Thursday, June 28, 2012

சீர் - ஜூன் 2012 - போட்டி வெற்றிப் படங்கள்

11 comments:
 
சீர்/Uniformity போட்டியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களில், முந்திய பத்து படங்களைப் பார்த்திருப்பீர்கள்.
முதல் மூன்று இடம் பெற்ற படங்களை இனி பார்க்கலாம். சென்ற பதிவில் சொன்னது போல், போட்டியில் கலந்து கொள்பவர்களில் அநேகம் பேர் மிகத் திறமையுடன் கலக்குகிறார்கள். ஆனால், இன்னும் பலர், அடிப்படை விஷயங்களை கவனிக்காமல், பொத்தாம் பொதுவாக, படங்களை க்ளிக்கி, எடுத்த படங்களை மெருகேற்றாமல் அனுப்புகிறார்கள்.

போட்டியில் கலந்து கொள்வதில் இருந்தே, உங்களுக்கு புகைப்படக் கலையின் மீது இருக்கும் ஆர்வம் புலப்படுகிறது. சற்று நேரம் ஒதுக்கி, நம் தளத்தில் இருக்கும், அடிப்படை பாடங்களை அலசி, வெற்றி பெறும் மற்ற படங்களை பார்த்து அவதானித்து, அதனுள் இருக்கும் நுணுக்கங்களை புரிந்து கொண்டு, அடுத்த க்ளிக்கு க்ளிக்கும்போது, இன்னும் ஒரு படி மெருகேற்றி எடுக்க வாழ்த்துக்கள்.
யூ கேன் டூ இட்! :)

இன்னும் ஒரு முக்கிய டிப்பு தரேன் புடிச்சுக்கோங்க. டிஜிட்டல் யுகத்தில், எவ்வளவு படம் எடுத்தாலும், செலவு பெருசா ஆகரதில்லை. அதனால, ஒரு காட்சியை, ஒன்றுக்கும் மேற்பட்ட கோணங்கள், அளவுகோல்களைக் கொண்டு படம் பிடியுங்கள். அவற்றில், நல்லதை மட்டும் எடுத்து, சிறிது பிற்சேர்க்கை செய்து, (atleast, white balance fixing) போட்டிக்கும், உங்கள் ஆல்பங்களிலும் அப்லோடுங்கள். இப்படி செய்தாலே, பாதி கிணறு தாண்டிய மாதிரிதான்.

நானெல்லாம், நூறு படம் எடுத்தால், அஞ்சோ ஆறு படம் தான் ஓரளவுக்கு பார்க்கும்படி இருக்கும். அவற்றை மட்டுமே, என் தளத்திலும் ஆல்பத்திலும் பதிகிறேன். அப்பத்தான், இவரும் ரவுடிதான்னு ஒரு கெத்தோட அலைய முடியும். படம் பிடிக்கர எல்லா படத்தையும் பதிவில் ஏத்தினா, என்னை PiTல் இருந்து தூக்கிருவாங்க :)ஸோ, ஷேர் வித் கேர்!

இனி வெற்றிப் படங்களைப் பார்ப்போம்..

மூன்றாவது இடத்தில், Viswanathaன் பேப்பர் கப்பு படம். பளிச்சென்ற கலர். வசீகரிக்கும் சப்ஜெக்ட்டு. கண்ணை உறுத்தாத 'சீரான' கட்டம். அழகு. வாழ்த்துக்கள் Viswanath.


இரண்டாம் இடத்தில், துரை. க்ரியேட்டிவ் ஷாட். தலைப்புக்கு ரொம்பப் பொறுத்தமாய். நட்ட நடுவில் வைத்து கட்டம் கட்டாமல், கொஞ்சம் இடது ஓரமாய் வைத்து படம் பிடித்ததும் ஈர்ப்பை அதிகரிக்கிறது. கலக்கிட்டீங்க துரை.


முதல் இடத்தில், Udhayan. வலது ஓர ஆரஞ்சு ஆசாமி விளக்குடன் நம்மை ஈர்க்கிறார். அப்பட்டியே, கண் தானாய் அவரின் வலது பக்கத்தில் இருக்கும் மத்த ஆசாமிகளிடம் அழைத்துச் செல்கிறது. பின்னாலிருக்கும் ஆட்கள் கண்களை உறுத்தாமல் இருப்பதும் சிறப்பு. தலைப்புக்கு வெகு பொறுத்தமாய் இருக்கிறது. அதே சமயம், மற்ற படங்களைப் போல் ஒரு செயற்கைத் தனமான 'சீர்' இல்லாமல், இயற்கையாய் அமைந்தது மிகச் சிறப்பு. வெகுவாய் கவர்ந்தது. உதயன், வாழ்த்துக்கள். நன்றீஸ்!


Rajkumarன் படம் அழகாய் இருந்தாலும், கலர் கொஞ்சம் கூடிப் போய், திகட்ட வைத்தது.MervinAnto படம் நேர்த்தி. ஆனால், போலீஸின் பேக் ஷாட் இல்லாமல், இன்னும் கொஞ்சம் நடுவில் சென்று எடுத்திருந்தால், ஒரு உறுத்தல் இல்லாமல் இருந்திருக்கலாம் :)

கலந்து கொண்டவர்களுக்கு நன்றீஸ். அடுத்த மாதமும் கலந்து கலக்குங்க.

11 comments:

 1. விஸ்வநாத், துரை, உதயன் மனமார்ந்த வாழ்த்துகள்

  ReplyDelete
 2. வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 3. வெற்றி படங்கள் வரிசையில் எனது படமும் வந்திருப்பது மகிழ்ச்சி. இந்த ஷாட் எடுக்க நான் பயன்படுத்தியது எனது point & Shoot camera-வை. [ஏன் என்றால் என்னிடம் இருப்பது அது தானே :)]. P & S Camera-வை பயன்படுத்தி இது போன்ற ஷாட்கள் எல்லாம் எடுக்கலாம் என்பதை எனக்கு கற்று கொடுத்த PIT-க்கு நன்றி. மேலும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக தமிழ் வாசகன் அவர்களுக்கு மிக்க நன்றி. :))

  ReplyDelete
 4. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. தமிழ் வாசகன்June 29, 2012 at 1:43 PM

  வாழ்த்துக்கள் துரை உங்கள் கிரியேட்டிவிட்டிக்காகவே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. மூன்றாம் இடம் பிடித்த விஸ்வநாத் மற்றும் முதலிடம் பிடித்த உதயன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. hearty congrats to all winners :)

  ReplyDelete
 7. எனது படம் மூன்றாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 8. நந்தினி வந்த இரண்டு வருடங்களில் கிடைத்த முதல் வெற்றி, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
  போட்டியில் கலந்துக்க சொன்ன ஜீவ்ஸ் அண்ணனுக்கு நன்றி

  நந்தினி என் காமிரா (Nikon D5000)

  ReplyDelete
 9. கலந்துகொண்டவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. மிகவும் அழகான படங்கள். முதல் படம் நான் நினைத்த மாதிரியே உதயன் படத்திற்கு கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள்

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff