வணக்கம் நன்பர்களே,
சென்ற பகுதிகளில் ஒரு கேமராவுக்கு தேவையான பிக்சல்களை பற்றி நாம் பார்த்திருந்தோம்.. இந்த பகுதியில் அதை விட முக்கியமான இமேஜ் சென்சார்கள் பற்றி சுருக்கமாக கூற முடியாது என்பதால் கொஞ்சம் விலாவாரியாக பார்ப்போம்..
சென்சார் என்றால் என்ன?
(படம் - 1)
முன்னெல்லாம் நாம் ஃப்லிம் கேமராவை பயன்படுத்திய போது, ஒரு படத்தை லென்ஸ் மற்றும் கேமராவின் உதவியுடன் ஒரு ஃபிலிம் நெகட்டிவில்(35mm ஃபார்மேட்) பத்திரமாக பதிவு செய்து,பின்பு அதை நாம் ப்ரிண்ட் போட்டு பார்த்து வந்தோம்.
ஆனால் டிஜிட்டல் கேமராவில் ஃபிலிம் என்பது இல்லாததால், ஃபிலிம் செய்யவேண்டியதை இந்த டிஜிட்டல் சென்சார்கள் செய்யும்.
ஒரு லென்ஸ் எடுத்து தரும் படங்களை(ஒளி வடிவத்தை) இந்த சென்சார்கள் பதிவு செய்து, பின்பு எலெக்ட்ரிக்கல் சிக்னலாக மாற்றி தரும்.அதை நம் வசதிக்கேற்ப jpeg,raw போன்ற ஃபார்மேட்டில் பல்வேறு வகைகளில் மீண்டும் மாற்றி தரும்.
ஒரு படத்தினுடைய பிக்சர் குவாலிட்டியை தீர்மனிப்பதில் இந்த இமேஜ் செனசாரின் அளவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பல்வேறு வகையான சென்சாரின் அளவுகள்,
டிஜிட்டல் கேமராக்கள் வந்த பிறகு crop factor முறையிலான சென்சார்கள் பல வகையான சைஸ்களில் வர தொடங்கியது..(பார்க்க படம் - 1)
DSLR மற்றும் அனைத்து வகையான சிறிய டிஜிட்டல் கேமராக்களின் சென்சார்களின் அளவுகள், 35mm ஃப்லிம் formatஐ( நெகட்டிவ் சைஸை) விட பல்வேறு வகையில் சிறியதாகும்.(ஒரு சில 35mm full frame கேமராக்களும் உண்டு.)
அப்படி வேறு வேறு சைஸில் உள்ள சென்சார்களின் அளவுகளை கிழே உள்ள படத்தில் பார்க்கலாம்..
(பெரியதாக பார்க்க க்ளிக் செய்யவும்)
இந்த அளவு, கேமராக்களை பொறுத்து மாறுபடும்..அப்படி மாறுகின்ற கேமராக்களும்,அதன் crop factor அளவுகளையும் பார்ப்போம்..
NIKON DSLR = 1.5 X (no.4)
CANON DSLR = 1.6 X (no.5)
OLYMPUS DSLR = 2.0 X(no.7)
PANASONIC DSLR = 2.0 X(no.7)
SONY DSLR = 1.5 X (no.4)
(இங்கே X என்பது எத்தனை முறை 35mm ஃபிலிம் ஃபார்மேட்டை விட(ஒரு நெகட்டிவ் சைஸை விட) சிறியது என்று அர்த்தம். 1.5 X என்றால் 1.5 மடங்கு ஒரு நெகட்டிவின் அளவை விட சிறியது என்று அர்த்தம்.)
கிட்டதட்ட அனைத்து சிறிய compact,prosumer வகை கேமராக்களின் crop factor என்பது 4.75x முதல் 5.75x (no.8 மற்றும் no.9)வரை இருக்கும்.
no.1 ல் இருப்பது மீடியம் ஃபார்மேட் சென்சார் அளவாகும்.. இந்த வகை கேமராக்கள் பெரிய பெரிய நிறுவனங்கள் விளம்பர படங்களை எடுக்க பயன்படுத்துகின்றன..(hasselblad,mamiya,போன்ற கேமரா வகைகள்)
no.10 என்பது கேமரா செல்போனில் வரும் அளவு.
no.2 ல் இருப்பது தான் 35mm full frame அளவு ஆகும்.இந்த சென்சாரின் அளவும்,ஃபிலிம் நெகட்டிவும் ஒரே அளவாகும்.
இந்த 35mm ஃபார்மேட் படி வரும் FOCAL LENGTH அளவே பொதுவான அளவாகும்
ஏன் 35mm என்பது பொதுவான அளவு ?
ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருந்தே 35mm format (36mm * 24mm) என்று அளவிடப்பட்ட ஃபிரேமே standard formatஆக இருந்து வருகின்றது. இது முன்னர் நாம் பயன்படுத்தி வந்த 35mm ரோல் ஃபிலிமின் அளவாகும்.
லென்ஸ் எடுத்து தரும் படமானது(ஒளி வட்டம்), லென்ஸ் வழியாக ஊடுருவி,எந்த மாறுதலும் இல்லாமல் அந்த கேமராவில் உள்ள 35mm ஃபிலிம் ரோல் அளவிற்கு மிக சரியாக பொருந்தி, ஒளி வேறெங்கும் சிதறாமல் பதிவாகி வந்ததால் அதுவே பொதுவான ஒரு ஃபார்மேட்டாக இருந்து வருகிறது.
அதாவது ஒரு லென்ஸ் வழியாக உள்ளே ஊடுருவி வரும் ஒளிவட்டத்தின் அளவும்(36 X 24), ஃபிலிம் நெகட்டிவின் அளவும்(36 X 24) ஒரே மாதிரியான, சரியான அளவாகும்.
இதனால் 50mmல் வைத்து எடுத்தால் என்ன வரவேண்டுமோ,அது சரியாக 35mmஃபார்மேட் அளவு கொண்ட நெகட்டிவில் அல்லது சென்சாரில் எந்த மாறுதலும் இல்லாமல் 50mm ஆக சரியாக பதிவாகும்.
ஆனால் டிஜிட்டல் கேமராக்களில் அப்படி கிடையாது.. லென்ஸில் வரும் ஒளி வட்டம் என்பது 35mm format அளவுக்குத்தான் சரியாக பொருந்தும்,சிறிய சென்சாருக்கு மிக சரியாக பொருந்தாது..
சென்சார்கள் சிறியதாக இருப்பதால் 50 mmல் எடுத்தால் சென்சாரின் அளவுக்கு தகுந்த மாதிரி வெவ்வேறு அளவுகளில் வரவேண்டியது பதிவாகும்.
இதனால் உண்மையான FOCAL LENGTH அளவு(MM) எது என்பது குழப்பமாக இருக்கும்.
இது எப்படி என்று கீழ் உள்ள உதாரணங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்..
உதாரணம்:1
ஒரு நிக்கான் DSLR கேமராவில் உள்ள சென்சாரின் அளவு என்பது 23.5 X 15.7,ஆனால் லென்ஸ் தரும் ஒளிவட்டத்தின் அளவு என்பது 36 X 24.
இந்த நிக்கான் சிறிய சென்சாரைவிட,லென்ஸில் ஊடுருவி வரும் ஒளி அமைப்பு பெரியதாக இருக்கும்..
இதனால் லென்ஸின் ஒளி அமைப்பை விட சிறிய சென்சாரில் பதிவாகும் போது நாலாபுறமும் சென்சாரின் அளவுக்கேற்ப crop செய்யப்பட்டு, மீதி தான் சென்சாரில் பதிவாகும்.
அதாவது லென்ஸிலிருந்து 36 X 24 என்று வரும் ஒளியில்,23.5 X 15.7 அளவை மட்டும் தான் பதிவு செய்யமுடியும். மீதியை க்ராப் செய்துவிடும் அல்லது அந்த ஒளி பதிவாகாது.
அப்படி க்ராப் செய்து சென்சாரில் பதிவாகும் போது,
output result ஆக வரும் போட்டோவானது, zoom அளவு மாறி 1.5 மடங்கு அதிகமாக enlarge அல்லது magnification ஆகி தான் பதிவாகும். இதனால் உண்மையான zoom அளவு மாறிவிடும்..
உதாரணம்:2
ஒரு குறிப்பிட்ட அளவு(50mmல்) வைத்து படம் எடுத்தால் என்ன வரவேண்டுமோ அது வராமல் மேலே சொன்ன crop factorக்கு தகுந்த மாதிரி தான் சென்சாரில் பதிவாகும்.
அதாவது nikonல் 50mm என்று focal lengthஐ பயன் படுத்தினால் உன்மையான 50mm வராமல், கேமராவுக்குள் 1.5 மடங்கு க்ராப் நடப்பதால் 50mm X 1.5 மடங்கு =75mm ல் வைத்து எடுத்தால் என்ன வருமோ அது தான் பதிவாகும்.
.
இதுவே canon ஐ பயன்படுத்தினால் 50mm X 1.6 மடங்கு = 80mm,
olympusல் என்றால் 50mm X 2 =100mm ல் வரவேண்டியது வரும்.
இதுவே சிறிய டிஜிட்டல் கேமராக்களின் லென்ஸில் 50mm ல் வைத்து எடுத்தால்,35mm format படி 260mmல் வரவேண்டியது தான் பதிவு ஆகும். .
உதாரணம்:3
ஒரு NIKON DSLR கேமராவில் 50mm என்ற அளவில் வைத்து எடுக்கப்படும் படமானது,
அதே 50mm என்ற அளவில் ஒரு canon DSLR கேமராவில் வைத்து எடுத்தால் படத்தின் அளவு வித்தியாசப்படும்.
அதே அளவு வேண்டுமென்றால் canonல் 45mm ல் வைத்து எடுத்தால் தான் சரியாக வரும்..
இதையே olympusல் 25mm என்ற focal length அளவில் வைத்து எடுத்தால் தான் ஒரே மாதிரி வரும்.
சிறிய கேமராக்களில் இந்த அளவுகளை நாம் படம் எடுத்தபின் EXIFல் தான் பார்க்க முடியும்.
இதனால் ,
nikonல் 50mm,
canonல் 45mm,
olympusல் 25mm.. என்பது எல்லாம் 35mm full format படி focal length என்பது ஒரே அளவு தான்.
உதாரணம்:4
வெவ்வேறு அளவு சென்சார்களால், ஒரே அளவு படத்தை எடுக்க இந்த மாதிரி தான் லென்ஸ் அளவுகள் மாறுபடும்..,
சிறிய கேமராவின் 5mm - 15mm லென்ஸ்,(லென்ஸில் குறிப்பிட்டிருக்கும்)
DSLR கேமராவின் 18mm - 55mm லென்ஸ்,
பழைய ரோல் கேமராவின் 28mm - 80mm லென்ஸ்,
இவை அனைத்தும் ஒரே அளவு தான் என்றால் நம்பமுடிகிறதா? இவை அனைத்தும் ஒரே அளவு படத்தை தான் நமக்கு தரும்.
இதனால் உண்மையான FOCAL LENGTH அளவு(MM) எது என்பது குழப்பமாக இருக்கும்.
இந்த குழப்பம் வராமல் இருக்கத்தான், உண்மையான FOCAL LENGTHஐ மாற்றாத அளவான 35MM FULL FRAME FORMAT(negative size) என்பது ஒரு பொதுவான formatஆக இருந்து வருகிறது..
35mm equilant focal length,
நாம் ஒரு DSLR கேமராவில் 50mm ல் வைத்து எடுத்தால்,EXIFல் பார்க்கும் போது இரண்டு வகையான focal length அளவுகள் இருப்பதை பார்க்கலாம்.
focal length என்று ஒன்றில் 50mm என்றும்,35mm equilant focal lengthல்=75mm என்றும் இருப்பதை காணலாம்.
இதுவே olympus DSLR ல் 50mmல் எடுத்து பார்த்தால்,focal length ல் 50mm என்றும்.35mm equilant focal lenghtல்=100mm என்றும் இருக்கும்.
ஒரு சில சிறிய கேமராக்களில் படம் எடுத்து EXIF ல் பார்த்தால், focal lengthல் ஒரு அளவு இருக்கும் ஆனால் 35mm equilant focal length அளவு இருக்காது.
எனவே ஒரு படத்தின் உண்மையான அளவு என்பது
35mm equilant focal lengthல் என்ன அளவு உள்ளதோ அது தான் உண்மையான அளவு ஆகும்.
வெவ்வேறு கேமரா சென்சாரில் ஒரே அளவில் வைத்து எடுத்தால் (உதாரணமாக50mm) வரும் வித்தியாசத்தை கீழே உள்ள படங்களை பார்த்தால் புரியும்..
1.(35mm full format)
(focal length = 50mm, 35mm equilant focal length = 50mm என்று இருக்கும்)
2.(nikon வகை 1.5x crop factor)
(focal length = 50mm , 35mm equilant focal length = 75mm என்று இருக்கும்)
3. (canon வகை 1.6x crop factor)
(focal length = 50mm , 35mm equilant focal length = 80mm என்று இருக்கும்)
4.(olympus 2.0x crop factor)
(focal length = 50mm , 35mm equilant focal length = 100mm என்று இருக்கும்)
5.(smaller sensor of prosumer,basic compact)
(focal length = 50 mm , 35 equilant focal length = 270mm என்று இருக்கும்)
மேலே உள்ள அனைத்து படங்களிலும் focal length என்பது 50mm என்று ஒரே மாதிரி இருந்தாலும், உன்மையான focal length என்பது 35mm eauilant focal lengthல் மாறியிருப்பதை நாம் பார்க்கலாம்
சரி,சென்சார்கள் வெவ்வேறு அளவுகளில் இருப்பதால் picture quality என்பது மாறுமா?
சின்ன சென்சார் மற்றும் பெரிய சென்சாரில் எப்படி ஒரே அளவு பிக்சல்கள் இருக்கின்றன?என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்..
அதுவரைக்கும் போயிட்டு வாரனுங்.. இதுல உங்களுக்கு ஏதாவது சந்தேகம்னா பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்கள்..
-கருவாயன்