Sunday, November 1, 2009

படம்பிடித்தல் - அ முதல் ஃ வரை...

13 comments:
 
உள்ளூர் நூலகத்தில், National Geographicன் 'The Ultimage Field Guide to Photography' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. புகைப்படத் துறையின் ஜாம்பவான்கள் சிலர், கூட்டாக, உபயோகமான நுட்பங்களை வெளியிட்டிருக்கும் புத்தகம் இது. ஆ முதல் ஃ வரை எல்லாத்தையும் வெவரிச்சிருக்காங்க. பாதி தான் பொரட்டிருக்கேன். மீதிப் பாதி பொரட்டரதுக்குள்ள, அங்கே படித்து அறிந்து கொண்ட சில 'டிப்ஸை' இங்கே அள்ளி வீசலாம்னு தோணிச்சு. அதான், புக்கை மூடி வச்சுட்டு தட்டச்ச வந்துட்டேன். மொத்தமும் அங்கேருந்து உருவினது இல்லை. இடை இடையே சொந்த சரக்கும் கலந்து விட்டிருக்கேன். அ. கேமரா வாங்குவது பற்றி...
இதை PiTலும் நல்லா அலசியிருக்கோம். படிக்காதவங்க படிச்சுக்கோங்க. உங்க பட்ஜெட் எந்த அளவுக்கு பெருசா இருக்கோ, அந்த அளவுக்கு ஆராய்ச்சி பண்ணுங்க. ஆராய்ச்சி பண்ண சில முக்கிய தலங்கள் இவை: http://photographyreview.com, http://camerareview.com, http://decresource.com, http://imaginc-resource.com, http://steves-digicams.com
ஆ. Point & Shoot கேமரா வைத்திருப்பவர்களுக்கு...
நல்ல படங்கள் எடுக்க DSLRதான் வேணும்னு அவசியம் இல்லை. குறைந்த விலையில் கிட்டும் பாயிண்ட் & ஷூட்டும் ஓ.கே. கைக்கடக்கமா குட்டியா இருக்கரதால இந்த கேமராவின் ஒரே ப்ரச்சனை, கெட்டியா பிடிச்சு, ஸ்டெடியா படம் எடுக்கரது கஷ்டம். எனக்குத் தெரிஞ்ச ஒரு பெருசு படம் புடிக்க சொன்னா, கேமரா க்ளிக்கரை மட்டும் அழுத்தாமல், மொத்த கேமராவையும் க்ளிக்கி ஒரு ரெண்டடி வரைக்கும் கேமராவ ஆட்டுவாரு. படம் ஷேக்காகித் தான் வரும், இப்படி எடுத்தா. முடிந்தவரை, இரண்டு கையிலும் ஸ்டெடியா புடிச்சு, அலுங்காம குலுங்காம எடுக்கப் பழகிக்கங்க. கிட்டார் கத்துக்கும்போது சொன்னாங்க, சும்மா ஒக்காந்து டிவி பாக்கும்போதும், கை விரல்களை கிட்டார் வாசிப்பது போல் ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும். அப்பத்தான், விரல் திடமாகும்னு. அதே மாதிரி, நீங்களும் ஆள்காட்டி விரலை பென்ச்சில் க்ளிக்கிக்ட்டே இருங்க. அந்த ஒரு விரல் மட்டும்தான் ஆடணும், மொத்த உடலும் அல்ல. உங்கள் கேமராவில் இருக்கும் digital zoomஐ பயன் படுத்தாமல் இருத்தல் நலம். optical zoom உபயோகித்து படம் புடிச்சு, அப்பரம் தேவைப்பட்டா க்ராப் பண்ணிக்கோங்க. digital zoom கொண்டு எடுக்கும்போது, படத்தின் தரன் குறைஞ்சிடும். உங்க கேமராவின் வேகம் என்ன, எவ்ளோ சீக்கிரமா அது படம் எடுக்க முடியுங்கரத, ப்ராக்டீஸ் பண்ணி தெரிஞ்சுக்கோங்க. அதன் வேகத்துக்கு ஏத்த மாதிரி, குழந்தையை ஃபோட்டோ எடுக்கும்போடோ வேர ஏதாவது, அசையும் பொருளை எடுக்கும்போதோ உங்களை நீங்க தயார் படுத்திக்கலாம். focus lock (half press) எப்படி பண்றதுங்கரதும் அவசியம். க்ளிக்கரை முழுசா அமுக்காம பாதி அமுக்கினா, நீங்க எடுக்கவிருக்கும் படம் ஃபோக்கஸ் ஆயிடும், அப்பரமா, குழந்தை சிரிக்கும்போது, மீதிப் பாதி அமுக்கிட்டா, நீங்க நெனச்ச படம் கெடச்சிடும். முழு க்ளிக்கும் ஒரே வீச்சில் பண்ணினா, குழந்த சிரிச்சு முடிச்சு, 'இப்ப என்னா பண்ணுவ?'ன்னு வில்லங்கமா பாக்கும்.
இ. அடிப்படைகள்:
பிட்டில் ஏற்கனவே இதை அலசி ஆராஞ்சாச்சு. முதலில் இவைகளை படிக்காதவங்க படிச்சுடுங்க. general tips, Focal Length, F-Stop, DOF, White balance, Histogram, Metering
ஈ. DSLR டிப்ஸ்:
ISO - இது உங்க கேமராவின், sensitivity/கிரஹிப்புத் தன்மையை நிர்ணயிக்கும். நல்ல வெயில் இருக்கும் இடங்களுக்கு 100ம், வெளிச்சம் குறைவான இடங்களுக்கு 400ம், இருள் சூழ்ந்த இடங்களில் 800 அல்லது 1600ம் உபயோகிக்கணும். வெளிச்சம் கம்மியாக ஆக, ISOவை கூட்டணும். ஆனால், ISO கூட்ட கூட்ட, உங்கள் படங்களின் தரம் கம்மியாகிடும். noise ஜாஸ்தி ஆயிடும், ஞாபகம் இருக்கட்டும். 'Sunny f/16'ன்னு ஒண்ணு சொல்றாங்க. மேலே உள்ள பாடங்கள் படிச்சிருந்தீங்கன்னா உங்களுக்கு aperture/Fstopன்னா என்னான்னு தெரிஞ்சிருக்கும். வெளியில் பரந்து விரிந்த இயற்கை காட்சிகளை படம் பிடிக்கும்போது, உங்கள் ISOக்கு ஏத்த மாதிரி ஷட்டர் ஸ்பீடு அமைக்கணும். அதாவது, fstop f/16 (landscapeக்கு குட்டி அபெர்ச்சர் தேவை) வைத்து, ISO 200 வச்சிருந்தீங்கன்னா, ஷட்டரின் வேகம் 1/200 வைக்கணும். ISO 400 வச்சிரூந்தீங்கன்னா, ஷட்டரின் வேகம் 1/400. ஒரு போர்ட்ரெய்ட் படம் எடுக்க 1/60 லிருந்து, 1/250 வரை ஷட்டர் வேகம் இருக்கலாம். ஓடும் வஸ்துக்களை ஷார்ப்பாக எடுக்க 1/1000 வைத்துக் கொள்ளலாம். 1/60ஐ விட கம்மியாக எடுக்க வேண்டிய நிர்பந்தம் வந்தால், ட்ரைபாடு இல்லாமல் எடுக்காதீர்கள். படம் ஷேக்காகம வரது கஷ்டம்.
- உ டு ஃ தொடரும்,

13 comments:

 1. பாஸ் சூப்பர் விசயம் நீங்க செஞ்சுருக்கிறது!

  [இயல்பாவே நான் ரொம்ப சோம்பேறி அதுலயும் தேடி தேடி போஸ்ட் எடுத்து படிக்கிறதுன்னா கேக்கவேண்டாம் இது நொம்ப்ப யூஸ் ஃபுல்லா இருக்கும்ல] :)))

  ReplyDelete
 2. அ முதல் ஃ வரை ன்னு அனைத்து விபரங்களையும் ரத்ன சுருக்கமாக அனைத்தையும் அற்புதமாக விளக்கி விட்டீர்கள்... ISO பற்றி ரொம்ப புரியாமல் இருந்துச்சு அதை சுருக்கமாக புரியும்படி விளக்கியதற்கு நன்றி சர்வேசன்... உணவுப் பொருட்களுக்கு எத்தனை ISO வேகம் வைக்கனும். ஷட்டர் வேகம் வைக்கனும் என்று சொன்னால் எனக்கு உபயோகமா இருக்கும்...

  ReplyDelete
 3. //உங்கள் கேமராவில் இருக்கும் digital zoomஐ பயன் படுத்தாமல் இருத்தல் நலம். optical zoom உபயோகித்து படம் புடிச்சு, அப்பரம் தேவைப்பட்டா க்ராப் பண்ணிக்கோங்க. digital zoom கொண்டு எடுக்கும்போது, படத்தின் தரன் குறைஞ்சிடும்.//

  இது எனக்குப் புதுசு. தேங்க்ஸ்.

  // குழந்த சிரிச்சு முடிச்சு, 'இப்ப என்னா பண்ணுவ?'ன்னு வில்லங்கமா பாக்கும். //

  :))))!

  ReplyDelete
 4. சாரி, அப்போ மற்றதெல்லாம் தெரியும்னு நினைத்துக் கொள்ள வேண்டாம்.

  ‘இது எனக்கு உபயோகம்’ என சொல்லியிருக்க வேண்டும், ஈ பிரிவு இப்போதைக்கு என் கேமராவுக்கு நாட் அப்ளிகபிள் ஆதலால்...:)!

  ReplyDelete
 5. உபயோகமான டிப்ஸ். சமீபத்தில் Magic Lantern- Great photos with your digital SLR DVD பார்த்தேன். உங்களைப் போலவே மிக எளிமையாக சொல்லியிருந்தார்கள்.

  ReplyDelete
 6. thanks everyone.

  kamalakannan,
  ///உணவுப் பொருட்களுக்கு எத்தனை ISO வேகம் வைக்கனும்////

  ISO is used based on the amount of light you have on the subject, not based on what type of object you are trying to shoot.
  so, for indoor food item 200 ~ 400 would work just fine.

  ReplyDelete
 7. Kamalakannan,

  For food photography - dont depend on ISO. Rather for any photography keep ISO lowest as possible (100 is recommended ). But you need to work on other stuff. Adding additional lighting, using reflector, proper background and so on. ISO is just another factor like aperture / shutter speed. This doesnt make any change with subject unless the photographer uses every thing properly which includes ISO and adding his creativity in it.

  In some cases adding ISO noise would really increase the beauty in some case it will worsen the entire composition. Its all depends on you and not with ISO.

  ReplyDelete
 8. நன்றி சர்வேசன், நன்றி ஜீவ்ஸ், உங்களின் விளக்கம் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

  தவறாக நினைக்க வேண்டாம்.
  தமிழில் புகைப்படக்கலை என்பதில் ஆங்கிலத்தில் பதில் அளித்திருப்பது சற்றே நெருடலாக இருக்கிறது. தமிழில் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தவறாக நினைக்க வேண்டாம்.

  மிக்க நன்றி...

  ReplyDelete
 9. Kamalakannan,

  ///தவறாக நினைக்க வேண்டாம்.
  தமிழில் புகைப்படக்கலை என்பதில் ஆங்கிலத்தில் பதில் அளித்திருப்பது சற்றே நெருடலாக இருக்கிறது////

  Unmai. iyanravarai, thamizhil badhilalikkappadum.

  whenever i have technical difficulty, i resort to tanglish/english. sorry :)

  ReplyDelete
 10. நான் நினைக்கிறேன் http://decresource.com என்பது தவறு. http://dcresource.com ஆக இருக்கவேண்டும்.
  அன்புடன்,
  விஜயாலயன்

  ReplyDelete
 11. vijay, thanks for the correction. fixed it.

  ReplyDelete
 12. // உ டு ஃ தொடரும்,//

  எப்போது வரும்/தொடரும் !!!:)))

  ReplyDelete
 13. // குழந்த சிரிச்சு முடிச்சு, 'இப்ப என்னா பண்ணுவ?'ன்னு வில்லங்கமா பாக்கும். //

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff