவுட்ட்னு தப்பா நினைச்சுடாங்க. (வருத்தப்படாதீங்க, இனிமே சரியான சில்லவுட் எதுன்னு கத்துக்கிட்டா போச்சு). மூணாவது, ஒரிஜினல் 'பரவாயில்லாமா இருக்கு', படத்தை எடுக்கும் போது இருந்த உண்மையான சூழலை அதே மாதிரி கொண்டுவரணும்ன்னு நினைக்கிறாங்க. அதுக்காக GIMP / Photoshop லெ ரொம்பவே மெனக்கெட்டிருக்காங்க. ஆனால், மேக்கப் போடும் போது எங்க நிறுத்தணும்ன்னு தெரியாம திணறியிருக்காங்க. அதனாலேயே அங்க அங்க திட்டுதிட்டா பவுடர் வந்து படத்தோட அழகையே மாத்திடுச்சு.சிலரோட படத்திலே கிராப் & பிரேமிங்க பண்ணினா நல்லா இருந்திருக்கும், பண்ணாம விட்டுட்டாங்க. ( மேக்கப் போடாலும் தப்பு - போடலைன்னாலும் தப்புன்ங்கிரா மாதிரி இருக்கில்லே).. மேக்கப் போடணும், ஆனா அளவோட நிறுத்தணும், அதான் பாயிண்ட்
Not Revelent to Topic
- Arun.jbg
- VALLISIMHAN
- Malten.jpg
- jaya.jpg
- somayajula.sastry
- S.M.Anbu Anand
- Ashok
- Sri
- Vaasi
- gurupandi.jpg
- Knbpsa
- Goma
- Sriram
- Tulasi
- Ramalakshmi
- Gnanaprakash
- Nundhaa
- Parthasarathy
- Nilofer Anbarasu
- Thiva
- jwaharclicks .jpg
- Manivannan
- Vennila meeran
- Gaanaprakash
- Kamal (Noise on the edges)
- Prem G
- Madan
- Nila's Mom
- Venkiraja
- T Jay
- Aadav
- Karthi
Thursday, September 24, 2009
Saturday, September 19, 2009
Genius is 99% perspiration and 1% inspiration அப்படின்னு ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் இருக்கிறது. அப்படி சொன்னவரு விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். இந்த கருத்து புகைப்படக்கலை கத்துக்கறவங்களுக்கும் பொருந்தும்ங்க. என்ன ஒரே ஒரு வித்தியாசம் புகைப்படக்கலையில் வெற்றி இல்ல தேர்ச்சி என்பது 99 சதவீதம் ஊக்கத்தினாலும்(inspiration) 1 சதவீதம் உழைப்பினாலும்(perspiration) ஆனது. புகைப்படக்கலையில் வெற்றி பெற உழைப்பை விட ஊக்கம் தான் மிக முக்கியமான காரணிங்கறது என்னோட எண்ணம். இங்கே வெற்றி என்று சொல்றது, படிக்கிறவங்க எப்படி எடுத்துக்கறாங்கங்கிறதை பொறுத்தது. அந்த விவாதம் இப்போ நமக்கு வேணாம். இந்த ஊக்கம் எங்கேருந்து எப்படி கெடைக்கும்? ரொம்ப சுலபம்ங்க. நம்மளை நாமே ஊக்கப்படுத்திக்க வேண்டியது தான். அட போங்க பாஸ்! உபயோகமா எதோ சொல்லப் போறீங்கன்னு பார்த்தா புகைப்படக்கலை கத்துக்க சுயமா ஊக்கப்படுத்திக்கனுமாமில்ல? சொந்தமா ஊக்கப்படுத்திக்கனும்னா இவ்வளோ நாளைக்கு நாங்களே பண்ணியிருக்க மாட்டோமா? எவ்வளவு முயற்சி பண்ணாலும் நான் எடுக்கற படம் எனக்கே திருப்தியா அமைய மாட்டேங்குது...ஒரு போட்டியில பங்கெடுத்துக்கிட்டேன்னா எத்தனை முறை முயற்சி செஞ்சாலும் முதல் பத்துல கூட என் படம் வர மாட்டேங்குது. நீங்க சொல்றதெல்லாம் வெறும் jargon மாதிரி தான் தெரியுது. சுயமா ஊக்கப்படுத்திக்கிறதை தவிர எதாவது வேலைக்காவற உருப்படியான வழியைச் சொல்லுங்க அப்படின்னு படிக்கிற நீங்க சொல்லலாம். அப்படி சொன்னீங்கன்னா அப்போ கண்டிப்பா மேல படிங்க. நம்மளை மாதிரி ஆளுங்களுக்காகத் தான் இந்த பதிவு.
பாஸ்! நீங்க நினைக்கிறது எல்லாமே நியாயம் தான். நம்மள்ல பல பேர் ஒரு நிமிஷத்துல எதோ ஒரு ஆசையில ஒரு உந்துதல்ல புதுசா எதையாச்சும் ஒன்னை ஆரம்பிப்போம். அதுக்கப்புறம் அதை தொடர முடியாம தவிப்போம். ஆரம்பிச்ச விஷயத்துக்கு காசும் நெறைய செலவழிச்சிருப்போம். காசையும் செலவழிச்சிட்டு தொடரவும் முடியலையேன்னு குற்றவுணர்வால் தவிப்போம். உதாரணத்துக்குச் சொல்லனும்னா உடம்பு குண்டாவுது, நாளை காலையிலிருந்து ஜாக்கிங் போகலாம்னு ஒரு உந்துதல்ல 3000 ரூபாய்க்கு டிராக் சூட், 2000 ரூபாய்க்கு ரீபாக் ஷூ, ஜாக்கிங் பண்ணும் போது களைப்பு தெரியாம இருக்க பாட்டு கேக்கலாம்னு ஒரு ஐயாயிரத்தைப் போட்டு ஐபாட் இதெல்லாத்தையும் வாங்கி வச்சிட்டு காலைல அஞ்சரை மணிக்கு அலாரம் அடிக்கும் போது அதை ஒவ்வொரு பதினஞ்சு நிமிஷத்துக்கும் அணைச்சிட்டு இழுத்து போத்திட்டு தூங்குவோம். வரிக்கு வரி சேம் ப்ளட் சொல்லறீங்களா? வெல்கம் டு தி சுய முன்னேற்ற புத்தகத்தைத் தலைக்கு வச்சு தூங்குவோர் க்ளப். இதே உதாரணம் ஒரு விஷயத்தைத் தொடங்கிட்டு அதை தொடர முடியாம தவிக்கிறவங்க எல்லாத்துக்கும் பொருந்தும். ஆனா மத்த விஷயங்களை விட புகைப்படக்கலையைக் கத்துக்கறதுக்குச் சொந்தமா ஊக்கம் கொடுத்துக்கறது அதாவது inspire ஆகறது ரொம்ப சுலபம். இதையெல்லாம் சொல்லறதுக்கு எனக்கு என்ன தகுதி இருக்குன்னு கேக்கலாம். ஏன்னா பேசிக்கலி ஐ ஆம் எ சோம்பேறி. இந்தப் பதிவை எழுதறதுக்கே பல நாள் எடுத்துக்கிட்டேன். அதோட மேல சொன்ன எல்லா விஷயமும் எனக்கும் பொருந்தும். இன்னும் கத்துக்குட்டியான என்னை மாதாமாதம் நடக்கும் புகைப்படப் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள முடியாத படி ஆப்பு வைத்து PiT ஆசிரியர் குழுவில் சேர்த்துக்கிட்ட காரணம் இதையெல்லாம் நான் எடுத்துச் சொல்லுவேன்னு தான் இருக்குமாக்கும் :). நான் இதுவரை புகைப்படக்கலையில் கத்துக்கிட்டதெல்லாம் An&, ஜீவ்ஸ் என் கல்லூரி நண்பன் திருமுருகன் இவங்களெல்லாம் குடுத்த ஊக்கத்தின் காரணமாகத் தான்.
புகைப்படக்கலையில் சீனியர்கள் சிலரின் ஊக்கத்தினால் நான் கத்துக்கிட்ட சில விஷயங்களைப் பத்தி இந்தப் பதிவுல சொல்லறேன். புகைப்படம் எடுக்கற டெக்னிக்கைப் பத்தி நான் ஒன்னும் சொல்லப் போறதில்லை.
1. நல்லது எதுன்னு தெரிஞ்சிக்கனும்
திரைப்பட இசையமைப்பாளர்களைப் பேட்டி எடுக்கும் போது "உங்களுக்கு எந்த இசையமைப்பாளரின் இசை பிடிக்கும்"னு கேட்டா என்ன பதில் சொல்லுவாங்கன்னு கவனிச்சிருக்கீங்களா? "முன்னோர்களின் இசை"ன்னு ஒரு politically correct பதிலையோ "நான் அடுத்தவங்க இசையைக் கேக்கறதில்லை"ன்னு ஒரு ஓப்பனான பதிலோ வரும். அதுக்கு காரணம் அடுத்தவங்க இசையைக் கேட்டா அந்த இசையோட தாக்கம் நாம உருவாக்கப் போற இசையில வந்துடுமேங்கிற எண்ணம் தான். ஏனென்றால் இசையமைப்பது creativeஆன ஒரு வேலை. புகைப்படம் எடுப்பதும் creativeஆன வேலை தான். ஆனா நல்ல புகைப்படம் எடுக்க கத்துக்கனும்ங்கிற ஆர்வம் உள்ளவர்கள் இசையமைப்பாளர்களோட உதாரணத்தைப் பின்பற்றுனா வேலைக்காகாது. "நல்ல புகைப்படம்"னு சொல்றேனே அதை அடையாளம் கண்டுகொள்வது எப்படி? ஏற்கனவே மத்தவங்க எடுத்து வச்சிருக்கற புகைப்படங்கள் இருக்குமில்லையா அதை பாக்கனும். இதனால் பலன் இருக்குமான்னு கேட்டீங்கன்னா என் அனுபவத்துலேருந்து கண்டிப்பா உண்டுன்னு தான் சொல்வேன். மற்ற புகைப்படங்களோட தொடர்ச்சியா நம்ம படங்களை ஒப்பிட்டுப் பாத்துக்கிட்டே இருந்தோம்னா நம்மளோட லெவல் என்னன்னு நமக்கு தெரியும், அதோட கண்டிப்பா நாளடைவுல நாம எடுக்கிற படங்கள்ல நல்ல மாற்றம் தெரியும். நிற்க. புதுசா புகைப்படம் எடுக்க வந்தாலும் ஏற்கனவே படம் வரையற ஆற்றல் இருக்கறவங்களோட புகைப்படங்களைப் பாத்தா ரொம்ப சூப்பரா இருக்கும். ஏன்னா புகைப்படக்கலையில் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றான காட்சியமைப்பு பத்தி அவங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். எந்த காட்சியை எப்படி படமா வரைஞ்சா நல்லாருக்கும்ங்கிற அனுபவம் அவங்களுக்கு ஏற்கனவே இருக்கும். அதையே சுலபமா உபயோகிச்சு அருமையான படங்களா எடுப்பாங்க. நான் மேல சொல்லிருக்கற உத்தி இந்த மாதிரியானவங்களுக்கில்லை. நம்ம படம் நல்லாருக்கா நல்லாருக்கான்னு எப்பவும் ஒரு சந்தேகம் இருக்கும் பாருங்க சில பேருக்கு? என்னைப் போல் ஒருவனான அந்த மாதிரியானவங்களுக்குத் தான்:) சரி. அடுத்தவங்க எடுத்து வச்சிருக்கற நல்ல படங்களைப் பார்ப்பது எப்படி? www.flickr.com னு ஒரு வலைதளம் இருக்கு கேள்விபட்டுருக்கீங்களா? உலகின் தலைசிறந்த புகைப்படக்கலை வல்லுநர்கள் பலரின் படங்களும் அங்கே இருக்கு. ஒரு யாஹூ ஐடி இருந்தா போதும், நீங்க கூட அதுல இலவசமா ஒரு கணக்கைத் துவங்கிடலாம். ஒரு நாளிலேயே பல லட்சம் படங்கள் அத்தளத்தில் வலையேற்றப்படுகின்றன. அவ்வளவு படங்களிலிருந்து ஒரு நாளைக்கு 500 படங்களைத் தேர்வு செய்து அவற்றை ஆர்வத்தைத் தூண்டும் புகைப்படங்கள் என்று வகைப்படுத்துகிறார்கள். இத்தகைய படங்களை வகைப்படுத்துவதற்காக(Categorising) அவர்கள் பயன்படுத்தும் சொல் "Interestingness" என்பது. இப்படங்களை 'Explore' எனும் பக்கத்தில் நமது பார்வைக்கு வைக்கிறார்கள். அந்தப் படத்தின் மீது க்ளிக் செய்தால் அப்படத்தினை எடுத்தவரின் சொந்த ஃப்ளிக்கர் வலைப்பக்கத்துக்கு நம்மை இட்டுச்செல்லும். கீழே எக்ஸ்ப்ளோர் பக்கத்தில் இடம்பிடித்த ஒரு அருமையான சில்லுவெட் படம்.
http://www.flickr.com/explore
ஒரு நாளைக்கு 500 படங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று சொன்னேன் இல்லையா? ஃப்ளிக்கர் தளத்தில் 'Last 7 days interesting' என்ற சுட்டியைச் சுட்டினால் கடந்த 7 நாட்களில் "Interestingness"இல் பகுக்கப்பட்ட, 500 Explore படங்களில் தேர்வு செய்யப்பட்ட ஒரு சிலதை நமது பார்வைக்குத் தருவார்கள். அதில் கீழே இருக்கும் 'Reload' எனும் பொத்தானை அழுத்தினால் ரேண்டமாக வேறு சில படங்கள் வலைப்பக்கத்தில் தெரியும்
http://www.flickr.com/explore/interesting/7days
இப்படங்களில் ஒரு சிலவற்றின் தேர்வு குறித்து ஒரு சிலருக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். அதாவது இந்தப் படம் 500இல் ஒன்னா தேர்வாகற அளவுக்கு ஒன்னும் அவ்வளவு சிறப்பா இல்லையேன்னு. ஃப்ளிக்கர் காரர்கள் இப்படங்களை ஒரு அல்காரித்தத்தைக் கொண்டு ஆட்டோமேட்டிக்காகத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலான படங்கள் உயர்தரமான படங்களாகத் தான் இருக்கும். நான் தினமும் ஒரு பத்து நிமிஷம் Last 7 days interesting படங்களைப் பார்ப்பேன். எந்த மாதிரி படங்கள் எடுக்கலாம் என்று வெகுவாக ஐடியாக்கள் கிடைக்கும். இந்த மாதிரியான படங்கள் எடுத்தது எப்படி? எப்படிங்கிற தேடல் கண்டிப்பா ஆரம்பமாகிடும்.
2. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
Explore படங்களைப் பாத்தாச்சு. பாத்துட்டு அப்படியே வுட்டுடறதா? அந்த மாதிரி படங்களை நாமும் எடுக்க முயற்சி செய்யனும். Eiffel Tower படத்தைப் பாத்தேன், அந்த மாதிரி படம் எடுக்க நான் எப்படி பாரிசுக்குப் போறதுன்னு லந்து பண்ணப்பிடாது. Eiffel Tower படத்தை பல பேரும் எடுத்துருப்பாங்க. ஆனா அது Exploreஇல் இடம்பிடிக்குதுன்னா அதுக்கு எதாச்சும் ஒரு காரணம் இருக்கும். அது என்னன்னு கண்டுபிடிக்கனும். அதிகம் பேர் பார்த்திராத கோணத்தில் ஈஃபிள் கோபுரத்தை அவர் படம்பிடித்திருப்பார். அதே மாதிரி நம்ம கோயில் கோபுரங்களில் ஒன்றை எடுத்தா எப்படி இருக்கும்னு முயற்சி செஞ்சி பாக்கணும். அப்புறம் இன்னொரு முக்கியமான குறிப்பு. ஒரு காட்சியை ஒரே ஒரு படம் எடுத்துட்டு விட்டுடக் கூடாது. பல கோணங்களிலும் பல படங்கள் எடுக்க வேண்டும். ஒரு படத்துல ஃபோகஸ் சரியா இருக்காது, இன்னொன்னுல வெளிச்சம் அதிகமா விழுந்துருக்கும், இப்படின்னு பல படங்கள் சொத்தையா தான் வரும். ஆரம்ப காலங்களில் ஒரே காட்சியை இருபது படம் எடுத்தா அதுலே ஒன்னு தான் கொஞ்ச சுமாரா வரும். அதனால மனம் தளரப் படாது. எல்லாருக்கும் ஆரம்பத்துல அந்த பிரச்சனை இருக்கும் தான். ஆனாலும் ஊக்கம் இருந்துச்சுன்னா இந்த ஒரு சதவீத உழைப்பு பெருசாத் தெரியாது.
"ஐ நல்லாருக்கே" அப்படின்னு மேல சொன்ன மாதிரி எக்ஸ்ப்ளோர் படங்களை க்ளிக் செய்து படம் எடுத்தவரின் வலைப்பக்கத்துக்குப் போனீங்கன்னா அவர் எந்த கேமராவை உபயோகிச்சு படம் எடுத்துருக்காருன்னு தெரிஞ்சிக்கலாம். இதுவும் படமெடுத்தவர் காட்ட விருப்பப்பட்டாத் தான் தெரியும். ஆனா பெரும்பாலானவங்க அதை மறைச்சிருக்க மாட்டாங்க.
நீங்க ரொம்ப ஆசையா பாத்த படம் Nikon D80 அல்லது Canon EOS 50D மாதிரியான உயர் ரக DSLR கேமராக்களைக் கொண்டு எடுக்கப்பட்டது எனத் தெரிந்து விரக்தியின் உச்சத்துக்கே போயிட்டீங்களா? DSLRஇல் எடுக்கப்பட்ட படங்களை நம்முடைய பாயிண்ட் அண்ட் ஷூட் கேமராவிலேயே எடுக்க முயற்சி செய்ய வேண்டும். அப்போ தான் நம்ம கேமராவால் என்ன முடியும் என்று தெரிந்து கொள்ள முடியும். DSLRஆல் மட்டும் தான் இத்தகைய படங்கள் எடுக்க முடியும், நம்ம கேமராவால் இதெல்லாம் எடுக்க முடியாது என நாமாகவே முடிவு செஞ்சிக்கக் கூடாது. உங்க கேமராவால் என்ன முடியும் என்பதையும் கண்டு கொள்ளவும் ஃப்ளிக்கர் தளம் உதவி செய்கிறது. Camera Finder என்ற பக்கத்தில் உங்களிடம் உள்ள கேமரா மாடல் ஃப்ளிக்கர் தளத்தில் எத்தனை பேரால் உபயோகிக்கப்படுகிறது என்றும் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு உங்களிடம் Canon கேமரா இருக்கிறதென்றால், Canon மாடல்களிலேயே உங்கள் மாடலுடைய ரேங்க் என்னன்னும் தெரிஞ்சுக்கலாம்.
http://www.flickr.com/cameras
Canon Powershot A100 என்ற மாடல் 2002ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு மாடல். 175 கேனான் மாடல்களில் இக்கேமரா 143ஆம் இடம் தான் பிடித்துள்ளது.
http://www.flickr.com/cameras/canon/powershot_a100
இக்கேமராவைக் காட்டிலும் அதிக உபயோகங்களையும்(features) உயர்ந்த தொழில்நுட்பத்தையும் கொண்ட கேமராக்கள் இப்போது சந்தைக்கு வந்து விட்டன. ஆயினும் இக்கேமராவால் எடுக்கப்பட்ட Interesting படங்களைப் பாருங்கள். இந்த மாதிரியான படங்களையாச்சும் நாம எடுத்துருக்கோமான்னு நம்மளை நாமளே கேட்டுக்கனும். ஆம்னு பதில் வந்துச்சுன்னா, நீங்க புகைப்படம் எடுக்க ஆரம்பிச்சு நல்லா வளர்ந்துட்டீங்கன்னு அர்த்தம். DSLR எனும் அடுத்த கட்டத்துக்கு நீங்க தாராளமாகப் போகலாம். இல்லைங்கிற பதில் வந்துச்சுன்னா நீங்க உங்க கேமராவோட முழு பலத்தையும் சரியாத் தெரிஞ்சுக்கலைன்னு அர்த்தம். முதல்ல உங்க கேமராவோட மேனுவல் புத்தகத்தைப் படிங்க. உங்க கேமராவோட முழுத் திறனையும் கண்டு கொள்ளுங்கள். நிறைய படங்களை எடுங்கள். டிஜிட்டல் தானே? காசா பணமா? புடிக்கலைன்னா சுலபமா டெலீட் செஞ்சிடலாம். 100 படம் எடுத்து ஒன்னு தான் உங்க மனசுக்குப் புடிச்ச மாதிரி வந்திருக்கிறது என்றாலும் கவலை படாதீங்க. அதுவும் ஒரு நல்ல துவக்கம் தான். பத்தாயிரம்-பதினைஞ்சாயிரம் போட்டு கேமரா வாங்கி வேஸ்டா போச்சேங்கிற குற்றவுணர்வுலேருந்து முதல்ல விடுபடுங்க.
இன்னும் சில குறிப்புகளோட இன்னொரு பதிவுல உங்களைச் சந்திக்கிறேன். வணக்கம்.

Thursday, September 17, 2009
பள்ளிப் பிராயத்திலும் கல்லூரிப் பிராயத்திலும் கையில் கேமரா இருந்ததில்லை. வேலைக்கு போக ஆரம்பித்த பிறகும் கூட கேமராவை உடனே வாங்க முடியவில்லை. அலுவலக விஷயமாய் முதல் முறை டில்லி செல்லும்போது, அங்கிருந்து ஆக்ரா பயணித்து தாஜ்மகாலை காண ஒரு நண்பனுடன் ஒரு குட்டி டூர் அடித்த போதும் கூட கேமரா கையில் இல்லை.
அவசரத்துக்கு அங்கே வாசலில் ஒருவர் 100ரூவாய்க்கு வாடகைக்குக் கொடுத்த ஒரு கோனிகா காமெராதான் உதவியது. ஆனா, அதிலும் படம் எடுத்து கழுவிப் பாத்தா எல்லாமே மங்கலா தான் வந்திருந்தது. அந்த கடுப்புலதான் சொந்தமா கேமரா வாங்கும் அவா எழுந்து, அப்பரமா சிங்கைக்கு போன போது அங்கிருக்கும் முஸ்தாஃபாவில், முதல் வேலையாய் யாஷிகா பாயிண்ட் & ஷூட் வாங்கி வைத்தேன்.
ஆனாலும் கூட சில மாசத்துல, அடுத்தவர்களின் SLR பாக்கும்போது, மோகம் அதிகமாயி வெம்பி வேதனையாயிடுச்சு. கடல்தாண்டி இங்கண அமெரிக்க வாழ்வை துவங்கியதும், முதலில் வாங்கியது, அழகிய Nikon SLR தான். ஒழுங்கா படம் எடுக்க வருதோ இல்லியோ, பாலு மகேந்திரா மாதிரி, அந்த லென்ஸை சொழட்டி சொழட்டி இடது கையால் லென்ஸை தாங்கி, குணிஞ்சு வளஞ்சு க்ளிக்கும் சுகமே சுகம்.
குறிப்பா, கிருச்சுக்காக்னு ஷட்டர் சத்தம், கேட்பதர்க்கு ரொம்பவே ரம்யம். இது கையில் வந்தப்பரம், யாஷிகா பாயிண்ட் & ஷூட், பொம்மை கேமரா மாதிரி ஆகிப் போச்சு. இப்போ சென்னையில், கேட்பாராற்றுக் கிடக்கிறது. Nikonல் இருந்து டிஜிட்டலுக்கு மாறும்போது, DSLRக்கு போக முடியவில்லை. டப்பு ரொம்ப ஜாஸ்தியாயிருந்தது.
வேர வழியில்லாமல், இதிலும் ஒரு Canon பாயிண்ட் & ஷூட்டுடன் வாழ்க்கை நகரத் துவங்கியிருந்தது.
ஆனாலும், க்ருச்சுக்காக் ஷட்டர் சத்தம் கேட்காமல் ரொம்ப நாள் தள்ள முடியாமல், DSLRஐ வாங்கித் தொலைத்தாயிற்று.
DSLR செலவு செய்ததுக்கு உருப்படியா உபயோகிக்கணும்னு முடிவு பண்ணிதான், சுய பரிசோதனையில் கொஞ்சம் கொஞ்சமா விஷயங்களை கத்துக்க ஆரம்பிச்சது.
DSLRன் சக்தியே, Manualல் வித விதமாய் பல விஷயங்களை எடுக்க முடிவது தான். ஆனாலும், நான் Autoவை விட்டு வர ரொம்ப காலமாயிற்று. PiT உந்துதலினால் ஓரளவுக்கு பயிற்சியும் முயற்சியும் திருப்திகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
எனக்கு ரொம்பவே பிடித்தது, AEB (Auto exposure bracket) செட்டப்பில், ஒரே காட்சியை மூன்று exposureகளில் க்ளிக்கி, அதை பின்னர் கலந்து செய்யும் HDR படங்கள் தான்.
DSLR நமக்குத் தரும் சுதந்திரத்தை இன்னும் நல்லா பயன் படுத்தணும் என்ற அவா சமீபத்தில் எழுந்தது. இணையத்தை அலசிய போது, சிலது கண்ணில் பட்டது.
பட்டதை இங்கு கொட்டலாம் என்று முடிவு.
(யப்பாடி, இவ்ளோ பெரிய பில்டப்பா?)
முதல் முயற்சியாக, உங்களுடன் பகிர இருப்பது, Zoom Burst என்னும் ஈஸி உத்தி (டெக்குனிக்கு).
இதன் செய்முறை:
அ. கேமராவை ட்ரைபாடில் பொருத்திக் கொள்ளுங்கள்.
ஆ. Zoom Burst ஆக்க நினைக்கும் சப்ஜெக்ட்டை கட்டம் கட்டுங்கள்.
இ. உங்க ஷட்டர் வேகம் அட்லீஸ்ட் 1 நொடியாவது வைக்க வேண்டும். 1 நொடி நேரம் திறந்து வைப்பதால், வெளிச்சம் குறைவாக கேமராவுக்குள் அனுமதிக்க, குட்டி அபெர்ச்சரை (பெரிய F எண்) தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது குட்டி ISOவை (100) தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்க. கேமரா லைட் மீட்டரில் காட்சியின் ஒளி சரியா இருக்குமாறு Fஐயும், ISOவையும் கூட்டிக் கொறச்சு பாருங்க.
ஈ. இப்போ க்ளிக்குங்க
உ. க்ளிக்கியதும், ஷட்டர் திறந்து மூடுவதர்க்குள். உங்கள் ஜூமை சீராக திருகுங்கள். உள்ளிருந்து வெளியோ, வெளியிருந்து உள்ளேயோ, அது உங்க இஷ்டம்.
ஷட்டர் திறந்திருக்கும்போது, இப்படி ஜூமை திருகுவதால், உங்க சென்சாரில் பதியும் படம், 'வித்யாசமாய்' வரும்.
இது ஒரு தபா பண்ணிப் பாத்தீங்கன்னா, அப்பரமா, நீங்களே வித விதமா வித்யாசமான சப்ஜெக்ட்டை தேடிப் பிடித்து ஷூட்டுங்க. ஏதாவது ஒண்ணு 'நச்'னு வர வாய்ப்பிருக்கு.
சேம்ப்பிள்ஸ் சில:
1) ஜீவ்ஸின் Zoom Burst:
2) Fatmanwalking from flickr
3) என் முயற்சி:
4) முரளி என்பவ்ரின் ஜூப்பர் படம் ஃப்ளிக்கரில் பார்க்க இங்கே சொடுக்கவும்.
DSLR இல்லாதவங்க என்ன பண்றதுன்னு தலையை சொறிய வேண்டாம். இருக்கவே இருக்கிறான் Gimpபன்.
An& அண்ணாச்சி கேட்டதும் கொடுத்தார்.
கிம்ப்பில் இந்த ஜூம் பர்ஸ்ட் செய்ய
Filter -> Blur -> Motion Blur -> Zoom செய்து மகிழலாம்.
இனி என்ன? கோடு போட்டாச்சுல்ல? ரோட்ட போட்டுடலாம்ல?
போட்டு உங்க ஜூம் பர்ஸ்ட்டை பதிவேத்திச் சொல்லுங்க.
நன்னி!

Wednesday, September 16, 2009
இந்த மாதம் சில்லவுட் ன்னு அறிவித்திருந்தோம். கல்லாவுலே மொத்தம் 58 படம் சேர்ந்திருக்கு. அதென்னமோ தெரியலை.. பரீஷைக்கு முந்தின வாரம் தான் எல்லார் வீட்டிலேயும் (படிக்கிர வயசிலே பசந்த இருக்காங்கன்னு சொல்லரா மாதிரி) சொல்லி வச்சா மாதிரி ராத்திரி 2 – 3 மணிக்கெல்லாம் அலாரம் கேக்கும். அதே மாதிரி பிட்டிலேயும் கடைசீ 72 மணி நேரத்திலே தான் அதிகப்படியான சப்மிஷண் வந்திருக்கு. இதிலே இருந்து என்ன தெரியுதுன்னா.. போட்டி அறிவிச்சதும், பரண்லே இருந்து தூசு தட்டாம, எல்லாரும் ரூம் போட்டு யோசிச்சு, வேலை மெனக்கெட்டு க்ளிக்கி அனுப்பியிருக்கீங்கன்னு. பிட் போட்டியிலே பிரைஸ் வாங்கிரது ஒரு பக்கம் இருந்தாலும்.. போட்டிக்கு படம் அனுப்பணும்ன்னு வரும் போது.. தனிப்பட்ட முயர்ச்சி எடுக்கறீங்க பாருங்க.. இதிலேயெ நம்ம பசங்க ஜெயிச்சிட்டாங்க.
இன்னையோட போட்டிக்கான படம் அனுப்ப வேண்டிய கெடு முடியுது. இந்த முறை அனுப்ப மறந்து போனவங்க அடுத்த 1 – 15 தியதியை செல்பேசியில் ரிமைண்டர் போட்டு வச்சுக்குங்க. ( நோட்டு புக்கை நாய் கவ்விடுச்சுன்னு சொல்லரா மாதிரி செல் பேசி இல்லங்கிர கதை எல்லாம் இங்கே செல்லாது ).
போட்டிக்கு படம் அனுப்பின 58 பேருக்கும் ஒரு வேண்டுகோள். உங்களுக்கு நேரம் இருக்கும் போது, படத்தை எங்கே & எப்போ & எந்த கேமேரா ( Location , Time & Camera Model ) எடுத்தீங்கன்னு சொன்னா நல்லா இருக்கும். ' நல்ல' கேமரால தான் "சூப்பர்" படம் எடுக்கலாம்ங்கிர எண்ணம் பல பேருக்கு இருக்கு. " சூப்பர் " படங்களில் கேமராவின் பங்கு இருந்தாலும், குறிப்பிட்ட காட்சியை பார்ப்பவர் கண்களிலே தான் படத்தின் அம்சம் நிறைஞ்சு இருக்கு. இவர் பார்ப்பதை நமக்கெல்லாம் எடுத்துக்காட்டும் கருவி தான் கேமரா.
மத்தபடி எதுவும் சொல்லரதுக்கில்லை. எல்லாரும் ஆன்ஸர் ஷீட்டை சப்மிட் பண்ணிட்டீங்க. பரீஷை முடிஞ்சுதுன்னு எல்லாரும் ஜாலியா ஏதாவது படத்துக்கு போங்க.. (நானெல்லாம் அப்படித்தான், செமிஸ்டர் முடிஞ்சதும் அடுத்த ரெண்டு நான் சினிமா கட்டாயம் உண்டு).. இன்னும் ரெண்டு வாரத்திலே எல்லா சப்மிஷனையும் கரெக்க்ஷண் பண்ணி நோட்டீஸ் போர்டிலே போடுவோம். அது வரை என்ஜாய் !
இந்த மாத போட்டியில் பங்குபெறும் படங்களின் அணிவகுப்பை இங்கே பார்க்கலாம்.

Monday, September 14, 2009
வணக்கம் மக்கா,
எல்லோரும் எப்படி இருக்கீங்க? நம்மோட புகைப்பட பொட்டியில பலவற்றை படம் பிடிக்குறோம். பெரிய, பெரிய கட்டம் ஆகட்டும், மனிதர்கள் ஆகட்டும், விலங்கு மற்றும் பறவைகள் ஆகட்டும் எல்லாத்தையும் பிடிக்குறோம். இவற்றிற்கும் "மேக்ரோ" புகைப்படங்களுக்கும் என்ன வித்யாசம் ? எளிமையாக சொல்லனும்னா மிக சிறியவற்றை படம் பிடிக்கறது தான் மேக்ரோ. மேக்ரோ புகைப்படத்தின் உண்மையான விளக்கம் என்னவென்றால் "உங்கள் புகைப்பட பேட்டியின் உள்ள சென்சார்/பிலிம் அளவே உள்ளவற்றை புகைப்படமாக பதிவு செய்வது". எடுத்துகாட்டாக உங்க காமிராவின் சென்சார் அளவு 23.6mm x 15.8mm என்று வைத்து கொள்வோம். அதே அளவு உள்ளவற்றை முழுப்படமாக எடுத்தால் அது மேக்ரோ என்றாகிறது. இதை 1:1 மேக்ரோ என்று அழைப்பார்கள்.
இன்னும் புரியாதவர்களுக்கு, கீழே உள்ள படம் 200mm சாதரண லென்ஸ் உதவியுடன் எடுக்கப்பட்டது.
அதே பூ 200mm மேக்ரோ லென்ஸ் உதவியுடன் 1:1 அளவில் எடுக்கப்பட்ட படம் கீழே. இந்த படத்தில் காணப்படும் பூவின் பகுதின் அளவும், என்னுடைய காமிரா சென்சார் அளவும் (23.6mm x 15.8mm) ஒன்று தான்.
இந்த பூவின் உண்மையான அளவை தெரிந்து கொள்ள கீழே உள்ள படம் பயன் படும் என்று நினைக்குறேன்.
படங்களை பார்த்தாச்சா ? முதலில் எழும் கேள்வி என்னவென்றால் மேக்ரோ மற்றும் சாதரண லென்ஸ் இவற்றுக்கிடையில் இவ்வளவு வேற்றுமையா ? அது ஏன் ?
மேக்ரோ மற்றும் சாதரண லென்ஸ் இவை இடையே உள்ள முக்கிய வேற்றுமை "Minimum Focusing Distance". (அதாவது எவ்வளவு அருகில் உங்கள் லென்சினால் போகஸ் செய்ய முடியும் ?). மேக்ரோ லென்சில் இந்த தூரம் மிகவும் குறைவு(என்னுடைய சாதாரன 200mm லென்சின் Minimum Focus Distance 5 அடி, 200mm மேக்ரோ லென்சின் MFD 1.6 அடி). அதனால் உங்கள் காமிரா சென்சாரில் சிறியவற்றை கூட முழுவதும் பரப்பி படம் பிடித்து விடலாம்.
மேலும் மேக்ரோ லென்ஸ் சாதாரன லென்சை விட ஷார்ப்னஸ் மற்றும் தெளிவு அதிகம்.
ஆனால் மேக்ரோ லென்சின் பலகீனம் நம் பர்ஸை பதம் பார்ப்பது :( . பெரும்பாலும் நமக்கு 1:1 அளவில் மேக்ரோ படங்கள் தேவை படாது. 1:2, 1:4 கூட போதும். கீழே உள்ள படம் சாதாரன 200mm லென்ஸ் உதவியுடன் தான் எடுக்கப்பட்டது (ஆனால் வேறு சில வழிமுறைகளை பயன்படுத்தி).
வரும் வாரங்களில் சாதாரன லென்சின் மூலம் மேக்ரோ படம் எடுக்கும் வழிமுறைகளை காண்போம்.
இப்போ சில குறிப்புகளை பாப்போம்.
* பெரும்பாலும் நாம லென்சை சப்ஜெக்டுக்கு அருகில் சென்று படம் பிடிப்பதால் DOF மிகவும் மெலிதாக இருக்கும், அதனால aperature கொஞ்சம் கம்மி பண்ணி வைங்க (f/9, f/16, f/25)
* இப்போ aperature கம்மி பண்றதால ஷட்டர் வேகம் கம்மி ஆகிடும். அதனால முடிஞ்ச வரைக்கும் முக்காலி பயன் படுத்துங்க
* முக்காலி பயன் படுத்த முடியாத நேரங்களில், ISO கூட்டி படம் எடுங்க. அப்போ கொஞ்சம் ஷட்டர் வேகம் அதிகமா இருக்கும்.
* அப்புறம் DOF மெலிதாக இருப்பதால், உங்க சப்ஜடையும், சென்சாரையும் Parallela வச்சுக்கோங்க. அப்பத்தான் உங்க சப்ஜெடின் எல்லா பாகமும் தெளிவா வரும்.
வேறு எதாவது விளக்கம் வேணும்னா பின்னூட்டத்தில் சொல்லுங்க.
நன்றி ! வணக்கம் !
சின்னஞ்சிறு உலகம் - முன்னுரை

Friday, September 11, 2009
Source : http://www.freephotosbank.com/9358.html
கேமராவுக்கு முக்காலி (ட்ரைபாட்) தேர்வு செய்வது எப்போதுமே சற்றே சிரமமான விஷயம் தான். எவ்வளவு தான் ஆராய்ச்சி செய்து எதைத் தேர்ந்தெடுத்தாலும் அட.. இதை விட நல்லதை தேர்ந்தெடுத்திருக்கலாமே என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியாது.
பொதுவாக ட்ரைபாட் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய சில.
* அரங்கத்தில் உபயோகிக்கவா, பொதுவெளியில் உபயோகிக்கவா ?
* எந்த அளவு உயரம் தேவை, பொதுவாக எது போன்ற புகைப்படத்துக்கு உபயோகிப்பீர்கள் ?
* உங்களின் பயணத்துக்கு ஒத்துவருமா ? சில ட்ரை பாட்கள் 3 - 4 கிலோவுக்கும் வரும். அதை தோளில் சுமந்துக் கொண்டு சுத்த முடியுமா ?
* ட்ரைபாட் க்காக உங்களின் அதிகபட்ச பட்ஜட் எவ்வளவு ?
* எந்த மெட்டீரியலில் செய்யப் பட்டிருக்கிறது ?
அப்பாடா... லிஸ்ட் முடிஞ்சுடுச்சான்னு கேக்கறீங்களா ? ... அட யோசிச்சதுல நினைவுக்கு வந்தது இது. அடுத்து வெளிச்சத்தை எப்படி க்ரியேடிவா உபயோகிக்கறதுன்னு பாக்கலாம். அதுவரைக்கும் .. ஜூட்டேய்

வெளியில் உபயோகிக்கப்படும் தாங்கிகளுக்கு பொதுவாக மண்ணில் நன்றாக ஊன்றி நிற்பதற்கேற்றவாறு முள் போன்ற அமைப்பு காலில் இருக்கும். உள்ளரங்கம் என்றால் இரப்பரில் வழுக்காதவாரு ஸ்திரமாக நிற்கும் வகையில் இருக்கும். இரண்டில் எது உங்களின் அதிகபட்ச தேவையோ அதற்கேற்றார் போல் தேர்ந்தெடுக்கவும்.* எவ்வளவு எடை தாங்கும் ? உங்களிடம் உள்ள அதிக பட்ச எடை கூடிய லென்ஸுடன் கூடிய கேமராவின் எடை, மற்றும் லென்ஸ் எவ்வளவு நீளம் வரும். கேமரா முன்னால் சாயாமல் அதை தாங்குமா ?
குறைந்தது இரண்டு கிலோ எடை தாங்கக் கூடியதாக இருத்தல் நலம். லென்ஸுடன் கூடிய கேமராக்கள் அதிலும் டெலி ஜூம் வைத்த லென்ஸுகள் கொண்ட கேமராக்கள் அதிகம் எடை வரும். தாங்கி அதை ஸ்திரமாகத் தாங்க வேண்டும். இல்லாவிட்டால் கால்கள் வளைந்தோ/உடைந்தோ முதலுக்கே மோசமாகலாம் அல்லது ஸ்திரத்தன்மை இழந்து முன்பின் சாய்ந்துவிடலாம்.
* எந்த அளவு உயரம் தேவை, பொதுவாக எது போன்ற புகைப்படத்துக்கு உபயோகிப்பீர்கள் ?
இது முக்கியமான ஒன்று. உங்களின் உபயோகம் எதுபோன்றது என்பதைப் பொறுத்தது. மேக்ரோ போட்டோ எடுப்பவர்களுக்கு, கட்டிடம், இயற்கை காட்சிகள், போர்ட்ரைட் என ஒவ்வொன்றிற்கும் ஒரு உயரம் தேவைப் படுகிறதல்லவா ? பொதுவாக குறைந்தபட்ச உயரமாக மூன்றடியில் இருந்து ஆறடி வரைக்கும் அமைக்கும் வகையில் கிடைக்கும். மேக்ரோ போட்டோகிராபிக்கு இன்னும் குறைந்த உயரத்தில் ஸ்திரமானவைகளும் கிடைக்கும்.* கியருடன் கூடியதா ? பால் ஹெட் கூடியதா ? அல்லது வெறுமனே கேமராவை அமர்த்தக் கூடியதா ?
Source : http://www.123rf.com/photo_420928.html
கியருடன் கூடியது என்றால் பனாரம / இயற்கை காட்சிகள் மற்றும் போர்ட்ரைட் க்கு நன்றாக இருக்கும்.
பால் ஹெட் இருந்தால் நகர்தல் மிக மென்மையாகவும் அதே நேரம் பிடிப்பு அழுத்தமாகவும் நழுவாமலும் இருக்கும். பெரும்பாலும் வைல்ட் லைஃப் போட்டோகிராபிக்கு இது நன்றாக இருக்கும்.
* உங்களின் பயணத்துக்கு ஒத்துவருமா ? சில ட்ரை பாட்கள் 3 - 4 கிலோவுக்கும் வரும். அதை தோளில் சுமந்துக் கொண்டு சுத்த முடியுமா ?
ரொம்ப சீரியஸான உபயோகம் இல்லாதவங்க, கைக்கடக்கமான, மினி ஸ்பைடர் வகை குட்டி ட்ரைபாடை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவசரத்துக்கு எடுத்துச் செல்ல, மற்ற வகை பெரிய ட்ரைபாடுகளை விட இவை மிக உபயோகமானவை. இவ்வகைகள், point&shoot கேமராக்களுக்கும், கனம் குறைந்த (பெரிய லென்ஸ்கள் இல்லாத) DSLRக்கும் உபயோகிக்க முடியும்.
* ட்ரைபாட் க்காக உங்களின் அதிகபட்ச பட்ஜட் எவ்வளவு ?
சுமார் ஐநூறில் இருந்து பத்தாயிரத்துக்கும் அல்லது இன்னமும் அதிகபட்ச விலைக்கும் கிடைக்கிறது.* ஒற்றைக் கால் தாங்கியா ? முக்காலியா ? எத்தனை கைப்பிடி தேவை
உங்களின் உபயோகத்திற்கு ஏற்றவாரு தேர்ந்தெடுக்க வேண்டும். ஒற்றைக் கால் தாங்கி பெரும்பாலும் தன்மீது சாய்த்து வைத்துக் கொண்டு எடுக்க வேண்டும்.
* எந்த மெட்டீரியலில் செய்யப் பட்டிருக்கிறது ?
அலுமினியம், கார்பன் ஃபைபர் அல்லது இரும்பு என பலவகையிலும் கிடைக்கிறது
அப்பாடா... லிஸ்ட் முடிஞ்சுடுச்சான்னு கேக்கறீங்களா ? ... அட யோசிச்சதுல நினைவுக்கு வந்தது இது. அடுத்து வெளிச்சத்தை எப்படி க்ரியேடிவா உபயோகிக்கறதுன்னு பாக்கலாம். அதுவரைக்கும் .. ஜூட்டேய்
Wednesday, September 2, 2009
இந்த மாதிரியான கருப்பு/வெள்ளை படங்களை பார்த்து இருப்பீர்கள்.
Ipod விளம்பரங்களில் நிறைய இதுப் போலப் பயன்படுத்தி இருப்பார்கள்.
இதை கிம்பில் சில நொடிகளில் செயவது பற்றி இங்கே.
படத்தை வழக்கம்போல கிம்பில் திறந்து பின்ணனி லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.
இனி, Colors -> Threshold தெரிவு செய்யுங்கள்.
Threshold உரையாடல் பெட்டியில் கவனிக்க வேண்டிய விஷய்ங்கள். இடது பெட்டியில் 127 மற்றும் வலது பெட்டியில் 255 என்றும் இடையில் ஒரு சிறிய ஒரு கருப்பு முக்கோணமும் இருக்கும். Pixel Value 127 ம் அதுக்கு குறைவான அளவுகளும் கருப்பாகவும், 127க்கும் 255க்கும் இடைப்பட்ட Pixel கள் வெள்ளையாகவும் மாறியிருக்கும். அதாவது சரிபாதி கருப்பாகவும் , சரிபாதி வெள்ளை நிறமாகவும் படம் மாற்றப்பட்டு இருக்கும்.
முக்கோணத்தை வலதுப் பக்கம் நகர்த்தினால், கருப்பின் அளவு அதிகரிக்கும்.
முக்கோணத்தை இடதுப் பக்கம் நகர்த்தினால், வெள்ளையின் அளவு அதிகரிக்கும்.
உங்களுக்குத் தேவையான இடத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
மிக மிக எளிதான முறையில் படம் தயார்.
சரி, இதே முறையை பயனபடுத்தி எப்படி Ipod விளம்பரங்கள் செய்வது ?
இதோ இப்படித்தான்
ப்டத்தை கிளிக்கி பெரிதாக்கி பாருங்கள். நான் செய்தது இதுதான். முதலில் threshold உபயோகப்படுத்தி கருப்பு வெள்ளைக்கு மாற்றிக் கொண்டேன். சரியாக இல்லாத இடத்தில் பின்னர் கருப்பு/வெள்ளை நிறத்தை ஒரு புதிய லேயரில் நிரப்பிக்கொண்டேன். பின்னர் மஞ்சள் நிறத்தை புதிய லேயரில் நிரப்பி Multiply mode க்கு மாற்றினால் முடிந்தது வேலை.

Subscribe to:
Posts (Atom)