Saturday, June 1, 2013

அன்பு நண்பர்களே,

முதல் சுற்றில் முன்னேறிய படங்களில் இருந்து முதல் மூன்று படங்களை தேர்வு செய்வது சற்று கடினமாகவே இருந்தது.. எந்த புன்னகையும் வேண்டாம் என்று ஒதுக்கமுடியவில்லை..

இருப்பினும் அதிலிருந்து சிற்சில குறைபாடுகள் படங்களில் இருப்பவைகள் மட்டும் வெளியேறுகின்றது..

அவைகள்,

Anbu அவர்களின் படத்தில் flash கொஞ்சம் உறுத்துவதால் இச்சுற்றில் இருந்து  வெளியேறுகிறது..




Jagadesh அவர்களின் படத்தில் கிராமப்புற பள்ளி சிறுவர்களின் புன்னகைகள் அருமை.. இருந்தாலும் சரியான composition இல்லாததால் வெளியேறுகிறது



Sandheya அவர்களின் படமும் சரியான composition இல்லாததால் (தலை அதிகப்படியாக crop )வெளியேறுகின்றது..



Sathiya அவர்களின் படமும் சரியான அமைப்பு பெறததால் வெளியேறுகிறது.. கொஞ்சம் க்ளோசாக இருந்தால் இத்தலைப்பிற்கு நன்றாக இருந்திருக்கலாம்..



Gokulam அவர்களின் படமும் அப்படியே சரியான அமைப்பு பெறாததால் வெளியேறுகிறது..





இவர்களை தவிர,

surapathi   அவர்களின் படத்தில் சிரிப்பு நல்லா bold ஆக இருக்கிறது சிறப்பு.. இருந்தாலும் பின்னால் தெரியும் மனிதர்கள் மற்றும் வெள்ளை எழுத்துக்கள் சற்று தொந்தரவு செய்வதால் வெளியேறுகின்றது..அதே சமயம் இது ஒரு பெரிய குறை ஏதுமில்லை..



கீழை ராஸா அவர்களின் படமும் அப்படியே , பின்னால் தெரியும் பாதி குடிசை சற்று தொந்தரவு செய்கிறதால் வெளியேறுகின்றது..



பூக்குட்டி கண்ணன் அவர்களின் படத்தில் இருக்கும் பாட்டியின் புன்னகையில் ஒரு மெலிதான அயற்சி தெரிவது சற்று பலவீனமே.. மற்றபடி படங்களில் குறையில்லை..லைட்டிங் மிக நன்று..






அடுத்ததாக ,

lalitha அவர்களின் படத்தில் கேஸூவலாக  இருக்கும் மூதாட்டியின் சிரிப்பு அருமை.. ஆனால் படத்தில் பாட்டி சிரிப்பது சற்று தாமதமாக தான் புரிகின்றது.. அதே சமயம் composition ஐ horizontal ஆக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..




gobe அவர்களின் படத்தில் இருக்கும் குழந்தையின் புன்னகை அருமை.. படத்தில் தொந்தரவுகள் எதுவும் பெரிதாக இல்லை..இருப்பினும் இது ஒரு pose மாதிரி தெரிவதால் சிறப்பு எதுவுமில்ல..



அடுத்து kalim அவர்களின் படத்தில் இருக்கும் பெரியவரின் புன்னகை அருமை.. நல்ல தெளிவாகவும் இருக்கின்றது..குறைகள் எதுவும் சொல்வதற்கு இல்லையென்றாலும்.. மற்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு சற்று எளிமையான புன்னகை தோன்றுவதால் வெளியேறுகிறது..




இறுதியாக,

முன்றாம இடத்திற்கு போட்டி போடுவது இரண்டு குழந்தைகளின் படங்கள் ,

roshan மற்றும் viswanath எடுத்த படங்களில் இருக்கும் இரண்டு குழந்தைகளின் அழகான புன்னகைகள் மிகவும் அருமை..

இதில் viswanath அவர்களின் படத்தில் உள்ள தொட்டிலில் புன்னகைக்கும் குழந்தை மிகவும் அழகு..crop சரியா செய்திருந்தால்   கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது..




அதே சமயம் roshan அவர்களின் குழந்தை படம் எடுத்திருக்கும் ஒளி நன்று.. அழகான புன்னகையும் கூட.. இதில் குறைகள் ஏதுமில்லை..
மற்ற படங்களை விட இது studio type மாதிரி தெரிவது சற்று நெருடல்..


இவ்விரண்டில் இருந்து , composition கொஞ்சம் குறையாக இருந்தாலும் , குழந்தையின் அழகான புன்னகைக்காக..




மூன்றாம் இடம் பிடிப்பது viswanath..






அடுத்து இறுதி சுற்றுக்கு வந்த படங்கள் keerthi மற்றும் antony sathesh 

antony sathesh அவர்களின் படத்தில் தாயும் மகனும் ஓடி விளையாடி மகிழ்வது அருமை..படத்தின் composition ம் நன்று..சற்று வெளிச்சம் அதிகமாக இருப்பது சற்று நெருடல்..அதே சமயம் அவர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு காரணம் தெரிகின்றது சற்று சிறப்பு..

keerthi அவர்களின் படத்தில் வரும் மனப்பெண்னின் வெட்கம் கலந்த சிரிப்பு மிகவும் அருமை..composition மற்றும் lighting ம் நன்று.. குறைகள் பெரிதாக ஏதுமில்லை..

இந்த இருவரின் படங்களில், antony sathesh ன் படத்தில் ஒரு மகிழ்ச்சியான தருனத்திற்கு ஒரு காரணம் தெரிந்தாலும், keerthi அவர்களின் படத்தில் புன்னகை சட்டென்று புரிவதால்,

இரண்டாம் இடம் பிடித்தது antony sathesh




முதலிடம் பிடிப்பது keerthi..


முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு PIT ன் வாழ்த்துக்கள்....

வந்திருந்த படங்களில் பல வெளியேறினாலும் அனைத்தும் மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சலிக்கவில்லை என்பதே உன்மை..

மீண்டும் அடுத்த மாதப்போட்டிக்கான தலைப்புடன் தங்களை சந்திக்கின்றோம்..

நன்றி
கருவாயன்

Sunday, May 26, 2013

அன்பு நண்பர்களே,

இந்த மாதப்போட்டிக்கு வந்துள்ள புன்னகைகளை பார்க்கும் போது நம் மனசும் கவலைகளை மறந்து உற்சாகமாகிவிடுகின்றது..

வந்திருந்த புன்னகைகள் அனைத்துமே நன்று.. ஆனால் சிற்சில குறைபாடுகளால் மட்டுமே அவைகள் வெளியேறுகின்றன்..அவைகளை தவிர,

முதல் சுற்றில் முன்னேறிய `புன்னகை`கள்....



ANTONY SATHESH








 JAGADESH





 KEERTHI









 LALITHA






 ROSHAN








 SATHIYA







 VISWANATH







 ANBU







 GOKULAM






 KALIM







 SANDHEYA






 SURAPATHI






 கீழைராஸா







 பூக்குட்டிகண்ணன்






 GOBENATH




 முதல் சுற்றில் முன்னேறியவர்களுக்கு வாழ்த்துக்கள்...

விரைவில் முதல் மூன்று புன்னகையுடன் தங்களை சந்திக்கின்றோம்..

நன்றி
கருவாயன்

Friday, May 10, 2013

-->
அனைவருக்கும் வணக்கம். சென்றபதிவில் நண்பர் நித்தி ஆனந்த் அவர்கள் Photoshop - ல்வாட்டர்மார்க் தயாரிப்பது எப்படி என்பதை விளக்கி இருந்தார். அதையே GIMP மென்பொருளில் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

-->
முதலில் GIMP திறந்து புதிதாக File ->New என்று கிளிக் செய்து 1000*1000 அளவில் 72 மற்றும் transparency -யாக புதிய Image -ஐ உருவாக்கி கொள்ளவும்.
New Image
-->
பின்பு உங்களுக்கு பிடித்தமான லோகோ-வை(நீங்களே டிசைன் செய்தது அல்லது இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்தது) ஒரு layer - ஆக ஓபன் செய்து கொள்ளவும்.


அதில் உங்களுக்கு பிடித்தமான பெயர் (வாட்டர்மார்க்-இல் வர வேண்டுமென நினைக்கும்  பெயர்) type செய்து கொள்ளவும். பின்பு Crop Tool பயன் படுத்தி உங்களுக்கு வேண்டிய அளவுக்கு Crop செய்து கொள்ளவும்.


Cropping

-->
பின்பு அதை Save செய்யும் பொது உங்களுக்கு பிடித்தமான பெயர் கொடுத்து Extension .gbr என்று கொடுத்து, File Type -ஐ GIMP Brush என்று தேர்ந்தெடுக்கவும். அதை உங்களுக்கு பிடித்தமான இடத்தில் save செய்து கொள்ளவும். 
-->
Save செய்து கொண்ட Brush - ஐ File  Manager - ல் உங்களது Gimp directory - ல் இருக்கும் brushes என்ற directory - ல் save செய்து கொள்ளவும்.
-->
நான் என்னுடைய brush - ஐ முதலில் desktop - ல் save செய்து கொண்டுள்ளேன். இதை நீங்கள் back - Up ஆக வேறு எதிலாவது Save செய்து கொள்ளலாம்.

 பின்பு புதிதாக GIMP திறந்து கொண்டு உங்கள் படத்தை Open செய்து அதில் ஒரு புது Layer - ஐ உருவாக்கி கொண்டு Brush tool - ஐ தேர்வு செய்து, பின்னர் Brush List - ல் நீங்கள் புதிதாக உருவாக்கிய Brush தேர்வு செய்து உங்களுடைய படத்தில் உங்களுக்கு பிடித்தமான இடத்தில் வாட்டர்மார்க் வைத்து கொள்ளலாம்.
New Layer
Brush List










புதிய layer opacity -ஐ குறைத்தோ  அல்லது அதே அளவில் வைத்தோ நீங்கள் உங்கள் வாட்டர்மார்க்-ஐ உபயோகித்துக்கொள்ளலாம்.
New layer Opacity
***
Post by
வனிலா பாலாஜி

Monday, May 6, 2013

பிட் வாசகர்களுக்கு வணக்கம். சமீபத்தில் « பிட் « , « புகைபடபிரியன் » »பாண்டிச்சேரி புகைப்படகலைஞர்கள் குழுமம் » ஆகியவற்றை சேர்ந்த வாசக அன்பர்கள் சிலர் என்னிடம் என்னுடைய படங்களில் இருக்கும் வாட்டர்மார்க்கை நீங்கள் எவ்வாறு உருவாக்கினீர்கள் என்ற விளக்கக்கட்டுரையை பிட்டில் பகிரமுடியுமா என கேட்டிருந்தனர். இதோ இவர்களுக்கான கட்டுரை. இக்கட்டுரையில் நாம் வாட்டர்மார்க் உருவாக்குவது, அதனை எவ்வாறு பிரஷ் வடிவாக மாற்றுவது, எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதனை « பேக்-அப் » செய்வது என விபரமாக பார்க்கலாம். இக்கட்டுரையில் நான் போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தியிருக்கிறேன். முதலில் உங்களுக்கு பிடித்தமான லோகோ வை உங்களது விருப்பத்திற்க்கு தயாரித்துக்கொள்ளவும். லோகோ டிசைன் செய்ய தெரியாதவர்கள் Google ன் உதவியை நாடி இலவச லோகோவினை பதிவிறக்கம் செய்துகொள்ளவும். குறிப்பு: நீங்கள் உருவாக்கிய/பதிவிறக்கம் செய்த லோகோவானது « PNG » பார்மேட்டில் இருக்கவேண்டும் அப்போதுதான் பின்புல நிறங்கள் நீக்கப்பட்டு transparencyயாக இருக்கும். ***

**
இப்போது போட்டோஷாப்பை திறக்கவும் அதில் 1000*1000 அளவில் 72 Resolution மற்றும் transparency யாக ஒரு புதிய லேயரை உருவாக்கிக்கொள்ளவும். அதில் நீங்கள் உருவாக்கிய லோகோவை கொண்டுவரவும். பின்னர் எடிட் மெனுவில் இருக்கும் Freetransform ஐ கொண்டு உங்களின் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ உருவாக்கிக்கொள்ளவும். இப்போது டெக்ஸ்ட் டூலை கொண்டு நீங்கள் விருப்பப்படும் எழுத்துக்களை தட்டச்சு செய்துகொண்டு விருப்பம்போல பிரீடிரான்ஸ்பார்ம் செய்துகொள்ளவும். இனி, Crop டூலைக்கொண்டு உங்களது லோகோ மற்றும் டெக்ஸ்டை மட்டும் Crop செய்துகொள்ளவும்.
இனி Edit மெனு சென்று Define Brush Preset என்பதனை தேர்வு செய்து பின்னர் தோன்றும் விண்டோவில் நீங்கள் உருவாக்கிய இந்த வாட்டர்மார்க் பிரஷ்க்கு ஒரு பெயரை கொடுக்கவும்.

இனி நீங்கள் வாட்டர்மார்க் போட விரும்பும் படத்தினை போட்டோஷாப்பில் திறக்கவும். நீங்கள் திறக்கும் படமானது பேக்கிரவுண்டு லேயராக இருக்கும். இப்போது லேயர் பேலட்டில் ஒரு புதிய லேயரை உருவாக்கவும்.

இப்போது பிரஷ் டூலை தேர்வு செய்யவும் (விசைப்பலகையில் "B"யை அழுத்தவும்). இப்போது பிரஷ் மெனுவை மவுஸால் டிராக் செய்யவும் கடைசியாக நீங்கள் உருவாக்கிய பிரஷ் காணப்படும்.அதனை தேர்வு செய்துகொண்டு உங்களுக்கு தேவையான அளவை அட்ஜஸ்ட் செய்து கொண்டு படத்தில் எந்த இடத்தில் வாட்டர்மார்க் தேவையோ அங்கு கிளிக் செய்யவும். பின்னர் Opacity ஐ உங்களின் விருபத்திற்கேற்றபடி குறைத்துக்கொண்டு வாட்டர்மார்கை அட்ஜஸ்ட் செய்துகொள்ளவும்.

--
அவ்வளவுதான் உங்களின் படத்திற்க்கு வாட்டர்மார்க் non-destructive ஆக அப்ளை ஆகிவிடும். சரி இந்த பிரஷை எப்படி பேக்-அப் செய்வது என பார்க்கலாம்.நாம் உருவாக்கிய இந்த பிரஷ்ஷானது போட்டோஷாப்பில் பிரஷ்களுடன் பதியப்பட்டிருக்கும்,எதோ ஒரு காரணத்தினால் போடோஷாப் Crash ஆனாலோ அல்லது உங்களது கணினியில் போட்டோஷாப்பை Uninstall செய்தாலோ அல்லது கணினியை பார்மேட் செய்து விண்டோஸை மீண்டும் நிறுவினாலோ இந்த பிரஷை திரும்ப மீட்டெடுக்க இயலாது ,எனவே நாம் உருவாக்கிய இந்த பிரஷை பேக்-அப் செய்து தனியாக வைத்துக்கொண்டால் பிற்காலத்தில் தேவைப்படும் போது Load செய்துகொள்ளலாம். போடோஷாப்பில் எடிட்மெனு சென்று Preset>Preset Manager செல்லவும். அதில் Preset Type என்பதில் Brushes என்பதை தேர்வுசெய்து நீங்கள் உருவாக்கிய பிரஷை தேர்வுசெய்யவும். பின்னர் SaveSet என்பதனை அழுத்தி அதனை தனி கோப்பாக உங்களது பென்டிரைவிலோ அல்லது இதர பார்டிஷன்களிலோ சேமித்துவைத்து பின்நாளில் பயன்படுத்திக் கொள்ளவும்.

 
***

Post By Nithi Anand

Saturday, May 4, 2013

அன்பு நண்பர்களே,

இன்றைக்கு இருக்கின்ற பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலைகளில் நாம் சந்திக்கின்ற அனைவருமே ஒரு வித இறுக்கமான முகங்களையே பார்க்கின்றோம்..முகம் உர்ர் என இருந்தால் யாருக்காவது பிடிக்குமா என்ன...

நாள் முழுவதும் அப்படியே இருந்தால் கண்டிப்பாக பல நோய்கள் வருவது உறுதி..

 `வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்`ங்கிற பழமொழி இன்றைக்கு ரொம்பவே தேவைப்படுகின்றது..

எனவே  , இந்த மாதத்திற்கான தலைப்பு `புன்னகை`.. 

படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 20-5-2013

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே

 புன்னகை, சந்தோஷம் , மகிழ்ச்சி, ஆனந்தம்,குதூகலம்,கலகலப்பு.. இப்படி எது வேண்டுமானாலும் இருக்கட்டும்..

சாம்பிள் படங்கள்,





கருவாயன்


கருவாயன்
கருவாயன்
கருவாயன்
கருவாயன்


 முடிந்தளவு புன்னகை இயல்பானதாக இருக்கட்டும்..
 

-கருவாயன்

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff