Thursday, November 26, 2009

புகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்

15 comments:
 
என்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட்டுப் பார்க்கும் சௌகர்யம் இருந்தாலும், ஒரு பழைய ஆல்பத்தை தூசு தட்டி எடுத்து, புரட்டிப் பார்க்கும் இன்பம் இதில் இருப்பதில்லை. அதையும் தவிர, நம் JPGகளை எவ்வளவு முறை எவ்வளவு இடங்களில் சேமித்து வைத்தாலும், 2012 கணக்கா ஒரு பூகம்பம் வந்தா, எல்லாம் ஃபணால் ஆயிடும். எந்தளவுக்கு டெக்னாலஜியை நம்பலாமோ, அந்த அளவுக்கு, டெக்னாலஜியை நம்பாமல் இருத்தலும் நலம். (ஹிஹி, ஆணி அடிக்கரது நாங்களாச்சே. எப்ப வேணா பிடுங்கிக்கலாம்). ஒரு 'திடமான' முறையில் நம் மிக முக்கிய படங்களை சேகரித்து வைத்துக் கொள்ளல் நலம். திருமணங்கள் போன்ற முக்கிய தினங்களில், ப்ரொஃபெஷணல் ஆளுங்கள வச்சு, ஆல்பம் எல்லாம் போட்டு வச்சுப்போம். ஆனால், இதே அளவு முக்கிய நிகழ்வுகள் மேலும் பல நடக்கும்போது, இந்த சிரத்தை இருக்காது. புதுமனை புகல், குழந்தையின் முதல் பர்த்டே, தூர தேசச் சுற்றுலா, அரங்கேற்றங்கள், etc.. etc.. முக்கால் வாசி பேர், பேரங்காடிகளில் கிடைக்கும், ப்ளாஸ்டிக் ஆல்பத்தில், இந்த மாதிரி விசேஷத்தின் படங்கள் சொருகி வைப்பீர்கள். சில வருடங்களில், இதுவும் சிதிலமடைந்து, உபயோகமற்றுப் போய் விடும். எவ்வளவோ செலவு பண்ணிட்டோம், காமெராக்கும், ஏனைய பிற விஷயங்களுக்கும். பத்தோட ஒண்ணு பதினொண்ணா, எடுத்த படங்களை ஒரு புத்தக வடிவமாக மாற்றி வைத்துக் கொண்டால், பார்க்கவே ரொம்ப அம்சமாவும், மற்றவர்களுக்குக் காணிபிக்க ஒரு கெத்தாவும் இருக்கும். முன்ன மாதிரி இல்லாமல், இப்ப பல நிறுவனங்கள், இந்த புகைப்பட புத்தகத்தை, வடிவமைக்கவும், ப்ரிண்ட் செய்து கொடுக்கவும் களத்தில் இருக்காங்க. ஒரு புத்தகத்தில் இருபது பக்கங்களிலிருந்து, நூற்றுக்கணக்கான பக்கங்கள் வரையிலும் சேர்த்துக் கொள்ள முடியும். விலை, 20 பக்கத்துக்கு, கிட்டத்தட்ட $30லிருந்து தொடங்குகிறது. 20 பக்கத்தில், கிட்டத்தட்ட 200 படங்கள் வரை அடக்க முடிகிறது. நீங்கள் ஒவ்வொரு பக்கதிலும், ஒரு படத்திலிருந்து 20 படங்கள் வரை, வித விதமாக வடிவமைத்துக் கொள்ளும் lay-outகளை தெரிவு செய்து கொள்ள முடியும். மிக முக்கியமாக, ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது விளக்க உரையும், ஜாலியான வாக்கியங்களையும் சேர்த்து, ஒரு நல்ல வாசிப்பனுபவத்தையும் கொடுக்க இயலும். நான் சமீபத்தில் சென்ற இன்பச் சுற்றுலாவின் படங்களை இந்த வகையில் செய்து பார்த்ததில், பரம திருப்தி ஏற்பட்டதே, இந்தப் பதிவுக்கான காரணம். MyPublisher.com மற்றும் Shutterfly.com என்ற இரு நிறுவனத்தின் photo bookஐ முயன்று பார்த்ததில், shutterfly.com சிறப்பாய் இருப்பது தெரிந்தது. MyPublisher.comல் lay-out வசதிகள், மிகக் குறைவு. shutterfly.comல் அவர்கள் இணையத்திலேயே, நேராக எல்லா டிசைன் வேலைகளையும் செய்ய முடிகிறது. Mypublisherல் அப்படியல்ல. அவர்களின் சாஃப்ட்வேரை தரவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது. மேலும் சில நிறுவனங்களைப் பற்றி அலசியதில், அவற்றின் தரம் சரியில்லை என்று நட்பு வட்டாரத்தின் மூலம் அறியப்பட்டது. artscow.com, snapfish.com, lulu.com, etc.. Shutterflyன் புத்தகம், அழகாக, ஒரு நிஜ பத்திரிக்கை மாதிரி, பள பளா பேப்பரில் செய்யப்பட்டு, கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் உருவெடுத்துள்ளது. புகைப்படப் புத்தகம் செய்யாதவர்கள் செய்து பாருங்கள். செய்தவர்கள், உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள். இது என் ஐரோப்ப டிரிப்பின் புகைப்படப் புத்தகம். shutterfly செய்தது. பி.கு: புத்தகம் செய்ய, பேப்பர் தேவை. பேப்பருக்கு, மரம் தேவை. மரத்துக்கு காட்டை அழிக்கணும். இப்படி, டீப்பா திங்க் பண்ரவங்க, ஒரு புத்தகம் ஆர்டர் செய்ததும், ஒரு மரத்தை கண்டிப்பாய் நட்டு வைக்கவும். :)

15 comments:

 1. artscow.com, snapfish.com, lulu.com, etc.., உபயோகித்துப் பார்த்தவர்கள், உங்கள் விமர்சனங்களைச் சொல்லுங்கள். நன்றி.

  ReplyDelete
 2. உபயோகித்துப் பார்த்தேன்... நன்றாக இருக்கிறது... ஆனால் சற்றே அதிக விலை போல... பகிர்வுக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 3. நான் ரெகுலராய் கொடாக்கேலரியில் photobooks...
  கிட்டத்தட்ட 10 செய்திருக்கிறேன். artscow.com லே-அவுட் வசதிகள் அதிகம் இருந்தாலும் பிரிண்ட் குவாலிட்டி கம்மி. photobooks.com (நான் சிங்கையில் போட்டேன்) மகா தண்டம் :(

  ReplyDelete
 4. This service is available in India?

  ReplyDelete
 5. கமலகண்ணன், செலவு சற்றே அதிகம்தான்.
  ஆனா, 'அந்தக்' காலத்துல, ஃபிலிம் வாங்க செலவு செய்யும் காசுதான், இப்ப புக்கை ப்ரிண்ட் செய்ய ஆவுது :)

  ReplyDelete
 6. mahesh, என் நண்பர்களும் கிட்டத்தட்ட இதேதான் சொன்னாங்க. artscow.com hongkongல் இருந்து வருது போலருக்கு. குவாலிட்டி கம்மிதானாம்.

  ReplyDelete
 7. mahesh, என் நண்பர்களும் கிட்டத்தட்ட இதேதான் சொன்னாங்க. artscow.com hongkongல் இருந்து வருது போலருக்கு. குவாலிட்டி கம்மிதானாம்.

  ReplyDelete
 8. thangaraj charles,

  நம்ம ஊருக்குள்ள யாரு பண்றாங்கன்னு தெரியலை. கண்டிப்பா எல்லா ஸ்டுடியோ காரங்களும், செஞ்சு தரலாம். கேட்டுப் பாருங்க.
  அவங்க, கல்யாணத்துக்கெல்லாம் இப்ப பண்ர ஆல்பத்தின் தரம், shutterflyயை விட பல மடங்கு அதிகம். விலையும் அதுக்கேத்த மாதிரி சார்ஜ் பண்ணுவாங்க.

  shutterfly இந்தியாவுக்கு ஷிப் பண்ணுவாங்க. கொஞ்சம் ஷிப்பிங் காசு ஜாஸ்தியா இருக்கும்.

  ReplyDelete
 9. உபயோகமான தகவல் ... புத்தகம் செய்தது இல்லை இதுவரை ... ஆனால் படத்தை பெரிதாக பிரிண்ட் செய்து கையை சுட்டு கொண்டது சில முறை ...

  ReplyDelete
 10. http://competition.betterphotography.com/

  மாதாமாதம் போட்டிகள் அறிவிப்பு நடந்துவருவது அனைவரும் அறிந்ததே. இப்போட்டியில் பரிசுப்பொருள் ரொம்ப ஏற்புடையதாகவும் பெரிதாகவும் இருப்பதால், வரும் மாதப் போட்டி ஏன் இந்தப் போட்டிக்கான போட்டியாக இருக்கக்கூடாது? சும்மா ஒரு பழைய ஸ்டில்லை போட்டிக்கு தட்டிவிடுவதை விட 5000$ போட்டிக்கான ஒரு போட்டி எனும் போது, போட்டியில் பலப்பரீட்சை இன்னும் சுவாரசியமாகவும், ஒருவேளை அதிர்ஷ்டவசமாக.... நம்மில் ஒருவரே வெல்லவும் கூடும். வாசகர்களிடம் கேட்டுப் பாருங்களேன்!

  ReplyDelete
 11. என்னோட ஓட்டு.. shutterfly க்கே.. என் மகளின் முதல் வருட புகைப்பட ஆல்பம் தயாரித்து புத்தகமாக பிரிண்ட் எடுத்து வாங்கினேன்.. புகைப்படமும் புத்தகமும் மிகச்சிறந்த தரம்.. விலை 20 பக்க ஆல்பத்திற்க்கு.. 32 டாலர் + 15 டாலர் கொரியர் (மஸ்கட்டிற்க்கு) .. அத்துடன் இலவசமாக 40 4x6 புகைப்படங்களும் பிரிண்ட் செய்து கொடுத்தனர்..

  இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால்.. என்னுடய அவர்கள் கூறிய தேதிக்கு பின்னும் வர தாமாதமானதால்.. நான் வரவில்லையென்று ஒரு ஈ மெயில் அனுப்பினேன்.. உடனே பதிலும் வந்தது.. இன்னும் ஒரு வாரம் காத்திருக்கவும் இல்லை என்றால் எங்களுக்கு தெரிவிக்கவும் என்று. அந்த ஒரு வாரத்திலும் வரவில்லை.. எனவே நான் இதை அவர்களிடம் ஈ மெயிலில் தெரிவித்ததும் .. உடனே அதே ஆல்பத்தை மீண்டும் ப்ரிண்ட் எடுத்து திருப்பி அனுப்பினர்.. (எல்லமே இலவசமாக)..

  இறுதியில் தான் தெரிந்தது பிரச்சினை இங்கு ஓமான் போஸ்ட் ஆபிஸ்ல் ஒரு வார விடுமுறை என்று..

  கடைசியில் எனக்கு இரண்டு ஆல்பங்களும் கையில் கிடைத்தது (இரண்டு வார இடைவெளியில்..)

  அவர்களுக்கு இதைப்பற்றி கூறி மீண்டும் ஈ மெயில் அனுப்பினேன் (2 கிடைத்துள்ளது என்றும் பிரச்சினை இங்குள்ள போஸ்ட் ஆபிஸில் என்றும்).. அதற்க்கு அவர்களின் பதில்.. “ பரவாயில்லை இரண்டையும் வைத்துக்கொள்ளுங்கள்.. உங்கள் குழந்தைக்கு எங்களின் பரிசாக.. “ என்று..

  Thank you shutterfly..

  ReplyDelete
 12. என்னோட ஓட்டு.. shutterfly க்கே.. என் மகளின் முதல் வருட புகைப்பட ஆல்பம் தயாரித்து புத்தகமாக பிரிண்ட் எடுத்து வாங்கினேன்.. புகைப்படமும் புத்தகமும் மிகச்சிறந்த தரம்.. விலை 20 பக்க ஆல்பத்திற்க்கு.. 32 டாலர் + 15 டாலர் கொரியர் (மஸ்கட்டிற்க்கு) .. அத்துடன் இலவசமாக 40 4x6 புகைப்படங்களும் பிரிண்ட் செய்து கொடுத்தனர்..

  இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால்.. என்னுடய அவர்கள் கூறிய தேதிக்கு பின்னும் வர தாமாதமானதால்.. நான் வரவில்லையென்று ஒரு ஈ மெயில் அனுப்பினேன்.. உடனே பதிலும் வந்தது.. இன்னும் ஒரு வாரம் காத்திருக்கவும் இல்லை என்றால் எங்களுக்கு தெரிவிக்கவும் என்று. அந்த ஒரு வாரத்திலும் வரவில்லை.. எனவே நான் இதை அவர்களிடம் ஈ மெயிலில் தெரிவித்ததும் .. உடனே அதே ஆல்பத்தை மீண்டும் ப்ரிண்ட் எடுத்து திருப்பி அனுப்பினர்.. (எல்லமே இலவசமாக)..

  இறுதியில் தான் தெரிந்தது பிரச்சினை இங்கு ஓமான் போஸ்ட் ஆபிஸ்ல் ஒரு வார விடுமுறை என்று..

  கடைசியில் எனக்கு இரண்டு ஆல்பங்களும் கையில் கிடைத்தது (இரண்டு வார இடைவெளியில்..)

  அவர்களுக்கு இதைப்பற்றி கூறி மீண்டும் ஈ மெயில் அனுப்பினேன் (2 கிடைத்துள்ளது என்றும் பிரச்சினை இங்குள்ள போஸ்ட் ஆபிஸில் என்றும்).. அதற்க்கு அவர்களின் பதில்.. “ பரவாயில்லை இரண்டையும் வைத்துக்கொள்ளுங்கள்.. உங்கள் குழந்தைக்கு எங்களின் பரிசாக.. “ என்று..

  Thank you shutterfly..

  ReplyDelete
 13. I think this is among the most significant information for me.
  And i am glad reading your article. But wanna remark on few
  general things, The site style is wonderful, the articles is really great :
  D. Good job, cheers tarot card reading
  My homepage - numerology

  ReplyDelete
 14. Nice post. Could you write about free album creating software?

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff