Showing posts with label DOF. Show all posts
Showing posts with label DOF. Show all posts

Thursday, March 13, 2008

மு.கு:
இந்த பதிவில் வரும் aperture,shutter speed போன்ற கலைச்சொற்களுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் சைடுபாரில் உள்ள பதிவுகளில் பார்த்துத்தெரிந்துக்கொள்ளுங்கள்.

நமது கேமராக்களில் பார்த்தீர்கள் ஷட்டர் பொத்தானிற்கு பக்கத்திலேயே ஒரு dial பொருத்தப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.அதில் Av,Tv என்று வெவ்வேறு வகையான modes குறியிடப்பட்டிருக்கும்.ஆனால் நாம் அதை பற்றியெல்லாம் அவ்வளவாக கண்டுக்கொள்வது கிடையாது.எப்போதும் auto mode-இல் கேமராவை பொருத்திவிட்டு அதிலேயே எல்லா படங்களையும் எடுத்துக்கொண்டிருப்போம்.
எனக்கு தெரிந்து ஒருவர் தனது DSLR கேமராவிலும் கூட auto mode மட்டுமே பயன்படுத்தி படங்களை எடுப்பார்!!!
Auto mode பயன்படுத்துவதாக இருந்தால் அவர்களுக்கு SLR எதற்கு?? சாதாரண point and shoot கேமரா மட்டுமே போதுமே என்று நான் நினைத்துக்கொள்வேன்.
இவ்வளவு காசு கொடுத்து வாங்கிவிட்டு நம் கேமராவின் பெரும்பாலான பயன்பாடுகளை இப்படி பயன்படுத்தாமல் இருந்தால் எப்படி??
வாங்க இந்த modes ஒவ்வொன்றாக என்னவென்று பார்க்கலாம்.
கேமரா என்றாலே ஒரு துளையின் விட்டத்தையும் அது திறந்திருக்கும் நேரத்தையும் கட்டுப்படுத்தி ஒளியை சேமிக்கும் கருவி என்று சுருக்கமாக சொல்லிடவிடலாம்.இப்பொழுது வரும் எல்லா கேமராக்களிலும் கண்டமேனிக்கு பல modes இருந்தாலும் ஒளியின் அளவை நேரிடையாக கட்டுப்படுத்தும் சில அடிப்படையான modes-ஐ பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Auto Mode:
உங்கள் கேமராவில் Auto என்றோ அல்லது ஒரு சிறிய சதுரம் கொண்டு இந்த வகை குறியிடப்பட்டிருக்கும்.பேருக்கேற்றார்போல் இந்த வகையில் அனைத்தும் கேமராவின் கையில்.துளையின் விட்டம்,ஷட்டர் வேகம்,ISO,White balance,ப்ளாஷ் உபயோகிக்கலாமா வேண்டாமா இப்படி சகலமும் கேமராவே தீர்மானித்துக்கொள்ளும்.நீங்கள் காட்சியை நோக்கி க்ளிக் செய்தால் மட்டும் போதும்.ஷட்டரை பாதி அழுத்தும்போதே காட்சியில் எவ்வளவு ஒளி இருக்கிறது என்று தீர்மானித்து அதற்கேற்றார்போன்ற அளவுகளை கேமரா தானே ஊகித்து படம் எடுத்துவிடும்.ஒளி கம்மியாக இருக்கும் பட்சத்தில் ப்ளாஷை தானாக பயன்படுத்திக்கொள்ளும்.
இந்த mode தவிர மற்ற எல்லா mode-களிலும் ISO,White balance,ப்ளாஷ் உபயோகிக்கலாமா வேண்டாமா போன்றவற்றை நீங்களே முடிவு செய்துக்கொள்ளலாம்.
நீங்கள் SLR வைத்திருக்கும் பட்சத்தில் இந்த வகையை உபயோகித்தால் SLR வைத்திருப்பதற்கே அர்த்தம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் ஒளியின் அளவு நமது விருப்பத்திற்கேற்க கூட்டவோ குறைக்கவோ பிரத்தியேகமாக உருவாக்கப்படுவது SLR கேமராக்கள்!! அதை வாங்கி வைத்துக்கொண்டு முழுவதுமாக தானியங்கி முறையில் உபயோகித்தால்,ஐந்து கியர் கொண்ட ஒரு காரை வாங்கிவிட்டு ஆட்டோகியரில் ஓட்டுவது போல!


Program Mode:(P)
இந்த வகையில் காட்சிக்கு ஏற்றார்போல் aperture மற்றும் ஷட்டர் வேகத்தை மட்டும் கேமரா முடிவெடுத்துக்கொள்ளும்.மற்றபடி ISO,whitebalance போன்றவற்றை நீங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம்.காட்சியை பார்த்து பொத்தானை பாதி அழுத்திய உடனேயே ஒளியின் அளவை கணித்து aperture மற்றும் ஷட்டர் வேகத்தை கேமராவே நிர்ணயித்து விடும். ஒளி குறைந்திருந்தால் அதற்கேற்றார்போல் ஷட்டர் வேகத்தை குறைத்துக்கொள்ளுமே தவிர ப்ளாஷ் உபயோகிக்கப்பட மாட்டாது.
முழுவதுமாக auto mode-இல் உபயோகிப்பதை விட இந்த முறை சற்றே தேவலாம். கேமரா வாங்கிவிட்டு புகைப்படக்கலையை கற்க ஆரம்பிக்கும் ஒருவர்,தொடக்கத்தில் manual mode பழக்கமாவதற்கு முன் இந்த வகையை உபயோகிக்கலாம்

Av mode:
பெரும்பாலான SLR பயனர்கள் அதிகமாக பயன்படுத்தும் வகை இது என்று சொல்லலாம்.
உங்கள் கேமராவின் aperture எனப்படும் துளையின் விட்டத்தை நீங்களே முடிவு செய்ய வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் இந்த வகையை பயன்படுத்தலாம்!!aperute-ஐ பொருத்தவரை அதன் அளவை பொருத்து படத்தில் பெருமளவு மாறுதல் ஏற்படும்.உதாரணத்திற்கு துளையின் விட்டம் குறைவாக இருந்தால் அப்பொழுது தூரத்தில் இருக்கும் பொருள் கூட நன்றாக தெளிவாக பதியுமாறு wider depth of field(DOF)-உடன் படம் எடுக்கப்படும்.கேமராக்களில் இருக்கும் Landscape mode-ஐ நீங்கள் தெரிவு செய்தால் இருக்கும் ஒளிக்கு ஏற்ற மிக குறிகிய துளையின் விட்டத்தை கேமரா தெரிவு செய்துக்கொள்ளும்.ஏனென்றால் அப்பொழுது தான் நீங்கள் எடுக்கும் காடு,நாடு,மேடு மலை ஆகிய எல்லாமும் சரியான தெளிவோடு கேமராவில் பதிவாகும்.
aperture-இன் விட்டம் அதிகமாக அதிகமாக கேமராவின் f-number குறைவாகிக்கொண்டே போகும் என்பதை மறக்க வேண்டாம்.
இதே போல் துளையின் விட்டம் அதிகமாக இருந்தால் காட்சியின் ஒரு சிறு தூரத்திற்கு மட்டும் focus set ஆகுமாறு DOF shallow-வாக அமைந்துவிடும்.கேமராக்களில் உள்ள portrait mode-ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது காட்சியின் ஒளிக்கு ஏற்ப முடிந்த வரை அதிகமான துளையின் விட்ட அளவை தெர்ந்தெடுத்துக்கொள்ளும் அப்பொழுதுதான் நீங்கள் எடுக்கும் மக்கள் பிண்ணனியில் இருந்து பிரிந்து பளிச்சென்று தெளிவாக தெரிவார்கள்.
இப்படி துளையின் விட்டத்தை மாற்றுவதால் படத்தின் போக்கே மாறிவிடும் என்பதால்,பலர் இந்த Av mode-ஐ உபயோகிக்கிறார்கள்.இந்த வகையில் துளையின் விட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்,அதற்கு ஏற்ப ஷட்டரின் வேகத்தை கேமரா தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.







Higher fnumber - shorter aperture - wider DOF(f/13.0)

Lower fnumber - wider aperture - shallow DOF(f/1.8)

Tv Mode:
இந்த வகையில் கேமராவின் ஷட்டர் வேகத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள,அதற்கேற்ப துளை விட்டத்தை (aperture) கேமரா கணித்துக்கொள்ளும். பல சமயங்களில் நமக்கு ஒரு சில மணித்துளிகளில் ஒரு காட்சி பதிவு செய்யவேண்டியிருக்கும்(உதாரணத்திற்கு தண்ணிர் தெரிக்கும் காட்சி,ஒரு நீச்சல் வீரர் நீரில் குதிக்கும் காட்சி போன்றவை) சில வேறு நேரங்களில் நமக்கு ஷட்டர் குறைவான வேகத்தில் இருக்க வேண்டி வரும்.(இரவில் வாகனங்கள் விட்டுச்செல்லும் ஒளியை கோடு போல படம் பிடிக்க,அருவியில் விழும் நீரை படம் பிடிக்க,இரவில் படம் பிடிக்க.... போன்றவை)
இப்படி ஷட்டர் வேகத்தை நமக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பம் வரும் நேரங்களில் இந்த வகையான mode-ஐ பயன்படுத்திக்கொள்ளலாம்.துளையின் விட்டத்தின்(aperture) அளவை கேமரா பார்த்துக்கொள்ளும்.








Faster shutter speed(1/100s) - capturing action

Slower shutter speed(30s) - Traffic trails

Manual mode:(M)
இது முழுக்க முழுக்க நாமாகவே எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு வகை.இதில் ஷட்டரின் வேகம்,துளையின் விட்டம் என எல்லா அளவையும் நாமே நிர்ணயித்துக்கொள்ளலாம்.புகைப்படக்கலையின் தொடக்கநிலையில் இருக்கும் ஒருவருக்கு இந்த வகையில் படம் பிடிப்பது குழப்பத்தையும்,அயற்சியையும் தரலாம் என்பதால்,சற்றே இந்த கலையை பழகிவிட்ட பின் இதை உபயோகப்படுத்த எல்லோரும் விரும்புவார்கள்.அதிலும் படம் எடுப்பதற்கு முன் நாமே அளவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் இதை உடனடியாக படம் எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில(பறவை,மிருகம் போன்ற அசைந்துக்கொண்டிருக்கும் பொருட்கள்)் உபயோகப்படுத்த முடியாது.நல்ல ஆற அமர நேரம் இருக்கும் சமயங்களில்(அசையாத பொருட்கள்) இதனை பயன்படுத்தலாம்!!
ஆனால் நல்ல அனுபவமுள்ள புகைப்படக்கலைஞர்கள் இந்த முறையையே உபயோகிக்க விரும்புவார்கள்!!தனக்கு வேண்டியவாறு படத்தின் தன்மையை நுணுக்கமாக மாற்றியமைக்க முடியும் என்பதால் இந்த முறை அவர்களுக்கு பிடிக்கும்.பழக்கம் காரணமாக பெரிதாக நேரம் எடுத்துக்கொள்ளாமல் கண நேரத்தில் எல்லா அளவுகளையும் நிர்ணயித்து பட்டென படம் எடுத்துவிடுவார்கள்!! :-)

இப்படியாக நமது கேமராவில் வெவ்வேறு Exposure mode-கள் உள்ளன.உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.கலந்தாலோசிக்கலாம்.
அப்படியே நீங்கள் உங்கள் கேமராவில் வழக்கமாக எந்த mode-இல் படம் எடுப்பீர்கள் என்று பின்னூட்டத்தில் தெரிவித்து விட்டு செல்லலாமே!!
வரட்டா??? :-)


பி.கு:இது தவிர கேமராவில் auto focussing,manual focussing என்று ஒரு சங்கதி உண்டு.அதை இத்துடன் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்!

Wednesday, December 5, 2007

அட.. 15 பேர் போட்டிக்கு பேர் குடுத்துட்டாங்களே... வெற்றி பெற எல்லாருக்கும் பெஸ்ட் ஆப் லக். சரி.. இன்னிக்கி DOF கிடைக்காம திண்டாடுரவங்களுக்கு photoshop (CS2) லே எப்படி DOF மாதிரி ஒரு எபெக்ட் குடுக்கலாம்ன்னு பார்க்கலாமா ...

DOF னா என்ன ?? .. இந்த பதிவை படிங்க..

Flower Photography க்கு DOF ரொம்பவே முக்கியம்.. ( மத்ததுக்கெல்லாம் முக்கியம் இல்லைன்னு சொல்லலை.. I leave that to your perception)... ஏன்னா.. மலர்களை ரசிக்க தெரிஞ்சா மட்டும் போதாது.. அதன் ரசனை என்னன்னு மத்தவங்களுக்கு தெரியப்படுத்தவும் வேணும், அதுக்கு தான் . சரி... சில பேருக்கு DOF தானா கெமேறாலெயே அமையும்.. அப்படி அமையாத்தவங்களுக்கு தான் இந்த பதிவு

நான் photo editing க்கு photoshopCS2 ( CS3 டெமோ & tutorial பார்த்தேன்.. ரொமப் சூப்பரா இருக்கு.. ஆனா என் கிட்டே இல்லையே ... பிரீயா யாராவது குடுத்தா தேவலை.. !!! ) தான் யூஸ் பண்ணறேன்.. ஸோ.. செய்முறை விளக்கமும் அது படி தான் இருக்கும். உங்களுக்கு ஓரளவுக்கு photoshop Tools யூஸ் பண்ண தெரியும்ங்கிர எண்ணத்தோடு ( new Layers, selection tools etc etc) இந்த பதிவை எழுதறேன்.DOF செய்முறை விளக்கம் பார்க்கிரதுக்கு முன்னே.. இங்கே இருக்கும் கடற்கன்னியின் 3 படத்தை பாருங்க....

ORIGINAL ORIGINAL
GAUSSIAN BLUR USING GAUSSIAN BLUR FILTER
LENS BLUR USING LENS BLUR FILTER

  1. நீங்க மாற்ற நினைக்கும் படத்தை ஒரு copy எடுத்துக்குங்க..copy லே தான் மாற்றங்கள் செய்வது உத்தமம்.. copy கெட்டுப்பொச்சுன்னா இன்னொண்ணு எடுத்துக்கலாம்... ஒரிஜினலே எப்போதுமே ஆல்டரேஷன் பண்ணரது நல்லதில்லை

  2. Photoshop லே படத்தை ஓபண் பண்ணுங்க

  3. Layer pallete ல் background layer ஐ Right-click செஞ்சு CREATE DUPLICATE LAYER னு குடுங்க

  4. Layer pallete தெரியலைன்னா... Windows menu - Layers ஐ க்ளிக்குங்க... layer pallete வரும்

  5. "Polygonal Lasso Tool " - ஐ தேற்வு செய்து... உங்க subject ( The body of the mermaid.. here) ஐ select பண்ணவும்

  6. Select - menu ----> Inverse ஐ க்ளிக்கினா... selection டோட்டலா உல்டாவாயிடும்.. அதாவது.. subject ஐ விடுத்து.. மத்ததெல்லாம் செலெக்ட்டாகும்

  7. Filter - Blur - Gaussian ஐ தேற்வு செய்தா... ஒரு குட்டி டப்பா லே அதுக்கான controls வரும்... slider ஐ அப்படி - இப்படின்னு நகத்தும்போதே... படத்திலே மாற்றத்தை கவனிக்கலாம்... உங்க perception க்கு ஏத்தாமாதிரி blurr ஐ குடுத்து DOF லே இருக்கிராமாதிரி எபெக்ட் செய்யலாம்

  8. Blur லே பல ரகம் இருக்கு... படத்தின் texture க்கு ஏத்தா மாதிரி வேண்டிய blur-option ஐ யூஸ் பண்ணலாம்... இப்போ இங்கே இருக்கிர கலர்கன்னி ஒரு ஓவியம்.. அதுக்கு Lens-blur தான் சரியா இருக்கும்ன்னு என்னுடைய அபிப்பிராயம்.. ஸோ அதுக்கான details இதொ
    • Filer - Lens Blur

    • Shape - Octagon

    • Preview - selected

    • More accurate - selected

    • Radius - 15

    • Blade curvature - 13

    • Rotation -0

    • Brightness - 27

    • Threshold -255

    • Noise amount - 5

    • Distribution - Gaussian

    • Monochromatic - selected

  9. இப்படி நீங்க எடுத்திருக்கும் படத்துக்கு எந்த மாதிரி blur குடுத்தா படத்தை மெருகேத்த முடியும்ன்னு நினைக்கறீங்களோ.. அப்படி செய்ய்லாம்.

  10. Filter - Blur லே இருக்கும் எல்லா variety யும் சும்மா டிரை பண்ணி பாருங்க... எது எதுக்கு நல்லா இருக்கும்ன்னு யூஸ் பண்ண பண்ண நீங்களே தெரிஞ்சுக்குவீங்க


DOF வரலைன்னு படத்தை சப்மிட் பண்ணாம இருந்துடாதீங்க... இப்படியும் DOF எபெக்ட் கொடுக்கலாம்... photoshop இல்லாத்தவங்களுக்கு "ஐ ஆம் சாரி"... உங்க கிட்டே இருக்கும் photo-editing software லே எப்படி blur-effect குடுக்கமுடியும்ன்னு சம்பந்தப்ப்ட்ட வலைத்தளத்தில் போய் tutorial ஐ பார்த்து கத்துக்கோங்க... எப்படி செஞ்சீங்கன்னு பதிவும் போடுங்க.. மத்தவங்களுக்கும் உதவியா இருக்கும்.

Post Production ங்கிரது... document ஐ Proof read பண்ணரா மாதிரி... Speling mistakes - grammatical mistakes எல்லாம் நாமே படிச்சு பார்த்து திருத்தி எழுதரதில்லையா... அதுமாதிரி தான்... Post production பண்ண சோமப்ல் படாதீங்க... I promise you will not regret

பி.கு.. கடற்கன்னி சோகமா இருக்கா... இவளை எப்படியாவது சிரிக்க வைக்கணும்ன்னு நானும் என்னமோ டிரை பண்ணிட்டேன்... ( monalisa லே என்னாமோ வித்தை காட்டறாங்களே...அதுமாதிரி.. just a smile)... உங்களில் யாருக்காவது செய்ய முடிஞ்சா எனக்கு சொல்லி தறீங்களா ??... என்ன tool யூஸ் பண்ணரதுன்னே தெரியலை.....
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff