Showing posts with label மென்பொருள் அறிமுகம். Show all posts
Showing posts with label மென்பொருள் அறிமுகம். Show all posts

Thursday, October 17, 2013

பொதுவாக கணினியில் சேமித்துவைத்துள்ள படங்களை Thumbnail View பார்க்க உதவும் மென்பொருள்களை  image viewerகள் என்று அழைக்கப்படுகிறது. என்னதான் நாம் பயன்படுத்தும் விண்டோஸ்/லினக்ஸ் பதிப்புகளே இந்த சேவையை வழங்கினாலும்(Windows File explorer/Linux file Explorer) அனைத்துவகையான பார்மேட்டுகளையும் இந்த விண்டோஸ்/ லினக்ஸ் File explorer கள் ஆதரிப்பதுகிடையாது.சான்றாக RAW,PSD பார்மேட்டுகள்.


RAW பார்மேட்டுகளில் படம்பிடிப்பவர்கள் கட்டாயம் ஏதாவது ImageEditorஐ தங்கள் கணினியில்  நிறுவியிருக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.அந்த வகையில் கூகுள் வழங்கிடும் பிக்காஸா என்ற இலவச மென்பொருள் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறது.அடுத்ததாக புகைப்படக்கலைஞர்கள் பலராலும் பரிந்துரை செய்யப்படும் ஒரு மென்பொருள் Irfanview ஆகும்.இது இலவச பதிப்பாகவும் மற்றும் விலைகொடுத்து வாங்கும் பதிப்பாகவும் கிடைக்கிறது. Irfanview இலவசபதிப்பில் சில நல்லவிஷயங்கள் இருந்தாலும் புதியதாக சந்தைக்கு வரும் புதிய மாடல்cameraகள் தயாரிக்கும் RAW கோப்புகளை ஆதரிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்இவ்வாறு இருக்கையில் தன்னுடைய எளிமையான User Interface மற்றும் RAW கோப்புகளை வேகமாகக் கையாள்வது போன்றவற்றில் Faststone Image Viewer என்ற இந்த இலவச மென்பொருள் மற்ற Image Viewer_ களைக்காட்டிலும் சற்று மேலோங்கி நிற்கிறது (எங்களுடைய பார்வையில்).

பொதுவாகவே PITல் பதியப்படும் கட்டுரைகள் பலவும் அனுபவப்பூர்வமான விஷயங்களை உள்ளடக்கி தான் தயாரிக்கப்படுகிறது.அவ்வாறாக சமீபத்தில் நான் இந்தியா சென்றிருந்த போது « பாண்டிச்சேரி புகைப்படக்கலைஞர்கள் குழுமத்தை »  சேர்ந்த சில உறுப்பினர்கள் தாங்கள் புதியதாக வாங்கிய
 Canon 6D மற்றும் Nikon D5200 போன்ற கேமராக்களில் உருவாக்கப்படும் RAW கோப்புகளை அவர்கள் பயன்படுத்தும் Image Viewer மற்றும் Photoshop CS5, Photoshop CS6  மென்பொருளானது கையாள மறுப்பதாகவும்,என்னிடம் கூறி இதற்கு மாற்றுவழி இருந்தால் கூறுங்களேன் என கேட்டிருந்தார்கள்.

விலை அதிகம் கொடுத்து வாங்கும் போட்டோஷாப்  போன்ற மென்பொருட்களும் ஏன் RAW கோப்புகளை திறக்க மறுக்கிறது ? இதற்கு விளக்கம் கூறுங்களேன் எனவும் என்னிடம் நண்பர்கள் கேட்டிருந்தார்கள். அதாவது உங்களது கேமராவானது சந்தைக்கு விற்பனைக்கு வரும்முன்னர் வெளிவந்த போட்டோஷாப் பதிப்பை நீங்கள் பயன்படுத்துவீர்களேயானால் உங்களது Camera Profile லானது போட்டோஷாப்பில் இருக்காது ஆகவே உங்களது RAW கோப்பை Photoshop Camera RAW வால் புரிந்துகொள்ள தெரியாமல் திறக்கமறுக்கிறது. ஆக புதியதாக சந்தைக்கு வந்த கேமராக்களின் RAW கோப்புகளை போட்டோஷாப்பில் திறக்கவேண்டுமெனில் நீங்கள் உங்களது போட்டோஷாப்பையும்,போட்டோஷப்பிலிருக்கும் Camera RAW வையும் தற்பொழுதைய பதிப்பிற்கு உபரியாக பணம் செலுத்தி  மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.
ஆனால் இது அனைவருக்கும் சாத்தியப்படுமா?
விலைசெலுத்தி வாங்கப்படும் மென்பொருட்களிலேயே இவ்வளவு குறைகள் இருக்கும் போது இலவச மென்பொருளாக கிடைக்கும் Faststone Image Viewer இல் சந்தையில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேமராக்கள் தயாரிக்கும் RAW  கோப்புகளை எடிட் செய்வதில் ஆரம்பித்து ஏராளமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இந்த Fastsone  Image Viewer ஐ ஏன் பிட் வாசகர்கள் பயன்படுத்திப்பார்க்ககூடாது என்ற நோக்கத்தில்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

Faststone ஒருமுறை இயக்கியவுடன் இடதுபுறம் File Explorer ரும் வலதுபுறம் நீங்கள் தேர்வுசெய்த போல்டரில் இருக்கும் படங்களும் தெரியும்.


இப்போது எந்த படத்தினை நீங்கள் திறக்க இருக்கிறீர்களோ அந்த படத்தின் மீது இருமுறை மவுஸால் கிளிக் செய்தாலே போதும். Fullscreen வியூவில் தெரியும். அதன்பிறகு உங்களுடைய மவுஸை நான்கு மூலைக்கு நகர்த்தி எந்த ஆப்ஷன் தேவையோ அந்த ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளவேண்டியது தான்.

இக்கட்டுரைக்காக நான் எடுத்துக்கொண்ட படங்களை பாருங்கள்.கீழேயுள்ள படமானது என்னுடைய நண்பர் கேமராவில்(Canon 6D) RAW வில் நான் candid ஆக கிளிக் செய்தது.


இந்த RAW கோப்பை 100 சதவீதம் Faststoneல் கருப்பு வெள்ளையாக எடிட் செய்து காட்டியிருக்கிறேன்.இப்படம் என்னுடைய வீட்டில் மிகவும் low lighting இல் எடுக்கப்பட்டது. என்னதான் Canon 6D full frameல் எடுத்திருந்தாலும் ISO3200க்கு படத்தை பெரிது படுத்திப்பார்க்கையில் லேசான‌ Noise தென்பட்டது.Faststoneல் noiseசரிசெய்யப்பட்டு இருப்பதை காணலாம்.

இதேபோல கீழேயுள்ள படமானது Nikon D5200 இல் எடுக்கப்பட்டRAW கோப்பு,இதனை பிற டூல்களின் உதவியின்றி Faststone கொண்டு process செய்யப்பட்டுள்ளது.

Photo credit: Lakhsmi.

கீழேயிருக்கும் படமானது எனது லண்டன் நகர பயணதின்போது Panasonic FZ 38 இல் RAW பார்மேட்டாக எடுத்தது.இப்படத்தினை details சற்றுகூட்டவேண்டும் என நினைத்திருந்தேன்.அவ்வாறாக Faststone ல் sharpen செய்யப்பட்ட படத்தினை காணலாம்.
இதுபோன்று விலைகொடுத்து வாங்கும் எடிட்டிங் மென்பொருட்களில் இருக்கும் பல அம்சங்களும் இந்த இலவச மென்பொருளில் இருக்கின்றது என்பது இதன் சிறப்பு.
  • Image browser and viewer with a familiar Windows Explorer-like user interface
  • Support of many popular image formats
  • Crystal-clear and customizable one-click image magnifier
  • Powerful image editing tools: Resize/resample, rotate/flip, crop, sharpen/blur, adjust lighting/colors/curves/levels etc.
  • Eleven re-sampling algorithms to choose from when resizing images
  • Image color effects: gray scale, sepia, negative, Red/Green/Blue adjustment
  • Image special effects: annotation, drop shadow, framing, bump map, sketch, oil painting, lens
  • Draw texts, lines, highlights, rectangles, ovals and callout objects on images
  • Clone Stamp and Healing Brush
  • Superior Red-Eye effect removal/reduction with completely natural looking end result
  • Multi-level Undo/Redo capability
  • One-touch best fit/actual size image display support
  • Image management, including tagging capability, with drag-and-drop and Copy To/Move To Folder support
  • Histogram display with color counter feature
  • Compare images side-by-side (up to 4 at a time) to easily cull those forgettable shots
  • Image EXIF metadata support (plus comment editing for JPEGs)
  • Configurable batch processing to convert/rename large or small collections of images
  • Slideshow creation with 150+ transition effects and music support (MP3, WMA, WAV...)
  • Create efficient image attachment(s) for emailing to family and friends
  • Print images with full page-layout control
  • Create fully configurable Contact Sheets
  • Create memorable artistic image montages from your family photos for personalized desktop wallpapers (Wallpaper Anywhere)
  • Acquire images from scanner. Support batch scanning to PDF, TIFF, JPEG and PNG
  • Versatile screen capture capability
  • Powerful Save As interface to compare image quality and control generated file size
  • Run favorite programs with one keystroke from within Image Viewer
  • Offer portable version of the program which can be run from a removable storage device
  • Configurable mouse wheel support
  • Support multiple program skins
  • Support dual-monitor configurations
  • Support touch interface (tap, swipe, pinch)
  • And much more... 

    நான்
    இந்த மென்பொருளுக்கான பாடங்களை தொடர்பதிவாக போடலாம் என எண்ணியிருந்தேன் ஆனால் அதற்கவசியமில்லாமல் Faststone 
    இணையதளத்திலேயே PDF tutorial லாக தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Faststone Image Viewerஐ பதிவிறக்கம் செய்ய கீழேயுள்ள சுட்டியை அழுத்தவும்.

    Tutorial பதிவிறக்கம் செய்ய கீழேயுள்ள சுட்டியை அழுத்தவும்.


-நித்தி ஆனந்த்

Monday, August 6, 2012

எல்லாருக்கும் வணக்கம்!

சில நேரங்களில் நாம் இணையத்தில் உலவி வரும்போது பொக்கிஷமாக சில விஷயங்கள் கிடைக்கும். சில நேரங்களில் நாம் கற்பனையில் 'இப்படி ஒரு வசதி இருந்தால் நல்லாருக்குமே' என்று நினைப்பது போல் கிடைக்கும். அப்படி கிடைத்ததுதான் இந்தத் தளம். நான் புகைப்படக்கலை (ஒளிப்படக்கலை?!?) கற்க ஆரம்பித்திருந்த நேரத்தில் இப்படி ஒரு மென்பொருள் (சாஃப்ட்வேர்) இருந்தால் நல்லாருக்குமே/எளிதில் புரியுமே என்று நினைத்ததுண்டு.

இந்தத் தளத்தில் ஒரு அருமையான சிமுலேட்டர் உருவாக்கி வைத்துள்ளார்கள். அதில் மூன்று மோட்களும் (Manual, Aperture priority & Shutter priority) உள்ளன. அதில் நாம் அதிலுள்ள அளவுகளை மாற்றி மாற்றி 'கிளிக்' செய்து படம் எடுப்பதை கற்றுக் கொள்ளலாம். உடனே நாம் எடுத்த படமும் தெரிகிறது. அதைப பார்த்து புரிந்து கொண்டு அளவுகளை மீண்டும் மாற்றி படம் எடுக்கலாம். நிச்சயமாக இது ஒரு நல்ல பயனுள்ள தளமாக இருக்கும் என நம்புகிறேன்.



***
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff