Monday, December 31, 2007

ஜனவரி 2008 - PIT புகைப்படப் போட்டி - அறிவிப்பு

76 comments:
 
வணக்கம் நண்பர்களே.
2008ல் கால் எடுத்து வைக்கும் உங்கள் அனைவருக்கும் (PIT) "தமிழில் புகைப்படக்கலை"யின் சார்பில், வாழ்த்துக்கள்.
புதிய வருடத்தில் உங்கள் வாழ்வு மேன்மேலும் வளம் பெறட்டும்.

சென்ற மாதப் போட்டியில் 'மலர்கள்' தலைப்பில் வந்து குவிந்த அழகிய படங்களை எல்லாம் பார்த்திருப்பீர்கள். அசத்தி இருந்தார்கள் அசத்தி!
நல்ல படங்கள் எடுக்க விலை உயர்ந்த கேமராவெல்லாம் தேவையே இல்லை. நல்ல கலைப் பார்வையும், கற்பனா வளமும் இருந்தால் போதும் என்று உறுதிப்படுத்தி இருந்தார்கள் நம் சக பதிவர்கள்.
பரிசு பெற்ற எருகம்பூவும், ஜீன்ஸ் பூவும், ஸைட்-அடித்த வெள்ளைப் பூவும் கொள்ளை அழகு!


படத்தை கட்டம் கட்டுவதிலும் (composition), பிற்தயாரிப்பிலும் நல்ல முன்னேற்றம் நம் அனைவர் படங்களிலும் கண் கூடாகத் தெரிகிறது.

ஒருவரைப் பார்த்து ஒருவர் நம் நுட்பத்தை மெருகேற்றி வருகிறோம். போட்டி என்ற போதிலும் கூட நமக்குள் இருக்கும் ஆரோக்ய சூழலே ஒவ்வொரு மாதமும் இந்த பக்கங்களை சுவாரஸ்யமாக்குகின்றன.

வரும் புத்தாண்டில் PIT உபயத்தில், நாம் அனைவரும் புகைப்படம் எடுத்தலின் அடுத்த கட்டத்துக்கு நகரச் செய்யும் இந்த அழகான கூட்டு முயற்சியை தொடருவோம்.

சரியா? இனி, ஜனவரி போட்டிக்கான தலைப்பு, விதிமுறைகள் எல்லாம் பாப்பமா?
அதுக்கு முன்னாடி, சில படங்களப் பாருங்க: (படங்கள் உபயம்: An&, CVR, Flickr, சர்வேசன்)





எப்படி இருக்கு படமெல்லாம்? நல்லாயிருக்கா?
இந்த மாசப் போட்டியின் தலைப்பு ஊகிக்க முடிஞ்சுதா?

மேலப் படிங்க :)

ஜனவரி மாதம் நீங்க புகைப்படம் எடுக்க வேண்டிய தலைப்பு 'அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்' (everyday artifacts).
அதாகப்பட்டது, காலைல எழுந்து ராத்திரி தூங்கர வரைக்கும் தினசரி உபயோகப்படுத்தும் பொருள்களை ஜனவரி மாசப் போட்டிக்காக, தேடித் தேடி க்ளிக்க வேண்டியதுதான்.
உ.ம்: மேலே படத்தில் உள்ள டூத் ப்ரஷ்ஷோ, ஸோப்பு, சீப்பு, கண்ணாடி, கிச்சன் சாமான், பெட்ரூம் சாதனம், இந்த மாதிரி எதை வேணும்னாலும் பிடிக்கலாம்! நோ லிமிட்ஸ்!

சும்மா, அடிச்சு ஆடுங்க!

தலைப்பு - அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் (Everyday artifacts)
நடுவர்கள் - சர்வேசன் மற்றும் வற்றாயிருப்பு சுந்தர்
படங்கள் அனுப்பும் முறை - பதிவிட்டு விட்டு ,பின்னூட்டத்தில் அறிவிக்க வேண்டும்.
(You just have to publish your pictures in your blog and give the link as comment for the post! :-).If you dont have a blog,links to photo publishing sites like flickr are Ok )
உங்கள் பதிவில் படங்களின் slideshow போடுவதை விட நேரிடையாக படத்தை பதிவிட்டால் நாங்கள் எடுத்துக்கொள்ள வசதியாக இருக்கும்.
போட்டிக்கான விதிகள்:அதிகபட்சம் இரண்டு படங்கள் போட்டிக்காக சமர்பிக்கலாம்.எதுவும் சொல்லாத பட்சத்தில் இடுகையில் உள்ள முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
காலம் - ஜனவரி 1 முதல் 15
முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்- 25 ஜனவரி 2008

பின்னூட்டத்தில், படத்தின் URLலையும் கொடுத்தால் எங்களுக்கு வேலை சுலபமாகும்.
உ.ம்:
பதிவு: http://something.blogspot.com/2007/12/post1.html
படம்1: http://somewhere.com/pic1.jpg
படம்2: http://somewhere.com/pic2.jpg


புகைப்படத்துக்கு ஒரு நல்ல தலைப்பையும் வையுங்கள். சுவாரஸ்யம் கூடும். (மதிப்பெண் படத்துக்குத்தான், தலைப்புக்கல்ல). :)

அன்றாடப் பொருட்கள் என்னென்னல்லாம் எடுக்கலாம் என்று பார்க்க Flickr பக்கங்களை புரட்டிப் பாருங்கள்.

நன்றி!

வாழ்க! வளர்க!

மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

76 comments:

  1. ம்ம்ம்ம், இந்த மாசம் கொஞ்சம் யோசிச்சி பதிவு போடரேன்...இப்போதைக்கு பிரசண்ட் சார்...

    ReplyDelete
  2. இம்சை. வழக்கம் போல உங்க படமே முதல் படமா வரட்டும் சீக்கிறம் :) சீக்கிறம் வாங்க

    ReplyDelete
  3. ரொம்ப சுவாரஸ்யமான தலைப்பு!!
    இந்த மாதத்திற்கான படங்களை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

    ///Blogger Jeeves said...

    இம்சை. வழக்கம் போல உங்க படமே முதல் படமா வரட்டும் சீக்கிறம் :) சீக்கிறம் வாங்க/////

    அவசரப்படுத்தாதீங்க அண்ணாச்சி!!
    பொறுமையா யோசிச்சு படம் எடுத்து போடட்டும்!! :-D

    போட்டியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    அதனுடன் PIT வாசகர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களும்!! :-)

    ReplyDelete
  4. புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஆட்டத்த ஆரம்பிக்க வேண்டியதுதான்!!

    ReplyDelete
  5. அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்,

    என்னுடைய பதிவு
    http://picasaweb.google.com/salaisjr/Contest/photo#5150232117601823426

    http://picasaweb.google.com/salaisjr/Contest/photo#5150232164846463698

    ReplyDelete
  6. Salai Jayaraman,

    என்ன முதல் படம் அடல்ட்ஸ் ஒன்லியா இருக்கே :) (just kidding).

    thanks, போட்டியில் சேர்த்து விடுகிறேன்.
    :)

    ReplyDelete
  7. ஆஹா எனக்குத் தோணலியே. காலை வெயிலில் ஜன்னல் ஓரமாக சிறிது நேரமே வந்த ஒளியின் மூலமாக எடுக்கப்பட்ட படம். TV யில் பட்ட பிரதிபலிப்பில் சேர், கட்டில் போன்ற அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் TV on செய்யாமலே ஒரு நிகழ்ச்சியில் வந்ததுபோல் தெரியவும் எடுத்தபடம். ஒளி மறைவதற்குள் எடுக்கவேண்டும் என்ற அவசரத்தில் சட்டை கூட போடவில்லை. எதார்த்தமாக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

    ReplyDelete
  8. கொசு ஒழிப்புக்காக நாம் அன்றாடம் படும் பாடு. Martein, Banish போன்ற அனைத்து கொசு ஒழிப்பு சாதனங்களும் நம் அன்றாடப் பயன் பாட்டுப் பொருள்களில் ஒன்றாகி விட்டது. சுற்றுப்புற சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நம்மவர்களிடம் குறைவு என்பதற்கு சான்றாக இன்று நம்மிடம் அதிகப் புழக்கத்தில் உள்ளது கொசு ஒழிப்புச் சாதனங்கள்தான். மேலை நாடுகளைப் போல பொருளாதார வளர்ச்சிக்குத் தான் பாடுபடுகிறோமே தவிர சுற்றுப்புறத்தைத் துாய்மையாய் வைத்திருப்தில் நம் அக்கறையின்மையைத்தான் இது காட்டுகிறது. ஒரு கணிசமான தொகை மாதா மாதம் கொசு ஓழிப்புச் சாதனத்திற்கு செலவழிப்பது வேதனையான உண்மை.

    ReplyDelete
  9. 'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற பெரியோர் சொற்படி, ஆண்டின் முதல்நாள் அதுவுமா இப்படி மாட்டுவேன்னு எதிர்பார்க்கவேயில்லை. அதனால, நெறய நகுகிறேன்! :-)))))))

    போட்டியாளர்கள் வந்து அடிச்சு ஆடட்டும். என்னை அந்தச் சர்வேசன் காப்பாற்றட்டும்!

    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. சாலை ஜெயராமன், ஒரு போட்டோக்கு பின்னாடி இவ்ளோ சமூகக் கோபமா? ஜூப்பர் :)

    ReplyDelete
  11. சாலை ஜெயராமன்

    நல்வரவு.

    //அவசரத்தில் சட்டை கூட போடவில்லை//

    நல்ல வேளை! ;-)

    படம் மூலமா அறிவுரை சொல்லுவாங்க. நீங்க படம் மொத்தமுமே மெசேஜ்னு சொல்றீங்க. நல்ல கருத்து.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. http://i777.blogspot.com/2005/11/chair_12.html
    http://i777.blogspot.com/2006/07/light-works_23.html

    இது என்னுடைய போட்டி படங்கள்!

    ReplyDelete
  13. புத்தாண்டு வாழ்த்துக்கள்.வழக்கம் போல் பின்னூட்டத்துக்கு லேட்டா வந்து காட்சியமைப்பு பதிவப் பார்த்துகிட்டு இந்த மாதம் குதிரை,பறவைகள் மாதிரிதான் தலைப்பு போலன்னு யோசிச்சிகிட்டு ரெண்டு நாள் பின்னால வந்து பார்த்தா தலைப்பு வேறன்னு புரியுது.ஹி...ஹி!
    ஆனந்தின் ஹார்லிக்ஸ் எந்த ஊருங்க?நான் பார்த்ததேயில்லை.

    ReplyDelete
  14. இந்தப் பின்னூட்டம் சாலை ஜெயராமனுக்கு அர்ப்பணம்.மற்றவர்களுக்கு தகவல்.

    இந்த கரப்பான் பூச்சிய ஒழிக்கணுமின்னு வாங்காத டப்பா இல்லை.காசு போச்சே தவிர கரப்பான் போற மாதிரி தெரியல.கடைசியா கம்பேக்ட் ன்னு ஒரு அமெரிக்கன் டியூப்பை ஒத்தியெடுத்தா ஆறு மாசத்துக்கும் மேலே ஐயாக்களின் ஓட்டத்தையே காணோம்.இப்ப மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கிறாங்க.கரப்பானா?கம்பேக்ட்டா?பார்த்திடலாமின்னு தைரியம் இப்ப.

    ReplyDelete
  15. Vanakkam.
    Anaivarukkum Iniya Puthaandu Vaazhthukkal.

    Itho Enathu pangirku sila padangal.

    http://www.flickr.com/photos/shivclicks/431224121/

    http://www.flickr.com/photos/shivclicks/539993131/

    ReplyDelete
  16. நட்டு
    இங்கே இந்தியன் கடையிலதான் வாங்கினேன், Made in india போட்டு இருந்தது. ஒருவேளை export packaging ?

    ReplyDelete
  17. அப்பாஸ், Shiv,

    fantastic. கள கட்டுது போட்டி ;)

    ReplyDelete
  18. அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்,

    போட்டிக்கு என்னுடைய படங்கள் கீழே...

    http://ilavattam.blogspot.com/2008/01/blog-post.html

    படம் 1:
    http://bp0.blogger.com/_cLVC2hNlusU/R4AWy2uLdoI/AAAAAAAAAPo/z04xc_aZxzE/s1600-h/Pencil+Sharpner.JPG

    படம் 2:
    http://bp3.blogger.com/_cLVC2hNlusU/R4AWqmuLdnI/AAAAAAAAAPg/tviSaF-N6ts/s1600-h/Little+Mouse.JPG

    ReplyDelete
  19. இதோ என்னோடது..
    http://podian.blogspot.com/2008/01/sunday-special-pit.html

    இதுல சுமாரா இருக்கிற எதாவது 2 படங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.:P

    அல்லது முதல் இரண்டு படங்கள். இரண்டாவது படத்தை விட வேறு சில படங்களும் சுமாராக எனக்கு தெரியுது :)

    ReplyDelete
  20. http://podian.blogspot.com/2008/01/sunday-special-pit

    Second photo has been changed. please take a look at my space.

    ReplyDelete
  21. Sorry.. பதிவுல எதோ ப்ராப்ளம். படங்கள் எல்லாம் மறைஞ்சி போய்டிச்சி. திரும்பவும் அப்லோட் பண்ணி இருக்கேன். 2 படங்களுக்கும் சுட்டியை கீழே குடுத்துட்டேன். :)

    1. http://bp0.blogger.com/_DzsFu_6-6g0/R4LsEm6W-qI/AAAAAAAAAS8/8TJb-fSKUfc/s1600-h/S1030674.jpg
    2. http://bp2.blogger.com/_DzsFu_6-6g0/R4LsFG6W-rI/AAAAAAAAATE/r8J4LWz-uLw/s1600-h/S1030714.JPG

    ReplyDelete
  22. போடிக்கு என்னுடைய படங்கள் தங்கள் பார்வைக்கு.

    http://picasaweb.google.com/neelabkrish/SPAKbG

    ReplyDelete
  23. Came to know about PIT from my friend.Good work guys!

    ReplyDelete
  24. நம்ம கிட்ட படங்கள் கையிலும் கண்ணிலும் இல்லாததால் பழசை வச்சாவது ஆட்டையிலெ இறங்கிட்டோம்ல! பெங்களூரில் நடந்த புகைப்பட வகுப்புக்குச் சென்றபோது லிக்கிய பதிவர் ராம் அறையின் மின்விசிறி ஸ்விட்ச்! அடுத்த படம் எங்கோ ஒரு வீணாகிக் கொண்டிருக்கும் தண்ணீரை நிறுத்த முயற்சிக்கையில் வானத்தின் பிரதிபலிப்பை பார்த்து அசந்துபோய் க்ளிக்கியது! இரண்டு படங்களும் இயற்கை ஒளியில் எடுத்து ஃபயர்வொர்க்ஸ் மூலம் மெருகேற்றப்பட்டது. Camera:Olympus SP550

    ReplyDelete
  25. இளையகவி, picassaல உங்க படம் தெரியலியே?
    என் ப்ரச்சனையான்னு தெரியல. சரி பார்க்கவும்.

    செல்லா, ஸ்விட்ச் சூப்பரு, தண்ணி கொழாவும் அட்டகாசம். செம லைட்டிங். கவித்துவமா இருக்கு :)

    ReplyDelete
  26. நானும் உண்டு:)


    http://kadagam.blogspot.com/2008/01/2008-pit.html

    1.ஷு
    2.ஒற்றை சாவி

    ReplyDelete
  27. Surveys : i could see ilaiyakavi's photo. Telephone, CD and switch.

    ReplyDelete
  28. J,

    வருகைக்கு நன்றி. நீங்களும் பங்கேற்கலாமே?


    அன்புடன்
    --ஜீவா

    ReplyDelete
  29. http://mathibama.blogspot.com/2008/01/blog-post_09.html

    ReplyDelete
  30. ஒரு சிறு சந்தேகம், தெளிவுபடுத்தவும்.

    நாமே எடுத்த புகைப்படமாக இருக்கவேண்டுமா ?இல்லை ஏற்கனவே வேறொருவர் எடுத்த புகைப்படத்தை கம்போசிசன் , பிற்தயாரிப்பு செய்து போட்ட்டிக்கு அனுப்பலாமா?

    நவம்பர், டிசம்பர் மாத போட்டிகளில் நான் பார்த்த சில படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டது.. அதனால் ஒரு சந்தேகம்..

    நன்றி

    ReplyDelete
  31. Jeeves
    Yes, I am also planning to participate...

    ReplyDelete
  32. I have posted my pictures here:

    http://priasphotos.blogspot.com/2008/01/glitter.html

    Both the pictures are under one title.

    ReplyDelete
  33. //Jeeves said...

    Surveys : i could see ilaiyakavi's photo. Telephone, CD and switch//
    me too.. me too :)

    ReplyDelete
  34. // OSAI Chella said...

    ராம் அறையில்

    தண்ணீர் வீணாகிய அழகு!

    January 8, 2008 5:01 AM//

    இதல்லாம் அழுகுணி ஆட்டம்.. செல்லாது செல்லாது.. போட்டிய நடத்தறவங்களே இதுல கலந்துக்க கூடாது. காந்தி பார்க் பக்கம் உண்ணாவிரதம் இருப்போம். :P

    ReplyDelete
  35. @முரளி
    புகைப்படம் எடுத்தவரால் படத்தை வலையேற்ற வசதி இல்லாத பட்சத்தில் ,எடுத்தவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் படத்தை இட்டு போட்டிக்கு அனுப்பலாம்.
    படத்தை தாங்கள் எடுக்கவில்லை என்பதையும் வெறும் பிற்தயாரிப்பு மட்டுமே தாங்கள் செய்ததாகவும் தெளிவாக குறிப்பிடலாம்.

    ReplyDelete
  36. sanjai:

    //இதல்லாம் அழுகுணி ஆட்டம்.. செல்லாது செல்லாது.. போட்டிய நடத்தறவங்களே இதுல கலந்துக்க கூடாது. காந்தி பார்க் பக்கம் உண்ணாவிரதம் இருப்போம். :P//


    அட குழு அங்கத்தினர்களின் புகைப்படம் கணக்கில் எடுத்துக்க மாட்டோம். அது சும்மா லுல்லுவாங்காட்டிக்கு மட்டுமே.

    ReplyDelete
  37. Ellorukum Vanakkam,

    Idu ennudaya padaipugal..

    http://kmohankumar.blogspot.com/

    Puthandu Vazhthukal
    Mohan

    ReplyDelete
  38. Hi,

    Find my photographs here

    http://kmohankumar.blogspot.com/

    Mohan

    ReplyDelete
  39. போட்டிக்கு

    http://oppareegal.blogspot.com/2008/01/blog-post.html

    ReplyDelete
  40. நம்மளையும் சேர்த்துக்கோங்க..
    http://k4karthik.blogspot.com/2008/01/pit-08.html

    ReplyDelete
  41. இந்த மாசப் போட்டிக்கு சரியான நேரத்துக்கு வந்துட்டோம். நாங்க எடுத்த படத்தை தேர்ந்தெடுக்கவே இம்மாம் நேரமாகுதே... நீங்களெல்லாம் யாரு யாரு... தெய்வமப்பா.... என்சாயீஈஈ

    http://kaattaaru.blogspot.com/2008/01/blog-post_10.html

    ReplyDelete
  42. எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போன கதை போல் தான் இதுவும்!!!

    http://kusumbuonly.blogspot.com/2008/01/blog-post_10.html

    ReplyDelete
  43. போட்டிக்கு என்னுடைய இரு படங்கள்.

    http://kaipullai.blogspot.com/2008/01/2008-pit.html

    ReplyDelete
  44. இதில் முதல் இரண்டு போட்டிக்கான எனது படங்கள்...
    http://vadakkupatturamasamy.blogspot.com/2008/01/pit-2008.html

    ReplyDelete
  45. Here are my entries at

    http://lazuly.blogspot.com/2008/01/pit-jan-entries.html

    PS: No post processing; Mobile Camera (2MP);

    ReplyDelete
  46. போட்டிக்கான என் படங்கள்...

    http://malargall.blogspot.com/2008/01/pit.html

    ReplyDelete
  47. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    http://msmrishan.blogspot.com/2008/01/some-photos.html

    முதல் இரண்டு புகைப்படங்களும் போட்டிக்கான எனது சமர்ப்பணங்கள்..!

    ReplyDelete
  48. ஜனவரி மாத போட்டிக்கான என்னோட படங்கள். யாரோ என்ன திட்டுறது மாதிரி தெரியுது. அது எல்லாம் எங்களுக்கு சர்வசாதரணம்.

    http://ramsmcaodc.blogspot.com/

    ReplyDelete
  49. இங்க ஒன்னு

    http://bp0.blogger.com/_mPna_A4lk6U/R4mm5TZA81I/AAAAAAAAALw/6hjuUOSaa5Y/s1600-h/Kodumai019.jpg


    இங்கையும் ஒன்னு :)


    http://bp2.blogger.com/_mPna_A4lk6U/R4mm5zZA83I/AAAAAAAAAMA/ImsxhXj6Xho/s1600-h/Kodumai025.jpg


    இங்க மத்த படங்கள்..

    http://anony-anony.blogspot.com/2008/01/blog-post.html

    ReplyDelete
  50. இம்சை said...
    ம்ம்ம்ம், இந்த மாசம் கொஞ்சம் யோசிச்சி பதிவு போடரேன்...இப்போதைக்கு பிரசண்ட் சார்...

    இது நான் போட்ட மொத பின்னூட்டம், ரொம்ப யோசிச்சி யொசிச்சி கடைசி தேதி நெருங்கிடுச்சி...இனியும் யோசிச்சா நாம அவுட் அதான் கிடைச்ச படத்த போடரேன், போட்டில கலந்துகரதே எனக்கு எல்லாம் பெருமைதான்...

    http://iimsai.blogspot.com/2008/01/72-mp-30-gb.html

    ReplyDelete
  51. பொங்கல் வாழ்த்துக்களுடன் நானும் போட்டோ பந்திக்குள் வந்து சேர்ந்து விட்டேன்.என்னுடைய பதிவின் இணைப்பு இங்கே.நன்றி.வணக்கம்.

    http://parvaiyil.blogspot.com/2008/01/blog-post.html

    ReplyDelete
  52. http://nandhu1.blogspot.com/2008/01/jan-pit.html

    நானும் வந்துட்டேன்,

    ReplyDelete
  53. ஒரு குடும்பத்துல ரெண்டு பேர் போட்டிக்கு அலவ்டா? ஓக்கேன்னா இந்த குட்டீப்பாப்பாவின் பேனாவையும் நோட்டையும் போட்டிக்கு எடுத்துகோங்க
    http://angelnila.blogspot.com/2008/01/blog-post.html
    இதில் முதல் இரண்டு படங்கள்

    ஒருத்தர்தான்னா போனாபோவுது அப்பாவ மட்டும் சேத்துக்கோங்க

    ReplyDelete
  54. @நிலா
    ஒரு பதிவர் ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும்.
    nandhu1.blogspot.com என்ற வலைப்பூவில் உள்ள படங்கல் மட்டுமே போட்டியில் ஏற்றுக்கொள்ளப்படும்!
    நன்றி!

    ReplyDelete
  55. Vanakkam,

    Anaivarukkum Pongal Nal Vazhthukkal.
    Itho yennudaiya Photokkal intha vilayatukku.
    http://kuttibalu.blogspot.com/2008....

    First time here for this blog, thanks to SanJai for pointing here.

    ReplyDelete
  56. போட்டி சுவாரஸ்யமா போகுது. சில நண்பர்கள் கொடுத்துருக்கற சுட்டில போய் பார்த்தா பதிவுல பல படங்களைப் போட்டுட்டு 'எதை இறுதியா போட்டிக்கு அனுப்பலாம்னு சொல்லுங்க'ன்னு Open ended -ஆ விட்ருக்காங்க. அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். எந்தப் படங்கள் என்று முடிவு செய்துவிட்டு இங்கே சுட்டியைக் கொடுத்தால் We can avoid duplication/double efforts. அப்படி குறிப்பாக சொல்லாமல் பதிவுக்கான சுட்டியை இங்கே இட்டிருந்தீர்களென்றால், போட்டி விதிமுறைகளின்படி முதல் இரண்டு படங்கள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படும். பங்கெடுப்பாளர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    நன்றி.

    ReplyDelete
  57. போட்டி படங்கள் அத்தனையும் ஓர் பார்வையிட்டு விட்டு அனைத்து போட்டி படங்களும் அசத்துவதால் தனித்தனியாக பின்னூட்டமிட தாவு வாங்குவதால் இங்கே பின்னூட்டமிடுகிறேன்.தமிழ்நாட்டுல சினிமா தலை தூக்குற காரணம் இப்பத்தான் புரியுது.

    ReplyDelete
  58. சிரமத்திற்க்கு மன்னிக்கவும். எந்தெந்த படங்கள் என்று சுட்டி கொடுக்கமல் விட்டுவிட்டேன்.

    நீங்கள் எடுத்துகொண்ட படங்களில் இரண்டாம் படம் மட்டும் மாறி உள்ளது

    சுட்டிகள் கீழே

    1.http://bp0.blogger.com/_obF_L5nxwEk/R4muX_4KmFI/AAAAAAAAAD4/fHdWEbmKAB8/s1600-h/S6300975.JPG

    2. http://bp0.blogger.com/_obF_L5nxwEk/R4ms7_4KmEI/AAAAAAAAADw/DSgHUexlzCI/s1600-h/S6301044.JPG

    நன்றி

    ReplyDelete
  59. ஜனவரி மாத போட்டிக்காக என்னோட படங்கள்

    http://picasaweb.google.com/shivatkp/xmNSSG

    அல்லது
    http://vaasiyin-nizhal.blogspot.com/2008/01/picture-for-pit-december.html

    வாசி.

    ReplyDelete
  60. என்னுடைய பங்கு

    http://www.flickr.com/photos/lakshmanaraja/2092399319/

    http://www.flickr.com/photos/lakshmanaraja/1458472006

    ReplyDelete
  61. http://www.flickr.com/photos/22837120@N06/2194389862/

    http://www.flickr.com/photos/22837120@N06/2193606307/in/photostream/

    ReplyDelete
  62. நானும் கலந்துக்கலாம்னு நினைக்கிறேன்.
    என்னுடைய படங்களையும் எடுத்துக்கோங்க!!

    செயின்
    எழுதுகோல்

    :)
    நன்றி

    ReplyDelete
  63. போட்டிக்கு எனது படங்கள்:

    http://lodukku.blogspot.com/2008/01/pit.html

    ReplyDelete
  64. Sorry,
    The link ID got some how changed in PICASA
    FOLLOWING IS THE LINK FOR PICASA
    http://picasaweb.google.com/shivatkp/wJNGzC

    Regret the inconvenience caused

    VAASI

    ReplyDelete
  65. போட்டிக்கான படங்கள்:

    http://www.flickr.com/photos/22859017@N06/2194070625/

    http://www.flickr.com/photos/22859017@N06/2194857156/

    ReplyDelete
  66. அண்ணன்களா,
    கடைசியா வரேன், என்னையும் ஆட்டத்துல சேத்துக்குங்க.
    படம் இங்கே இருக்கு

    இதுவரை வந்த படமெல்லாம் பாத்தேன். அட்டகாசம் வேறென்ன சொல்ல.

    ReplyDelete
  67. எனது படங்கள் இந்தப் பதிவில்.

    முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு.

    1) http://picasaweb.google.com/elavasam/Flowers/photo#5155422478912614178

    2) http://picasaweb.google.com/elavasam/Flowers/photo#5155187488366948050

    நன்றி!

    ReplyDelete
  68. வழக்கம் போல சோம்பேறித்தனத்தால கொஞ்சம் நேரமாகிடுச்சு... Footboard'லயாவது ஏத்திட்டு போங்க அண்ணாச்சி...

    Fotos இங்கே...
    http://luvathi.blogspot.com/2008/01/for-pit-jan-2008-contest.html

    ReplyDelete
  69. PIT - போட்டிக்கு என்னுடைய படங்கள்.

    http://saralil.blogspot.com/2008/01/pit.html

    ReplyDelete
  70. நந்து f/o நிலா

    இப்போது சுட்டிகள் சரியாக இருக்கின்றனவா என்ற பாருங்கள்

    ஆனந்த்

    ஒரு படத்துக்கு எழுதுகோல்-னு அழகா தமிழ்ல பெயர் வச்சிட்டு இன்னொண்ணுக்கு மட்டும் ஏன் செயின்? :-) 'எதைச் செய்யின் இவை மாறும்'-னு நெனச்சுக்கிட்டேன்! :-)

    வாசி

    சுட்டி இப்போது சரியா இருக்குன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  71. என்னுடைய முதல் படம் தலைப்புக்கு பொருத்தமானதா என்ற சந்தேகம் இருப்பதால் அதனை போட்டிக்கு அனுப்பாமல் பின்னூட்டங்களும் பெரும்பாலானவர்கள் நன்றாக இருக்கிறது எனச் சொன்ன குறுந்தகடுகளின் படத்தை போட்டிக்கு அனுப்புகிறேன்.

    1) http://picasaweb.google.com/elavasam/Flowers/photo#5155187492661915362

    2) http://picasaweb.google.com/elavasam/Flowers/photo#5155187488366948050

    இவையே நான் தரும் தேர்வுகள்.

    ReplyDelete
  72. please add http://click1click.blogspot.com/2008/01/blog-post.html
    posted yesterday . sorry for delay.

    ReplyDelete
  73. இந்த மாதப் போட்டிக்கான விண்ணப்பங்கள் மூடப்படுகின்றன.

    அடுத்த அறிவிப்பு கூடிய விரைவில்.

    பங்களித்த அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff