Saturday, July 7, 2007

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பது மிகையில்லை என்று சொல்லுமளவிற்கு அந்த படம் அமெரிக்க மக்களின் இதயத்தை தைத்தது. தங்களது அரசு செய்யும் கொடூரத்தை அதுவரை பாராமுகமாக இருந்த அமெரிக்க பொதுமக்கள் இந்த படத்தை செய்தித்தாள்களில் பார்த்தவுடன் கொந்தளித்தனர். வியட்னாம் போருக்கெதிராக பாடகர்களும், அறிஞர்களும் பொதுமக்களும் திரண்டனர். இதைஎதிர்கொள்ள இயலாமல் கடைசியில் அமெரிக்க அரசாங்கமும் பணிந்தது. இதோ அந்த புகைப்படம். அந்த படம் .... நேபாம் எனும் உடலில் பற்றிஎறியும் ரசாயனக் குண்டுகளை ஒரு கிராமத்தில் வீசியபோது ஒரு சிறுமி தீயிடமிருந்து தப்பிக்க தனது ஆடைகளைத் துறந்து உயிர்பிழைக்க ஓடிவருவதை அசோசியேட்டட் பிரஸ்' ஐ சேர்ந்த நிக் உட்என்ற புகைப்படக் கலைஞன் தனது காமிராவில் பிடித்தது.
அந்த சரித்திரப் புகழ் பெற்ற படம் கீழே



இந்தப் பெண் பிற்காலத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து போரின் கொடுமைகளைஎடுத்துச் சொல்லும் ஒரு ஐக்கிய நாட்டு அமைதித்தூதுவர் ஆனார்!

முழுச் செய்திக்கு இங்கே சுட்டவும்


அன்புடன்
ஓசை செல்லா

Friday, July 6, 2007

அன்பார்ந்த புகைப்படக் கலை மாணவர்களுக்கு ஓசை செல்லாவின் அன்பு வணக்கங்கள். இன்று முதல் பாடங்கள் ஆரம்பம்! உங்களிடம் எந்த வகையான காமிரா இருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்து படம் எடுத்து அனுப்புங்கள். இது தியரி மட்டுமல்ல.... நீங்களும் ப்ராக்டிகலாகச் செய்து சுட்டி தரவேண்டிய விடயம். இன்று நான் உங்களுக்கு காமிராவைப் பிடிப்பது பற்றிய சில பாடங்கள்!

நம்மில் பெரும்பாலோர் ஷேக் இல்லாமல் ப்டம்பிடிகவேண்டும் என்று நினைத்தாலும் காமிராவைச் சரியாகப் பிடிக்கத் தெரியாமல் க்ளிக் கி பல நல்ல படங்களை வீணடித்திருப்போம். இப்பொழுது முதலில் ஒரு காமிராவை எப்படிப் பிடிப்பது என்று பார்ப்போம்.


முதல் விதி... காமிராவை இடதுகையால் மட்டுமே தாங்கிப்பிடிக்கவேண்டும் ( நீங்கள் வலது கைப்பழக்கம் உடையவராயிருந்தால்! ). பின்பு எவ்வாறெல்லாம் பிடிக்கலாம்என்பதை பாடமாக அறுக்காமல் படமாகப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்!



இது செங்குத்தாக ( Vertical Holding Position) பிடிக்கும் முறை. இங்கும் காமிரா இடது கையாலேயே தாங்கப்படுவதைக் கவனியுங்கள்.



உங்களிடம் போக்கஸ், மற்றும் அப்பர்சர் போன்ற கண்ட்ரோல்களைக் கையாள இடது கை பெருவிரலும் ஆள்காட்டி விரலும் உபயோகப்படுவதை பாருங்கள்.



முன்புறத் தோற்றம். வலது கை க்ளிக்க மற்றும் ஆடாமல் பிடிக்க மட்டுமே. காமிராவின் முழுஎடையும் இடதுகையாளேயே தாங்கப்படவேண்டும்.

சரி பாடம் முடிந்தாகிவிட்டது... உங்கள் டிஜிட்டலில் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் காமிராவைப் பிடித்து உங்கள் படங்களை சுட்டுத்தள்ளி உங்கள் பதிவில் போட்டு இங்ஙே சுட்டி கொடுங்கள்! வாழ்த்துக்கள்!

பிகு:
நீங்கள் இந்த மாதிரி சரியாகப் பிடித்தாலே நீங்கள் ஒரு நிபுணர் என்று மற்றவர்கள் நினைப்பார்கள்! காமிரா எதாக இருந்தாலும்!

Thursday, July 5, 2007

அழகான படங்கள் எடுக்க, ஜீவ்ஸ் ஒரு பத்து சூட்சமங்கள் ஈ.மடலாக அனுப்பி வைத்தார். அதில் சில டச்-அப் செய்து, உங்க முன்னாடி வைக்கரேன்.

நல்ல நேர்த்தியான புகைப்படங்கள் பிடிக்க, உங்களுக்குத் தெரிஞ்ச சூட்சமங்களையும் பகிருங்கள்.
உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள்/கேள்விகளை கேட்கவும் பின்னூடுங்கள்.

சூ 1 - முடிந்த வரையில் இயற்கை ஒளியில் படம் எடுக்க முயலுங்கள். செயற்கைத் தனமற்ற நல்லதொரு புகைப்படம் கிடைக்கும். Be more creative. Strive to find the best option for a good shot than just trying to snap a shot. எதையும் சற்று நுணுக்கமாக பார்க்க பழகுங்கள். Viewfinderல பாக்கும்போதே ஒரு 5 விநாடிகள் "இந்த படம் ப்ரிண்ட் போட்டு ஆல்பத்துல வெச்சா, ஒரு attractiveஆ இருக்குமா?" என்று சிந்திக்கவும். ஆரம்ப காலங்களில், 10 எடுத்தா 1 படம் தான் சரியா வரும். As you build your experience in framing, your ratio of good hits will increase.
(framing, viewfinder, இதுக்கெல்லாம் தமிழ்ல என்னங்க சொல்லணும்?).

சூ 2- ஒவ்வொரு படம் எடுக்கும் முன்னும், உங்கள் கேமராவில் இருக்கும் modeஐ சரியாக உபயோகிக்கலாம். க்ளோஸப்பில் பூக்கள் எடுக்க, தூரத்தில் இருக்கும் பொருள் எடுக்க, இரவில் படம் பிடிக்க என்று வரிசையாக இருக்கும் பொத்தான்களை உபயோகிக்கலாம். ஷட்டர் வேகம், aperture இவற்றின் நுணுக்கங்கள் புலப்படும் வரை, கேமராவில் உள்ள இந்த வசதிகள் கைகொடுக்கும்.

Flower modeல (நண்பனின்) Nikon D80 கேமரால எடுத்தது. Adobe Photoshop வச்சு கொஞ்சமா டச்சிங் பண்ணிருக்கேன். Flower Mode உபயோகித்ததால், பூக்கள் அழகா focus ஆகி, பின்னால் இருக்கும், இலைகள் out of focusல் தெரிவதை கவனியுங்கள். போடோக்கு ஒரு அழக கொடுக்குது இல்லியா? (என்னது? இல்லையா?:))


சூ 3- வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்காது. கிடைக்கும் வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த பாயிண்ட், சூ1 க்கு சற்று முரணானது மாதிரி தெரியும். இருந்தாலும், இங்க என்ன சொல்றோம்னா, சில படங்கள் பிடிக்கும்போது, advancedஆ திங்க் பண்ணனும், படம் க்ளிக்க வேண்டிய நேரத்தில், க்ளிக்க மட்டும்தான் செய்யணும். உ.ம், பட்டாம்பூச்சி, தும்பியெல்லாம் படம் புடிக்க முயற்ச்சி பண்ணினா, 10 விநாடிகளில், 10 படம் க்ளிக்கணும். அப்பதான் நீங்க நெனச்ச ஒண்ணாவது ஒழுங்கா வரும். குழந்ததகளை படம் பிடிக்கும்போதும், இது பொறுந்தும்.
க்ளிக்கரை, முழுதுமாக அமுக்காமல், பாதி அமுக்கிய நிலையில் (half-press) நீங்கள் எடுக்க நினைக்கும் frameஐ, focus செய்து கொள்ள முடியும். நீங்கள் நினைத்த காட்சி தெரிந்ததும், மீதிப் பாதியையும் அமர்த்தி, படத்தை க்ளிக்கலாம்.
குழந்தையை படம் எடுக்கும்போது, அது சிரிக்கும் வரை காத்திராமல், viewfinderல், குழந்தையின் முகத்தை frame செய்து, பொத்தானை half-press செய்து, focus lock செய்ய முடியும். குழந்தை சிரிக்கும்போது, மீதிப்பாதியை அமர்த்தி படத்தை எடுக்கலாம்.

சூ 4- ஃபிளாஷ் உபயோகிக்கும் போது ஃபிலிம் ரோல் வாங்கிய வெள்ளை டப்பா வை கத்தரித்து ஃபிளாஷ் மேல் வத்து படம் எடுத்தால் மென்மையா ஒளியில் எடுத்த எஃபெக்ட் கிடைக்கும்.
இந்த டெக்னிக், க்ளோஸப்பில் முகங்கள் எடுக்கும்போது நல்லா கைகொடுக்கும். மிகக் கிட்டத்தில் இருக்கும் பொருளை, ஃபிளாஷ் போட்டு எடுத்தா, வெளிரிப்போய் வரும். இந்த மாதிரி நேரத்தில் மேலே சொன்ன சூட்சமம் கைகொடுக்கும்.

சூ 5. புகைப்படம் எடுக்க காலை மற்றும் மாலை வெயில் நேரம் மிகச் சிறந்ததாக இருக்கும்.

சூ 6. நல்ல வெயில் நேரங்களில் மனிதர்களை புகைப்படம் எடுக்கும் போது ஃபிளாஷ் உபயோகித்தல் நலம். இல்லாவிட்டால் நிழல் படிந்த இடங்கள் ( முக்கியமாய் மூக்கு மற்றும் கண்களுக்கு அடியில்) கருப்பாகவும் மற்ற இடங்கள் நல்ல வெளிச்சத்துடன் இருக்கும். ஃபிளாஷ் வேண்டாம் என்று கரும் பட்சத்தில் மூக்கின் கீழும் கண்களின் கீழும் நிழல் விழாமல் இருக்கும் வகையில் பார்த்து எடுக்க வேண்டும்.

சூ 7. ஒளிவிழும் கோணமும் மிக முக்கியமான ஒன்று. ஒளி விழும் கோணம் தவறாக இருந்தால் வெகு அழகாக வரவேண்டிய புகைப்படம். மிக அசிங்கமாக வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.

சூ 8. புகைப்படத்தை மெருகேற்றும் என்று நீங்கள் நினைத்தால் ஒழிய முடிந்த வரையில் நிழல்களை தவிர்க்க பாருங்கள்.

சூ 9. எச்சரிக்கை: ஒரு பொழுதும் உச்சிவெயில் நேரத்தில் அல்லது அதிக சூரியவெளிச்சம் உள்ள நேரத்தில் நேரடியாக சூரியனை புகைப்படம் எடுக்க முயலாதீர்கள். அது கேமராவிற்கும் உங்களுக்கும் தீதாக அமையலாம்.

சூ 10. அதிகவெளிச்சம் சில சமயம் glare effect உருவாக்க கூடும். முக்கியமாக மனிதர்களை எடுக்கும்போது நெற்றி மற்றும் கன்னங்கள் புகைப்படத்தில் அதிக வெளுப்புடன் வந்து புகைப்படத்தையே கெடுத்துவிடும்.

யாராவது ஒருத்தர், இந்த பத்து பாயிண்ட வச்சு படம் புடிச்சு, தப்பா செஞ்சா எப்படி வரும், ரைட்டா செஞ்சா எப்படி வரும்னு விலாவாரியா பதியுங்களேன்? நானும் முயற்ச்சி பண்றேன்.

படங்காட்டுங்க!

Monday, July 2, 2007



சென்றவாரம்எனது நண்பர் ரமேஷ் அவர்கள் தனது புதிய டீ தயாரிப்பு நிறுவனத்தின் புதிய இணையதளம் ஒன்றை நான் கலைக்கண்ணோட்டத்தோடு ரி டிசைன் செய்து தர இயலுமா என்று கேட்டார். மிகவும் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு என்று தெரிந்ததால் "சரி 2 நாட்களில் வருகிறேன்" என்று சொன்னேன். அவரின் அலுவலகம் அடைந்த போது அவர் சவுதி அரேபியா சென்றுள்ளதாகச் சொன்னார்கள். சரி திரும்பலாம் என்றுஎழுந்த போது அந்த பேக்ரவுண்ட் என் கண்களைச் சுண்டியிழுத்தது! உடனே ஒரு கப் டீ மற்றும் சில பாக்கெட்டுகளை அவ்விடத்திலே வைக்கச்சொன்னேன்.என்னிடமோ எப்பொழுதும் ஒரு டிஜிட்டல் காமிரா மற்றும் ட்ரைபோடு காரின் பின் சீட்டில் கிடக்கும். (ஆனால் ஃபிளாஸ் மட்டும் நஹீ! ) . ஒரு 15 நிமிடத்தில்எடுத்து முடித்த புகைப்படங்கள்! இயற்கை ஒளியில் சிறிது விளையாடி...எந்த முன் திட்டமிடுதலும் இன்றி !



அவர்கள்ஏற்கனவே சென்னையிலிருந்து வந்த குழு மூலம் விளம்பரப் படம்எடுத்து முடித்திருந்தாலும் என் படங்கள் அவரைக் கவர்ந்ததாக வெளிநாட்டுப் பயணம் முடிந்து வந்ததும் செல் பேசினார். மிகவும் சந்தோஷமாக இருந்தது! இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஒரு நல்ல புகைப்படம்எடுக்க மிகவும் அத்தியாவசியமானது நமது கலைக்கண் என்பதே!
"Great Photographs are not taken by the best cameras but invariably by a golden eye"என்றுஎன் புகைப்படக் கலை குரு அடிக்கடி சொல்வார்!

எனவே நாளை முதல் உங்கள் கண்களையும் சிறிது கூர்தீட்டிக்கொள்ளுங்கள்!

அன்புடன்
ஓசை செல்லா

பிகு:சரி ஒரு சிறிய கேள்வி. மேலே நீங்கள் பார்த்த படங்களின் பின்புலம் (Back Graound) எதனால் செய்யப்பட்டது!




இது அவரின் அலுவலகப் படிக்கட்டுகள்.

animated images

Sunday, July 1, 2007

நல்ல தரமான கேமராவின் ஷட்டர் திறந்து மூடும் சப்தமே சங்கீதம் தான் போங்க.
க்ர-சக்-சக் க்ர-சக்-சக் னு, கேட்டுக்கிடே இருக்கலாம்.

மற்ற பொழுது போக்கு அம்சங்களைப் போல் அல்லாமல், படம் பிடிப்பது பல மடங்கு சுலபமானது.
படம் வரைவது, இசைக் கருவிகள் வாசிப்பது மாதிரி பொழுது போக்கெல்லாம், கத்துக்கரது கஷ்டம்.
சின்ன வயதிலேயே ஆரம்பிக்கவில்லை என்றால், இந்த மாதிரி 'விளையாட்டெல்லாம்' அவ்ளோ சீக்கிரம் மண்டைல ஏராது :).

படம் பிடிக்கரது அப்படி அல்ல.
பழகுவது சுலபம். மெருகேற்றுவது மிகச் சுலபம்.

நான் காமிரா சொந்தமாக வாங்கியது, சிங்கப்பூரில் முதல் வேலைக்குச் செல்லும்போதுதான்.

ஊரில் இருந்த காலத்தில், டில்லி, பம்பாய் என்று சுற்றிய நாட்களில் கையில் காமிரா இருந்ததில்லை.
வேலை நிமித்தமாக டில்லி சென்று, அங்கிருந்து ஒரு ப்ளையிங் விசிட், ஆக்ரா சென்று தாஜ்மஹாலை பார்த்தபோது, கையில் காமிரா இல்லை. அங்கிருந்த ஒரு 'தாடி வாலா', 25 ரூபாய்க்கு காமிரா வாடகைக்குக் கொடுத்தார்.

ஒரு படமும் தேறலை. காமிரா லென்ஸு தொடச்சு 50 வருஷம் ஆகியிருக்கும் போல. எல்லாமே மங்கலா இருந்தது.

அப்பறம் யாஷீகா point-n-shoot வாங்கி சில காலம் கண்டதையெல்லாம் படம் பிடிக்கத் தொடங்கி, Nikon SLR வாங்குமளவுக்கு, புகைப்படம் பிடித்தலில் ஆர்வம் கூடியது.

முறையாக ஒன்றும் கற்றுக் கொண்டதில்லை, இன்று வரை.
புகைப்படம் எடுப்பது இன்னும் அத்துப்படியும் ஆகலை.

10 படம் எடுத்தா, ஒரு 5, 6 தேறும்.

படம் புடிக்க சொல்லித் தரேன்னுட்டு, சும்மா வெட்டிப் பேச்சு பேசரேனேன்னு பாக்கறீங்களா?
என்னத்த சொல்ல. எனக்கும் பெரிய மேட்டரெல்லாம் தெரியாது. கொஞ்சம் கொஞ்சம் படிச்சு, அனுபவத்தையும் கலந்து பதிவு போட பாக்கரேன்.
ஜீவ்ஸும், செல்லாவும் கலக்கராங்களே. இன்னும், பல அனுபவஸ்தர்களை உள்ள கூட்டிக்கிட்டு வர முயற்ச்சிக்கறோம்.

இன்றைய க்ளாஸுக்கு, என் அறிவுரைகள்.
1) நிறைய படம் பிடியுங்கள். என்ன எடுக்கரோங்கறது முக்கியமில்லை, அதை எப்படி 'கட்டம் கட்டறோங்கறதுதான்' முக்கியம். View finder ல ஒரு காட்சிய பாக்கும் போது, அந்த காட்சி, வீட்டு சுவத்தில மாட்டினா எப்படி இருக்கும்னு ஒரு கணம் யோசிங்க. அதுக்கேத்த மாதிரி, கட்டத்துக்குள்ள தெரியரத அட்ஜஸ்ட் பண்ணுங்க.

2) நிறைய நிறைய படங்கள பாருங்க. Flickr.com மாதிரி எடத்துல, மத்த பெரிய தலைங்களோட படங்கள பாத்தீங்கன்னாலே, பாதி professional ஆயிடலாம். நீங்க ஒரு செடியோ, பூவோ படம் பிடிக்கும்போது, நீங்கள் flickrல் பார்த்த காட்சி நினைவுக்கு வந்து, உங்கள் படத்தை மெருகேற்ற உதவும். Nothing wrong in imitating framing techniques :). இந்த பக்கத்தை அடிக்கடி பாருங்க. இந்த மாதிரி படமெல்லாம் காட்டுவாங்க. புல்லரிச்சிடும். Very inspirational!

3) வீட்டு விசேஷங்களின் போதோ, பார்ட்டி மாதிரி சமயங்களிலோ, மனிதர்களை எடுக்கும்போது, அவங்கள கைகட்டி வரிசையா நிக்க வச்சு எடுக்காம, அவங்களுக்குத் தெரியாம, casualஆ அவங்க பேசர மாதிரியும், சிரிக்கர மாதிரியும் எடுங்க. ஆல்பத்துக்கு ஒரு spontaneity கெடைக்கும். 'வாரே வா'ன்னு புகழ ஆரம்பிச்சுடுவாங்க உங்க கலைக்-கண்ணை :)

என் கலெக்ஷனில் இருந்து சில!
1) Rose Garden Roses, California (Nikon D80 SLR)
2) San Francisco Golden Gate during a Full Moon Day, (Nikon D80 SLR)
3) மற்ற பழைய படங்கள் (Canon SD 410)

பொறுமையா பாருங்க நம்ம ப்ரேமிங் டெக்னிக்ஸை. மேலும் வரும், கூடிய விரைவில்.


க்ர-சக்-சக்.

:)
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff