Wednesday, December 4, 2013

வணக்கம்.

இன்றைய நம் கட்டுரையில் பிற்சேர்க்கையில் புகைப்படக்கலைஞர்கள் அவசியம் அறிந்திருக்கவேண்டிய விஷயங்கள் சிலவற்றைப்பற்றி சற்று விளக்கமாக பார்க்கலாம்.இவ்விளக்கமானது போட்டோஷாப்/கிம்ப் பயனாளர்களுக்கு பொருந்தும். போட்டோஷாப்போ,கிம்போ இரண்டில் எதுவாக இருந்தாலும் இவற்றில் Blend Mode கள் சில இருக்கும். இதனை ஒருசிலர் பயன்படுத்துவார்கள் ஒருசிலருக்கு இது என்னவென்றே தெரியாமல் இருப்பார்கள். சரி இந்த Blend Mode கள் நமக்கு அவசியம் தேவையா? அல்லது எந்த சூழ்நிலைகளில் இந்த Blend Mode நமக்கு பயனளிக்கின்றன என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
போட்டோஷாப்/கிம்பில் நிறைய Blend Mode கள் இருந்தாலும் புகைப்படக்கலைஞர்கள் மத்தியில் அதிகமாக பயன்படுவது மொத்தம் 3 Blend Mode களேயாகும்.காரணம் இந்த 3 Blend Mode கள் தான் Darken,Brighten,மற்றும் Contrast டுடன் தொடர்புடையது. மேலும் இம்மூன்று Blend Mode கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தோடு தொடர்புடையதாகும்.மூன்று முக்கிய Blend Mode ல் முதலில் நாம் பார்க்க இருப்பது Multiply Blend Mode ஆகும். Multiply Blend Mode பொதுவாக வெள்ளை நிறத்தை transparent டாக மாற்றும் தன்மையுடையது. கீழேயுள்ள படத்தில் மொத்தம் மூன்று நிற கட்டங்களை உருவாக்கியுள்ளேன்.
இந்த லேயரின் Blend Modeடை நான் Multiply க்கு மாற்றும் போது என்ன நடக்கிறது பாருங்கள்.வெள்ளை நிறக்கட்டம் மறைந்துபோவதை காணலாம்.
ஆக Multiply ஆனது வெள்ளை நிறத்தை transparent ஆக மாற்றும் தன்மையுடையது எனவே Brightடாக இருப்பது Darkகாக வாய்ப்புள்ளது.எனவே நம் புகைப்படங்களுடன் இந்த Multiply Blend Mode ஐ ஒப்பிடுகையில் Overexposure படங்களை இந்த Multiply Blend Mode ஐ பயன்படுத்தி ஓரளவுக்கு சரிபடுத்திக்கொள்ளலாம் என்று தெரிகிறது. சரி கீழேயுள்ள படமானது நான் Paris Disneylandல் Program Modeல் எடுத்தேன்.எனவே ISO வை தவிர்த்து மற்ற செட்டிங்குகளை கேமராவே பார்த்துக்கொண்டது, இதில் வானமும் கட்டிடமும் சற்று Overexpose ஆகி இருப்பதைக்காணலாம் எனவே கட்டிடத்தின் நிறமானது சற்று மங்கி இருக்கிறது.சரி இதுபோன்ற படங்களை இந்த Multiply Blend Mode கொண்டு எவ்வாறு சரி செய்யலாம் எனப்பார்க்கலாம்.
முதலில் படத்தினை போட்டோஷாப்/கிம்பில் திறந்துகொள்ளவும்.பின்னர் படத்தினை டூப்ளிகேட் செய்துகொள்ளவும்.டூப்ளிகேட் செய்த லேயரின் Blend Modeஐ Multiply க்கு மாற்றவும்.வித்தியாசத்தை பாருங்கள்.
குறிப்பு: இவ்வாறாக Multiply Mode இல் Dark செய்யப்பட்ட படத்தில் ஏற்கனவே இருந்த Dark ஏரியாக்கள் இன்னும் அதிகமாக Darkகாக மாறும். இந்த பிரச்சனையை சரி செய்ய லேயர் மாஸ்க் ஆப்ஷனை பயன்படுத்தி சரிசெய்துகொள்ளவும்.
என்ன வாசகர்களே இந்த கட்டுரையில் Multiply blend Mode ஐ பற்றி தெரிந்துகொண்டீர்கள் சரி மற்றொரு Blend modeஐ பற்றி அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன். 

நித்தி ஆனந்த்

Sunday, December 1, 2013

வணக்கம்.

இந்த மாதம் மட்டும் போட்டியை இரண்டாகப் பிரித்து நடத்த உள்ளோம்.

அதாவது இரண்டு தலைப்புகளின் கீழ். முதல் தலைப்பு DSLR பயன்படுத்துகிறவர்களுக்காக. இரண்டாவது பொதுத் தலைப்பு.

கிறுஸ்துமஸைக்  கொண்டாட, புதுவருடத்தை வரவேற்க நகரங்கள் ஒளிக்கோலம் பூணும் நேரமிது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முதல் தலைப்பு.

1. பொகே (Bokeh) for DSLR

[DSLR பயன்படுத்துகிறவர்கள் மட்டும்தான் இந்தத் தலைப்புக்கு அனுப்ப வேண்டும் என்பதில்லை. அட்வான்ஸான வசதிகள் கொண்ட பாயின்ட் அன்ட் ஷூட்டில் எடுத்தும் உங்கள் திறமையைக் காட்டலாம்.]

இரண்டாவது பொதுத் தலைப்பு. .குறிப்பாக ‘பொகே எங்கள் கேமராவில் எடுக்க வராதே’ என்கிற வாசகர்களுக்காக.

2. மூடிய கதவுகள் for both DSLR மற்றும் பாயின்ட் அன்ட் ஷூட்

[சன்னல்கதவுகளை அனுப்புவதைத் தவிர்க்கவும். மூடியிருப்பவை வாசல் கதவுகளாக இருக்க வேண்டும்.]

இதிலும் இரண்டு வித கேமராக்கள் பயன்படுத்துகிறவர்களும் கலந்து கொள்ளலாம்.

ஆனால் ஒருவர் ஒரு தலைப்புக்கு மட்டுமே படம் அனுப்ப வேண்டும்.

ஆல்பங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு படங்கள் சேர்க்கப்படும். இரண்டு ஆல்பங்களும் PiTன் முகப்பில் தெரியுமாறு அமைக்கப்படும்.

மற்ற பொதுவான விதிமுறைகள் இங்கே.

அவசியப்படும் வாசகர்களுக்கென பொகே குறித்த ஒரு பதிவும் விரைவில் PiT-ல் வெளிவரும்.

மாதிரிப் படங்கள் சில உங்கள் பார்வைக்காக:

பொகே

# ஆனந்த்

# ராமலக்ஷ்மி
# நித்தி ஆனந்த்
 # ஆனந்த்

# ராமலக்ஷ்மி

அவுட் டோர் பொகே
#ராமலக்ஷ்மி
------------------------

மூடிய கதவுகள்

# ஆனந்த் [ நான்கு மாதிரிப் படங்கள் ]

# ராமலக்ஷ்மி


# நித்தி ஆனந்த்

படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 20 டிசம்பர் 2013.

***






Thursday, November 28, 2013


பக்கி என்றொரு பறவை.  இதன் ஆங்கிலப் பெயர் நைட் ஜார் என்பதாகும்.  இரவில் காதுக்கு நாராசமான “சச்....சர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று ஒலி (jarring sound) எழுப்புவதனால் இந்தப் பெயர் கொடுத்திருப்பார்களோ இதற்கு?

இந்தப் பறவையை பாதுகைக் குருவி என்று அழைப்பதும் உண்டு.  காரணம் இது தரையில் உட்கார்ந்திருக்கும் போது கவிழ்த்துப் போட்ட பாதுகை, அதான் செருப்பு, போலக் காணப்படும்.

வாகனங்களில் நெடுஞ் சாலைகளில் பயணிக்கும் போது சில சமயம் சாலை ஓரங்களிலோ அல்லது தாழ்வான மரக் கிளைகளிலோ இரு மாணிக்கக் கற்கள் (இதை கெம்பு அல்லது சிவப்பு என்று சொல்வதும் உண்டு) ஜ்வலிப்பது போன்று தோன்றுவதைப் பார்த்திருப்பீர்கள்.  அவை நம் பக்கியின் கண்களே.   பக்கி திடீரெனெப் பறந்து சாலையின் குறுக்கே செல்வதையும் பார்த்திருப்பீர்கள்.  அவை அவ்வாறு பறப்பது வாகனங்களின் விளக்கொளியில் துல்லியமாகத் தெரிந்திடும் பறக்கும் பூச்சிகளைப் பிடித்துத் தின்னதான்.

பறந்திடும் பூச்சிகளைப் பிடிக்கும் போது அவை தப்பி விடாமல் இருக்க பக்கியின் வாயின் இரு புறமும் வரிசையாக பல ‘மீசை’  மயிர்கள் இருக்கும்.

பகலில் பக்கிகள் மரக் கிளைகளிலோ அல்லது செடிகளின் அடியிலோ படுத்துரங்கும்.  அப்போது அவற்றைக் கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டம்.  காரணங்கள் இரண்டு.  ஒன்று அதன் நிறம் மரப் பட்டைக்ளோடும், தரையில் இருக்கும் சரகு, வேர், காய்ந்த புல் இவற்றோடும் ஒன்றி விடும்.  இரண்டாவது காரணம் அவை மரக் கிளைகளில் உட்காரும் போது மற்ற பறவைகளசிப் போல் குறுக்கு வாட்டத்தில் உட்காராமல் கிளை போகும் வாட்டத்திலேயே உட்காரும்.

 கிளையின் நீள வாட்டத்தில் உறக்கம்.
(படம் நன்றி: இணையம்)
பக்கிகளின் மற்றொரு ஆங்கிலப் பெயர் ‘Goat sucker’ ஆட்டுப் பால் உறிஞ்சி.  இப் பெயர் வரக் காரணம் இரவில் தொழுவங்களில் பறந்திடும் பூச்சிகளைப் பிடித்துத் தின்பதற்காக வந்திடும் பக்கிகளை அவை பாலை உறிஞ்சிக் குடிப்பதற்காக வந்துள்ளதாக மக்கள் எண்ணியது தான்.

சில மிருகங்கள் ஒத்துக் கொள்ளாத பருவ நிலையில் உணவு தேடி அலைந்திடாமல் நீண்ட உறக்கத்தில் ஈடு படுவது போல (Hibernation) அமெரிக்காவில் காணப்படும் பக்கிகள் பல வாரங்கள் பாறை இடுக்குகளில் படுத்துறங்கும்.  பறவை இனத்தில் ஆழ் உறக்கத்தில் ஈடுபடும் ஒரே பிராணி பக்கிதான்.

பக்கி தன் முட்டையையும் குஞ்சையும் அவற்றின் மீது படுத்துறங்கிக் காத்திடும்.
முட்டையைக் காத்திடும் பக்கி
படம்: கல்பட்டு நடராஜன்

குஞ்சின் மீது படுத்துறங்கும் பக்கி
படம்: கல்பட்டு நடராஜன்
குஞ்சின் மீது படுத்திருக்கும் போது அதன் கண்கள் மூடி இருக்குமே ஒழிய அவை முற்றிலுமாக நித்திரையில் ஆழ்ந்து விடுவதில்லை.

ஒரு முறை பக்கி படுத்திருந்த இடத்தை நெருங்கிய போது, குஞ்சு தன் சிறகினை அடித்துத் தாய்ப் பறவையை எழுப்பியது.  தாயோ, “சும்மாக் கிட.  அவுங்களாலெ நம்மெக் கண்டு பிடிக்க முடியாது” என்பது போல இருந்த்து.  அவ்வளவு நம்பிக்கை தன் மாய்மாலத்தின் மீது!

அப்போது என் காலடியில் இருந்து ஒரு கல் நகர்ந்து கூட்டை நெருங்க, திடீரெனப் பறந்தது அது.

கூடு என நான் சொன்ன போது அது எதோ பிரமாதமாகத் தயார் செய்திருக்கும் என்று நினைக்காதீர்கள்.  சிறு கற்களிடையே முட்டையினை (ஒன்றோ இரண்டோ) இட்டிடும்.  அவ்வளவே.  தன் முட்டைக்கோ குஞ்சுக்கோ ஆபத்து என்று தோன்றினால் அவற்றைத் தன் அலகினால் வேறு இடத்திற்கு அப்புறப் படுத்தி விடும்.  இந்த சாமர்த்தியம் இருக்கும் போது தனியாக சொந்த வீடு எதற்கு பக்கிக்கு?

***


Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:



Tuesday, November 26, 2013

வணக்கம் பிட் வாசகர்களே, « இரண்டு வர்ணங்கள் » போட்டி முடிவிற்கு செல்வதற்கு முன்னால் இறுதிச்சுற்றிலிருந்து வெளியேறும் படங்களைப் பார்ப்போம்:

கார்த்திக் ராஜா:

நல்ல மேக்ரோ படம்,கருப்பு நிற சப்ஜெக்டும், பச்சை நிற பின்புலமும் படத்திற்கு அழகைகொடுக்கின்றது,எனினும் இந்த படத்தில் பச்சை நிறமே பிரதானமாக தென்படுகிறது,படத்தை இன்னும் கொஞ்சம் கிராப் செய்து சப்ஜெக்ட்டை கொஞ்சம் பெரியதாக கண்முன் கொண்டு வந்திருக்கலாம் எனப்படுகிறது,எனவே இச்சுற்றிலிருந்து வெளியேறுகிறது.

விஸ்வநாத் :




அருமையான படம்,படத்தை கருப்பு&வெள்ளையில் கொடுத்திருப்பது இன்னும் சிறப்பு,போட்டியின் தலைப்புக்கு பொருத்தமாக இருந்தாலும், குழந்தைக்கு Facial Blur apply செய்து படத்திற்கு ஒரு செயற்கைதன்மையை வரவழைக்கிறது.மழலைகளின் தோல்கள் இயற்கையாகவே மென்மையானவை,எனவே பிற்சேர்கை அதிகம் என்பதாலும்,கை மற்றும் கன்னத்தில் சற்று ஓவர் எக்ஸ்போஸ் ஆகியிருப்பதாலும் அடுத்த சுற்றுக்கும்,சிறப்பு கவனம் செல்லும் வாய்ப்பையும் இழக்கிறது.

ஜெயபாண்டி:


கோழிக்குஞ்சின் அலகும்,பின்புல நிறமும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருப்பது ஒரு குறையாகப்படுகிறது,மேலும் சப்ஜெக்ட்டைவிட பின்புலம் அதிக இடத்தை ஆக்கிரமிப்பதால் பார்வை பின்புலத்தின் மீதே அதிகம் விழுகிறது vignette கூட சற்று உறுத்தலாக இருப்பதாக நான் பார்க்கிறேன்.

ராஜேஷ்குமார்:


படத்தில் மஞ்சள் நிறமே அதிகமாக தெரிகிறது,சப்ஜெக்டையும் பேக்கிரவுண்டையும் தனித்தனியாக காணமுடியாத அளவிற்கு மஞ்சள் டோன் படத்திற்கு குறையாக உள்ளது மேலும் கோழிக்குஞ்சின் பின்புறம் Overexpose ஆகி இருப்பதும் படத்திற்கு குறையாக தெரிகிறது.

வில்லி:


காகத்தை பிரேமிற்குள் கொண்டு வந்த விதம் நன்றாக இருக்கின்றது என்னைபொருத்தவரை இது perfect compo, காகத்தின் இறக்கையில் தெரியும் ஒருவித மயில்நிற கலரை ஒரு குறையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும், வெள்ளை நிற பேக்கிரவுண்டில் மஞ்சள் நிறமும் அதிக அளவில் தெரிவதால் அடுத்த சுற்றிற்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கிறது.

வின்சன்:


படத்தில் சப்ஜெக்டின் நிறம் lightடாகவும் பின்புலம் Darkகாக‌வும் இருப்பது படத்திற்கு மைனஸாக அமைந்துவிட்டதாக நான் பார்க்கிறேன்.இதற்கு காரணம் ஆட்டின் நிறம் சற்று muted color ராக‌ இருந்தது தான். மேலும் ஆட்டின் கழுத்தில் இருக்கும் கயிறும் சற்று உறுத்துகிறது.

சிவா:


அருமையான படம், கருப்புவெள்ளையில் தந்திருக்கிறார் போட்டியின் தலைப்பிற்கு நன்றாக பொருந்தும் படமாக இருந்தும் படத்தை Under Exposure ஆக‌  தந்திருப்பது படத்திற்கு பலவீனமாக ஆகிவிட்டது,மேலும் தண்ணீரில் தெரியும் பிரதிபலிப்பு மிகவும் Darkகாக ஆகிவிட்டதால் அடுத்த சுற்றுக்கு செல்லவில்லை.

எஞ்சியிருக்கின்ற படங்களில் முதல் மூன்று இடங்களை பிடிக்கபோகும் படங்களை பார்க்கலாம்.

மூன்றாமிடம் பிடிப்பது வெங்கட்ராமன் :

அழகிய இரண்டு வண்ணங்களை அழகாக படம்பிடித்திருக்கிறார் கருப்பும் பச்சையுமாக கண்ணுக்கு குளிர்ச்சியாக படம்பிடித்திருக்கிறார்,ஒரே குறை படத்தில் இலைகள் சற்று Over exposure ஆகியுள்ளதால் மூன்றாமிடத்தில் நின்று விட்டது.



இரண்டாமிடம் பிடிப்பது சத்தியா:

இரண்டு வர்ணங்கள் தலைப்பிற்கு கச்சிதமாக பொருந்துகிறது இந்த மேக்ரோ படம். பின்புறம் முழுவதும் ஒரே நிறமாக அமைந்திருப்பது இன்னொரு சிறப்பு,மேக்ரோ போட்டோகிராபியில் தவிர்க்கமுடியாதது Shallow Depth of Field என்பதால் பூ முழுவதும் போகஸ் ஆகாமல் போகவே இரண்டாமிடத்தை பிடிக்கிறது.


முதலிடம் பிடிப்பது காண்டீபன்:



அருமையான படம். பார்க்கும் போது இரண்டு வர்ணங்களைத் தாண்டி வேறெதுவும் உறுத்தவில்லை. கம்பமும், புல்லும் ஒரே நிறமாக அமைந்திருப்பது படத்திற்கு அழகு சேர்க்கிறது. ஒளியானது ஒரே அளவாகக் கையாளப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு. அது மட்டுமின்றி, பகல் நேரத்தில் சூரிய ஒளியில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் நிழலின் ஆதிக்கம் அதிகமில்லாமல் இருப்பது போன்ற சிறப்புகள் நிறைந்திருப்பதாலும், புற்களில் ஆங்காங்கே தெரியும் பச்சை நிறம் கண்களை உறுத்தவில்லை என்பதாலும் முதலிடம் தரப்படுகிறது. வாழ்த்துக்கள் காண்டீபன்!.

வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்!

பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி!!

அடுத்தமாத போட்டி அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


அன்புடன் நித்தி ஆனந்த்.

Saturday, November 23, 2013

பிட் வாசகர்களுக்கு வணக்கம்,

"இரண்டு வர்ணங்கள்" புகைப்பட போட்டியில் எந்த வரிசையின் படியும் அல்லாமல் முன்னேறிய பத்து படங்களாக முதல் சுற்றுக்கு தேர்வானவை இங்கே:

1. விஸ்வநாத்(Vishwanath)






2. ஜெய பாண்டி(E.B.Jayapandi)





3. காண்டீபன்(Kandeepan)



4. கார்த்திக் ராஜா(Karthik raja)






5. ராஜேஷ் குமார்(Rajesh kumar)



6. சத்தியா(Sathya)



7. வெங்கட்ராமன்(Venkatraman)



8. வில்லி(Willy)



9. வின்சன்(Winsen)



10. சிவா(Siva)




தேர்வான பத்துபேர்களுக்கும் PiT-ன் வாழ்த்துக்கள்!
பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி!

அடுத்த சுற்றில் வெற்றிப்படங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன்.

வணக்கம்.

அன்புடன்,
நித்தி ஆனந்த்

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff