Showing posts with label Nithi Clicks. Show all posts
Showing posts with label Nithi Clicks. Show all posts

Sunday, February 21, 2016

***வணக்கம் பிட் மக்கா நலந்தானா?...


பொதுவாக‌ புகைப்பட கண்காட்சி, ஓவிய கண்காட்சி போன்ற இடங்களுக்கு சென்று படம்பிடிக்கும்போது பிரேம்களுக்கு நேராக நின்று நாம சப்ஜெக்ட்ட போகஸ் பண்ணும்போது நம்மளோட பிம்பம் படத்தில் பிரதிபலிக்கும் அல்லது வருகின்ற வெளிச்சத்த நாமளே எதிரில் நின்னு மறைத்துவிடுவதால் நாம் பிடிக்கும் படத்திற்கு போதிய வெளிச்சமில்லாமல் படம் இருட்டடிக்க ஆரம்பிக்கும், நாம படத்திற்கு சற்று அருகில் சென்று படம்பிடிக்கலாம்னு பார்த்தா தடுப்பு வேலி அமைத்திருப்பார்கள் இல்லேன்னா கூட்ட நெரிசலில் நாம விரும்புறமாதிரி படம்பிடிக்க இயலாத சூழலில் படம்பிடிக்கும் போதோ, அல்லது நாம சற்று பக்கவாட்டில் சென்று படம்பிடிக்கும் போது கண்டிப்பாக படத்தின் perspective மாறிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

** 
கீழேயுள்ள படம் இதுபோன்ற சூழ்நிலையில் எடுக்கப்பட்ட படமாகும் படத்தை சரியான exposure கொண்டு எடுத்திருந்தாலும் படத்தில் perspective சரியில்லாமல் இருப்பது ஒரு குறையே.
#

சரி,படத்த எடுத்தாச்சு அத எப்படியாவது சரிசெய்துகொள்ளனும் இல்லையா?இதுபோன்ற குறைகளை சரிசெய்துக்கொள்ள போட்டோஷாப் அறிமுகம் செய்திருக்கும் டூல் தான் Perspective Crop Tool ஆகும். 
முதலில் படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். இப்போது பேக்கிரவுண்டு லேயரை இருமுறை கிளிக் செய்ய உங்களது background  லேயர் editable லேயராக மாறிவிடும்.
#

#

இப்போது கிராப் டூலில் இருக்கும் Perspective Crop Tool ஐ தேர்வு செய்துகொண்டு படத்தின் சப்ஜெக்டடின் நான்கு  மூலைகளையும் மார்க் செய்து கொண்டு விசைபலகையில் என்டர் ஐ அழுத்த பெர்ஸ்பெக்டிவ் சரி செய்யப்பட்டு படமானது நேராக வந்துவிடும்.

#

#


Final output:
#

#

என்ன பிட் மக்கா கட்டுரை பயனுள்ளதாக அமைந்ததா? மீண்டும் ஒரு கட்டுரையில் உங்களை சந்திக்கிறேன்

என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்.






Sunday, January 17, 2016

 ***வணக்கம் பிட் மக்கா, நலமா? அனைவருக்கும் தைப் பொங்கல் பண்டிகைக் கால வாழ்த்துகள்!

இன்றைய கட்டுரையில் நாம் கேமரா உருவாக்கிக் தரும் கருப்பு வெள்ளை படங்களையும், வண்ணப்படமாக எடுத்து அதனை கருப்புவெள்ளையாக மாற்றம் செய்யும் படங்களை பற்றிய நிறை குறைகளை பார்க்கலாமா?
அதாவது முந்தைய காலத்தில் கருப்புவெள்ளை படங்களை எடுக்க அதற்க்கென சில பிலிம் ரோல்கள் உருவாக்கப்பட்டு அவற்றைக்கொண்டு கருப்பு வெள்ளை படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர்.ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் இந்த பணியை செம்மையாக செய்ய நிறைய மென்பொருட்கள் இருக்கின்றன.


பொதுவாகவே கருப்பு வெள்ளை படங்கள் என்பது நம்மில் பலராலும் விரும்பப்படுகிறது என்பதனாலேயே இன்றைய நவீன கேமரா உலகில் பாயிண்ட் & ஷூட் கேமரா முதல் விலையுயர்ந்த புரொபஷனல் கேமரா வரை கருப்பு வெள்ளை மற்றும் செபியா படங்களை கேமராவே தயாரிக்கும் வகையில் சென்சார்களை வடிவமைத்துள்ளனர்.

சரி இப்போது நாம் விவாதிக்க இருப்பது அவ்வாறாக கேமராக்கள் உருவாக்கிக்தரும் கருப்பு வெள்ளை படங்கள் சிறந்ததா அல்லது வண்ணப்படமாக எடுத்து பின்னர் அதனை மென்பொருள் கொண்டு கருப்பு வெள்ளையாக மாற்றிக்கொள்வது நல்லதா என பார்க்கலாம்.

பொதுவாக கேமராக்களிலேயே Monochrome மோடில் படம்பிடிக்கும் போது உங்களது சென்சாரனது கலர் டேட்டாக்களை விட்டுவிட்டு வெறும் luminance information மட்டுமே தக்கவைத்துக்கொள்ளும். சுருங்கசொன்னால் "Grayscale"படம்.

நீங்கள் உங்களது கேமராவில் JPG பார்மேட்டில் படம்பிடிப்பவராக இருந்து கேமராவில் « Monochrome »மோடில் படம்பிடிக்கும் போது
படத்தினை கலரில் காணமுடியாது, பின்நாளில் இதே படத்தை கலரில் காண விரும்பினாலும் இயலாது.

அதேபோல கேமராக்கள் உருவாக்கித்தரும் « Grayscale » படங்கள் ஒரு  சாதராண கருப்பு வெள்ளை படமாகவே இருக்குமே தவிர தாங்கள் விரும்பிய வெளியீடுகளாக இருப்பதில்லை காரணம் உங்களது RED, GREEN, BLUE சேனல்கள் neutral செய்யப்பட்டிருக்கும்.

சரி ஒரு உதாரணம் :

கீழேயிருக்கும் படமானது என்னுடைய கேமராவில் Monochrome முறையில் எடுக்கப்பட்ட படம்,இங்கு எனது கேமராவே எனக்கு ஒரு கருப்பு வெள்ளை படங்களை Grayscale மோடில் உருவாக்கிக்கொடுத்துவிட்டது.


நான் இப்போது இதனை போட்டோஷாப்பில் திறந்து இப்படத்தின் RGB சேனல்களை பார்க்கிறேன்.இங்கு எனது மூன்று சேனல்களும் கிட்டதட்ட ஒரேமாதிரியான தகவல்களைக்கொண்டுள்ளது.


சரி அடுத்ததாக இதே படத்தை கலரில் படம் பிடித்திருக்கிறேன்.இதனை நான் போட்டோஷாப்பில் திறந்து இதே மூன்று சேனல்களை பார்க்கிறேன்.
இங்கு எனக்கு வெவ்வேறு மாதிரியான தகவல்களை எனது சேனல்கள் எனக்கு அளிப்பதால் என்னுடைய வெளியீட்டை நான் விரும்
பும் வகையில் அமைத்துக்கொள்ள இயலுகிறது.

உதாரணத்திற்கு,இந்தப்படம் நல்ல சூரிய ஒளியின் தாக்கத்தில் எடுக்கப்பட்டிருப்பதால் படத்தில் நாய்குட்டியின் ரோமங்கள் சற்று overexpose ஆகியிருப்பதை பார்க்கிறேன்.எனவே,அதனை சரி செய்ய என்னுடைய blue சேனலில் இருக்கும் கான்ட்ராஸ்டினை சேனல் மிக்ஸர் டூலைக்கொண்டு ஈடுசெய்து கொள்ள படத்தின் கான்ட்ராஸ்டு இங்கே கூடியிருக்கிறது.



பாருங்கள் கேமரா உருவாக்கித்தரும் கருப்புவெள்ளை படங்களை காட்டிலும் கலரில் படம்பிடித்து பின்னர் கருப்புவெள்ளையாக உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றம் செய்யப்படும் படங்கள் இன்னும் கூடுதல் ஈர்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.


சில டிப்ஸ்கள் :

1.கருப்பு வெள்ளை படங்கள் எடுக்கபோகிறீர்களா? முதலில் கேமராவை "RAW" பார்மேட்டிற்க்கு மாற்றுங்கள் அல்லது "RAW+JPG" க்கு மாற்றுங்கள்.

2."RAW"வில் கருப்புவெள்ளையாக படம்பிடித்தாலும் போட்டோஷாப் அல்லது லைட்ரூமில் படத்தை திறக்கும் போது கலர் படமாகவே திறக்கும். RAW எடிட்டரில் இருக்கும் « Convert to grayscale » டூல் கொண்டு கருப்புவெள்ளை படங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.


3.போடோஷாப்பில் படத்தை திறந்து பின்னர் சேனல்களை ஆராய்ந்து பின்னர் Channel Mixer கொண்டு மூன்று சேனல்களையும் உங்களின் ரசனைக்கேற்ப மிக்ஸ் செய்து கொள்ளலாம்.

பிற்சேர்க்கை முடிந்ததும் கேமரா உருவாக்கித்தந்த கருப்பு வெள்ளை படத்தை நீங்கள் கன்வர்ட் செய்த கருப்பு வெள்ளையோடு ஒப்பிட்டு பாருங்கள் எது பிடித்திருக்கிறதோ அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி மக்கா,மீண்டும் மற்றுமொரு கட்டுரையில் சந்திப்போம்!!!

என்ரும் அன்புடன்,
நித்தி ஆனந்த்

Friday, November 20, 2015

ணக்கம் பிட் மக்கா! நலமா? இன்றைய கட்டுரையில் நாம் கருப்பு வெள்ளை படங்களை உருவாக்கும் முறையை சற்று விபரமாக பார்க்கலாம்.பொதுவாக கருப்பு வெள்ளை படங்களை உருவாக்க போட்டோஷாப்பில் பலவழிகள் இருக்கிறது இது குறித்து பிட் தளத்தில் ஏற்கனவே சேனல் மிக்ஸர் மற்றும் Gradient tool கொண்டு விளக்கம் தந்திருக்கிறேன்.

இக்கட்டுரையில் கருப்பு வெள்ளை அட்ஜெஸ்ட்மென்ட் லேயரை வைத்து 3 விதமான கருப்பு வெள்ளை எபக்டுகளை எளிமையாக உருவாக்குவது குறித்து பார்க்கலாம்.


1 கான்ட்ராஸ்டுடன் கூடிய கருப்புவெள்ளை:

முதலில் படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். இப்போது கருப்புவெள்ளை அட்ஜெஸ்ட்மென்ட் லேயரை இருமுறைஉருவாக்கவும்.
Black & White 2 Adjustment layer ன் பிளன்ட் மோடை Overlay க்கு மாற்றவும்.



Black & White 1 adjustment layerஐ திறந்து உங்களது விருப்பதிற்க்கு ஏற்றவாறு சேனல்களை அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கான்ட்ராஸ்டுடன் கூடிய கருப்புவெள்ளை படம் தயார்.



2.Lowkey கருப்புவெள்ளை :

உங்களது படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். கருப்புவெள்ளை அட்ஜெஸ்ட்மென்ட் லேயரை இருமுறை உருவாக்கவும்.
Black & White 2 Adjustment layer ன் பிளன்ட் மோடை Multiplyக்கு மாற்றவும்.

Black & White 1 adjustment layerஐ திறந்து கொண்டு உங்களது ரசனைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்துகொள்ள lowkey கருப்புவெள்ளைப்படம் தயார்.

3.Highkey கருப்புவெள்ளை :

உங்களது படத்தை போட்டோஷாபில் திறந்துகொள்ளவும். கருப்புவெள்ளை அட்ஜெஸ்ட்மென்ட் லேயரை இருமுறை உருவாக்கவும்.
Black & White 2 Adjustment layer ன் பிளன்ட் மோடை இம்முறை Screenக்கு மாற்றவும்.


Black & White 1 adjustment layerஐ திறந்து கொண்டு உங்களது ரசனைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்துகொள்ள Highkey கருப்புவெள்ளைப்படம் தயார்.




என்ன வாசகர்களே கட்டுரை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறதா?

என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்




Friday, October 16, 2015

வணக்கம் பிட் மக்கா நலமா?

***
இன்றைய கட்டுரையில் நாம் போட்டோஷாப்பில் Neutral Gray Point ஐ சுலபமாமக‌ கண்டுபிடிப்பது எப்படின்னு பார்க்கபோகிறோம்.
** 
பொதுவாக நாம எடுக்கிற படங்கள்ல color cast வருவது இயல்புதான். இதற்காகவே professional  கலைஞர்கள் தாங்கள் படம்பிடிக்கும் மாடல்களிடம் முதலில் ஒரு கிரே நிற கார்டை கொடுத்து படம் பிடித்துக்கொண்டு பின்னர் கேமரா raw எடிட்டரில் Synchronize செய்துகொண்டு white balance ஐ சரி செய்து கொள்வார்கள். (இது குறித்தகட்டுரையை நான் பிறகு வெளியிடுகிறேன்).

ஆனா என்ன மாதிரி அப்படியே போகுற போக்குல படம்பிடிக்கிறவங்க, கிராமப்புறமா போயி candid எடுக்கிறவுங்களுக்கு இந்த கிரே கார்டு ஷூட்டிங் எல்லாம் எப்படி சரிப்பட்டு வரும்? அதனால பிற்சேர்க்கையிலதாங்க சரி செஞ்சிக்கனும்.

ஆனா ஒரு படத்தில கிரே புள்ளிய கண்டுபிடிக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயமா இருந்துச்சுஆனா Education and Curriculum for the National Association of Photoshop Professionals (NAPP) Senior Developer ஆகஇருக்கிற திரு.DAVE CROSS அவர்கள் ஒரு எளிமையான வழிய கண்டுபிடிச்சு கொடுத்திருக்காரு ..

சரி
அது என்ன வழின்னு பார்க்கலாமா
?

கீழேயுள்ள படமானது என்னுடைய வீட்டில் இன்டோர் லைட்டில் எடுக்கப்பட்ட படமாகும்.படத்தை பார்த்தாலே தெரிகிறது படத்தில் warm tone சற்று கூடியிருக்கிறது. கண்டிப்பாக இது தவறான ஒயிட் பேலன்ஸ் செட்டிங்ஸ் ஆகும்.


சரி இப்போது போட்டோஷாப்பில் உங்களது படத்தினை திறந்துகொள்ளவும்.இப்போது உங்களது லேயர் பேலட்டில் இருக்கும் புதிய லேயர் ஐக்கானை கிளிக்செய்து புதிய லேயர் ஒன்றை உருவாக்கவும்.


இப்போது அந்த லேயரை 50% கிரே வண்ணத்தால் நிரப்பவும்.இதற்கு Edit>Fill  50% Gray வை தேர்ந்தெடுக்கவும்.


இப்போது அந்த லேயரின் blend mode ஐ Differenceக்கு மாற்றவும்.


இனி நியூ அட்ஜஸ்ட்மன்ட் லேயரிலிருக்கும் Threshold கிளிக் செய்யவும்.Threshold ஸ்லைடரை 0 விற்கு கொண்டுவந்து பின் இடமிருந்து வலமாக‌ லேசாக நகர்த்திக்கொண்டு வருகையில் உங்கள் படத்தில் தெரியும் கரும்புள்ளிகள் உங்களது Gray பாயிண்டுகளாக இருக்கலாம்.




சற்று அடர்த்தியான கரும்புள்ளிகள் புலப்பட்டவுடன் அப்படியே நிறுத்தவும்,இனி Color sampler டூலைக்கொண்டு இந்த கரும்புள்ளியை கிளிக் செய்து தேர்வு செய்துகொள்ளவும்.



Gray பாயிண்டை சேம்பிள் செய்துகொண்டப்பின்னர் இந்த gray நிற லேயரும் Threshold லேயரும் நமக்கு தேவையில்லை,எனவே இவ்விரு லேயரையும் தேர்வுசெய்துகொண்டு விசைப்பலகையில் delete பட்டனை அழுத்த இவ்விருலேயரும் அழிக்கப்படும்.

இப்போது புதிய அட்ஜெஸ்ட்மன்ட் லேயரில் Curvesஅல்லது Levelsஸை தேர்ந்தெடுக்கவும்.


இப்போது Curves அல்லது Levels ஸில் இருக்கும் கிரே நிற  Eye Dropperஐ தேர்ந்தெடுத்து நீங்கள் மார்க் செய்த புள்ளியில் ஒரே கிளிக் !!! இப்போது பாருங்கள் கலர் காஸ்ட் நீக்கப்பட்டிருக்கும்.



Before :

 After :




குறிப்பு:
எல்லா படங்களுக்கு இது பயனளிக்குமா? அப்படின்னு நீங்க ஒரு கேள்வியை எழுப்பினால் இல்லைங்க ஆனா பெரும்பாலான‌ படங்களுக்கு பயனளிக்கும்.

நன்றி மக்கா மீண்டும் மற்றொரு கட்டுரையில் சந்திக்கலாம்!

என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்.

Friday, August 28, 2015


***வணக்கம் பிட் மக்கா நலமா,இன்றைய கட்டுரையில் நாம் போட்டோஷாப்பில் படங்களுக்கு சுலபமாக பார்டர் போடுவது எப்படி என பார்க்கலாம்.***

*****முதலில் பார்டர் போட விரும்பும் படத்தை போட்டோஷாப்பில் திறக்கவும்.போட்டோஷாப்பில் படமானது பேக்கிரவுண்டு லேயராக பூட்டு படத்துடன் அமரும்,அதாவது உங்களது படமானது Lock செய்யப்பட்டுள்ளது என்று பொருள்,இதனை நாம் Unlock செய்வதன் மூலமாக படத்தில் நாம் சில மாற்றங்களை செய்ய இயலும்.

இப்போது பேக்கிரவுண்டு லேயரை இருமுறை கிளிக் செய்யவும்.இப்போது தோன்றும் விண்டோவில் உங்களது புதிய லேயருக்கான பெயரை தட்டச்சு செய்துகொண்டு ஓகே செய்துகொள்ளவும்.


 இனி,உங்களது விசைப்பலகையில் CTRL ஐ அழுத்திக்கொண்டு லேயர் பேலட்டில் இருக்கும் Create New Layer  என்பதை அழுத்தவும்.



இப்போது புதிய லேயர் உங்களது படத்திற்கு கீழே உருவாக்கப்பட்டிருக்கும்.



இப்போது அந்த லேயரை தெர்வுசெய்துகொள்ளவும்,Image>Canvas Size ஐ தேர்ந்தெடுக்கவும்.



இப்போது தோன்றும் விண்டோவில் உங்களுக்கு தேவையான பார்டரின் அளவை கொடுத்துக்கொள்ளவும் நான் இந்த கட்டுரைக்காக 2 Inch கள் பார்டர் அளவாக கொடுக்கிறேன்.கீழேயுள்ள படத்தில் நான் காட்டியபடி செட்டிங்குகளை செய்து பின்னர் ஓகே செய்யவும்.



இப்போது உங்களில் படத்தைச்சுற்றி உபரியாக வெற்றிடம் உருவாக்கப்பட்டிருக்கும்.



இனி Edit>Fill என்பதை அழுத்தவும்.



இப்போது தோன்றும் விண்டோவில் Contents ஆப்ஷனில் உங்களுக்கு பார்டர் வெள்ளை நிறத்தில் வேண்டுமென்றால் வெள்ளை நிறத்தையும் கருப்பு வேண்டுமெனில் கருப்பு நிறத்தையும் தேர்வு செய்து கொண்டு ஓகே செய்யவும்.



அவ்வளவே உங்களின் படத்தில் பார்டர் உருவாக்கப்பட்டிருக்கும்.




நன்றி மீண்டும் சந்திப்போம்,

என்ரும் அன்புடன்,
நித்தி ஆனந்த்

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff