Showing posts with label Anton. Show all posts
Showing posts with label Anton. Show all posts

Thursday, June 2, 2016

சாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது  புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை மிகச் சிறிய அளவில் காட்டும் ஒரு நுட்ப முறையாகும். எடுத்துக்காட்டு: ஒரு சாலையைப் படம் பிடித்தால், அச்சாலையிலுள்ள வாகனங்கள், கட்டடங்கள், மக்கள் என்பவற்றையெல்லாம் பொம்மைகள் போல் காட்டுவதாகும்.

உதாரணம் 1:

இது இஸ்ரேலிலுள்ள ஹைபா எனும் நகரத்தின் ஒரு பகுதி. சாய்வு மாற்ற நுட்பம் மூலம் இங்குள்ள கட்டடங்கள் பார்வைக்கு சிறியதாக, தீப்பெட்டிகள் போல் தெரிகின்றன.

உதாரணம் 2:

இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடைப்பட்ட சாக்கடலில் உல்லாசப் பயணிகள். சிலர் மிதக்கின்றனர். சிலர் நிற்கின்றனர். சிலர் நடக்கின்றனர்.

நுட்பம் என்ன?

எவ்வளவு பெரிய விடயத்தையும் சாதாரணமான மொம்மைகள் போன்று மாற்றி, பார்வைக்கு இனிமையாக தெரிய வைப்பதுதான் இதன் நுட்பம். படத்தின் நடுப்பகுதியைத் தவிர்த்த கீழும் மேலும் உள்ள பகுதிகள் குவிவற்ற (unfocused), ஆழமற்ற புலக் குவிவை (shallow depth of field) வழங்குவதால் இது ஏற்படுகிறது. கிட்டத்தட்ட இது ஒரு நுண் ஒளிப்படவியல் (macro photography) போன்றது. உதாரணத்திற்கு, நுண் ஒளிப்படவியல் மூலம் ஒரு தேனியை அதன் சுற்றுப்புறத்துடன் படமாக்க முற்பட்டால் தேனிக்கு முன்னும் பின்னும் உள்ள பகுதிகள் (பொதுவாக f/2 aperture அளவில்) குவிவற்றுத் தெரியும். நுண் ஒளிப்படவியல் ஒரு சிறு இடத்தில் மேற்கொள்ளப்படும். அதனை ஒரு பரந்த இடத்தில் (landscape photography) மேற்கொண்டால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இந்த சாய்வு மாற்ற ஒளிப்படமும் இருக்கும்.

சுமார் $2,000 விலைமதிப்புள்ள (Nikon PC-E Micro-NIKKOR 45mm f/2.8D ED) Tilt-Shift Lens
இதனை சாதாராண வில்லைகள் (lens) மூலம் மேற்கொள்ள முடியாது. இதற்கு சாய்வு மாற்ற வில்லை (Tilt-shift lens) தேவையாகவுள்ளது (மேலேயுள்ள படம்). இதன் ஊடாக படம் பிடித்தால் அழகான சாய்வு மாற்ற படங்களைப் பெறலாம். தேவை, விலை போன்ற காரணங்களினால் இதனை பெரிதாக யாரும் வாங்குவதில்லை. ஆகவே நம்மைப் போன்றவர்கள் எப்படி படம் பிடிப்பது என்ற கேள்வி எழலாம். இப்படியானவர்கள் படம் பிடிக்க இயலாது. ஆனால், பிடித்த படத்தை போட்டோசொப் கொண்டு மாற்றிவிடலாம்.

சாய்வு மாற்ற படம் பிடிக்கவோ அல்லது பிடித்த படத்தை போட்டோசொப் கொண்டு மாற்றவோ சரியான இடம் அல்லது படம் அவசியம். மேலிருந்து கீழ் நோக்கி இருக்கும் இடம் அல்லது படம் பொருத்தமாக இருக்கும். (உதாரணப் படங்களைப் பாருங்கள்)

போட்டோசொப்பில் செய்வது எப்படி?

1. பொருத்தமான படத்தை போட்டோசொப்பில் திறந்து கொள்ளுங்கள். அதனை Quick Mask Mode (Photoshop CS5: Menu > Select > Edit in Quick Mask Mode [குறுக்குவழி Q]) என்பதற்கு மாற்றுங்கள். (படத்தில் 1 என்று கட்டமிடப்பட்டுள்ளது)

2. Tool bar இல் Gradient Tool [குறுக்குவழி Q] என்பதை தேர்வு செய்து (படத்தில் 2 என்று கட்டமிடப்பட்டுள்ளது), Reflected Gradient என்பதை (Gradient Tool இற்கான மெனுவில் நான்காவது) தேர்வு செய்யுங்கள் (படத்தில் 3 என்று கட்டமிடப்பட்டுள்ளது).

3. Gradient Tool மூலம் செங்குத்தாக (மேலிருந்து கீழாக) ஒரு கோடு வரையுங்கள். இப்போது Quick Mask Mode இல் இருப்பதால் அங்கு சிவப்பு பட்டி உருவாகியிருக்கும். Quick Mask Mode இல் இருந்து வெளியேறி வழமையாக நிலைக்கு (Standard Mode) வாருங்கள் [குறுக்குவழி Q]. (படத்தில் 1 என்று கட்டமிடப்பட்டுள்ளது)

4. இப்போது படத்தின் கீழ்ப்பக்கம் தெரிவு செய்யப்பட்டிருக்கும். இது நமது சாய்வு மாற்றத்திற்கு உதவாது. எனவே, சரியாக தெரிவு செய்ய வேண்டும். ஆகவே, படத்தில் காட்டப்பட்ட A முதல் B வரை Gradient Tool மூலம் செங்குத்தாக (நேராக) ஒரு கோடு வரைந்துவிட்டு, வழமையான நிலைக்கு (Standard Mode) வாருங்கள். இப்போது படத்தில் உள்ளவாறு படத்தில் இடைப்பகுதி தவிர்த்த பகுதிகள் (மேல், கீழ் பகுதிகள்) தெரிவு செய்யப்படும். தெரிவு செய்யப்படாத பகுதிதான் நாம் எங்கு காட்சியை முக்கியத்துவப்படுத்தப்போகிறோம் என்பதற்கான பகுதி. எனவே உங்கள் படத்திற்கேற்ப சரியான பகுதியை இனங்கண்டு அதற்கேற்ப Gradient Tool மூலம் தெரிவு செய்யுங்கள்.

5. படத்தில் உள்ளவாறு இடைப்பகுதி தவிர்த்த பகுதிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கையில் Lens Blur என்பதைத் தெரிவு செய்யுங்கள் (Menu > Filter > Blur > Lens Blur…).

6. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவுகளை அமையுங்கள். என்பதை கூட்டிக் குறைப்பதன் மூலம் வேண்டிய மாற்றத்தைச் செய்யலாம். உதாரணத்திற்கான படத்தில் 40 என்றுள்ளது. பின்னர் Ok என்பதைச் சொடுகி வெளியேறுங்கள்.

7. இப்போது உங்களுக்கு வேண்டிய சாய்வு மாற்றம் உருவாகியிருக்கும். எனவே மிகுதியாக CTRL-D என்ற குறுக்குவழியூடான தெரிவு செய்யப்பட்டதை இல்லாது செய்யுங்கள்.

8. படத்தை மேலும் மெருகூட்ட வேண்டிய மாற்றங்களைச் செய்யலாம். குறிப்பாக, Hue/Saturation, Curves செய்வதால் சாய்வு மாற்ற படத்திற்கு மேலும் மெருகூட்டும்.

9. Menu > Image > Adjustments > Hue/Saturation… [குறுக்குவழி CTRL-U] என்பதைத் தெரிவு செய்து Saturation தேவையான அளவு கூட்டிக் கொள்ளுங்கள். எ.கா: 40
10. Menu > Image > Adjustments > Curves… [குறுக்குவழி CTRL- M] என்பதைத் தெரிவு செய்து தேவையான அளவு படத்தை மாற்றிப்பாருங்கள். எ.கா: Input = 7, Output = 9



இப்போது உங்களுக்கு அழகான படம் கிடைத்திருக்கும்.

***



Friday, September 4, 2015

எல்லாருக்கும் வணக்கம்,

நம்மில் பெரும்பாலோருக்கு பொழுது விடிவதே இதன் மூலம்தான். எனக்கெல்லாம் காலையில் இது இல்லைன்னா ரொம்பக் கஷ்டம். தலைவலி வந்துவிடும். அந்தளவுக்கு நம்மில் பலர் இதற்கு அடிமை. 

ஆமாங்க, இந்த மாதத்  தலைப்பு:  தேநீர் (அ ) காஃபி (Tea or Coffee) 

மாதிரிப் படங்கள்  கீழே இணைக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் இணையமெங்கும் தேநீர்/காஃபி படங்கள் கொட்டிக்கிடக்கின்றன உங்களை Inspire செய்வதற்கு. நம்மூர் சாயாக்கடைகளை காலை நேரத்தில் கேமராவுடன் முற்றுகையிடுங்கள். அற்புதமான, உயிரோட்டமுள்ள படம் கிடைப்பது நிச்சயம். வெறும் தேநீர் கோப்பையை மட்டும் எடுக்காமல், மக்கள் அதை குடிப்பது போல், கடைக்காரர் சாயா ஆற்றுவது போல் எடுத்துப் பாருங்கள் வித்தியாசம் தெரியும். 

மாதிரிப் படங்கள்:








படங்கள் வந்து சேர  வேண்டிய கடைசித் தேதி 20-செப்டம்பர்-2015.

எல்லாருக்கும் வாழ்த்துகள். 

**

போட்டி ஆல்பம் இங்கே.

Monday, August 31, 2015

வணக்கம் நண்பர்களே!

ஊர்வனவும் ஈரூடக வாழ்வனவும் என்ற தலைப்பிற்கு அனுப்பப்பட்ட படங்கள் முதற் சுற்று இன்றி இறுதித் சுற்றுக்குச் செல்கின்றன. 

வெற்றிபெற்ற படங்களைப் பார்க்குமுன் சில கவனத்தை ஈர்த்த படங்களைப் பார்ப்போம்.

#செந்தில்குமார்


#பிலால்


#மேர்லின்


#மதன்


#சங்கர் குமாரவேல்


#பிரபு


#யமோ

வெற்றி பெற்ற படங்கள்:


3 ஆம் இடம்: கண்ணதாசன்
ஓணான் இன்னும் தெளிவாக அமைந்திருக்க வேண்டும். அப்பாச்சர் அளவு ƒ/5.6 சிறப்பாகக் கைகொடுக்கவில்லை. கருப்பு பின்புலத்தில் நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளது.


2 ஆம் இடம்: கார்த்திக்
கூட்டமைவு (Composition) இன்னும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். இடப்பக்கம் கூடுதல் இடைவெளி அமைந்துள்ளது. தெளிவான படப்பிடிப்பு


1 ஆம் இடம்: கார்த்திக் பாபு
கூட்டமைவு (Composition) இன்னும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். எட்டிப்பார்க்கும் இரு தலைகளும் அருமை.



போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! 
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

Monday, August 10, 2015

அனைவருக்கும் வணக்கம், 

இம்மாதப் போட்டித் தலைப்பு: ஊர்வனவும் ஈரூடக வாழ்வனவும்

ஆமை, பாம்பு, முதலை, பல்லி, பல்லியோந்திகள், ஓணான், உடும்பு, டைனசோர் போன்றவை ஊர்வன (Reptile) என்ற விலங்கியல் வகுப்பில் அடங்கும் உயிரினங்களாகும். அதேபோல் தவளை, சாலமாண்டர், முதலை போன்றவை நிலத்திலும் நீரிலும் வழக்கூடியன. இவை நிலநீர் வாழிகள் அல்லது ஈரூடக வாழிகள் (Amphibian) என்ற விலங்கியல் வகுப்பில் அடங்கும் உயிரினங்களாகும். இவ்வாறு பல ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. அவற்றை சிறப்பாகப் படம்பிடித்து இம்மாதப் போட்டிக்கு அனுப்புங்கள். உயிருள்ள உயிரினங்கள் இப்போட்டிக்கு உகந்தன. டைனசோர் போன்றவற்றை உயிருடன் படம் பிடிக்க முடியாது என்பதால் அவற்றின் மொம்மை வடிவங்களும் உகந்தன. ஆயினும் உயிருள்ளவற்றுக்கே முன்னுரிமை. மொம்மையைப் படம் பிடிப்பது இலகு அல்லவா? உயிருள்ளவற்றை விஞ்சும் படங்கள் எடுத்தால் பார்க்கலாம்! 

எடுத்துக்காட்டுக்கு சில படங்கள் இங்கே:

#1

#2

#3

#4

வழமையான போட்டி விதிமுறைகள் இங்கே.

போட்டி அறிவிப்பு தாமதமாகியதால், இம்முறை படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 25 ஆகஸ்டு 2015
**


இதுவரை போட்டிக்கு வந்திருக்கும் படங்கள்: இங்கே 

Tuesday, December 16, 2014

கருப்புப் பின்புலத்தில் கருப்பொருளைப் படமாக்குதல் சுவாரசியமான அனுபவம். வணிக நோக்கம், கருப்பொருளை "வெளிச்சம்" போட்டுக் காட்டல், எதிர்மறையான உணர்வை வெளிப்படுத்துதல் போன்ற காரணங்களுக்கு இந்த கருப்புப் பின்புலம் முக்கியமாகப் பயன்படுகிறது. பலர் கருப்பு பின்புலத்தை "மங்களம்" இல்லை எனத் தவிர்த்துவிடுவர். இந்த விருப்பு, வெறுப்புக்கு அப்பால், கருப்புப் பின்புலத்தில் கருப்பொருளைப் படமாக்குதல் என்பது வழமையான படமாக்குதலில் இருந்து வேறுபட்டது.

கீழே கருப்புப் பின்புலத்தில் படமாக்கப்பட்ட கருப்பொருள்களுக்குச் சில உதாரணங்கள்:



கடந்த மாதப் போட்டி முடிவு அறிவிக்கும்போது ஒரு இடத்தில், கருப்புப் பின்புலத்தில் கருப்பு கருப்பொருளைப் படமாக்குதல் எளிதல்ல எனக் குறிப்பிட்டிருந்தேன். எனவே, கருப்புக்குள் கருப்பை படமாக்குவதில் உள்ள நுட்பத்தையும், அதை எளிய முறையில் எவ்வாறு செய்வது என்பது பற்றிய விளக்கமே இப்பதிவு.


பொதுவாக, கருப்புப் பின்புலத்தில் கருப்பொருளைப் படமாக்க நாம் பொருத்தமான அமைப்பு முறையைச் செய்ய வேண்டும். அதற்கு இருக்க வேண்டிய உபகரணங்கள்: DSLR, கருப்புத் திரை, கருப்பு அடிப்பகுதி, இரு மின்விளக்குகள், சிறிய வெண் குடையுடன் பிளாஷ் மற்றும் முக்காலி, மேசை போன்ற இதர பொருட்கள். இவற்றைக் கொண்டு பின்வரும் அமைப்பில் அமைக்கப்பட வேண்டும்.


பலர் இது வேலைக்கு ஆகாது என்று எண்ணலாம். காரணம், தொழில்முறையில் இருப்பவர்கள்தான் இம்மாதிரிப் பொருட்கள் எல்லாம் வைத்திருப்பார்கள், நமக்கோ இது ஒரு பொழுதுபோக்கு. நம்மில் பலர் வைத்திருப்பது ஒர் DSLR மற்றும் அதற்குண்டான சில பொருட்கள்தான். உண்மையில் பொருளை அல்லது காட்சியைப் படமாக்குதல் என்பது வெறுமனே "கிளிக்" அல்லாமல் சற்று நுட்பம் பற்றிய அறிந்தால் நாமும் அழகான படங்களுக்குச் சொந்தக்காரர் ஆகலாம். இனி விடயத்திற்கு வருவோம்.


கருப்பு நிறம் ஒளியை உறிஞ்சும் என்பதால் கருப்பான பொருட்கள் படத்தில் சரியாக விழுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே தனிக் கருப்பான பொருளை தெளிவாகப் படம்பிடித்தல் என்பதே சிரமத்தை ஏற்படுத்தும். இங்கு பின்புலம், ஒளிப் பாவனை என்பன அவசியம். பொருளின் ஓரங்கள் ஒளியினால் மிளிரும்போது, பொருள் பின்புலத்தில் இருந்து வேறுபடுத்தப்பட்டுத் தெரியும். கருப்புப் பின்புலத்தில் கருப்புப் பொருள் மறைந்து போகாமலிருக்க ஒளி பொருளின் விளிம்புகளிற்பட்டு ஒளிர வேண்டும். இதற்காகவே மேலுள்ள அமைப்பு முறை அவசியமாகிறது. இந்த நுட்பத்தை விளங்கிக் கொண்டால் எம்மாலும் கருப்புனுள் கருப்பை படம்பிடிக்க முடியும். பொருளைவிட பின்புலம் கருப்பாக இல்லாமல் சாம்பல் நிறத்தில் அல்லது கிட்டத்தட்ட 70% - 90% கருப்பு நிறத்தில் இருந்தாலும் கருப்பினுள் கருப்பினைப் படமாக்கலாம். (படம் 1) அல்லது பின்புலத்தில் ஒளித் தெரிப்பை ஏற்படுத்தியும் படமாக்கலாம். (படம் 2)

படம் 1

படம் 2
வீட்டிலிருந்த பொருட்களைக் கொண்டு இரு torch light உதவியுடன் கமிராவிலுள்ள பிளாஷைக் கொண்டு எளிய முறையில், மேற் குறிப்பிட்ட அமைப்பு முறையில் படமாக்கப்பட்ட mouse. இங்கு குடையுடன் பிளாஷ் பயன்படுத்தப்படவில்லை. இங்கு போதிய ஒளி கிடைக்காததால் ஓரங்கள் சிறப்பாக வரவில்லை. ஓரங்களுக்கு ஒளித் தெறிப்பு மற்றும் பொருளை வெளிக்காட்டக்கூடிய ஒளி அமைப்பு என்பன மிக முக்கியம். பொருளுக்கும் கருப்புத் திரைக்கும் குறைந்தது 1.5 மீட்டர் இடைவெளி இருப்பது கருப்புத் திரையின் விபரங்கள் தெரியாதவாறு படமாக்க உதவும்.


Thursday, August 11, 2011

'யாருமில்லாத தீவொன்று வேண்டும்...' இப்பிடி யாராவது நெனச்சிங்கன்ன, உங்களுக்கு இந்த பதிவு பிரயோசனமாக இருக்கும். ஏன்னா எப்பிடி குட்டி உலகம் உருவாக்கலமாங்கிறதான் பாடம். அதுவும் அஞ்சே நிமிசத்துல. உங்கட்ட இருக்க வேண்டியதெல்லாம்.
1. காமரா
2. காம்பியூட்டர்
3. ஃபோட்டோஃசொப் / கிம்ஃப்


அதுக்கு முன்னாடி, பனரோமா (Panorama) பத்தி கொஞ்சம் தெரிச்சுக்குவம். பனரோமா என்பது செந்தமிழில் அகலப்பரப்பு. காட்சிகள அகலமா ஃபோட்டோ புடிச்சா அதான் பனரோமா. இத பனரோமா வியூ (Panorama View/அகலப்பரப்பு காட்சி) என்டும் சொல்லாம். பொதுவாக 4 ஷாட்ஸ் மூலமா இத எடுக்கலாம். இது சொஞ்சம் சிரமமான வேலதான்.

பனரோமா சாம்பிளுக்கு இந்தப் படம்

பனரோமா ஃபோட்டோ புடிக்க எனக்கு நேரமில்ல என்டு நெனச்சிங்கன்னா உங்களுக்கு ஒரு சுலபமான வழி.

சாம்பிளுக்கு....

சாதாரண ஃபோட்டோ ( # ராமலக்ஷ்மி)

பனரோமாவுக்கு பொருத்தமாக Crop செய்யப்பட்டது.

குட்டி உலகம் ரெடி!

குட்டி உலகத்துக்கான ஃபோட்டோவை தெரிவு செய்தல்:
  • 2:1 என்ற விகிதப்படி உள்ள காட்சிகள் சிறப்பானவை (அல்லது 2:1 என்ற விகிதப்படி Crop செய்யப்பட்ட ஃபோட்டோ). எவ்வளவுக்கு அகலம் அதிகமாக இருக்குதோ, அவ்வளவுக்கு சிறப்பான 'குட்டி உலகம்' கிடைக்கும்.
  • ஃபோட்டோவின் கீழ்ப்பகுதியில் (25% அல்லது குறைவாக) மண் தரை, நீர் இருப்பது சிறந்தது. ஏன்னா இதுதான் நடுப்பகுதியாக மாறும்.
  • ஃபோட்டோவின் மேற்பகுதியில் (25% அல்லது குறைவாக) ஆகாயம், மேகம் இருப்பது சிறந்தது.
  • வலப்பக்கமும் இடப்பக்கமும் முடிந்தளவு ஒரே மாதிரியாக (நிறம், காட்சி, காட்சியின் உயரம்) இருப்பது சிறந்த காட்சியை உருவாக்கும். ஏன்னா வல, இட பக்கங்கள் ஒன்னா சந்திக்கும்.
  • காட்சியின் கிடையான (horizontal) எல்லைகள் உயர்ந்து தாழ்வாக இருக்காமல் சமமாக இருக்க வேண்டும். இல்லன்னா 'குட்டி உலகம்' பிளந்ததுபோல் காட்சியளிக்கும்.
உங்க பனரோமா ஃபோட்டோவை ஃபோட்டோஃசொப் / கிம்ஃப் இல் திறந்து கொள்ளுங்கள். அல்லது பனரோமாவுக்கு ஏற்ற மாதிரி Crop செய்து கொள்ளுங்கள்.


படிமுறை 1:
ஃபோட்டோவை சற்சதுரமாக மாற்றுங்கள்.
  • மெனுவில் Image> Image Size
  • Constrain Proportions என்பதன் அடையாளத்தை நீக்கிவிடுங்கள்.
  • "Width" ற்கு ஏற்றவாறு "Height" யை மாற்றிவிடுங்கள். Ex: 1800x1800

படிமுறை 2:
ஃபோட்டோவை தலைகீழாக மாற்றுங்கள்.

  • மெனுவில் Image> Rotate Canvas>180o (எதிர்மறையான குட்டி உலகம் தேவையென்றால் படத்தை தலைகீழாக மாற்றத் தேவையில்லை.)


படிமுறை 3:
ஃபோட்டோவிற்கு ஃபோலார் எஃபெக்ட்டை அப்ளை செய்தல்
  • மெனுவில் Filter > Distort > Polar Coordinates (கிம்ப்பில் Filters > Distorts > Polar Coords.)
  • “Rectangular to Polar”தெரிவு செய்யப்பட்டிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
90% ரெடி!

படிமுறை 4:
இனி செய்ய வேண்டியதெல்லாம், படத்தை மெருகூட்ட வேண்டியதே. அங்காங்கே இருக்கும் புள்ளிகளை அகற்றி வல, இட பங்கங்கள் பொருந்தும் இடத்தில் உள்ள செயற்கைத்தன்மையினை அகற்ற வேண்டியதுதான்.
Clone Stamp Tool, Smudge Tool என்பன இதற்குப் பயன்படும்.

(படம்: ஜெருசலேம், இஸ்ராயல்)

குட்டி உலகம் ரெடி!
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff