Showing posts with label முடிவுகள் போட்டி. Show all posts
Showing posts with label முடிவுகள் போட்டி. Show all posts

Tuesday, July 31, 2012

காகிதப் போட்டிக்கு வந்திருந்த படங்களில் முன்னேறிய 12 படங்களை ஏற்கெனவே பார்த்தோம். தெரிவு செய்யப்படாத படங்களுக்கான காரணங்களை அப்படங்களில் ஆல்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

படங்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றன என்பதற்கான காரணங்கள் பல முறை தெரிவிக்கப்பட்டு வருகின்றன. உங்களுக்கு நினைவூட்ட நான் ஏற்கெனவே பதிவிலிட்ட காரணங்களை மீண்டும் இங்கே தருகின்றேன்.
  • படம் தலைப்புக்கு (மிகபொருத்தமாகவும் விளங்கிக் கொள்ளத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும்
  • பார்ப்பவரை இயல்பாகவே ஈர்க்க வேண்டும்
  • விபரமாகவும் (details) தெளிவாகவும் (clarity) இருத்தல் வேண்டும்
  • அடிப்படை விதிகள் (eg: composition, rule of thirds) கருத்தில் கொள்ளப்பட வேண்டும்
  • பிரதான கருப்பொருளிலிருந்து கவனத்தை திசை திருப்பும் விடயங்கள் இருக்கக்கூடாது
  • சிறப்பாக ஒளியும் நிழலும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்
இவற்றைத் தவிர,  நடுவராக செயற்படுபவருக்கென்று ரசணை உள்ளது. இது ஆளாளுக்கு வேறுபடும். ஏன் வேறுபடுகிறது என்று புத்திசாலிகளான நீங்கள் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

வெற்றிப்படங்களைப் பார்க்குமுன் வெளியேறிய படங்களை பார்ப்போம்.

#Kusumban
அற்புதமாக, கிரியேடிவாக படம் பிடித்துள்ளீர்கள். அழகான வர்ணங்கள். ஆனால், காகிதத்தைவிட பொம்மைகள் முக்கிய கவனம் பெறுவதால் வெற்றி வாய்பை இழக்கிறது.

#Antony Satheesh
கருப்புப் பின்னனியில் எளிமையாகப் பிடிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அழகாக உள்ளது. ஆனால் கவனத்தை ஈர்க்கும்படி இல்லை.


#Karthi 
கிரியேடிவான படம். பின்னனி சிறப்பாக அமையவில்லை. மற்றும் காகிதத்தைவிட பல பொருட்கள் முக்கியத்துவம் பெறுவது படத்திற்கு பலவீனம்.

#Nilaa
மிக எளிமையாகவும் அழகாகவும் உள்ளது. ஆனால் கவனத்தை ஈர்க்கும்படி இல்லாதது மைனஸ்.

#Thangavel
எளிமையாக கிரியேடிவாக படம் எடுப்பதற்கு உதாரணமான படம். வெறுமனே பண நோட்டுக்களை படம் பிடிக்காமல், அழகாக அலங்கரித்தது சிறப்பு. ஆனாலும் கவனத்தை ஈர்க்கும்படி இல்லை.

#Nataraajan Kalpattu
புதிய கோணத்தில் தலைப்பினை வெளிப்படுத்திய புகைப்படம். ஆனாலும் தெளிவின்மை (sharpness) குறைபாடாகவுள்ளது. 

#JEGANATHAN
கடலையும் வானத்தையும் அழகாக, காகிதப் படகுடன் வெளிப்படுத்திய கிரியேடிவான படம். படகின் முன்பு விழும் நிழல், தெளிவு குறைவாகவுள்ளமை என்பன குறைபாடுகள்.

#Sangamithra
வெறுமனே புத்தகத்தினை படம்பிடிக்காது, slow shutter வேகத்தில், கருமையான பின்னனியில் படம் பிடித்தது அழகு. ஆனாலும் கவனயீர்ப்பில் குறைவாகவுள்ளது.


#SSK
அற்புதமான படம். ஆங்காங்கே கிடக்கும் கசங்கிய காகிதங்கள், ஒளியை சிறப்பாக பயன்படுத்தி படமாக்கப்பட்டுள்ளமை சிறப்பு. ஆனாலும் காகிதத்தைவிட ஒளி முக்கியத்துவம் பெறுவதால் வெற்றி வாய்பை இழக்கின்றது.

3ம் இடம்:
#Sathishkumar
கிரியேடிவான படம், சிறப்பான ஒளி மற்றும் செலக்டிவ் கலர் பாவணை என்பன சிறப்பு. காகிதத்திலிருந்து பார்வை செலக்டிவ் கலர் பண்ணப்பட்ட கண் நோக்கிச் செல்வது குறைபாடு.


2ம் இடம்:
#Nithi Clicks
அழகான, கவர்ச்சிகரமான படம். DoF அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. "Happy Valentine's Day" காகிதத்தின் முக்கியத்துவத்தினைக் குறைக்கின்றது.


1ம் இடம்:
#Elan Kumaran Gk
எளிமையான, காகிதத்தினை சரியாக பிரதிபலிக்கும், சிறப்பாக ஒளி மற்றும்  பிற்சேர்க்கையுடன் அமைந்த படம்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! பங்குபற்றியவர்களுக்கு பாராட்டுக்கள்!!

Thursday, June 28, 2012

சீர்/Uniformity போட்டியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களில், முந்திய பத்து படங்களைப் பார்த்திருப்பீர்கள்.
முதல் மூன்று இடம் பெற்ற படங்களை இனி பார்க்கலாம். சென்ற பதிவில் சொன்னது போல், போட்டியில் கலந்து கொள்பவர்களில் அநேகம் பேர் மிகத் திறமையுடன் கலக்குகிறார்கள். ஆனால், இன்னும் பலர், அடிப்படை விஷயங்களை கவனிக்காமல், பொத்தாம் பொதுவாக, படங்களை க்ளிக்கி, எடுத்த படங்களை மெருகேற்றாமல் அனுப்புகிறார்கள்.

போட்டியில் கலந்து கொள்வதில் இருந்தே, உங்களுக்கு புகைப்படக் கலையின் மீது இருக்கும் ஆர்வம் புலப்படுகிறது. சற்று நேரம் ஒதுக்கி, நம் தளத்தில் இருக்கும், அடிப்படை பாடங்களை அலசி, வெற்றி பெறும் மற்ற படங்களை பார்த்து அவதானித்து, அதனுள் இருக்கும் நுணுக்கங்களை புரிந்து கொண்டு, அடுத்த க்ளிக்கு க்ளிக்கும்போது, இன்னும் ஒரு படி மெருகேற்றி எடுக்க வாழ்த்துக்கள்.
யூ கேன் டூ இட்! :)

இன்னும் ஒரு முக்கிய டிப்பு தரேன் புடிச்சுக்கோங்க. டிஜிட்டல் யுகத்தில், எவ்வளவு படம் எடுத்தாலும், செலவு பெருசா ஆகரதில்லை. அதனால, ஒரு காட்சியை, ஒன்றுக்கும் மேற்பட்ட கோணங்கள், அளவுகோல்களைக் கொண்டு படம் பிடியுங்கள். அவற்றில், நல்லதை மட்டும் எடுத்து, சிறிது பிற்சேர்க்கை செய்து, (atleast, white balance fixing) போட்டிக்கும், உங்கள் ஆல்பங்களிலும் அப்லோடுங்கள். இப்படி செய்தாலே, பாதி கிணறு தாண்டிய மாதிரிதான்.

நானெல்லாம், நூறு படம் எடுத்தால், அஞ்சோ ஆறு படம் தான் ஓரளவுக்கு பார்க்கும்படி இருக்கும். அவற்றை மட்டுமே, என் தளத்திலும் ஆல்பத்திலும் பதிகிறேன். அப்பத்தான், இவரும் ரவுடிதான்னு ஒரு கெத்தோட அலைய முடியும். படம் பிடிக்கர எல்லா படத்தையும் பதிவில் ஏத்தினா, என்னை PiTல் இருந்து தூக்கிருவாங்க :)ஸோ, ஷேர் வித் கேர்!

இனி வெற்றிப் படங்களைப் பார்ப்போம்..

மூன்றாவது இடத்தில், Viswanathaன் பேப்பர் கப்பு படம். பளிச்சென்ற கலர். வசீகரிக்கும் சப்ஜெக்ட்டு. கண்ணை உறுத்தாத 'சீரான' கட்டம். அழகு. வாழ்த்துக்கள் Viswanath.


இரண்டாம் இடத்தில், துரை. க்ரியேட்டிவ் ஷாட். தலைப்புக்கு ரொம்பப் பொறுத்தமாய். நட்ட நடுவில் வைத்து கட்டம் கட்டாமல், கொஞ்சம் இடது ஓரமாய் வைத்து படம் பிடித்ததும் ஈர்ப்பை அதிகரிக்கிறது. கலக்கிட்டீங்க துரை.


முதல் இடத்தில், Udhayan. வலது ஓர ஆரஞ்சு ஆசாமி விளக்குடன் நம்மை ஈர்க்கிறார். அப்பட்டியே, கண் தானாய் அவரின் வலது பக்கத்தில் இருக்கும் மத்த ஆசாமிகளிடம் அழைத்துச் செல்கிறது. பின்னாலிருக்கும் ஆட்கள் கண்களை உறுத்தாமல் இருப்பதும் சிறப்பு. தலைப்புக்கு வெகு பொறுத்தமாய் இருக்கிறது. அதே சமயம், மற்ற படங்களைப் போல் ஒரு செயற்கைத் தனமான 'சீர்' இல்லாமல், இயற்கையாய் அமைந்தது மிகச் சிறப்பு. வெகுவாய் கவர்ந்தது. உதயன், வாழ்த்துக்கள். நன்றீஸ்!


Rajkumarன் படம் அழகாய் இருந்தாலும், கலர் கொஞ்சம் கூடிப் போய், திகட்ட வைத்தது.MervinAnto படம் நேர்த்தி. ஆனால், போலீஸின் பேக் ஷாட் இல்லாமல், இன்னும் கொஞ்சம் நடுவில் சென்று எடுத்திருந்தால், ஒரு உறுத்தல் இல்லாமல் இருந்திருக்கலாம் :)

கலந்து கொண்டவர்களுக்கு நன்றீஸ். அடுத்த மாதமும் கலந்து கலக்குங்க.

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff