Wednesday, June 3, 2020

Photography in Tamil (PIT) நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னை இங்க பங்கெடுக்க வைத்த ஜீவ்ஸ் & ராமலெக்ஷ்மி இருவருக்கும் நன்றிகள்!



என்னுடைய முதல் வீடியோவான போட்டோகிராப்பின்னா என்ன? டி எஸ் எல் ஆர்ன்னா என்ன? அது எப்படி வேலை செய்யுதுன்னு இந்த அறிமுக வீடியோவில் சொல்லியிருக்கிறேன். பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.





வீடியோவுக்கான லிங் : https://youtu.be/45qhg-yggiQ





Learn Photography in Tamil - Photography And Dslr Introduction For Beginners & What Is Photography?

PiT (Photography in Tamil)
Photography in Tamil
Learn Photography in Tamil
Photoshop in Tamil 
Learn Photoshop in Tamil
Learn Basics of Photography in Tamil
Photography basics in Tamil
What is DSLR how it works in Tamil

வணக்கம் நண்பர்களே,

அனைவரும் நலமா? 

ஆசிரியர் குழுவினரைச் சேர்ந்த அனைவரும் காலத்தோடு ஓட வேண்டிய கட்டாயத்தால் ஏற்பட்ட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பிட் தளம் மீண்டும் இயங்க உள்ளது. அதுவும் வளர்ந்து விட்ட தொழில்நுட்பங்களை வரவேற்று.. காணொளிப் பாடங்களாக.. 

வழங்கவிருப்பவர் புதிதாக ஆசிரியர் குழுவில் இணைந்திருக்கும் நண்பர்
 திரு. சரவணவேல். 

புதிதாக இணைந்திருந்தாலும் நம் PiT உறுப்பினர்களுக்கு நன்கு அறிமுகமானவரே. நம் தளம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ‘குசும்பன்’ என்ற பெயரில், PiT நடத்திய பல போட்டிகளில் ஆர்வமுடன் பங்கெடுத்திருக்கிறார். அப்போது துபாயில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். புகைப்படக்கலையில் அதீத ஆர்வம் கொண்டிருந்தவர், படிப்படியாகக் கற்றுத் தேர்ந்து, துபாயில் பல முன்னணி நிறுவனங்களுக்கு ‘ப்ராடெக்ட் போட்டோகிராபராக’ இருந்திருக்கிறார். பிறகு வேலையை விட்டுவிட்டு சென்னை வந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக www.thei2studio.com  என்கிற ஒரு ஸ்டுடியோவை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். திருமணம் மற்றும் குடும்ப விழாக்களுக்குப் படங்கள் எடுத்துக் கொடுக்கிறார் ஆயினும், “குழந்தைகள் போட்டோகிராஃபி” சரவணவேலின் ஸ்பெஷாலிட்டி.

லாக் டவுன் நாட்களில் இவர் யூ ட்யூபில் ஆரம்பித்த  www.youtube.com/thei2studioclassroom என்கிற ஃபோட்டோகிராஃபி சேனலில் எளிய டிப்ஸில் இனிய தமிழில் இவர் ஃபோட்டோகிராஃபி கற்றுக்கொடுக்கும் வீடியோக்களுக்கு வெகுவான வரவேற்பு! குழந்தைகளுக்கும் புரியும் வகையில் ஃபோட்டோகிராப்பி & போட்டோஷாப்பை கற்றுக் கொடுத்து வருகிறார். இந்தப் பாடங்கள் இனி நமது தளத்திலும் வெளியாகும். பார்த்துப் பயனுறுங்கள்!
**

Friday, September 9, 2016

அனைவருக்கும் வணக்கம்,
இந்த மாதப் போட்டிக்கு ஓரளவுக்கு படங்கள் வந்திருந்தன. மகிழ்ச்சி! இருந்தாலும் ஆயிரக்கணக்கில் பின்தொடரும் ஒரு குழுமத்தில் இது மிகவும் குறைவான எண்ணிக்கையே. வரும் போட்டிகளில் அதிகமானோர் பங்கேற்று புகைப்படக் கலையைக் கற்றுச் சிறக்க வாழ்த்துகள்!
இம்மாதப் போட்டி முடிவுகளுக்கு வருவோம்.
முதலாமிடம் : Selvakumar Mani

இரண்டாமிடம் : Viji Ram

மூன்றாமிடம் 1 : Kanna Dhasan

மூன்றாமிடம் 2 : Venkat Pharmacist

சிறப்புக் கவனம் பெற்ற படங்கள்:
Athik Ali

போட்டியில் பங்கேற்ற/வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
***

Saturday, August 6, 2016

வணக்கம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு போட்டி அறிவிப்பதில் மகிழ்ச்சி.

இம்மாத போட்டிக்கான தலைப்பு 'Street Photography'. 

சில மாதிரிப் படங்கள்:
#1

#2

#3

படங்களை அனுப்பக் கடைசித் தேதி: 25 ஆகஸ்ட் 2016.

போட்டியில் கலந்துகொள்ள முதலில் https://www.facebook.com/groups/488597597986621/ Face Book குழுமத்தில் இணைந்திடுங்கள்.

அதன் பிறகு ஆகஸ்ட் மாதப் போட்டிக்கான படத்தை கீழ்கண்ட இணைப்பில் வலையேற்ற வேண்டும்: ஆகஸ்ட் 2016 போட்டி - Street Photography
குழும சுவற்றில் பதியாமல், மேலுள்ள இணைப்பைத் திறந்துதான் பதிய வேண்டும். ஒவ்வொரு போட்டி அறிவிப்பின் போதும் அந்தந்த மாதப் போட்டிக்கான ஆல்பத்தின் இணைப்பு பதிவில் தரப்படும். படங்கள் PiT குழுவினரின் அனுமதிக்குப் பிறகே ஆல்பத்தில் இடம் பெறும்.
விதிமுறைகள் இங்கே: http://photography-in-tamil.blogspot.ae/2009/02/pit.html

போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!
***

Thursday, June 2, 2016

சாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது  புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை மிகச் சிறிய அளவில் காட்டும் ஒரு நுட்ப முறையாகும். எடுத்துக்காட்டு: ஒரு சாலையைப் படம் பிடித்தால், அச்சாலையிலுள்ள வாகனங்கள், கட்டடங்கள், மக்கள் என்பவற்றையெல்லாம் பொம்மைகள் போல் காட்டுவதாகும்.

உதாரணம் 1:

இது இஸ்ரேலிலுள்ள ஹைபா எனும் நகரத்தின் ஒரு பகுதி. சாய்வு மாற்ற நுட்பம் மூலம் இங்குள்ள கட்டடங்கள் பார்வைக்கு சிறியதாக, தீப்பெட்டிகள் போல் தெரிகின்றன.

உதாரணம் 2:

இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடைப்பட்ட சாக்கடலில் உல்லாசப் பயணிகள். சிலர் மிதக்கின்றனர். சிலர் நிற்கின்றனர். சிலர் நடக்கின்றனர்.

நுட்பம் என்ன?

எவ்வளவு பெரிய விடயத்தையும் சாதாரணமான மொம்மைகள் போன்று மாற்றி, பார்வைக்கு இனிமையாக தெரிய வைப்பதுதான் இதன் நுட்பம். படத்தின் நடுப்பகுதியைத் தவிர்த்த கீழும் மேலும் உள்ள பகுதிகள் குவிவற்ற (unfocused), ஆழமற்ற புலக் குவிவை (shallow depth of field) வழங்குவதால் இது ஏற்படுகிறது. கிட்டத்தட்ட இது ஒரு நுண் ஒளிப்படவியல் (macro photography) போன்றது. உதாரணத்திற்கு, நுண் ஒளிப்படவியல் மூலம் ஒரு தேனியை அதன் சுற்றுப்புறத்துடன் படமாக்க முற்பட்டால் தேனிக்கு முன்னும் பின்னும் உள்ள பகுதிகள் (பொதுவாக f/2 aperture அளவில்) குவிவற்றுத் தெரியும். நுண் ஒளிப்படவியல் ஒரு சிறு இடத்தில் மேற்கொள்ளப்படும். அதனை ஒரு பரந்த இடத்தில் (landscape photography) மேற்கொண்டால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இந்த சாய்வு மாற்ற ஒளிப்படமும் இருக்கும்.

சுமார் $2,000 விலைமதிப்புள்ள (Nikon PC-E Micro-NIKKOR 45mm f/2.8D ED) Tilt-Shift Lens
இதனை சாதாராண வில்லைகள் (lens) மூலம் மேற்கொள்ள முடியாது. இதற்கு சாய்வு மாற்ற வில்லை (Tilt-shift lens) தேவையாகவுள்ளது (மேலேயுள்ள படம்). இதன் ஊடாக படம் பிடித்தால் அழகான சாய்வு மாற்ற படங்களைப் பெறலாம். தேவை, விலை போன்ற காரணங்களினால் இதனை பெரிதாக யாரும் வாங்குவதில்லை. ஆகவே நம்மைப் போன்றவர்கள் எப்படி படம் பிடிப்பது என்ற கேள்வி எழலாம். இப்படியானவர்கள் படம் பிடிக்க இயலாது. ஆனால், பிடித்த படத்தை போட்டோசொப் கொண்டு மாற்றிவிடலாம்.

சாய்வு மாற்ற படம் பிடிக்கவோ அல்லது பிடித்த படத்தை போட்டோசொப் கொண்டு மாற்றவோ சரியான இடம் அல்லது படம் அவசியம். மேலிருந்து கீழ் நோக்கி இருக்கும் இடம் அல்லது படம் பொருத்தமாக இருக்கும். (உதாரணப் படங்களைப் பாருங்கள்)

போட்டோசொப்பில் செய்வது எப்படி?

1. பொருத்தமான படத்தை போட்டோசொப்பில் திறந்து கொள்ளுங்கள். அதனை Quick Mask Mode (Photoshop CS5: Menu > Select > Edit in Quick Mask Mode [குறுக்குவழி Q]) என்பதற்கு மாற்றுங்கள். (படத்தில் 1 என்று கட்டமிடப்பட்டுள்ளது)

2. Tool bar இல் Gradient Tool [குறுக்குவழி Q] என்பதை தேர்வு செய்து (படத்தில் 2 என்று கட்டமிடப்பட்டுள்ளது), Reflected Gradient என்பதை (Gradient Tool இற்கான மெனுவில் நான்காவது) தேர்வு செய்யுங்கள் (படத்தில் 3 என்று கட்டமிடப்பட்டுள்ளது).

3. Gradient Tool மூலம் செங்குத்தாக (மேலிருந்து கீழாக) ஒரு கோடு வரையுங்கள். இப்போது Quick Mask Mode இல் இருப்பதால் அங்கு சிவப்பு பட்டி உருவாகியிருக்கும். Quick Mask Mode இல் இருந்து வெளியேறி வழமையாக நிலைக்கு (Standard Mode) வாருங்கள் [குறுக்குவழி Q]. (படத்தில் 1 என்று கட்டமிடப்பட்டுள்ளது)

4. இப்போது படத்தின் கீழ்ப்பக்கம் தெரிவு செய்யப்பட்டிருக்கும். இது நமது சாய்வு மாற்றத்திற்கு உதவாது. எனவே, சரியாக தெரிவு செய்ய வேண்டும். ஆகவே, படத்தில் காட்டப்பட்ட A முதல் B வரை Gradient Tool மூலம் செங்குத்தாக (நேராக) ஒரு கோடு வரைந்துவிட்டு, வழமையான நிலைக்கு (Standard Mode) வாருங்கள். இப்போது படத்தில் உள்ளவாறு படத்தில் இடைப்பகுதி தவிர்த்த பகுதிகள் (மேல், கீழ் பகுதிகள்) தெரிவு செய்யப்படும். தெரிவு செய்யப்படாத பகுதிதான் நாம் எங்கு காட்சியை முக்கியத்துவப்படுத்தப்போகிறோம் என்பதற்கான பகுதி. எனவே உங்கள் படத்திற்கேற்ப சரியான பகுதியை இனங்கண்டு அதற்கேற்ப Gradient Tool மூலம் தெரிவு செய்யுங்கள்.

5. படத்தில் உள்ளவாறு இடைப்பகுதி தவிர்த்த பகுதிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கையில் Lens Blur என்பதைத் தெரிவு செய்யுங்கள் (Menu > Filter > Blur > Lens Blur…).

6. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவுகளை அமையுங்கள். என்பதை கூட்டிக் குறைப்பதன் மூலம் வேண்டிய மாற்றத்தைச் செய்யலாம். உதாரணத்திற்கான படத்தில் 40 என்றுள்ளது. பின்னர் Ok என்பதைச் சொடுகி வெளியேறுங்கள்.

7. இப்போது உங்களுக்கு வேண்டிய சாய்வு மாற்றம் உருவாகியிருக்கும். எனவே மிகுதியாக CTRL-D என்ற குறுக்குவழியூடான தெரிவு செய்யப்பட்டதை இல்லாது செய்யுங்கள்.

8. படத்தை மேலும் மெருகூட்ட வேண்டிய மாற்றங்களைச் செய்யலாம். குறிப்பாக, Hue/Saturation, Curves செய்வதால் சாய்வு மாற்ற படத்திற்கு மேலும் மெருகூட்டும்.

9. Menu > Image > Adjustments > Hue/Saturation… [குறுக்குவழி CTRL-U] என்பதைத் தெரிவு செய்து Saturation தேவையான அளவு கூட்டிக் கொள்ளுங்கள். எ.கா: 40
10. Menu > Image > Adjustments > Curves… [குறுக்குவழி CTRL- M] என்பதைத் தெரிவு செய்து தேவையான அளவு படத்தை மாற்றிப்பாருங்கள். எ.கா: Input = 7, Output = 9



இப்போது உங்களுக்கு அழகான படம் கிடைத்திருக்கும்.

***



 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff