Monday, November 28, 2011

மென்மை கடுமை - ஒளியின் தன்மை - கார முந்திரி-VI

4 comments:
 
மூன்று வித ஒளிச் சிதறல்கள்: டிஃப்யூஸ், டிரக்ட், க்ளேர்(glare).

முன்னேயே பார்த்தது போல எல்லாமே 100% ஒரு வகையா பொருந்தாது. ஒவ்வொண்ணுத்துலேயும் இந்த மூன்றும் வெவ்வேறு அளவில இருக்கும். இது எந்த விகிதம் என்கிறதுலதான் பொருட்கள் ஒவ்வொண்ணும் வித்தியாசமாத் தெரியும். ஆனாலும் இப்ப பார்க்கப் போகிற உதாரணங்கள் எல்லாமே 100% வகையா பார்க்கலாம். அப்பதான் புரிஞ்சு கொள்ள சுலபமா இருக்கும். இயற்கையில அரிதாகவே இப்படிப்பட்ட உதாரணங்கள் கிடைக்கும், அதே போல ஒளி மூலத்தைப் பற்றி இப்ப கவலைப்பட போறதில்லை. எந்த ஒளியும் வேலை செய்யும்.

முதலாவது டிஃப்யூஸ் ரிஃப்லெக்ஷன். பொருள் மேலேபடும் ஒளி சீராக எல்லாப் பக்கமும் சிதறடிக்கப்படும். அதனால எந்த பக்கத்திலேந்து அதை பார்த்தாலும் அதே பிரகாசம் இருக்கும். உதாரணமா ஒரு வெள்ளை அட்டை. அதை எந்த பக்கத்தில இருந்து போட்டோ எடுத்தாலும் ஒரே பிரகாசத்தோட தெரியும்.

இந்த மாதிரி உதாரணங்கள் சொல்கிறப் புத்தகங்களில் தவிர எங்கேயும் சீராக ஒளியைச் சிதறடிக்கிற பொருள் கிடையாது! வெள்ளை காகிதம் / அட்டை கிட்ட கிட்ட வரும்! வெள்ளையா இருக்கற எதுவுமே ஏறக்குறைய சீராக ஒளியை திருப்பும். சந்தேகமான ஒரு நடை வீட்டை சுத்தி போய் வாங்க. வெள்ளை பொருட்கள், கருப்பு பொருட்களை வெவ்வேறு கோணங்களிலே பாருங்க. வெள்ளை பொருட்கள் அனேகமா ஒரே மாதிரி பிரகாசத்தோடதான் தெரியும்.

# இங்கே சுவர், புத்தக அட்டை, விளக்கின் பீங்கான் base,மேலிருக்கும் shade-ன் துணி, பிளாஸ்டிக் அழகுப் பொருட்கள் என எல்லாமே ஒருசீரா ஒளியைத் திருப்புறதாலேயே இப்படி அதிபிரகாசமாத் தெரியுது. ஆனால் கருப்பு அப்படி இல்லை. ஒவ்வொரு கோணங்களிலே ஒவ்வொரு மாதிரி தெரிய வாய்ப்புகள் அதிகம்.

இந்த டிஃப்யூஸ் என்கிற வார்த்தை சொல்கிற போது இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது. டிஃப்யூஸ் லைட்டிங்-ன்னு சொல்கிறதும் இதுவும் ஒண்ணு இல்லை. எப்பவும் சின்ன ஒளி மூலத்திலேந்து வர ஒளி ஹார்ட் ஆ இருக்கும். பெரிய ஒளி மூலத்திலேந்து வரது ஸாப்டா இருக்கும்.

சில சமயம் ஒரு ஒளி மூலத்தை சில பொருட்களைப் பயன்படுத்தி - ஒரு வெள்ளை குடையைப் பிடித்து அதன் மேலே படுகிற வெளிச்சத்தை திருப்பியோ, அக்ரிலிக் ஷீட்டை குறுக்கே வைத்தோ - இப்படிச் சிதறடிச்சு பொருள் மேலே ஒளியை பட வைக்கறதுண்டு. இது டிப்யூஸ் ட்ரான்ஸ்மிஷன் அல்லது டிஃப்யூஸ் ரிப்லெக்ஷனை பயன்படுத்தினாலும் இது ஒளி மூலத்தை மாத்தறது மட்டுமே.
#

பொருள் மேலே படுகிற ஒளி டிப்யூஸ்-ஆ இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். பொருள் மீது படும் ஒளி "டிஃப்யூஸ் ரிஃப்லெக்ஷன்" ஆகிறதா என்கிறது வேற விஷயம். ஒளியை சிதறடிக்கிறது பொருள்தானே ஒழிய ஒளி மூலம் இல்லை.

ஒரு ஒளி மூலமானது ஒளி வகையைதான் நிர்ணயிக்க முடியும். பொருளின் மேற்பரப்புதான் ரிஃப்லெக்ஷன்-ஐ நிர்ணயிக்கிறது. ஆகவே பொருளின் தன்மை பொருத்து எந்த ஒளியும் எந்த ரிஃப்லெக்ஷனும் உண்டாக்கலாம்.

சரி, ஒளி மூலத்தின் கான்ட்ராஸ்ட் வேறு பட்டா ரிப்லெக்ஷனும் வேறுபடுமா? இல்லை. ஹார்ட் வெளிச்சமோ ஸாப்ட் வெளிச்சமோ எப்படி இருந்தாலும் ஒரே மாதிரிதான் ரிஃப்லெக்ஷன் இருக்கும். நிழல்கள் வேறுபடும். ( சின்ன ஸோர்ஸ், ஹார்ட் லைட்- ஹார்ட் ஷேடோ; அகல ஸோர்ஸ், ஸாஃப்ட் லைட், ஸாஃப்ட் ஷேடோ.) ஆனால் படத்தின் ஹைலைட்ஸ் ஒரே மாதிரிதான் இருக்கும்.

வெளிச்சம் படும் கோணம் அல்லது வெளிச்ச மூலம் இவற்றுக்கும், ரிஃப்லக்ட் ஆகும் டிஃப்யூஸ் வெளிச்சம் எப்படி இருக்கு என்பதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் ஒளி மூலம் எவ்வளோ கிட்டே இருக்கு என்பதற்கு சம்பந்தம் இருக்கு, எவ்வளோ கிட்டே இருக்கோ அவ்வளோ பிரகாசமா தெரியும். அதனால ஒளி மூலம் கிட்டே வந்தா, எக்ஸ்போசர் செட்டிங்-ஐ மாத்தலைன்னா நமக்கு கிடைக்கிற படத்துல வெளிச்சம் அதிகமாகிடும்.

இது ஒரு இன்வெர்ஸ் ஸ்கொயர் லா. அதாவது தூரம் அதிகமாக ஆக அந்த தூரம் எவ்வளோ அதிகமாகுதோ அதன் ஸ்கொயர் அளவு வெளிச்சம் குறையும். இருக்கிற இடத்திலேந்து ரெண்டு மடங்கு தூரம் தள்ளி வெச்சா நாலு மடங்கு பிரகாசம் கம்மியாகும். மூணு மடங்கு தள்ளி வெச்சா ஒன்பது மடங்கு குறையும். சரிதானே?

இந்த ஸயன்ஸ் எல்லாம் வேண்டாம்ன்னா பரவாயில்லை. ஒளி மூலம் கிட்டே வர வர படத்துல வெளிச்சம் அதிகமாகும்-ன்னு புரிஞ்சா சரி. அட, இதென்ன பெரிய விஷயம் ன்னா, சில சமயம் சில பொருட்கள் அப்படி நடந்துக்காது என்கிறதுதான்! பின்னால் பார்க்கலாம்.
***

படங்கள்: இணையத்திலிருந்து...

காரமுந்திரி I.
காரமுந்திரி II


4 comments:

  1. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி..!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    ReplyDelete
  2. கார முந்திரி சூப்பர். வரும் பாடங்களுக்கு வெயிட்டீஸ்.

    ReplyDelete
  3. எளிமையாக விளக்கியுள்ளீர்கள். தொடரக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff