அன்பு நண்பர்களே, உங்களில் பலரும் தனியாக உங்கள் நிழற்படங்களுக்கென்று ஒரு தனி வலைப்பூ (போட்டோ பிளாக்) வைத்திருப்பதை நாங்கள் கவனித்து வருகிறோம். அவற்றையெல்லாம் ஒருங்கிணைக்க நான், ஜீவ்ஸ், ஆனந்த் மற்றும் பி.ஐ.டி குழுவும் ஒரு புது முயற்சியை உருவாக்கிவருகிறோம். உங்களில் யாரெல்லாம் உங்கள் புகைப்படத்துக்கென வலைப்பூ வைத்திருக்கிறீர்களோ (Flickr அல்ல) அவர்கள் அதன் சுட்டியை பின்னூட்டமாக கொடுக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். இதுவரை தங்கள் படங்களுக்கென்று தனி பதிவை வைத்திருக்காத பதிவர்கள் உடனே உங்களுக்கென்று ஒரு புது பதிவை ஆரம்பித்து அதன் சுட்டியை தாருங்கள். இன்னும் ஒரு வார காலத்தில் இந்த நிகழ்வை முடித்தால் நலம். மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
சரி புகைப்படமில்லாமல் ஒரு பதிவா? இதோ சமீபத்தில் எங்கள் ஊரான கோவையை எனது கார் பழுதானதால் காத்திருந்த சமயத்தில் க்ளிக்கினேன். பலரும் பாராட்டினார்கள் இந்த கம்போசிசனை! க்ளிக்கிப் பாருங்கள்.

அன்புடன்...
ஓசை செல்லா