Friday, November 27, 2009

அன்பு மக்களே, முன்னேறிய 15 ல் இருந்து முதல் மூன்று இடங்களை பிடித்தது யார் என்பதற்க்கு முன் அரையிறுதியில் வெளியேறிய `வாண்டுகள்`பற்றி பார்ப்போம்.. ayilyan karthikero rajesh natarajan udhaya baskar t.jay senthil truth anbu anand karthik adith மேலே கூறிய அனைவரது போட்டோவும் கிட்டதட்ட ஒரே மாதிரியான portrait type படங்கள்... இதில், ayilyan - composition மற்றும் pose அழகாக இருந்ததால் அரையிறுதிக்கு வந்தது,வாண்டு தெளிவாக(sharpness) இல்லாததால் வெளியேறுகிறது.. karthikero - யதார்த்தமான அழகிய புன்னகைக்காக அரையிறுதிக்கு வந்தது, பின்னாடி(back ground) over white ,மேலும் இந்த மாதிரி (portrait) படங்கள் ஷார்ப்பா இருந்தால் தான் எடுபடும்..கொஞ்சம் ஒவர் exposure படத்தை tone மாற்றினால் மட்டும் போதாது.. rajesh natrajan - கலர்ஃபுல் பட்டாம் பூச்சி முகத்திற்காக அரையிறுதிக்கு வந்தது, ஆனால் தவறான crop மற்றும் தெளிவின்மை காரணமாக வெளியேறுகிறது.. anbu anand - selective colouring(கண்டுபிடிக்க முடியலை) மற்றும் different composition காரணமாக அரையிறுதிக்கு வந்தது, இடது பக்கம் crop செய்திருக்க வேண்டும் சுவர் distract செய்கிறது,அதே சமயம் poseம் இந்த தலைப்புக்கு எடுபடவில்லை.. அடுத்த குரூப்,இவங்க படங்கள் எல்லாம் கலர்ஸ் கொஞ்சம் தூக்கல்,மற்றும் நல்ல composition காரணங்களுக்காக முன்னேறியது.. udhayabaskar - உங்கள் வாண்டு அருமை, ஆனால் noise தொந்தரவு மற்றும் இந்த சேட்டை பத்தலைங்க.. tjay - pink கலர் dress,neat BG, நம் கண்களை இரண்டாக பிரிக்காத centered subject எடுபட்டாலும்.. 15 pixel camera வை இன்னும் நன்றாக பயன்படுத்தி தெளிவாக எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..அதுவுமில்லாமல் சொல்லி வைத்து எடுத்தது போல் உள்ளது. truth - வெளிநாட்டுல குழந்தையை எப்படியோ அழகா எடுத்த காரணத்திற்காக முன்னேறினாலும்..உங்கள் திறமைக்கு இந்த படம் தெளிவு குறைவு மற்றும் நல்ல ஒரு pose மட்டுமே..இது தலைப்புக்கு பத்தவில்லை.. adith - கொஞ்சம் அழகான green back ground மற்றும் நல்ல தெளிவான படம் காரணமாக முன்னேறியது...ஆனால் சிரித்திருந்தாலோ,வேறு உணர்வுகளை பிடித்திருந்தாலோ நன்றாக இருந்திருக்கும்.. அடுத்து குரூப் soft type, karthik - அட்டகாசமான புன்னகை, soft tone, பூ வைத்த அழகான சுருட்டை முடி எல்லாம் இருந்தும்,அநியாயமா கழுத்தை வெட்டி எடுத்த மாதிரி crop பன்னிட்டீங்களே..தவறான crop தான் வெளியேற்றுகிறது.. senthil - ரொம்ப அழகா படுத்துகிட்டு கேமராவை உற்று பார்ப்பது மிகவும் அழகு..அந்த பிஞ்சு இதழ்,கை இரண்டும் ஆளை இழுக்குது..ஆனால்,over soft foucs distract செய்கிறது.crop செய்திருக்கலாம்.. முன்னேறிய 15 ல் 10 வாண்டுகள் அரையிறுதியில் வெளியேறிவிட்டன.. இறுதி சுற்றுக்கு வந்த 5 வாண்டுகள், MQN sathiya karthi nila`s mom nirmala devi.r. இதில் மூன்றாம் இடத்திற்க்கு 3 வாண்டுகளிடையே போட்டி நிலவியது, அவர்கள் MQN,sathiya,karthi.. இதில் karthi யின் படம் கவிதை போல் உள்ளது.tone மற்றும் lightings மிகவும் அருமை.ஏதோ ஒன்றை இயல்பாக think பன்னுவது மிகவும் அழகு.முகத்தில் கொஞ்சம் மென்சோகம் தெரிவது போல் இருப்பது படத்திற்கு அழகாக இருந்தாலும் அதுவே இந்த `வாண்டுகள்` தலைப்பிற்கு perfect பொருத்தமாக இல்லை..அதனால் வெளியேறுகிறது...மற்றபடி வேறு குறைகள் ஏதுமில்லை நண்பரே.. அடுத்து MQN மற்றும் sathiya ஆகிய இருவரும் ஒரே மாதிரி எடுத்துள்ளனர்.. இவர்களில்,MQN நல்ல தெளிவாகவும் ,composition perfectஆகவும்,,,கண்கள்,உதடு இரண்டும் தேடுவதையும் அழகாக எடுத்துள்ளார்.. ஆனால் கொஞ்சம் இயற்கை தன்மை குறைவது போல் உள்ளது,மேலும் வாண்டை விட குளிர்பானம்(sprite) தான் கொஞ்சம் அதிகம் தெரிகிறது..அதனால் ஒரு விளம்பர படம் போல் உள்ளது.. ஆனால் sathiya வின் படமும்,தேடுகின்ற பொருளும் இயற்கை...கண்கள் பழத்தை ஆசையுடன் பார்ப்பது மிகவும் அழகாக உள்ளது.. இருந்தாலும், கொஞ்சம் exposure அதிகம், unusual crop size,50mm prime lens வேற,இத வெச்சு இன்னும் நல்லா தெளிவா எடுத்திருக்கலாம் என்பது என் கருத்து..கொஞ்சம் வாய் பகுதியும் தெரிந்திருந்தால் கலக்கலாக இருந்திருக்கும்.. இவர்களில்,MQN ன் வாண்டு, கொஞ்சம் set up type படமாக இருந்தாலும்,இவரது படம் நல்ல தெளிவானது,distraction எதுவும் இல்லாதது. போட்டிக்கு அனுப்பக்கூடிய ஒரு படம் எப்படி நல்ல தெளிவாக எடுக்கவேண்டும் என்பதற்கு இவர் படம் ஒரு முன்னுதாரனம் என்பதற்காக... மூன்றாமிடம் பிடிப்பது MQN இறுதியாக, முதலிடத்திற்கு போட்டி போடுவது nila`s mom மற்றும் nirmala devi.r... சபாஷ்... சரியான போட்டி... இவர்களில், nila`s mom படத்தில், நிலாவின் குறும்பு பார்வை ஒன்று போதும்..கொள்ளை அழகு..செலக்டிவ் கலரிங்கும் மிக அருமையாக வந்துள்ளது..compositionனும் அருமை,dressம் அருமை..ஆனால்,இவ்வளவு processing செய்திருந்தும்,முக்கியமான contrast மற்றும் sharpness மிஸ் ஆகுது..அதுவுமில்லாமல் red border படத்தின் அழகை கெடுக்குது.. nirmaladevi யின் படத்தில், focus error மற்றும் backgroundல் உள்ள வெயில் இரண்டும் கொஞ்சம் தொந்தரவு செய்தாலும், ஊஞ்சல் விளையாடும் அந்த குழந்தையின் சிரிப்பு, மற்றும் லேசா ஜட்டி தெரியற மாதிரி இயல்பா ஊஞ்சல் ஆட்டிவிடும் அழகும் எல்லா குறைகளையும் தூக்கி சாப்பிட்டு விட்டது..மொத்த படமும் ரொம்பவும் இயல்பாக வந்திருப்பது ப்ளஸ் பாயிண்ட்.. இதில்,இருவரின் படங்களிலும் சம அளவில் நிறை,குறைகள் இருந்தாலும், nila`s mom ன் வாண்டு படம் pose வகை.. nirmala devi யின் வாண்டுகள் விளையாட்டு, இயல்பான வகை.. எனவே,இரண்டாம் இடம் பிடிப்பது NILA`S MOM உங்கள் படம் இப்படி வ்ந்திருந்தால்,இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. இயல்பான படத்தை எடுத்தற்காக முதலிடம் பிடித்து வெற்றி பெறுவது.. NIRMALA DEVI.R. வெற்றியாளர்கள் மற்றும் பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.... அப்புறம் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், நீங்கள் கூற விரும்பும் கருத்துக்கள் எதுவாக (including குட்டு) இருந்தாலும் கண்டிப்பாக comments ல் தெரிவிக்கவும்.அப்பொழுது தானே எங்களுக்கு ஊக்கமாகவும், நாங்களும்(PIT) மென்மேலும் வளர முடியும்... நன்றி கருவாயன்..

Thursday, November 26, 2009

என்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட்டுப் பார்க்கும் சௌகர்யம் இருந்தாலும், ஒரு பழைய ஆல்பத்தை தூசு தட்டி எடுத்து, புரட்டிப் பார்க்கும் இன்பம் இதில் இருப்பதில்லை. அதையும் தவிர, நம் JPGகளை எவ்வளவு முறை எவ்வளவு இடங்களில் சேமித்து வைத்தாலும், 2012 கணக்கா ஒரு பூகம்பம் வந்தா, எல்லாம் ஃபணால் ஆயிடும். எந்தளவுக்கு டெக்னாலஜியை நம்பலாமோ, அந்த அளவுக்கு, டெக்னாலஜியை நம்பாமல் இருத்தலும் நலம். (ஹிஹி, ஆணி அடிக்கரது நாங்களாச்சே. எப்ப வேணா பிடுங்கிக்கலாம்). ஒரு 'திடமான' முறையில் நம் மிக முக்கிய படங்களை சேகரித்து வைத்துக் கொள்ளல் நலம். திருமணங்கள் போன்ற முக்கிய தினங்களில், ப்ரொஃபெஷணல் ஆளுங்கள வச்சு, ஆல்பம் எல்லாம் போட்டு வச்சுப்போம். ஆனால், இதே அளவு முக்கிய நிகழ்வுகள் மேலும் பல நடக்கும்போது, இந்த சிரத்தை இருக்காது. புதுமனை புகல், குழந்தையின் முதல் பர்த்டே, தூர தேசச் சுற்றுலா, அரங்கேற்றங்கள், etc.. etc.. முக்கால் வாசி பேர், பேரங்காடிகளில் கிடைக்கும், ப்ளாஸ்டிக் ஆல்பத்தில், இந்த மாதிரி விசேஷத்தின் படங்கள் சொருகி வைப்பீர்கள். சில வருடங்களில், இதுவும் சிதிலமடைந்து, உபயோகமற்றுப் போய் விடும். எவ்வளவோ செலவு பண்ணிட்டோம், காமெராக்கும், ஏனைய பிற விஷயங்களுக்கும். பத்தோட ஒண்ணு பதினொண்ணா, எடுத்த படங்களை ஒரு புத்தக வடிவமாக மாற்றி வைத்துக் கொண்டால், பார்க்கவே ரொம்ப அம்சமாவும், மற்றவர்களுக்குக் காணிபிக்க ஒரு கெத்தாவும் இருக்கும். முன்ன மாதிரி இல்லாமல், இப்ப பல நிறுவனங்கள், இந்த புகைப்பட புத்தகத்தை, வடிவமைக்கவும், ப்ரிண்ட் செய்து கொடுக்கவும் களத்தில் இருக்காங்க. ஒரு புத்தகத்தில் இருபது பக்கங்களிலிருந்து, நூற்றுக்கணக்கான பக்கங்கள் வரையிலும் சேர்த்துக் கொள்ள முடியும். விலை, 20 பக்கத்துக்கு, கிட்டத்தட்ட $30லிருந்து தொடங்குகிறது. 20 பக்கத்தில், கிட்டத்தட்ட 200 படங்கள் வரை அடக்க முடிகிறது. நீங்கள் ஒவ்வொரு பக்கதிலும், ஒரு படத்திலிருந்து 20 படங்கள் வரை, வித விதமாக வடிவமைத்துக் கொள்ளும் lay-outகளை தெரிவு செய்து கொள்ள முடியும். மிக முக்கியமாக, ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது விளக்க உரையும், ஜாலியான வாக்கியங்களையும் சேர்த்து, ஒரு நல்ல வாசிப்பனுபவத்தையும் கொடுக்க இயலும். நான் சமீபத்தில் சென்ற இன்பச் சுற்றுலாவின் படங்களை இந்த வகையில் செய்து பார்த்ததில், பரம திருப்தி ஏற்பட்டதே, இந்தப் பதிவுக்கான காரணம். MyPublisher.com மற்றும் Shutterfly.com என்ற இரு நிறுவனத்தின் photo bookஐ முயன்று பார்த்ததில், shutterfly.com சிறப்பாய் இருப்பது தெரிந்தது. MyPublisher.comல் lay-out வசதிகள், மிகக் குறைவு. shutterfly.comல் அவர்கள் இணையத்திலேயே, நேராக எல்லா டிசைன் வேலைகளையும் செய்ய முடிகிறது. Mypublisherல் அப்படியல்ல. அவர்களின் சாஃப்ட்வேரை தரவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது. மேலும் சில நிறுவனங்களைப் பற்றி அலசியதில், அவற்றின் தரம் சரியில்லை என்று நட்பு வட்டாரத்தின் மூலம் அறியப்பட்டது. artscow.com, snapfish.com, lulu.com, etc.. Shutterflyன் புத்தகம், அழகாக, ஒரு நிஜ பத்திரிக்கை மாதிரி, பள பளா பேப்பரில் செய்யப்பட்டு, கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் உருவெடுத்துள்ளது. புகைப்படப் புத்தகம் செய்யாதவர்கள் செய்து பாருங்கள். செய்தவர்கள், உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள். இது என் ஐரோப்ப டிரிப்பின் புகைப்படப் புத்தகம். shutterfly செய்தது. பி.கு: புத்தகம் செய்ய, பேப்பர் தேவை. பேப்பருக்கு, மரம் தேவை. மரத்துக்கு காட்டை அழிக்கணும். இப்படி, டீப்பா திங்க் பண்ரவங்க, ஒரு புத்தகம் ஆர்டர் செய்ததும், ஒரு மரத்தை கண்டிப்பாய் நட்டு வைக்கவும். :)

Wednesday, November 25, 2009

அன்பு நண்பர்களே, வாண்டுகள் தலைப்பு கொடுத்தவுடன் கொஞ்ச நாட்களில் ஒரு போட்டோவும் வராததை கண்டு கொஞ்சம் வெறுத்து தான் போனேன். அதே சமயம் சில நிபந்தனைகளை தளர்வு செய்த பின் இவ்வளவு படம் வரும் என்றும் நினைக்கவில்லை. அதற்கு அனைவருக்கும் என் நன்றி. வந்திருந்த படங்கள் அனைத்திலும் வாண்டுகள் இருந்தாலும் 3 படங்கள் இந்த தலைப்புக்கு கீழ் வருமா என்று யோசிக்க வைத்தது..

  1. amal
  2. prakash
  3. ramachandran.

இந்த படங்களை பார்த்தால் வாண்டுகள் என்று சொல்வதை விட,மிகவும் பரிதாபத்திற்குரியவர்களாக தான் தெரிகிறது..

பொதுவாக வாண்டுகள் எனும்போது அவர்களின் சேட்டையை வைத்தே அந்த பெயர். மேலே இருப்பவர்களின் பரிதாப நிலையில் அவர்களின் சேட்டையை எங்கே பார்ப்பது ?

இந்த படங்கள் `street photography, life on streets`போன்றவற்றிற்க்குக்கு கீழ் வருமே தவிர,வாண்டுகள் தலைப்புக்கு வராது என்பது எனது கருத்து.

குழந்தைகளின் தனிப்பட்ட பிரச்சனைகள் என்பது வேறு, உணவு,உடை,கல்வி,குழந்தை தொழில் போன்ற வாழ்க்கை பிரச்சனைகள் என்பது வேறு..

ஒரு குழந்தை குறும்பு அல்லது அடம் பண்ணி, சாப்பாட்டிற்க்கு வழியில்லாமல் அழுவதற்க்கும் நிறைய வித்தியாசம் உள்ளது..

குறும்பு பண்ணி அழற குழந்தைகளை படம் எடுக்கலாம்,அது வாண்டுத்தனம். ஆனா இந்த மாதிரி சோகம் அப்படி ஆகாதுங்க.

இந்த மாதிரி படம் எடுக்கும் போது, நம்மால சில நடைமுறை காரணங்களால் அவர்களுக்கு உதவி பண்ணுவதற்க்கு வழியில்லாமல் போகலாம்,அந்த மாதிரி நேரத்தில்,அவ்ர்களை நாம் சிரிக்கவாவது வைக்கலாம். அப்படி சிரிக்க வைத்து, படம் எடுத்து அவர்களுக்கு காட்டினால் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள். அல்லது அவர்களது போட்டோவை print போட்டு தரலாம்..கண்டிப்பாக அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

அப்புறம் valli simhan மற்றும் yaar yaar.. இந்த படங்களை எப்படிங்க எடுத்துக்கிறது? அந்த வாண்டுகளே இப்போ பெரிய வாண்டுகளுக்கு அம்மா அப்பாவா இருப்பாங்களே என்ன சொல்றீங்க. படமும் சுத்தமா தெளிவின்றி இருக்கிறது.

கடைசி பத்து....

  1. VANDOKAL(over exposure)
  2. SRINI (poor composition,அழும் குழந்தை,flash அதிகம்)
  3. SELVA(poor composition,poor exposure)
  4. GURUPANDI(poor composition,subject எங்கே?)
  5. THIRUMAL(poor processing,focus)
  6. TULSI GOPAL(poor shot,poor focus,)
  7. ARURAN(தேதி,குழந்தையுடன் பெரியவங்க இருப்பது,தெளிவின்மை)
  8. ARUN(இதெல்லாம் லொள்ளு)
  9. GOPAL(harsh flash,nothing special)
  10. DAS(poor focus,flash)

தயவு செய்து நிறைய பயிலவும்.. நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது..உங்கள் படங்கள் அனைத்தும் இன்னமும் அருமையாக எடுத்திருக்க முடியும். ஏற்கனவே சொன்னது தான். உங்களால் முடியும். நிறைய எடுத்துப் பழகுங்க.

கடைசி 10 க்கு அப்புறம் வெளியேறியவர்கள்....

படங்கள் தலைப்புக்கு ஏற்றபடி இருந்தாலும்,குறைகள் சில இருப்பதால் வெளியேறியவைகள்.....அரையிறுதிக்கு கிட்டதட்ட நெறுங்கிய படங்களும் உண்டு,அவைகளுக்கு மட்டும் இங்கேயே comment கொடுத்துள்ளேன்..

  1. DHANU
  2. NAGAPPAN( வெளிநாட்டுல போட்டோ புடிக்கிறது கஷ்டம் தான்,படம் நன்றாக இருந்தாலும் blur அதிகமாக உள்ளது)
  3. VANDU
  4. BUHAIRAJA
  5. PMT
  6. MANIVASAGAM(படம் நன்றாக இருந்தாலும் composition சிறப்பாக இல்லை)
  7. SIVARK
  8. BOOPATHI(same as manivasagam)
  9. DUDE
  10. MATHAN
  11. VISA
  12. RAGU
  13. GB
  14. MATHANLAL
  15. MURALI
  16. KAAVIYAM
  17. ARULRAJ
  18. VIJAY
  19. NANDAKUMAR
  20. VINOD
  21. ராஜேஷ்
  22. VENNILA MEERAN
  23. MUTHULETCHUMI
  24. MAN(I)MATHAN
  25. SEEMACHU
  26. KAMAL
  27. JEYA
  28. BHARATHI
  29. OPPAREE
  30. NARAYANAN( அழகான pose, blur அல்லது out of focus)
  31. KARTHIKEYAN ( same as nagappan)
  32. RAMALAKSHMI ( படம் தெளிவாக இருந்தாலும்,simple ஆக உள்ளது)
  33. RAGU
  34. NATARAJ

இன்னும் நல்லா படம் எடுங்க...இதெல்லாம் பத்தாது நண்பர்களே... மத்தவங்க பாத்து மெரண்டு போகனும். ரெடியா இருங்க அடுத்த போட்டிக்கு

அரையிறுதிக்கு முன்னேறியவர்கள்....

Udayabaskar Truth Tjay Senthil S.M.Anbu Anand Rajesh Natarajan Nirmala Devi.R Nila's Mom MQN Karthikero Karthik Karthi Sathiya Adith Ayilyan விரைவில் முதல் மூன்றுடன் சந்திக்கிறேன்... -கருவாயன்..

Tuesday, November 24, 2009

படங்களை UnSharpMask கொண்டு தெளிவாக செய்வது பற்றி ஏறகனவே ஒரு முறை இங்கே பார்த்து இருக்கிறோம். இந்த இடுகையில் Manny Librodo பிரபலமாக்கிய முறையை பார்க்கப் போகிறோம். உங்களின் படங்களை ஒளிவட்டம் ( halos), மற்றும் அதிக இரைச்சல் இல்லாமால் தெளிவாக ஆக்க இந்த முறை மிகவும் பயன்படும்.


இந்தப் படம் உதாரணதிற்கு .







வழைமை போலவே படத்தை கிம்பில் திறந்து நகலெடுத்துக் கொள்ளுங்கள்



Filters->Enhance-> UnsharpMask தெரிவு செய்துக்கொள்ளுங்கள்.



Radius=40 Amount=0.18 Threshold =0



மீண்டும் ஒரு முறை UnSharpMask



இந்த முறை Radius=0.3 Amount=1.5 Threshold =0



படம் தெளிவாக ஆகி இருக்கும்.

அடுத்து Edit->Fade Unsharp Mask




Opacity= 100 என்ற அளவை மாற்றாமல்




Mode -> Darken Only என்று மாற்றிக் கொள்ளுங்கள்




இனி இதே அளவை மீண்டும் ஒரு முறை Lighten Only க்கு செய்ய வேணும்.

எளிதாக Filters-> Repeat UnsharpMask



Edit->Fade UnsharpMask .
இந்த முறை Mode -> Lighten Only




அவ்வளவு தான். அனுஷ்க்கா இன்னும் அநியாத்திற்கு அழகாக தெளிவாக ஆகி இருப்பார். படத்தை கிளிக்கி பெரிதாகப் பார்த்தால் வித்தியாசம் தெளிவாகத் தெரியும்.


அவ்வளவுதான் . அனைவரும் Mannyக்கு ஒரு நன்றி போட்டுக்கொள்ளவும்.


சுருக்கமான வழிமுறை.

1. Duplicate Layer
2. UnSharpMask 40 0.18 0
3.UnSharpMask 0.3 1.5 0
4. Edit->Fade Mode:Darken Only
5. UnsharpMask 0.3 1.5 0
6. Edit->Fade Mode: Lighten Only
7. Flatten image







Tuesday, November 17, 2009

புகைப்பட ஆர்வலர்களுக்கான இலவச நீட்சிகள் FireFox உலாவியில் பல இருக்கின்றன. நான் அதிகம் பாவிக்கும் இரண்டு இங்கே TinEye : புகைப்படங்களை தேடுவதற்கான நீட்சி இது. ஒரு படத்தை அல்லது படத்துக்கான நிரலை அளித்தால், இதே போன்ற படங்களை வலையில் தேடித் தரும்.படத்துக்கான Google என்று கூறலாம். உதாரணதிற்கு எனது இந்தப் படத்தை இங்கே தேடினால், ஆறு இடங்களில் சுட்டு போட்டு இருக்கிறார்கள் என்று காட்டுகிறது . இவர்கள் மேல் திருட்டு வழக்குப் போடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன் :-) FireShot: பிகாஸாவில் Screen Shot எடுப்பது பற்றிய இடுகை இங்கே. இது அதை விட எளிது. FireFoxல் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளலாம். சில அழகான பிற்சேர்க்கைகளும் செய்ய முடியும்.

Tuesday, November 10, 2009

நல்ல சீரிய சூரிய ஒளியில் இயற்கை அழகை புகைப்படப் பெட்டியில் பிடிப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அதே நேரம் இரவின் அழகையும் பிடிக்கலாம். நட்சத்திரங்கள், ஜொலிக்கும் விளக்குகள் என நிறைய இருக்கிறது. ஆனால் உள்ளரங்கில் எடுக்கப்படும் புகைப்படத்தின் தரம் எதிர் பார்த்த அளவு வருவதில்லை. முக்கிய காரணம் போதுமான வெளிச்சம் கிடைக்காதது. சில படங்கள் ரொம்ப கறுத்து ஒன்றுமே தெரியாமல் போகும். இல்லாட்டா கை நடுங்கி நாலு பெக் அடிச்சிட்டு அப்புறமா எடுத்த மாதிரி இருக்கும். அதை சரி செய்ய ஃப்ளாஷ் அடிச்சா போச்சு... உள்ளதும் போச்சுடாங்கற கதையா போய்டும். ஆனால் இதையெல்லாம் சமாளிச்சு இருக்கும் வெளிச்சத்தை மேம்படுத்தி அல்லது இயன்ற அளவுக்கு தேவையான வெளிச்சத்தை உருவாக்கி வீட்டினுள்ளும் அருமையான படங்களை எடுக்க முடியும். ஏற்கனவே விளம்பரங்கள் போட்டிக்கு வந்த படங்களின் தரத்தையும் நினைவுக் கூர்ந்து பார்க்கலாம். வெளியில் எடுக்கும் புகைப்படத்தை விடவும் வீட்டில் எடுக்கும் புகைப்படத்திற்கான ஒளியை நம்மால் கட்டுப்படுத்தி தேவையான அளவு மட்டுமே புகைப்படம் எடுக்கப் போகும் பொருளின் மீது விழச்செய்ய முடியும். நம்புங்கள் நம்மால் முடியும்... இங்கே நாம் விவாதிக்கப் போவது இருக்கும் ஒளியை எப்படி மேம்படுத்தி உபயோகிப்பது Portrait & Tabletop photography வீட்டிலேயே தேவையான ஒளிக்கருவிகளை செய்து கொள்வது & உபயோகிக்கும் முறைகள். கண்ணாடி பொருட்களை புகைப்படமெடுக்கும் நுணுக்கம் நகை, சிறு பொருட்கள் ( மொபைல் போன், எலெக்ட்ரானிக் கேட்ஜட் ) லைட் பெயிண்டிங். விடுபட்டவை ஏதும் இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லவும். இந்தத் தொடரை வெறும் "மற்றுமொரு பாடமாக" இல்லாமல், நீங்களும் பங்கெடுத்து செயல்பட்டால் மட்டுமே வெற்றிகரமாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். சொல்லப்படுபவகளை முயற்சித்து பார்த்து அதற்கேற்ப வரும் பின்னூட்டங்களே இது போன்ற பதிவுகளை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல உதவும் காரணிகள். அடுத்த பதிவு - குறைந்த விலையில் சிறு பொருள்களைப் படம் பிடிக்க லைட் டெண்ட் அமைப்பது எப்படி ? ( செய்முறை விளக்கங்களுக்கான படங்களுடன் வருவதால் சற்றே தாமதம் ஆகலாம். நிதானித்தருள்க ) கூடிய விரைவில் சந்திப்போம். அதுவரை.... சில படங்கள் :) ஃபெராரி - ஜீவ்ஸ் :. செர்ரீஸ் - ஆனந்த்:. கோக் - கைப்புள்ள:. என்ன தவம் செய்தனை.. யசோதா - ஜீவ்ஸ்:. LG Cookies - Jeeves :. Yeaaay... Lets start the wheel rolling.....
அன்பு மக்களே, சிரமத்திற்கு மன்னிக்கவும்.. நான் சொன்ன மாதிரியே எல்லோரும் கண்டபடி திட்டியிருப்பீங்க... ஆனா,இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நெனைக்கவே இல்லை.. நான் முன்ன பின்ன வெளியே போயிருந்தா குழந்தைகளை படம் பிடிப்பது கஷ்டம்னு கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கும்.. இப்போ நல்லாவே புரிஞ்சுகிட்டேன்.. அதனால,கொஞ்சம் நிபந்தனைகளை மட்டும் தளர்த்திக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்துள்ளோம்.. தலைப்பு வாண்டு(கள்) தான், அதனால, ஒரு வாண்டு இருந்தாலும் பரவாயில்லை..கண்டிப்பா நீங்க ஒரு குழந்தையையாவது படம் எடுத்திருப்பீங்க..இந்த தலைப்பு உங்களுக்கு சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன் மக்களே... ஆனா மக்களே, எங்க வீட்ல நானும் ஒரு குழந்தை மாதிரி தான்,அப்படின்னு உங்க photoவை அனுப்பீடாதீங்க... ஆகவே,மீசை வெச்ச குழந்தைகளும்,தாவணி போட்ட தீபாவளிகளும் கண்டிப்பா கிடையாது... மேலும்,இது வரையில் அனுப்பியவர்களுக்கும் இன்னொரு வாய்ப்பு தருகின்றோம்.. அவர்களும் இன்னொரு முறை அனுப்பலாம்..ஏனென்றால்,அவர்கள் இதை விட நல்ல படமும் வைத்திருக்கலாம்.. அதுவுமில்லாமல், மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு செய்கிறோம்,எனவே போட்டிக்கு புகை படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி:20-11.2009 சில சாம்பிள்கள்... என்ன மக்களே,இப்போ உங்களுக்கு சந்தோஷம் தானே... புதுசு புதுசா அசத்துங்க...

Thursday, November 5, 2009

கருப்பு வெள்ளைப் படங்களுக்கு கலரடிப்பது ( Tinting) மிகப் பிரபலம். பொதுவாக Sepia tone படங்களை நிறையப் பார்த்து இருப்பீர்கள். இதுபோன்ற படங்களை எளிதாக கிம்பில் செய்வதுப் பற்றி இங்கே. படத்தை கிம்பில் திறந்து பின்ணணி லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள். உங்களின் படம் வண்ணப்படமாக இருந்தால் அதை முதலில் கருப்பு வெள்ளைக்கு மாற்ற வேண்டும். அதற்கு எளிதான வழி Colors->Desaturate... Luminosity தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். படம் கருப்பு வெள்ளைக்கு மாறி இருக்கும். இனி Colors-> Colorize... தெரிவு செய்யுங்கள். இங்கே மாற்றுவதற்கு மூன்றுப் பகுதிகள் இருக்கும். Hue, Saturation மற்றும் Lightness. Sepia க்கு மாற்ற Hue = 36, Saturation =20 Lightness=0 என்று தெரிவு செய்துக் கொள்ளுங்கள். உங்களின் தேவைக்கு ஏறப மாற்றிப் பாருங்கள். Sepia மட்டும் அல்ல உங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தாலும் படத்தை மாற்றிக் கொள்ளலாம். உதாரணதிற்கு Hue= 230 Saturation=32 Lightness =0 Hue= 352 Saturation=64 Lightness =0 அவ்வளவுதான் வேலை. விளையாடிப் பார்த்து அடுத்த முறை வெறும் கருப்பு வெள்ளைக்கு மற்றும் மாற்றாமல், இந்த முறையிலும் கலரடித்துப் பாருங்கள்.
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff