Showing posts with label வாழ்த்துகள். Show all posts
Showing posts with label வாழ்த்துகள். Show all posts

Wednesday, December 25, 2013

வணக்கம் நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த கிருஸ்துமஸ் மற்றும் 2014 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பிட்டின் 2014 ஆம் ஆண்டு காலண்டர் நீங்களே எடுத்த, உங்களுக்குப் பிடித்தமான படத்தை பேஸ்ட் செய்து பிரிண்ட் செய்து கொள்ள ஏதுவாக   template  வடிவமைக்கப்பட்டுள்ளது. 12”X 8” அளவில் பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

முதலில் இந்த இலவச டெம்லேட்டை இங்கு கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


பின்னர் இந்த இலவச டெம்லேட்டை போட்டோஷாப் அல்லது கிம்பில் திறந்துகொள்ளவும், இப்போது Magic Wand டூலை தேர்வு செய்துகொண்டு கிரே வண்ணத்தின் மீது கிளிக் செய்யவும்.
  


இனி,நீங்கள் இந்த templateல் இணைக்க விரும்பும் படத்தினை போட்டோஷாப் அல்லது கிம்பில் திறக்கவும்.இப்போது Select Menu  சென்று Select All என்பதை கிளிக் செய்யவும்(CTRL+A).


இனி Edit>Copy  செய்துகொள்ளவும்(CTRL+C).

பின்னர் template படத்திற்கு வந்து Edit>Paste>Paste Special> சென்று Paste Into என்பதனை அழுத்தவும். இப்போது உங்களது படம் இந்த கிரே நிற Photo frameல் பேஸ்ட் செய்யப்பட்டிருக்கும்.
இப்போது Edit Menu சென்று Free Transform என்பதனை தேர்வு செய்து பிரேமில் சரியாக பொருத்திக்கொள்ளவும்.
(குறிப்பு: படத்தை resize செய்கையில் SHIFT பட்டனை அழுத்திக் கொண்டு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ ஆக்கவும், இல்லையேல் படமானது Distortion ஆகிவிடும்).

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் 
பிட் குழுவின் இனிய 
கிருஸ்துமஸ் மற்றும் 2014 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!
***
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff