PiT மாதாந்திர போட்டி விதிமுறைகள்
படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 25 ம் தேதி, 23:59 IST
போட்டி விதிமுறைகள்:-
படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 25 ம் தேதி, 23:59 IST
போட்டி விதிமுறைகள்:-
- படங்கள் நீங்களே எடுத்த, உங்களின் சொந்த படமாக இருக்க வேண்டும்.
- போட்டிகள் இனி (பிப்ரவரி 2016 முதல்) https://www.facebook.com/groups/488597597986621/ குழுவின் மூலமாக தொடர உள்ளன. முதலில் குழுமத்தில் இணைந்திடுங்கள்.
- போட்டிக்கான படத்தை இணைக்க வேண்டிய ஆல்பத்தின் லிங்க் ஒவ்வொரு அறிவிப்புப் பதிவிலும் தரப்படும். படங்களைக் கண்டிப்பாக அந்தப் பக்கத்தைத் திற்ந்துதான் வலையேற்ற வேண்டும். குழும சுவற்றில் பதியக் கூடாது.
- ஒரு நபர் விருப்பமானால் 2 படங்கள் சமர்ப்பிக்கலாம். அதற்கு மேல் அனுமதியில்லை.
- போட்டிக்கு அனுப்பப்படும் படம் ஏதாவது பார்வையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்று பிட் குழுவினரால் கருதப்படும் பட்சத்தில்,அந்தப்படம் போட்டியில் இருந்து நீக்கப்படும்.(Pictures not suitable for public viewing shall be removed from contention based on PIT moderators discretion)
- எங்களின் போட்டிக்கு ஏற்கெனவே அனுப்பிய படத்தை மறுபடியும் அனுப்ப வேண்டாம்.
- அனுப்பும் படங்கள் ஃபேஸ்புக்கில் தானாகவே அளவு குறைந்து விடும். இருப்பினும் 1024x768 எனும் அளவில் பதிய விரும்பினால் எப்படி மாற்றுவது என்பது குறித்து அறிய இந்தப் பதிவு உதவும்: இர்ஃபான்வ்யூ, Photoshop,Lightroom
- எடிட்டிங் பொறுத்தவரை அடிப்படை திருத்தங்களை நிச்சயமாகச் செய்யலாம். (brightness,contrast,saturation போன்றன). ஆனால் பின்புலங்களை மாற்றுவது, ஒட்டு வேலைகள் போன்ற Manupulation_களுக்கு அனுமதியில்லை.
- போட்டி ஆல்பம் உருவாக்கப்பட்ட பின் அதற்கான இணைப்பு ஒவ்வொரு அறிவிப்புப் பதிவின் இறுதியிலும், தளத்தின் வலப்பக்கம் மேல்பகுதியிலும் அளிக்கப்படும்.
- போட்டிக்கான உங்களின் படத்தைப் பதியும் போது படம் எடுத்த விதம் பற்றியும், மற்ற மேல் விவரங்கள் பற்றியும் தெரிவிக்கலாம். இது, படத்தை பார்க்கும் மற்றவர்களுக்கு உபயோகமாய் இருக்கும். அல்லது படத்தின் கீழ் விவரங்களை கமெண்ட் செய்யலாம்.
- போட்டி ஆல்பத்தில் நீங்கள் சேர்க்கும் படங்கள் அவ்வப்போது சில அப்டேட் செய்யப்படும். தானாகப் படங்கள் இணையாது. நீங்கள் படத்தை இணைக்கும் போது இருந்த நிலையிலிருந்து ஆல்பம் அடுத்து அப்டேட் ஆகும் வரைக் காத்திருக்கவும். அதன் பின்னும் உங்கள் படம் ஆல்பத்தில் சேரவில்லை ஆல்பத்தில் சேரவில்லை என்றால் மட்டும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.




