Saturday, September 22, 2012

“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)

6 comments:
 
றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம்.  அவர் தனது இருபத்தி இரண்டாவது வயதில் இயற்கைக் காட்சிகள் பற்றி (வனங்கள், வனவிலகுகள் இவை பற்றி) கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார்.  அப்போது அவருக்குத் தோன்றியது கட்டுரைகள் படங்களோடு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று.  உடனே படம் பிடிப்பதில் இறங்கினார். (இறங்கினாரா ஏறினாரா என்பது என் தீராத சந்தேகம்.)


 (சார்லஸ் கியர்டனும் அவர் சகோதரர் ரிச்சார்டும் பறவை படம் பிடிக்கிறார்கள்.  இது எப்படி இருக்கு?  ஆடுமா?  ஆடாதா?  படம் வருமா?  வராதா?  கேமிரா லென்ஸின் மூடிதான் ஷட்டர் என்று இருந்த காலம் அது.)

பறவைகளோ அவருக்கு போஸ் கொடுக்காமல் பயத்தில் பறந்து சென்றன.  அவர் உடனே ஒரு கூடாரத்துள் ஒளிந்திருந்து படம் பிடிப்பது சுலபம் என்பதைக் கண்டறிந்தார்.  அவர் தயார் செய்த மாய்மால கூடாரங்கள் (camouflage tents) பிரபலமாயின.  அவரது கண்டு பிடிப்பு பறவைகளோ விலங்குகளோ மாய்மால கூடாரங்கள் மனிதனைத் தவிற வேறு எந்த உருவத்தில் இருந்தாலும் அவற்றைக் கண்டு கொள்வதில்லை, பயப் படுவதில்லை என்பது.

கியர்டனுக்குப் பின் பறவைகளைப் படம் பிடிப்பதில் உலகப் புகழ் பெற்றவர் எரிக் ஜான் ஹாஸ்கிங்க் (ஆர்டர் ஆஃப் தெ ப்ரிடிஷ் எம்பையர்) (1909 – 1991) ஆவார்.

ஹாஸ்கிங் பல படங்கள் எடுத்த போதிலும் அவர் உலகப் புகழ் பெற்றது அவர் ஒரு ஆந்தையைப் படம் பிடித்தபோது அவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்தினால் தான்.  அந்த் ஆந்தை தன் கூரிய நகங்களினால் அவரது இடது கண் விழியினைப் தோண்டி எடுத்துச் சென்று விட்டது.

அதன் பிறகு அவரது பறவைகள் படங்கள் அவருக்குப் பல பட்டங்களையும், பதவிகளையும் கொண்டு சேர்த்தன.
 
உலகில் தான் எடுத்த பறவைகள் படங்கள் கொண்டு சேர்த்த பணத்தைக் கொண்டே வாழ்க்கை நடத்திய ஒரே மனிதர் அவர் என்று சொல்வார்கள்.

 எரிக் ஜான் ஹாஸ்கிங்

 ஹாஸ்கிங்க் எடுத்த ஆந்தை படம்

நம் நாட்டில் பறவைகள் படம் பிடிப்பதிலோ, அவை பற்றி ஆராய்ச்சிகள் செய்வதிலோ முன்னோடி என்றால் “இந்தியாவின் பறவைகள் மனிதன்” என்றழைக்கப் பட்ட பத்ம விபூஷன் டாக்டர் சாலிம் அலி யைச் சொல்ல வேண்டும்.

 டாக்டர் சாலிம் அலி


பல புத்தகங்கள் எழுதிய, படங்கள் எடுத்த, ஆராய்ச்சிகள் செய்த டாக்டர் ஸாலிம் அலி அவர்கள் பறவைகள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கக் காரணம்மயிருந்தது ஒரு நாள் அவர் கண்ணில் பட்ட, தோட்டத்தில் செத்துக் கிடந்த மஞ்சள் தொண்டை கொண்ட சிட்டுக் குருவி!

 மஞ்சள் தொண்டைச் சிட்டுக் குருவி


நான் திருச்சியில் இருந்த போது இந்த பெரியவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.  அன்று மாலை அவர் எங்கள் வன விலங்குப் பாதுகாப்புச் சங்கத்தின் கூட்டத்தில் தலமை தாங்கிப் பேச வேண்டும்.  அவரை அறிமுகம் செய்ய வேண்டியது காரியதரிசியான என் வேலை.  அதனால் அவரை நிகழ்ச்சி துவங்கும் முன் எங்கள் வீட்டிற்குத் தேனீர் விருந்திற்கு அழைத்திருந்தேன். 

முதல் நாள் இரவு எனது தாயின் உடல் நிலை திடீரெனெக் கவலைக் கிடமாகியதால் நான் அவசர அவசரமாக இரவு 11 மணிக்குச் சென்னைக்குக் கிளம்ப வேண்டியதாயிற்று.  உடனே என் பேச்சினை ஒலிப் பதிவு செய்து மனைவியிடம் கொடுத்து விட்டு சென்னை சென்றேன். 

திட்டமிட்ட படி சாலிம் அலி அவர்கள் எங்கள் வீட்டிற்கு மறு நாள் மாலை வந்தார்.  தேனீர் விருந்தும் நடந்தது.  அன்று மாலை சங்கக் கூட்டமும் நடைபெற்றது..  ஆனால் நான் தான் கொடுத்த் வைக்க வில்லை அந்தப் பெரியவரோடு அன்று கலந்துரையாட!
***
Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

6 comments:

 1. சுவை யான நினைவுகள் .

  ய்ப்பா அந்த காலத்திலயே எப்படி எல்லாம் கஷ்டபட்டுஇருக்கிரார்கள்ஒரு போட்டோ புடிக்க.

  ReplyDelete
 2. மிகவும் சுவாரஸ்யமான கட்டுரை. கல்பட்டு நடராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி! உங்களது இந்த அணைத்து புகைப்பட அனுபவங்களும், அறிவுரைகளும் அடங்கிய புத்தகம் தமிழில் இருந்தால், தமிழ் புகைப்பட கலைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  ReplyDelete
 3. @ Sathiya,

  தொடர் முடிந்ததும் தொகுத்து இணையத்தில் வாசிக்கும் e-book ஆக வாசகருக்கு வழங்க உள்ளோம்.
  புத்தகமாக வெளிவருமாயின் இன்னும் சிறப்பு.

  ReplyDelete
 4. பின்னூட்டம் அளித்துள்ள அன்பர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 5. அருமையான புகைப்படங்கள், சுவையான பதிவு, ஆனைக்கட்டி பகுதியில் சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்திற்கு ஒரு முறை கல்லூரிக் காலங்களில் சென்ற அனுபவத்தை நினைத்துப் பார்க்கத் தூண்டியது இப்பதிவு. மிக்க நன்றிகள் !

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff