Saturday, August 23, 2008

மெகா போட்டி - முதல் சுற்றுப் படங்களின் விமர்சனம்

18 comments:
 
முதல் சுற்றில் வெற்றி பெற்ற பதினோறு படங்களுக்கு, நடுவர்களின், ஒரு சில கருத்துக்கள்!

(PiT குழுவினரின், ஆணி பிடுங்குதல் என்ற பெருஞ்சாபத்தால், எல்லா படங்களுக்கும் கருத்துப் பகிர்வை அளிக்க முடியாமல் போவதர்க்கு எங்களின் வருத்தங்கள். ;) )

இனி வருவது, நடுவர்களின் கருத்துக்கள்.

(in no particular order)

1) இலவசக் கொத்தனார் (பூமியா? மார்ஸான்னு scientificஆ யோசிச்சா, மனுஷன் வீட்டுக்குள்ள எதையோ ஓரு கொட்டையை மல்லாக்கப் போட்டு படம் எடுத்திருக்காரு. கலக்கல். :) )
மாயாஜாலம் காட்டியுள்ளார் கொத்ஸ்.
க்ரியேடிவ் ஷாட் வித்தியாசமான சிந்தனை.
அருமையான படைப்பு.


2) Sathanga (கலைக் கண்ணோட எடுத்திருக்காங்க)
நல்ல ஃப்ரேமிங்
படம் எடுத்த கோணம் - ரசிக்கத்தக்தக்கது
இந்த பொருளை, வேற எப்படி எடுக்கரதுன்னு சொல்லத் தெரியல, ஆனா, மேலெழுந்த கம்பி, படத்தை விட்டு வெளியே செல்வது போல் இருப்பதால், சின்ன கவனச் சிதறல் வருதோ?


3) Mazhai Shreya (பொறுமையின் எடுத்துக்காட்டு)
ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்திருக்காங்க. குட் வர்க்!
ஏற்கனவே அவங்க ப்ளாக்குல சொன்னது போல ரொம்ப உழைச்சிருக்காங்க. ஹாட்ஸ் ஆஃப். முயற்சி திருவினையாகி இருக்கு.
100 க்கும் மேலே எடுத்ததில் இது தான் தேறிச்சுன்னு சொல்லியுருக்காங்க - சித்திரம் மட்டுமில்லை- புகைப்படக்கலையும் பழகப்பழகத்தான் நுணுக்கங்களும் , Strokes ம் வசமாகும்.. kudos !


4) Parisalkaran (இந்தப் படம் எடுக்க யாரையும் துன்புறுத்தலையே?)
கண்ணுக்குள்ளே கேமரா வைத்தேன் கண்ணம்மா ( கண்ணின் பிரதிபலிப்பில் தெரியும் விரல்கள் அயல்கிரக மனிதர்களை நினைவூட்டுகிறது )
நம்ம மூடுக்கேத்தாப்போல இந்த படத்துக்கு தலைப்பு குடுக்க வைக்கும்.. ஆழமான படைப்பு


5) T Jay (B&W எப்பவும் நச்சு!)
நல்லா வந்திருக்கு.
நிழல் முழுமையா வந்திருந்தா இன்னும் அழகா இருந்திருக்கும்
அருமை !.. கும்மிருட்டுன்னு சொல்லும்போது ஒரு காட்சி மனசுக்குள்ளே வந்துபோகும்.. இனிமே இந்த படம் தான் வரும்.


6) Iravu Kavi ( ஒடஞ்ச கட்டையும் அழகுதான், சரியான கோணத்தில் எடுத்தா)
நைஸ் ஃப்ரேமிங்
இடது மூலையிலும், மேலே வலது மூலையிலும், லேசான பிசிரை க்ராப் செய்திருக்கலாம்.


7) Ramalakshmi (ஒரு வாழ்த்து அட்டைக்குரிய சர்வ லட்சணமும் இருக்கு. )
சூரியனின் தகதகப்பு நன்றாய் வந்துள்ளது.
காலை வெயில் காலை வாராம வந்திருக்கு இருள் நீங்கி பொழுது விடியும் தருணம்னு கவித்துவமாக சொல்லுவது மாதிரி இருக்கு.. அருமை!


8) Jagadeesan (perfect click!)
நல்ல ஃப்ரேமிங்.
லீடிங் லைன் - அருமையா வொர்க் அவுட் ஆகிருக்கு
Panoramic shot - அதோட ஜன்னலை திறந்து பார்ப்பது போல் இரு உணர்வு , அருமை!


9) Gregory Corbesier (யாருங்க நீங்க? எந்த ஊரு? அசத்தியிருக்கீங்க)
கலக்கல் வெளிச்சம்/டைமிங். ஆனா, சட்டுனு பாத்ததும் திகிலாயிடுச்சு ரெண்டு கால் அந்தரத்துல பாத்ததும் :)
செம டைமிங். ஊஞ்சலில் ஆடும்போது எடுத்ததா ? இல்லை உயரத்தில் எகிறி குதிக்கறப்போ எடுத்ததா ?
என்னனு சொல்ல.. ஒரே க்ளிக்கில் multiple shots எடுக்குமே.. அந்த மாதிரி ஏதாவது செட்டிங்க்ஸ் பண்ணினீங்களா ??


10) Surya ( magical. மரத்தை சுற்றிய நிழல், படத்துக்கு அழகை கூட்டுது. பக்கா ஃப்ரேமிங்! )
அட்டகாசமா வந்திருக்கு. குறிப்பா இலைகளின் ஓரத்தில் தெரியும் இருள்.
நல்லா இருக்கு. இன்னமும் கொஞ்சம் க்ளோசப் ல போயி எடுத்திருக்கலாமோ ? ஆங்கிள் கொஞ்சம் மாத்தி எடுத்திருக்கலாம். மறுபடி அதையே வேறு ஆங்கிள் இன்னும் க்ளோசப்ல எடுத்துப் பாருங்க. நல்ல வித்தியாசமா அழகா இருக்கும்
அருமை ! அண்ணார்ந்து பார்த்தேன் !


11) Raam (அய்யனாரைப் பத்தி என்ன சொல்றது? போஸ்ட் கார்ட் finish. வெள்ளையா இருக்கர பொருளை கச்சிதமா எடுத்திருக்காரு. அருமை)
அய்யனார் பளிச்னு வந்திருக்காரு.
கட்டம் கட்டியதும் நல்லாருக்கு.
கொஞ்சம் லேசா திரும்பின மாதிரி எடுத்திருக்கலாம். அருமை!

18 comments:

  1. எப்பப்பார்த்தாலும் வேலைப்பளுவை காரணம் காட்டி ஒரு வரி விமர்சனம் அளிக்காமல் போவது பற்றி எனக்கு ரொம்பவும் வருத்தம் ( கோபம்ன்னு கூட சொல்லலாம்)

    ReplyDelete
  2. //கொஞ்சம் லேசா திரும்பின மாதிரி எடுத்திருக்கலாம். அருமை! //
    puriyalaiyee!
    படம் பக்கவாட்டிலேந்துதானே எடுத்து இருக்காரு?

    ReplyDelete
  3. விமர்சனங்களுக்கு நன்றி...

    பப்பாளிப் படத்தப்பத்தி இன்னும் விரிவா இந்தப் பதிவுல சொல்லியிருக்கேனுங்க..

    நாஞ்சொல்லறதுல ஏதாவது குத்தம் குறையிருக்குதான்னு வந்து ஒரு வாட்டிப் பாத்துச் சொல்லிட்டுப் போனிங்கனா ரொம்பப் புண்ணியமாப் போகும் நாட்டாமைகாரவுங்களே..

    ReplyDelete
  4. ஏம் படம் செலக்ட் ஆவுலியா..? யாய்ய்ய்.. நாட்டாம, தீர்ப்ப மாத்திச்சொல்லு..! (சூர்யாவின் தாக்கத்தில் எழுதியது)

    ReplyDelete
  5. முத்துலெட்சுமி-கயல்விழி,

    எங்களுக்கும் வருத்தமும் கோபமும் உண்டு. ஒரு படத்துக்கு விமர்சனம் எழுத அஞ்சு நிமிஷம் ஆகும்னா கூட, 50 படத்துக்கு 4 மணி நேரம் தேவைப்படுது.
    அவசரவசரமா ஒரு வரி விமர்சனம் சொன்னா, உங்களுக்கும் ப்ரயோஜனம் இருக்காது, எங்களுக்கும் நல்லாருக்காது.

    ஆனா, பதிவர்களின் புகைப்படங்கள் அரங்கேறியதும், அப்பப்ப அவங்க பதிவுலயே போய் விமர்சனம் செய்யவும் முயற்சிக்கறோம்.

    ஆனா, 100% செய்யமுடியல்ல.

    போட்டியில் வெற்றி பெறாதவர்கள், தங்கள் படங்களுக்கு விமர்சனம் பெற விருப்பப்பட்டால், பதிவில் தெரிவிக்கவும், அல்லதூ ஈ.மடல் அனுப்பவும்.
    முடிந்தவரை அலசி கருத்தைத் தெரிவிக்க முயலுவோம் :)

    இனி உங்க படத்தை பற்றிய என் கருத்ஸ்:
    உங்களின் படம்

    இழுக்கலை.
    பறவைய எடுக்கும் முயற்சின்னா, இந்த பாடத்தில் சொன்னது போல், கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதை படம் பிடிக்கும் முன் கொஞ்சம் அதிக கவனம் வேணும்.
    மங்கலாய் தெரியும் கம்பி, படத்தின் 'நச்'சை குறைத்தது.
    வெளியில் தெரியும் வாஷ்-பேஸின், வயர்-கம்பி எல்லாம் நெருடல்.

    படத்தின் சப்ஜெக்ட் எதுவோ, அதை ப்ரதானப் படுத்திக் காட்ட முயலவும்.
    rule-of-3rd பின்பற்றவும்.

    கோபத்தைக் குறைத்து, ஆதரவை அதிகரிக்கவும் :)

    நன்றி!

    ReplyDelete
  6. எனது பதிவிலே கவிதையோடு வெளியிட்டிருந்த புகைப் படமும் கவித்துவமாக இருப்பதாகக் கூறியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி சர்வேசன்.

    ReplyDelete
  7. என் படம் ஏன் தொட்ரதுனே தெரியல தெரிஞ்சிகிட்டா நல்ல இருக்குமே சொல்லிருக்கலாம் திருத்திக்குரதுகு.

    ReplyDelete
  8. சர்வேசனின் பதிலுக்கு பதிலடி! ப்ரபரப்பான பதிவு!
    இங்கே பாருங்க!
    http://chitirampesuthati.blogspot.com/
    :-))))))))))))

    ReplyDelete
  9. vetri petravarkalukku en vaazhtukkal...

    konjam gelucil vendum.. vayiru lesa yeriyuthu..

    -suresh babu.

    ReplyDelete
  10. படங்கள் எல்லாம் சூப்பரா வந்திருக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. திவா, உங்களின் விமர்சனங்களைப் படித்தேன். நன்றி!

    இப்படி, கூட்டு முயற்சியில் இழுத்தாதான் வண்டி நல்லா ஓடும் :)

    அஞ்சு 'நடுவர்கள்' தான் விமர்சினக்கணும்னு ஒண்ணும் ரூல்
    இல்லை.

    ஒருவர் படத்தை போட்டிக்கு அனுப்பியதும், எல்லோரும், முடிந்தவரை தங்கள் கருத்தை, அந்தப் படம் பற்றி எடுத்துக் கூறினால், எல்லோரின் திறமையும் மேலெழும்.

    நான் எதிர்பாக்கரதும் இதைத் தான் ;)

    தொடரட்டும் பணி :)

    ReplyDelete
  12. pmt, உங்கள் படம் நல்ல கட்டம் கட்டியிருக்கீங்க. நல்ல ஃப்ரேமிங்கும் கூட.
    படத்தின் அழகு அதன் silhouette effect.
    ஆனா, பெரிய மைனஸ், அந்த செயற்கை நிறம். ஒரு மாதிரி பிங்கிஷ் கலர் வானத்துக்கு எடுபடல. கருமை முன்னணியில் இருப்பதனால் இருக்கலாம்.
    காக்கா அழகு :)

    ReplyDelete
  13. //கோபத்தைக் குறைத்து, ஆதரவை அதிகரிக்கவும் :)/

    கோபம் அதிகரித்தால் நாங்கள் பெறகூடிய பதில்களின் வேகமும் கூடுமோ?!

    சர்வேசன்! என்னை போன்றவர்கள் பிஐடியின் உற்சாகத்திலும் அதில் பங்கேற்பவர்களின் படங்கள் காட்டும் காட்சிகளிலும் ஈர்க்கப்பட்டு இழுக்கப்பட்டிருக்கிறோம்!

    ஸோ நீங்க அதிகம் வெற்றி பாதைக்கு செல்லாத படங்கள் பற்றி கூறினால் தவறுகளை திரும்ப திரும்ப சேர்த்துக்கொள்ளாமல் திருத்திக்கொள்ள உதவக்கூடும்! :)

    //போட்டியில் வெற்றி பெறாதவர்கள், தங்கள் படங்களுக்கு விமர்சனம் பெற விருப்பப்பட்டால், பதிவில் தெரிவிக்கவும், அல்லதூ ஈ.மடல் அனுப்பவும். முடிந்தவரை அலசி கருத்தைத் தெரிவிக்க முயலுவோம் :)//

    ஈ மெயில் அனுப்பியபின் அதை காப்பி டூ பதிவாக போட்டால் அல்லது மொத்த ஈமெயிலினையும் பதிவாக போட்டாலும் படிச்சு புரிஞ்சுப்போம்!

    கோரிக்கை ஏற்கப்படவேண்டும் :))

    ReplyDelete
  14. போட்டியாளர்கள் வெற்றி பெற வெவ்வேறு ஆலோசனைகளும் கருத்துக்களும் ஏற்கெனவே வெவ்வேறு சமயங்களில் இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

    அதுவும் தவிர சில போட்டிக்கு வந்த படங்களை விமர்சனங்களை பார்த்தாலே எல்லோரும் என்ன தவறு செய்கிறார்கள் என்று தெரிந்து விடும்.

    http://photography-in-tamil.blogspot.com/2008/02/2008_26.html

    தவிர இந்த தலைப்பில் தனியாகவே பிட்டில் ஒரு பதிவு உண்டு.

    http://photography-in-tamil.blogspot.com/2007/09/blog-post_17.html

    இவை தவிர அடிப்படையாக மக்கள கருத்தில் கொள்ள வேண்டியது.

    Subject selection(கருப்பொருள் தேர்ந்தெடுத்தல்)

    Composition(காட்சியமைப்பு)

    ReplyDelete
  15. //9) Gregory Corbesier (யாருங்க நீங்க? எந்த ஊரு? அசத்தியிருக்கீங்க)
    கலக்கல் வெளிச்சம்/டைமிங். ஆனா, சட்டுனு பாத்ததும் திகிலாயிடுச்சு ரெண்டு கால் அந்தரத்துல பாத்ததும் :)
    செம டைமிங். ஊஞ்சலில் ஆடும்போது எடுத்ததா ? இல்லை உயரத்தில் எகிறி குதிக்கறப்போ எடுத்ததா ?
    என்னனு சொல்ல.. ஒரே க்ளிக்கில் multiple shots எடுக்குமே.. அந்த மாதிரி ஏதாவது செட்டிங்க்ஸ் பண்ணினீங்களா ??//

    கடற்கரையில நண்பர்கள் beach volleyball விளையாடின போது எடுத்தாராம். ஒரு செட்டிங்கும் வைக்கவில்லை. இப்பிடி கணநேர செயல்/முகமாற்றம் படம் பிடிக்கிறதுல மனுஷன் கில்லாடி.

    Gregory சார்பாகவும் என்சார்பாகவும் நன்றி..நன்றி. :O)

    ReplyDelete
  16. Shreya,

    விவரங்களுக்கு நன்றி. அடுத்த சுற்றுக்கு க்ளிக்கி அனுப்பச் சொல்லுங்க Gregorya :)

    ReplyDelete
  17. தேர்வானவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff