Sunday, January 27, 2008

ஜனவரி மாதப் போட்டிக்கான படங்களைப் பார்த்ததும் மனதில் தோன்றிய சில கருத்துக்கள்.
மனதில் தோன்றியவை அப்படியே தட்டச்சி உள்ளேன், ரொம்ப ஆராயல. அடிக்க வராதீங்க. ;)

இந்த போட்டிகளின் வெற்றியே, நாம் பலரிடம் பெரும் feedback தான்.
நீங்களும் படங்களுக்கான நிறை குறைகளை எடுத்துச் சொல்ல தயங்காதீர்கள்.

எல்லோரும் சேர்ந்து கற்போம், கலக்குவோம்! :)

இனி என் ஒரு வரி விமர்சனங்களைப் பார்ப்போமா?

1) SALAI JAYARAMAN - படம்1, படம்2
கருத்து: சும்மா பாயிண்ட் & ஷூட். சிறப்பாக வர உழைக்கவில்லை :)

2) அப்பாஸ் Abbas - படம்1, படம்2
கருத்து: அற்புதமான படங்கள். ஆனா, கவித்துவம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு. ஜனங்களோடு கலவாத, ஒரு ஆர்ட்-வர்க் மாதிரி இருந்தது. குறை ஒன்றுமில்லை. தண்ணி பாட்டிலில் ஒரு சொட்டு தண்ணீ கீழே வழுக்கி வந்திருந்தத, பன்ச் கூடியிருக்கும்.

3) Shiv - படம்1, படம்2
கருத்து: ஏற்கனவே சொன்ன மாதிரி, க்ராப் கொஞ்சம் செஞ்சு, வெளிச்சம் குறைத்தால் சரிவந்திருக்கும்.

4) Nathas - படம்1, படம்2
கருத்து: அருமை. ஷார்ப்னெஸ் கொஞ்சம் கம்மி (பென்ஸிலுக்கு இல்ல, படத்துக்கு:). ஆனா, அதுவும் ஒரு அழகா அமஞ்சு போச்சு படத்துக்கு. எடுக்கப்பட்ட ஏங்கிள் சூப்பர்.

5) Sanjai - படம்1, படம்2
கருத்து: பேப்பர் படத்தில், அந்த கப்பு இடிச்சுது. டைம்-ஸ்டாம்பும் தவிர்க்கணும். வாட்சில், ஒளி கூடுதலாய், அந்த மின்மினுப்பு கூடிப்போய் blown-highlights ஆனது. வாட்சின் ஏங்கிளும் எடுபடலை.

6) இளைய கவி - படம்1, படம்2
கருத்து: ரொம்ப மங்கலாய் போய் விட்டது படங்கள். வண்னங்கள் உதவும். வெளிச்சமும் உதவும் :)

7) ஓசை செல்லா - படம்1, படம்2
கருத்து: அருமை. டாப்பில் தெரியும் வானமும் மேகமும் வெகுவாய் ரசித்தேன். கட்டம் கட்டிய விதம் அருமை.

8) ஆயில்யன் - படம்1, படம்2
கருத்து: ஷூ. பளிச்! சேப்பியா மாத்திட்டதால(?) ஒரு செயற்கைத் தனம். சாவியும் நிக்க வச்சதால, செயற்கைத் தனம்.

9) சூரியாள் - படம்1, படம்2
கருத்து: வாச்சுக்கு பேக்ரவுண்ட் எடுபடலை. ஸ்விட்சில் நிறைய வெற்றிடங்கள்.

10) priya - படம்1, படம்2
கருத்து: விளக்கு சப்ஜெக்ட் அழகு. சிறந்த புகைப்படமா தேர்ந்தெடுக்க, சப்ஜெக்ட் அழகா இருந்தா மட்டும் பத்தாதே, புகைப்படக்காரரின் கைவரிசையும் லேசா எட்டிப் பாக்கணும் :) பைசாக்களில் வெற்றிடங்கள் அதிகம். அஞ்சு நாணயங்களை வேற எப்படி எடுக்கரதுன்னு சொல்லத் தெரியல. யாராவது எடுத்து வித்யாசம் காட்டுங்கப்பா :)

11) Mohan Kumar - படம்1, படம்2
கருத்து: மெழுகுவத்தி பின்கள் நல்ல முயற்சி. மெருகேற்றினால் நன்றாய் வரும். வளையலுக்குள் மாத்திரைகளா? யைக்ஸ்! a big turn-off for me, personally :)

12) ஒப்பாரி - படம்1, படம்2
கருத்து: என்னத்த சொல்ல? காண்டாவுதுன்னுவாங்களே, அப்படியிருக்கு. கலக்கியிருக்கீங்க கலக்கி. :) PHILIPSக்கு விளம்பரம் தரும் படங்களுக்கெல்லாம் இனி பரிசு கொடுக்கமாட்டோம் ;) விஷயம் தெரிஞ்சவங்க யாராவது குறை ஏதாச்சும் சொல்லுங்கப்பா :)

13) கா என்றால் கார்த்திக் (இது கொஞ்சம் ஓவருல்ல? :-)) - படம்1, படம்2
கருத்து: க்ளிப் அருமை. பின்னணி சரியில்லாமல் போய்விட்டது. வேறு கோணத்தில் DOF ப்ரயோகம் செய்து எடுத்துப் பாருங்கள். ஹெட்-ஃபோனில் ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டது.

14) காட்டாறு - படம்1, படம்2
கருத்து: தலாய் லாமா படம் அருமை. ஆனா, நடுவாய் வைத்து எடுக்காமல் ஒரு ஓரத்தில் தள்ளி எடுத்திருந்தால் நச்னு வந்திருக்கும். ப்ளூ க்ரிஸ்டல் அழகு. ஆனா, அது சப்ஜெக்ட்டினால் வந்த அழகு. வெறும் பாயிண்ட் & ஷூட்.

15) குசும்பன் - படம்1, படம்2
கருத்து: சிகரெட் உடலுக்குக் கேடு :) விளக்கும் அதன் ஃப்ரேமும் நல்லாயிருந்தது. ஏங்கிள் எடுப்பா இல்லியோ? நடூ-செண்டர்ல நின்னு, அன்னாந்து பாத்து எடுத்து பாத்தீங்களா?

16) கைப்புள்ள - படம்1, படம்2
கருத்து: 0 வாட்ஸ் பல்பு அழகு. ஆனா, பல்பின் நடுவில் ஒளி gradualஆ குறைஞ்சிருந்தா நல்லாயிருந்திருக்கும். blown-heighlights(நன்றி an&). க்ரைண்டர பத்தி ஏற்கனவே அரச்சிட்டோம் அதனால விட்டுடறேன்.

17) சத்யா - படம்1, படம்2
கருத்து: பின் பத்தி ஏற்கனவே குத்திட்டோம். பட்ஸ் டக்னு பாத்தா பூரியல. 90டிக்ரீ இடதா திருப்பி யிருந்தா படம் நல்லா வந்திருக்கும். பின்னணி கலர் அழகு.

18) வீராசுந்தர் - படம்1, படம்2
கருத்து: வத்திக்குச்சி நல்லாவேயிருந்தது. குறிப்பப அந்த மூணு குச்சி இருந்தது. முடிஞ்சா, எல்லா குச்சியையும் பத்தவச்சு ஒண்ண க்ளிக்கி பாருங்க :) வித்யாசம் கூடாலாம். ( டேமேஜுக்கு நான் பொறுப்பில்ல).

19) ஜெ ('வாழ்ஹ' :-)) - படம்1, படம்2
கருத்து: வாட்ச் பின்னணி சரியில்ல. சீப்பு படம் டக்னு புரியல்ல. நிக்க வெக்காம படுக்க வச்சு எடுத்திருக்கலாம்.

20) இ.கா.வள்ளி - படம்1, படம்2
கருத்து: விளக்கு நல்ல முயற்சி :) அடுப்பு எடுபடல. அடுப்பு மேல ஒரு ஸ்டீல் குக்கர் வச்சு, ஸ்டேல் பாத்திரட்த்தில் அடுப்பின் ஜ்வாலை தெரியர மாதிரி எடுத்தாட்தான் உண்டு. இன்னொரு வழி, சுத்தியும் இருட்டாக்கி, வெறும் நெருப்பு மட்டும் தெரியர மாதிரி எடுக்கரது.

21) எம். ரிஷான் ஷெரீப் - படம்1, படம்2
கருத்து: இராந்தல் ஏற்கனவே ஏத்தியாச்சு. கால்குலேட்டர் நல்லாதான் இருந்தது. டக்னு தோனியது, அந்த நோட்டுல, '99322234243 X 9766234323 = ' ன்னு எழுதி வச்சு அது தெரியர மாதிரி எடுத்திருந்தா, படத்துக்கு உயிர் வந்திருக்குமோ? ;)

22) நைட் ஷியாமள... ஸாரி.. நைட் ராம்! - படம்1, படம்2
கருத்து: வெளக்கு நல்ல முயற்சி. பொம்மை கார் எடுப்பது எப்படின்னு நம்ம An& பதிவ பாருங்க.

23) மின்னுது மின்னல் - படம்1, படம்2
கருத்து: மின்னல் மாதிரி இல்ல முதல் படம். டல்லாயிருந்தது. குப்பைத் தொட்டி கச கச மொஸைக் தரை பின்னணியில் எடுபடலை.

24) இம்சை - படம்1, படம்2
கருத்து: good knight நல்ல முயற்சி. இருட்ல எடுத்து பாத்தீங்களா? ipod புரியல்ல.

25) நட்டு - படம்1, படம்2
கருத்து: நல்ல வாட்சு. எவ்ளோ? இன்னும் க்ளோஸப்ல எடுத்திருந்தா நச் கூடியிருக்கும். subtle லைட்டிங் அவசியம் வாட்சுக்கு.

26) நந்து f/0 நிலா - படம்1, படம்2
கருத்து: முதல் பேட்டரி அழகு. பின்னணியில் ஒரு பெரிய 2-in-1ஓ, ட்ரான்ன்ஸிஸ்டரோ மங்கலா தெரிஞ்சிருஞ்சா உயிர் கூடியிருக்கும். ரெண்டாவதும் ஓ.கே. ஆனா, why தீக்குச்சி?

27) ILA(a)இளா - படம்1, படம்2
கருத்து: வெளக்கு எடுத்த விதம் நல்லாயிருக்கு. ஆனா எடுத்த வெளக்கு சரியில்லை (குசும்பன் கிட்ட கடன் கேட்டுப் பாருங்க). ஜன்னல் படம், ரொம்ப ஆர்ட்டிஸ்டிக்கா போயிடுச்சு. சப்ஜெக்ட் சரிவர தெரியல.

28) குட்டிபாலு - படம்1, படம்2
கருத்து: கலர் டப்பா, ஸிம்ப்ளி சூப்பர்ப். ஒரு குறையும் தெரியல எனக்கு. வளையல் எடுபடல. கண்ணாடி டேபிள் மேலயோ, கறுப்பு துணியிலோ வெச்சு எடுத்திருக்கலாம்.

29) வாசி - படம்1, படம்2
கருத்து: lifebuoy glow அழகு. பாத்ரூம் கெட்டப்புல எடுத்திருந்தா சிறப்பாயிருந்திருக்கும். தண்ணி தெளிச்சிருக்கலாம். வாட்ச் எடுக்கும்போது 10.10 நேரம் வைக்க வேணாமா? போட்டோ குத்தம் ஆயிடப் போவுது. :)

30) லக்ஷ்மணராஜா - படம்1, படம்2
கருத்து: பூட்டு அழகு. அந்த தண்ணிய வெரலால தொடணும் போல இருக்கு :) க்ளிப் படமும் மேகமும் நல்லாவே இருந்தது. ரெண்டுமூணு சட்டை இருந்திருந்தா நல்லாயிருக்கும். ஆனா மழை வரும்போது துணியிருந்தத, பொறுள் குற்றமாயிருக்குமோ?

31) M S K - படம்1, படம்2
கருத்து: விளக்கு அழகா வந்திருக்க வேண்டியது, பின்னணி சரியில்லாததால் எடுபடலை. உங்க ஃப்ளிக்கர் பக்கத்தில் பிள்ளையாரும், கலர் விளக்கும் அருமை ;)

32) ஆனந்த் - படம்1, படம்2
கருத்து: படங்களில் வறட்சி அதிகம். அன்றாடம் உபயோகிக்கும் பொருள் செயினா? வசூல்ராஜாவா நீங்க? :)

33) லொடுக்கு - படம்1, படம்2
கருத்து: சேர் அழகு. ஆனா, நிழலும், சேரின் வளைவை காமிக்கர மாதிரி இருந்திருக்கணும். டேபில் லேம்ப்பில் கிராப்பிங் ப்ரச்சனை.

34) ஜெஸிலா - படம்1, படம்2
கருத்து: சீப்பு உவ்வே ;) ஷவர் அழகு. ஆனா, மஞ்ச ஹேலோஜன் வெளக்கு போட்டு எடுத்திருந்தா அழகு கூடியிருக்கும். பின்னணி கறுப்பாயிருந்திருக்கலாம்.

35) Sathia - படம்1, படம்2
கருத்து: மத்து இந்த பக்கமா திருப்பி வச்சு DOF ப்ரயோகம் பண்ணியிருந்தா ஜூப்பரா வந்திருக்கும். சேர் வரிசைப் படுத்தியதில் சிறு பிழை இருக்கு :)

36) இலவசக்கொத்தனார் - படம்1, படம்2
கருத்து: blinds ஓ.கே. நாலாவதா ஒரு சி.டிய பின்னாடி வச்சிருந்தால் நெறைய சி.டிக்கள் இருக்கரதா ஒரு infinity ப்ரக்ஞை வந்திருக்கும். :)

37) ஆதி - படம்1, படம்2
கருத்து: நகைக் கடைல வேல செய்றீங்களா? ஒரு வளையல்ல பச்ச நூல் டாக் தெரியுது? :) நகைகள் கண்ணாடி டேபிளில் வைத்து, ஹால்லோஜன் போட்டு எடுத்தா நல்லா வந்திருக்கு எனக்கு. கேனான் ஷாட் சூப்பர். நன்றி அதுக்கு ;)

38) J K - படம்1, படம்2
கருத்து: fan கவித்துவம். ஜூம் பண்ணியிருந்தா இந்த கவித்துவம் போயிருக்கும். அருமை. cell phone எடுபடல.

39) முத்துலெட்சுமி - படம்1, படம்2
கருத்து: cellphone ஏங்கிள் மாத்தினா அழகு கூடும். ஓப்பாரி படத்தை பார்த்து அத மாதிரி ட்ரை பண்ணலாம். வெளக்கு அழகு. க்ராப் ப்ரச்சனை உள்ளது. பின்னணியும், வெளக்கின் கலரும் மேட்ச்சிங்கா இருக்கு :)

40) Truth - படம்1, படம்2
கருத்து: ரெண்டு படமும் அட போட வைக்கப் பார்த்தது. ஆனா, ஒரு ஷார்ப்னெஸ் இல்லாததால் சப்னு போயிடுச்சு.

பங்கு பெற்று சிறப்பித்த அனைவருக்கும் நன்றீஸ்!

க்ளிக்குவோம், கற்போம், கலக்குவோம்!

நீங்களும் ஒரு வரி எல்லா படத்டுக்கும் ஒரு வரி விமர்சனம் சொல்லிட்டுப் போங்க பாப்பம் ( ஸ்ஸ்ஸ்ஸ், என்னது தாவு தீந்திருமா? பரவால்ல எழுதுங்க :) )

:)

Friday, January 25, 2008

வணக்கம் நண்பர்களே. அது சரி. பட்டி மன்றம் மாதிரி 'அவிய்ங்களும் சரிதேன், இவிய்ங்களும் சரிதேன். ரெண்டுமே ரொம்ப முக்கியம். ஆகவே ரெண்டு அணிகளுமே செயிச்ச அணிக தான்'-ன்னு சொல்லிட்டுப் போவவா முடியுது? எல்லாமே ரத்தினங்களா இருக்க முக்காமுக்கா மூணை மட்டும் சொல்லுங்கன்னா எப்படிப்பு?

இப்படி ஒரு வேலையைக் கொடுத்து பெண்டைக் கழட்டின PiT பெருசுகளுக்குக் கண்டனங்கள்! :-) சரிசரி!

போட்டிக்கான இந்த மாதப் புகைப்படங்களின் அணிவகுப்பு பிரமிப்பைத் தந்தது.

அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்னு தலைப்பைக் கொடுத்ததும் 'கோவில் மணிலருந்து குப்பைத் தொட்டி வரைக்கும்' (ஒரு எஜகை மொஜகைக்காகச் சொன்னது - குண்டக்க மண்டக்க ஆராய்ச்சி செஞ்சி குத்தம் கண்டுபிடிச்சிராதீங்கப்பா!) படங்களை எடுத்துத் தள்ளி அசத்திப் போட்டீங்க நீங்க எல்லாரும். சதி லீலாவதில வர்ற வசனம் மாதிரி 'போன சென்மத்துல பாம்பாப் பொறந்திருப்பான் போல. இப்ப்ப்ப்படிப் படம் எடுக்கறான்!'.

அன்னாடம் உபயோகிக்கற பொருட்களை படம் புடிக்கறத கஸ்டமான
வேலைதான். நம்மளச் சுத்தி பல பொருட்கள் இருந்தாலும், அதுங்க மேல சரியா ஒளி அமைப்பு இருக்காது. சில சமயம் நமக்கு வேண்டிய பின்னணில நமக்கு பிடித்தமான கோணத்துல பொருட்கள் இருக்காது.

ஒரு சாதாரண பொருள் ஆனாலும், அதை சரியான கோணத்தில் அடுக்கி, தேவையான பின்னணியில் அமைக்கத் தெரியணும். ஒரு படத்துல தேவைக்கதிகமா எந்த விஷயமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ('இதனாலதான் நான் செல்ஃப் போட்டோவெல்லாம் எடுக்கறதேயில்லை'- சுந்தர்).
படம் புடிக்கறப்ப தெரியாத்தனமா அப்படி எதுனாச்சும் வந்திடுச்சுன்னா, பிற்தயாரிப்பில வெட்டி விட்றணும்.
பிட்ஸா கார்னர் டம்ளர் படத்துல, கீழே இடது மூலையில் தெரியும் எழுத்துக்களும், மேலே இடது மூலையில் தெரியும் கத்தி ஃபோர்க்கும் ஒரு நெருடல். பின்னாடி இருந்து ஒளி விழற மாதிரி எடுத்துருக்கறது நல்லா இருக்கு. ஆனா பின்னணி கொஞ்சம் இருட்டா வச்சிருந்தா டம்ளர் இன்னும் அழகா இருந்திருக்கும்.

எடுக்கும் படத்தில் ஒரு சுவாரஸ்யம் கொண்டு வர வேண்டும். சரியான வண்ணங்களின் தேர்வால், இந்த ஈர்ப்பு வரலாம், படத்தில் மையப்படுத்தப்படும் பொருளால் இந்த ஈர்ப்பு வரலாம். சாதாரண பொருள்களை எடுக்கும்போது, நல்ல வித்யாசமான கோணமும், வேறு ஏதாவது ஒரு டெக்னிக்கல் அம்சமும் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
DOF போன்ற டெக்னிக்கல் அம்சம் நன்றாக கைக்கொடுக்கும். இல்லையேல், பிற்தயாரிப்பில் செய்யப்படும் கிராப் செய்தல், வளைத்தல், நெளித்தல், போன்ற ஏதோ ஒன்று கைகொடுக்கும். பல விஷயங்களை முயற்சி செய்து, உங்கள் மனதுக்குப் பிடித்ததை அரங்கேற்றலாம். வாசியின் lifebuoy நன்றாக கட்டப்பட்டிருந்தாலும், பின்னாலிருக்கும் போர்வை எடுபடாமல் போனதுபோல் தோன்றியது. பிட்ஸா டம்ளருக்குச் சொன்னது மாதிரி இதுக்கும் பின்னணி பிரச்சினை. மத்தபடி Glow effect அருமையாக அமைஞ்சிருக்கு இதில்.

சத்தியாவின் புஷ்-பின்னில் பின்னணியும் பின்களின் வண்ணமும் கொஞ்சம் வறட்சியாக தோன்றியது. வலது மூலையில் கிராப் சரிவர செய்யவில்லை. மூன்று 'பின்'கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டும், மற்ற இரண்டும் வெளியில் பார்ப்பதும் அழகை குறைத்ததோ? படத்தை விட்டு வெளியில் கை காட்டுவது போல் இருந்தால், அந்த படத்தின், 'பன்ச்' குறைந்து விடுகிறது.

கைப்புள்ளையின் கலையார்வம் அருமை :) க்ரைண்டரை எடுத்த கோணமும் ஒளியமைப்பும் சரியில்லை என்று தோன்றியது. க்ளிக்கிய முறை சரி. க்ரண்டரை வேறு எப்படிதான் எடுப்பது? அருமையான வளைவுகள் (சத்தியமா கிரண்டரைத்தான் சொல்றோம்யா).

நந்துவின் பாட்டரியும், ஒப்பாரியின் mp3யும் அருமை.

12 படங்களில் எங்களை அதிகமாக ஈர்த்த மூன்று படங்களைக் கீழே பட்டியலிட்டிருக்கிறோம். நாங்கள் எப்பொழுதும் சொல்லும், 'ஈர்ப்பு' இந்தப் படங்களில் அதிகம்.

ஜனவரி மாத போட்டியில் வெற்றிபெற்றவர்கள்.


முதலிடம்: நாதாஸ்/இளவட்டத்தின் பென்சிலும், அதைச் சீவியவனும்! அருமையான கோணம், ஒளியமைப்பு, தெளிவான காட்சி! நம் வீட்டின் வாலுகள் அப்பத்தைப் பங்கிட்ட குர... சே.. வேணாம் - பென்சிலைத் திருகித்திருகியே காலி செய்வதை தினம் தினம் பார்க்கிறோமே! மரத்தூள் தொக்கி நிற்கும் Sharpener, கூராக்கப்பட்ட பென்சில் முனை என்று அழகாக படம் பிடித்திருக்கிறார் இவர். முனையுடைந்த பென்சிலாக இருந்தால் எப்படியிருந்திருக்கும் என்றும் கற்பனை ஓடியது :-). முதலிடம் பெற்ற நாதாஸ்/இளவட்டத்திற்குப் பாராட்டுகள்.


இரண்டாமிடம்: லக்ஷ்மணராஜாவின் பூட்டு - கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலருன்னு பாடலாம். தெருவில் நடக்கையில் வீட்டின் வாசல் கதவின் பின் நிற்கும் எத்தனையோ முகங்களைப் பார்த்திருப்போம். மழை நாட்களில் நாமும் அப்படி இரும்புக் கதவின் கம்பிச் சட்டங்களைப் பற்றி நின்றதுண்டு. மழை விட்ட தருணத்தில் திறந்திருக்கும் கதவின் பூட்டைத் தொலைக்காதிருக்க இப்படி மாட்டிப் பூட்டுப் போடுவது நமது வழக்கம். அந்தக் காட்சியைத் துல்லியமாக எடுத்திருக்கிறார் லஷ்மணராஜா. இரண்டாமிடம் பெற்ற அவருக்குப் பாராட்டுகள்.


மூன்றாமிடம்: ஒப்பாரி - என்ன அருமையான சதுரங்கப் படம் இது! ராஜாவையும் இடதோரத்தில் ஒரேயொரு வீரனை மட்டும் அழகாக ஆழம் கொடுத்துப் படம் எடுத்து நல்ல ஒளியமைப்பில் ஓவியம் போல படமெடுத்திருக்கிறார் ஒப்பாரி. மூன்றாமிடம் பெற்ற அவருக்குப் பாராட்டு தெரிவிக்கும் அதே வேளையில் வேண்டுமென்றே ராணியை Focus செய்யாத அவருடைய ஆணாதிக்கத்தைக் கண்டிக்கக் கடமைப்பட்டுள்ளோம்! :-)


இது தவிர சிறப்பு கவனம் பெற்ற மூன்று படங்களைக் கீழே கொடுத்திருக்கிறோம்.


1. k4karthik-இன் க்ளிப்ஸ். முன்னேற்பாடுகள் செய்யப்படாத இயல்பான படம். பின்னணியை சற்று இருட்டாக்கி DoF கூட்டியிருந்தால் நன்றாக வந்திருக்கும்.








2. எம். ரிஷான் ஷெரீஃப் - வண்ணக்கலவையில் அழகான படம். அந்த இடத்தில் நிற்பது போன்ற உணர்வைத் தந்த படம். Silhouette படங்களைப்பற்றி வரப்போகும் பதிவுக்கான :-) அழகான உதாரணப்படம் இவருடையது. ஹரிக்கேன் விளக்கின் கீழே விழுந்திருக்கும் தேதிப் பதிவைத் தவிர்த்திருக்கலாம்.





3. குட்டிபாலுவின் பெட்டி - அழகான வண்ணங்களில், நல்ல ஒளியில், நல்ல பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் படம். Crop-யையும் நன்றாகச் செய்திருக்கிறார்.





சிறப்புக் கவனம் பெற்ற போட்டியாளர்களுக்குப் பாராட்டுகள்.



வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் வந்தனங்களும்!


பின்னிட்டீங்க!


இதனால் மற்ற போட்டியாளர்களின் படங்கள் சரியில்லை என்று அர்த்தம் இல்லை. அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசும்போது 'இருக்கற திருடங்கள்ல பரவாயில்லாத திருடனைத் தேர்ந்தெடுக்கும்' நிர்ப்பந்தம் போல (நேரமே சரியில்லை. வில்லங்கமான உதாரணங்களா நினைவுக்கு வந்து தொலைக்குது), இருக்கற எல்லா அருமையான, நல்ல, அழகான படங்கள்ல மூணை மட்டும் தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தத்தைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம். உங்கள் படங்களையும் ஸைட் அடித்தோம் என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கிறோம். இன்னும் முயற்சித்து உங்கள் படங்களுக்கு மெருகூட்டுங்கள். வரும் போட்டிகளில் வென்றிட வாழ்த்துகள்!


தொடர்ந்து க்ளிக்குவோம், கற்போம், கலக்குவோம்!


நன்றி!


-சர்வேசன், வற்றாயிருப்பு சுந்தர்
இந்த லென்ஸ்கள் ஒவ்வொன்னும் இம்புட்டு விலையா இருக்கு!!
அப்படி என்னதான் பண்றாங்க அதுல அப்படின்னு யோசனை வந்திருக்கா உங்களுக்கு??

அப்போ இந்த நிகழ்படத்தை பாருங்கள்!!
என்னமா மெனக்கெடறாங்க!! இவ்வளவு நுணுக்கமான வேலை இருக்கறதுனால தான் அம்புட்டு விலை அகுது போல!!

Tuesday, January 22, 2008

ஜனவரி 2008ன் PIT புகைப்படப் போட்டிக்கான புகைப்படங்கள் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பெறப்பட்டு வந்தது.
போட்டிக்கான தலைப்பாக 'அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் ('everyday artifacts') என்று வைத்திருந்தோம்.

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யாரென்பது இம்மாதம் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்.

அதற்குமுன் ஒரு முன்னோட்டமாக, நடுவர்களாகிய எங்களின் (சர்வேசன், வற்றாயிருப்பு சுந்தர்) பார்வையில், வந்திருந்த 80 படங்களில், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த 12 படங்களை கீழே கட்டம் கட்டி கொடுத்துள்ளோம்.

இம்முறை கலந்து கொண்டவர்களின் திறன் வியப்பைத் தந்தது. சில படங்களைப் பார்க்கும்போது 'பேசாம அவங்கள PIT உறுப்பினர் ஆக்கி, போட்டியில் கலந்து கொள்ள முடியாத மாதிரி செஞ்சிட வேண்டியதுதான்' என்று வில்லத்தனமாக எண்ணம் எழும் அளவுக்கு, சிறப்பாக இருந்தது.

கலந்து கொண்ட அனைவரின் படங்களும் அருமையாகவே இருந்தது.
ஒரு படத்தைப் பார்க்கும்போது, மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஒரு ஈர்ப்பு அவசியம்.
அந்த ஈர்ப்பை பெற்ற படங்கள் இம்முறை பல.
மிக அதிகமாய் ஈர்ப்பை பெற்ற படங்களே கீழே டாப்-12ல் உள்ளன.

அருமையான படங்களை அனுப்பிய அனைத்துப் பதிவர்களுக்கும் நன்றி.
உங்கள் ஒவ்வொருவரின் படத்தின் நிறை குறைகளையும், முடிவு அறிவித்ததும், எடுத்துக் கூற முயற்சிக்கிறோம்.

இனி படங்கள பாப்பமா? (வரிசைப் படுத்தவில்லை)

இளவட்டம்


ஒப்பாரி



K4Karthik


சத்தியா


குட்டி பாலு


லக்ஷ்மணராஜா


எம்.ரிஷான் ஷெரீஃப்


வாசி


நந்து


Shiv


கைப்புள்ள


===== ------ ======= -------- ========
மேலே உள்ளவை டாப்-12 படங்கள், கீழே உள்ளது, டாப்-12ல் வரவில்லையென்றாலும், எங்கள் கவனத்தை ஈர்த்த படம். PITக்கு விளம்பரப் படம் மாதிரி இருக்கு. அருமை :)

ஆதியின்:


கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

:)

Wednesday, January 16, 2008

நண்பர்களே, ஜனவரி 2008ன் PIT புகைப்பட போட்டிக்கு படம் அனுப்பவேண்டிய காலகட்டம் இன்றோடு (ஜனவரி 15) முடிவடைந்தது.

படங்கள் அனுப்பிய 40 பதிவர்களுக்கும் நன்றி.

முடிவுகள், வழக்கம்போல் இம்மாதம் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்.

வந்திருக்கும் 80 படங்களில், சிறந்த பத்து படங்களை கட்டம் கட்டி, இந்த வாரக் கடைசியில் அளிக்கலாம் என்றிருக்கிறோம்.

படங்களை அனுப்பிய பதிவர்கள், கீழே உள்ள வரிசையில், தங்கள் படங்களின் படம்1 & படம்2 உரல்கள் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை பார்க்கவும்.

திருத்தங்கள் இருந்தால், பின்னூட்டுங்கள்.

எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

நன்றி!
-சர்வேசன் & வற்றாயிருப்பு சுந்தர்

போட்டியில் உள்ள படங்கள்:



1) SALAI JAYARAMAN - படம்1, படம்2
2) அப்பாஸ் Abbas - படம்1, படம்2
3) Shiv - படம்1, படம்2
4) படம்1, படம்2
5) Sanjai - படம்1, படம்2
6) இளைய கவி - படம்1, படம்2
7) ஓசை செல்லா - படம்1, படம்2
8) ஆயில்யன் - படம்1, படம்2
9) சூரியாள் - படம்1, படம்2
10) priya - படம்1, படம்2
11) Mohan Kumar - படம்1, படம்2
12) ஒப்பாரி - படம்1, படம்2
13) கா என்றால் கார்த்திக் (இது கொஞ்சம் ஓவருல்ல? :-)) - படம்1, படம்2
14) காட்டாறு - படம்1, படம்2
15) குசும்பன் - படம்1, படம்2
16) கைப்புள்ள - படம்1, படம்2
17) சத்யா - படம்1, படம்2
18) வீராசுந்தர் - படம்1, படம்2
19) ஜெ ('வாழ்ஹ' :-)) - படம்1, படம்2
20) இ.கா.வள்ளி - படம்1, படம்2
21) எம். ரிஷான் ஷெரீப் - படம்1, படம்2
22) நைட் ஷியாமள... ஸாரி.. நைட் ராம்! - படம்1, படம்2
23) மின்னுது மின்னல் - படம்1, படம்2
24) இம்சை - படம்1, படம்2
25) நட்டு - படம்1, படம்2
26) நந்து f/0 நிலா - படம்1, படம்2
27) ILA(a)இளா - படம்1, படம்2
28) குட்டிபாலு - படம்1, படம்2
29) வாசி - படம்1, படம்2
30) லக்ஷ்மணராஜா - படம்1, படம்2
31) M S K - படம்1, படம்2
32) ஆனந்த் - படம்1, படம்2
33) லொடுக்கு - படம்1, படம்2
34) ஜெஸிலா - படம்1, படம்2
35) Sathia - படம்1, படம்2
36) இலவசக்கொத்தனார் - படம்1, படம்2
37) ஆதி - படம்1, படம்2
38) J K - படம்1, படம்2
39) முத்துலெட்சுமி - படம்1, படம்2
40) Truth - படம்1, படம்2

நன்றி!

Friday, January 11, 2008

நான் ரொம்ப நாளா நெனைச்சிட்டு இருந்த எண்ணம் இது!!

நான் போர் அடிக்கற சமயங்களிலே (அதாவது ஒரு நாளிலே பாதிக்கும் மேற்பட்ட நேரம்) Flickr தளத்தின் explore பக்கத்துல வர படங்களை தான் பார்த்துட்டு இருப்பேன்.

நல்ல படங்களை எடுக்கனும்னா நிறைய நல்ல படங்களை பாக்கனும் என்பது என்னுடைய எண்ணம்.

நிறைய நல்ல படங்களை பார்க்கனும்,அது ஏன் நல்லா இருக்குன்னு புரிஞ்சுக்கனும்,நம்மளால ஏன் அந்த மாதிரி எடுக்க முடியலன்னு தெரிஞ்சுகிட்டு அதை சரி செய்ய பாக்கனும்,இதுதான் என்னுடைய சிந்தாந்தம்!

இப்படி நான் பார்க்கும் படங்களை அவ்வப்போது ஜி-டாக்கில் இருக்கும் தமிழ்மண நண்பர்களோடு பகிர்ந்துக்கொள்வேன். ஜீவ்ஸ் அண்ணாச்சி போன்ற புகைப்பட ஆர்வலர்கள் ஆன்லைனில் இருந்துவிட்டால் படங்களை பகிர்ந்துக்கொண்டு அதன் நிறைகுறைகளை பற்றி விவாதிப்பேன்.

இப்படி செய்யும் அரட்டைகளை ஜி டாக்கில் மட்டும் செய்யாமல் இந்த பதிவிலும் செய்யலாமே என்று பல நாட்களாக எண்ணிக்கொண்டிருந்தேன்.இன்றைக்கு செயலாக்க வேளை அமைந்தது!!

அவ்வப்போது Flickr Explore-ல் நான் காணும் படங்கள் சில வற்றை பதிவிட்டு அதை பற்றி என் மனதில் தோன்றும் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளலாம் என்று எண்ணம்.

இந்த பதிவை சார்ந்த பல வல்லுனர்களும்,வாசகர்கள்களும் படங்களை பற்றின தன்னுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் பின்னூட்டத்தில் தெரிக்க நாமும் நாலு விஷயங்களை ஆலோசித்து அறிந்துக்கொள்ளலாம்.
என்ன?? ஐடியா நல்லா இருக்கா???

சரி இந்த தடவை என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம்.



© 2008, Richard Thompson
http://www.flickr.com/photos/richardthompson/2162728730/

Camera: Canon EOS 5D
Exposure: 20 sec (20)
Aperture: f/10
Focal Length: 18 mm
ISO Speed: 100

அடடா!!
என்ன வண்ணங்கள்.படம் எடுக்கறது எப்படின்னு எல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி எந்த நேரத்துல எடுத்தா படம் நல்லா வரும்னு தெரியனும்!! அதை நம்ம அண்ணாச்சி கரீட்டா கண்டுக்கிட்டாருன்னு நெனைக்கறேன். நல்லா மாலை நேரத்தில் இருள் சூழும் முன்னர் போய் எடுத்திருக்காருன்னு தெரியுது!!
அந்த சமயம் இந்த ஊருல எம்புட்டு குளிரா இருக்கும்னு எனக்கு தான் தெரியும் (இவரு படம் எடுத்ததும் மிசிகன் தான்).
சரியான நேரத்துல,சரியான இடத்துக்கு கஷ்டம் பாக்காம போய் சேருவது நாம் புகைப்படக்கலையில் கற்க வேண்டிய முதல் பாடம்.
exposure 20 secs-னு இருக்கறது கவனிங்க!! நிச்சயம் முக்காலி போட்டு தான் எடுத்திருப்பாரு!! படம் என்ன crisp-a இருக்கு பாருங்க.தண்ணீரின் மேல ஓரத்தில் இருக்கும் மரங்களின் பிரதிபலிப்பு எவ்வளவு தெளிவாக படத்தில் அமையுமாறு செய்திருக்கிறார். முப்பகுதி கோட்பாடு மற்றும் வழிநடத்தும் கோடுகள் ரொம்ப அழகா உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது!!
சூப்பர் ஷாட்!
----------------------------------------------


http://www.flickr.com/photos/hichako/2176682903/

Camera: Canon EOS 10D
Exposure: 0.001 sec (1/750)
Aperture: f/5.6
Focal Length: 90 mm
ISO Speed: 100

படத்துல மிக அழகான ஒளி அமைப்பு!! நிச்சயமா சற்றே மேக மூட்டமான நாள் ஒன்றில் தான் இந்த படத்தை எடுத்திருப்பாருன்னு நெனைக்கறேன். ஏன்னா ரொம்ப பளிச்சுன்னு இல்லாம,அதே சமயம் ரொம்ப கம்மியாவும் இல்லாம சரியான அளவு குழைந்த ஒளி (diffused light) இந்த படத்துல. நடுவுல இருக்கற பூவுல மட்டும் லேசா கொஞ்சம் நிழல் தெரியுது மத்தபடி படம் முழுக்க மெல்லிய ஒளி அமைப்பு தான்.
அதுவுமில்லாமல் படத்துல முன் இருக்கும் பூக்கள் பின்னிருக்கும் பூக்கள் out of focus ஆகி நடுவில் இருக்கும் பூக்கள் மட்டும் தெளிவாக தெரியுமளவிற்கு மிகக்குறைந்த குவிய ஆழம் (shallow depth of field)
படத்தின் பின்னூட்டங்களை பார்த்தால் அண்ணாச்சி Tamron macro 90mm lens உபயோகிச்சிருக்காருன்னு தெரியுது!! இந்த மாதிரி சிறப்பான ஃபோகஸ் உள்ள படங்கள் பார்த்தாலே நிச்சயம் கிட் லென்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது வெளியில் வாங்கிய லென்ஸாக இருப்பது நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்.
----------------------------------------------

http://www.flickr.com/photos/rouleau/2182633497/

Camera: Canon EOS 10D
Exposure: 0.033 sec (1/30)
Aperture: f/1.8
Focal Length: 50 mm
ISO Speed: 400

இந்த படத்தினை பற்றி ஒரே வார்த்தையில் கருத்து கூற வேண்டும் என்றால் நான் சொல்லும் வார்த்தை DOF என்றுதான் இருக்கும்!!
புகைப்படக்கலையில் Shallow DOF எனப்படும் உத்திக்கு சிறந்த உதாரணம் ஒன்றை காட்ட வேண்டும் என்றால் இந்த படத்தை கண்ணை மூடிக்கொண்டு காட்டி விடுவேன்.
தன்னிடம் உள்ள நல்ல தரமான லென்ஸை முழுமையாக பயன்படுத்தி சரியாக துப்பாக்கியின் முனையில் ஃபோகஸை நிறுத்தியிருக்கிறார்!!
சூப்பர்!!
----------------------------------------------
சரி இதே மாதிரி சுவாரஸ்யமான வேறு மூன்று படங்களோடு உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
இப்போதைக்கு நான் அப்பீட்டு ஆகிக்கறேன்.
படத்தை பற்றிய உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பின்னூட்டத்துல சொல்லுங்க!
அரட்டை அடிப்போம்!!
வரட்டா?? :-)

Sunday, January 6, 2008

புகைப்படக்கலை ஆர்வலர்கள் எல்லோருமே மிக சுலபமாக பழகக்கூடிய பிரிவு என்று ஒரு பிரிவை சொல்ல வேண்டுமென்றால் அது இந்த உட்புற படப்பிடிப்பு அல்லது Indoor Photography தானுங்க!

பின்ன நீங்களே பாருங்களேன். அடிச்சு புடிச்சு வீட்டுக்கு வெளில போய் அலைய வேண்டாம்.இங்கிட்டு மரம் கொஞ்சம் குட்டையா இருந்தா நல்லா இருக்குமேஅங்கிட்டு அந்த வீடு மறைக்காம இருந்தா நல்லா இருக்குமே,அந்த டெலிபோன் கம்பம் மட்டும் கொஞ்சம் தள்ளி இருந்தா நல்லா இருக்குமே அப்படின்னு எல்லாம் கவலை பட வேண்டாம்.யாராச்சும் பாப்பாங்களா,ஏதாச்சும் சொல்லுவாங்களா,என்ன பண்ணுறன்னு கேப்பாங்களா,பொதுமக்களுக்கு இடைஞ்சலா இருக்குமா அப்படின்னு ஏதும் யோசிக்க வேண்டாம்.திடீர்னு சூரியன் மேகத்துல மறைஞ்சு போயிருச்சே,மழை கொட்டுதே,காத்து அடிக்குதே என்ற பிரச்சினைகளும் இல்லை.அப்பப்பா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நாம இஷ்டப்படி நமது பக்கத்துல உள்ள ஏதேனும் ஒரு பொருள் அழகாக இருப்பது போல பட்டா் சட்டென் நமது கேமராவை எடுத்து சுட்டு போட்டு விடலாம்.முதன் முறை சரியாக வராவிட்டாலும் திரும்ப திரும்ப எத்தனை முறை வேண்டுமானாலும் முயற்சி செய்து நமக்கு வேண்டியவாறு படம் பிடிக்கலாம்.இப்படி பல வகைகளில் சௌகரியமான ஒரு பிரிவு தான் இந்த உட்புற படப்பிடிப்பு.

அப்படி விழுந்து விழுந்து எடுக்கற அளவுக்கு என்னதான் வீட்டுக்க்குள்ள இருக்குன்னு நெனைக்காதீங்க. எல்லாம் நாம் பாக்கற விதத்துல தான் இருக்கு.இரவு பகல் என நாளின் பல்வேறு நேரங்களில் ஒரே பொருள் பல ஒளி அமைப்புகளோடு வித்தியாசமாக தெரியும். ஒரு பொருளை நாம் வழக்கமாக பார்க்கும் கோணத்தை விட்டு சற்றே மேலே ,கீழே,தூரத்திலிருந்து,பக்கத்திலிருந்து என்று நம் பார்வையை மாற்றி பார்த்தால் நாம் முன்பு எப்போதும் அறிந்திராத அழகு ஒவ்வொரு பொருளிலும் ஒளிந்துக்கொண்டிருக்கும்.அதனை கண்டுக்கொள்வது தான் ஒரு புகைப்படக்கலைஞனின் முதன்மையான திறமை.
இப்படி ஒரு பொருளை புகைப்படம் எடுப்பது என்று தீர்மானித்த பிறகு அடுத்து யோசிக்க வேண்டியது என்ன??
எந்த புகைப்படமாக இருந்தாலும் அந்த படத்தின் தரத்தை தீர்மானிக்கும் முதன்மையான விஷயம் என்றால் ,படத்தின் உள்ள ஒளி அமைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.உட்புற படப்பிடிப்பின் முதல் பிரச்சினை போதிய வெளிச்சமின்மை.என்னதான் ஃப்ளாஷ் வந்தாலும் ,பெரிய பெரிய மின் விளக்குகள் வந்தாலும் சூரிய ஒளியை மிஞ்ச முடியாது.அதனால் வீட்டுனுள் வரும் சூரிய ஒளியை முடிந்த வரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ஜன்னல்களை திறந்து விடுங்கள்,அதன் மூலம் வரும் ஒளி முடிந்தவரை உங்கள் கருப்பொருளின் மேல படுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.கண்ணாடிகள் மற்றும் கையில் கிடைத்த ஒளியை பிரதிபலிக்கும் பொருட்களை வைத்து வரும் ஒளியை பிரதிபலித்து பொருளின் மீது ஒளியை கூட்டலாம். ஒரு அட்டையின் வெள்ளை காகிதத்தை ஒட்டி அதையே பிரதிபலிப்பானாக (reflector) பயன்படுத்திக்கொள்ளலாம்.இது போல அலுமினியம் ஃபாயில்(Aluminium foil), தெர்மோகோல் என்று வீட்டில் சாதாரணமாக பல பொருட்களை கொண்டு பிரதிபலிப்பான்களை உருவாக்கிக்கொள்ளலாம்.சில சமயங்களில் சூரியனிடமிருந்து வரும் ஒளி மிகவும் வீரியம் மிக்கதாகவும் நிறைய நிழல்கள் தரவனவாக இருக்கலாம்,அந்த சமயங்களில் இந்த பிரதிபலிப்பான்களை உபயோகித்தால் ஒளி மென்மையாகவும்,குழைந்து போய் (diffused light) புகைப்படம் எடுப்பதற்கு ஏற்றதாகவும் மாறிவிடும்.

ஒளியை கூட்டிக்கொள்ள இன்னொரு உத்தி உங்களின் வீட்டில் உள்ள மின் விளக்குகள் அனைத்தையும் எரிய விட்டுக்கொள்வது.உங்களிடம் ஏதாவது மேஜை விளக்கு அல்லது நடமாடும் விளக்கு (portable lamp) ஏதாவது இருந்தால் அதை பொருளின் பக்கத்தில் வைத்து எரியவிட்டுக்கொள்ளுங்கள். அப்படியும் ஒளி போதவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது ஃப்ளாஷ். உங்கள் கேமரா தானியங்கி முறையில் (automatic mode) இயங்கினால் படம் எடுக்கும் போது ஃபிளாஷ் தானாக இயங்கிவிடும். ஆனால் ஃப்ளாஷ் உபயோகித்தால் படத்தில் ஒரே செயற்கை தனம் வந்துவிடுவதாலும்,படத்தில் ஜீவனே இல்லாதது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதாலும் அதை உபயோகிப்பதை நான் முடிந்த வரை தவிர்த்து விடுவேன்.முடிந்த வரை ஒளியை கூட்டிக்கொள்வது படம் நன்றாக வருவதற்கான சாத்தியக்கூறை அதிகப்படுத்தும்.ஆனால் அதே சமயம் ஒளி அதிகமாகிப்போய் படம் overexposed ஆகாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒளி குறைந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் படம் எடுக்கிறீர்கள் என்றால்,உங்கள் கேமரா தானாக போதுமான அளவு ஒளி உள்ளே நுழைவதற்காக ஷட்டரை அதிகப்படியான நேரத்திற்கு திறந்து வைத்துக்கொள்ளும்.இதனால் முக்காலி இல்லாமல் (handheld) எடுக்கப்படும் படங்களில் அதிர்வுகள் (shake) அதிகமாக வரக்கூடிய வாய்ப்பு உண்டு.படத்தில் நேரடியாக தெரியாவிட்டாலும் இந்த அதிர்வுகளால் படங்களின் தெளிவில் குறைபாடு பல சமயங்களில் ஏற்படும்.இதனால் உட்புற படப்பிடிப்பு போன்ற ஒளி குறைந்த சந்தர்ப்பங்களில் முக்காலி பயன்படுத்துவது சாலச்சிறந்தது.உங்களிடம் முக்காலி இல்லாவிட்டால் மேஜை,நாற்காலி என ஏதாவது கடினமான நிலப்பரப்பில் கேமராவை பொருத்தி படம் பிடிப்பது உசிதம்.
அதுவுமில்லாமல் பொத்தானை அழுத்தும்போது சில அதிர்வுகள் ஏற்பட்டு அதனால் படம் தெளிவாக விழாமல் போகக்கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால் கேமராவை self timer-இல் போட்டு விட்டு படம் பிடிப்பது மற்றுமொரு பிரபலமான உத்தி.

எடுக்கும் பொருளை சுற்றி நம் கவனத்தை சிதறடிக்க கூடிய பொருட்கள் இருந்தால் அவற்றை நீக்கிவிட பாருங்கள். முடிந்த வரை பொருளை சுற்றி மற்றும் பின்புறம் தெளிவாக அமையுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.நமது AN& அண்ணாச்சி எடுத்த இந்த படத்திற்காக என்ன மாதிரி ஏற்பாடுகளை எல்லாம் செய்திருக்கிறார் என்று இந்த சுட்டியில் சென்று அறிந்துக்கொள்ளலாம்.
இதே போல வீட்டுலேயே ஸ்டூடியோ ரேஞ்சுக்கு ஏற்பாடுகள் செய்யறது பத்தி இந்தப்பக்கம் மற்றும் இந்தப்பக்கத்துக்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம்.


நம்மை எங்கெங்கோ தேடி, உருண்டு புரண்டு படம் பிடிப்பதை விட நம்மை சுற்றி குழுமியிருக்கும் அழகை ரசிக்கத்தெரிந்து கொண்டாலே பல அழகழகான படங்களை பிடிக்கலாம்.எனவே நீங்கள் அனைவரும் இந்தக்கலையை முயன்று பார்த்து நம் போட்டியை சிறப்பிக்க வாழ்த்துக்கள்.
கேள்விகள் கருத்துக்க்கள் ஏதாவது இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
கலந்தாலோசிக்கலாம்!!

வரட்டா?? :-)

Reflector picture from
www.studiolighting.net/images/alumreflect1.jpg
Table top prop picture from
http://www.flickr.com/photo_zoom.gne?id=1357318708&context=photostream&size=o

Friday, January 4, 2008

இணையத்தில் கிடைத்தது!
பாருங்க! உபயோகமான கருத்துக்கள்!! :-)

Tuesday, January 1, 2008

அன்பார்ந்த தமிழ் வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்,
நாம படம் பிடிக்கும் போது பொருட்கள்,மக்கள்,இடங்களின் முக்கியமான பகுதிகள் போன்றவை காட்சியின் எந்த மூலையில் பொருத்துகிறோமோ அதை பொருத்தே படம் பார்ப்பதற்கு கச்சிதமாக அமையும்.இப்படி படம் எடுக்கும் போது கட்சியமைப்பை பற்றி சிந்திக்கும் கலையை ஆங்கிலத்தில் Composition என்று சொல்வார்கள்.கால காலமாக நல்ல படங்களை ஆராய்ந்த புகைப்படக்கலை ஆர்வலர்கள் அந்த படங்களின் பொதுவான அம்சங்களை பார்த்து சில வழிமுறைகளை வகுத்துள்ளனர். முப்பகுதி கோட்பாடு(Rule of thirds), வழிநடத்தும் கோடுகள்(leading lines) போன்றவை இது போன்ற வழிமுறைகளில் முதன்மையானவை.அப்படிப்பட்ட சில வேறு காட்சியமைப்பு உத்திகளை தான் இன்றைக்கு பார்க்க போகிறோம்.

புகைப்படக்கலை சார்ந்த எல்லா வழிமுறைகளை போல இதுவும் நாம் சிறந்த படம் தாயாரிப்பதற்கு வெறும் ஆலோசனை என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்!! இவையெல்லாம் சார்ந்து படம் எடுத்தால் தான் படம் நன்றாக வரும் என்றோ,இவை பின்பற்றவில்லையென்றால் படம் நன்றாக வராது என்றோ அர்த்தம் கொள்ள கூடாது.

கருப்பொருள்(Subject) பார்ப்பதற்கு இடம் தாருங்கள் :

ஒரு படத்தில் ஒரு ஆள் இடப்புறம் பார்ப்பது போல உள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள் , அந்த ஆள் பார்க்கும் திசையில் கொஞ்சம் இடம் விட்டு வைத்தால் படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். மனிதர்களுக்கு இயற்கையாகவே யாராவது ஏதாவது பார்த்தால் அவர் என்ன பார்க்கிறார் என்பதை நாமும் பார்க்கவேண்டும் என்று ஆசை தொற்றிக்கொண்டு விடும். திரைப்படங்களில் கூட கதாநாயகன் ஏதாவது எட்டி பார்ப்பது போன்றோ அல்லது ஒளிந்திருந்து பார்ப்பது போன்றோ ஒரு காட்சி இருந்தால்,அடுத்த காட்சியிலேயே அவர் என்ன பார்க்கிறார் என்று காண்பித்து விடுவார்கள். அப்படி காட்டவில்லை என்றால் நமக்கு தலையே வெடித்துவிடும்.பொதுவாக படங்களில் கூட யாராவது எதையாவது பார்ப்பதாக இருந்தால் அவரின் பார்வை போகும் திசையை நமது பார்வையும் தொடரும்.அந்த சமயத்தில் பார்ப்பதற்கு இடம் இல்லாமல் படம் முடிந்துவிட்டால் படத்தில் ஏதோ குறைந்தது போல் தோன்றும்.
மனிதராகவோ அல்லது உயிருள்ள பிராணியாகவோ கூட இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.உயிரற்ற பொருளாக இருந்தாலும் கூட அந்த பொருள் பார்த்துக்கொண்டிருக்கும் திசையில் இடம் விட்டால் படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
இந்த உத்தியை விளக்கும் சில படங்கள் கீழே.












நகர்ந்துக்கொண்டிருக்கும் பொருள் போக இடம் தாருங்கள்:
நகர்ந்துக்கொண்டிருக்கும் ஒரு பொருளை படம் பிடிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்,அந்த சமயத்தில் நீங்கள் படம் பிடிக்கும் பொருள் நகர்ந்து செல்லும் திசையில் இடம் விட்டால் படம் பார்க்க நன்றாக இருக்கும்.படத்தில் ஒரு பொருள் கடந்து வந்த பாதையை இறந்த வெளி (Dead space) என்றும் ,கடந்து போக வேண்டிய பாதையை இயங்கு வெளி (active space) என்றும் குறிப்பிடுவார்கள்.ஒரு பொருள் நகர்ந்துக்கொண்டிருப்பதை பார்த்தால் அது போகப்போகும்் திசையை ஒட்டியே தான் நம் பார்வையும் செல்லும். அதனால் அது நகர்ந்துக்கொண்டிருக்கும் திசையில் சிறிது இடம் விட்டு வைத்தால் படம் பார்க்க நன்றாக இருக்கும்.அதாவது இறந்த வெளியை விட இயங்கு வெளி அதிகமாக இருக்க வேண்டும்.
இதை உணர்த்தும் உதாரணம் ஒன்று உங்கள் பார்வைக்கு.

ஆனால் ஒரு படத்தில் இயங்கு வெளியை விட இறந்த வெளி அதிகமாக இருக்கக்கூடிய நிர்பந்தம் கூட சில சமயங்களில் ஏற்படலாம்.அதாவது ஒரு பொருளின் வேகத்தை காட்ட முற்படும்போதோ அல்லது.ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கடந்த வந்த தூரத்தை குறிப்பிட்டு காட்ட முனையும் போது இறந்த வெளியில் அதிக இடம் இருப்பது போல் காட்சியை அமைக்கலாம்!
அதற்கான உதாரணங்கள் சிலவற்றை கீழே பார்ப்போம்.










பாத்தீங்களா இது மாதிரி சின்ன சின்ன விஷயங்களை கவனத்தில் கொண்டால் நாம் எடுக்கும் புகைப்படங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணலாம்!!
இப்போதைக்க்கு இது போதும்,இதுக்கு மேல ஏதாச்சும் சொன்னா குழம்பி போய்டும்.
பதிவுல ஏதாச்சும் சந்தேகம்/கருத்துக்கள் இருந்தால் பின்னூட்டமிட்டுங்கள்,கலந்தாலோசிப்போம்!!
வரட்டா?? :-)

படங்கள் மற்றும் குறிப்புகள் :
http://digital-photography-school.com/blog/give-your-subject-space-to-look-into/
http://digital-photography-school.com/blog/create-active-space-in-your-photography/
http://digital-photography-school.com/blog/leaving-space-behind-moving-subjects-composition/
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff