Friday, August 22, 2008

PiT மெகா போட்டி - முன்னேறிய பதினொண்ணு

25 comments:
 
வணக்கம் நண்பர்களே. வாழ்க்கைல எது முன்னேறுதோ இல்லியோ, நேரம் மட்டும் சிரிதும் தாமதிக்காமல் ஓடிக்கிட்டே இருக்கு.
வயசு ஆக ஆக, ஒவ்வொரு நாளும், வாரமும், மாசமும் உஸைன் போல்ட்டு மாதிரி பிச்சுக்கிட்டு ஓடுது.

இப்பதான் PiT ஆரம்பிச்சு முதல் போட்டி நடத்தின மாதிரி இருந்தது, அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப்போயிடுச்சு.
இந்த மெகா போட்டி அறிவிப்பும் நேத்து நடந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள 45 பேர் க்ளிக்கித் தள்ளி முதல் சுற்றுக்கு படங்கள் அனுப்பி முடிச்சுட்டாங்க.

கடந்த மாதங்கள் போலல்லாமல், மெகாப் போட்டியின் இந்தச் சுற்றுக்கு, செலக்க்ஷன் கமிட்டியில், An&, Deepa, CVR, Jeeves மற்றும் சர்வேசனாகிய நான், என்ற ஐவர் குழு இணைந்து முதல் சுற்றின் பத்துப் படங்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

முன்னமே சொன்ன மாதிரி, PiTன் முதலாண்டு நிறைவை ஒட்டி, இந்த முறை மெகா போட்டி நடக்கிறது.
இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெறாதவர்கள், இந்த மாதப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள். இதில் வெற்றி பெற்றவர்கள், அடுத்த போட்டியில், கடந்த போட்டிகளின் வெற்றியாளர்களுடன், களத்தில் இறங்குவார்கள்.

பத்து பேரை தேர்ந்தெடுக்க முனைந்ததில், சில படங்கள், ஒரே 'மதிப்பெண்கள்' பெற்ற நிலையில், பதினோறு படத்தை அடுத்த கட்டத்துக்கு அனுப்புகிறோம்.

அடுத்த போட்டியைப் பற்றிய அறிவிப்பு, திங்களன்று வெளியாகும்.
'கட்டடம்' கட்ட ரெடியாகுங்கள், மக்களே!

இனி, கீழே வருவது, முதல் சுற்றிலிருந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறும், பதினோறு முத்துக்கள்!!!

(in no particular order)

1) இலவசக் கொத்தனார் (பூமியா? மார்ஸான்னு scientificஆ யோசிச்சா, மனுஷன் வீட்டுக்குள்ள எதையோ ஓரு கொட்டையை மல்லாக்கப் போட்டு படம் எடுத்திருக்காரு. கலக்கல். :) )


2) Sathanga (கலைக் கண்ணோட எடுத்திருக்காங்க)


3) Mazhai Shreya (பொறுமையின் எடுத்துக்காட்டு)


4) Parisalkaran (இந்தப் படம் எடுக்க யாரையும் துன்புறுத்தலையே?)


5) T Jay (B&W எப்பவும் நச்சு!)


6) Iravu Kavi ( ஒடஞ்ச கட்டையும் அழகுதான், சரியான கோணத்தில் எடுத்தா)


7) Ramalakshmi (ஒரு வாழ்த்து அட்டைக்குரிய சர்வ லட்சணமும் இருக்கு. )


8) Jagadeesan (perfect click!)


9) Gregory Corbesier (யாருங்க நீங்க? எந்த ஊரு? அசத்தியிருக்கீங்க)


10) Surya ( magical. மரத்தை சுற்றிய நிழல், படத்துக்கு அழகை கூட்டுது. பக்கா ஃப்ரேமிங்! )


11) Raam (அய்யனாரைப் பத்தி என்ன சொல்றது? போஸ்ட் கார்ட் finish. வெள்ளையா இருக்கர பொருளை கச்சிதமா எடுத்திருக்காரு. அருமை)


முன்னேறிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பங்கு பெற்று சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

அனைவரும், புகைப்படங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிரவும்.

அனைத்து படங்களையும் காண இங்கே சொடுக்கலாம்.

வர்டா,

-சர்வேசன்!

25 comments:

 1. படங்கள் அனைத்தும் அருமை!
  தேர்வானவர்களுக்கு வாழ்த்துகள்!!
  தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு பாராட்டுகள்!!!

  வழக்கமான ஒன்றை சொல்லவில்லையென்றால் வலைப்பதுவு உலகம் கோவிச்சுக்கும்:-)..

  மீ த ஃபர்ஸ்ட்டு:-)

  ReplyDelete
 2. !!!!!!!!!!!!!!!!!!!!!
  நிசமாவேவா???????
  என் படமும் 11 இல் ஒன்றா????

  தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 3. தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 4. தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. அனைவருக்கும் வாழ்த்துக்கள். ;-)

  ReplyDelete
 6. ஐ என்னோடதும் வந்துடுச்சு :-)

  தேர்ந்து எடுத்தமைக்கு நன்றி

  ReplyDelete
 7. பத்தோட பதினொண்ணாக
  அத்தோட எனதும் ஒண்ணாக
  வந்து விட்டதா..:))?
  நன்றி நன்றி!

  //(ஒரு வாழ்த்து அட்டைக்குரிய சர்வ லட்சணமும் இருக்கு. )//

  இத இத இதயேதான் சந்தனமுல்லையும் சொல்லியிருந்தார் என் பதிவில்:)!

  தேர்வுகள் அனைத்தும் அருமை!
  அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!

  ReplyDelete
 8. படங்கள் அருமை!
  தேர்வானவர்களுக்கு வாழ்த்துகள்!!

  ReplyDelete
 9. நாந்தான் முன்னமே சொன்னேனே ஜெகதீசன்.! நீங்க கெலிச்சுடுவீங்கன்னு. சரி அடுத்த ரவுண்டுக்கு தயாராவுங்க.! ஜெயித்த அனைவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 10. அத்தனை படங்களும் அருமை. அய்யனார் டாப் க்ளாஸ்.
  ராமலக்ஷ்மி வாழ்த்துகள்.

  அது யாருடைய விழியோ இப்படிப் பளிங்காகப் பிரதிபலிக்கிறதே.
  இரவு கவி,ஜெகதீசன் வாழ்த்துகள். அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. வாழ்த்துக்களுக்கு நன்றி வல்லிம்மா.

  எனது படம் மட்டும் சொடுக்கினால் மட்டுமே தெளிவாகத் தெரிவதைக் கவனிப்பீர்களா சர்வேசன்?

  ReplyDelete
 12. அடங்கொக்காமக்கா... பப்பாளி கெலிச்சிருச்சேய்ய்ய்....!!!

  நம்ம ரசிக மக்களெல்லாம் சரியாத்தான் சொல்லியிருக்காக...

  கூட இருக்கற பத்து படங்களுக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 13. முதல் சுற்றில் தேறிய படங்களுக்கும் அதை தந்து சக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

  இனி செகண்ட் ரவுண்ட் படங்களை பார்க்க வெயீட்டீஸ் :)))


  (இந்த முறையும் நம்ம படம் ஊத்திக்கிச்சு :))

  சரி நெக்ஸ்ட் போட்டி அறிவிப்பு எப்பப்பா???)

  ReplyDelete
 14. Ramalakshmi, Fixed your pic and Suryas.

  thanks for letting us know.

  ReplyDelete
 15. தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
  தோல்விகளில் இருந்து கற்க முயற்சிக்கிறேன்
  இரண்டாம் சுட்ரில் தோற்றவர்களும் பங்கேற்க முடியுமா

  ReplyDelete
 17. அது வால்நட்டா கொத்ஸ். வாழ்த்துகள். பிரமாதமான கற்பனை.

  ReplyDelete
 18. ஐயோ! சொக்கா... என்னோடதும் தேர்வாய்டுச்சா?

  நன்றி!

  ReplyDelete
 19. //அது யாருடைய விழியோ இப்படிப் பளிங்காகப் பிரதிபலிக்கிறதே.//

  என் ப்ரதர்-இன்-லா மகள் மஹிதா!

  ReplyDelete
 20. சர்வேசனின் பதிலுக்கு பதிலடி!
  இங்கே பாருங்க!
  http://chitirampesuthati.blogspot.com/
  :-))))))))))))

  ReplyDelete
 21. //9) Gregory Corbesier (யாருங்க நீங்க? எந்த ஊரு? அசத்தியிருக்கீங்க)//

  என்னுடன் கூட வேலை பார்க்கிறார். என் மதிய நேரத்து புகைப்பட உலாத் தோழன். பிரெஞ்சுக்காரர். நல்ல 'கண்'. அவரிடம் சொல்லிவிடுகிறேன்.

  ReplyDelete
 22. சிறப்பான தேர்வு. தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  //போட்டியில் வெற்றி பெறாதவர்கள், தங்கள் படங்களுக்கு விமர்சனம் பெற விருப்பப்பட்டால், பதிவில் தெரிவிக்கவும்,//

  அவகாசம் கிடைக்கும் போது எனது புகைப்படத்திற்கான விமர்சனங்களைக் குறிப்பிடுங்கள்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff