Tuesday, November 10, 2009

உள்ளரங்கு புகைப்படக் கலை 001

9 comments:
 
நல்ல சீரிய சூரிய ஒளியில் இயற்கை அழகை புகைப்படப் பெட்டியில் பிடிப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அதே நேரம் இரவின் அழகையும் பிடிக்கலாம். நட்சத்திரங்கள், ஜொலிக்கும் விளக்குகள் என நிறைய இருக்கிறது. ஆனால் உள்ளரங்கில் எடுக்கப்படும் புகைப்படத்தின் தரம் எதிர் பார்த்த அளவு வருவதில்லை. முக்கிய காரணம் போதுமான வெளிச்சம் கிடைக்காதது. சில படங்கள் ரொம்ப கறுத்து ஒன்றுமே தெரியாமல் போகும். இல்லாட்டா கை நடுங்கி நாலு பெக் அடிச்சிட்டு அப்புறமா எடுத்த மாதிரி இருக்கும். அதை சரி செய்ய ஃப்ளாஷ் அடிச்சா போச்சு... உள்ளதும் போச்சுடாங்கற கதையா போய்டும். ஆனால் இதையெல்லாம் சமாளிச்சு இருக்கும் வெளிச்சத்தை மேம்படுத்தி அல்லது இயன்ற அளவுக்கு தேவையான வெளிச்சத்தை உருவாக்கி வீட்டினுள்ளும் அருமையான படங்களை எடுக்க முடியும். ஏற்கனவே விளம்பரங்கள் போட்டிக்கு வந்த படங்களின் தரத்தையும் நினைவுக் கூர்ந்து பார்க்கலாம். வெளியில் எடுக்கும் புகைப்படத்தை விடவும் வீட்டில் எடுக்கும் புகைப்படத்திற்கான ஒளியை நம்மால் கட்டுப்படுத்தி தேவையான அளவு மட்டுமே புகைப்படம் எடுக்கப் போகும் பொருளின் மீது விழச்செய்ய முடியும். நம்புங்கள் நம்மால் முடியும்... இங்கே நாம் விவாதிக்கப் போவது இருக்கும் ஒளியை எப்படி மேம்படுத்தி உபயோகிப்பது Portrait & Tabletop photography வீட்டிலேயே தேவையான ஒளிக்கருவிகளை செய்து கொள்வது & உபயோகிக்கும் முறைகள். கண்ணாடி பொருட்களை புகைப்படமெடுக்கும் நுணுக்கம் நகை, சிறு பொருட்கள் ( மொபைல் போன், எலெக்ட்ரானிக் கேட்ஜட் ) லைட் பெயிண்டிங். விடுபட்டவை ஏதும் இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லவும். இந்தத் தொடரை வெறும் "மற்றுமொரு பாடமாக" இல்லாமல், நீங்களும் பங்கெடுத்து செயல்பட்டால் மட்டுமே வெற்றிகரமாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். சொல்லப்படுபவகளை முயற்சித்து பார்த்து அதற்கேற்ப வரும் பின்னூட்டங்களே இது போன்ற பதிவுகளை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல உதவும் காரணிகள். அடுத்த பதிவு - குறைந்த விலையில் சிறு பொருள்களைப் படம் பிடிக்க லைட் டெண்ட் அமைப்பது எப்படி ? ( செய்முறை விளக்கங்களுக்கான படங்களுடன் வருவதால் சற்றே தாமதம் ஆகலாம். நிதானித்தருள்க ) கூடிய விரைவில் சந்திப்போம். அதுவரை.... சில படங்கள் :) ஃபெராரி - ஜீவ்ஸ் :. செர்ரீஸ் - ஆனந்த்:. கோக் - கைப்புள்ள:. என்ன தவம் செய்தனை.. யசோதா - ஜீவ்ஸ்:. LG Cookies - Jeeves :. Yeaaay... Lets start the wheel rolling.....

9 comments:

 1. நல்லாருக்கு - நெரெய கத்துக்கணூம் இன்னும்

  பாப்போம்

  நல்வாழ்த்துகள் ஜீவ்ஸ்

  ReplyDelete
 2. செரீஸ் - யசோதா - சூபர் - எனக்கு ரொம்பப் பிடிச்சது

  நல்வாழ்த்துகள் ஜீவ்ஸ்

  ReplyDelete
 3. அத்தனை படங்களும் அருமையாக உள்ளது.
  அதுவும் அந்த யசோதா அன்னையின் படம் அருமையான முகபாவத்தோடு அமைந்திருக்கிறது..பாராட்டுக்கள்..!!

  ReplyDelete
 4. மிகவும் அருமையாக உள்ளது.
  எனக்கு பிடித்தமான படம் கைபுள்ளளோடது & செரிஸ்-ஆனந்த்.என்ன தவம் செய்தனை.. யசோதா - ஜீவ்ஸ் simply superb.

  ReplyDelete
 5. அருமையாக இருக்கின்றன... யசோதவின் படம் மிக மிக அருமை... தொடருங்கள் காத்திருக்கிறோம்...

  ReplyDelete
 6. சூப்பர். ய்சோதாவும், செர்ரியும் கலக்கல்

  ReplyDelete
 7. பரதநாட்டிய ஸ்டில்லு அட்டகாசம் ! (ம்ம் நானும் இப்படி மாதிரி 1 எடுத்தேன் போட்டோ ஒகே பட் டான்சர் சரியில்ல)

  ReplyDelete
 8. நன்றி சீனா சார்
  நன்றி ரங்கன்
  நன்றி கார்த்தி
  நன்றி கமலக்கண்ணன்
  நன்றி நான் ஆதவன்

  நன்றி ஆயில்யன்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff