Thursday, April 10, 2008


PiT ஆரம்பம் மிகவும் எளிமையான இனிமையான ஒரு வலையுலக நிகழ்வு என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து அதிகம் இருக்காது என்று நினைக்கிறேன். அதே சமயம் இந்த புகைப்படப் போட்டி, பாடங்கள், படங்கள், பட்டறைகள் என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளரும் இந்த இணையக்குழுவினரின் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை புகைப்படச் சுற்றுலாக்கள். நண்பர் ஜீவ்ஸ் மற்றும் மங்களூர் சிவா அவர்கள் ஒருங்கிணைப்பில் 17 புகைப்பட ஆர்வலர்கள் மற்றும் நண்பர்கள் பெங்களூரிலிருந்து ஒரு வெள்ளி இரவு வாடகை சிற்றுந்தில் கூர்க் நோக்கி பயணமானோம்... (பயணிக்கும் போது புதியவரான லக்குவனாரை செமையாக கலாய்த்தது தனிக்கதை.. ). அதிகாலை 5.30 மணிக்கு கூர்க் மாவட்டத்தின் தலைநகரான மடிக்கேரி சென்றடைந்தோம். மேகங்களூடே மலைமுகடுகள் துறுத்திக்கொண்டிருந்த அற்புதகாட்சி.. என் கண்ணுக்குள்ளே இன்னும் விரிகிறது! மதியம் ஒரு சிறு ஓய்வுக்குப் பின்பு தலைக்காவிரி நோக்கி பயணமானோம். வழியெங்கும் காபித்தோட்டங்கள்.. தலைக்காவிரியில் ஒரு சிறுகுழாயில் தண்ணீர்வடிவது போல் ஊற்றாகப் பிறக்கிறாள் காவிரித் தாய். அருமையான காட்சிகள் பலவற்றை படம்பிடித்து மீண்டும் மடிக்கேரி வந்தடைந்தோம். அன்றைய சனி இரவுக் கொண்டாட்டம் கலைகட்டியது.. பின்னவீனத்துவம் முதல் பதிவுலக நிகழ்வுகள் வரை மிக மிக நகைச்சுவையோடு (சிபியும், மோகன் தாசும் இளவஞ்சியும், சிவாவும், நிலா அப்பாவும் இருக்கையில் கலகலப்புக்கு என்ன பஞ்சம்!) நடுஇரவுவரை அலசிமுடித்து படுக்கச்சென்றோம். அதிகாலை ஆறுமணிக்கு மீண்டும் மைசூர் நோக்கி பயணமானோம்.... தொடரும்

திரும்பி வரும்போது தங்கக் கோவிலில் நான் க்ளிக்கிய சில படங்களின் ஒரு சிறு தொகுப்பு... (அடுத்த பதிவில் இளவஞ்சி, ஐய்யப்பன், மோகன்தாஸ், நந்து, லக்குமணராஜா போன்றவர்களின் படங்களில் சிலவும் பதிப்பிக்கப் படும்!)

படத்தை க்ளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்!

Tuesday, April 1, 2008

வணக்கம் மக்களே!!!
எல்லோரும் எதிர் பார்த்துக்கொண்டிருக்கும் ஏப்ரல் மாத போட்டி இதோ

1.போட்டி தலைப்பு :
தனிமை
- தனிமையிலே இனிமை காண முடியுமா ? ஓ முடியுமே.... எப்படி? PIT ஏப்ரல் மாத போட்டியில் கலந்துக்கொள்ளுங்கள் வெல்லுங்கள்.

2.நினைவில் வைக்க வேண்டிய தேதிகள்
ஏப்ரல் - 1 : போட்டித் தொடங்கும் தேதி
ஏப்ரல் - 15 , 23:59 இந்திய நேரம் : போட்டி முடிவடையும் தேதி
ஏப்ரல் 25 க்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்

3. இந்த மாத நடுவர்கள்
வேறயாரும் இல்லைங்கோ நானும் (குட்டிபாலு) ஜீவா வும் (a-k-a ஐயப்பன்) தான். என்ன கொடுமை சரவணன் சார்

4. எங்கள் எதிர்பார்ப்பு :
தனிமையை சித்தரிக்கும் ஒரு புகைபடம். அது உங்களுடைய படம் அதாவது நீங்கள் எடுத்த புகை படமாக இருக்க வேண்டும். ஒரிஜினலா இருக்கணுங்க.
கேமரா எது வேண்டுமானாலும் இருக்கலாம், ஆணால் ஒரு சிறந்த புகை படத்தின் வெற்றிக்கு காரணம் அதன் தனித்துவம், அமைப்பு, தன்மையுமே காரணம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும். சரி சரி உங்கள கொஞ்சம் குழப்புவோம்.

5. மாதிரிப் படங்கள்:





ஜீவா

Lakshmanaraja

Lakshmanaraja
6. நீங்கள் செய்ய வேண்டியது :
முன்னால் கூறியபடி "தனிமை" என்ற தலைப்புக்கு ஏற்றவாற உஙகளுடைய சிறந்த புகைப்படம் ஒன்றை எங்களுக்கு தெரிவிக்கவும். மீண்டும் ரிபீடே ஒரு படம் மட்டும் தான்.

7. எப்படி தெரிவிப்பது / கலந்துக் கொள்வது ?
உங்களின் வலைப்பூவிலோ அல்லது photo sharing இணைய தளம் "Flickr, Picsasa Web, Photobucket" போன்ற ஏதாவது ஒரு இடத்தில் படங்களை வலையேற்றி இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உஙகள் வலைப்பூவில் இருக்கும் முதல் புகைப்படம் இந்த போட்டிக்கு எடுத்துக்கப்படும்.

8. கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை
அ. புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்கப்படாது.
ஆ. புகைப்படத்தை எடுக்கும்போது date option ஐ disable பண்ணிடுங்களேன். அது நமக்கு தேவை இல்லை. EXIF ல அது இருக்கும்.
இ. subject அ கொஞம் சரியாக align பண்ணுங்க
ஈ. Focus சரி பார்துக்கவும்
உ. முடிந்தால் பிற்சேர்க்கை செய்து பாருங்கள்.

9. பிற்சேர்க்கைல என்னலாம் பண்ணலாம்?
நீங்கள் Pro user உபயோகிக்கும் Adobe CS3, GIMP போன்ற மென்பொருட்களை மட்டுமே எதிர் பார்க்காமல் lightroom, Piscasa போன்ற எளியவற்றை உபயோகிக்கலாம்
அ. Piscasa ல "I am Feeling Lucky" செய்து பாருங்கள்
ஆ. Rule of thirds கு உகந்த மாதிரி Crop செய்து பாருங்கள்
இ. புகைப்படம் அதன் உட்பொருளுக்கு ஏற்றவாறு நேர்க்கோணத்தில் அமைவது நன்று (Straighten the Photo according to the subject )
ஈ. "Selective Focus", "Selective Coloring" போன்ற நுட்பங்களை கையாண்டு புகைப்படத்தின் உட்பொருளை வெளிப்படுத்தலாம்.

பின் குறிப்பு:
எல்லாரும் எதிர்பார்த்த பரணியின் புகைப்படம் வராமல் போனதற்கு முக்கிய காரணம் அவர் முந்நாள் நடுவர். கூடவே முன்னாள் நடுவர்கள் பங்கேற்பது பற்றி சரியான வரையரை வைத்தில்லாமல் இருந்தடும் ஒரு காரணம். இனி வரும் போட்டிகளில் (இந்த போட்டியையும் சேர்த்து)முன்னாள் நடுவர்களின் புகைப்படமும் கண்டிப்பாக சேர்க்கப் படும்"
இந்தக்குழுப்பதிவில் தற்போதைய உறுப்பினர்கள் போட்டிக்கு ஏதாவது படம் அனுப்பினால்,அவர்களின் படங்களின் காட்சிக்காக வைக்கப்படுமே தவிர போட்டிக்கு எடுத்துக்கொள்ளபட மாட்டாது.

என்ன ரெடிதானே!!!!
எவ்ளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா என்ன
அட வாங்க அசத்தலாம்
இதுவரை போட்டிக்கு வந்த படங்கள்

போட்டியில் பங்கேற்பவர்களுக்கு: -
உங்கள் படத்தை ஸ்லைட்ஷோவில் நீங்களே சேற்க்கும்போது.. உங்களுடைய பெயரை caption ஆக குடுக்கவும். அப்படி இல்லாமல் வேறே caption குடுத்தீங்கன்னா.. slide show வில் படம் நிராகரிக்கப்படும்
உதா :- Caption = Deepa
Caption = Jeeves ..
நன்றி,
PiT Slide show Coordinator
போட்டி பட்டியலில் உங்கள் படம் இருக்கு... ஆனால் slide show வில் இல்லை என்றால்.. slide show வின் பின்னூட்டத்தை பார்க்கவும் .. Click on the link in the right corner - click the comments tab
அல்லது.. இங்கே பார்க்கவும்


Monday, March 24, 2008

வழமை போலவே இந்த மாதப் போட்டியும் உங்களின் ஆர்வத்தாலும், ஆதரவாலும் சிறப்பாக முடிந்தது. போட்டியின் முடிவு அறிவிக்கும் இடுகைக்கும் நேரம் வந்தாச்சு.

நிறைய புதிய முகங்கள் இந்த முறை. இது வளர்ச்சியின் போக்காகவே நான் பார்க்கிறேன். பங்கேற்ற அனைவருக்கும் மீண்டும் நன்றி.

-----------------------------------------------------------------------------------



மூன்றாம் இடம் கெளசிகன்.



எந்த இடம் இது ? மிக அழகான வண்ணங்கள். சரியான இடத்தில் சரியான கோணத்தில், படம் அழகாய் இருக்கிறது.



------------------------------------------------------------------------------------------

இரண்டாம் இடம் . நாதஸ்



அற்புதமான முயற்சி. சரியாகவும் வந்து இருக்கிறது. கருப்பு காய்கள் இன்னும் தெளிவாய் வந்து இருந்தால், முதல் இடத்தில் வந்து இருக்கலாம்.


-----------------------------------------------------------------------------------------



முதல் இடம் peeveeads





தலைப்புக்கு மிகப் பொருத்தமான படம். மிக அருமையான வண்ணங்கள், அழகான காட்சி அமைப்பு. இளவஞ்சி போன முறை சொன்னது போல இவரிடம் நாம் கற்க நிறைய இருக்கிறது.

அனைவருக்கும் வாழ்த்து

Tuesday, March 18, 2008













































Monday, March 17, 2008

வணக்கம் நண்பர்களே!

தமிழில் புகைப்படக் கலைன்னு சொல்லிக்கிட்டு அப்பப்ப, இந்த ஆங்கில தலைப்புகள் வைக்கரது தவிற்க முடியாத ஒண்ணா ஆயிடுது. (என் எழுத்துப் பிழைகள் தனிக்கதை, அத இப்பதைக்கு லூஸ்ல விடுங்க).

இன்னிக்கு நம்ம எல்லாரும் கத்துக்கப் போர விஷயம் 'selective blurring' என்னும் டெக்னிக்கு.

ஒரு படத்தை எடுக்கலாம்னு முடிவு பண்ணியாச்சுன்னா, படத்தில் ப்ரதானமா எந்த விஷயம் பளிச்னு தெரியணும்னு முடிவு பண்ணிதான் படத்தை ஆரம்பிப்போம். SLR கேமரா வச்சிருக்கரவங்க, அந்த முக்கிய விஷயத்தை ஃபோக்கஸ் பண்ணி, சரியான mode எல்லாம் உபயோகித்து க்ளிக்குவாங்க.
உதாரணத்துக்கு ஒரு தோட்டத்தில் இருக்கும் பூவை படம் எடுக்கணும்னா, 'பூ' mode தெரிவு செய்துகொண்டு, படத்தை எடுத்தீங்கன்னா, கேமராவே பாதி வேலைய உங்களுக்காக செஞ்சுடும்.
அந்த பூவை எடுக்க தேவையான, aperture, ஷட்டர் வேகம் எல்லாம் நிர்ணயித்து, படத்தில் பூ பளிச் என்றும், பூவுக்கு பின்னாலும் முன்னாலும் இருக்கும் விஷயங்களை கொஞ்சம் out-of-focusல் மங்கலாக்கி எடுத்து விடும்.

உதாரணத்துக்கு நம்ம புகைப்பட வித்தகர் ஒப்பாரி எடுத்த ஒரு செஸ்-போர்ட் படம் பாத்தீங்கன்னா, படத்தில் ப்ரதானமா ராஜாவ எடுத்திருப்பாரு. மத்த வீரர்கள் எல்லாம் கொஞ்சம் மங்கலா தெரிவாங்க. அதனால, படத்தை பாக்கும்போது, உங்க கவனம் சிதராம, ஒப்பாரி என்ன காட்டணும்னு நெனச்சாரோ அங்கதான் உங்க பார்வை விழும்.

SLR இல்லாதவங்க இந்த விஷயத்தை கொண்டுவரது கொஞ்சம் சிரமம்தான். ஆட்டோ போக்கஸ் காமெரால படம் எடுத்தீங்கன்னா, இவ்வளவு கிட்டயிருந்து எடுக்கர படத்துல, எல்லா விஷயமும் போக்கஸ்ல வந்து பளிச்னு தெரியும். இந்த கவித்துவமான ரிசல்ட் கெடைக்கரது கஷ்டம்.
SLR வச்சிருக்கரவங்களும், வெளில எங்கயாவது படம் எடுக்கும்போது, அவசரத்துல சரியான 'mode' உபயோகிக்காமல் எடுத்துட்டா, இந்த DOF (depth of field) அழகு கிட்டாமல் போயிடும்.

அப்பதான் GIMP மாதிரி இணைய மென்பொருள் உதவியை நாடணும்.

உதாரணத்துக்கு நான் சமீபத்தில் 2007ல் எடுத்த ஒரு படத்தைப் பாருங்க. சும்மா அவசரத்துல எடுத்த படம். அழகான நாய் பக்கத்துல ரெண்டு அசிங்கமான கால். நாய் மட்டும் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும். (படத்தை க்ளிக்கி பெருசா பாருங்க). இப்படி ஒரு படத்தை எடுத்தப்பரம் என்ன பண்ண முடியும்?


இங்கதான் gimp கிட்ட போகணும். இந்த படத்தை gimpல் திறந்துவிட்டு. 'கத்திரிக்கோல்' ஐக்கானை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
இப்ப என்ன பண்ணலாம்னா, நாயை சுத்தி கத்திரிகோலால், கோலம் போடர மாதிரி க்ளிக்கிட்டே வாங்க.
அதாவது, நாயின் சுற்றளவு மட்டும் கட் பண்ற மாதிரி, மார்க் பண்ணிக்கணும்.

முழுசா ஒரு ரவுண்ட் அந்த மாதிரி மார்க் பண்ணியதும், 'enter' அமுக்கி உங்க தெரிவை ஊர்ஜீதம் செய்யுங்கள்.
பக்காவா கட்டம் கட்டலன்னா, escape அடிச்சு, திரும்ப வேலைய ஆரம்பிங்க.

எல்லாம் ஒழுங்கா கட்டம் கட்டியதும், இப்போ ctrl-I அடிங்க.

இப்போ, Filter->Blur->Gaussian Blur தெரிவு செய்து, radiusல் 35/35 என்று அடித்து 'Ok'வை சொடுக்குங்கள்.

இப்ப என்னாகும்னா, நாயை சுத்தியுள்ள காட்சி, கொஞ்சம் out-of-focus ஆகி, blur ஆக காட்சிதரும். இதோ இப்படி. (படத்தை க்ளிக்கி பெருசா பாருங்க). இப்போ, படத்தின் கருப்பொருள் 'நாய்' பளிச்னும், மத்த சமாச்சாரம் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு மங்கலாயிடும்.

(ரெண்டு படத்துக்கும் பெருசா ஒண்ணும் வித்யாசம் இல்லன்னு மனசுல நெனச்சு சிரிக்கரவங்க, க்ளாஸ்லேருந்து கெட்-அவுட்).

இதே அடிப்படையில் தான், wallpaper எல்லாம் செய்யமுடியும். இதோ இப்படி. அத இன்னொரு நாள் சாவகாசமா பாக்கலாம்.


புரிஞ்சுதா? புரியாம தாவு தீருதா?
சரி, மேலே சொன்னதின் சுருக்கம் கீழே.

1) Open your pic in GIMP (or like tools)
2) choose the 'scissors' icon ( Scissors select tool)
3) click on the edge of your main object and start connecting the dots
4) once you complete your selection (1st dot and last dot are connected), press 'enter'
5) your selection will be highlighted with a boundary line
6) click ctrl+i (invert) to make the image outside your boundary as the primary object
7) click Filer->Blur->Gaussian Blur
8) enter 35/35 for the radius value and click OK ( you can choose a different value based on your needs)
9) your pic is ready

முயற்சி செய்து, உங்கள் 'selective blurred' படங்களை வலையேற்றுங்கள். வந்து மார்க் போடறேன். :)

மேலும், சில உதாரணங்கள் கீழே, என் கைவரிசையில்: (படத்தை க்ளிக்கி பெருசா பாத்தீங்கன்னாதான் மேட்டர் புரியும்). tour-guide ஆத்தா, முதல் படத்தில் பளிச்னு தெரிஞ்சாலும், மற்ற தலைகளும் கவனத்தை சிதறிடிப்பதால், ஆத்தாவைத் தவிர மற்றவைகளை ப்ளர் ஆக்கியாச்சு. அதேமாதிரி, விவேகானந்தரும் தடாகமும் 'பளிச்' என்று தெரிய, பின்னாலிருக்கும் சமாச்சாரம் ப்ளர் செய்யப்பட்டுள்ளது.



மீண்டும் சந்திப்போம்,


-சர்வேசன்
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff