Showing posts with label தகவல்கள். Show all posts
Showing posts with label தகவல்கள். Show all posts

Friday, August 14, 2015

ஆகஸ்ட் 19 உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு ‘செல்லமே’ இதழில்..

நிழற்படம் அல்லது புகைப்படம் என்பது நிகழ்வுகளை அல்லது நினைவுகளை ஓரிடத்தில் உறையச் செய்து சேமித்து வைக்கும் கலை. ie.. Freezing  a piece of time in History.  இது ஓவியம் வரைவது போல  ஒரு அழகிய கலை தான். இன்றைய நவீன உலகில்  நம் குழந்தைகளும் செல்பேசி ஆரம்பித்து பெரிய கருவி வரைக்கும் உள்ள கேமராக்களை உபயோகிக்கும் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.  அவர்களின் ஆர்வத்தை தூண்டி அவர்களும் நல்ல புகைப்படக் கலைஞர்களாக வளர்வதில்  நம் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் ?




#1 -  கேமராக்களை எப்படிக் கையாள்வது என குழந்தைகளுக்கு பக்குவமாக சொல்லிக் கொடுங்கள். ​ உதாரணமாக முதலில் அந்த கழுத்துப் பட்டையை கழுத்தில் மாட்டிக் கொள்வது கைத் தவறினாலும் கேமரா கீழே விழாமல் பாதுகாக்கும், கையை லென்ஸின் அடிப்புறம் பிடித்துக் கொள்வது படம் எடுக்கும் போதான அசைவை தடுக்கும்,

கால்களை முன்னும் பின்னுமாக வைத்து ஸ்டெடியாக நிற்பது தடுமாறாமல் இருக்கும். 

2 -  புகைப்படம் எடுக்கும் போது புகைப்படத்தை விட சுய பாதுகாப்பும் கருவியின் பாதுகாப்பும் முக்கியம் என்பதை குழந்தைகளுக்கு
​நாம் உணர்த்த வேண்டும். 

3-  உறுத்தலற்ற பின்னணியை தேர்வு செய்வது மிகவும் அவசியம்.  முன் பக்கம்  இருக்கும் சப்ஜெக்ட் நன்றாக இருந்தாலும் பின்னணி சரியில்லை எனில் மொத்தப் படமுமே சரியில்லை என்றாகிவிடும்.

4-  குழந்தைகளின் கற்பனையை விரிக்க விடுங்கள்.  அவர்கள் விரும்பும் கோணங்களில் படங்களை எடுக்கட்டும்.
அவற்றில் சில இதுவரை நாம் பார்த்திராத கோணங்களாகவும் இருக்கக் கூடும். உங்களின் ஆலோசனையும் கொடுக்கலாம். ஆனால் அது தான் வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். இதனால்குழந்தைகளின் கற்பனை எண்ணம் சிதறும். 

5- படம் எடுக்கும் போது, எடுக்கப் படும் பொருள் முழுமையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவேண்டும். பாதி தலை, ஒருபக்கம் கண், வயிறு மட்டுமான உடல் என்று ஒருவரை படம் எடுத்தால் பார்க்க நன்றாகவா இருக்கும் ? முக்கியமாக  கை கால் முட்டிக்கு கீழ் கொஞ்சம் தெரிவது போல, விட்டுவிடுவது, தலையில் பாதி முடி இருக்க மீதியை விட்டுவிடுவது,  போன்றவற்றை தவிர்க்கலாம். முட்டிக்கு கீழே எடுக்கும் போது பாதமும் / முழு கைகளும் சேர்ந்து வருவது புகைப்படத்தை செம்மையாக்கும். 

6 -  கருவியை நேராக பிடிக்க பழக வேண்டும்.  அந்த துறு துறு  பிஞ்சு கைகளை  ஒரு நிமிடம் கருவியை நேராகப் பிடித்து படங்களை எடுக்கப் பழக்கி விட்டால் பாதி வெற்றி அடைந்துவிட்டீர்கள் என்றே சொல்லுவேன்.

6 -   கேமரா   ஒரு கருவி மட்டுமே, எப்படி ஒரு தூரிகையினால் மட்டும் ஓவியம் அழகுறாதோ, அது போலவே படம் எடுப்பவரின் தனித்தன்மை இல்லாவிட்டால் எந்த கருவியாக இருந்தாலும் அதில் வரும் படங்களில் உயிர் இருக்காது.

7 - படங்கள் இயல்பாக இருக்க யாரையும் வற்புறுத்தி நின்று  போஸ் கொடுக்க வைக்காதீர்கள்.  ஆதார் அட்டை,  ரேஷன் அட்டைகளுக்கு வேண்டுமானால் அப்படி  நின்று கொள்ளலாம்.  ஆனால் அப்படியான விறைப்பு போஸ், இங்கே படங்களின் உயிரோட்டத்திற்கு அவை தடையாகிப் போகலாம். 


9 -  நிறைய படங்களை எடுக்கத் தூண்டுங்கள்.  எந்த இடங்களில் நெருங்கி எடுக்க வேண்டும், எந்த இடத்தில் சற்று தூரத்தில் நின்று எடுக்க வேண்டும் போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குங்கள்.

10.  முக்கியமாக எடுக்கக் கூடியன, எடுக்கத் தகாதன  என இருப்பவற்றைகுழந்தைகளுக்கு அறிவுறுத்தலாம். குழந்தைகளையும் நம்மையும் தர்ம சங்கடத்தில் கொண்டு நிறுத்தம் சந்தர்ப்பங்களை இவை தவிர்க்கும். 

11 - புகைப்படத்திற்கு தேவையான முக்கிய காரணி வெளிச்சம். அவற்றை கருவி மூலம் எப்படி கட்டுப் படுத்தலாம் என்பதை அபர்ச்சர், ஐ.எஸ்.ஓ, ஷட்டர் ஸ்பீட் போன்ற அடிப்படை விவரங்க்களை பொறுமையாக குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்கலாம். ஒவ்வொன்றும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை. இவற்றின் சரிவிகித அமைப்புத் தெரிந்துவிட்டால் புகைப்படக் கலை ஒன்றும் கடினமில்லை. மிச்சம்  எல்லாம் உங்கள் மக்களின் கற்பனை வளத்தைப் பொறுத்து படங்கள் மிளிரும். 

12 . எல்லா வயது குழந்தைகளுக்கும் மேற்சொன்ன தொழில் நுட்ப விவரங்களை புரிய வைத்து விட முடியாது ஆகையால். 5 வயதுக்கு கீழான குழந்தைகளுக்குகுறிப்பிட்ட வண்ணங்கள், வடிவங்கள், குறிப்பிட்ட வகை உடை உடுத்திய மக்கள் என அவற்றை அவர்களின் கற்பனைக் கேற்றவாறு கொண்டு வரச்செய்யலாம்.     வயதுக்கேற்றமாதிரி ஒரு கதையை உருவகித்து அதற்கேற்ற பாத்திரங்களை பொம்மைகளில் இருந்தோ, அல்லது மனிதர்களோ எப்படியோ அவர்களின் கற்பனைக்கேற்ற விதத்தில் படமெடுத்துக் கொண்டுவரச் செய்யலாம். அது அவர்களின் இன்னொரு  உலகத்தை விரியச் செய்யும். 

13. ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு  மேற்சொன்னவற்றோடு, ரூல் ஆப் தேர்ட் , குறைந்த வெளிச்சத்தில் எடுப்பது, பொருளுக்கு பின்னாடி வெளிச்சம் அதிகம் இருந்தால் அதை எப்படி நமக்கு ஏதுவாக பயன்படுத்துவது, மாலை சூரியனை படம் பிடிப்பது என சற்றே அவர்களின் எல்லையை பெரிதாக்கலாம்.

14.  போகஸிங்க் பற்றி போதிய அளவு தெளிவு இருக்க வேண்டும். இல்லையேல் எடுக்க வேண்டிய பொருள் மங்கிப் போய் தேவையற்ற மற்றவை மிகத் தெளிவாக வரும்.

15. அதி முக்கியமான ஒன்று. குழந்தைகள் எடுத்தப் படத்தை அவர்களுடன் அமர்ந்து அவற்றை பார்வையிடுங்கள். உங்களின் ஆலோசனைகள், திருத்தங்களை சொல்லுங்கள். உங்களுக்குள் முக்கியமாக மனதில் நிறுத்த வேண்டிய கட்டளை. குழந்தைகள் எடுத்த  எல்லாப் படங்களும் மிக அழகியப் படங்களே.. அவை சில சட்டங்களுக்கு கொண்டு வரச்செய்ய ஆலோசனை தருவது மட்டுமே நம் கடமை. 

16 -   நிறைய இணைய தளங்கள்  புகைப்படங்களைப் பகிர இருக்கின்றன. ப்ளிக்கர், ப்ளாக்கர் போன்றவை சில எடுத்துக் காட்டுகள். குழந்தைகளின் படங்களை, அவர்கள் சொல்லும் சிறு குறிப்புடன் பகிருங்கள். அவற்றிற்கு வரும் உற்சாக வரவேற்பை குழந்தைகளிடம் தவறாமல் தெரிவியுங்கள். 


அப்புறம் என்ன ? குழந்தைகள் படம் எடுக்க உதவ வேண்டாமா... இங்கேயே இருக்கிறீர்களே... போங்க சார்.. குழந்தை போட்டோ எடுக்க போஸ் குடுங்க்க.. ப்ளீஸ்....

கட்டுரை: ஐயப்பன் கிருஷ்ணன்
படங்கள்: ராமலக்ஷ்மி

நன்றி செல்லமே!
***

Friday, December 12, 2014

 ***வணக்கம் பிட் மக்கா நலமா?
இன்றைய கட்டுரை ஒரு தொழில்நுட்ப கட்டுரையாகும்,ஆம்,புகைப்படத்தோடு தொடர்புடைய தொழில்நுட்பப்பதிவாகும். புகைப்படக்கலைக்கு கேமரா மட்டும் தான்னு இல்லாம‌  இல்லாம அலைபேசி கேமரா மற்றும் டேபளட் கேமரா பயன்படுத்தும் காலத்தில் நாம் இருக்கிறோம்.** 

பொதுவாக அலைபேசியிலேயே அதிக மெகாபிக்ஸல்கள் கொண்ட கேமராக்களை இன்றைய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் நமக்கு அளிக்கின்றன.அதைவிட ஸ்மார்ட்போன்களில் இருக்கும் நல்ல விஷயமே Panorama mode தாங்க நம்மில் பலரும் இந்த வசதியினை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

சரி இவ்வாறாக ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட படங்களை கணினிக்கு எவ்வாறு பரிமாற்ற‌ம் செய்வது என பார்க்கலாம். இக்கட்டுரை Android பயனாளர்களுக்ககான கட்டுரையாகும், அதேநேரத்தில் இது விண்டோஸ் இயங்குதளத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும். Mac மற்றும் Linux பயனாளர்கள் இக்கட்டுரையை தவிர்க்கலாம்.
பொதுவாக ஸ்மார்ட்போன்களில் எடுக்கப்படும் படங்கள் ஒன்று அலைபேசியின் இன்டர்னல் மெமரியிலோ அல்லது SD கார்டுகளிலோ சேமிக்கப்ப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட படங்களை கணினிக்கு பரிமாற்றம் செய்ய பொதுவாக USB கேபிள் கொண்டு இணைப்பை ஏற்படுத்தி பரிமாற்றம் செய்யலாம், ஆனால் சிலவேளைகளில் ஸ்மார்ட்போனுக்கான USB டிரைவர்கள் உங்களது இயங்குதளத்திற்கு ஏற்றவாறு கிடைப்பது கிடையாது. அதனால் உங்களது கணினி உங்களது ஸ்மார்ட்போனை அடையாளம் கண்டுக்கொள்ளாது இதுபோன்ற தருணங்களில் இணைப்பு ஏற்படுத்துவது மிகவும் சிரமமானது, எனினும் இதனை கூகுள் அளித்திடும் இலவச USB டிரைவர்களைக்கொண்டு எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்த நான் எழுதிய‌ கட்டுரையை CNET France வெளியிட்டிருந்தது.

ஆனால் « பிட் » தளம் புகைப்படக்கலஞர்களுக்கான தளம் என்பதால் இங்கு நான் புகைப்படக்கலைஞ‌ர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கட்டுரையை தரவேண்டும் ,எனவே இங்கு ஒரு எளியமுறையில் இணைப்பு ஏற்படுத்தும் முறையை பார்ப்போம்.

இதற்கு உங்களிடம் Wi-Fi தொழில்நுட்பம் கொண்ட Modem/Router இருக்கவேண்டும்.
உங்களது கணினி அல்லது மடிக்கணினி இந்த Modem/Routerரோடு wired connection அல்லது wireless connection மூலமாக இணைத்திருக்கவேண்டும்.
(
eg :Lan,Wi-Fi).


 இதேபோலவே உங்களது ஸ்மார்ட்போனும் இதே Modem/Router உடன் இதே நெட்வொர்கில் இணைந்திருக்க வேண்டும்.(through Wi-Fi).
இங்கு நான் என்னுடைய நெட்வொர்க் Schemaவை உதாரணத்திற்கு பகிர்கிறேன்.


இப்போது நாம் , Moborobo என்கிற ஒரு இலவச Smartphone Management டூலை பதிவிறக்கப்போகிறோம்.

முதலில் இந்த சுட்டியை கிளிக்செய்து இந்த Moborobo வை பதிவிறக்கம் செய்து உங்களது கணினியில் அல்லது மடிக்கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

பின்னர் உங்களது ஸ்மார்ட்போனில் இணையஇணைப்பை ஏற்படுத்தி Mobo Daemon என்ற இந்த Android அப்ளிக்கேஷனை உங்களது மொபைலில் நிறுவிக்கொள்ளவும்.


இப்போது உங்களது கணினியில் Mobo Roboவை இயக்கவும்.கணினியில் Wi-Fi connection பகுதியில் ஒரு QR Code உருவாக்கப்பட்டிருக்கும்.


இப்போது உங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் Mobo Daemon இயக்கவும். இனி Wi-Fiயை தேர்வு செய்துகொண்டு Scan QR Code From PC என்பதை அழுத்தவும்.


இப்போது உங்களது ஸ்மார்ட்போனின் கேமரா on ஆகும் அந்த கேமராவை உங்களது கணினியில் தெரியும் QR Code க்கு நேராக காட்டுங்கள். அவ்வளவே உங்களது ஸ்மார்ட்போனும் கணினியும் Wi-Fi இணைப்பு மூலமாக இணைக்கப்பட்டிருக்கும்.


இனி ஸ்மார்ட்போனை வைத்துவிட்டு கணினியில் Mobo Robo Applicationல் Image என்பதை அழுத்த உங்களது இன்டெர்னல் மெமரி மற்றும் SD கார்ட் இல் இருக்கும் அத்தனை படங்களும் (including whats app images) காட்டும் Export /import  ஆப்ஷனைக்கொண்டு கணினி யில் இருந்து ஸ்மார்ட்போனுக்கும், ஸ்மார்ட்போனிலிருந்து கணினிக்கும் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். 


போனஸ் டிப்ஸ்:
படங்கள் மட்டுமில்லாமல் Contacts,messages,music,videoனு பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

குறிப்பு:
உங்களிடம் Wi-Fi Modem அல்லது Router இல்லையெனில் நீங்கள் usb கேபிள் மூலமாகத்தான் உங்களது இணைப்பை ஏற்படுத்தவேண்டும்.அவ்வாறு usb கேபிள் மூலமாக இணைப்பு ஏற்படுத்தும் போது உங்களது ஸ்மார்ட் போனில் செட்டிங்ஸ் இல் இருக்கும் developers optionல் USB Debugging கட்டாயமாக Enable செய்யவேண்டும் என்பதை நினைவில்கொள்ளவும்.



அன்புடன்,
நித்தி ஆனந்த்   

Tuesday, November 11, 2014

 வணக்கம் பிட் மக்கா. நலமா?

***
DXO Optics Pro 8….ம்ம்ம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுமார் 150லிருந்து 200 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு இமேஜ் எடிட்டிங் டூலாகும்.
** 

DXO Optics Pro ன் பதிப்பு 10 ஐ சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.எனவே அந்நிறுவனம் தனது பழைய பதிப்பான 8.5 ஐ இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் 31-1-2015 க்குள்ளாக கீழேயிருக்கும் சுட்டியை கிளிக் செய்து உங்களது மின்னஞ்சல் முகவரியை தெரிவித்தாலே போதும். ஆக்டிவேஷன் எண்ணை இலவசமாகவே தருகிறார்கள்.


#
 
#
 
 
#
 
 

 
DXO Optics Pro 8 கிட்டத்தட்ட அடோபியின் லைட்ரூமுக்கு இணையாக பணிபுரியும். பொதுவாக‌ விண்டோஸ் xp பயன்படுத்துபவர்கள் லைட்ரூமின் புதிய பதிப்புகளை (since version 4) பயன்படுத்தமுடியாது.

ஆனால் DXO Optics Pro 8, Windows XPயிலும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Raw கோப்புகளையும், jpg கோப்புகளையும் கையாள்கிறது.
 
"பொதுவாக இமேஜ் எடிட்டிங்கில் போதிய அனுபவமில்லாதவர்களுக்கு பயனளிக்கும் விதமாக ஆட்டோ மோட் இருப்பது இதன் சிறப்பாகும்."
 
#

ஒரு புகைப்படக்கலைஞருக்கு தேவையான  அம்சங்களும் இதிலிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக‌ :

White Balance Correction,
Exposure compensation(Auto mode available)
DXO Smart Lighting(Auto mode available)
Color Rendering(Auto mode available)
Noise Reduction(Auto mode available)
Sharpening using Unsharp mask
Lens corrections

DXO Optics pro பொதுவாக 3 tab க‌ளை கொண்டுள்ளது.
#

1.Organize : இதில்  நீங்கள் எடிட் செய்ய விரும்பும் உங்களது படங்களை தேர்வுசெய்துகொள்ளலாம்.
2.Customize :  இதில்  உங்களது படங்களை எடிட் செய்து கொள்ளலாம்.
3.Process : எடிட்டிங் முடித்தபின்னர் Process என்பதனை கிளிக் செய்து Start Processing என்பதனை கிளிக் செய்ய படமானது process செய்யப்படும். Output செய்யப்படும் படங்களை நீங்கள் விரும்பும் இடத்தில் சேமித்துக்கொள்ளவும் வழி இருக்கிறது.

#

பயன்படுத்திப்பாருங்கள் பயனடையுங்கள்.
நன்றி,
என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff