PIT வாசகர்களுக்கு வணக்கம், பொதுவாக புகைப்படக்கலைஞர்கள் பெரும்பாலோனோர்கள் தங்களது படத்தொகுப்புகளில் சிலப்படங்களை "Selective coloring" காக கொடுக்க நினைப்பார்கள். "Selective Coloring" என்பது முழுபடத்தையும் கருப்பு வெள்ளையாக மாற்றிவிட்டு படத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வண்ணமாக காட்டி பார்ப்பவரின் கவனத்தை ஈர்த்துவிடும் ஓர் நுட்பமாகும். பொதுவாக GIMPலும் போட்டோஷாப்பிலும் இதனை Eraser டூலைக்கொண்டே தான் பெரும்பாலோனோர்கள் செய்வார்கள். இந்த Eraser டூலை கொண்டு "selective coloring" செய்வதை ஏற்கனவே PIT தளத்தில் கட்டுரையாக
இங்கே தந்திருக்கிறார்கள். ஆனால் கட்டுரையின் முடிவில் Layer mask கொண்டு அழிப்பது Homework என கட்டுரையை முடித்திருக்கிறார்கள். அந்த Homework ஐ நான் இன்று Class Workகாக உங்களுக்காக தொடருகிறேன்.
நான் இந்த Layer mask பயன்படுத்திதான் போட்டோஷாப் & கிம்பில் "Selective coloring" செய்வேன். Layer mask கின் அடிப்படை தத்துவத்தை நீங்கள் புரிந்துகொண்டால் எளிமையாக Layer mask நுட்பத்தை தேவையான சந்தர்பங்களில் எளிமையாக பயன்படுத்திக்கொள்ளலாம். இது நான் கடைபிடிக்கும் கோட்பாடு. Layer maskகின் அடிப்படை தத்துவம்
"black conceals, white reveals" இதனை இன்று முதல் நன்றாக மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.
சரி கட்டுரைக்கு போகலாம். முதலில் உங்களது படத்தை "GIMP"இல் திறந்துகொள்ளவும்.இப்போது உங்களது "Background" லேயரை Duplicate செய்யவேண்டும். இதற்கு லேயர் பேலட்டில் இருக்கும் "Copy bacground layer" ஐகானை கிளிக்செய்யவும் அல்லது பேக்கிரவுண்டு இமேஜ் லேயரை வலது கிளிக் செய்து "Duplicate background layer" என்பதனை தேர்ந்தெடுக்கவும்.
இப்போது Duplicate செய்த லேயரை நாம் கருப்பு வெள்ளையாக மாற்றவேண்டும் இதற்கு Color>Hue&Saturation அழுத்தவும். இப்போது தோன்றும் டயலாக் பாக்ஸில் Saturation இன் மதிப்பை -100 என தரவும். இப்போது உங்களது படம் கருப்பு வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கும்.
குறிப்பு : இந்த Hue & Saturation க்கு பதிலாக நீங்கள் Color>Desaturate ம் பயன்படுத்தலாம். இரண்டிற்க்கும் ரிசல்ட் ஒன்றுதான்.
இனி இந்த கருப்பு வெள்ளை லேயருக்கு Layer mask சேர்ப்போம். இதற்கு கருப்பு வெள்ளை லேயரை வலது கிளிக் செய்து "Add Layer Mask" என்பதனை தேர்ந்தெடுக்கவும்.
இப்போது தோன்றும் டயலாக் பாக்ஸில் வெள்ளை நிறத்தை தேர்வு செய்து ஓகே செய்யவும்.
இப்போது உங்களது கருப்பு வெள்ளை லேயரில் Layer mask சேர்க்கப்பட்டிருக்கும். இனி உங்களது டூல் பாக்ஸில் உங்களது Foreground மற்றும் Background ன் நிறங்கள் முறையே கருப்பு & வெள்ளையாக மாற்றவும். இதற்க்கு உங்களது விசைபலகையில் "D" ஐ அழுத்தவும். (லேயர் மாஸ்கின் தத்துவத்தை மீண்டும் ஞாபகத்திற்கு கொண்டு வாருங்கள்).
இனி பிரஷ் டூலை தேர்வு செய்யவும். பிரஷின் அளவை உங்களது விருப்பத்திற்க்கு வைத்துக்கொள்ளவும்.
இனி படத்தில் எந்த பகுதியை வண்ணமாக காட்டவேண்டுமோ அந்த பகுதிகளை பிரஷ் செய்யவும். இப்போது நீங்கள் பிரஷ் செய்த இடங்கள் எல்லாம் வண்ணமாக மாறியிருக்கும்.பிரஷ் செய்யும் போது கூடுமானவரை படத்தை Zoom செய்துகொள்ளவும் பின் அதற்கேற்றார்போல பிரஷ் அளவை தீர்மானித்துக்கொள்ளவும்.
இங்கே தான் ஒரு விஷயம் கவனிக்கபடவேண்டும். நாம் என்னதான் கவனித்து பிரஷ் செய்தாலும் உங்களது ஆப்ஜக்டையும் தாண்டி வண்ணம் வெளியேசென்று படத்தை கெடுத்துவிடும். இது பெரும்பாலும் எல்லோருக்கும் ஏற்படுவதே பார்க்க கீழேயுள்ள படம்:
சரி இதற்கெல்லாம் வழி செய்யத்தானே நாம் லேயர் மாஸ்க்கை ஏற்படுத்தியிருக்கிறோம். அதாவது "black conceals, white reveals" இல்லையா எனவே உங்களது டூல் பாக்ஸில் இருக்கும் Foreground & Background வண்ணத்தை முறையே வெள்ளை & கருப்பு என உல்டா செய்துகொள்ளவும். இதற்க்கு தட்டச்சு பலகையில் இருக்கும் "X" ஐ அழுத்தவும்.
இப்போது மீண்டும் ஒருமுறை பிரஷ் டூலை தேர்வு செய்து நீங்கள் தவறு செய்த இடத்தில் பிரஷ் செய்யுங்கள். வண்ணம் கருப்பு வெள்ளையாக மாறுவதை காணலாம்.பிரஷ் அளவை உங்கள் தேவைக்கு தகுந்தவாறு செட் செய்து கொண்டு பணிபுரிந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
Final image:
ஆக இதுதான் Layer maskன் தத்துவம் இதனை புரிந்துகொண்டால் புகைப்பட எடிடிங்கில் பல இடங்களில் பேருதவியாக இருக்கும். இனி PIT வாசகர்களாகிய நீங்களும்
"Selective coloring" இல் அசத்துவீர்கள் என நம்புகிறேன்.
குறிப்பு: நான் என்னுடைய கணினியில் இயங்குதளம் மற்றும் மென்பொருட்களை பிரெஞ்சு மொழியில் பயன்படுத்துவதால் என்னுடைய Screen shot கள் பிரெஞ்சு மொழியில் இருக்கிறது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
***
Lesson By ‘Nithi Clicks’http://www.flickr.com/photos/nithiclicks/