Tuesday, November 29, 2011

வணக்கம் நண்பர்களே..

போட்டியின் முடிவுகளை காண மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பீர்கள்.

போட்டிக்கு வந்திருந்த நிறைய படங்கள் நண்பர்களாக இருந்தாலும் பல படங்கள் எளிய குருப் போஸ் போட்டோவாக தான் இருந்தது.. அப்படங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் , போட்டி என்று வரும் போது வெறும் குரூப் போஸ் என்பது உதவாது..

அப்படியே போஸ் ஆக இருந்தாலும் , சொல்லி வைத்து எடுத்தது மாதிரி இல்லாமல் இருந்ததால், ஒரு சில படங்கள் மட்டும் முதல் சுற்றில் முன்னேறின..

அப்படி முதல் சுற்றில் முன்னேறிய படத்தில் இருந்து முதல் மூன்று இடங்களை பிடித்த படங்களை பார்க்கும் முன் இந்த சுற்றில் வெளியேறிய படங்களை பார்ப்போம்..


ariya vardhan மற்றும் mangai mano....

ARIYA VARDHAN



MANGAI MANO


இவர்களது படங்கள் இரண்டுமே போஸ் கொடுக்க வைத்த படங்கள் தான்.. இருந்தாலும் சில உணர்வுகள் இருந்ததால் முதல் சுற்றில் முன்னேறியது.. ஆனால் அது மட்டும் இந்த தலைப்புக்கு பத்தாது.. அதே சமயம் இந்த மாதிரி கொஞ்சம் கம்போஸிசன் செய்திருந்தால் படங்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும்...



அடுத்தது ramabhadran அவர்களின் படம்...


RAMABHADRAN


பெரியவர்களின் இயல்பான சந்திப்பை படமாக்கியுள்ளார், படமும் பார்ப்பதற்க்கு நன்றாக இருக்கின்றது.. இருந்தாலும் அந்த டோன் கொஞ்சம் ஓவர் saturation ,அதே சமயம் நான்கு பேரும் பேசிக்கொண்டிருந்தால் இந்த தலைப்புக்கு நன்றாக இருந்திருக்கும். மூன்றாவதாக இருப்பவர் எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பது சிறு குறை.. இந்த படத்தை பார்க்கும் போது நட்பு என்பதை விட ஒரு சந்திப்பு போல் தோன்றுவதால் இப்படம் வெளியேறுகின்றது..

# இந்த டோன்... சிறப்பாக இருந்திருக்கும்..






அடுத்தது rohini அவர்களின் படம்...

ROHINI

பார்ப்பதற்க்கு மிக அழகான படம்.. அந்த குழந்தையும் , பொம்மையும் ஒரே மாதிரி உட்கார்ந்து இருப்பது நன்றாக இருக்கின்றது... இதனால் இந்த சுற்றில் முன்னேறியது.. ஆனால் அந்த குழந்தை பொம்மையிடம் விளையாடுவது போல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. இருவரும் தனித்தனியாக இருப்பது, படத்தின் டோன், இரண்டும் சிறு குறை.. எனவே இந்த சுற்றில் இப்படம் வெளியேறுகின்றது.. கொஞ்சம் இப்படி டோன் மாற்றினால் படம் இன்னும் தெளிவாக இருக்கும்...






அடுத்தது gnans அவர்களின் படம்...

GNANS

படத்தில் நட்பின் உணர்வுகள் மிக அழகாக இருப்பதால் இந்த சுற்றில் முன்னேறியது.. படத்தில் வண்ணங்களும் அருமை.. ஆனால் படத்தில் composition என்று வரும் போது சிறு குறையாக தெரிகின்றது.. முடிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் க்ளோசாக படம் எடுத்திருக்கலாம்.. இப்படத்தை இந்த மாதிரி compose செய்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்..







அடுத்தது ஆதவன் அவர்களின் படம்..

AADHAVAN

நல்ல composition , நல்ல timing, படமும் B& W ல் நன்றாக இருக்கின்றது.. நண்பர்களின் உணர்வுகளை முன்னாடி படம் பிடித்திருந்தால் இந்த தலைப்பிற்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்..

அடுத்தது maha tamil prabhakaran அவர்களின் படம்..

MAGA TAMIL PRABHAKARAN


இந்த தலைப்பிற்கு எனக்கு மிகவும் பிடித்த படம் இது.. ஆனால் selective colouring என்ற பெயரில் தேவையில்லாமல் படத்தை சொதப்பிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.. அதை முழுவதுமாக b&wல் இருந்திருந்தாலே நன்றாக இருந்திருக்கும்... அதே சமயம் கொஞ்சம் கீழே உள்ள மாதிரி க்ராப் செய்திருக்கலாம்... இருந்தாலும் இப்படம் ஒரு நல்ல moment ஐ பிடித்ததற்காக வாழ்த்துக்கள்..
அடுத்தது sathiya மற்றும் truth அவர்களின் படங்கள்...



SATHIYA





TRUTH



இது வரை நாம் பார்த்த படங்களில் எல்லாம் எதோ ஒரு சிறு குறை படத்தின் composition ல் இருந்தது... ஆனால் இவர்கள் இருவரின் படங்களிலும் அந்த குறை சுத்தமாக இல்லை.. சரியான colour , distraction இல்லாத background,இவைகள் இப்படங்களுக்கு பலம்..

truth படத்தில் புன்னகை மற்றும் சத்தியா படத்தில் விளையாட்டும் மிக அருமை..

ஆனால் இவர்கள் இரண்டு படங்களையும் பார்க்கும் போது படத்தில் இருப்பவர்கள் நண்பர்கள் என்று சொல்வதை விட சொந்தங்கள் என்று தான் சொல்ல தோன்றுகின்றது..

இந்த படங்களில் குறைகள் என்று ஒன்றும் இல்லை.. தலைப்புக்கு என்று வரும் போது சற்று யோசிக்க வேண்டியதாகின்றது..

சொந்தங்கள் அல்லது தெளிவான படங்கள் என்று தலைப்பு இருந்திருந்தால் இப்படங்கள் கண்டிப்பாக பொருத்தமாக இருந்திருக்கும்...


அடுத்தது மூன்றாம் இடத்திற்கு போட்டி போடும் படங்கள்

kuti paya மற்றும் mervin anto

இவர்கள் இருவரின் படமும் கிட்டதட்ட ஒரே மாதிரி படங்கள்.. கடற்கரை , நண்பர்கள் கூட்டம் , பின்னால் இருந்து எடுக்கப்பட்டது...

இவர்களில்,


KUTIPAYA
kutipaya படத்தில் வரும் கடற்கரை மணல் , நீல வானம் ,கடல் இவை அனைத்தும் தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது.. அதே சமயம் தோழிகள் ரிலாக்ஸாக உட்கார்ந்திருக்கும் அமைப்பு எல்லாம் அருமை.. இவர்களுக்கு முன்னால் வரும் வலது ஓரத்தில் வருபவர் இல்லாமல் படம் எடுத்திருக்கலாம்.. அதே சமயம் வானத்தில் இவ்வளவு negative space தேவையில்லை. கொஞ்சம் க்ராப் செய்திருக்கலாம்.. கீழே உள்ள மாதிரி கம்போஸ் செய்திருந்தால் நன்றாக இருக்கும்...





அடுத்து mervin anto அவர்களின் படம்,


நண்பர்கள் கூட்டம் , மோதும் அலை , நீல கடல், ஒன்றாக கை பிடித்திருப்பது இவையெல்லாம் இந்த படத்திற்க்கு அழகு சேர்க்கின்றது... படத்தின் composition ம் நன்றாக உள்ளது.. இருந்தாலும் நண்பர்களிடத்தில் இன்னும் கொஞ்சம் உற்சாகம் இருந்திருந்தால் இந்த தலைப்பிற்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும்..அதே சமயம் படத்தில் கொஞ்சம் over saturation ஆக இருப்பது இது பழைய படம் போல் காட்சியளிக்கின்றது ,shadows ம் கொஞ்சம் அதிகம் என்பது மைனஸ்...

இவர்கள் இருவரின் படங்களில் யார் படம் மூன்றாவது என்று பார்த்தால் தெளிவாக படம் எடுத்ததற்காக

kutipaya அவர்கள் மூன்றாமிடம் பிடிக்கின்றார்..


இரண்டாமிடம்,

viswanathan அவர்களின் படத்தில் வரும் நண்பர்கள் , அவர்களிடம் தெரியும் சந்தோசம், விளையாட்டு அனைத்தும் இந்த தலைப்புக்கு கச்சிதம்.. இந்த படத்தை பார்க்கும் போது நட்பின் பசுமை நிறைந்த நினைவுகள் கண்டிப்பாக வரும்.. இந்த படம் பிடிக்கப்படிருக்கும் moment மிகவும் அருமை.. நானும் இந்த நட்பின் கூட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம் போல் உள்ளது..

VISWANATHAN


ஆனால் சொதப்பல் composition , படத்தில் தெரியும் கேபிள் , கட் செய்யப்பட்ட கைகள்.. இவையெல்லாம் இப்படத்தின் பெரிய மைனஸ்... இந்த படம் மட்டும் சரியாக compose செய்யப்பட்டிருந்தால் கண்டிப்பாக முதலிடம் பிடிக்க வாய்பிருந்திருக்கும்...

என்ன தான் composition குறையாக இருந்தாலும் தலைப்பு என்று வரும் போதும் ,நமது பார்வை சிரிக்கும் நண்பர்கள் கூட்டத்தை விட்டும் நகரவில்லை...

எனவே வந்திருந்த படங்களில்,

viswanathan இரண்டாமிடம் பிடிக்கின்றார்...

இந்த மாதிரி கம்போஸ் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..






முதலிடம்,
SARAVANAN

சரவணன் படத்தில் இருக்கும் குட்டி நண்பர்கள் கூட்டம் அருமை... ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரியாக்‌ஷன்.. படம் போஸ் கொடுக்க வைத்து எடுத்திருந்தாலும் படத்தில் இயல்பான நட்பின் உணர்வுகள் அருமையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.. படமும் Black and white ல் அருமையாக உள்ளது.. எந்த distraction ம் இல்லை.. compositionலிம் பெரிதாக குறைகள் இல்லை..

கொஞ்சம் crop மற்றும் sharpness குறைத்திருக்கலாம்... அதுவும் படத்தை பெரிதாக பாதிக்கவில்லை..

எனவே
`நண்பர்கள்` போட்டியில் முதலிடம் பிடிப்பது , saravanan அவர்களின் படம்..



வாழ்த்துக்கள் சரவணன்....

இரண்டாமிடம் மூன்றாமிடம் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்...

விரைவில் அடுத்த தலைப்புடன் `நண்பர்கள்` அனைவரையும் சந்திக்கின்றோம்..

அன்புடன்
கருவாயன்.



























Monday, November 28, 2011

மூன்று வித ஒளிச் சிதறல்கள்: டிஃப்யூஸ், டிரக்ட், க்ளேர்(glare).

முன்னேயே பார்த்தது போல எல்லாமே 100% ஒரு வகையா பொருந்தாது. ஒவ்வொண்ணுத்துலேயும் இந்த மூன்றும் வெவ்வேறு அளவில இருக்கும். இது எந்த விகிதம் என்கிறதுலதான் பொருட்கள் ஒவ்வொண்ணும் வித்தியாசமாத் தெரியும். ஆனாலும் இப்ப பார்க்கப் போகிற உதாரணங்கள் எல்லாமே 100% வகையா பார்க்கலாம். அப்பதான் புரிஞ்சு கொள்ள சுலபமா இருக்கும். இயற்கையில அரிதாகவே இப்படிப்பட்ட உதாரணங்கள் கிடைக்கும், அதே போல ஒளி மூலத்தைப் பற்றி இப்ப கவலைப்பட போறதில்லை. எந்த ஒளியும் வேலை செய்யும்.

முதலாவது டிஃப்யூஸ் ரிஃப்லெக்ஷன். பொருள் மேலேபடும் ஒளி சீராக எல்லாப் பக்கமும் சிதறடிக்கப்படும். அதனால எந்த பக்கத்திலேந்து அதை பார்த்தாலும் அதே பிரகாசம் இருக்கும். உதாரணமா ஒரு வெள்ளை அட்டை. அதை எந்த பக்கத்தில இருந்து போட்டோ எடுத்தாலும் ஒரே பிரகாசத்தோட தெரியும்.

இந்த மாதிரி உதாரணங்கள் சொல்கிறப் புத்தகங்களில் தவிர எங்கேயும் சீராக ஒளியைச் சிதறடிக்கிற பொருள் கிடையாது! வெள்ளை காகிதம் / அட்டை கிட்ட கிட்ட வரும்! வெள்ளையா இருக்கற எதுவுமே ஏறக்குறைய சீராக ஒளியை திருப்பும். சந்தேகமான ஒரு நடை வீட்டை சுத்தி போய் வாங்க. வெள்ளை பொருட்கள், கருப்பு பொருட்களை வெவ்வேறு கோணங்களிலே பாருங்க. வெள்ளை பொருட்கள் அனேகமா ஒரே மாதிரி பிரகாசத்தோடதான் தெரியும்.

# இங்கே சுவர், புத்தக அட்டை, விளக்கின் பீங்கான் base,மேலிருக்கும் shade-ன் துணி, பிளாஸ்டிக் அழகுப் பொருட்கள் என எல்லாமே ஒருசீரா ஒளியைத் திருப்புறதாலேயே இப்படி அதிபிரகாசமாத் தெரியுது. ஆனால் கருப்பு அப்படி இல்லை. ஒவ்வொரு கோணங்களிலே ஒவ்வொரு மாதிரி தெரிய வாய்ப்புகள் அதிகம்.

இந்த டிஃப்யூஸ் என்கிற வார்த்தை சொல்கிற போது இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது. டிஃப்யூஸ் லைட்டிங்-ன்னு சொல்கிறதும் இதுவும் ஒண்ணு இல்லை. எப்பவும் சின்ன ஒளி மூலத்திலேந்து வர ஒளி ஹார்ட் ஆ இருக்கும். பெரிய ஒளி மூலத்திலேந்து வரது ஸாப்டா இருக்கும்.

சில சமயம் ஒரு ஒளி மூலத்தை சில பொருட்களைப் பயன்படுத்தி - ஒரு வெள்ளை குடையைப் பிடித்து அதன் மேலே படுகிற வெளிச்சத்தை திருப்பியோ, அக்ரிலிக் ஷீட்டை குறுக்கே வைத்தோ - இப்படிச் சிதறடிச்சு பொருள் மேலே ஒளியை பட வைக்கறதுண்டு. இது டிப்யூஸ் ட்ரான்ஸ்மிஷன் அல்லது டிஃப்யூஸ் ரிப்லெக்ஷனை பயன்படுத்தினாலும் இது ஒளி மூலத்தை மாத்தறது மட்டுமே.
#

பொருள் மேலே படுகிற ஒளி டிப்யூஸ்-ஆ இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். பொருள் மீது படும் ஒளி "டிஃப்யூஸ் ரிஃப்லெக்ஷன்" ஆகிறதா என்கிறது வேற விஷயம். ஒளியை சிதறடிக்கிறது பொருள்தானே ஒழிய ஒளி மூலம் இல்லை.

ஒரு ஒளி மூலமானது ஒளி வகையைதான் நிர்ணயிக்க முடியும். பொருளின் மேற்பரப்புதான் ரிஃப்லெக்ஷன்-ஐ நிர்ணயிக்கிறது. ஆகவே பொருளின் தன்மை பொருத்து எந்த ஒளியும் எந்த ரிஃப்லெக்ஷனும் உண்டாக்கலாம்.

சரி, ஒளி மூலத்தின் கான்ட்ராஸ்ட் வேறு பட்டா ரிப்லெக்ஷனும் வேறுபடுமா? இல்லை. ஹார்ட் வெளிச்சமோ ஸாப்ட் வெளிச்சமோ எப்படி இருந்தாலும் ஒரே மாதிரிதான் ரிஃப்லெக்ஷன் இருக்கும். நிழல்கள் வேறுபடும். ( சின்ன ஸோர்ஸ், ஹார்ட் லைட்- ஹார்ட் ஷேடோ; அகல ஸோர்ஸ், ஸாஃப்ட் லைட், ஸாஃப்ட் ஷேடோ.) ஆனால் படத்தின் ஹைலைட்ஸ் ஒரே மாதிரிதான் இருக்கும்.

வெளிச்சம் படும் கோணம் அல்லது வெளிச்ச மூலம் இவற்றுக்கும், ரிஃப்லக்ட் ஆகும் டிஃப்யூஸ் வெளிச்சம் எப்படி இருக்கு என்பதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் ஒளி மூலம் எவ்வளோ கிட்டே இருக்கு என்பதற்கு சம்பந்தம் இருக்கு, எவ்வளோ கிட்டே இருக்கோ அவ்வளோ பிரகாசமா தெரியும். அதனால ஒளி மூலம் கிட்டே வந்தா, எக்ஸ்போசர் செட்டிங்-ஐ மாத்தலைன்னா நமக்கு கிடைக்கிற படத்துல வெளிச்சம் அதிகமாகிடும்.

இது ஒரு இன்வெர்ஸ் ஸ்கொயர் லா. அதாவது தூரம் அதிகமாக ஆக அந்த தூரம் எவ்வளோ அதிகமாகுதோ அதன் ஸ்கொயர் அளவு வெளிச்சம் குறையும். இருக்கிற இடத்திலேந்து ரெண்டு மடங்கு தூரம் தள்ளி வெச்சா நாலு மடங்கு பிரகாசம் கம்மியாகும். மூணு மடங்கு தள்ளி வெச்சா ஒன்பது மடங்கு குறையும். சரிதானே?

இந்த ஸயன்ஸ் எல்லாம் வேண்டாம்ன்னா பரவாயில்லை. ஒளி மூலம் கிட்டே வர வர படத்துல வெளிச்சம் அதிகமாகும்-ன்னு புரிஞ்சா சரி. அட, இதென்ன பெரிய விஷயம் ன்னா, சில சமயம் சில பொருட்கள் அப்படி நடந்துக்காது என்கிறதுதான்! பின்னால் பார்க்கலாம்.
***

படங்கள்: இணையத்திலிருந்து...

காரமுந்திரி I.
காரமுந்திரி II


Saturday, November 26, 2011




வணக்கம் நண்பர்களே..

இந்த முறை `நண்பர்கள்` போட்டிக்கு கிட்டதட்ட 85 படங்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சி.. அதிலிருந்து முதல் சுற்றை தேர்ந்தெடுக்க சற்றே சிரமமாகிவிட்டது, தாமதமும் ஆகிவிட்டது..

வந்திருந்த படங்களிலிருந்து முதல் சுற்றிற்க்கு முன்னேறிய படங்களின் அணிவகுப்பு.... இதில் எதுவும் வரிசை படி கிடையாது..




TRUTH







VISWANATHAN






ROHINI







RAMABHADRAN




MERVIN ANTO







MANGAI MANO







SARAVANAN






KUTIPAYA








GNANS







ARIYA VARDHAN







AADHAVAN





MAGA TAMIL PRABHAKARAN









SATHIYA


விரைவில் முதல் மூன்று இடங்களுடன் தங்களை சந்திக்கின்றேன்...

நன்றி
கருவாயன்

Wednesday, November 23, 2011


தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள் / காணொளிகள் / ஒலிப்பதிவுகளுக்கான போட்டி இது.
போட்டிக்கான புகைப்படங்கள் போட்டி வலைவாசல் வழியாக விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில் பதிவேற்றப்பட வேண்டும். போட்டியில் பங்கு பெறுவது மட்டுமல்லாது, நம்மிடம் உள்ள தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகள் என்பனவற்றைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு என்பது என் கருத்து.

போட்டி வலைவாசல்:
http://ta.wikipedia.org/wiki/contest

தமிழ் விக்கிப்பீடியா:

இப்பதிவை இங்கு பதிவிட ஆதரவளித்த PiT உறுப்பின நண்பர்களுக்கு என் நன்றிகள்!

அன்புடன் அன்டன்

Tuesday, November 1, 2011


அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம்.. இந்த மாதத்திற்கான போட்டியை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பீர்கள்..

இந்த மாதத்திற்கான தலைப்பு இந்த பதிவின் ஆரம்பத்திலேயே வருது பாருங்க..

அதாங்க... நண்பர்களே..

இந்த மாதத்திற்கான தலைப்பு: நண்பர்கள்..

மாதிரி படங்கள்







போட்டிக்கான விதிமுறைகள் இங்கே

படம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 15-11-2011

நட்புகளை,நண்பர்களை, படம் பிடித்து சும்மா அசத்த வாங்க நண்பர்களே...

நட்புடன்
கருவாயன்
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff